Page 4 of 277 FirstFirst ... 234561454104 ... LastLast
Results 31 to 40 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #31
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by pammalar
    காதல் மன்னன் களை கட்டுவார்.....
    பம்மலார்.[/b][/color]
    களை கட்டி விட்டார் ...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #32
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA
    Quote Originally Posted by pammalar
    காதல் மன்னன் களை கட்டுவார்.....
    பம்மலார்.[/b][/color]
    களை கட்டி விட்டார் ...
    மிக்க நன்றி, ராகவேந்திரன் சார்.

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  4. #33
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்களின் 90வது பிறந்தநாள்[நிறைவு] விழா
    [17.11.1920 - 17.11.2010]

    விழா நடைபெற்ற நாள் : 21.11.2010 (ஞாயிறு), மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

    இடம் : காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை


    http://www.thehindu.com/news/states/...icle904052.ece

    http://timesofindia.indiatimes.com/c...ow/6966441.cms

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #34
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    காதல் மன்னன் ஜெமினி கணேசனின் 1957-ம் ஆண்டு சாதனைப் பட்டியல்

    [திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்]

    26. மிஸ் மேரி(ஹிந்தி) - . .1957 ["மிஸ்ஸியம்மா" தமிழ்த் திரைப்படத்தின் ஹிந்திப் பதிப்பு]

    27. மாயா பஜார் - 11.4.1957 - காஸினோ, ஸ்ரீகிருஷ்ணா, உமா [100 நாட்களுக்கு மேல் ஓடிய மெகாஹிட் காவியம்]

    28. மணாளனே மங்கையின் பாக்கியம் - 24.5.1957 - பாரகன், பிராட்வே, மஹாலட்சுமி

    29. கற்புக்கரசி - 14.6.1957 - சித்ரா, பிரபாத், சரஸ்வதி, காமதேனு

    30. மல்லிகா - 19.7.1957 - வெலிங்டன், சயானி, கிரௌன்(21.7.1957)

    31. யார் பையன்? - 26.7.1957 - சித்ரா, பிரபாத், சரஸ்வதி, ராக்ஸி

    32. இரு சகோதரிகள் - 23.8.1957 - பாரகன், பிராட்வே, சரஸ்வதி

    33. பத்தினித் தெய்வம் - . .1957 - கெயிட்டி, பாரத், காமதேனு, மஹாலட்சுமி

    34. சௌபாக்கியவதி - 22.10.1957 - கெயிட்டி, பாரத், ராக்ஸி


    குறிப்பு:
    1. "மாயா பஜார்", 1957-ம் ஆண்டின் அதிக வசூல் பெற்ற வசூல் சாதனைப் படமாகத் திகழ்ந்தது.

    2. "மல்லிகா", சென்னை கிரௌன் அரங்கில் மட்டும் 21.7.1957 அன்று வெளியானது.


    காதல் மன்னன் களை கட்டுவார்.....

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  6. #35
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    AdhisayaThirudan

    அதிசயத்திருடனு'க்காக வந்த விளம்பரம் ஒன்று

    நவம்பர் வெளியீடு !
    ஸாஹினியின்
    அதிசயதிருடன்
    டைரக்க்ஷன் புல்லையா
    ஸ்டூடியோ
    விஜயா &
    வாஹினி
    தயாரிப்பு S. பவநாராயணா D.B நாராயணா

    http://s871.photobucket.com/albums/a...thri%20Gemini/

    Regards

  7. #36
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Kadan Vaangi Kalyaanam

    விரைவில்
    வருகிறது
    விஜயாவின்
    கட*ன் வாங்கி கல்யாணம்
    டைரக்க்ஷன் பிரசாத்
    தயாரிப்பு நாகிரெட்டி & சக்ரபாணி

    http://s871.photobucket.com/albums/a...thri%20Gemini/

    Regards

  8. #37
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    இன்று 22.3.2011 அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம். தமிழ்த் திரையுலக மூவேந்தர்களில் ஒருவராகத் திகழ்ந்த காதல் மன்னனுக்கு நமது ஆத்மார்த்தமான அஞ்சலி.

    பம்மல் ஆர். சுவாமிநாதன்.
    pammalar

  9. #38
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    சங்கமம் (1970)

    சமீபகாலமாக முரசு தொலைக்காட்சியில் 1970-ம் ஆண்டு வெளியான "சங்கமம்" வண்ணத்திரைப்படத்தின் பாடல்களை 'ஒருபடப்பாடல்' நிகழ்ச்சியில் காணும்போது சில ஆண்டுகளுக்கு முன் முழு திரைப்படத்தையும் பார்த்து மகிழ்ந்த நினைவு வந்தது. (முழுப்படமும் தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பப் பட்டிருக்கலாம், இணையத்திலும் கூட கிடைக்கலாம். ஆனால் பார்க்கும் வாய்ப்புத்தான் கிடைக்கவில்லை).

    எனக்குத்தெரிந்து வண்ணப்படங்களில் ஜெமினிகணேசன் இரட்டை வேடங்களில் நடித்த படம் இது ஒன்றாகத்தான் இருக்கும். (இப்படி சொல்லி உசுப்பிவிட்டால்தான் வேறு படங்கள் இருந்தால் யாரும் சொல்வார்கள்). வேடங்களில் எந்த மாறுபாடும் இல்லாத, பார்ப்பதற்கு ஒரேமாதிரித் தோற்றம் கொண்ட (மா.வேலன், எ.போ.ஒருவன், நி.முடிப்பவன் டைப்) இரட்டைவேடம். ஆனால் நடிப்பில் நன்கு பின்னியெடுத்திருப்பார். ஆனால் உருவத்தில் இரண்டு துருவங்களான இரண்டு ஜோடிகள். ஒரு ஜெமினிக்கு மெகா சைஸ் கே.ஆர்.விஜயா. இன்னொருவருக்கு 'வெண்ணிற கொடியிடை' நிர்மலா.

    இரண்டு திலகங்களுக்கும், ரவிச்சந்திரனுக்கும் அடுத்து ஜெமினி தானும் அவ்வப்போது வண்ணப்படங்களில் அசத்திக்கொண்டிருந்த நேரம். இதற்கு முந்திய அட்டகாச வண்ணப்படமான சாந்திநிலையத்தை அடுத்து சங்கமும் வண்ணத்திலும் ஒளிப்பதிவிலும் சற்று தூக்கலாகவே நின்றது.

    பழம்பெரும் வில்லன் பி.எஸ்.வீரப்பா சங்கமம் படத்தின் வில்லனாக நடித்திருப்பார். ஜெமினியின் க்மபெனி லெட்டர்பேடில் வில்லங்கமான டாக்குமென்ட்டை தயாரித்து வைத்துக்கொண்டு ஜெமினியை மிரட்டுவார். இருவருக்கும் இடையே ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகளும் உண்டு. நகைச்சுவைக்கு நாகேஷ் இருந்தாலும் நம்மை வலிந்து சிரிக்க வைப்பதற்காக ரொம்ப படுத்துவார்.

    மெல்லிசை மன்னர் டி. கே. ராமமூர்த்தி இசையில் பாடல்கள் நன்றாக இருந்தன. இதே ட்ரெண்டை தொடர்ந்திருந்தால் அந்த ஆண்டு இன்னும் சில நல்ல பாடல்கள் அவருக்கு அமைந்திருக்கக்கூடும். அந்தப்பாடல்களைப் படமாக்கியிருந்த விதம் இன்னும் அருமையோ அருமை. குறிப்பாக வெளிப்புறப் படமாக்கம், ஒளிப்பதிவு அட்டகாசம். ஒளிப்பதிவாளர் யாரென்பது சரியாக நினைவில்லை. தாதாமிராஸியின் டைரக்ஷன் என்பதால் ஒளிப்பதிவு கே.எஸ்.பிரசாத் ஆக இருக்கக்கூடும் (ஒரு ஊகம்தான், தவறாகக்கூட இருக்கலாம்).

    ஆனால் படத்தின் மாஸ்டர்பீஸ் பாடலான "தன்னந்தனியாக நான் வந்தபோது" பாடலை டைட்டில் முடிந்ததும் போட்டது கொஞ்சம் சப்பென்றிருந்தது. ரசிகர்களை கொஞ்சம் எதிர்பார்க்கவைத்து, நடுவில் போட்டிருக்கலாம். படம்வந்த காலத்தில் லேட்டாக படம்பார்க்க வந்தவர்கள் பாடலை மிஸ்பண்ணியிருக்க சான்ஸ் உள்ளது. ஜெமினி - விஜயா டூய்ட் பாடலான இதற்கு லொக்கேஷன் அட்டகாசம். ஒவ்வொரு பிரேமும் கண்களுக்கு குளிர்ச்சி.

    இதே ஜோடிக்கான அடுத்த பாடலான "ஒருபாட்டுக்கு பலராகம்" பாடலில் விஜயாவுக்கு வெறும் ஹம்மிங் மட்டுமே. ஜெமினிக்கு மட்டுமே முழுப்பாடலும் ஜெமினியின் காஸ்ட்யூம் நன்றாக இருக்கும். நல்லவேளை விஜயாவுக்கு சேலைதவிர வேறு காஸ்ட்யூம் தரவில்லை. ஆனால் கே.டி.சந்தானத்தை ஏமாற்ற பாடுவதுபோல இருப்பதால் ரகசியபோலீஸை நினைவுபடுத்தும். இப்பாடலுக்கும். அவுட்-டோர் லொக்கேஷனும் ஒளிப்பதிவும் செமதூள்.

    இன்னொரு ஜெமினியை 'வெண்ணிற கொடியிடை' நிர்மலா முதன்முதலில் சந்திக்கநேரும் பாடலான "வண்ணப்பூபோட்ட சேலைகட்டி புதுப்பொண்ணு பக்கம் வந்தா" இன்னொரு அருமையான லொக்கேஷன் சாங். இப்பாடலில் ஜெமினியைப் பார்க்கும்போது, 'என்ன திடீர்னு எம்.ஜி.ஆர். வந்துவிட்டார்' என்று தோன்றும். சிவப்புகோட், அதில் ஜிகினா டிசைன், கூலிங்க்-கிளாஸ், முக்கியமாக தலையில் புஷ்குல்லா (வெள்ளைக்கு பதிலாக லைட் பிரௌன்) என்று அசத்தலாக தோற்றமளிப்பார். இவருக்கு பாட்டு கிடையாது, ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே. நிர்மலாவுக்கும் தோழிகளுக்கும்தான் முழுப்பாடலும்.

    இவற்றுடன் "கண்ணனிடம் கேட்டிருந்தேன், பிள்ளையொன்று வேண்டும்" என்ற இண்டோர் பாடலும் (விஜயாவுக்காக பி. சுசீலா), இன்னொரு கிளப் பாடலும் உண்டு.

    தாதாமிராஸியின் இயக்கமும், டி.கே.ஆரின் இசையும், ஜெமினியின் இரட்டைவேட நடிப்பும், பாடல்களும், ஒளிப்பதிவும் படத்தை தூக்கி நிறுத்தியபோதும் படத்தின் தரத்திற்கேற்ற பலன் (Running) அமையவில்லை.

    'சங்கமம்' விறுவிறுப்பாக, சுவாரஸ்யமாக செல்லக்கூடிய, ஆனால் அதேசமயம் அதிகம் கண்டுகொள்ளப்படாத அருமையான படம். ...

  10. #39
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தாதாமிராசி, டி.கே.ராமமூர்த்தி இணைவு என்பதால் அடிச்சு பிடிச்சு ,குடந்தை ராஜா (அல்லது டைமண்ட்?)
    திரையரங்கத்தில் எனக்கு 7 வயது மூத்த ஒரு நண்பனுடன் (எனக்கு காமசூத்ரா விஷயங்களை போதித்த குரு. கொஞ்சம் late ஆக ஒன்பது வயதில்தான் விஷயங்கள் அனைத்தும் உணர்ந்தேன்.) போனேன். படம் ரொம்ப தயாரிப்பில் தாமதம். சில காட்சிகள் லேப் பணம் கட்டாததால் வெளிறி தெரியும். continuity மிஸ் ஆகும். காட்சிகள் jump ஆகும். அவ்வளவாக ரசித்த நினைவில்லை.

  11. #40
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என்னை கவர்ந்த ஜெமினி படங்கள்-
    1)நான் அவனில்லை(சிறந்த நடிகர் பாரத் கிடைத்திருக்க வேண்டிய படம்)
    2)மிஸ்ஸியம்மா
    3)மாயா பஜார்
    4)காத்திருந்த கண்கள்
    5)கல்யாண பரிசு
    6)ராமு
    7)வாழ்க்கை படகு
    8)சாந்தி நிலையம்
    9)வஞ்சி கோட்டை வாலிபன்
    10)ஹலோ மிஸ்டர் ஜமிந்தார்

Page 4 of 277 FirstFirst ... 234561454104 ... LastLast

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •