View Poll Results: Should Sivaji's birthday be declared as World Screen Actor Day?

Voters
20. You may not vote on this poll
  • Yes

    15 75.00%
  • Maybe

    2 10.00%
  • No

    3 15.00%
Page 4 of 8 FirstFirst ... 23456 ... LastLast
Results 31 to 40 of 73

Thread: Sivaji Ganesan in Memory

  1. #31
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    “Sivaji was no stranger to Sri Lanka. His movies ran to packed houses in the island. Several of his films were adapted and remade in Sinhala. Substantial portions of the films ‘Pilot Premnath’ and ‘Mohanapunnagai’ starring Sivaji were shot in Sri Lankan locales with Sri Lankan artistes Malani Fonseka and Geetha Kumarasinghe in the lead female roles
    Sivaji Ganesan played a wide range of characters, from god and king to commoner. Whether it was the mercurial Chola emperor Raja Raja Cholan, Lord Siva, Lord Muruga, Saivite saint Appar, Vaishnavite saint Periyaalvar or Tamil poet Ambigapathy, Sivaji was always at his scintillating best. He was equally splendid in contemporary roles and stereotypes making every performance a memorable one”



    .... Read more here ....
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #32
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    பத்திரிகைச் செய்தி :

    சத்தியமூர்த்தி பவனில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவுநாள் நிகழ்ச்சி

    மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 13-வது நினைவு நாளினை முன்னிட்டு இன்று (21.7.2014) சத்தியமூர்த்தி பவனில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. பி.எஸ். ஞானதேசிகன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் டாக்டர் குமரி அனந்தன், பொதுச்செயலாளர்கள் ஏ.எஸ். சக்திவடிவேல், கே. சிரஞ்ஜீவி, சென்னை மாவட்டத் தலைவர்கள் ராயபுரம் மனோ, என். ரங்கபாஷ்யம் மற்றும் பெ. திருவேங்கடம், ஜி.பி. நம்பி, ஜி.ஆர்.வெங்கடேஷ், சிவாஜி மன்ற செயலாளர்கள் கு,கொண்டல்தாசன், கே. சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Reproduced from Facebook page of Tamil Nadu Congress Committee at: https://www.facebook.com/TamilnaduCo...levant_count=1
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks Russellmai thanked for this post
  6. #33
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்

    நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் நூற்றாண்டின் மிகப்பெரிய நடிகர். காங்கிரஸ் கட்சிக்கு அவர் ஆற்றிய பங்கு மகத்தானது, மறக்க முடியாதது. பெருந்தலைவர் காமராஜர் மீது அவர் வைத்து இருந்த மரியாதையும் நன்மதிப்பும் இன்றும் நினைவு கூற தக்கவை. அவரது நினைவு நாள் (21.07.2014) அவரது நினைவை போற்றுவோம்.

    சிவாஜி கணேசன் அவர்கள், தென்னிந்தியாவின் ஒரு பெரிய நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். தனது குழந்தைப் பருவத்திலிருந்தே நடிப்பதில் பேரார்வம் கொண்ட அவர், அதில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர், அவர் தெலுங்கில் ஒன்பது திரைப்படங்கள், கன்னடத்தில் ஒன்று, மலையாளத்தில் இரண்டு, ஹிந்தியில் இரண்டு திரைப்படங்கள் என முன்னூறுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    பிறப்பு:

    சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக விழுப்புரத்தில் 1 அக்டோபர் 1927 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்.

    ஆரம்பகால வாழ்க்கை

    சிவாஜி கணேசன் அவர்கள், தனது இளம்வயதிலேயே நாடகங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாலும், அதில் பங்கேற்பதில் ஆர்வம் இருந்ததாலும், தனது கனவினை நிறைவேற்ற ஒன்பது வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்தார். பின்னர், அவரது சொந்த அம்மாவே நாடகக் குழுவில் இடம் பெற உதவி செய்தார். சிவாஜி கணேசன் அவர்கள், கமலா என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற மகள்களும் உள்ளனர்.

    திரையுலக வாழ்க்கை:

    திரையுலகுக்கு வரும் முன், நாடகங்களில் நடித்த சிவாஜி கணேசன் அவர்கள், ‘இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகம் மூலமாக மிகவும் பிரபலமானார். இதில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின், நடிப்புத் திறமையைத் தந்தைப் பெரியார் அவர்கள் பெரிதும் பாராட்டினார். அவர், அவரை ‘சிவாஜி கணேசன்’ என்றழைத்தார். இந்நிகழ்ச்சியே, அவருக்கு ‘சிவாஜி கணேசன்’ என்ற பெயரை நிலைக்கச் செய்தது.

    தமிழ்த் திரையுலகில், ‘பராசக்தி’ என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவாஜி கணேசன் அவர்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர், இரண்டு ஹிந்தி திரைப்படங்கள், ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

    அவருக்குத் தெளிவான, உணர்ச்சிப் பூர்வமான தமிழ் உச்சரிப்பும், நல்ல குரல்வளமும், சிறந்த நடிப்புத் திறனும் இருந்ததால், ‘நடிகர் திலகம்’ என்றும், ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்றும் மக்களாலும், திரையுலகத்தினராலும் அழைக்கப்பட்டார்.

    அக்காலத்தில், தேசத் தலைவர்களின் பத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடித்த முக்கிய நடிகர்களுள் ஒருவர், சிவாஜி கணேசன் அவர்கள். ‘இராஜராஜ சோழன்’ மற்றும் ‘கப்பலோட்டிய தமிழன்’ ஆகிய திரைப்படங்களே இதற்கு சான்றாகும். ‘மனோகரா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற திரைப்படங்கள், இவரின் வீர வசனத்திற்காகப் பெயர்ப் பெற்றவை. ‘பாசமலர்’, ‘வசந்த மாளிகை’ போன்ற திரைப்படங்களில் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பைக் காணலாம். ‘கந்தன் கருணை’, ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ போன்ற பக்தித் திரைப்படங்களும் பெரிதும் பேசப்பட்டவை.

    அரசியல் வாழ்க்கை

    அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜி கணேசன் அவர்கள், 1955 வரை திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1961ல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரானார்.

    விருதுகள்:

    1960 – ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
    1966 – பத்ம ஸ்ரீ விருது
    1984 – பத்ம பூஷன் விருது
    1995 – செவாலியே விருது (Chevalier)
    1997 – தாதா சாகேப் பால்கே விருது
    1962 – சிறப்பு விருந்தினராக அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கௌரவிக்கப்பட்டார்.

    இறப்பு

    தென்னிந்திய திரைப்படத் துறையில், சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் அவர்கள், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 21, 2001 ஆம் ஆண்டு தனது 74வது வயதில் மரணமடைந்தார்.
    from the facebook page of Tamil Nadu Congress Committee: https://www.facebook.com/TamilnaduCo...e=1&permPage=1
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks Russellmai thanked for this post
  8. #34
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    NFTE BSNL தொழிற்சங்கம் நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி தன்னுடைய வலைப்பதிவில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியது

    அந்தப் பக்கத்திற்கான இணைப்பு

    http://nftekanchipuram.blogspot.in/

    http://nftekanchipuram.blogspot.in/2014/07/21.html
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Thanks Russellmai thanked for this post
  10. #35
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    BSNLEU Madurai தொழிற்சங்கம் நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி தன் வலைப்பதிவில் வெளியிட்டுள்ள செய்திக்கான இணைப்பு

    http://bsnleumadurai.blogspot.in/2014/07/21.html
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #36
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji's connection behind Shankar's name


    There's always an interesting story behind all our names. Our name must have been borrowed from our ancestors, world leaders, international sport persons, or it could have been derived from our parent's lost love. Some would not have concrete reason to explain why they carry a specific name.



    Director Shankar went on explain the reason behind his name in an interesting manner in a recent function. He said, my mom was an ardent fan of, Chevalier Sivaji Ganesan. I was born on the day where she watched one of his movies and his character name was, Shankar. And, that is how I got the name from him. I have always wanted to make a movie with him and I wrote the dad's character in 'Kaadhalan' keeping him in my mind. But I was not sure whether that role would suffice the great actor's appetite. Though I was not able to cast him in any of my movies, I felt good by naming the Superstar starrer as 'Sivaji'.
    courtesy: Indiaglitz website. Link: http://www.indiaglitz.com/Sivajis-co...il-news-111069
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Likes Russellmai liked this post
  13. #37
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    தமிழ்த்திரையுலகின் பொற்காலம் (1960 - 1969)

    தமிழ்த்திரைப்படங்கள் மகத்தான் சாதனைகள் புரிந்த இந்த காலகட்டத்தில் நடிகர்திலகத்தின் சாதனை பொக்கிஷங்கள்.
    -------------------------------------------------------------
    வெள்ளிவிழா காவியங்கள்

    1) பாவ மன்னிப்பு
    2) பாசமலர்
    3) திருவிளையாடல்

    20 வரங்களைக் கடந்த படங்கள்

    1) படிக்காத மேதை
    2) பாலும் பழமும்
    3) சரஸ்வதி சபதம்
    4) தில்லானா மோகனாம்பாள்
    5) சிவந்த மண்

    100 நாட்களுக்கு மேல் ஓடியவை...

    மருத நாட்டு வீரன்
    பார்த்தால் பசிதீரும்
    ஆலயமணி
    இருவர் உள்ளம்
    அன்னை இல்லம்
    கர்ணன்
    பச்சை விளக்கு
    கைகொடுத்த தெய்வம்
    புதிய பறவை
    நவராத்திரி
    சாந்தி
    மோட்டார் சுந்தரம் பிள்ளை
    கந்தன் கருணை
    இருமலர்கள்
    ஊட்டிவரை உறவு
    கலாட்டா கல்யாணம்
    உயர்ந்த மனிதன்
    தெய்வமகன்

    (திருவருசெல்வர், என்தம்பி, திருடன் ஆகிய படங்கள் 100 நாட்கள் ஓடியதாக சொல்லப்பட்ட போதும் தெளிவான ஆதாரங்கள் இல்லாததால் சேர்க்கப்படவில்லை).

    சென்னையில் நான்கு அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்...

    ஆலயமணி
    கைகொடுத்த தெய்வம்
    நவராத்திரி
    சிவந்த மண்
    ------------------------------------------------------------
    விருதுகளும் பரிசுகளும்

    1966-ல் மத்திய அரசின் 'பத்மஸ்ரீ' விருது
    1961 மத்திய அரசின் சிறந்த பிராந்திய மொழிப்படம் பாவமன்னிப்பு
    1961 மத்திய அரசின் சிறப்பு சான்றிதழ் கப்பலோட்டிய தமிழன்
    1968 மத்திய அரசின் சிறந்த பிராந்திய மொழிப்படம் தில்லானா மோகனாம்பாள்
    1968 மாநில அரசின் சிறந்த படம் உயர்ந்த மனிதன்
    1968 மாநில அரசின் இரண்டாவது சிறந்த படம் தில்லானா
    1969 மாநில அரசின் சிறந்த நடிகர் விருது தெய்வமகன்
    1963 சிறந்த ஒருமைப்பாட்டுப் படம் ரத்தத்திலகம் (துப்பாக்கி பரிசு)
    இவைபோக சினிமா ரசிகர்சங்க விருதுகள், பிலிம்பேர் விருதுகள்.

    ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் சிவந்த மண்.

    இந்த காலகட்டத்தில் (60-69) வெளியான 'லேண்ட்மார்க்' படங்கள்
    75-வது படம் பார்த்தால் பசிதீரும்
    100-வது படம் நவராத்திரி
    125-வது படம் உயர்ந்த மனிதன்
    (அனைத்தும் வெற்றி)

    1962-ல் இந்திய கலாசார தூதுவராக அமெரிக்க பயணம். நயாகரா நகரின் கௌரவ மேயராக தங்கச்சாவி பரிசு என்பதோடு அன்றைய மேயர் என்ற முறையில் இரண்டு தீர்மானங்களில் நடிகர்திலகத்தின் கையெழுத்து.

    பொற்கால தமிழ் சினிமாவின் பொற்கால சிற்பி நடிகர்திலகம்...

  14. #38
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    தமிழ்த்திரையுலகின் பொற்காலம் (1960 - 1969)

    தமிழ்த்திரைப்படங்கள் மகத்தான் சாதனைகள் புரிந்த இந்த காலகட்டத்தில் நடிகர்திலகத்தின் சாதனை பொக்கிஷங்கள்.
    -------------------------------------------------------------


    100 நாட்களுக்கு மேல் ஓடியவை...

    மருத நாட்டு வீரன்
    பார்த்தால் பசிதீரும்
    ஆலயமணி



    கலாட்டா கல்யாணம்
    உயர்ந்த மனிதன்

    தெய்வமகன்

    (திருவருசெல்வர், என்தம்பி, திருடன் ஆகிய படங்கள் 100 நாட்கள் ஓடியதாக சொல்லப்பட்ட போதும் தெளிவான ஆதாரங்கள் இல்லாததால் சேர்க்கப்படவில்லை).


    பொற்கால தமிழ் சினிமாவின் பொற்கால சிற்பி நடிகர்திலகம்...
    Karthik Ji,

    Thanks for the statistics. "Padithaal mattum podhuma" in 1962 is a 100 day movie.

    As for the data on authentication needed, you may like to include "Enga Oor Raja" also.

    Regards,

    R. Parthasarathy

  15. #39
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கார்த்திக்
    பல்வேறு கோணங்களில் அலசி நடிகர் திலகத்தின் சாதனைகளைத் தொகுத்திருக்கும் தங்கள் பணி மிகவும் மன மகிழ்வூட்டுகிறது. தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. #40
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகம் செவாலியே சிவாஜி நினைவு நாளை முன்னிட்டு 21.07.2014 அன்று காலை 11.00 மணியளவில் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மாவட்ட சிவாஜி மன்ற அலுவலகத்தில் நெல்லை மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் மாவட்ட தலைவர் பா.சிவாஜி செல்வராஜன் தலைமையில் மாவட்டத் துணைத் தலைவர் திரு V.P. லட்சுமணன் முன்னிலையில் டாக்டர் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மன்ற ஆலோசகர் திரு ஆ.லெட்சுமணன், செயலாளர் திரு ந. மங்களேஷ்வரன், பொருளாளர் திரு ப.இசக்கிமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் திரு இ.மாரியப்பன், திரு ஏ.சீனிவாசன், எஸ்.சிவாஜி மாரியப்பன், கே.பி.அருணா சிவாஜி, கவி.கோ.அரவிந்தன் சர்மா, கவி.கண்மணி. ரீகன், மேலக்கரை முருகன், பத்தமடை சிவாஜி மாயாண்டி, திரு என்.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.















    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Thanks Russellbpw, Russellmai thanked for this post
Page 4 of 8 FirstFirst ... 23456 ... LastLast

Similar Threads

  1. Roles that you wish Sivaji Ganesan had taken up...
    By Plum in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 50
    Last Post: 22nd March 2010, 11:13 AM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM
  5. Ivan ..... Sivaji Ganesan
    By Aravind_06 in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 7th March 2005, 11:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •