Results 1 to 10 of 16

Thread: 12 Runs in 18 Balls

Threaded View

  1. #1
    Senior Member Veteran Hubber Sanguine Sridhar's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    3,220
    Post Thanks / Like

    12 Runs in 18 Balls

    12 பந்துகளில் 18 ரன்கள் இது தான் என்னுடைய இப்போதைய இலக்கு. Lords மைதானம் அதிர்ந்து கொண்டிருந்தது. இங்கிலாந்து அணியுடன் மோதி கொண்டிருந்தோம். ஹோம் ground மற்றும் சப்போர்ட் இருப்பதால் எங்களுக்கு வாய்ப்பு கம்மி தான் என்று வர்ணனையாளர்கள் போட்டி ஆரம்பிக்கும் முன்னர் பிதற்றினர். அதை பொய்யாக்க இன்னும் 18 ரன்கள் தான் தேவை பட்டது.

    20/20 உலக கோப்பை இறுதி போட்டியில் விளையாடுவேன் என்று நினைத்து பார்க்கவில்லை. இதற்கு முன் நடந்த league போட்டிகளில் எனக்கு வாய்பளிக்கவில்லை. காரணங்கள்
    1. புதுசு, இதற்கு முன் ஆடியதில்லை. Selection Board தலைவர் தமிழர் என்பதால் எனக்கு வாய்பளிக்க பட்டதாக அணியில் என் காதுபடவே பேசிகொண்டனர். அனால் எனது Domestic career-ஐ யாரும் பார்த்ததாக தெரியவில்லை.
    2. எனக்கு ஹிந்தி தெரியாது. அதனால் என்னை ஒதுக்கியே வைத்தார்கள். என் வாழ்கையின் கடினமான தருணங்கள்.

    ஒரு வழியாக என் அணி தலைவரிடம் நன்றாக பேசி அவரை நட்பாக்கி கொண்டேன். அதற்கு ஏத்தாற்போல் செமி- பைனல்ஸ்-யில் அணியின் வேக பந்து வீச்சாளர் ஒருவருக்கு அடிபட்டுவிட்டது. நான் ஒரு ஆல் ரௌண்டர் [ மித வேகம் ] என்பதால் எனக்கு விளையாட வாய்பளிதார்கள்.

    இது என் நாள் போல! பௌலிங்-கில் 4 ஓவர் போட்டு வெறும் 18 ரன்களை கொடுத்து 4 விகேட்களை எடுத்தேன். பேட்டிங்கில் கூட என் நாளாக இதுவரை இருந்துள்ளது. முதல் 15 ரன்கள் எடுபதற்குள் 4 விக்கெட்கள் போய்விட்டது. 166 இலக்கு என்பதால் இந்தியா தோர்த்துவிடும் என்றே எல்லாரும் நினைத்தார்கள்.

    என் டீம் கேப்டன் சிறந்த வீரர். ஆரம்பகாலத்தில் அதிரடி ஆட்டம் ஆடினாலும் இப்பொழுதெல்லாம் நிதானமாக ஆடி டீம்-ஐ ஜெய்க்க வைக்கிறார். அவரை சில பேர் மூளைகாரர் என்றும் சில பேர் அதிர்ஷ்டகார மரவெட்டி என்றும் அழைப்பதுண்டு.

    இப்பொழுதும் அப்படி தான், அவரும் பஞ்சாப் ஸ்டேட் அதிரடி ஆட்டகாரருடன் ஜோடி சேர்ந்து 70 ரன் சேர்த்திருந்தனர் . பஞ்சாப் ஸ்டேட் அதிரடி ஆட்டக்காரர் ஹோட்டல், டிரெஸ்ஸிங் ரூமில் பயங்கரமாக உதார் விடுவார். ஆனால் நடிகைகள் மற்றும் ஸ்பின் பௌலிங் என்றால் மட்டும் ரொம்பவே பம்முவார். அது போல் பம்மி பம்மி ஒரு மூன்றாம் தர ஸ்பின் பந்து வீச்சாளர் வீசிய பந்தை ரொம்ப கேவலமாக தூக்கி அடித்து அவுட் ஆகி வெளியேறினார்.

    என் முறை... எனது எதிர்காலம். கேலரியை பார்த்தேன். என் தேவதை உக்காந்திருந்தாள், பிரியா! எனக்கு எல்லாமே இவள் தான். இவள் என் காதலி, காதலி மட்டும் அல்ல என் தேவதை . 3 வருடமாக காதல். இவள் என் வாழ்கையில் வந்த பிறகு தான் நான் வாழ்கையில் முன்னேற ஆரம்பித்தேன். தெருவில் விளையாடி கொண்டிருந்த நான் இப்பொழது என் தேசத்திற்காக! நான் சோர்ந்து போன பல சமயத்தில் என்னை தூக்கி நிறுத்திய ஆட்டோகிராப் சிநேகா. போன வாரம் தான் என் டீமிற்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

    கேப்டன் எனக்கு தைரியம் கூறி, ஒவ்வொரு ரன்-ஆக எடுக்க சொன்னார். சந்தர்பம் பார்த்து அடிக்க சொன்னார். 96 ரன்கள் 60 பந்துகளில். நானும் அவரும் சேர்ந்து ஒரு வழியாக 13 பந்துகளில் 18 ரன்கள் என்ற இலக்கை அடைந்தோம். ஒவ்வொரு ரன் எடுத்த பிறகும் நான் ப்ரியாவை பார்க்க தவறவில்லை. அந்த ஓவர்-ரின் கடைசி பந்தில் கேப்டன் பந்தை ஓங்கி அடிக்க அனால் பந்து எம்பி மிட்-ஆப் இல் இருந்த பீல்டர் கையில் சென்றது.

    ஆக 12 பந்துகளில் 18 ரன்கள்... 4 விக்கெட்கள்.

    உள்ளே வந்தது பஞ்சாப் சுழல் பந்து வீச்சாளர். இவரும் பஞ்சாப் ஸ்டேட் அதிரடி காரர் போல் உதார் விடுபவர் தான். ஆனால் இப்பொழுது தான் மிகவும் பக்குவப்பட்டு விட்டதாக அவரே கூறிகொள்கிறார். உள்ளே வந்தவர் என்னிடம் எதுவும் பேசாமல் நான்-ஸ்ட்ரிகேர் இடத்தில் நின்றார். சீனியர் அப்படி தான் நடந்து கொள்வார் என்று எண்ணி அவரிடம் சென்று, நான் பார்த்துகொள்கிறேன் என்று கூறினேன்.

    "அப்போ நான் போயிடவா?" என்றார், சிரிக்காமல்

    நானும் பந்தை எதிர் நோக்க சென்றேன். பந்து வீச்சாளரை பார்த்தவுடன் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. பந்தை வீசாமல், போட்டு கொடுப்பவர். சரி, முடிந்த அளவு ரன்களை எடுத்துவிடவேண்டும்.

    டீப் கவர் காத்து வாங்கிகொண்டிருந்தது.

    முதல் பந்து ஒரு பூல் டாஸ், இறங்கி ஓங்கி டீப் கவர் ஏரியாவில் அடித்தேன், 4!

    11 பந்துகளில் 14 ரன்கள். பிரியா சிரித்து கொன்டிருந்தாள்

    இரண்டாவது பந்து ஒரு ஷார்ட் பிட்ச் பந்து, பேட்-க்கு அழகாக வந்தது. வைடு லாங் ஆப்-இல் தூக்கி அடித்தேன், அதுவும் 4!

    10 பந்துகளில் 10 ரன்கள். பிரியா சந்தோஷத்தில் குதித்து கொன்டிருந்தாள்.
    என்னிடம் இந்திய டீம்க்கு ஆடுவதற்கு வாய்பளித்த போது "சிவா! நீ நல்லா விளையாடனும், கோடி கோடியா சம்பாதிக்கணும், ஒரு தீவை வாங்கணும் அதுல நம்ம ரெண்டு பேரு மட்டும் இருக்கனும்" என்று வைரமுத்து சினிமா பாடல் வரி போல சொல்வாள். கவலைபடாதே பிரியா, இன்னும் 10 ரன்கள் தான்!

    மூன்றாவது பந்து, லெக் சைடு-இல் காலுக்கு அடியில் எறிந்தான்! நான் இதை எதிர்பார்க்கவில்லை, நாய்.

    பைன் லெக்-இல் தள்ளி விட்டு ஒரு ரன் எடுத்தேன்.

    9 பந்துகளில் 9 ரன்கள். சிங் என் முகத்தை கூட பார்க்கவில்லை. என்ன பன்ன போறான்? நான் நான்-ஸ்ட்ரிகர் இடத்தில் இருந்து அவனிடம் ஓடினேன். அவன் நின்ற இடத்தில் இருந்து என்னை சைகை மூலம் போக சொன்னான். எனக்கு மிகுந்த அவமானமாக போனது.

    நான்காவது பந்து மிக மிக சாதரன வேகத்திலான ஒரு ஷார்ட் பிட்ச் பந்து, அதை ஒரு L.K.G மாணவன். தனது பிளாஸ்டிக் பேட்-ஆல் பந்தை தேடி தேடி அடிப்பது போல crease-ஐ விட்டு வெளியே வந்து, பந்தையும் அடிக்காமல் கீப்பர்-இடம் பந்தை கொடுத்து, ஸ்டெம்ப் ஆகி, வெக்கம் இல்லாமல் வெளியேறினான்.

    அடுத்து வந்தவன், கேரளா ஊர்காரன். நானும் பந்து போடுவேன், என்று கூறி கொண்டு டீம்-இல் இருக்கிறான். போன வருடம், சிங் கைய்யால் அப்பு வாங்கியவன். இவனுக்கு தமிழ் தெரியும் என்பதால் இவனை வைத்துக்கொண்டு ஆட்டத்தை முடிக்க வேண்டியதுதான் என்று நினைத்து கொண்டேன்.

    "டேய் மச்சி! கலக்குற!!" என்று பல்லை காட்டி கொண்டு வந்தான்.

    "தயவு செஞ்சு மீதி இருக்குற 2 பந்தை defend பன்னிடு, கடைசி ஓவர்-ல பாத்துக்குறேன்"

    நான் சொல்வதை காதில் வாங்கின மாதரியே தெரியவில்லை,

    "டேய்! உன் ஆளு உன்னையே பாத்துட்டு இருக்கா! கேமரா அவளையே தான் போகஸ் பண்ணிற்றுக்கு"

    நான் முறைத்தேன். என்னிடம் இன்னைக்கு அப்பு வாங்க போறான்.

    ஐந்தாவது பந்தை எதிர் நோக்க சென்றான். ஏன் இப்படி பண்றாங்க? புதுசுனா மதிக்கவே மாட்டாங்களா?

    அதுவும் ஒரு மட்டமான புல் டாஸ், அதை அவன் மெதுவாக தூக்கி அடிக்க, ஷாட் கவரில் நின்ற ஒருவன் பிடித்தான். என்னால் நம்ப முடியவில்லை. பிரியா முகம் சுருங்கி போய்விட்டது.

    அடுத்தவன் பீகார் காரன். இவனுக்கு ஆங்கிலம் மற்றும் கண்டிப்பாக தமிழ் தெரியாது.
    வந்தவன் நேராக கார்ட் எடுத்தான், இவனும் என்னிடம் பேச வில்லை. நானே அவனிடம் சென்றேன்,

    "Bol" என்றான்.

    எனக்கு தெரிந்த ஹிந்தி, ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு தயவு செய்து ஒழுங்காக இந்த பந்தை விளையாடு என்று கூறினேன். என்ன புரிந்ததோ? சரி என்று தலையாட்டினான்.

    "சுக்ரியா!" என்றேன்.

    ஆனால் எனக்கு நம்பிக்கையே இல்லை. அதற்கு ஏற்றாற்போல் மிக மிக சுலபமாக அல்வா போல வந்த பந்தை மனசாட்சியே இல்லாமல் backward பாயிண்ட்-இல் நின்ற fielder இடம் தூக்கி கொடுத்தான். 3 பந்துகளில் 3 விக்கெட்டுகள்! இந்த பரதேசிகேல்லாம் hat-trick ! இங்கிலாந்து அணி வீரர்கள் குதித்து கொண்டிருந்தார்கள். எது நடக்க கூடாதோ, அது நன்றாகவே நடந்தது!

    9 ரன்கள் 6 பந்துகளில், 1 விக்கெட் கையில்.

    ஏணி போல் இருக்கும் உயரமான டெல்லி காரன் என்னிடம் வந்தான். பரவாயில்லை!
    என்னிடம் ஹிந்தியில் சகஜமாக பேசினான் [எனக்கு ஹிந்தி தெரியாது என்று தெரிந்திருந்தும்!]. நோ பீயர்! என்று மட்டும் கடைசியாக சொல்லி சென்றான். இனிமேல் மத்தவனை நம்ப கூடாது.

    பிரியா முகத்தை பார்த்தேன், என் மனதுக்குள் சார்ஜ் ஏறியது.

    கடைசி ஓவர்-இன் முதல் பந்து, குட் லென்த் பால்! அதை மடக்கி டீப் மிட் விக்கேடிற்கு அடித்தேன். கண்டிப்பாக 4 போகாது. டெல்லி காரன் நன்றாக ஓடினான், 3 ரன்கள் எடுத்தேன். ப்ரியாவை பார்த்தேன் யாரிடமோ பேசிகொண்டிருந்தாள், பிறகு பவுண்டரி பக்கத்தில் வந்து நின்றாள். நல்லது தான், வின்னிங் ரன்களை எடுத்து ஓடி போய் அவளை அணைக்க வேண்டும். இப்பொழுது நான் மட்டுமே 46 ரன்களை எடுத்திருந்தேன்.

    5 பந்துகளில் 6 ரன்கள். அடுத்த வந்த பந்தும் அதே போல் ஒரு நல்ல லைன் அண்ட் லென்த் பந்து தான். அனால் நான் நகர்ந்து நேராக அடித்தேன், பந்து, வினாடி நேரத்தில் பவுண்டரி நோக்கி சீறி பாய்ந்தது. 4 ரன்கள்! நான் ஐம்பது அடித்திருந்தேன். டீம் திரும்பவும் உலக கோப்பை வெல்ல வெறும் 2 ரன்கள் தான் தேவை பட்டது. எங்கே பிரியா? என் மனசெல்லாம் சந்தோஷத்தில் அவளை தேடினேன்.

    என் நெஞ்சில் இடி இறங்கியது போல் இருந்தது. என் தேவதை சீயர் லேடீஸ்களுடன் ஆடிகொன்டிருந்தாள். ஆடைகள் எல்லாம் கழட்டி போட்டுவிட்டு,
    வெறும் உள்ளாடை மட்டும் போட்டு கொண்டு மிகவும் கேவலமாக. சீயர் லேடீஸ்கள் கூட நன்றாக உடை அணிதிருந்தார்கள். கேமரா அவளையே காட்டி கொண்டிருந்தது. மக்கள் எல்லோரும் அவளையே வெறித்து, ரசித்து பார்த்துகொண்டிருந்தார்கள். என் அணி வீரர்களே அவளை பார்த்துவிட்டு என்னை பார்த்து, ஏதோ பேசி சிரித்து கொண்டார்கள். எனக்கு மயக்கம் வந்தது.

    அடுத்த பந்தை வீச பௌலர் சென்றான். என்னால் விளையாட முடியவில்லை. ஏன் இப்படி செய்தாள், என்னதான் உற்சாக மிகுதியாக இருந்தாலும் இப்படியா? என் பெற்றோர்கள் வேறு இதை பார்த்திருப்பார்கள். போன மாதம் தான் எங்கள் வீட்டு மகாலக்ஷ்மி என்று குங்குமம் இட்டிருந்தாள் என் அம்மா. கண்ணீர் முட்டி கொண்டு வந்தது.

    மிக சாதரணமாக வீசிய பந்தை நான் முழுசாக கோட்டை விட்டேன். ஸ்டெம்ப் பறந்தது! இந்தியா வீழ்ந்தது, இங்கிலாந்து வென்றது! எதிரணி வீரர்கள் உருண்டு புரண்டனர். நான் யாரிடமும் பேசாமல் போய் உக்காந்தேன். ப்ரியாவை பார்த்தேன் காணவில்லை. என் கேப்டன் என்னிடம் வந்து தட்டி கொடுத்து பரவாயில்லை விடு என்றவுடன், தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தேன், இது ப்ரியாவால்!

    Presentation ceremony முடிந்த பிறகு எல்லாரும் ஹோட்டல்கு சென்றோம். நான் யாரிடமும் பேசவில்லை. சில பேர் வேண்டும் என்றே ப்ரியாவை பத்தி என்னிடம் பேசினார்கள். ரூமிற்கு வந்து படுத்தேன், பாட்டு கேட்கவேண்டும் போல இருந்தது. என்னுடைய I-POD அந்த கேரள வீரரிடம் இருந்தது, அதை வாங்க அவன் அறை நோக்கி சென்றேன், அப்பொழுது ஒரு அறையில் சிரிப்பு சத்தம், என் ப்ரியாவின் சிரிப்பு தான் அது.

    "இந்தியா மட்டும் ஜெய்ச்சிருந்தா எனக்கு 85 கோடி நஷ்டம். இப்போ எனக்கு 110 கோடி லாபம்" என்று ஒருவன் கூற நான் சாவி துவாரத்தின் வழியே பார்த்தேன். இவன் தான் ஸ்டேடியத்தில் ப்ரியாவிடம் பேசிகொண்டிருந்தவன். இப்பொழுது பிரியா அவனது மடியில்...

    " இங்கிலாந்து தோர்த்துடும்னு நெறைய பேரு பெட் கட்டிருந்தாங்க. ஏன்னா இந்தியா தான் நடப்பு சாம்பியன். இங்கிலாந்து தட்டு தடுமாறி தான் பைனல்ஸ் வர வந்திருந்தாங்க. நான் இங்கிலாந்து மேல் பெட் கட்டிருந்தேன். எனக்கு இங்கிலாந்து வின் பண்ணனும். இந்தியா 15 ரன்கள் எடுபதற்குள் 4 விக்கெட்டுகள் விழுந்துடுச்சு. இங்கிலாந்து சுலபமா ஜெய்க்கும்-னு நெனச்சேன். ஆனா கேப்டனும், துணை கேப்டனும் ஆட ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் பயந்துட்டேன். துணை கேப்டன் அவுட் ஆனவுடன் கண்டிப்பா இந்தியா தொத்துடும்னு நெனச்சேன்., சந்தோஷ பட்டேன். ஆனா....." என்று கூறி ஒரு கோப்பையில் இருந்த மதுவை குடித்தான்.

    "உன் காதலன் வந்தான், சும்மா சொல்ல கூடாது ரொம்ப நல்ல ஆடுனான். ஆன நான் யாரு?" என்று வீரப்பா போல் சிரித்தான்.

    "இருக்குற நண்டு சிண்டுகல்ல்கிட்ட பேரம் பேசினேன். சுலபமா படிஞ்சுடாங்க. நான் கடவுள் கிட்ட வேண்டிகிட்டதெல்லாம் ஒரு விக்கெட் அது கேப்டனோ இல்ல உன்னோட காதலனோ. ஆன கேப்டன் அவுட் ஆனது வசதியா போச்சு. நண்டு சிண்டெல்லாம் அவுட் ஆனது என் காசுக்காக தான், hat trick-உம் இல்ல ஒரு மன்னாங்கட்டியும் இல்ல" என்று திரும்ப சிரித்தான்.

    "கடைசி ஓவர்-இல் உன் காதலன் 3 விக்கெட் விழுந்த டென்ஷன்-ல அவுட் ஆயடுவன்-னு நெனச்சேன். ஆனா அந்த சுவடே இல்லாம கூல்-ஆ வெலயாண்டன்.எதற்கும் இருக்கட்டுமே-னு உன்கிட்ட வந்து கடைசி ஓவர் முன்னாடி பேசினேன். 10 கோடி டீல்க்கு நீஒத்துபணு கனவுல கூட நெனைகில. முதல் பந்தில் 3 ரன் அடிசோன......"

    "மீதி நான் சொல்றேன்!" ப்ரியா, அடிபாவி.

    "என்னைய பவுண்டரி கிட்ட போய் நிக்க சொன்னீங்க, அவன் 4 அடிச்சான்னா
    cheer girls மாத்ரி ஆட சொன்னீங்க. அவனும் அடிச்சான், ஆனா நான் அவன் கவனத்த இன்னும் கலைக்கணும்னு டிரஸ்ஐ கழட்டிட்டு ஆடினேன், எப்படி?" என்று சிரித்தாள்.

    "எனக்கு 100 கோடி பணமும் கெடச்சுது, இவ்வளோ அழகான பொண்ணும் கெடச்சுது"

    "ஆமாங்க இந்த பணத்த வச்சுக்கிட்டு ஒரு ஆளில்லாத தீவ வாங்கணும், அங்க நம்ம வீடு கட்டனும்......" சொல்லி கொண்டிருந்தாள் பிரியா!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. Naphthalene Balls
    By gaya3 in forum Miscellaneous Topics
    Replies: 10
    Last Post: 26th January 2006, 03:17 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •