பிரான்சு நாட்டின் ஜாகீருக்கு நம் தமிழர்கள் அனைவரும் கடன் பட்டுள்ளோம். கிட்டத்தட்ட அழிந்து விட்டதென்று நாம் பெருமூச்சு விட்டு கொண்டிருந்த பழைய அபூர்வ தமிழ் பாடல்களை மீட்டெடுத்து ,நம்மை மாணவ பருவத்தின் வாயிலுக்கு அழைத்து செல்லும் இவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

பொற்சிலை என்று ஒரு படம். 1968 /1969 இல் ஜெமினி-விஜயகுமாரி ஜோடியில் வெளிவந்த பார்க்க கூடிய படம்.இது கோவர்தன் அவர்களின் அபார இசையால்,பாடல்களால் பெரிதும் ஆவல் கிளறப்பட்டு ,சுமாராக வெற்றி கண்ட படம்.

நானும் வாசுவும் பல முறை ஏங்கி பேசிய பாடல்கள் ,அக்கரையில் அவனிருக்க (சுசீலா),அழகை பாடவந்தேன் (டி.எம்.எஸ்-சுசீலா),நாளை பொழுது உந்தன் (சீர்காழி) ஓம் மகா கணபதி (யேசுதாஸ் ),பட்டு கன்னம் முத்து பந்தல் (ஈஸ்வரி) என்று அதகள பாடல்கள். இது பாடல்களாக மீட்டெடுக்க பட்டாலும், காட்சி வடிவில் மிஞ்சுவது அழகை பாடவந்தேன்.