Page 88 of 277 FirstFirst ... 3878868788899098138188 ... LastLast
Results 871 to 880 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #871
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் கோட்டையில் காதல் மன்னரின் இனிமைப் பங்களிப்பு !
    வீரபாண்டிய கட்டபொம்மன் ஒட்டுமொத்தமாக நடிகர்திலகத்தின் நடிப்பின் காப்புரிமை எனினும் வழக்கம்போல காதல் மன்னரும் தனது தனிப்பட்ட பாணியில் அமைதியாக இனிமை சேர்க்கிறார் ..நாட்டியப் பேரொளியின் இணைவில்...!!




    Last edited by sivajisenthil; 22nd August 2015 at 06:49 PM.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #872
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Shower Stars !

    நட்சத்திரக் கு(வி)ளியல் பாடல்களும் 'பாத்ரூம் சிங்கர்'களுக்கான மதுர கானங்களே!

    வேலை முடிந்து அலுப்புத் தீர வீட்டுக்கு வந்ததும் நமக்குத் தோன்றுவது ஒரு குளியல் போட்டால் புத்துணர்ச்சி மீளுமே என்பதுதான் !
    என்ன.......குளியல் அ(மு)றைதான் நமது வசதி வாய்ப்புக்களுக்குத் தகுந்த மாதிரி மாறிக் கொண்டே இருக்கும்!!

    கிணற்றடியில் தண்ணீர் சேந்தி ஆனந்தக் குளியல் போடலாம் ....வீட்டுக்குப் பக்கத்தில் பின்புறத்தில் ஆறோடினால் நீராடலாம்......நீச்சல் குளமிருந்தால் உலக நீச்சல் நடன தாரகை எஸ்தர் வில்லியம்ஸ் போல ஒரு டைவ் அடித்து மீனாய் நெளிந்து நீந்தலாம்......

    பட்ஜெட்டில் பாத்டப் இருந்தால் முங்கலாம் ....எல்லாவற்றையும் விட சிறந்தது ஷவரை திறந்து விட்டு பாடிக்கொண்டே மேனி நனைப்பதே!!

    ஷவர் குளியல் நமது சிந்தனைகளை ஒருமுகப் படுத்தும் அற்புதமான உடற்பயிற்சியும் கூட!! வேண்டுமென்றால் கீசரை போட்டுக்கொண்டு இதமான வெப்ப நீர்த் திவலைகளிலும் கவலைகளை வடித்துத் துரத்தலாம் !


    அந்தக்காலப் படங்களில் எப்படியெல்லாம் குளியல் போட்டார்கள் என்பதை நாமும் 'மஞ்சக் குளித்து'ப் பார்ப்போமா !

    ஷவர் ஸ்டார் 1 : ஜெமினி கணேசன் (தனிக்குளியல் எங்கே போட விட்டார்கள்!)
    வஞ்சிக்கோட்டை வாலிபனில் அடிமைப் பையன் ஜெமினியை ராஜா மகள் ரோஜா மலர் அல்லிராணி வைஜயந்தி மாலா ஒரு ஊடலுக்குப் பின் கூடலில் டூயட் பாடவேண்டி பொற்றாமரைக் குளத்தில் பத்துக்கும் மேற்பட்ட பதுமையரை விட்டு அழுக்குத் தேய்த்துக் குளிப்பாட்டுவார் ...அப்புறம்..வெள்ளித்திரையில்....

    Watch from 1 :06 : 00.....quite interesting segment!

    [url]https://www.youtube.com/watch?v=4Hf0zQDtAGg

    சிலீரென்று குளித்துவிட்டுப் பளீரென்று நகைநட்டுடன் புன்னகை பூக்கும் காதல் மன்னருக்கான வைஜயந்தியின் அதிரடி ஆட்ட பாட்டம்!

    [url]https://www.youtube.com/watch?v=zkHlWFI8sac

    இளமை கொலுவிருக்கும் இனிமை குவிந்திருக்கும் குமரிகளுடன் குளித்துக் கும்மாளமிடும் மிஸ்டர் ஜமீன்தார் ஜெமினி !!



    நீச்சல் குளமென்ன ....ஆற்றோட்டத்திலும் பத்மினி குளிப்பதால் சுடும் தண்ணீரும் ஜெமினிக்குப் பன்னீரே! தண்ணீர் சுடுவதென்ன?

    [url]https://www.youtube.com/watch?v=EPWTU1WuC10

    கொடுத்து வைத்த காதல் மன்னர் ரோஜர் மூரின் James Bond பனிச்சறுக்கு ரேஞ்சுக்கு வைஜயந்தியுடன் தேன் நிலவு காஷ்மீர் ஏரியில் நீர்ச் சறுக்கு விளையாட்டில் நிபுணராக சாகசம் செய்கிறாரே!

    https://www.youtube.com/watch?v=WekowqRIO1E

    Never Before Never Again feat by Esther (the one and the only) Williams!

    போனஸ்: மாற்றார் தோட்ட நீச்சல் நடன மதுர கீதம்
    எஸ்தர் வில்லியம்ஸ் ....இப்பூவுலகின் ஈடுஇணையற்ற நீச்சல் சாதனை நாயகி.....

    https://www.youtube.com/watch?v=rd1-dysPP9g

  5. Likes Russellmai liked this post
  6. #873
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஆசை ஆசை ! ஆசை ஆசை !!

    ஆசையே துன்பத்தின் ஆணிவேர் என்பது புத்தரின் அருளோசை !
    ஆடையில்லாதவன் அரை மனிதன் அதுபோலவே ஆசையில்லாதவர் அரைகுறை மனிதரே !!


    ஆக்கபூர்வமான ஆசைகளே நாட்டின் வீட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளம்!
    பற்றற்றவரால் இப்பூமிக்கு எந்த பிரயோஜனமுமில்லை ஆசைகளே முன்னேற்றத்தின் படிக்கட்டுக்கள் !!
    பேராசையே பெருநஷ்டம்!!

    தேடலே ஆசையின் விளைவு ! தேடல்களால்தான் நடிகர்திலகமும் காதல் மன்னரும் மக்கள்திலகமும் புகழுச்சியில் கோலோச்சி நமக்கெல்லாம் வழிகாட்டிகளாக நிலைக்க முடிந்தது ! காடு வாவா என்றாலும் ஆசை நம்மை நீங்குவதில்லை!! பிறப்பு முதல் இறப்பு வரை ரகம்ரகமாக எத்தனை ஆசைகள் நமது கனவுகளில் விதைக்கப்பட்ட கவிதைகளாக உலா வருகின்றன !!

    பஞ்சுமிட்டாய்க்கு ஆசைப்படும் பிஞ்சுப் பருவம் ! கண்டதெல்லாம் கடலையான விடலைப் பருவம்!காதலை ஆராதிக்கும் வாலிபப் பருவம் !! குடும்பத்தை நேசிக்கும் சுமைதாங்கி வாழ்க்கைப் பருவம்! மனைவியை காதலிக்கும் வயோதிகப் பருவம்! கடவுளின் காலடி தேடும் உயிருதிர் பருவம்!!

    மண்ணில் வந்து மண்ணில் வாழ்ந்து மண்ணையே சேரும்வரை ஆசைகள்தான் எப்பேர்பட்ட வண்ணக்கலவைகளான எண்ணச் சிதறல்கள்!!

    காதல் மன்னரின் ஆசைப் பாடல்கள் !

    ஆசையினாலே மனம்! ...அஞ்சுது கெஞ்சுது தினம்



    ஆசைப்பட்டது நானல்ல ...

    Last edited by sivajisenthil; 27th August 2015 at 06:36 PM.

  7. Likes Russellmai, chinnakkannan liked this post
  8. #874
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    காதல் மன்னர் ஜெமினி கணேசனின் தமிழ்த் திரைப் பங்களிப்பு சமகாலத்தியவரான நடிப்பின் முதல் மரியாதைப் பெருமைக்குரிய நடிகர்திலகம் மற்றும் பொழுதுபோக்குத் திரையம்சங்களின் சக்கரவர்த்தியாகவும் உலகுக்கே வழிகாட்டிய அரசியல் விற்பன்னராகவும் வெற்றிகரமாக வலம்வந்த மக்கள்திலகம் ஆகியோரின் பங்களிப்பு சாதனைகளுக்குக் குறைந்ததல்ல ! திரையில் கண்ணியமான காதலை அவர் உருவகப்படுத்திய விதமே எக்காலத்திலும் யாராலும் நெருங்கமுடியாத காதல் சக்கரவர்த்தியாக இனிமையான பாடல் காட்சியமைப்புக்களில் இதமான காதலுணர்வுகளை ரசிக்கும் வண்ணம் உயிரூட்டிய காதல் மன்னராகவும் ரசிகர் வட்டமில்லாத போதும் அரசியல் பின்புலத்திற்கு ஆசைப்படாத போதும் அவர்களுக்கிணை யான மூவேந்தர்களில் ஒருவராக ஆலவட்டம் சூட்டியது!!

    இயற்கையிலேயே நல்ல உடலமைப்பும் முகப் பொலிவும் வியப்பளிக்கும் சிகை நேர்த்தியும் படிப்பும் பதவியும் தந்த அறிவுத் தோற்றமும் மலர்ந்த வதனத்தில் ஒரு வகையான குறும்பு மின்னலும் இயல்பான நகைச்சுவையுணர்வும் நாடகபாணி தவிர்த்த வாழ்வியல் குணாதிசய வெளிப்பாடுகளும் ஜெமினி கணேசன்
    அவர்களை தனித்தன்மை வாய்ந்தவராக அடையாள வித்தியாசம் காட்டிற்று!

    பழகுவதற்கு இனியவராக ஈகோ அற்றவராக சக நாயகர்களுடன் இணை ந்து நடித்து படங்களுக்குப் பெருமை சேர்த்திட்ட பண்பாளர்! ஸ்ரீதர், பாலசந்தர் போன்ற புதுமை இயக்குனர்களின் முதல் தேர்வாக விளங்கியவர் Directors Delight என்று விரும்பப் பட்டவர்!

    I feel previleged to write elaborately on his filmography, his acting calibre, his acting comparisons with the global galaxy of actors of his similar calibre like Gregory Peck, Omar Shariff, Christopher Plummer, Rock Hudson, Rex Harrison, James Cagney, Richard Burton...
    in the segments yet to come!!

    Senthil
    Last edited by sivajisenthil; 28th August 2015 at 08:40 AM.

  9. Likes Russellmai liked this post
  10. #875
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ഓണാസംസകൾ
    Hearty ONAM Greetings to one and all!!

    அனைத்து திரி நண்பர்களுக்கும் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துக்கள்!


  11. Likes Russellmai, chinnakkannan liked this post
  12. #876
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Gemini Ganesan & Padmini dancing in the Malayalam movie KUMAARASAMBHAVAM (1969):


  13. Thanks eehaiupehazij thanked for this post
  14. #877
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் சி.செ ராகதேவன் ஓணம் நல் வாழ்த்துக்கள்..

    ராகினி ஜெமினியாம்ல..ஏழைப் பங்காளன்ல..


  15. Thanks raagadevan, eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  16. #878
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler / Monotony breaker!

    GG starrer வாழ்க்கை வாழ்வதற்கே திரைப்படத்திலிருந்து தெய்வக் குழந்தைகளின் பாடல் ...கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தே!



    Same repeated with grown ups GG and Saroja!

    Last edited by sivajisenthil; 28th August 2015 at 08:51 PM.

  17. Likes Russellmai liked this post
  18. #879
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    காதல் மன்னர் ரசித்து மகிழ்ந்த மொட்டை மாடி மதுர கீதங்கள் !!

    காற்றோட்டமான மொட்டை மாடிகள் இரவு நேரங்களிலும் மாலைப் பொழுதுகளிலும் மேகங்கள் நட்சத்திரங்கள் குளிர் நிலவு தென்றல் காற்று பின்னணியில் ரம்மியமான சூழலை உருவாக்கி மனதின் ரணங்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது!!

    இப்பின்னணியில் காதல்நாயகியரின் மனதை வருடும் மயிலிறகான பாடல்களை ரசித்து மகிழ்ந்திடும் காதல் மன்னர் மச்சக்காரரே !!


    மொட்டை மாடி 1 : மாலைப் பொழுதின் மயக்கத்தில்....



    2 : கண்களை அயர வைக்கும் கான இரவு!!



    மொட்டைமாடி 3:

    தனிமையிலே இனிமை காண முடியுமா தங்கச்சிலை அருகிலிருக்கையில் மொட்டைமாடியும் ஒன்பதாம் மேக அடுக்கே !

    Last edited by sivajisenthil; 29th August 2015 at 12:43 AM.

  19. Likes chinnakkannan liked this post
  20. #880
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பிற்கினிய மதிப்புக்குரிய மதுரகான திரி நண்பர்கள் வாசு /மது / ராகவேந்தர் / சின்னக்கண்ணன் / ரவி / ராஜ்ராஜ் / ராகதேவன் / கல்நாயக் / ராஜேஷ் மற்றும்
    நெல்லை கோபு ,mgr திரியிலிருந்து எஸ்வீ / செல்வகுமார்/கலைவேந்தன் /வரதகுமார்/ சைலேஷ் / ரவிசந்திரன் / யுகேஷ் /முத்தையன் அம்மு./சுகாராம்....
    நடிகர்திலகம் திரியின் நண்பர்கள் முரளி / ரவிகிரண்/ கோபால் / ஜோ /சுப்பிரமணியம் ராமஜெயம்/ j ராதாக்ருஷ்ணன்/சிவா / ஆதிராம் / திருச்சி ராம் / s. வாசுதேவன்/sss/ vcs / ஹரீஷ்/ராகுல் /பட்டாக்கத்தியர் / அரிமாசெந்தில்/ சுந்தராஜன்/ பாஸ்கர் /ஆதவன்ரவி/ சார்ஸ்! அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்......

    திரிப் பதிவுகளுக்குத் தற்காலிக இடைவெளி தரவேண்டிய சூழல்! எனது மொத்த லாபமே வேற்றுமையிலும் ஒற்றுமையாக மலர்ந்திட்ட இனிய நண்பர்களான நீங்கள் அனைவருமே!!

    வருகிற செப்டம்பர் 30 எனது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பொறியியல் பேராசிரியப் பணியிலிருந்து 60 வயது முதிர்வில் 37 வருடங்கள்.கல்விப்பணி...மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள், முன்னூறுக்கும் அதிகமான ஆராய்ச்சி கட்டுரைகள், இருபத்தைந்து முதுநிலை/ பதினைந்து முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டியாக....பசுமையான நினைவுகளுடன் மனநிறைவுடன் ஓய்வு பெறுகிறேன்!!
    பென்ஷன் பார்மாலிடிஸ் ...அடுத்த கௌரவ பேராசிரியர் பணியில் சேர்வு....கொஞ்சம் கான்சென்ட்ரேஷன் தேவைப்படுவதால் சிறு இடைவெளி!!


    திரைப்படங்கள் மேலும் நம்மை மகிழ்வித்த நடிகர்திலகம் மக்கள் திலகம் காதல் மன்னர் .....அனைவர் மீதும் நன்றிகலந்த மரியாதை நிமித்தம் நண்பர்களான உங்களுடன் இணை ந்து மகிழ்ந்த நினைவுகளுடன்....விடை பெறுகிறேன்!!

    மீண்டும் வருவேன் சில கடமைகள் நிறைவு பெற்ற பின்னர் ...நிச்சயமாக அன்பு நெஞ்சங்களே!!

    என்றும் உங்கள் நண்பன் செந்தில்

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •