Page 71 of 277 FirstFirst ... 2161697071727381121171 ... LastLast
Results 701 to 710 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #701
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    தம்பி திருடனாகி விட்டான் என்று தெரிந்து மனம் புழுங்கி ஜெமினி தன்னுடைய சைக்கிள் ரிக்ஷாவில் அவன் 'எதிர்கால' நிலை குறித்து புலம்பி பாடும் பாடல். காதல் மன்னர் ரிக்ஷா ஓட்டுவதிலும் மன்னர்தான். வேஷப் பொருத்தமும் களை கட்டுகிறது. (குறிப்பாக மடித்து விடப்பட்ட ரிக்ஷாவலாக்கள் பேன்ட்)

    ஓடத்தைப் பார்த்த பின்பும்
    வெள்ளத்தில் நீந்திச் சென்றால்
    சொந்தத்தில் அறிவேது

    என்ற தத்துவ விளக்கம்.

    தம்பி மீதான பாசத்தையும், அவன் கெட்டு குட்டிச் சுவராகி விட்டானே என்ற வருத்தத்தையும், அவரவர்கள் பலனை அவரவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்ற விரக்தி வேதனையையும் நன்றாக காட்டி இப்பாடலில் வாழ்ந்திருப்பார் ரிக்ஷாக்கார ஜெமினி.
    நன்றிகள் வாசுதேவன் சார்

    காதல் மன்னரின் ரிகஷாக்காரன் நடிப்பை நன்கு சிலாகித்து பாடல் காட்சியில் ஜெமினியின் நடிப்பை நீங்கள் பாராட்டியிருக்கும் கோணம்எழுத்தார்வலர்களுக்கு
    மிகச் சிறந்த வழிகாட்டியே !

    மனதில் பதிந்ததை எழுத்துக்களில் சுவை குன்றாமல் விவரிப்பது God's Gift Medal! அதனால்தான் உன்னத இடத்தில் எங்களைப் போன்ற பதிவுப் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் role model!!
    அன்புடன் செந்தில்
    Last edited by sivajisenthil; 27th May 2015 at 11:00 PM.

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #702
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler Nostalgia on GG : Mettukkudi with Karthik

    Even at this ripe age GG did not lose the touch of humour and his penchant for comedy !

    மன்னவனே அழலாமா..ரிப்பீட்டு!







    Last edited by sivajisenthil; 27th May 2015 at 10:14 PM.

  5. Likes rajeshkrv liked this post
  6. #703
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Emotional quotient in Rudraveena starring GG alongside Chiranjeevi in telugu! In tamil Unnal Mudiyum Thambi with Kamal!

    Chiranjeevi and kamal enact their roles well fashioned to suit the trend of current generations but one gets astonished by the meticulous way GG outperforms them and steals the show, establishing his acting prowess in the minds of viewers!!




    Last edited by sivajisenthil; 27th May 2015 at 10:52 PM.

  7. Likes rajeshkrv liked this post
  8. #704
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler : Aadhiparaasakthi starring GG


  9. #705
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    செந்தில் சார்,



    வஞ்சிக் கோட்டை திவானின் மகன் எதிரிகளால் வஞ்சிக்கப்பட்டு, கொடுஞ்சிறையில் வெந்து தணிந்து, வேதனை அனுபவிக்க, பக்கத்து சிறையில் சொந்தத் தாயும் அடைபட்டுக் கிடக்க, தாய் அறையின் கல்லுடைத்து தப்பி வந்து மகனிடம் வந்து சேர, அதுவரை அநாதை என்று தன்னை எண்ணிக் கொண்டிருந்த மகன் தாய் தன் மகனை அடையாளம் கண்டு வரலாறு கூறி அவன் அநாதை இல்லை என்று ஆறுதல் அளித்து அள்ளி மகிழும் போது ஆனந்தம் பொங்கி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறான். சிறையிலிருந்து தப்பி வெளியேற சிறைக் கற்களை தாயுடன் சேர்ந்து பெயர்க்கிறான். தப்ப வழி கிடைக்கும் சமயத்தில் தாய் தன் உயரை விடுகிறாள். துவல்கிறான்... அழுகிறான்... புரள்கிறான்... புலம்புகிறான்.... துடிக்கிறான் துன்பத்திலேயே உழன்ற மகன்.

    அற்ப நேரம் அன்னையுடனான அன்னியோன்யத்தை எண்ணி அழுகிறான். கொள்ளி போடவும் கொடுஞ்சிறையில் வழி ஏதுமில்லை.

    இருந்தால் என்ன?

    அன்னையைப் புதைக்க அங்கேயே சவக்குழி தோண்டுகிறான். அதுவரை இருந்த பொறுமை அறவே அழிந்து பொங்கி எழுகிறான். சிறைக்கு வரும் காவலாளியைத் தாக்கி, மற்றவர்களையும் தாக்கி தான் குடும்பத்தை நாசம் செய்த வஞ்சகனை பழி வாங்கத் தப்புகிறான் தண்ணீரில் குதித்து.

    மகனாக ஜெமினி. தாயாக கண்ணாம்பா. உணர்ச்சிமிகு கட்டங்கள். தாயும் மகனும் சிறையில் சந்திக்கும் காட்சி உணர்சிக் குவியல்களின் சங்கமம்.

    தாடியும் மீசையுமாய் பொலிவிழந்த முகத்துடன் நலிந்த, உருக்குலைந்த தோற்றத்துடன் நடிப்பில் உருக்குலையாத ஜெமினி.

    சோகங்கள் கவ்வ தாயைப் பார்த்ததும் தாங்க முடியாத மகிழ்ச்சியை காட்டுவதிலாகட்டும்...தாய் தான் பறி கொடுத்த தங்கையை பற்றிக் கேட்டதும் துவண்டு 'அவளை எமனிடம் பறி கொடுத்து விட்டேனம்மா' என்று கதறுவதாகட்டும்... அனாதையாகக் காரணமாயிருந்த அப்பாவின் மேல் கொள்ளும் கோபமாகட்டும்... அவர் நல்லவர் என்று சொல்லி அன்னை நம்பிக்கையூட்ட, பின் அவர் மேல் கொள்ளும் தாபமாகட்டும்... அன்னை தன் மடியில் உயிர்விடும்போது நிலை குலைந்து சிலை போல அசைவற்றுப் போவதாகட்டும்... அவளின் துயரங்களை நினைத்து துன்பப் படுவதாகட்டும்... சிலிர்த்தெழுந்து சிறு கடப்பாரையில் மாதாவின் அடக்கத்திற்கு மண் தோண்டுவதாகட்டும்... உள்ளே கிடந்த வீரம் வீறு கொண்டு எழுந்து அங்கு வரும் வீரர்களை உருண்டு புரண்டு சாயப்பதிலாகட்டும்...

    அம்மா அம்மா என்றே ஆயிரம் ஆண்டுகள்
    அழுது புரண்டாலும்
    மகனே!
    அன்னை வருவாளோ!
    உனக்கொரு ஆறுதல் சொல்வாளோ!
    முன்னை தவமிருந்து
    உன்னை முன்னூறு நாள் சுமந்து
    பொன்னைப் போலே உன்னை
    போற்றி வளர்த்திட்ட
    அன்னை வருவாளோ!
    கொள்ளி இடவும் வகையில்லை
    என்றே நீ கொடுஞ்சிறையில்
    கலக்கம் கொள்ளாதே!
    அள்ளி இட அரிசி இல்லையென்றால் என்ன?
    அன்பை சொரிவாய் மகனே!
    கண்ணீராலே நீராட்டு
    அன்னை தன்னை
    மண் மேலே தாலாட்டு

    என்று 'இசைச் சித்தர்' தனக்கே உரிய பாணியில் பின்னணியில் உருகிப் பாட,

    ஜெமினி இந்தக் காட்சிகளில் நம் மனதை தன் ஆழமான அழும் நடிப்பால் தோண்டி விடுவார். அந்த இயல்பான சோகம் அதுவும் தாய் இறந்தவுடன் அவர் காட்டும் அவர் மேல் கருணை பிறக்க வைக்கும் முகபாவங்கள் முத்திரைதான். அவருடன் சேர்ந்து நம் கண்களும் கலங்கத்தான் செய்யும்.

    'வஞ்சிக் கோட்டை வாலிபனி'ல் என்னை மிக மிக பாதித்த காட்சி இது.
    Last edited by vasudevan31355; 30th May 2015 at 10:12 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  11. #706
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்
    தங்கள் வர்ணனை வஞ்சிக்கோட்டை வாலிபனின் உணர்ச்சிக்குவியலான இக்காட்சியை ஜெமினி கணேசனின் திரை வரலாற்றில் கல்வெட்டாக மாற்றி விட்டதே !! நன்றிகள் !!

    செந்தில்

  12. #707
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சி.செ. வாசு.. ஒரு சின்ன கிஃப்ட்.. (ஏற்கெனவே சி.செ எழுதியிருப்பார்னு நினைக்கேன்)

    தங்க நிலவே நீ இல்லாமல் தனிமைகாண முடியுமா.. (படக்குறிப்பு வரைக!

    பாரதி ஆனாலும் அநியாயத்துக்குஒல்லி நிலவா இருக்காக.. நெக்லஸ், தோடுகள்ளாம் பார்த்தா.. நல்ல டிசைனா இருக்கே.. அதுவும் கடைசி காட்சியில் காதுகளில் தோடு.. குட்டி தோசைக்கல் வித் டிசைனாட்டம் இருக்கே..!




    உயர்ந்த தலைவன் மனைவி என்று உலகம் சொல்லும் வேளையில்
    உள்ளம் என்ற வெள்ளைக் காட்டில் இன்பம்காண முடியுமா.. ம்ம்

    ஆடை தொட்டு இழுக்கும் போது
    போதும் போதும் என்பதில்
    ஆசை இல்லை என்பதாக
    அர்த்தம் காண முடியுமா

    மூடி வைத்த மனதினுள்ளே
    மோதும் இன்ப நினைவிலே
    வேண்டுமென்ற அர்த்தமின்றி
    வேறு காண முடியுமா ?

    கேள்விக்குக் கேள்வியே பதில்..ஹைபாட் நன்னா இருக்கே..


    இந்த வரில்லயும் சென்சார் செஞ்சுட்டாஙக்ளாம்..அஃதாவது மேற்கண்ட வரி சென்சாருக்கு அப்புறமாம்..பின்
    சென்சாருக்கு முன் என்னவரியாம்..


    "மூடி வைத்த அறையினுள்ளே
    போதும் என்று சொல்வதில்
    வேண்டும் என்ற அர்த்தம் இன்றி
    வேறு காண முடியுமா"

    ம்ம் யாராக்கும் கவிஞர்.. வாலிப வாலி தான்..

    *

    கொடைககானல் கோகர்ஸ் வாக் என நினைக்கிறேன்..லொகேஷன் சரியா

    சினேகிதி படமாம்..யாருக்கு சினேகிதி பாரதி..
    Last edited by chinnakkannan; 30th May 2015 at 07:16 PM.

  13. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  14. #708
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சிநேகிதி திரைப்படத்தில் பாரதி தனது சொந்தக்குரலில் பாடியிருப்பார் டி எம் எஸ் ரொம்பவே அட்ஜஸ்ட் பண்ணி ஜெமினிக்கான தனது பிரத்தியேக ஜலதோஷ
    குரலில் பாடியிருப்பார் ஜெமினி இந்தப்படத்திலிருந்துதான் அநேகமாக தனது இயற்கையான அழகான சுருள்முடி துறந்து விக் வைக்க ஆரம்பித்தார்.
    அப்புறம் ...நான் அம்பேல்!!
    வாசு என்னும் எழுத்துக்கலை வித்தகரே இதுபற்றி விலாவாரியாக விவரிக்க உகந்த வார்த்தை சுந்தரர் ..சரிதானே சி க!?
    Last edited by sivajisenthil; 30th May 2015 at 10:34 PM.

  15. Likes chinnakkannan liked this post
  16. #709
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு என்னும் எழுத்துக்கலை வித்தகரே இதுபற்றி விலாவாரியாக விவரிக்க உகந்த வார்த்தை சுந்தரர்// சரியாகச் சொன்னீர் மன்னா.. ஆனால் பாணப்த்திரர் மனம் வைக்க வேண்டுமெ

  17. Likes eehaiupehazij liked this post
  18. #710
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler : Four Wheeler Savithiri chased and captured by Two Wheeler GG!!


  19. Likes Russellmai liked this post

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •