Page 63 of 73 FirstFirst ... 13536162636465 ... LastLast
Results 621 to 630 of 722

Thread: 'Kalai Nilavu' RAVICHANDRAN

  1. #621
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இதுவரை அதிகம் யாரும் பார்த்திராத திரைப்படம் துள்ளி ஓடும் புள்ளி மான்...

    முழுப்படம்...

    தரவேற்றிய ராஜ் வீடியோ விஷனுக்கு நன்றி



    இதில் ஒரு விசேஷம்.. இயக்குநர் எல்லா நடிகர்களையும் இயக்கும் போது நடிகர் திலகத்தை நினைத்து இயக்கியிருப்பார் போல.. ஒருத்தர் பாக்கியில்லாமல் அத்தனை பேரும் அவருடைய நடிப்பை அப்படியே பின்பற்றியிருப்பார்கள்.

    குறிப்பாக க்ளைமாக்ஸில் ரவி, ஆவேசம் வந்திருச்சு என்று சண்டைக்கு தயாராகும் கட்டம். மற்றும் ஒரு முகத்தில் ஏனிந்த ஒன்பது பாவம் பாடல் காட்சியில் நாயகனை அப்படியே நடிகர் திலகத்தைப் போல் நடிக்க வைத்திருப்பார்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #622
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy- Vasudevan


    'வாடா மச்சான் வாடா'

    'அன்று கண்ட முகம்' படத்தில் வரும் செம ஜாலி கலாய்ப்பு பாடல். 1968-ல் வந்த இந்தப் படம் நன்றாகவே இருந்தது.



    ரவி, நாகேஷ் இருவரும் சேர்ந்தால் கேக்கணுமா?

    வில்லனின் அடியாட்களை அறிந்து கொண்டு, அவர்களைத் தொடர்ந்து சென்று, அவர்களிடம் சவால் விட்டு, புத்திமதி தந்து, கலாட்டா செய்து ரவியும், நாகேஷும் பாடி ஆடும் பாடல்.

    சிறுவயது முதற்கொண்டே எனக்கு மனதில் ஊறி நிரம்பப் பிடித்துப் போன பாடல் அது.

    ரவிக்கு இந்த மாதிரிப் பாடல்கள் அல்வா சாப்பிடுவது மாதிரி. கிண்டல் கேலிப் பாடல்களை குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர் அவர். அவருடன் சேர்ந்த இன்னொரு குத்தகைக்காரர் நாகேஷ்.

    'வாடா மச்சான்' என்று ரவி ஒரு நீளக் குரல் கொடுத்தவுடன் சஸ்பென்சும், திகிலுமாய் ஒலிக்கும் மாமாவின் இசை. குறிப்பாக கிடார் பேஸ். அடுத்து ஒலிக்கும் அருமையான இசைக்கு ரவி கால்களை மாற்றி மாற்றி வைத்து நடனமாட செம ரகளையாய் ஆரம்பிக்கும் பாடல்.

    ரவி ரகளை பண்ண ஆரம்பிக்க, நாகேஷ் பந்து போலத் துள்ளி வந்து ஜாயின் செய்து கொள்ளுவார்.

    நக்கல்களும், நையாண்டிகளும் தொடரும்.

    ரவிக்கு 'பாடகர் திலகம்' வாய்ஸும், நாகேஷுக்கு அவருக்கென்றே பிறந்த பாடகர் ஏ.எல்.ராகவன் வாய்ஸும். நானா நீயா என்று இருவரும் போட்டா போட்டி போடுவார்கள். கிண்டல் பாடல் என்பதால் எக்ஸ்ட்ரா கூக்குரல்கள் எல்லாம் கொடுத்து ராகவன் ஓட்டத்தில் முந்தி விடுவார்.

    இந்த எக்ஸ்ட்ரா பிட்கள் கொடுப்பதில் சதனும், ராகவனும் சக்கரவர்த்திகள். சதன் பலகுரல். ராகவன் ஒரே குரல் ஆனால் பலவிதம்.

    ('நான் யார் தெரியுமா?' என்ற ஜெய்சங்கர் படத்தில் 'பார்த்ததும்... காதலை... தருவது அழகிய பெண்களே' என்றொரு பாடலில் இதே பாடகர் திலகத்துடன் சேர்ந்து எவருமே செய்ய முடியாத தர முடியாத 'எக்கோ' வாய்ஸை எதிரொலிக்கச் செய்து நான் யார் தெரியுமா என்று மார் தட்டியவர் ராகவன்).

    'ஆசை மட்டும் பெருசா இருந்தா
    அதிர்ஷ்டம் வருமாடா'

    என்று முடித்துவிட்டு சௌந்தர்ராஜன் ஆஅ ஆஅ ஓஒ... என்று இழுப்பது ரகளை என்றால்

    'மீசை மட்டும் பெருசா இருந்தா
    வீரம் வருமாடா'

    என்று நாகேஷ் குப்பைத்தொட்டியில் வில்லன் ஆள் ஒருவரை அமர வைத்து கேலி செய்வது ஜோர்.

    'வெறும் காசுக்காக காரியஞ் செஞ்சா
    கருணை வருமாடா'

    என்று சௌந்தர் முடித்தவுடன்,

    ராகவன் 'ஹெஹெஹ்ஹெஹே' என்று கொக்கரிப்பது அட்டகாசம்.

    பின் இருவரும் மாறி மாறி

    'ஏன்டா டேய்
    ஏன்டா டேய்
    ஏன்டா டேய்
    டேய்! டேய்'

    என்று எதிரிகளை அலட்சியமாய் எகத்தாளம் செய்வது கலக்கல்.


    பாடலாசிரியர் வார்த்தைகளை அதிகமாக போட்டாலும் மாமா சாமர்த்தியமாக ராகவனை வேகமாக பாட வைத்து டியூனுக்குள் அடக்கி விடுவது செம விசேஷம். பாருங்கள்

    'தண்டனைக்குத் தப்பிய திருடன் தரணியில் உண்டோடா'

    இந்த 5 வார்த்தைகளையும் ராகவன் ரொம்ப அருமையாக, விரைவாக ஒரே வரியில் கொண்டு வந்து வருவார். அது மட்டுமல்ல. கூட 'அடா அடா அடா' வேறு சேர்த்து இன்னும் பரிமளிப்பார். பாட்டின் ராகத்தோடு சேர்ந்து இந்த 'அடா புடாக்கள்' எல்லாம் அற்புதமாக மேட்ச் ஆகும்.

    'அண்டப் புழுகன் கொள்ளையன் கூட
    அகப்பட்டுக் கொண்டான்டா'

    என்று நாகேஷ் பாடியதும்,

    'அவனே அப்படி ஆனா நீ என்ன
    அப்பன் மகனோடா'

    என்று ரவி தொடர,

    உடனே நாகேஷ்

    'போடா' என்று அலட்சியமாக சொல்லி விட்டுப் போவாரே! சூப்பரப்பா.

    அடுத்து பல்லவி வரி பாடகர் திலகத்தின் குரலில் 'வாடா மச்சான் வாடா' வந்தவுடன் எக்ஸ்ட்ராவாக ராகவன்

    'பயப்படாமே வாடா'

    என்று அற்புதமாக இணைவார் பாருங்கள். அருமையோ அருமை. என்ஜாய் பண்ணலாம்.

    'அம்மா இருந்தா அவளைக் கேளு
    பாசம் என்னென்று'

    என்று அன்பைக் குழைத்து சௌந்தாரராஜன் அந்த வரிகளில் எங்கோ போய் கொடி நாட்டுவார். திரும்பவும்

    'உங்க' என்பதையும் சேர்த்து

    'உங்கம்மா இருந்தா அவளைக் கேளு
    பாசம் என்னென்று'

    என்று பாடுவது அற்புதத்திலும் அற்புதம்.

    முழுக்க முழுக்க மலைப் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட பாடல்.ஸ்டூடியோ ஷாட்களே இருக்காது. முழுதும் அவுட்டோரிலே படமாக்கப் பட்டது இன்னொரு சிறப்பு.

    சவால் பாடல். சவால் பாடல்களுக்கு சவால் விடும் பாடல் கூட.

    மனதில் துணிவையும், தைரியத்தையும், நம்பிக்கையையும் ஊட்டும் பாடல்.

    'எதிரிகளைக் கண்டு அஞ்சாதே... துச்சமாக நினை....எவனாயிருந்தாலும் துணிவுடன் எதிர்த்து நில்லு...அடுத்துக் கெடுக்கும் ஆதிக்கக்காரகளை அடக்கு...வேஷதாரிகளின் வேடத்தைக் கலைத்து வெட்ட வெளிச்சமாக்கு...'

    என்ற உற்சாக சக்தி தரும் டானிக் பாடல்.

    'ஏடா மூடா உந்தன் ஜம்பம்
    என்னிடம் பலிக்குமாடா
    வாடா மச்சான் வாடா'

    எனக்கு இப்போது மட்டுமல்ல...எப்போதும் பிடித்த வரிகள்.



    வாடா மச்சான்

    வாடா மச்சான் வாடா
    வாடா மச்சான் வாடா
    ஏடா மூடா உந்தன் ஜம்பம்
    என்னிடம் பலிக்குமாடா
    வாடா மச்சான் வாடா
    ஏடா மூடா உந்தன் ஜம்பம்
    என்னிடம் பலிக்குமாடா

    வாடா மச்சான் வாடா

    ஆசை மட்டும் பெருசா இருந்தா
    அதிர்ஷ்டம் வருமாடா
    ஆஆ ஆஆ ஒ.....ஒ

    மீசை மட்டும் பெருசா இருந்தா
    வீரம் வருமாடா
    அஹா அஹா அஹா ஓஓ....ஓ

    ஆசை மட்டும் பெருசா இருந்தா
    அதிர்ஷ்டம் வருமாடா

    மீசை மட்டும் பெருசா இருந்தா
    வீரம் வருமாடா

    காசுக்காக காரியஞ் செஞ்சா
    கருணை வருமாடா
    வெறும் காசுக்காக காரியஞ் செஞ்சா
    கருணை வருமாடா

    ஹெஹெஹ்ஹெஹே

    கைக்குக் கையா சண்டை போட
    தைரியம் உண்டோடா

    ஏன்டா டோய்
    ஏன்டா டோய்
    ஏன்டா டேய்
    டேய்! டேய்

    வாடா மச்சான் வாடா
    ஏடா மூடா உந்தன் ஜம்பம்
    என்னிடம் பலிக்குமாடா
    வாடா மச்சான் வாடா

    தண்டனைக்குத் தப்பிய திருடன்
    தரணியில் உண்டோடா அடா அடா அடா

    தப்பிப் போன திருடனைக் கூட
    தர்மம் விடுமாடா..டாய்..

    தண்டனைக்குத் தப்பிய திருடன்
    தரணியில் உண்டோடா
    ஆ டஹா ஆ டஹா ஆ டஹா

    தப்பிப் போன திருடனைக் கூட
    தர்மம் விடுமாடா

    அண்டப் புழுகன் கொள்ளையன் கூட
    அகப்பட்டுக் கொண்டான்டா அடா அடா அடா

    அவனே அப்படி ஆனா நீ என்ன
    அப்பன் மகனோடா

    போடா (நாகேஷ் ஜோர்)

    வாடா மச்சான் வாடா

    பயப்படாமே வாடா

    ஏடா மூடா உந்தன் ஜம்பம்
    என்னிடம் பலிக்குமாடா
    வாடா மச்சான் வாடா

    சொந்தப் புத்தி இருந்தா
    நல்ல சோத்துக்கு வழி உண்டு ஓ ஓ ஓ
    இந்தப் புத்தி இருந்தா
    அங்கே கம்பிக் கதவுண்டு
    ஓஹோ ஓஹோ ஓஹோ
    ஓ ஓ ஓ

    சொந்தப் புத்தி இருந்தா
    நல்ல சோத்துக்கு வழி உண்டு
    இந்தப் புத்தி இருந்தா
    அங்கே கம்பிக் கதவுண்டு

    அம்மா இருந்தா அவளைக் கேளு
    பாசம் என்னென்று
    உங்கம்மா இருந்தா அவளைக் கேளு
    பாசம் என்னென்று
    ஹெஹெஹே

    அடுத்தவன் சொல்லைக்
    கேட்டுக் கெட்டவன்
    ஆயிரம் பேருண்டு

    ஏன்டா டோய்
    ஏன்டா டோய்
    ஏன்டா டேய்
    டேய் டேய்

    வாடா மச்சான் வாடா
    பயப்ப்படாமே வாடா
    ஏடா மூடா உந்தன் ஜம்பம்
    என்னிடம் பலிக்குமாடா
    வாடா மச்சான் வாடா


    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. Likes Russellmai liked this post
  6. #623
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks Vasu.
    தாடி கார மச்சான் இவரு நாடி பிடிச்சு பாரு - பாட்டு நினைவு இருக்கா//

    நினைவு இருக்காவா? இந்தப் பாட்டோடேயே வாழ்ந்த காலங்கள் உண்டு கிருஷ்ணா. கோபாலருக்கு கோகோ கோலா இந்தப் பாடல். இப்ப ஓடி வரும் பாருங்களேன்.

    'எட்டடி உயரம் ரெண்டடி அகலம் ஒட்டகம் என்பது இவன்தானோ'

    ரவி தாடியுடன் செம ஸ்டெப்ஸ். கூட மாந்தோப்பில் நின்றிருந்த ரத்னா மாடர்ன் டிரெஸ்ஸில்.

    இன்னா பாட்டு. 'வாடா மச்சான் போட்டா' நீர் 'சிங்கப்பூரு மச்சானை'கூப்பிடுறீர். (தலைவர் 'சவாலே சமாளி'யில் நம்பியாரிடம் தாலியைக் கையில் வைத்துக் கொண்டு சொல்வார் 'சும்மா இருடா மச்சான்' அந்த மச்சானுக்கு முன் எந்த மச்சானும் நிக்க முடியாது. )

    நாம் மூவர் அல்ல. நால்வர் ... ஐவர்.. அறுவர்... ஏழ்வர். ஆனால் வீழ்வோர் அல்ல.

    இன்னைக்கு முழுக்க மச்சான் பாட்டா இருக்கப் போவுது.

    கிருஷ்ணா! மச்சானைப் பார்த்தீங்களா?

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Likes Russellmai liked this post
  8. #624
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy- Chinna Kannan


    வித்தை பலகாட்டி வீரமாக அங்குதான்
    முத்ததன் சிப்பியை மூழ்கியே – பக்குவமாய்
    தேர்ந்தே எடுத்தே திசையெங்கும் விற்றிடுவார்
    பாசமிகு பாண்டிநாட் டார்..

    எஸ்..முத்துக்கள் பெயருடைத்தது பாண்டிய நாடு என்பது அனைவருக்கும் தெரியும்.. அதை வைத்து எழுதப்பட்ட ஒரு மிகச் சிறப்பான நாவல் ராஜமுத்திரை.. சாண்டில்யன் எழுதியது..ஆஹா எத்தனை முறை படித்திருப்பேன்..

    முன்னுரையில் அந்தக்காலத்தில் எப்படி முத்துக்கள் எடுத்தார்கள் என்பதை விலாவாரியாக எழுதியிருப்பார்..

    அதைப்பற்றி விவரணையாக எழுத ஆசை தான்..ஆனால் மனம் மிகக் களைப்பாக இருக்கிறது..

    ஆக என்ன சொல்லவந்தேன்..முத்து. செயற்கை முத்து இயற்கை முத்து பற்றி ஒரு வியாசமே எழுதியிருக்கலாம் ரவி..பட் அவருக்கும் என்ன மனக்களைப்போ..

    சரி என்னபண்ணலாம் .. நீராடலாம்.. அழகாய்க் குளிர்ந்த நீரில் (யார் கண்போட்டார்களோ தெரியவில்லை ( நற நற) மஸ்கட்டுக்கு வரவிருந்த சைக்ளோன் கொஞ்சம் சூரில் சூறையாடிவிட்டுப் போய்விட்டது (மஸ்கட்டிலிருந்து இரண்டரை மணி நேரப் பயணம்) இங்கே மறுபடி வழக்கப்படி வெய்யில்

    ஒரே வேலைகள்..டபக் டபக்கென போய்க்கொண்டிருந்ததில் நூறாவது பக்கத்திற்கு ஒரு ஓஹோ எனச் சொல்லும்படி இல்லாவிட்டாலும் ( என்னால் ஓஹோ என எழுதவேவராது.)

    ரொம்ப சீரியஸா கண்ணா எழுதிட்டான்னு நினைக்கறியளா..என் நிலைமை அப்படி..

    ஜல்ப்புன்னேன். அது போகவே இல்லை. கர் கர் என ஓடும் மூக்கு.. எதாவது உருப்படியாய் எழுதவும் வரவில்லை..

    அடுத்தவாரம் முதல் லீவ்..வாசு கல்நாயக், ரவி,ராஜேஷ் கிருஷ்ணா கலை எஸ்வி – ஒன் மன் த் லீவ்பா சிக்கா.. ஸோ நான் வரும் போது இந்த மதுரகானம் திரி 250 பக்கங்கள் கடந்திருந்தால் உங்கள் எல்லாருக்கும் போனஸ்..

    நான் எழுதவே எழுதாமல் கோபு 1954 போல மறைந்திருந்து லைக் போட்டுஆதரவு கொடுப்பேன். பட் பக்கங்கள் 90% எழுத்துக்களின் மூலமாக நிரம்பவேண்டும் என்பது என் விருப்பம்.

    இங்க ரவியும் விஜியும் என்னமோ பாடி ஆடறாங்க.. காதல் தான் இப்படித் தான் ..மூழ்கி எழுந்து முத்தைக் கண்டெடுத்தா ஆபரணமாப் போட்டுக்க வேண்டாமோ.. என்னமோ போங்க
    லிரிக்ஸ் நல்லா இருக்குங்க்ணா..
    *
    முத்துக்குளிப்பவரே கொஞ்சம் பக்கத்திலே வாங்க
    முக்கனிச் சாறெடுத்துக் கொஞ்சம்கிண்ணத்திலே தாங்க..
    மூழ்கி எழுந்துவிட்டேன்
    இந்த முத்தை கண்டெடுத்தேன்
    மனதில் பூட்டிவைத்தே
    என் உயிரைக் காவல் வைத்தேன்..

    உறக்கம் வராமல் என்னைத் தடுத்ததென்ன
    பொறுக்கவிடாமல் உள்ளம் தவிப்பதென்ன

    காற்று வந்து முத்தமிட்டால் கார்மேகம் நீர் பொழியும் (ஹை..)
    காதல் வெள்ளம் பொங்கி வந்தால் காவியத்தில் தேன் பாயும்

    இளமை வானிலே எண்ணம் பறப்பதென்ன
    இனம்புரியாத சுகம் பிறப்பதென்ன

    நெருங்கி வந்து நின்றுவிட்டால் நினைவுகள் மயங்கி வரும்
    மயக்கம் வந்து தெளியும் முன்னே மறு நாளும் விடிந்துவிடும்


    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #625
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    'முத்துக் குளிப்பவ்ரே கொஞ்சம் பக்கத்தில வாங்க'.

    எத்தனை முறை கேட்டாலும் முத்துதான்.

    இந்தப் பாடலை ரவி த்ரெட்டில் தரவேற்றி எழுதிய ஞாபகம் வந்து விட்டது. ராகவேந்திரர் கொடுத்த உற்சாகத்தினால் செய்தேன். இப்படத்தின் எந்த தகவல்களும் அப்போது இல்லாத நிலையில் ராஜ் டிஜிட்டல் பிளசில் அதிர்ஷ்டவசமாக பதிவு செய்து வைத்திருந்த வீடியோவை அப்லோட் செய்து பதித்தேன்.(2011)



    'சத்தியம் தவறாதே' என்ற ரவிச்சந்திரன் அவர்களின் மிக மிக அபூர்வ படத்தைப் பற்றி பல பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 20.12.1968-இல் வெளிவந்த இந்தப்படத்தில் 'கலைநிலா' ரவிச்சந்திரன், அவரது ஜோடியாக விஜயநிர்மலா ('பணமா பாசமா' புகழ் 'அலேக்' நிர்மலா தான். இவர் தெலுங்குத் திரைப்பட உலகின் 'சூப்பர் ஸ்டார்' கிருஷ்ணாவின் மனைவி ஆவார். 'பெஜவாடா பெப்புலி' என்ற நடிகர் திலகம், கிருஷ்ணா இணைந்து நடித்த தெலுங்குத் திரைப்படத்தை இயக்கிய பெருமைக்குரியவர். 'மோசக்காரனுக்கு மோசக்காரன்' என்ற தெலுங்கு மொழி மாற்றத் தமிழ் படத்தில் கிருஷ்ணாவின் ஜோடியாக நடித்தவர். கிருஷ்ணாவின் ஜோடியாக பல தெலுங்குப் படங்களில் இவர் நடித்ததினால் இவர்கள் இருவருக்கும் காதல் அரும்பி அதுவே கல்யாணத்தில் முடிந்தது) மற்றும் 'மாஸ்டர்' பிரபாகர், ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். பாண்டி செல்வராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார் என்று நினைக்கிறேன். (C.N. பாண்டுரங்கன் அவர்கள் மகா இசைமேதை. அவர்கள் இசையமைப்பில் மிக மிக அற்புதமான பாடல்கள் இந்தப் படத்திற்கு மகுடம் சூட்டின. (நடிகர் திலகத்தின் 'எதிர்பாராதது' படத்திற்கும் இசை இவர்தான். டைட்டிலில் பாண்டுரங்கம் என்று போடுவார்கள். தியாகராஜ பாகவதர் நடித்த 'புதுவாழ்வு' போன்ற படங்களுக்கு 'சங்கீதமேதை' ஜி.ராமநாதன் அவர்களுடன் சேர்ந்து இசை அமைத்தவர்)

    'சத்தியம் தவறாதே... தாய் நாட்டினை மறவாதே' என்று மாஸ்டர் பிரபாகரன் பீச்சில் பாடுவதாக வரும் பாடல் சோஷலிச கொள்கைகளை அற்புதமாக வெளிப்படுத்தும் பாடல்.

    இப்படத்தின் vcd,dvd எதுவும் அப்போது கிடைக்கவில்லை. இந்தப் படத்தைத் தேடி பல வருடங்கள் அலைந்திருக்கிறேன். ஆனால் இப்போது வாங்கி விட்டேன். ஏனென்றால் சிறுவயது முதற்கொண்டே

    "முத்துக் குளிப்பவரே... கொஞ்சம் பக்கத்திலே வாங்க"...

    பாடல் மனதில் மிக ஆழமாகப் பதிந்து விட்டது. சிலோன் ரேடியோவில் இப்பாடலை பலமுறை கேட்டு மெய்மறந்து போய் இருக்கிறேன். இப்படத்தை 'விஜய்' தொலைக்காட்சியில் கூட முன்பு ஒருமுறை போட்டார்கள். அப்போது இந்தப் பாடல் காட்சியை மீண்டும் பார்த்து பூரித்துப் போனேன். பாடலுக்கேற்றவாறு அற்புதமாகப் படமாக்கப் பட்டிருந்தது இந்தப் பாடல். அவுட்டோரில் படமாகப் பட்டவிதம் மனதுக்கு குளிர்ச்சியைத் தரும் விதமாக உள்ளது. ரவியும் கேப்பெல்லாம் போட்டுக் கொண்டு அழகாகவே தோன்றுவார். டி எம்.எஸ்ஸின் குரல் ரவிக்கு அற்புதமாக பொருந்தி இருக்கும். இசைக்குயில் சுசீலாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். "இளமை வானிலே எண்ணம் பறப்பதென்ன"... என்ற சரணத்தின் வரிகளை இருமுறை அவர் உச்சரிக்கும் விதம் அலாதியானது.

    என்ன பாட்டுய்யா அது! 'சத்தியம் தவறாதே' ரவி, விஜயநிர்மலா ஜோடி. பாட்டுக்கள் ஒவ்வொன்றும் டாப் ரகம். இப்போது உங்கள் ரசனையால் இங்கேயே நானும் ரசிக்கிறேன்.

    By Vasudevan
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #626
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கொஞ்சம் நடக்கும் சில நடவடிக்கைகளைப் பார்த்ததில் மனதுக்குள் கொஞ்சம் கோபம் வந்தது. கொழுந்துவிட்டும் எரிந்தது..அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து என்ன செய்தேன்…
    அப்படியே பக்கத்தறைக்குச் சென்று கண்ணாடியில் பார்த்தேனா.. ஏற்கெனவே கொஞ்சம் சுமாரழகான முகம் இன்னும் கொஞ்சம் சுமாராக மாறி இருக்க ரொம்பவே கோபம்..

    வந்து ஏதாவது அது இதுன்னு பாட்டுக் கிடைக்கிறதா என்று பார்த்தால் கீழே உள்ளபாட்டு தான் முதலில் கிடைத்தது..

    அதற்கப்புறம் தான் அது இது ..

    அந்த முதல்பாட்டு பார்த்த போது குறள் தான் நினைவுக்கு வந்தது

    அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
    கடுத்தது காட்டும் முகம்

    மனஸ் புண்ணாய்டுச்சுன்னா அது எங்க தெரியுமாம் ஃபேஸ்புக்ல ஸாரி ஃபேஸ்ல தெரியுமாம் வள்ளுவர் அந்தக்காலத்திலேயே சொல்லியிருக்கார்..

    அப்புறம் இந்தப் பாட் முழுக்கக்கேட்ட பிறகு மறுபடி கண்ணாடியைப்பார்த்தேன்.. என்முகம் சிரித்தபடி வெகு அழகாக..

    ஸோ கோபம் வந்துச்சுன்னா டைவர்ஷனா ஒண்ணை எடுத்துக்கிட்டு பண்ணிடனும் என்று ஆன்றோர்கள் சொல்வாங்க..உண்மை தாங்க..நம்பலையா.. சரி..என்னமோ போங்க..

    *
    ரவிச்சந்திரனும் ஜெயலலிதாவும் (அது என்ன உடை சுடிதாரும் இல்லாமல் நைட்டி போலும் இல்லாமல்) வெகு அழகாக உடற்பயிற்சி போல் நடனம் ஆடுகிறார்கள்..(புலியூர் சரோஜா டான்ஸ் போல இருந்தது) பட் பாடல் வரிகள் வெகு அழகு..

    *

    நெஞ்சுக்கு முகமே கண்ணாடி நீ நினைப்பதைக் காட்டும் முன்னாடி
    ஊரறியாமல் மறைத்த போதும் ஓடும் விழிகள் தள்ளாடி

    சபையறியாமல் நடக்கும் அது
    தலைமுறை கால்வரை அளக்கும்
    இடையிடையே கொஞ்சம் சிரிக்கும்
    அது ஏழையின் பசி போல் இருக்கும்

    ஆசையை ப் பல நாள் அடக்கும்
    அந்த அடக்கத்திலே உடல் இளைக்கும்

    ஆயினும் நெஞ்சத்தை மறைக்கும்
    அது ஆண்களுக்கெங்கே இருக்கும் இருக்கும்

    பெண்ணுக்கு ரகசியம் ஏது
    தலை பின்னலும் பேசிடும் போது

    கண்ணுக்கு த் திரைகிடையாது
    அது கலந்தபின் விலகுவதேது ஏது






    By Chinna Kannan
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. Likes Russellmai liked this post
  12. #627
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy- Vasudevan



    'மாடி வீட்டுப் பொண்ணு மீனா'

    படம்: புகுந்த வீடு

    சிறப்பு அம்சங்கள் நிறைந்த சிந்தை மயக்கிய பாடல்.

    எனதருமை கோபால் சாருக்கு இப்பாடலை பரிசாக அளிக்கிறேன்.

    பாடகர் திலகத்தின் ஆளுமை. இரட்டையர்கள் சங்கர்-கணேஷ் இசை இராஜ்ஜியம். இசைக்குழுவினர் ஒவ்வொருவரின் ஒற்றுமைப் பங்களிப்பு, ரவியின் ஸ்டைல், அழகு, ஆட்டம், ரவி இதுவரை செய்யாத சில புது முகபாவங்கள், லஷ்மியின் நடிப்பு

    என்று பல சிறப்புகள் நிறைந்த பாடல்.

    சந்தர்ப்ப வசத்தால் பிரிந்த தம்பதியர். கணவன் மேடைப் பாடகனாக இன்னிசைக் கச்சேரி மேடையில். அவன்தான் பாடப் போகிறான் என்று தெரியாமல் அரங்கின் உள்ளே வரும் மனைவி. அவனைக் கண்டதும் அதிர்ச்சி. அவனுக்கும் இன்ப, துன்ப அதிர்ச்சி. மைக்கை கையில் எடுத்து மனதில் உள்ளதை (அவள் மட்டுமே) புரியும்படி வார்த்தைகளில் இன்னிசையோடு கொட்டித் தீர்க்கிறான். அவள் தர்மசங்கடத்தில் ஆழ்கிறாள். அழுகிறாள்.

    இது பாடலுக்கான காட்சி.



    இன்னிசைக் கச்சேரி ஒன்றில் ரசிகர்களிடம் சங்கர்-கணேஷ் இரட்டையர்களை ரவி நிஜமாகவே அறிமுகப்படுத்துவதுடன் இந்தப் பாடல் தொடங்கும். மேடையில் இன்னிசை வேந்தர்கள். இருவரும் இளமையாக. சுறுசுறுப்பாக.

    பாடலின் ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டமாக டிரம்பெட் எடுத்து கூலிங் கிளாஸ் அணிந்த இசைக் கலைஞர் ஒருவர் வாசிக்க ஆரம்பிக்க, அப்படியே நாம் நம்மை நம் வசம் இழக்க ஆரம்பிப்போம். காதுகளில் ரீங்காரமிட்டு ஆர்ப்பாட்ட இசை நம்மை இன்ப சித்ரவதைகள் செய்ய ஆரம்பிக்கும்.

    இசைக்கலைஞர்கள் கள்ளமில்லா புன்னகையோடு கிடார் கருவிகளை தீண்ட, மற்ற சிலர் 'பாங்கோஸ்' பரவசமாய் வாசிக்க, மற்ற கலைஞர்களும் அவரவர்கள் இசை வேலையைச் செவ்வனே செய்ய, பாடகர்கள் அணியும் வெண் கோட் சூட் அணிந்து ரவி உற்சாகக் கரை புரள பாடத் துவங்குவார்.


    மாடி வீட்டுப் பொண்ணு மீனா
    கோடி வீட்டுப் பக்கம் போனா
    சின்னப் பையன் கண்ணு தேடினா
    சேலையிட்டு மெல்ல மூடினா

    கால்கள் தள்ளாடினா
    கண்கள் போராடினா
    நெஞ்சம் திண்டாடினா
    நாணம் கொண்டோடினா
    ஒரே பயம் பாவம்
    ஒரே பயம்

    மாடி வீட்டுப் பொண்ணு மீனா
    கோடி வீட்டுப் பக்கம் போனா
    சின்னப் பையன் கண்ணு தேடினா
    சேலையிட்டு மெல்ல மூடினா


    நேர் ஆங்கிளிலும் சைட் ஆங்கிளிலும் ரவி அழகு. சற்று முகம் முற்றியதும் தெரியும். ஆனாலும் அதவும் ஒரு தனி அழகு.

    லஷ்மி இப்போது அரங்கத்தினுள் என்ட்டர். ரவியைப் பார்த்ததும் கண்களை உயர்த்தி அதிர்ச்சி அடைந்து நிற்பார்.

    இப்போது இடையிசை. சங்கர்-கணேஷ் பின்னி எடுப்பார்கள். சங்கர் அக்கார்டின் எடுத்து அக்கிரமம் புரிகையில் கணேஷ் தன் கைகளால் இசைக் குழுவினரை வழி நடத்துவார். கண்ணாடி வாலிபர் கருமமே கண்ணாக டிரம்பெட் வாசித்து கலக்கிக் கொண்டிருப்பார். பின் ஐந்தாறு வயலின் விற்பன்னர்கள் புகுந்து புறப்படுவார்கள்.

    லஷ்மி சீட்டு இருக்கை நம்பரை செக் செய்தபடி இருக்கை இருக்கும் வரிசையைத் தேடிச் செல்வார். இப்போது அனைத்து இசைக் கலைஞர்களும் சேர்ந்து காட்டப்படுவார்கள்.


    இருபது வயது இளைஞன் ஒருவன்
    வருவதைக் கண்டாள் பின்னாடி
    இன்னும் கொஞ்சம் வேகம் கொண்டு


    (ரவி குனிந்தபடி தத்தித் தத்தி நடந்து ஆடுவது செம அழகு)

    அன்னம் நடந்தாள் தள்ளாடி
    அங்கொரு பார்வை இங்கொரு பார்வை


    (இந்த இடத்தில் ரவி, லஷ்மி ரகசிய முகபாவங்கள் ரசிக்க வைக்கும்)

    அங்கொரு பார்வை இங்கொரு பார்வை
    அச்சம் கொண்டாள் நெஞ்சோடு
    காதல் என்னும் பாடல் கேட்டு
    பின்னால் சென்றாள் அவனோடு
    காதல் என்னும் பாடல் கேட்டு
    பின்னால் சென்றாள் அவனோடு

    மாடி வீட்டுப் பொண்ணு மீனா
    கோடி வீட்டுப் பக்கம் போனா
    சின்னப் பையன் கண்ணு தேடினா
    சேலையிட்டு மெல்ல மூடினா




    பாங்கோஸ் உருட்டல், மிரட்டல்களுக்கு மத்தியில் (வாசிக்கும் அந்த அழகு இளைஞரிடம்தான் என்ன ஒரு உற்சாகம்!) அந்த ஓசைக்கேற்றவாறு லஷ்மியின் கண்கள் மிரட்சியில் மிரண்டு கவிதைகளாய் உருளும். உருக்கும். ரவி ஆர்வ எகத்தாளமாய் அவரைப் பார்ப்பது இன்னும் சுவை. லஷ்மி செய்வதறியாமல் கீழுதட்டை மெல்லக் கடிப்பார். டிரம்ஸ் புகுந்து விளையாடும்.

    கிடார்கள் முழங்க, தொடர்ந்து புல்லாங்குழல் வாசிப்பாளர் குழல் வாசித்து புளகாங்கித புல்லரிக்க வைப்பார். சாக்ஸோபோன் பிடித்து சர்க்கஸ் வித்தைகள் நடத்திக் காட்டுவார் இன்னொரு வாசிப்பு ஜாம்பவான்.


    (இந்த ஜாம்பவானுக்கு, அவர் வாசிக்கும் அழகிற்கு, அற்புதத்திற்கு என்ன விலை கொடுத்தாலும் தகும். மனுஷன் பின்னுவார் சாக்ஸில் மெய்மறந்து.)

    மலரும் நினைவுகளில் மூழ்கிய லஷ்மியின் மௌன அழுகை அவரிடம் நம்முள் இரக்கம் பிறக்க வைக்கும்.

    உறவினில் தொடங்கி ஊடலில் முடிய
    இருவரும் பிரிந்தார் தனியாக
    சென்றவன் தானே வந்திடக் கூடும்
    என்றவள் நினைத்தாள் முடிவாக


    என்று ரவி இதழ் மூடாமல் முகத்தில் சோகம் காட்டி தொடருவார். (அருமையாக பாவங்கள் காட்டுவார் ரவி இந்த இடத்தில் பழைய நினைவுகளை நினைத்தபடியே)

    காதலில் நெஞ்சம் வாடிய பின்னால்
    காதலில் நெஞ்சம் வாடிய பின்னால்


    (லஷ்மியின் புருவங்கள் கோபத்தில் ஏறி இறங்கும் விதம் வித்தை)



    இரண்டாம் முறை 'காதலில் நெஞ்சம்' எனும் போது ரவி வாயசைப்பது அப்படியே நடிகர் திலகத்தை ஞாபகப்படுத்தும். 'ம்' இழுக்கும் போது கவனியுங்கள்.


    தானே வந்தாள் துணை தேடி

    காலம் ஒருநாள் மாறும் என்று
    மன்னன் நின்றான் இசை பாடி
    காலம் ஒருநாள் மாறும் என்று
    மன்னன் நின்றான் இசை பாடி

    மாடி வீட்டுப் பொண்ணு மீனா
    கோடி வீட்டுப் பக்கம் போனா
    சின்னப் பையன் கண்ணு தேடினா
    சேலையிட்டு மெல்ல மூடினா


    'பாங்கோஸ்' இசையுடன் பாடல் முடியும். ஆனால் அப்போதுதான் மீண்டும் நம் மனதில் இசைக்கத் துவங்கும்.

    நான் பார்த்து பார்த்து, அனுபவித்து அனுபவித்து, ரசித்து ரசித்து, மகிழ்ந்த பாடல். பாடகர் திலகத்தின் பாடல் வரிசைகளில் மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்ட பாடல். பாடல் கொஞ்சமும் அழகு கெடாமல் சுவை குன்றாமல் நாம் நினைத்ததற்கு மேலும் அற்புதமாக படமாக்கப் பட்டிருக்கும்.

    இசைக் கலைஞர்களின் உற்சாகத்திற்கு மத்தியில் ரவி,லஷ்மி நடிப்பையும் சேர்த்து அவர்களோடு கலந்து இப்பாடலை சுவைத்து மகிழலாம்.


    என்ன ஒற்றுமையான ஒருங்கிணைப்பு! பாடகர்கள், நடிகர்கள், இசைக் கலைஞர்கள், பாடலாசிரியர் என்று ஒருவரை ஒருவர் மிஞ்சும் திறமையான காலகட்டம். என்ஹி போயிற்று அந்த சொர்க்கபுரி நாட்கள்? திரும்ப வரவே வராதா? ஒவ்வொருவருக்கும் டைம் மெஷின் இருக்கக் கூடாதா? அதில் ஏறி அந்தக் காலத்திற்கு நாம் பறக்கக் கூடாதா?

    இறந்தும் இசையால், நடிப்பால், கலையால் நம்மை வாழ வைக்கும் சாகசக் கலைஞர்களுக்கு இப்பாடல் அர்ப்பணம்.

    அப்பாடி! ரொம்ப நாள் ஆசை இன்று நிறைவேறி விட்டது.

    ரசித்த, ஏற்கனவே ரசித்த, இப்போது ரசிக்கப் போகும் அனைத்து ரசிக உள்ளங்களுக்கும் நன்றி!


    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  13. #628
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி கோ!

    வேலையில்லாமல் பண்ணியதற்கு. இன்னும் ரவியை உயர்த்தலாம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes rajeshkrv liked this post
  15. #629
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கல்யாண மண்டபம் படத்தில் பீ.பீ.எஸ் -சுசிலா இணைவில் (கே.வீ.எம் இசை) ரவிச்சந்திரன் -மாலதி இணையில்.(அசப்பில் ஈ.வீ.சரோஜா மாதிரி இருப்பார்). ரவி ,நடிகர்திலகத்துக்கு அடுத்த தமிழக ஆணழகன். இந்த உடையிலும் அசத்தல். பாட்டுக்கு தகுந்த மாதிரி அடக்கி வாசிக்கிறார். படு பாந்தமான பாடல். படமாக்கம். எனக்கு மிக மிக பிடித்த ஒன்று.

    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  16. #630
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy-Vasudevan

    ]'தங்கச் சலங்கை கட்டித்
    தழுவுது தழுவுது பூச்செண்டு'


    கோபால் சார்!

    அடேங்கப்பா!

    நம் எத்தனை நாள் கனவு நிறைவேறுகிறது?


    எட்டு வயதில் சிலோன் வானொலியில் கேட்டு ரசிக்கத் துவங்கிய பாட்டு. கேட்டுக் கேட்டு மனதில் தங்கிப் புதைந்து போனது. அடிக்கடி கோபால், ராகவேந்திரன் சார் போன்றவர்களுடன் பேசும்போது பூதாகாரமாக வெளியே புறப்பட்டு வரும். அன்று முழுக்க முழுக்க ஆட்சி செலுத்தி விட்டு பின் கொஞ்சம் அடங்கும். இது போல நிறைய தடவை. சம்பந்தம் இல்லாமல் நடு இரவில் ஞாபகத்திற்கு வந்து உயிரை வாங்கும். தூக்கம் கெடுக்கும். அடுத்த நாள் டூ வீலரில் செல்லும்போது கூட பாடலின் முதல் நான்கு வரிகளை உதடு உச்சரித்துக் கொண்டே இருக்கும். பாடல் இடம் பெற்ற படமோ அபூர்வமானது. நடுவில் பார்க்கவே சந்தர்ப்பம் கிடைக்காதது. பாடலும் அப்படியே.

    கோபாலும் நானும் பேசும்போது இப்பாடலைப் பற்றி நிறைய தடவை அகமகிழ்ந்து பேசியிருப்போம். இருவரும் ஒன்றாக சேர்ந்து பாடி வேறு அமர்க்களம். இருவருக்கும் ரவியைப் பிடிக்கும். அவர் சேட்டைகள் மிகவும் பிடிக்கும்.

    எப்போது கிடைக்கும் என்று ஏங்கியிருந்த அந்தப் பாடல் இப்போது தேடுகையில் காணொளியாக கிடைத்தது.





    'மெல்லிசை மன்னர்' இசையமைத்த 'ஓடும் நதி' படத்தில் பாடகர் திலகம் பாடிய பாடல். ரவி மனைவி ஷீலாவுடன் துள்ளல் ஆட்டம் போட்டு பாடும் பாடல்.

    வரிகள் வளமானவை. ரவி உருவத்தில் திலகத்தின் ஜெராக்ஸ் என்றால் இப்பாடலில் உடையிலும். உள்ளே பனியன் தெரிய வெளியே அதே மெலிதான ஷர்ட். பாடலின் ஆரம்பத்தில் கால்களை முன் பக்கத்திலிருந்து பின்பக்கமாக வளைத்து சுழற்றியபடியே பின்னால் செல்வது பின்னல். இது அவருக்கே உரித்தானது.

    ஷீலாவுடன் நெருக்கம் அதிகம் தெரியும். ரவியிடம் இன்னொரு அம்சம் பிடிக்கும். அடிக்கடி நிறைய செய்வார். பாடலின் போது லேசாக மார்பு குலுங்க ஷோல்டர்களைத் தூக்கி ஒரு வசீகரச் சிரிப்பை உதிர்ப்பார். ரொம்ப அழகாய் இருக்கும். முதல் சரணம் முடிந்து மீண்டும் பல்லவி தொடங்கி இரண்டாவது வரியின் போது அதாவது 'தன்னை நடக்கவிட்டு' எனும்போது இதை நன்றாக கவனிக்கலாம். முடிந்தவுடன் வரும் இசையில் சுழன்று ஆட்டம் போடுவதும் ஜோர்தான். இதுவும் பின்புறமாகத்தான்.

    'இழுத்துப் போடுது
    ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள்'

    வரிகளில் ஷீலாவின் ஜடையைப் பின்பக்கம் கைகளால் இழுத்து சுற்றியபடியே பின்னாலேயே ஒரு ஸ்டெப் வைத்து அப்படியே அள்ளுவார். பின்னால் வரும் ஸ்டெப்களும் சர்வ சாதாரணமாக அலட்சியம் காட்டும்.

    நீளமுக ஷீலா சீலா மீன் போல் வழு வழு. குட்டைப் பாவாடையுடன் மிஸஸ் ரவிச்சந்திரன் நல்ல ஜோடி.


    டி.எம்.எஸ் இளமை ததும்ப அடி பின்னி எடுத்திருப்பார்.

    இந்தப் பாடலை சற்று வித்தியாசப் படுத்தியிருப்பார் குரலில். அதாவது மூக்கடைத்த ஜலதோஷம் பிடித்தவர் குரல் எவ்வாறு இருக்குமோ அதே போல பாடியிருப்பார். ஆனால் அவ்வளவு அழகாக இருக்கும். டியூனோ ரொம்ப ரொம்ப அழகு.

    அதே போல மூன்று சரணங்களிலும் 'ஒஹஹோ' போட்டு வார்த்தைகளை திரும்ப உடன் சேர்ப்பது இனிமையிலும் இனிமை.

    ஒஹஹோ பெண் ஒன்று
    ஒஹஹோ கண் ஒன்று

    ஒஹஹோ வண்ணங்கள்
    ஒஹஹோ எண்ணங்கள்

    ஒஹஹோ கண்ணல்ல
    ஒஹஹோ பெண்ணல்ல

    இப்படி.

    ஒரு இடத்தில் 'ஒஹஹோ..ம்ஹூஹூம்' என்று அர்த்தமே இல்லாமல் அசத்தல் ஹம்மிங்.

    இந்தப் பாடலில் ஒரு வரி ரொம்ப அமர்க்களம்.

    'அடிமை கொண்டபின் ஆதிக்கம் செய்பவள் பெண்ணல்ல'

    கவிஞன் கலக்கிட்டான்யா.

    ('நான்தான் உன்னிடம் முழுசாக தஞ்சம் புகுந்து அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டேனே.. அப்புறம் என்னத்துக்கு இவ்வளவு பிகு? அடிமையானவன் கிட்ட போய் ஆதிக்கம் செய்யலாமா?')

    சோமபானம், சுரா பானம் எல்லாம் இந்தப் பாட்டுகிட்ட என்ன பண்ணும்? டாஸ்மாக்கையும் மிஞ்சும் டக்கர் பாட்டு.



    தங்கச் சலங்கை கட்டித்
    தழுவுது தழுவுது பூச்செண்டு
    தன்னை நடக்கவிட்டு
    கலங்குது மயங்குது பொன்வண்டு

    தங்கச் சலங்கை கட்டித்
    தழுவுது தழுவுது பூச்செண்டு
    தன்னை நடக்கவிட்டு
    கலங்குது மயங்குது பொன்வண்டு

    வைரத்திலே தட்டு
    மலர்களிலே மொட்டு
    பறவைகளில் சிட்டு
    பறக்குதடி பட்டு
    தரையில் நாட்டியம்
    ஆடுது ஆடுது பெண் ஒன்று
    இடையின் கோலத்தைத்
    தேடுது தேடுது கண் ஒன்று

    ஒஹஹோ பெண் ஒன்று
    ஒஹஹோ கண் ஒன்று
    ஒஹஹோ பெண் ஒன்று
    ஒஹஹோ கண் ஒன்று

    தங்கச் சலங்கை கட்டித்
    தழுவுது தழுவுது பூச்செண்டு
    தன்னை நடக்கவிட்டு
    கலங்குது மயங்குது பொன்வண்டு

    பூவிதழோ கிண்ணம்
    புன்னகையோ மின்னும்
    மாந்தளிரோ கன்னம்
    மனமில்லையோ இன்னும்
    இழுத்துப் போடுது
    ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள்
    வளைத்துப் போடுது
    ஆசையில் ஓடிய எண்ணங்கள்

    ஒஹஹோ..ம்ஹூஹூம்
    ஒஹஹோ..ம்ஹூஹூம்
    ஒஹஹோ வண்ணங்கள்
    ஒஹஹோ எண்ணங்கள்

    தங்கச் சலங்கை கட்டித்
    தழுவுது தழுவுது பூச்செண்டு
    தன்னை நடக்கவிட்டு
    கலங்குது மயங்குது பொன்வண்டு

    மரகதப் பூ மஞ்சம்
    மணக்குதடி நெஞ்சம்
    விருந்து கொள்வேன் கொஞ்சம்
    விழுந்து விட்டேன் தஞ்சம்
    விழுந்த நெஞ்சினை வேடிக்கை பார்ப்பது
    கண்ணல்ல
    அடிமை கொண்டபின் ஆதிக்கம் செய்பவள்
    பெண்ணல்ல
    ஒஹஹோ கண்ணல்ல
    ஒஹஹோ பெண்ணல்ல
    ஒஹஹோ கண்ணல்ல
    ஒஹஹோ பெண்ணல்ல

    தங்கச் சலங்கை கட்டித்
    தழுவுது தழுவுது பூச்செண்டு
    தன்னை நடக்கவிட்டு
    கலங்குது மயங்குது பொன்வண்டு


    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Page 63 of 73 FirstFirst ... 13536162636465 ... LastLast

Similar Threads

  1. Was Kalai Arasi the first Indian film to feature aliens?
    By inetk in forum Tamil Films - Classics
    Replies: 3
    Last Post: 18th November 2010, 03:19 AM
  2. Hariharan gets `kalai mAmaNi'
    By app_engine in forum Current Topics
    Replies: 1
    Last Post: 15th February 2006, 10:12 PM
  3. Songs from "Pagalil oru nilavu"
    By S.Balaji in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 17
    Last Post: 19th October 2005, 09:37 PM
  4. NILAVU SONGS
    By Justice in forum Current Topics
    Replies: 72
    Last Post: 1st October 2005, 10:52 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •