Page 12 of 40 FirstFirst ... 2101112131422 ... LastLast
Results 111 to 120 of 396

Thread: 'Makkal Kalaignar' JAISHANKAR

  1. #111
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    திரு முரளி மற்றும் சாரதா madem அவர்கள் கவனத்திற்கு

    வீட்டுகொரு பிள்ளை விமர்சனம் எங்காவது உண்டா ராமண்ணாவின் மிக சிறந்த பொழுது போக்கு சித்ரம்

    நட்புடன் GK
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #112
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    திரு ஜெய்ஷங்கர் அவர்களை பற்றி திரு ரஜினிகாந்த் அவர்கள் நடிகர் சங்கத்தில் ஜெய்ஷங்கர் பட திறப்பு விழாவில் வெளியிட்ட செய்தி இவ்வளுவு சீக்கிரம் ஜெய் மறைவுக்கு காரணம் நாம் எல்லோருமே அவருக்கு 90 கால கட்டங்களில் நாம் எந்த திரை படத்திலும் உபயோகபடுத்தவில்லை அப்படி உபயோகபடுத்தி இருந்தால் நிச்சயமாக இவ்வளுவு சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்து இருக்க மாட்டார்
    gkrishna

  4. #113
    Senior Member Seasoned Hubber RC's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    1,068
    Post Thanks / Like
    விகடன் பொக்கிஷம்
    யார் பெயரை முதலில் போடுவது?
    ஜெய்சங்கர் பேட்டி (28.1.1973)


    டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது என்று சமீ பத்தில் ஒரு பிரச்னை கிளம்பியி ருக்கிறதே..?

    'ஆசீர்வாதம்' படத்தில் என்னுடன் திரு.எஸ்.வி.சுப்பையாவும் நடித்திருக்கிறார். திரு.சுப்பையா ஒரு பெரிய குணச்சித்திர நடிகர். அப்படிப்பட்டவர் எனக்குப் பின்னால் தனது பெயர் காட்டப்பட்டதை மறுக்கவில்லை; பிரச்னையாக்கவும் விடவில்லை!

    ஒரு படத்தில் கதாநாயகனின் பெயரைக் காட்டுவது மக்களி டையே ஒரு சென்ஸேஷனை ஏற் படுத்துவதற்காகத்தான்! நான் எம்.ஜி.ஆருடனோ, சிவாஜியுடனோ நடித்தால் அவர்கள் பெயர்தான் முதலில் வரவேண்டும்.ஏனெனில், அது அவர்கள் படம். தந்தையாகவோ வேறு ஏதாவது ஒரு வேடத்திலோ நடிப் பவர்கள் தங்கள் புகழைத்தான் எதிர்பார்க்கவேண்டுமே ஒழிய, டைட்டிலை அல்ல!

    புதிய இளம் தலைமுறையினர் யாரையும் இப்போது படவுலகில் பார்க்கமுடியவில்லையே, ஏன்?

    பட முதலாளிகளுக்குத் தைரியமில்லாததுதான் காரணம். 'பழை யன கழிதலும், புதியன புகுதலும்' என்பது எப்போதுமே எதிர்பார்க்க வேண்டிய விஷயம்தான். திரு. ஜோசப் தளியத் தன்னை அதிக விளம்பரம் செய்துகொள்ளாமல் படத்தில் என்னைப் பிரபலப்படுத்தி, அறிமுகப்படுத்தினார். அதைப்போல பேசாமல் சாதனை செய்பவர்கள் இண்டஸ்ட்ரியில் மிகக் குறைவு!
    kaadhal iLavarasan kalaith thiRanai nI ariyaai!

  5. #114
    Senior Member Seasoned Hubber RC's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    1,068
    Post Thanks / Like
    http://cinema.dinamalar.com/tamil-ne...n-Vijay-TV.htm

    ஜெய்சங்கரின் புகழை பறைசாற்றப் போகிறது விஜய் டிவி

    இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் 1965ம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஜெய்சங்கர். 200க்கும் அதிகமான படங்களில் நடித்து முடித்திருக்கும் ஜெய்சங்கர் பெரும்பாலான படங்களில் துப்பாக்கியுடன் நடித்ததால் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என ரசிகர்கள் அழைத்தனர். இவர் பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததால் ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை நாயகர் என்ற பட்டமும் உண்டு. அந்தக்கால தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்த ***ஜெய்சங்கர் 2000-ம் ஆண்டு ஜூன் 3ம்*தேதி காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் பேரிழப்பாகத்தான் இருக்கிறது.

    *மறைந்த நட்சத்திரங்களுக்கு மரியாதை செய்யும் வகையில் பழைய திரைப்படங்கள், முன்னாள் நாயகர்கள் பற்றிய நிகழ்ச்சிகளை வெளியிட்டு ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி வரும் விஜய் டி.வி., ஜெய்சங்கர் பிறந்த நாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. வருகிற ஜூலை 15ம்*தேதி ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெய்சங்கரின் இரண்டாவது மகன் சஞ்சய் சங்கர் செய்து வருகிறார். நிகழ்ச்சியின்போது ஜெய்சங்கருடன் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஜெய்சங்கரின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதத்தில் இருக்கும் என்கிறார் சஞ்சய் சங்கர்.
    kaadhal iLavarasan kalaith thiRanai nI ariyaai!

  6. #115
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    சமீபத்தில் மக்கள் கலைஞர் நடித்த எல்லாம் இன்ப மயம்,சவால்,படிக்காதவன்,காதல் பரிசு போன்ற படங்கள் பார்க்க நேரிட்டது

    கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் வில்லன் வேடம்
    ஏநோ தெரியவில்லை ஜெய் அவர்களை வில்லனாக பார்க்க மனம் மறுக்கிறது
    திரு சிவகுமார் அவர்கள் கடைசி வரை வில்லனாக நடிக்கவில்லை. புவனா ஒரு கேள்விகுறி படத்தில் வில்லன் தோற்றம் மாதிரி தெரியும் .பழைய பேட்டி ஒன்றில் திரு சிவகுமார் அவர்கள் இதை பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள்
    S P முத்துராமன்/பஞ்சு அருணாசலம்/ஏவிஎம் மூவரும் சேர்ந்து தான் ஜெய் அவர்களை வில்லன் ஆக்கினார்கள் அதே போல் நடிகர் முத்துராமன் அவர்களை போக்கிரி ராஜா படத்தில் வில்லன் ஆக மாற்றினார்கள் (முத்துராமன் முன்னர் சில படத்தில் வில்லன் ஆக நடித்து இருந்தாலும்) . ஆனால் S P முத்துராமன்/பஞ்சு அருணாசலம் முன்னேறுவதற்கு ஜெய்/முத்துராமன் நடித்த கணிமுத்து பாப்பா திரைபடம் தான் ஆரம்பம்

    நட்புடன் Gk
    gkrishna

  7. #116
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    உண்மை திருமதி சாரதா madem அவர்களே

    தாய வீடு/மலையூர் மம்பட்டியான்/பாயும் புலி போன்ற படங்களில் ஹீரோவுக்கு இணை ஆக வருவார் ஆனால் திடீர் என்று heroine க்கு அப்பா ஆக மாற்றி விட்டார்கள்

    சிங்காரவேலன் (குஷ்பூ பாதர்) மற்றும் அபூர்வ சகோதரர்கள் (கௌதமி பாதர்) படத்தில் அவருடைய மேக் உப் எடுபடவே இல்லை .

    80 க்கு பிறகு அவர் நடித்த படங்களின் பட்டியல் கிடைக்குமா

    இறுதி நாட்களில் அவர் குடிக்கு அடிமை ஆகி விட்டார் என்று கேள்விபட்டேன் என்னால் அதை நம்ப முடியவில்லை ஏன் என்றல் திரு அசோகன் அவர்கள் குடிக்கு அடிமை ஆன போது அவருக்கு ஆறுதல் கூறியவர் திரு ஜெய் அவர்கள் என்று கேள்விபட்டேன் . நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் திரு ஜெய் அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் என்னுடைய மேல் அதிகாரி ஆக உள்ளார் அவர் கூறிய தகவல் இதனால் அவருக்கும் அவர் மனைவிக்கும் சற்று மன தாங்கல் ஏற்பட்டது என்று அறிந்தேன்

    நட்புடன் GK
    gkrishna

  8. #117
    Senior Member Seasoned Hubber tamizharasan's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Centre of earth.
    Posts
    980
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    Quote Originally Posted by gkrishna
    சமீபத்தில் மக்கள் கலைஞர் நடித்த எல்லாம் இன்ப மயம்,சவால்,படிக்காதவன்,காதல் பரிசு போன்ற படங்கள் பார்க்க நேரிட்டது

    கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் வில்லன் வேடம்
    ஏநோ தெரியவில்லை ஜெய் அவர்களை வில்லனாக பார்க்க மனம் மறுக்கிறது
    திரு சிவகுமார் அவர்கள் கடைசி வரை வில்லனாக நடிக்கவில்லை. புவனா ஒரு கேள்விகுறி படத்தில் வில்லன் தோற்றம் மாதிரி தெரியும் .பழைய பேட்டி ஒன்றில் திரு சிவகுமார் அவர்கள் இதை பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள்
    S P முத்துராமன்/பஞ்சு அருணாசலம்/ஏவிஎம் மூவரும் சேர்ந்து தான் ஜெய் அவர்களை வில்லன் ஆக்கினார்கள் அதே போல் நடிகர் முத்துராமன் அவர்களை போக்கிரி ராஜா படத்தில் வில்லன் ஆக மாற்றினார்கள் (முத்துராமன் முன்னர் சில படத்தில் வில்லன் ஆக நடித்து இருந்தாலும்) . ஆனால் S P முத்துராமன்/பஞ்சு அருணாசலம் முன்னேறுவதற்கு ஜெய்/முத்துராமன் நடித்த கணிமுத்து பாப்பா திரைபடம் தான் ஆரம்பம்

    நட்புடன் Gk
    கிருஷ்ணாஜி...

    உங்களைப்போலவே பல்வேறு ரசிகர்களின் எண்ணமும் அதுதான். மக்க்ள் கலைஞரை வில்லனாகப் பார்க்க பெரும்பாலோர் விரும்பவில்லை. அவருடைய கதாநாயகன் ரோலில் சிறிது தேக்க நிலை ஏற்பட்டபோது, அவர் எப்படியாவது திரையுலகில் நிலைநிற்க வேண்டும் என்று நினைத்த நண்பர்கள் / தயாரிப்பாளர்கள் / இயக்குனர்களின் யோசனைப்படி வில்லன் ரோல்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் ரசிகர்களுக்கு ஒப்பவில்லை.

    வில்லனாக நடிக்கத்துவங்கியபிறகு பின்னர் பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்தார். அது மக்களுக்குப் பிடித்திருந்தது. கதாநாயகன் அந்தஸ்திலிருந்து (வில்லனாக மாறாமல்) அவர் நேராக குணசித்திர ரோல்களுக்கு மாறியிருக்கலாம் என்பதே ரசிகர்கள் பெரும்பாலோரின் விருப்பமாக இருந்தது.

    அவர் குணசித்திர ரோலில் நடித்தவற்றுள் கீழ்வானம் சிவக்கும், பந்தம், மருமகள், இரண்டில் ஒன்று, தீர்ப்பு, எழுதாத சட்டங்கள், சாவி, ஊமை விழிகள் உள்பட பல படங்கள் அடங்கும்.
    Saaradha madam

    In one movie jaishankar did a character role and get killed also. Sivaji was the hero in that movie. Can you please name that movie? (Theerppu???)I saw this movie as a kid but remembered this scene even now vividly.

  9. #118
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    அவர் குணசித்திர ரோலில் நடித்தவற்றுள் கீழ்வானம் சிவக்கும், பந்தம், மருமகள், இரண்டில் ஒன்று, தீர்ப்பு, எழுதாத சட்டங்கள், சாவி, ஊமை விழிகள் உள்பட பல படங்கள் அடங்கும்.
    He did an arrogant lawyer's role, very competently, in K Balaji's "vidhi" (I think remake of Telugu movie "nyAyam kAvAli").

    His performance was one of the main reasons for the commercial success of that movie. (I guess that was the last Thamizh movie whose olichchiththiram was widely heard, before TV channels took over)

  10. #119
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Krishna sir,

    Better not to discuss about their personal life. If you go deep, NO ARTISTS WILL ESCAPE from such blames.

    and about relatives of actors and actresses...... they want to grab money or wealth or properties as much as possible from the artists, andd if the artists not allow them to do it, then they will spread the bad news about the artists in public (which are mostly not true).

    but the public will believe those blames with the comments
    'சொந்தக்காரரே சொல்லும்போது இல்லாமலா இருக்கும்?' like that.

    and that will be advantage for the blamers, but the truth ? God only knows.

  11. #120
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    sorry mr.karthik
    my intention is not to blame jai share my sorrow only
    கருணை இல்லத்தை திரை உலகுக்கு அறிமுகம் செய்த கருணை உள்ளம் திரு ஜெய் அவர்கள்
    gkrishna

Page 12 of 40 FirstFirst ... 2101112131422 ... LastLast

Similar Threads

  1. Kalaignar TV?
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 184
    Last Post: 3rd October 2011, 12:16 AM
  2. MAKKAL TV
    By subanrao in forum TV,TV Serials and Radio
    Replies: 124
    Last Post: 1st August 2009, 09:33 PM
  3. Makkal Aatchi
    By svbp007 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 2
    Last Post: 2nd November 2008, 03:37 PM
  4. Contact details for Kalaignar TV
    By MEDIA ASIA in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 23rd October 2007, 10:26 PM
  5. Kalaignar TV is coming on the way
    By Sanjeevi in forum Miscellaneous Topics
    Replies: 21
    Last Post: 6th August 2007, 07:17 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •