Page 5 of 40 FirstFirst ... 3456715 ... LastLast
Results 41 to 50 of 396

Thread: 'Makkal Kalaignar' JAISHANKAR

  1. #41
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சகோதரி சாரதா அவர்களுக்கு நன்றி, மீண்டும் நினவு படுத்தியதற்காக. நான் ஏற்கெனவே கூறியிருந்தது போல், இப்படமும் நடிகர் திலகத்தின் தயவில் பார்த்தது தான். தேவி பாரடைஸில் ராஜா 5 அல்லது 6வது முறை பார்ப்பதற்காக கியூவில் நின்று டிக்கெட் கிடைக்காமல் பாரகன் வந்து இப்படம் பார்த்தேன். இசை ராகவா அல்லது ரமேஷ் நாயுடு . நாயுடு நினைவில் உள்ளது, ஆனால் ரமேஷா அல்லது ராகவா நினைவில் இல்லை. மனோரமாவும் சுசீலாவும் பாடும் ஒரு இனிமையான பாடல் இடம் பெற்றுள்ளது. காதல் என்றாலே பேரின்பமா.... காதலிக்க வாங்க... என்று போகும். மற்ற பாடல்கள் நினைவில் இல்லை. ஒரு டூயட் அருமையான மெட்டு ஆனால் பல்லவி நினைவுக்கு வரவில்லை. படம் பிப்ரவரி 25, 1972 அன்று வெளிவந்தது. இதற்கு இரண்டு மூன்று நாள் கழித்து ராஜா தொடர்ந்து அரங்கு நிறைந்த 100வது காட்சியைக் கடந்தது.
    வாய்ப்புக்கு நன்றி.

    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #42
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    ...இதற்கு முந்தைய பக்கத்தில் 'நில் கவனி காதலி' பதிவு படித்தீர்களா?. மெல்லிசை மன்னரின் ரீரிக்கார்டிங் மற்றும் டைட்டில் மியூஸிக் நம்மை அசரவைத்தது உண்மைதானே...?. 1969-ல் அதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியுமா..?.
    சகோதரி சாரதா அவர்களுக்கு,
    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களைப் பற்றிய தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் அசத்தலாக உள்ளன. தமிழ்த்திரையுலகில் நடிகர் திலகம், ஜெய்சங்கர், பணமா பாசமா போன்ற சில படங்களின் மூலம் ஜெமினி கணேசன் உட்பட பலரும் பல சந்தர்ப்பங்களில் வசூல் சாதனை படைத்த படங்களைத் தந்துள்ளனர். இப்படி அனைவரும் தங்கள் பங்கிற்கு தமிழ்ப்பட உலகை தரத்திலும் வியாபாரத்திலும் உயர்த்தி இருக்கும் போது, ஏதோ ஒருவர் மட்டுமே தனியாக தாங்கி நின்றதைப் போல் சித்தரிக்கப் பட்டது தான் ஏனென்று தெரியவில்லை. தனி மரம் தோப்பாகாது என்பதை இவர்களுக்கு யார் புரிய வைப்பார்கள். வெள்ளிக்கிழமை ஹீரோ என்ற பெயருடன் தயாரிப்பாளர்களின் வயிற்றில் பால் வார்த்த ஜெய்சங்கரை இருட்டடிப்பு செய்தது யார். குறைந்த முதலீ்ட்டில் அதிக லாபத்தை ஈட்டித் தந்த படங்களை அளித்த சாதனையாளர் அல்லவா ஜெய்சங்கர். அவரைப் பற்றிய தங்களின் குறிப்புகள் அனைத்தும் மிகவும் மெச்சத்தக்கவை.
    குறிப்பாக நில் கவனி காதலி படத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்கள் பல விஷயங்களை எடுத்துரைக்கின்றன. மெல்லிசை மன்னரின் பிரமிப்பூட்டும் பின்னணி இசைக்கு இப்படம் மிகச் சரியான உதாரணம்.
    இதே போன்று நான்கு சுவர்கள் படத்துலும் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பின்னணி இசை படம் முழுதும் அவர் பெயரைச் சொல்லும். அவலை நினைத்து உரலை இடித்த கதையாக படம் இருந்தாலும் அப்படத்திற்கு ஒரே பலம் இசை தான். அதற்கு அடுத்த படியாக ஒளிப்பதிவு. ஆனால் வாணிஸ்ரீயின் ஒப்பனைதான் கோரம். குறிப்பாக நினைத்தால் நான் வானம் சென்று என்ற அருமையான பாடலை எந்த அளவிற்கு கெடுக்க முடியுமோ அந்த அளவிற்குக் கெடுத்துவிட்டார்கள். இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் அப்பாடல் காட்சி சிறப்பாக அமைந்திருக்கும். இத்தனைக்கும் இயக்கியவர் கே.பாலச்சந்தர்.
    மேலும் தொடரலாம்.
    வாய்ப்புக்கு நன்றி.

    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #43

    Join Date
    Nov 2007
    Posts
    110
    Post Thanks / Like
    Jaishankar's last movie with Sivaji was Anbulla Appa. Nice movie. Jai will be the family doctor

  5. #44
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    இசையமைப்பாளர் பெயர் சந்தேகமாக இருந்ததால்தான் நானும் குறிப்பிடவில்லை.
    காதலிக்க வாங்க திரைப்படத்தின் இசையமைப்பாளர் ராகவா நாயுடு.

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  6. #45
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    மக்கள் கலைஞரின் பட்டணத்தில் பூதம் , முதல் வெளியீட்டில் , மதுரையில் சென்ட்ரல் திரையரங்கில் வெளியாகி 10 வாரங்கள் (70 நாட்கள்) வெற்றிகரமாக ஓடியது.

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  7. #46
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Saradha Mdm,

    One can only wish that these films are shown at conveninent time here in our TV. I do recall some of them being shown, but usually on weekdays at most inopportune time. .

    Also, we used to have this excellent Indian Movie News magazine (they are still around, but with different editor and are not worth buying) that did not stop at big stars, but also featured Jai and his peers.Thunive Thunai got good coverage in the magazine at that time. That brings me to these questions, mdm:

    1. What were the coverages like on media at that time on Jai's films, mdm?
    2. Considering that the weight are not heavy on his own shoulders, plus the lightness of his films, were the critics kinder to him?
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  8. #47
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jan 2005
    Posts
    3,894
    Post Thanks / Like
    Thunive Thunai - my fav movie

  9. #48
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Saradha Madam,

    All your reviews of Jai films are very interesting. I am not gooooood in writing reviews, but I can talk so much about NT, MT, MK, Sivakumar. I like these four heros only.
    though i liked few movies of Jai, the one I liked is very much is Kalyanamam Kalyanam , produced by Geetha Chitra films (I think so) (full lenght comedy) and Unnai Than Tambi. UTT was remade later during 80's with Super Star (with ittle changes in story) I expect the review of these film same from you

  10. #49
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சகோதரி சாரதா அவர்களுக்கு,
    மற்றுமொரு அருமையான படத்தை நினைவூட்டியுள்ளீர்கள். கல்யாணமாம் கல்யாணம் படத்திற்கு இசை விஜயபாஸ்கர் அவர்கள். மற்றொரு பிரபலமான பாடல், காலம் பொன்னானது, எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடியது. சென்னை பாரகனில் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போட்ட படம் கல்யாணமாம் கல்யாணம். சித்ர மகால் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வெற்றி பார்முலாவில் கலப்படப் பாடல் முக்கியமானதாகும். தேன்கிண்ணம், ஹலோ பார்ட்னர் போன்று இப்படத்திலும் ஒரு கலப்படப் பாடல் இடம் பெற்று திரையரங்கையே கலகலப்பாக்கி விட்டது. அதுவும் இந்தப் படத்தில் சரியான இடத்தில் சரியான பாடல் தேர்வுகளுடன் படத்துக்கு மிகவும் முக்கியத்துவத்தைக் கொடுத்தது. மறக்கமுடியாத பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள், அனாயாசமான நடிப்பு, அனைத்தும் சேர்ந்து இப்படத்தை வெற்றிப் பட்டியலில் சேர்த்து விட்டன.
    வாய்ப்புக்கு நன்றி
    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #50
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    1968-ம் ஆண்டில் மக்கள் கலைஞரின் சாதனைப் பட்டியல் :
    (திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்)

    1. அன்பு வழி - 11.1.1968 - கெயிட்டி, எமரால்டு, பிராட்வே, சயானி, ராம்

    2. நீலகிரி எக்ஸ்பிரஸ் - 23.3.1968

    3. டீச்சரம்மா - 12.4.1968 - வெலிங்டன், அகஸ்தியா, மேகலா, ஈராஸ்

    4. பால்மனம் - 12.4.1968

    5. தெய்வீக உறவு - 10.5.1968

    6. பொம்மலாட்டம் - 31.5.1968 - கெயிட்டி, அகஸ்தியா, உமா, கிருஷ்ணவேணி

    7. புத்திசாலிகள் - 14.6.1968

    8. நேர் வழி - 28.6.1968

    9. சிரித்த முகம் - 15.8.1968

    10. முத்துச்சிப்பி - 6.9.1968

    11. உயிரா மானமா - 21.10.1968 - பிளாசா, அகஸ்தியா, மேகலா, ராம்

    12. ஜீவனாம்சம் - 21.10.1968 - வெலிங்டன், முருகன், சரஸ்வதி, தங்கம்

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

Page 5 of 40 FirstFirst ... 3456715 ... LastLast

Similar Threads

  1. Kalaignar TV?
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 184
    Last Post: 3rd October 2011, 12:16 AM
  2. MAKKAL TV
    By subanrao in forum TV,TV Serials and Radio
    Replies: 124
    Last Post: 1st August 2009, 09:33 PM
  3. Makkal Aatchi
    By svbp007 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 2
    Last Post: 2nd November 2008, 03:37 PM
  4. Contact details for Kalaignar TV
    By MEDIA ASIA in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 23rd October 2007, 10:26 PM
  5. Kalaignar TV is coming on the way
    By Sanjeevi in forum Miscellaneous Topics
    Replies: 21
    Last Post: 6th August 2007, 07:17 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •