Page 92 of 277 FirstFirst ... 42829091929394102142192 ... LastLast
Results 911 to 920 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #911
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    As I am suffering from fever ...songs!!

    காய்ச்சலிலும் காதல் பாய்ச்சல் கீத மருந்துகள் !!

    கடிதம் எழுதுவதென்பது யாருக்கும் கைவந்த கலையாவதற்கு கடினமான எழுத்துப் பயிற்சி மனம்தளராத முயற்சி தேவையே !!
    உலகில் பிறந்த எந்தவொரு மனிதருக்கும் கடித அரிச்சுவடி லீவ் லெட்டரும் லவ் லெட்டரும்தானே !!
    லீவ் லெட்டர் என்றாலே பஞ்ச் டயலாக் போல இளம் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்த வரிகள் :
    As I am suffering from fever I may please be granted one day leave .....என்பதே! ஸ்கூலிலிருந்து ஆரம்பித்து ரிடையராகும்வரை மாற்றமில்லாதது இதுவே!
    இதை எழுதிஅனுப்பிவிட்டு ஓய்வில் நமது காதல் மன்னர் என்ன செய்கிறாரென்றால் ......பார்ப்போமே!!

    சி க double ஹேப்பி அண்ணாச்சிகளே !


    எஸ் எஸ் ஆருக்கு டபுள் தமாக்கா !!ஒரு கப்சா சரடு !!

    காதல்மன்னர் இப்படி என்ஜாய் பண்ணுவதைக் கேள்விப்பட்டு அவரது கிளாஸ் நண்பரான எஸ் எஸ் ஆரும் இந்த லீவ் லெட்டரை அப்படியே ஈயடிச்சான் காப்பியாக எழுதி அனுப்பிவிட்டு தானும் காய்ச்சலாகி படுத்துக் கொள்கிறார் ! பொறுக்க முடியாமல் ஜெமினியிடமிருந்து எஸ்ஸாகி விஜயகுமாரி எஸ்எஸ்ஆரைக் கவனிக்க ஓடி வருகிறார் !

    ஜெமினியின் காதலி சரோஜாதேவிக்கு இதைப் பார்த்து மனம் கொதித்து சொல்லாமல் கொள்ளாமல் போட்டிக்கு நானும் எஸ்எஸ்ஆரைத் தூங்கவைக்கிறேன் என்று கிளம்பிவிடுகிறார் !


    ஜெமினி என்ன செய்வார்?!
    கல்யாணப் பரிசு சைக்கிளை எடுத்துக் கொண்டு சாவித்திரியின் காருக்குப் பின்னே காதல் துரத்தலுக்குப் போய் விடுகிறார்>>>>அப்புறம் கனவுக் கற்பனை க(ழு)தை எங்கெங்கோ காகிதம் மேயப் போய்விடுகிறது...எனக்கும் யாரோ தண்ணீர் தெளித்து கனவை சிதைத்துக் காப்பாற்றி விடுகிறார்கள் !!


    கப்சாக்கதை முற்றும்.
    Last edited by sivajisenthil; 17th September 2015 at 09:21 PM.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #912
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மனத்தைக் கவரும் மதுரகானங்கள் பாகம் 5 மதுஜி துவக்கத்தில் இனிதே வளர்ந்திட
    காதல்மன்னரின் மேன்மைத்திரி சார்பில் தன்னந்தனியாக ஒரு ரோஜா மலருடன் வந்து வாழ்த்துகிறேன்!



    ஆனால் தனிமையிலே இனிமை காண முடியாதே !



    எனவே பாகம் 5ல் நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்!

    Last edited by sivajisenthil; 17th September 2015 at 09:20 PM.

  5. Likes Russellmai liked this post
  6. #913
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மருத்துவப் பணியில் நமது கதாநாயகியர் /கதாநாயகர்கள்!!
    இப்போதும் சரி அப்போதும் சரி திரைப்படங்களை பொருத்தவரை மருத்துவர் என்றாலே வெள்ளைக்கோட்டு கழுத்தில் தொங்கும் ஸ்டெதாஸ்கோப் கையோடு எப்போதும் கொண்டுசெல்லும் மெடிகல்கிட் ....நர்ஸ் என்றாலே வெள்ளுடை தேவதைகளாய் நைடிங்கேல் தெரசா ரேஞ்சில் அன்பின் உருவமாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள் !!
    ஆனால் இப்போதைய டாக்டர்களும் நர்சுகளும் இந்த வளையத்திலிருந்து கொஞ்சம் வெளியே வந்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது!!
    எம் ஆர் ராதா பாலும்பழமும் படத்தில் பஞ்ச் அடிப்பார் ...இஞ்சினியர்னா சித்தாளத்தான் கட்டிக்கணும்...டாக்டர்னா நர்சைத்தான் கட்டிக்கணும்...என்று.....டாக்டர் ரவியாக வரும் நடிகர்திலகம் அலட்டிக் கொள்ளாமல் மெலிதான புன்முறுவலுடன் ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார்!!
    சினிமாவைப் பொருத்தவரை ஒரு சென்சேஷனுக்காக டாக்டர் டாக்டரம்மாவைக் காதலிப்பதாகக் காட்டுவதை விட டாக்டர் நர்சிடம் காதலில் விழுவதைத்தான் அதிகளவில் காட்டியிருக்கிறார்கள்

    பாலும் பழமும் நடிகர்திலகம் கைராசி மற்றும் அன்னை வேளாங்கண்ணியில் ஜெமினி.......


    Last edited by sivajisenthil; 21st September 2015 at 12:42 PM.

  7. Likes Russellmai liked this post
  8. #914
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    காதல் மன்னரின் மறக்க முடியாத கிளைமாக்ஸ் மதுர கீத காட்சிகள் !

    பகுதி 1 கல்யாண பரிசு / ரோமன் ஹாலிடே

    ஒரு படத்தைப் பார்க்கிறோம் கதையமைப்பின்படி நகரும் காட்சிக்கோர்வையை ரசிக்கிறோம் இனிய இசையமைப்பிலும் பாடல்காட்சிகளிலும் லயிக்கிறோம்!
    பெரும்பாலும் ஒரு படத்தின் வெற்றி இடையிடையே வரும் காட்சிகளை விட அதன் கிளைமாக்ஸ் அமைப்பில்தான் உறுதி செய்யப்படுகிறது என்பது எனது தாழ்மையான கருத்து ! சிறந்த உதாரணங்கள் நடிகர் திலகத்தின் கர்ணன், புதிய பறவை, அந்த நாள், கௌரவம்...பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன்...காதல் மன்னரின் கல்யாணபரிசு, சுமை தாங்கி, சாந்தி நிலையம்.....ரவிச்சந்திரனின்
    அதே கண்கள்....ஜெய்யின் நூற்றுக்கு நூறு.....ஹிட்ச்காக்கின் திகில் படங்கள்...முக்கியமாக சைக்கோ , வெர்டிகோ.... ஜேம்ஸ் பாண்ட் படங்கள்....கிரிகரி பெக்கின் ரோமன் ஹாலிடே........வெற்றிக் கோட்டையில் கொடிநாட்டிய காவியங்கள்!

    கிளைமாக்ஸில் சொதப்பிய படங்கள் பெரும்பாலும் வெற்றியைக் கோட்டைவிடுகின்றன !


    அந்தவகையில் கல்யாணப் பரிசு திரைப்படத்தில் விரக்தியோடு இலக்கின்றி போகும் திசையறியாது மனமும் உடலும் தள்ளாட காதலிலே தோல்வியுற்ற காதலனின் மொத்த உருவகமாக ஜெமினி ஒரு லாங்க்ஷாட்டில் சில்லவுட்டாக முதுகாட்டி நடந்து செல்லும் மகோன்னதமான காட்சி என் மனத்தைக் கவர்ந்த கிளைமாக்ஸ் ஆகும் !!



    ஆனால் ஸ்ரீதர் இந்தக் காட்சியை ரோமன் ஹாலிடே படத்தின் கிளைமாக்சில் கிரிகரிபெக் காதல் நழுவிய துக்கம் தொண்டையடைக்க நம்மை நோக்கி விரக்தியுடன் நடந்து வரும் ஷாட்டைத்தான் இன்ஸ்பிரேஷனாக கொண்டிருக்க முடியும்!!

    Last edited by sivajisenthil; 22nd September 2015 at 12:23 PM.

  9. Likes Russellmai liked this post
  10. #915
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    In line with Raghavendhra Sir
    My Heartfelt birthday wishes to the lotus feet of immortal PBS!


  11. Likes Russellmai liked this post
  12. #916
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    காதல்மன்னரின் கிளைமாக்ஸ் காந்தப் புலம் !
    பகுதி 2 நான் அவனில்லை!

    ஒரு படத்தில் இறுதியில் ஒரு கிளைமாக்ஸ் ஓகே!

    படம்பூராவுமே மாறிமாறி கிளைமாக்ஸ் ஆன்டிகிளைமாக்ஸ் என்றால் ,,,, அது ஜெமினியின் வாழ்நாள் நடிப்புச் சாதனைப் படமான நான் அவனில்லைதான்!!

    நடிகர் திலகத்தைப் போலவே ஜெமினியும் தனது வரையறைகளுக்குள் பல பரிமாணங்களில் தனது நடிப்புத் திறமையை ரசிக நெஞ்சங்களில் பதித்தவர்தான் !!

    ஆனால் இந்தப்படத்தில் அசத்தலான பன்முனை நடிப்பில் அவர் பதித்த முத்திரை நின்று நிலைத்திடும் சாதனையே !!
    மிகவும் உருக்கமான கிளைமாக்சில் எதிர்மறை நாயகன் மீதும் ஈர்ப்பையும் அனுதாபத்தையும் அள்ளித்தெளித்திட வைத்தது ஜெமினிக்கு வெற்றியே!!



    அண்ணன் அசோகனால் கத்திக் குத்துப் பட்டு முகத்தில் மரணபயம் கலந்த வேதனையில் ஒரு சினிமா டிரைலர் போல தனது கடந்தகால வாழ்க்கைநிகழ்வுகள் மனக்கண் முன்னே ஓட அவர் காட்டும் பதற வைக்கும் நடிப்புப் பாவனைகள் திரைப்படக் கல்லூரியில் மாணவர்களுக்கு பாடங்களாகபோதிக்க அடிப்படை நடிப்புக் கல்வியே!! எந்த ஒரு முத்திரை குத்தப்பட்ட ரசிகராயினும் நம்மையும் அறியாமல் விழியோரங்களில் துளிர்க்கும் கண்ணீர்த் துளிகளே இந்த மாபெரும் நடிப்புச்செல்வத்துக்கு நமது இதயபூர்வ அஞ்சலி!!
    Last edited by sivajisenthil; 23rd September 2015 at 08:32 PM.

  13. Likes Russellmai liked this post
  14. #917
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Half Ticket / Half Saree songs!
    தாவணி லாவணியும் அரை நிஜார் பேஜாரும் !!

    குழந்தைப் பருவத்தில் என்ன டிரஸ் போட்டாலும் (போடாவிட்டாலும்!) ஆணோ பெண்ணோ அழகுதான் !
    அதே ரெண்டுங்கெட்டான் பருவத்தில் ஆடையமைப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் முறையே அரை டிரவுசராகவும் தாவணியாகவும் மாறும்போது பெண்ணுக்கு அழகு ஏறுகிறது .....பையனுக்கு ?!

    நிச்சயதாம்பூலம் படத்தில் நடிகர்திலகம் ஜமுனாவின் இளமைப் பருவத்தை மனதில் கொணர்ந்து பாடும் பாவாடை தாவணியில் பார்த்த உருவமா ....முதல்..
    அட்டகத்தியில் வரும் ஆடி போனா ஆவணி....
    தாவணி வரை பருவப் பெண்டிரின் உடையழகு வர்ணிக்கப்படுகிறது..என்ன செய்ய...?!
    கால நாகரிக மாற்றங்கள் பாவாடை தாவணியை முற்றிலும் ஒழித்து சூரிதார் பக்கம் திரும்பியதும் ஒரு பாதுகாப்பு வசதி நன்மை கருதியே !

    அரை டிக்கட்டுகளின் அரை டிரவுசரும் மாற்றங்களை அடைந்து அறுபது வயது பெருசுகளும் வெளிநாட்டுக்காரர் போல ஸ்டைலாக போடுமளவு இருக்கிறது நாகரிக முன்னேற்றம் !!

    ராமன் எத்தனை ராமனடி, தங்கப் பதக்கம், வசந்த மாளிகை படங்களில் நடிகர்திலகம் துணிந்து அரை டிரவுசர் போட்டு வருவார் !! காதல் மன்னரும் தனது
    பங்குக்கு தேன் நிலவு, ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் படங்களில் களத்தூர் கண்ணம்மா கமலஹாசன் ரேஞ்சில் அரைடிரவுசர் போட்டு கலக்குவார்!!


    Part 1 : Half Trouser songs!!

    காதல் மன்னர் Vs காதல் இளவரசர் !

    காதல் மன்னரின் lake water surfing சாகசம் எழில் கொஞ்சும் மச்சகன்னி வைஜயந்தியுடன்!


    காதல் இளவரசரின் அரைடிக்கட் பாலபருவம் !
    Last edited by sivajisenthil; 25th September 2015 at 12:11 AM.

  15. Likes Russellmai liked this post
  16. #918
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    24.09.2015 மாலை 5 மணிமுதல் 7 30 வரை என் வாழ்க்கைப் பயணத்தில் மதுரமான நிமிடங்கள்!!

    திரிகளின் இரும்புக்கை எழுத்து மாயாவி திரைப்பாடல்களின் அக்குவேறு ஆணிவேரிஸ்ட் திரித்துவத்தின் வாஸ்து வாசு சாருடன் (அவரது தம்பியுடன்)அவர் வருகையால் குளிர்ந்த கோவை மாநகரில் எழுத்துக்களின் இளம்துருக்கியர் அரிமா செந்தில்வேல் மற்றும் நடிகர்திலகத்தின் பற்றுமிகு மருத்துவர் கனவான் டாக்டர் ரமேஷ் பாபுவுடன் அளவளாவிய இனிய பொன்மாலைப் பொழுது!!

    உள்ளங்களையும் குளிர்வித்து நடிகர் திலகம் புகழ் பாடும் உணர்வுகளையும் ஒளிர்வித்தமைக்கு நன்றிகள் நன்றிகள்....நண்பர் வாசுஜி! Unforgetable moment with ever lingering memories!!

    with regards,

    senthil
    இப்போது இப்படிப் பாடத் தோன்றுகிறது !



    இன்னும் பத்து வருடங்கள் கழித்து இப்படிப் பாடுவோமோ?!

    Last edited by sivajisenthil; 25th September 2015 at 03:16 AM.

  17. Likes Russellmai liked this post
  18. #919
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Monotony breakers! / Gap fillers!!

    திறந்திடு சி செ! மூடிடு சி செ ! இருவரிக் கப்சாக் கதைகள்!!

    க க 1 : களத்தூர் கண்ணம்மா / வசந்த மாளிகை / ஒளிவிளக்கு !

    மது/ரம் சீசா கானங்கள்!!

    சி க சி செ விடம் விரும்பிக் கேட்டவை !( கப்சா!!)

    காதலிப்பது சுகானுபவமே! ஆனால்..... காதலியே மனைவியாகி விட்டால் சிலருக்கு அது நரகமே ! அவர் சீசாவைத் திறக்கிறார்! கா(த)லி பண்ணுகிறார்!! தள்ளாடுகிறார்!!




    இந்தப் பாடம் கற்றுக்கொள்ளாததால் இவர் காதலிக்காக வேண்டி சீசாவை மூடி விட்டு இரண்டு மனமாக காதலியை நினைக்கலாமா அல்லது தொண்டையை நனைக்கலாமா என்று மதில்மேல் பூனையாகத் திண்டாடுகிறார்!



    இவர்கள் ரெண்டுபேரும் காதல் விவகாரத்தால் நொந்து நெஸ்லே நூடுல்ஸ் ஆனதைக் கண்ணுற்று நமக்கு இந்த பாதை சரிப்படாது என்று தனி ஒருவனாக விலகி வேடிக்கை பார்க்கிறார் மக்கள்திலகம் ! களவும் கற்று மற என்ற வாக்கியத்தை பிடித்துக்கொண்டு இந்த மதுவில் என்னதான் இருக்கிறது என்று சீசா மூடியைத் திறந்து நுகர்ந்து பார்த்து அதிலேயே மட்டையாகி சீசாவை உருட்டிவிடுகிறார் ! உடனே அவரது மனசாட்சி விழித்துக்கொண்டு நால்வகை வேதங்களின் உருவங்களாய் வடிவெடுத்து அவரைத் தனித்தனி ஒருவ்ன்களாய் தனிஒருவனாக்கி வறுத்தெடுக்கிரார்கள் !! சந்தடிசாக்கில் தம்பிகளான ஜெமினிக்கும் சிவாஜிக்கும் குடியின் தீமையை முஷ்டி உயர்த்தி ஒரு வாத்தியாராக விளக்கப் பாடம் சொல்லித்தருகிறார் !!

    Last edited by sivajisenthil; 25th September 2015 at 06:06 PM.

  19. Likes Russellmai liked this post
  20. #920
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    OMG (Oh My God) Melodies and Melancholies!!

    கடவுளுக்கே கேள்விக் கணைகளான மானுட கீதங்கள்!!

    மனித மனம் ஒரு விசித்திரமான உணர்வுகளின் கலவைக் களமே !
    அதில் கடவுள் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் சம விகிதத்தில் கலந்தே தெளிக்கப் பட்டிருக்கிறது !

    எந்தக் கவலையுமின்றி எல்லா வளங்களும் நிறைந்து இன்புற்றிருக்கும் சமயங்களில் நாம் நாத்திகராகி நமது கண்களுக்கு இறைவன் தெரிவதில்லை !
    துன்பச் சூழலில் சிக்கிச் சீரழியும் போது ஆத்திகராக மாறி கடவுள் நமது கண்களுக்குத் தெரிய வேண்டும் நமது பிரார்த்தனைகள் அவர் செவிகளுக்குச் சென்றடைய வேண்டும் என்று கடவுளின் பாதார விந்தங்களில் பணிகிறோம் !!

    பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு கண்களுக்குப் புலப்படாமல் எங்கும் நிறைந்த பரம்பொருளை நமது இஷ்டத்துக்கு வளைத்து நாம் வாசிப்பதற்கேற்ப அவர் ஆட வேண்டும் என்று எண்ணுவது பேதமையே !!


    OMG Melancholy 1 / Gemini Circus!!

    பாசவலைக்குள் நாம் கட்டுண்டு கிடக்கும்போது நம்மைச் சார்ந்தவர்கள் நம்மால் நேசிக்கப் படுபவர்கள் அல்லலுறும்போது காணச் சகிக்காமல் கடவுளே உனக்குக் கண்ணில்லையா இறைவனே உனக்கு இதயமில்லையா என்றெல்லாம் பிதற்றுவது மனிதத்தின் வாடிக்கையே !
    ஒரு கூட்டுப் புழுக்களாக ஜீவிதம் காணும் தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தால் சுரண்டப் பட்டு நெஞ்சொடிந்து மடியும் தருவாயில் நண்பரின் கோபம் இறைவன் மேல் திரும்புவது வேடிக்கையான வாடிக்கையே !


    மனதை நெகிழச் செய்யும் நடிப்புப் பரிமாணங்களை இதயங்களில் நுழைந்து ஈர விழிகளிலே வெளிவரும் குறளி வித்தைக்காரர் ஜெமினியே !!




    எங்கெங்கும் நீக்கமற நிறைந்தவன் இறைவனே !
    ஈசனடியாரான நடிகர்திலகத்துக்கே இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடுதல் வேண்டாம் என்று எடுத்துரைக்கிறார் மானுட ரூபத்தில் வந்து
    பாட்டால் பாடாய்ப் படுத்தி எடுக்கும் ஜெமினி சிவன் !!


    Last edited by sivajisenthil; 26th September 2015 at 12:58 AM.

  21. Likes Russellmai liked this post

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •