Page 2 of 14 FirstFirst 123412 ... LastLast
Results 11 to 20 of 140

Thread: Tamils should speak in "Tamil" with much pride

  1. #11
    Regular Hubber Irene Hastings's Avatar
    Join Date
    Oct 2007
    Posts
    158
    Post Thanks / Like
    அருமையான விழிப்புணர்ச்சியைனை தூண்டும் ஒரு தலைப்பு.

    யாம் அறிந்த மொழிகளிலே தமிழை போல ஒரு அரிதான இனிதான மொழியை கண்டதில்லை. இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை. அதிலும் பழைய நூல்களான கம்பராமாயணத்தை படிக்கும்போது அதிலுள்ள வியத்தகு தமிழினை கண்டு நான் எப்போதும் நான் ஒரு தமிழன் என பெருமைபடுகிறேன்.

    நானும் முடிந்தவரை நம்மவர்களை கண்டால் தமிழில் தான் பேச முயர்ச்சிப்பேன். ஆனால் ஒரே ஒரு குறை. அலுவல் சமயத்தில் ஆங்கிலத்தை தவிர்க்க முடியவில்லை, நான் சந்திக்கும் நபர் தமிழராக இருந்தாலும்.

    வாழ்க தமிழ்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R
    Quote Originally Posted by joe
    ஒருவர் தமிழர் என தெரிந்தால் நான் தமிழில் தான் பேசுவேன் .
    அதுவும் சரளமாக, பிறமொழிக்கலப்பு மிகக்குறைவாக, ஆனால் இயல்பாகப் பேசுவார் ஜோ.
    நன்றி PR

    ஒரேயடியாக தனித்தமிழிலோ செந்தமிழிலோ பேச வேண்டும் என்பது எனக்கும் உடன்பாடு அல்ல .வலிந்து கொண்டு வார்த்தைகளை தேடிப் பேச வேண்டுமென்பதில்லை .ஆனால் தெரிந்த வார்த்தைகளை முடிந்த அளவு பயன்படுத்தினாலே போதும் என்பது என் கருத்து .

    இன்னொன்று தமிழில் சில வார்த்தைகளை பேசுவதற்கு கூச்சம் .எனக்கு தெரிந்து ஆங்கிலம் வழியாக பேசிக்கொள்ளும் பிற மொழிக்காரர்கள் கூட ‘நன்றி’ எனும் போது தம் மொழியிலேயே சொல்கிறார்கள் ..ஆனால் நம் மக்களுக்கோ ‘நன்றி’ என்று சொல்வதற்கே பெரும் கூச்சம் .

    தமிழராக இருந்தால் நான் கட்டாயம் ‘நன்றி’ என்று சொல்லுவேன் .இந்த ‘நன்றி’ என்ற ஒரு சொல்லுக்கே நான் ‘தமிழ் பற்றாளன்’ என்றும் ‘தமிழ் வெறியன்’ என்னும் பொருள்பட சிலர் கூறும் போது எனக்கு எரிச்சல் தான் வரும் ..ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ‘நன்றி’ என சொல்லுவதற்கு என்ன பெரிய வெங்காய மொழிப்பற்று தேவைப்படுகிறது? தமிழர்களுக்குள் ‘நன்றி’ என சொல்லுவது இயல்பானதாக இருக்க வேண்டாமா?

    சிலர் mummy ,daddy -க்கு பதில் அம்மா ,அப்பா எனறோ , ‘நன்றி’ என்றோ சொல்லி விட்டால் தமிழ் வளர்ந்து விடுமா என கேட்கும் குதர்க்கக் கேள்விகளை நான் மதிப்பதே இல்லை .. அம்மா ,அப்பா ,நன்றி போன்ற அடிப்படை வார்த்தைகளையே பேச கூச்சமும் தயக்கமும் கொள்பவர்கள் அதைத் தாண்டி போக முடியாது என்பது என் கருத்து.

    என் மகன் என்னை தப்பித்தவறி daddy என சொல்லும் போது ‘இல்லை .அப்பா என சொல்ல வேண்டும் ‘ என நான் சொல்லும் போது நண்பர்கள் ,உறவினர்கள் சிலர் “பரவாயில்லையே ..நல்ல தமிழ் பற்று’ என சொல்லும் போது எனக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருக்கும் ..எந்த மொழிக்காரனும் தன் பிள்ளைகள் தம்மை அம்மா ,அப்பா என தம் மொழியில் கூப்பிடுவதை பெரிய மொழிப்பற்றாக கருதுவதில்லை ..சொல்லப்போனால் அப்படி கூப்பிடாமல் வேறு மொழியில் கூப்பிட்டால் தான் ஏதோ கோளாறு என அர்த்தம்.

    எனவே இத்தகைய சின்ன விடயங்களில் நொண்டிச் சாக்குகளை சொல்லாமல் நம் மனத்தடைகளை தூக்கி வீசுவோம். படிப்படியாக இயன்ற வரை இனிய தமிழில் பேசுவோம்.

  4. #13
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe
    ஒரேயடியாக தனித்தமிழிலோ செந்தமிழிலோ பேச வேண்டும் என்பது எனக்கும் உடன்பாடு அல்ல .வலிந்து கொண்டு வார்த்தைகளை தேடிப் பேச வேண்டுமென்பதில்லை .ஆனால் தெரிந்த வார்த்தைகளை முடிந்த அளவு பயன்படுத்தினாலே போதும் என்பது என் கருத்து .
    அதே தான். தனித்தமிழ் என்பது கேட்பவரிடம் பிரமிப்பை மட்டும் நிகழ்த்துவதால் பலர் முயல்வதே இல்லை. இயல்பாக படாடோபம் இல்லாமல் இருக்கும் பேச்சு அடுத்தவர்களையும் அவ்வாறு பேச ஆசைப்பட வைக்கும். உங்கள் உங்கள் பேச்சிலிருந்தே ஒரு எடுத்துக்காட்டு:

    நான்: ரயில்வே ஸ்டேஷன் பக்கதுல தான் இருக்கு
    ஜோ: ரயில் நிலயம் பக்கத்துல தான் இருக்கு
    தனித்தமிழார்வலர்: தொடர்வண்டி நிலையம் பக்கத்துல இருக்கு

    ரயில் என்பது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் குறிக்கும் சொல்லாக தமிழுக்குள் வந்துவிட்டது. தொடர்வண்டி என்று சொல்வது சிறப்பு தான். ஆனால் அனேகரை தயக்கம் கொள்ளச்செய்யும் ஒரு பயன்பாடு* அது. மாறாக ஸ்டேஷன் என்று சொல்லத் தேவையில்லை. மிக இயல்பாக 'நிலையம்' என்று சொல்லலாம். இது போன்ற சின்ன்சின்ன விஷயங்கள் தான் பிறரையும் தேவையற்றப் பிறமொழிப் பயன்பாட்டைக் களைந்து பேசத் தூண்டுபவை.

    நான் பல இடங்களில் "நன்றி", "இடதுபக்கம்/வலது பக்கம்" என்றெல்லாம் சொல்வதை மிகுந்த பிரக்ஞையுடனே செய்வது உண்டு. குறிப்பாக குழந்தைகளிடம் தமிழிலேயே பேசுவது வழக்கம்.

    PS: நான் அம்மாவை அம்மா என்றும், அப்பாவை Daddy என்றும் அழைப்பது தொட்டில் பழக்கம். இதன் உளவியல் பெண்ணிய ஆய்வுக்குறியது
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  5. #14
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R
    PS: நான் அம்மாவை அம்மா என்றும், அப்பாவை Daddy என்றும் அழைப்பது தொட்டில் பழக்கம். இதன் உளவியல் பெண்ணிய ஆய்வுக்குறியது


    இது போல என் அம்மாவும் உடன் பிறந்தோரும் அப்பாவை அப்பா எனவும் அம்மாவை mummy எனவும் அழைத்தது ஞாபகம் வருகிறது. ஆனால் அடுத்த தலைமுறையில் எல்லோரும் பிள்ளைகளை அம்மா ,அப்பா என அழைக்கவே பழக்கினார்கள்

  6. #15
    Senior Member Veteran Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    314
    Post Thanks / Like
    Brought forward

  7. #16
    Senior Member Veteran Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    314
    Post Thanks / Like
    Brought Forward

  8. #17
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,090
    Post Thanks / Like
    Before Tamils speak in "Tamil" with pride, maybe Tamils should speak in "Tamil" first?
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  9. #18
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Quote Originally Posted by nov View Post
    before tamils speak in "tamil" with pride, maybe tamils should speak in "tamil" first?
    nov,
    நீங்க ஏன் இதைத்தமிழில் எழுத முயலக்கூடாது?

  10. #19
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    naer'la pesikkirappo ok, aana chat panrappo'vo mail panrappo'vo automatica paadhi english lines vandhurudhu... oru kaaranam, thamizh vaartthaigala englishla type panradhu konjam siramam, rendaavadhu, english'la type panra andha vaartthai vera edho vaarthainu thappa poi sendhudumo'nra bayam...
    inga thamizh'la pesanumnu solra evlo per chatting panrapo thamizhla chat panranga?
    Sach is Life..

  11. #20
    Senior Member Veteran Hubber hamid's Avatar
    Join Date
    Jul 2008
    Location
    Doha, Qatar
    Posts
    3,627
    Post Thanks / Like
    Quote Originally Posted by NOV View Post
    Before Tamils speak in "Tamil" with pride, maybe Tamils should speak in "Tamil" first?
    +1
    ................
    Come back strong.. Come back soon..

Page 2 of 14 FirstFirst 123412 ... LastLast

Similar Threads

  1. "Padmashri" "Isaimani" Dr. Sirkali Govin
    By pulavar in forum Memories of Yesteryears
    Replies: 1
    Last Post: 5th February 2010, 03:19 PM
  2. "Ariyar" in the Ancient Tamil Literature- K. V. R
    By devapriya in forum Indian History & Culture
    Replies: 3
    Last Post: 14th February 2009, 05:49 PM
  3. "thanner ilaatha tamil" - source of quote
    By podalangai in forum Tamil Literature
    Replies: 1
    Last Post: 29th November 2006, 09:18 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •