Page 1 of 3 123 LastLast
Results 1 to 10 of 22

Thread: ungal OOr - endha oor?

  1. #1
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701
    Post Thanks / Like

    ungal OOr - endha oor?

    sondha oorai patri sollikkonde pogalaam
    ungal Ooraippatri konjam sollungaLEn?

    naan pirandhadhu punniyam siridhum kalavaa sennai.
    naan pizhaippu thaedi pona oor bengaluru ippodhu pizhaiththukkondiruppadhu bentonville (USA).

    enakku idhil pidiththa oor - pazhaya madras. indrirukkum madras(chennai) idam pidikkaadhadhu pazhayadhai sattena marandhu pudhumaikku thaavi kudhiththu oduvadhu. irundhaalum poookkadai station pinnaal kandha saami koyil arugil uLLa maaradha chennai enakku rombavum pidikkum.

    mylapore Karpagaambaal mess enakku migavum pidiththa sitrundi vidudhi.
    purasai walkam doveton cafeum pinnal sendral varum veppery saalaigalum adhan sandhu bondhugalum innum manadhil padhindhu iruppavai.
    perambur maadha kovilum, adhan aruge ulla signalil veetrirukkum naramuga vinayagarum venus theatarum adhan arugil ulla meer sajjadh usen poongavum visiththiramaana kalavai - adhan maatram enakku pidikkum

    moolakkadaikku peramburil irundhu sellum valaindhu pogum saalayum Simpson aalai ottiyamaindha pottal kaadukalum adhil cricket aadiya ninaivugalum pasumayaanavai - indru avai eppadi irukkindrana enbadhu ennul oru kelviyaanavai.
    En ooraippatri indru enakku yaarenum sollungalen kaettukkolgiren.
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,885
    Post Thanks / Like
    சொக்கநாதர் கைபிடித்த பாண்டிய ராணி மீனாட்சி கோவில் கட்டி குடியிருக்கும் தாமரை வடிவ அமைப்பில் மைய்யமாயிருந்து எட்டு திசையிலும் விரிந்து பரந்து கொண்டிருக்கும் மதுரை எனது சொந்த ஊர்-சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமான்னு பிறந்து வளர்ந்த ஊரை விட்டு திருமணமாகி கணவர் பணி நிமித்தமாய் பல ஊர் பார்த்துவிட்டு இறுதி மூச்சை விட இனிய இடமென தேர்வு செய்து வந்து சேர்ந்துவிட்ட மதுரையம்பதி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மல்லியும் மருக்கொழுந்தும் மணக்கும் மரியாதையும் குசும்பும் கலந்த வெள்ளந்தியான மக்களை கொண்ட ஊர். பழைய பெருமைகளை புதிய சோதனைகளை மங்காத புகழை தாங்க முடியாத தடுமாற்றங்களை எழுதி மாளாது!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. #3
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    எல்லூரும் சொல்லிடுவீர் தற்பெருமை இத்திரியில் - நங்கை
    நல்லூரில் உதித்துலகம் உய்விக்க வந்தவன் நான்
    வல்லூறாய் தேமதுர நகரிற்கே உடன்பெயர்ந்தேன்
    கள்ளூறும் நினைவுளே அவ்வூரிலே யெனக்கு

    நதியென்றே கொளப்பட்ட கிருதமாலின் கரைதனிலே
    குதித்தோடி விளையாடி விழுப்புண்கள் பெறப்பட்ட
    பதிவேற்கும் பருவமுதல் பதின்பருவம் கடைவரையில்
    அதிசுந்தர நகரிருந்தேன், வளர்ந்தேனோ தெரியாது

    வானுலகக் கதைகளுடை சோலைமலை ஒருகோடி
    ஆணழகன் முருகனது பரங்குன்றம் மறுகோடி
    காணவொரு நாள்போதும் ஆர்வமுள்ள மனிதருக்கு
    மாநகர வேடமணி சிற்றூரே எம்மதுரை

    விடியும் முன்னே விடிந்திடும் ஊரிது
    முடியும் பொழுதை பொருட்படுத்தாது
    தடியெடுத் தாண்டவர் சரித்திரம் தொடர
    நெடியும் உண்டே சிலசந் துகளில்

    முடியாதெனக்கு பட்டியலிட்டு
    அடித்துக்கூற இது-இது-இதனால்
    பிடித்துப் போனது ஊரெனெக்கென்று
    பிடித்தல் முன்னம் காரணம் பின்னம்.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  5. #4
    Senior Member Veteran Hubber 19thmay's Avatar
    Join Date
    Sep 2009
    Location
    South Chennai
    Posts
    2,039
    Post Thanks / Like
    எதுகை மோனை, குற்றியலிகரம்
    லுகரம் தெரியாது
    முக்கியமாக தலை தட்டும்
    இருந்தாலும் அன்பர்கள் பொறுத்துக்கொண்டு
    என் ஊர் பெருமையை கேளுங்கள்.

    சோழ நாடு சோறுடைத்து என்றபோதிலும்
    நான் உடைப்பதென்னமோ தட்டச்சு விசைபலகயும்
    முக்கியமாக என் மண்டையும்
    இருந்தாலும் பல பெருமைகள் கொண்டிருக்கும்
    தன்னடக்கம் மிகுந்திருக்கும் திருவாரூர் என் ஊர்.

    முதலாம் அதித்ய சோழனும், ராஜ ராஜ சோழன் பின்
    ராஜேந்திர சோழன் கட்டி காத்த தியாகராஜர் -
    ஆழி தேரில் அசைந்து வரும் போது
    'ஆருரா! தியாகேசா !!' என்ற பக்தர்கள் குரலால்
    மெய் சிலிர்க்கும் அந்நேரம்

    அப்பரும் , சம்பந்தரும் ஆரூர் வந்து
    பாடல்களால் இறைவனை மெய் உருக வைத்ததும் வரலாறு
    அறுபத்திமூன்று நாயன்மாரில் நானும் ஒருவன்
    "திருவாரூரில் பிறந்தார்கள்" என்பதால்
    இதைவிட வேறென்ன வேண்டும்?

    பின் கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் தியாகராஜர் - முத்துசாமி- ஷ்யாமா
    பிறந்த ஊரும்
    என் ஊரே !
    சிறப்பு சென்ற இடம்மோ திருவையாறுக்கே...
    ஐயாரப்பா இது ஞாயமாப்பா?

    ஆஸ்கார் நாயகன் ரகுமான் தேடி வரும்
    நாகூர் தர்கா என் ஊர் பக்கம் தான்
    இயேசு கிறிஸ்துவின் அன்னை வேளாங்கண்ணியும்
    இங்கேதான்
    மதனல்லினதிற்கு வேறெங்கே சான்று?

    தமிழ்நாட்டின் தற்போதய முதல்வரும்
    திருக்குவளை தான். வாரிசுகள் இங்கொன்னும்
    அங்கொன்னும் இருந்தாலும் சொந்த ஊர் என் ஊர்தானே!
    இருந்தாலும் என் ஊருக்கு செல்ல ஒரு ரயில் இல்லை
    பல வருடங்களாக - இதை விரைவாக செய்தால்

    கண்கள் பனிக்கும், இதயம் இனிக்கும்!

  6. #5
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    ...moolakkadaikku peramburil irundhu sellum valaindhu pogum saalayum Simpson aalai ottiyamaindha pottal kaadukalum adhil cricket aadiya ninaivugalum ...
    Jai, what time period. I may not have been a participant but I am sure to have been a spectator if it is the early 90's
    (appOlerundhE viewer & reviewer dhAn )

  7. #6
    Moderator Diamond Hubber littlemaster1982's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    Chennai
    Posts
    9,880
    Post Thanks / Like
    Sridhar,

    That was too good And the last line is a ripper

  8. #7
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Sridhar

  9. #8
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    முத்தழின் முகவரியாய் முதல்மொழிக்கு தாலாட்டாய்
    எத்திசையும் தமிழ்மணக்க எடுத்தளித்த வள்ளுவனை
    முத்தமிட முக்கடலும் முழுநிலவும் முன்தோன்றும் ஞாயிறுவும்
    பக்கமாக வந்து நின்று பாராட்டும் குமரி முனை.

    வாழை தென்னை வயல்வெளிகள் எங்கும் சாலையோர தாமரைகள்
    நீலக்கடலின் துறையில் நின்றே காணக்கவரும் மலைத்தொடர்கள்
    பாலை தவிர்த்த நாற்திணையும் நாஞ்சில் பல்சுவைக்கும் மொழிநடையும்
    கூடித் திளைக்கும் எழில் பாடு குமரி முனை.

    கலைவாணர் ,கவிமணியும் ,கள்ளமில்லா ஜீவாவும்
    புவி மீது வந்துதித்த புகழ்பூமி ..நாஞ்சில் நாடு.

  10. #9
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,885
    Post Thanks / Like
    விதி ஒன்றும் அறிவிக்கப்படாமலே அவரவர் ஊரைப் பற்றி சொல்ல விழையும் போது விளைகிறது கவிதை!!!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  11. #10
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Everyone. Indian tourism board need guys like you. Reading them makes me feel so inferior when it comes to my hometown
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

Page 1 of 3 123 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •