View Poll Results: Liked it?

Voters
29. You may not vote on this poll
  • Yes

    11 37.93%
  • No

    18 62.07%
Page 39 of 45 FirstFirst ... 293738394041 ... LastLast
Results 381 to 390 of 445

Thread: ¤¤¤¤¤ Dhanush ¤¤¤¤¤

  1. #381
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம்!

    'கயல்’ படத்திற்கு பிறகு பிரபு சாலமன் தனது அடுத்த படமாக தனுஷுடன் இணைந்துள்ளார். முதல் முறையாக தனுஷ் - பிரபுசாலமன் கூட்டணி சேர்ந்துள்ளனர்.
    தனுஷுக்கு அடுத்த அடுத்த படமாக ‘ஷமிதாப்’ மற்றும் ‘அனேகன் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. அதேபோல் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் , காஜல் அகர்வால் நடிக்கும் படமான ‘மாரி’ படத்தின் படப்பிடிப்புகளும் முடியும் தருவாயை நெருங்கியுள்ளன.

    இந்நிலையில் அடுத்த படமாக பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். படத்திற்கு இசை பிரபுசாலமனின் ஆஸ்தான இசையமைப்பாளர் டி.இமான். ஹீரோயின் , மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் இன்னும் முடிவாகவில்லை.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #382
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    இந்தியில் இணைகிறார்கள் மணிரத்னம் - தனுஷ் - hindu tamil


    மணிரத்னம் இயக்கும் இந்திப் படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'கடல்' படத்தைத் தொடர்ந்து, துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிக்கும் 'ஓகே கண்மணி' என்ற படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இந்தியில் 'ராவணன்' தோல்வியைத் தொடர்ந்து மணிரத்னம் எந்தப் படத்தையும் இந்தியில் இயக்கவில்லை.

    'கடல்' தமிழில் மட்டுமே வெளியானது. இங்கும் சுமாரான வரவேற்பையே பெற்றது. தனுஷின் இரண்டாவது இந்திப் படமான 'ஷமிதாப்' 6-ஆம் தேதி வெளியாகவுள்ளது. வெளியீட்டிற்கு முன்னரே ஷமிதாப் குறித்த எதிர்பார்ப்பு பாலிவுட்டில் அதிகமாகியுள்ளது.

    தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி' படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து வேல்ராஜ் இயக்கும் படத்திலும், அடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். இதற்கடுத்தே தனுஷ் மணிரத்னம் படத்தி இணைவார் எனத் தெரிகிறது.

    பாலிவுட்டில் தனுஷிற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாலேயே தனது அடுத்த இந்திப் படத்தில் தனுஷை நாயகனாக வைத்து இயக்க மணிரத்னம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
    தனுஷ், மணிரத்னம் என இரண்டு தமிழ் நட்சத்திரங்கள் இருப்பதால் நிச்சயம் இந்தப் படம் தமிழிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  4. #383
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    taran adarsh ‏@taran_adarsh 10h10 hours ago Dhanush stands up to the icon and that's a humungous achievement. His range as a terrific actor is too evident. #Shamitabh

  5. #384
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    SS Music ‏@SSMusicTweet 8h8 hours ago @dhanushkraja Ruling Bollywood yet again with #Shamitabh ! Positive reports all over !!





  6. #385
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    காக்கா முட்டை டீமுக்கு தனுஷ் தங்க சங்கிலி..

    62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த குழந்தைகளுக்கான படமாக, 'காக்கா முட்டை' தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக விக்னேஷ் மற்றும் ரமேஷ் தேர்வாகியுள்ளனர்.
    மணிகண்டன் இயக்கியிருக்கும் ’காக்கா முட்டை’ படத்தை தனுஷின் வுண்டர்பாரும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட்டும் இணைந்து தயாரித்தன. விருது கிடைத்ததையடுத்து, ’காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டனுக்கும், தேசிய விருது பெற்ற சிறுவர்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கும் தனுஷ் தங்க சங்கிலி பரிசளித்துள்ளார்.
    தற்போது ’காக்கா முட்டை’யின் விநியோக உரிமையை ஃபாக்ஸ் ஸ்டார் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. படம் கோடை விடுமுறை சிறப்பாக வெளியாக உள்ளது. இது தவிர்த்து சிறந்த தமிழ் படமாக ‘குற்றம் கடிதல்’ சிறந்த துணை நடிகராக ‘பாபி சிம்ஹா’ , சிறந்த பாடகியாக ‘சைவம் பட பாடல் பாடிய உத்தரா , சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமாருக்கு, 'சைவம்' பட பாடலுக்காக கிடைத்துள்ளது. 'ஜிகர்தண்டா' எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது.
    இதே போல் சென்ற வருடமும் சிறந்த எடிட்டிங் ‘வல்லினம்’ படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

  7. #386
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    வெற்றிமாறனின் சூதாடியிலிருந்து ஜீ.வி.பிரகாஷ் நீக்கம் - தனுஷின் தலையீடு...?

    விசாரணை படத்தை முடித்திருக்கும் வெற்றிமாறன் அடுத்து தனுஷ் நடிப்பில் சூதாடி படத்தை இயக்குகிறார். வெற்றிமாறன் இதுவரை இயக்கிய, தயாரித்த அனைத்துப் படங்களுக்கும் ஜீ.வி.பிரகாஷே இசை. விசாரணைக்கு சம்பளம் வாங்காமல் அவர் இசையமைத்திருப்பதாக கேள்வி.

    இந்நிலையில் சூதாடியில் ஜீ.வி.பிரகாஷுக்குப் பதில் சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில் நடிக்க தனுஷ் தயக்கம் காட்டியதாகவும், சந்தோஷ் நாராயணனின் பெயரை அவர் பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது. சூதாடியை தனுஷ் தயாரிப்பதால் வெற்றிமாறனுக்கும் இசையமைப்பாளரை மாற்றுவதை தவிர வேறு வழியில்லை. சந்தோஷ் நாராயணனை அவர் முறைப்படி ஒப்பந்தம் செய்துள்ளார்

  8. #387
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    தனுஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்


    பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
    பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி' படத்தை முடித்திருக்கும் தனுஷ், அதனைத் தொடர்ந்து வேல்ராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கவிருக்கும் படத்துக்காக தேதிகள் ஒதுக்கி இருக்கிறார்.

    டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணமாகும் ஒரு இளைஞனின் கதையை படமாக்க இருக்கிறார் பிரபு சாலமன். இதற்காக, ரயிலில் பயணம் மேற்கொண்டு படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்து வந்தார். .
    படத்தின் நாயகியாக புதுமுக நடிகை ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து ஆலோசனை செய்து வந்தார்கள். தற்போது இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 'இது என்ன மாயம்', 'ரஜினி முருகன்' உள்ளிட்ட படங்கள் தயாராகி வந்தாலும், இன்னும் ஒரு படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இமான் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு மகேந்திரன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.

  9. #388
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    காக்கா முட்டை மணிகண்டனின் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்

    குறும்படங்களை இயக்கியும், ஒளிப்பதிவு செய்தும் சினிமாவுக்கு வந்தவர் மணிகண்டன். வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட்.

    அவரது முதல் முழுநீளத் திரைப்படம் காக்கா முட்டை பல்வேறு சர்வதேச விருதுகளையும், இரு தேசிய விருதுகளையும் வென்றதோடு இப்போது தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
    தற்போது மணிகண்டன் விதார்த் தயாரித்து நடிக்கும், குற்றமும் தண்டனையும் படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான கதை விவாதம் நடப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

  10. #389
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Director தனுஷ்
    ரவிக்குமாருக்கு ஷாக் கொடுத்த தனுஷ்..!


    ளிப்பதிவு பணியை செவ்வனே செய்து கொண்டிருந்த வேல்ராஜை 'வேலையில்லா பட்டதாரி' வெற்றிப்பட இயக்குனராக்கி விட்டது. அடுத்து 'வேலையில்லா பட்டதாரி-2' எடுக்க வேல்ராஜும், தனுஷூம் விறுவிறுப்பாக இறங்கினர். அப்போது விஷாலின் 'பாயும் புலி' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய வேல்ராஜை சுசீந்திரன் அழைத்தார். பழசை மறக்காத மனுஷன் 'பாயும் புலி' யில் படுபிஸி.
    'வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் ஹீரோ ப்ளஸ் இயக்குனர் இரண்டும் தனுஷ். முதல்பாகத்தில் அம்மா, அப்பாவாக நடித்த சரண்யா, சமுத்திரக்கனி மிஸ்ஸிங். இரண்டாவதில் ராதிகா, ரவிக்குமார் தனுஷூக்கு அம்மா, அப்பா. முதல் ஜோடியான அமலாபால், இயக்குனர் விஜய் குடும்பத்தில் குத்துவிளக்கு ஏற்றச் சென்று விட்டதால் இதில் சமந்தா கூட்டணி.

    சினிமா படப்பிடிப்பில் தேனீயைவிட சுறுசுறுப்பாக இயங்கும் இயக்குனர் என்று கே.எஸ்.ரவிக்குமாரை புகழ்வார்கள். 'விஐபி-2' ஷூட்டிங்கில் தனுஷ், நடிகர்களிடம் வேலை வாங்கும் திறனை பார்த்து அசந்து விட்டார், ரவிக்குமார். 'நான்தான் எல்லார்கிட்டேயும் வேலை வாங்கி சீக்கிரமா படத்தை முடிப்பேன். என்னைவிட ஃபாஸ்ட்டா இருக்கார் தனுஷ்' என்று பாராட்டி தள்ளிவிட்டார், ரவி.

    'வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் முழு படப்பிடிப்பையும் 42 நாளில் இயக்கி முடித்து விட்டார், தனுஷ். டைரக்*ஷன் செய்தது என்னவோ தனுஷ்தான். டைட்டிலில் டைரக்டர் என்று பெயர் வரப்போவது வேல்ராஜ்!

  11. #390
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    இரண்டு வருடங்களில் படம் இயக்குவேன்: தனுஷ்

    இன்னும் இரண்டு வருடங்களாவது நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு ஒருவேளை சரியான நேரம் அமைந்தால் படம் இயக்குவேன் என்று தனுஷ் பேசினார். 'மாரி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று(வியாழக்கிழமை) நடந்தது.

    தனுஷ்,விஜய் யேசுதாஸ், ரோபோ ஷங்கர், அனிருத், சரத்குமார், இயக்குநர் பாலாஜி மோகன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
    இதில் தனுஷ் பேசியதாவது:

    நிறைய பேர் 'மாரி' லுக் எப்படி செட்டாச்சு என்று கேட்கிறார்கள். இணையத்தில் நிறைய லுக்ஸ் பார்த்துக்கொண்டு இருந்தோம். இயக்குநர் பாலாஜி மோகன் 15 புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வந்தார். அதில் ஒரு புகைப்படம் பிடித்திருந்தது. அந்த புகைப்படத்தில் இருப்பவர் நகை, கூலர்ஸ், மீசை என்று செம இன்ட்ரஸ்டிங்கா இருந்தார். அதைப் பார்த்து ஸ்டைல் பண்ணேன். அவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது.

    'மாரி' படம் கண்டிப்பாக தெலுங்கில் டப் ஆகும். இரண்டு, மூன்று பெரிய படங்கள் தெலுங்கில் ரிலீஸ் ஆவதால் காத்துக்கொண்டிருக்கிறோம். சரியான நேரத்தில் தெலுங்கிலும் 'மாரி' ரிலீஸ் ஆகும்.

    'பாகுபலி' படம் 'மாரி' படத்தைப் பாதிக்காது. 'பாகுபலி' ஒரு வாரத்துக்கு முன்பே ரிலீஸ் ஆகிவிட்டது. இரண்டு படங்களுக்கும் வெவ்வெறு விதமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இரண்டு படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரே நாளில் இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகி இருந்தால் க்ளாஷ் இருந்திருக்கலாம். ஒரு வாரம் கழித்து 'மாரி' ரிலீஸ் ஆவதால் எந்த பாதிப்பும் இருக்காது.

    இயக்குநரிடம் புகைப்பிடிக்கும் காட்சியில் நான் நடிக்கமாட்டேன் என்று சொல்லமுடியாது. அவர் கிரியேட்டிவிட்டியை குறைக்கும் விதமாக அது மாறிவிடும். தேவையில்லாத படங்களில் நான் புகைப்பிடிக்கமாட்டேன். 'அனேகன்' படத்தில் எந்த இடத்திலும் நான் புகைப்பிடிக்கவில்லை.

    லோக்கல் டானாக நடிக்கும்போது புகைப்பிடிக்கமாட்டான். தண்ணி அடிக்கமாட்டான் என சொல்லும்போது கொஞ்சம் இடிக்கும். நெருடலாக இருக்கும். என் கேரக்டருக்கு தேவைப்படும்போது மட்டுமே புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கிறேன்.

    ஆனால், என் நிஜ வாழ்வில் நான் புகைப்பிடிப்பதில்லை. என்னை யாராவது இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் நிஜ வாழ்வில் நான் யாரோ, அதையே இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொள்ளுங்கள்.
    எனக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதவும், படம் இயக்கவும் ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கான தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை.

    இப்போது நடிப்பில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. இன்னும் இரண்டு வருடங்களாவது நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு ஒருவேளை சரியான நேரம் அமைந்தால் படம் இயக்குவேன்'' என்று தனுஷ் பேசினார்.

Page 39 of 45 FirstFirst ... 293738394041 ... LastLast

Similar Threads

  1. New releases of Dhanush
    By girishk14 in forum Tamil Films
    Replies: 582
    Last Post: 9th December 2010, 05:36 PM
  2. Padikkaadhavan Dhanush
    By sarna_blr in forum Tamil Films
    Replies: 208
    Last Post: 10th February 2009, 01:30 PM
  3. YSR : PEAS : Dhanush
    By MrJudge in forum Current Topics
    Replies: 10
    Last Post: 12th October 2006, 03:38 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •