Page 11 of 40 FirstFirst ... 91011121321 ... LastLast
Results 101 to 110 of 396

Thread: 'Makkal Kalaignar' JAISHANKAR

  1. #101

    Join Date
    Feb 2008
    Posts
    111
    Post Thanks / Like
    இன்னும் இரன்டு படஙளைப் பற்றி - காயத்ரி, இது எப்படி இருக்கு - உப்பிலி ஸ்ரேனிவாஸ் எழுதி இருக்கிறார். சுஜாதாவின் அனுபவனகளைப் பற்றீதான் அதிகம் எழுதி இருக்கிறார், ஜெய் பற்றி அல்ல.

    காயத்ரி

    இது எப்படி இருக்கு
    Originally known as RV

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #102

    Join Date
    Feb 2008
    Posts
    111
    Post Thanks / Like
    பட்டணத்தில் பூதம் படத்துக்கு நானும் ஒரு விமர்சனம் எழுதி இருக்கிறேன். சிவகாமி மகன் பாட்டு காமராஜருக்கு விட்ட தூது என்பது யாரோ விட்ட கதை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. இதைப் பற்றி கவிஞரோ, இசை அமைப்பாளர் கோவர்த்தனமோ, காமராஜுக்கு நெருக்கமான யாராவதோ சொல்லி இருக்கிறார்களா?
    Originally known as RV

  4. #103

    Join Date
    Feb 2008
    Posts
    111
    Post Thanks / Like
    சினிமா பைத்தியம் - விகடன் பொக்கிஷத்தில் மீள்பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரிஜினல் விமர்சனம் கீழே:

    ஜெயசித்ரா ஒரு சினிமாப் பைத்தியம். சினிமா நடிகர் ஜெய் சங்கரின் விசிறி, ரசிகை, மன்றத் தலைவி எல்லாமே! ஜெய்சங்கரின் மீதுள்ள மோகத்தால் தன் முறைப் பையனான கமலஹாசனைக் கை கழுவிவிட்டு, ''மணந்தால் ஜெய் யைத்தான் மணப்பேன்'' என்று பிடிவாதம் பிடிக்கிறார். சௌகார் ஜானகி, வி.கே.ராமசாமி, ஜெய் சங்கர் மூவரும் சேர்ந்து ஜெய சித்ராவின் பைத்தியத்துக்கு வைத் தியம் செய்கிறார்கள்.



    ஸ்கூலுக்கு லேட்டாக வந்த தற்கு 'இவளே டீச்சரி'டம் 'அண்ணி கர்ப்பம்' என்று சொல்லி ஜெயசித்ரா தப்பிக்கும் சாமர்த்தியம்; கிளாஸ் கட் பண்ணிவிட்டு மாட்னி பார்க்கும் தந்திரம்; 'ப்ராக்ஸி' கொடுத்து பத்து பைசா கமிஷன் அடிக்கும் சச்சு; 'இவளே டீச்சர்' வரலட்சுமி, சௌகாரை 'கர்ப்பம்' விசாரிக்க வரும்போது ஏற்படும் கலகலப்பு; ஜெய்சங்கருக்கு மாடியில் வர வேற்பு நடந்துகொண்டு இருக்க, சினிமாவையே வெறுக்கும் மேஜர் கீழே இருக்க, மேஜரை மாடிக்குப் போகவிடாமல் பேசியே சமாளிக் கும் சௌகாரின் சாகசம்...

    ஆக, எல்லாமே விறுவிறுப்பு!

    ஜெயசித்ராவின் பைத்தியம் தெளிய, ஸ்டூடியோக்களுக்கு அழைத்துச் சென்று ஷூட்டிங் பார்க்க வைக்கிறார்கள்! அதன் பலன்?

    ராணி மங்கம்மாவாக, ஜெய லலிதா மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வசனத்தை ஒப்பிக்கிறார்!



    சிவாஜி, வாஞ்சிநாதனாக வந்து கர்ஜனை செய்துவிட்டுப் போகிறார். சிறிது நேரமே வந்தா லும் சிந்தையில் பதிகிறார்.

    ஏ.சகுந்தலா காபரே ஆடுகி றார்!

    படத்தின் பின்பாதியை ஆளுக் கொரு கை கொடுத்து கௌரவ மாகத் தாங்கியிருக்கிறார்கள்.

    'சிபாரிசு' சிதம்பரமாக வரும் வி.கே.ஆரின் நடிப்புக்கு சிபாரிசே தேவையில்லை! ஜெய்யின் செக ரட்டரியாக வரும் சோ, டிரான் சிஸ்டரும் கையுமாக இருக்கி றார்.

    ''கோடம்பாக்கம் ஏரியாவிலே வந்து நில்லு'' என்று மனோரமா வலை விரிக்கும்போது, அசல் கோடம்பாக்கம் குழைவு!

    முறைப் பையனாக வரும் கமலஹாசன் கொஞ்சம் விறைப் பாகவே இருக்கிறார்.

    ஜெய்சங்கர்தான் ஹீரோ! அவர் அடிக்கடி சினிமாவைப் பற்றி விளக்கி 'லெக்சர்' கொடுத்தா லும், இந்தப் படத்தில் அவருக்கு நல்ல 'பப்ளிசிடி'!

    வசனம் - ஏ.எஸ்.பிரகாசம். மிகச் சிறப்பாக எழுதி இருக்கிறார். அடுக்கு மொழி வார்த்தைகளைப் போட்டு அலங்காரம் பண்ணி யிருக்கிறார்.

    சினிமா மோகத்தை ஒழிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்துகொண்டிருந்த தந்தை பெரியாரையும், சமுதாயத்திற் கேற்ற நல்ல கருத்துக்களை அளிக்கவல்ல சாதனமாக சினிமா வைப் பயன்படுத்துவதில் தவ றில்லை என்று அறிஞர் அண்ணா கூறுவது போலவும் சந்தர்ப்பத் திற்குத் தகுந்தபடி பயன்படுத்திக் கொண்டிருப்பது, டைரக்டருக்கு ஒரு 'சபாஷ்' போட வைக்கிறது!

    'இயக்குநர் செம்மல்' என்ற பட்டம் வாங்கிய சீனிவாசன், பட்டத்தைக் காப்பாற்றிக் கொண் டதோடு, படத்தையும் காப்பாற்றி யிருக்கிறார்!
    Originally known as RV

  5. #104

    Join Date
    Feb 2008
    Posts
    111
    Post Thanks / Like
    நண்பர் நல்லதந்தி சிறு வயதில் ஜெய்ஷங்கர் விசிறி ஆக இருந்ததைப் பற்றி இங்கே எழுதி இருக்கிறார்.

    http://awardakodukkaranga.wordpress....#2965;ர/

    அவர் அதை ஃபோரம்ஹப்பில் எழுத நினைத்தாராம், ஆனால் ரெஜிஸ்ட்ரேஷன் என்றதும் கொஞ்சம் பயந்துவிட்டார்
    Originally known as RV

  6. #105

    Join Date
    Feb 2008
    Posts
    111
    Post Thanks / Like
    எங்க பாட்டன் சொத்து படம் வந்த போது விகடனில் வந்த விமர்சனம். விகடன் பொக்கிஷத்தில் மறூபதிவு செய்திருக்கிறார்கள்.

    இந்தப் படத்தின் கதாநாயகன் ஜெய்சங்கராக இருந்தாலும், 'ஹீரோ' என்னமோ கர்ணன்தான்!

    திரைக்கதை, தயாரிப்பு, காமிரா, டைரக்ஷன் என்று ஊர்ப்பட்ட பொறுப்புக்களைத் தன் தலையில் சுமந்திருக்கிறார்.

    கர்ணனின் சொத்து காமிரா. காமிராவைப் பொறுத்தவரை கண்ணில் ஒத்திக் கொள்ளலாம். எந்தெந்தக் கோணத்திலோ காமிராவை வைத்து மனுஷன் 'புகுந்து' விளையாடியிருக்கிறார்.

    திரைக்கதையை நினைத்தால் காட்சிக்குக் காட்சி நகைச்சுவைதான். முதல் காட்சியில், ஜெய்சங்கர் சென்னையில் இருக்கிறார். அடுத்த காட்சியில், சிம்லா பனிக்கட்டி மலையில் 'ஃபைட்டிங்'! அதற்கு அடுத்த காட்சியில், கிராமத்தில் மாரியம்மன் திருவிழாவில் ஒரு 'மர்டர்'! கொலையைச் செய்துவிட்டுத் திடீரென்று ஒரு காட்டுக்குள் ஒளிகிறார். அங்கே ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கிறார் ராஜ்கோகிலா. இந்தக் குளியல் விஷயத்தில் சென்சார் கண்டுகொள்ளவே இல்லை.

    ஸ்டன்ட் விஷயத்தில் கர்ணன் கஞ்சத்தனத் தைக் காட்டவே இல்லை! தாராளமாக இருந்திருக் கிறார்! மோட்டார்பைக் சண்டை, கார் சண்டை, ஒட்டகச் சண்டை, குதிரைச் சவாரி சண்டை, 'டிஷூ... டிஷூ' துப்பாக்கிச் சண்டை, சிங்கத்தோடு சண்டை, புலியோடு சண்டை, கையோடு சண்டை, காலோடு சண்டை... அப்பப்பா! சாந்தி தியேட்டர் சவுண்ட் பாக்ஸே கிழிந்துவிடும் போலிருக்கிறது!

    காமிராவை மூலதனமாகக் கொண்டு கவர்ச்சி, ஸ்டன்ட் என்ற இரு சொத்துக்களையும் வைத்து, ஒரு வெற்றிப்படம் எடுக்க முயற்சித்திருக்கிறார்.

    ஆனால் பாவம், ஒரு சத்தான கதையைத் தேர்ந்தெடுக்காமல் விட்டுவிட்டாரே!
    Originally known as RV

  7. #106
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    அபிமான* ந*டிக*ருக்கு திரி எடுத்து
    அழ*காக* எழுதிக் கொண்டு வ*ரும் அன்ப*ர்க*ளுக்கு ந*ன்றி
    உங்க*ளைப் போல் எழுதும் திற*மை இல்லையென்றாலும்
    என் ப*ங்குக்கு ஒரு சின்ன* முயற்சியாக *
    நான் பார்த்த ஒரு கட்டுரையை மெல்ல மெல்ல பார்த்து டைப் செய்து
    போஸ்ட் செய்கிறேன் மக்கள் கலைஞர் மீது கொண்ட அபிமானத்தின் பேரில்
    (எழுத்துப் பிழை இருக்கும் )

    from : ஜெய்சங்கருக்கு நான் பட்ட கடன் - Thiru Veeraiya's Thuglak article

    மக்கள் கலைஞர் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்
    எனது அருமைச் சகோதரர் ஜெய்சங்கர் மறைவினால்
    ஏற்பட்ட துன்பத்திலிருந்து முழுமையாக
    இன்னும் மீளாத நிலையில் இதை எழுதுகிறேன்
    ஹாய் ! என்ற சப்தம் கேட்டுத் திரும்பினால் அங்கு ஜெய்சங்கர் இருப்பார்
    ஓட்டமான நடை அவருடைய ஸ்டைல்
    காரை விட்டு இறங்கி மேக்கப் ரூமுக்குள் நுழைவதற்குள் பலபேருக்கு ஹாய் !
    அந்த சப்தத்துடன் நண்பர்களின் பெயர்கள்
    யாருடைய பெயரையும் மறக்க மாட்டார்
    எளிமையாக இனிமையாக பேசிப் பழகுப*வர்
    அவருடைய மறைவினால் வேதனைப் பட்டுக்கொண்டிருக்கிற*
    ஆயிரக்கணக்கான நண்பர்களில் நானும் ஒருவன்

    நடுத்தரபடத் தயாரிப்பாளர்களுக்கு அவர் மிகவும் உதவியாக இருந்தவர்
    திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று வருபவர்களுக்கு
    ஓகே சொல்வாரே தவிர மறுப்பதேயில்லை
    பணத்திலே கண்டிப்பாக இருக்க மாட்டார்
    எத்தனையோ பட அதிபர்களுக்கு
    எவ்வளவோ பணத்தையெல்லாம் விட்டுக்கொடுத்து இருக்கிறார்
    அந்த எத்தனையோ பேர்களின் லிஸ்ட்டில் நானும் ஒருவன்
    ஏ எல் எஸ் புரொட*க்க்ஷன் கம்பெனியில் ஜெய் ஸார் சில படங்கள் செய்து இருக்கிறார்
    அதில் சினிமா பைத்தியம் ' என்ற படத்தில் நான் வேலை செய்தேன்
    அந்த சமயத்தில் காலையில் கொஞ்சம் தாமதமாக வரவேண்டிய நிர்பந்த்தம்
    ஆனால் வேலை செய்யும் போது
    அந்த நேரத்தையும் ஈடுகட்டி விடுவார் அவ்வளவு சுறுசுறுப்பு !
    அதிக டேக்குகள் வாங்காத நடிகர்
    டேக்குகள் வாங்காமலேயே சரி செய்து விடும் தன்மை
    பல புரொடக்க்ஷன் மனேஜர்களை தயாரிப்பாளர்களாக்கிய* பெருமை
    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களுக்கு உண்டு
    அப்படிப்பட்ட உதவியினால் பலர் பெரும் வெற்றி பெற்றனர்
    சிலருக்கு தோல்வி !
    தோல்வியடைந்தவர்களில் நானும் ஒருவன்
    சினிமா பைத்தியம் திரைப்படத்தில் வேலை செய்யும் போது தான்
    எனக்கும் மக்கள் கலைஞருக்கும் நெருங்கிய* தொடர்ப்பு ஏற்பட்டது
    அப்போது நான் ஏ எல் எஸ் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருந்தேன்
    சில மாதங்கள் கழித்து திரு ஏ எல் எஸ் அவர்கள்
    உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு
    வெளி நாடுகளில் சிகிச்சை பெற்றும்கூட பயனளிக்காமல்
    சென்னை திரும்பி வந்து இரண்டொரு மாதங்களில்
    இறந்து போய் விட்டார் !
    திரு ஏ எல் எஸ் அவர்கள் இறந்து மாதங்களாகியும்
    என்ன செய்வது என்று தெரியாமல் புரியாமல்
    குழம்பி தவித்துக் கொண்டிருந்தேன்
    கண்ணதாச*ன் அவர்களும் திரைப்படம் தயாரிப்பதை
    நிறுத்தி விட்டார்
    ஏ எல் எஸ் ஸ்தாபனத்தில் அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்பதும் தெரியவில்லை
    பல மாதங்கள் வருமானமும் இல்லை
    என்ன செய்வது யாரிடம் வேலை கேட்பது
    யார் கொடுப்பார்கள்
    யாரிடம் நிலைமையை சொல்ல ?
    ஒன்றுமே புரியவில்லை

    ஒரு நாள் வெளியில் சென்று வீடு திரும்பிய போது ஜெய்சங்கர் ஃபோன் செய்த்ததாகவும்
    மறு நாள் காலை வீட்டுக்கு வந்து சந்திக்கும்படி
    கூறியதாகவும் செய்தி
    திடீரென்று மக்கள் கலைஞர் ஏன் அழைக்கிறார் என்று அனுமானிக்க முடியவில்லை
    மறு நாள் ரெடியாகி ஜெய்சங்கர் வீட்டுக்கு போய் சேர்ந்தேன்
    என்னசெய்ய போகிறாய் ? என்றார்
    அதுதான் ஒன்றும் புரியவில்லை
    விழித்துக் கொண்டிருக்கிறேன் ! என்றேன்
    நீ யாரிடமும் வேலைக்கு போக வேண்டாம்
    ஏ எல் எஸிடம் உனக்கிருந்த மரியாதையும் சுதந்திரமும் கௌரவமும்
    உனக்கு வேறெங்கும் கிடைக்காது
    பேசாமல் தய்யாரிப்பாளராக முயற்றி செய்
    என்னால் முடித்த உதவிகளை செய்கிறேன்
    அடுத்த வாரம் வந்து பார் மற்றவற்றை யோசிப்போம் என்றார்
    திடீர் தயாரிப்பாளர் ஆகும் வாய்ப்புடன் வீடு வந்து சேர்ந்தேன்

    இரண்டு நாள் கழித்து எனது குடும்ப நண்பரும்
    தாயாரிப்பாளரும் தங்க நகை விற்பனையாளருமான வெங்கட்ராமன் என்பவரிடம்
    நான் ஜெய்சங்கரை சந்தித்த விபரங்களைப் பற்றி சொன்னேன்
    அந்த நண்பரும் முடிந்த அளவு உதவி செய்கிறேன்
    என்று சொல்ல
    ஜெய்சங்கரிடம் விபரம் சொல்லி அவரையும் கூடவே அழைத்துக் கொண்டு
    இருவரும் ஜெய்சங்கர் வீட்டுக்கு போனோம்
    வெங்கட்ராமனும் ஒரு தொகையை
    திரைப்படத்திற்கு பைனான்ஸ் செய்ய ஒப்புக்கொண்டார்
    ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை
    பைனான்ஸ் செய்யும் தொகைக்கு ஜெய்சங்கரை
    ஜாமீன் கையெழுத்து போட்டுத் தரும்படி கூறினார்
    ஜெய்சங்கருக்கு கோபம் வந்து விட்டது
    என் மீதும் வீரய்யா மீதும் நம்பிக்கை இல்லாமல்
    கையெழுத்து கேட்கிறீர்கள்
    வேண்டாம் பணம்
    நானே முழுக்க முழுக்க பைனான்ஸ் செய்கிறேன்
    நீங்கள் போகலாம் என்று அனுப்பி விட்டார்
    அத்துடன் நிற்காமல் உடனே
    ஜெய்சங்கரின் நண்பரும்
    பிரபல திரைப்பட தயாரிப்பாளருமாகிய
    திரு கே பாலாஜி அவர்களுக்கு போன் செய்து
    அவரது அலுவலகத்திலுள்ள இந்தியன் ஓவர்ஸீஸ் பாங்க் கிளையில்
    என் பேரில் ஒரு கணக்கு துவங்க
    ஏற்பாடு செய்து என் பெயருக்கு ஒரு பெரும் தொகையை
    ஒரு செக் போட்டு கட்டிவிட்டு வரும்படி அனுப்பினார்
    ஜெய்சங்கரும் துக்ளக் ஆசிரியர் சோ அவர்களும்
    நெருங்கிய நண்பர்கள்
    சோ அவர்களின் கோவாடிஸ் என்ற நாடகம்
    நூறு நாட்களுக்கு மேல் நடத்தப்பட்டு
    நல்ல பெயர் வாங்கி இருந்தது
    அந்தக் கதையையே படமாக்கலாம் என்று ஜெய்சங்கர் சொல்லவே
    முழுக்க முழுக்க அரசியல் கலப்பில்லத கதையை தேர்வு செய்யலாமே என்று
    என் கருத்தை சொன்னேன்
    ஜெய்சங்கரோ கோவாடிஸ் கதையைத்தான் படம் எடுக்க வேண்டுமென்று உறுதியாக இருந்தார்
    நானும் சம்மதித்து
    கதை வசனம் சோ அவர்களை வைத்துக் கொண்டு
    டைரெக்க்ஷன் பொறுப்பை வேறு யாருக்காவது கொடுக்கலாமே என்று யோசித்தபோது
    மக்கள் கலைஞரோ டைரெக்க்ஷனும் சோ தான் என்று
    முடிவாக சொல்லி விட்டார்

    ஏ வி எம் ராஜன் வி கே ராமஸாமி அசோகன்
    வி கோபாலககிருஷ்ணன் சுதர்ஸன்
    வெண்ணிற ஆடை மூர்த்தி ஹெரான் ராமஸாமி
    மனோரமா ஜெய்சித்ரா
    ராதிகா சுகுமாரி சச்சு சி ஐ டி சகுந்தலா
    என ஒரே நட்சத்திர கூட்டம் கூடி நடிக்க ஏற்பாடாகியது
    கோவாடிஸ் 'பாருக்குள்ளே நல்ல நாடு
    என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு
    ஷூட்டிங்க் அமர்களமாக ஆரம்பமாகி
    நடந்து கொண்டிருந்தது
    அது சமயம் எம் ஜி ஆர் முதலமைச்சராக இருந்தார்
    அரசியல் சம்பத்தப்பட்ட கதையாகவும்
    இதில் சோ சம்பத்தப்பட்டிருப்பதாலும்
    அரசின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு குறைவில்லை
    இதுவும் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது
    அரசாங்கத்துக்கு எதிரான காட்சியமைப்புகள்
    வசனங்கள் இருப்பதாலும்
    அவை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும்
    அதனால் இந்த முயற்சியை கைவிடும்படி
    நண்பர்களும் உடன் இருந்தவர்களும் சொல்ல
    நானும் குழப்பமான நிலையில் இருந்தேன்
    சோவும் ஜெய்சங்கரும் தெளிவாக இருந்தார்கள்
    அதனால் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது
    திடீரென்று அசோக*னுக்கு ப*ட*ப்பிடிப்பில் ஹாட் ஹ*ட்டாக் வந்து
    ப*ட*ப்பிடிப்பில் தேக்க* நிலை ஏற்பாட்டு விட்ட*து
    அடுத்து வ*ரும் ஸீன்க**ளுக்கு அசோக*ன் தேவைப்ப*ட்டார்
    குண*ம*டையாத* நிலையில்
    அவ*ர் கலந்துகொள்ள* முடியாம*ல் போக*வே
    அசோக*னுக்கு ப*திலாக* வேறு ஒரு ந*டிக*ரை போட்டு எடுக்க*லாம் என்று ப*ல*ரும் சொல்ல*
    இல்லை இல்லை அசோக*ன் என் நெருங்கிய*
    ந*ண்ப*ர் நாமே அப்ப*டி செய்வ*து முறை*ய*ல்ல*
    நாமே அவ்வாறு செய்தால் ம*ற்ற*வ*ர்க*ளும்
    இதை எளிதாக பின்ப*ற்றுவார்க*ள்
    அவ*ர் வ*ரும்வ*ரை காத்திருப்போம் என்று ஜெய்ச*ங்க*ர் தீர்மான*மாக* சொல்லி விட்டார்
    கால*தாம*த*மாகிக் கொண்டே வ*ருவ*தால்
    இடையில் அவுட்டோர் சென்று வ*ர*லாமென* முடிவு செய்து
    அசோக*ன் இல்லாம*லேயே
    ஜெய்ப்பூர் செல்ல* முடிவெடுத்தோம்
    ம*ற்ற* ந*டிக* ந*டிகைய*ர்க*ளுட*ன்
    ஜெய்ப்பூரில் பாருக்குள்ளே ந*ல்ல* நாடு சம்பந்தப்ப*ட்ட* காட்சிக*ளை எடுத்தோம்
    மூன்று பாட*ல்க*ள் ப*ட*மாக்க*ப்ப*ட்ட*ன*
    ப*ழ*மையான* அர*ண்ம*னைக*ள் ம*ண்ட*ப*ங்க*ள்
    என் சிற*ப்பான* முறையில் காட்சிக*ள் அமைந்த*ன*

    ஒரு வ*ழியாக* வியாபார*த்திற்காக*
    வினியோக*ஸ்த்ர்க*ளுக்கு புரொஜக்க்ஷ*ன் ஏற்பாடு செய்து
    ப*ட*ம் போட்டுக் காட்டினேன்
    ப*ல* புரொஜக்க்ஷ*ன் போட்டுக் காட்டியும் ப*ல*னில்லை
    படத்தைப் பார்த்த பல வினியோக*ஸ்த்ர்கள்
    அர*சிய*ல் விஷ*ய*ங்க*ள் அதிக*ம்
    இது சென்ஸார் ஆவ*து க*ஷ்ட*ம் என*க் கூறி விட்ட*ன*ர்
    இன்னும் சில*ர் சென்ஸார் செய்யுங்க*ள் பிற*கு பார்க்கலாம் என்று ந*ழுவி விட்ட*ன*ர்
    தொட*ர்ந்து விடாப்பிடியாக* ஜெய்ச*ங்க*ரின் உத*வியுட*ன் ப*ட*ப்பிடிப்பு ந*ட*த்தி வந்தேன்
    திடீரென* அசோக*ன் அவ*ர்க*ளின் ம*றைவு
    அவ*ர் கால*மாகிய*து ம*ட்டும*ல்ல* தொட*ராக* வ*ந்த* வியாபாரத்தேக்க*ம்
    எல்லாமே ப*ய*ங்க*ர* நெருக்க*டி த*ர* ப*ட*ப்பிடிப்பிலே ம*ந்த*ம்
    ப*ட*த்தை முடிக்கவில்லை
    முடிக்காம*ல் வியாபார*ம் செய்ய* முடியாம*ல்
    நிர*ம்ப*வும் க*ஷ்ட*ப்ப*ட்டு விட்டேன்
    பிழைப்புக்காக* நான் வெளிப் ப*ட*ங்க*ளில் வேலை செய்ய* வேண்டிய* சூழ்நிலை

    அப்போது மேஜ*ர் சுந்த*ர்ராஜ*னின் க*ல்தூண் ப*ட*த்தின்
    த*யாரிப்பு நிர்வாகியான* ந*ண்ப*ர் வேணு
    இடையில் கால*மாகிப் போக*வே
    மேஜ*ர் என்னை அழைத்து அப்பொறுப்பில் ப*ணிபுரிய*ச் சொன்னார்
    தொட*ர்ந்து அவ*ருடைய* ப*ட*ங்க*ளில்
    நான் தான் தாயாரிப்பு நிர்வாகியாக* ப*ணியாற்றினேன்
    மேலும் சில* த*யாரிப்பாள*ர்க*ளின் ப*ட*ங்க*ளிலும்
    வேலை செய்தேன்

    இக்கால கட்டங்களில் அடிக்கடி ஜெய்சங்கரை நான் சந்திப்பேன்
    'ஒரு நாளவது எனது தாயாரிப்பில் முடங்கிய தனது பணத்தைப்பற்றி அவர் பேசியதே கிடையாது !
    அந்த பேச்சையே எடுப்பதில்லை
    கடைசிவரை அதைப் பற்றி அவர் கவலைப்படவேயில்லை !
    என்னால் அவருக்கு ஏற்பட்ட கஷ்டங்களை நினைத்து நான் தான் வெகுவாக வருத்தப்பட்டேன்
    அந்தக் கவலை இன்னும் என்னை வாட்டுகிறது

    அவரின் மரணத்தை கேட்டு அதிர்ந்து போய்
    ஹாய் ! என்ற சப்தமில்லாத உடலைப் பார்த்து
    கண்ணிர் விட்டேன்
    ஜெய்சங்கர் இறப்தற்கு சில மாதங்களுக்கு முன்பு
    கோவாடிஸ் கதையை டிவி ஸீரியலாக செய்யலாம் என நினைத்து அணுகியபோது
    அது உன்னுடைய இஷ்டம் உன்னிஷ்டம் போல் செய்து கொள் என்று சொன்னாரே தவிர
    'ஏதாவது செய்து பணத்தை திருப்பிக் கொடு என்று கேட்கவில்லை
    எனக்கு ஏதாவது வழி பிறந்து
    சிறு தொகையாவது திருப்பக் கொடுக்க மாட்டோமோ
    என்ற ஏக்கத்துடன் திரும்பினேன் !

    Thanks

    Regards

  8. #107
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    டியர் tfmlover...

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் தயாள மனதைக்காட்டும் உங்கள் பதிவு மனதை மிகவும் உருக்கியது. ஏற்கெனவே அவருடைய தாராள குணத்தையும், நண்பர்களுக்கு உதவும் மனப்பான்மை பற்றியும், சிறு சிறு தயாரிப்பாளர்களை அவர் உருவாக்கிய விதம் பற்றியும் முந்தைய பக்கங்களில் இடம்பெற்ற, 'நட்புக்கொரு ஜெய்சங்கர்' போன்ற பதிவுகளில் குறிப்பிட்டுள்ளோம்.

    அதை மேலும் தெளிவாக நிரூபிக்கும்வண்ணம் உங்கள் பதிவு அமைந்துள்ளது. மக்கள் கலைஞரின் தூய உள்ளத்தையும், தியாக மனப்பான்மையையும், பணத்தை பெரிதென மதிக்காத பண்பையும் விவரிக்கும் உங்கள் அற்புத (தேடிப்பிடித்து கொணர்ந்த) பதிவுக்கு மிக்க நன்றி.

    தொடர்ந்து உங்களின் இதுபோன்ற சிறந்த பதிவுகளை எதிர்நோக்குகிறோம்.
    will try

    Regards

  9. #108
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    அந்தக் காலத்தில் வானொலி நிகழ்ச்சிகளின் கிரீடமாக விளங்கியவை
    ஒவ்வோர் ஆண்டும் வானொலி நாடக விழாவின் போது இடம்பெற்ற நாடகங்கள் தான்
    அந்த நாடகங்களைக் கேட்டு மகிழாத தமிழ்க்குடும்பங்களே இல்லை எனலாம்
    கோவை மதுரை திருநெல்வேலி நிலையங்கள் தொடக்கப்படாத காலம் காலம் அது
    நாடகங்களில் திரையுலக கலைஞர்களை பங்கேற்ற வைக்கும் முயற்சியியை செயல்படுத்தும் வகையில்
    இரண்டாம் நிலை தயாரிப்பாளராக இருந்த என்னிடம் பொறுப்பு தரப்பட்டது
    திருச்சி வானொலி நாடகக் கலைஞராக மிகவும் பிரபலமாக இருந்த டி வி கிருஷ்ணமூர்த்தி மூலமாக
    சென்னையில் கே வி ஸ்ரீநிவாஸன் அறுமுகம் கிடைத்தது
    ஒரு திறமைக் களஞ்சியம் கே வி ஸ்ரீநிவாஸன்
    அன்னையின் ஆணை திரைப்படத்தில் சாம்ராட் அசோகன் *புத்த பிட்சுவுக்கும் இடையே நடக்கும்
    உரையாடல் பாடல்காட்சி இன்னும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நினைவில் பசுமையாக தங்கிப்போன ஒன்று
    அந்தக் காட்சியில் சிவாஜிக்கு ஈடுதந்து புத்த பிட்சுவாக வெழுத்து வாங்கியவர்தான் இந்த ஸ்ரீநிவாஸன்
    அவரை சந்தித்தது பின்னாளில் முத்துராம்ன் வி கோபாலகிருஷ்ணன் மனோரமா தேங்காய் ஸ்ரீநிவாஸன்
    ஜி சகுந்தலா போன்ற பலர் நாடக விழாவில் கலந்து கொள்ள காரணமாக உதவியாக இருந்தது

    குறிப்பாக ஜெய்சங்கரை சொல்ல வேண்டும் !
    மிக நெருங்கிய நண்பராகி விட்டார்
    மிகவும் எளிமாய இனிமையாக பழகும் தன்மை
    உங்களுக்கு என்ன தேதி வசதியோ அப்போது ஒலிப்பதிவை வைத்துக் கொள்கிறேன் ஜெய் 'என்பேன்
    உங்களுக்கு என்ன தேதி வசதியோ அதை சொல்லுங்க ஸார் நான் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன் 'என்பார்
    மிகவும் பிஸியாக அவர் வலம் வந்து கொண்டிருந்த நேரம்
    ஆனால் சொன்னபடியே வந்து நல்ல ஒத்துழைப்புடன் செய்து கொடுத்துவிட்டு போவார்
    அந்த ஆண்டு ஜெய் நடித்த நாடகம் தான் நாடக விழாவில் சிறந்த நாடகமாகத் தேர்வு பெற்றது

    சென்னை வானொலி நிலையத்தில் நான் பணி புரிந்த நாட்களில்
    ஒருமுறை நண்பர் டாக்டர் எஸ் விஸ்வநாத்
    எழுதிய நூல் வெளியீட்டு விழா பாரதிய வித்யா பவனில் நடை பெற்றது
    நூலை ஜெய்சங்கர் வெளியிட நான் பெற்றுக் கொண்டேன்
    ..' ஸார் எபனக்கு அதிகம் பேச வராது நீங்களே பேசிவிடுங்கள் என்று என் காதில் கிசுகிசுத்தார்
    நானும் பேசிவிட்டு அமர்ந்ததும் ஜெய் மைக்கைப் பிடித்தார்
    மடை திறந்த வெள்ளம் போல் அவரது உரை பெருக்கெடுத்து ஓடியது
    அசந்து போனேன்
    என் காதில் கிசுகிசுத்தது ஜெய்யின் விளையாட்டு
    அசத்தி விட்டார்
    உங்கள் நடிப்பை இதுவரை பார்த்து மகிழ்ந்து இருக்கிறேன்
    இன்று உங்கள் மேடைப் பேச்சு அடேயப்பா !
    என்று கரங்களைப் பிடித்தேன் தழுவிக் கொண்டார்

    என்னுடைய மகன் திருமணத்திற்கு எப்படியோ ஜெய்க்கு அழைப்பு அனுப்பாமல் விடுபட்டு விட்டது !
    வரவேற்வின் போது டாக்டர் ஜெ விஸ்வநாத் வந்திறங்கினார்
    பக்கத்தில் கூடவே ஜெய் !
    மணமக்களை இருவரும் வாழ்த்தும்போது மேடையின் நானும் இருந்தேன்
    டாக்டர் ஜெ.வி ..; என்ன ஸார் ஜெய்க்கு இன்விடேஷன் அனுப்ப மறந்துட்டீங்க போல இருக்கு என்று ரகசியமாக சொன்னதும்
    ..தவறை உணர்ந்து ஜெய்யிடம் மன்னிப்பு கேட்க
    ..'நடராஜன் அங்கே பாருங்க கவர்னர் வாரார் போய் அவரை கவனியுங்க 'என்றாரே பார்க்கலாம்
    சிலிர்த்துப் போனேன்
    நட்புக்கும் பெருந்தன்மைக்கும் இதை விடவா ஒரு சான்று !

    -சென்னைத் தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குநர்
    ஏ நடராஜன்

    Thanks
    Regards

  10. #109
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    மக்கள் கலைஞரின் மகனும் பிரபல கண் மருத்துவருமான Dr.விஜயசங்கர் இன்று ஜெயா தொலைக்காட்சியில் சிறப்பு தேன் கிண்ணம் நிகழ்ச்சியை வழங்கினார். ஜெய் போன்றே உடல் மொழி, குரல் அந்தளவிற்கு இல்லாவிட்டாலும் கூட பேசும் போது ஜெய் பேசும் அதே ஸ்டைல் இவற்றை காண முடிந்தது.

    தன் தந்தையின் முதலிரண்டு படங்களின் பாடல்களை ஒளிப்பரப்பியவர் பின் ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு பாடலை ஒளிப்பரப்பினார். நடிகர் திலகத்திற்கு மலர்ந்தும் மலராத.

    சாரதா விளக்கமாக எழுதுவார். முடிவில் கண் தானத்தை வலியுறுத்தி நிகழ்ச்சியை நிறைவு செய்தது நிறைவாக இருந்தது.

    மக்கள் கலைஞரின் இரண்டாவது மகன் சஞ்சய் பற்றி எந்த செய்தியும் கேள்விப்படுவதில்லை. ஏனோ?

    அன்புடன்

  11. #110
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    சாரதா பிரகாஷ் அவர்கள் தந்த விஜய் ஷங்கர் தேன் கிண்ணம் நிகழ்சியை பார்த்தது போல் இருந்தது மிக்க நன்றி tfmlover எழுதிய நிகழ்ச்சி கண்ணில் நீரை வரவழைத்து விட்டது
    gkrishna

Page 11 of 40 FirstFirst ... 91011121321 ... LastLast

Similar Threads

  1. Kalaignar TV?
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 184
    Last Post: 3rd October 2011, 12:16 AM
  2. MAKKAL TV
    By subanrao in forum TV,TV Serials and Radio
    Replies: 124
    Last Post: 1st August 2009, 09:33 PM
  3. Makkal Aatchi
    By svbp007 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 2
    Last Post: 2nd November 2008, 03:37 PM
  4. Contact details for Kalaignar TV
    By MEDIA ASIA in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 23rd October 2007, 10:26 PM
  5. Kalaignar TV is coming on the way
    By Sanjeevi in forum Miscellaneous Topics
    Replies: 21
    Last Post: 6th August 2007, 07:17 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •