Results 1 to 9 of 9

Thread: Lyricist Paa. Vijay

  1. #1
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

    Lyricist Paa. Vijay

    Pa. Vijay keen to balance both
    IndiaGlitz [Thursday, January 08, 2009]

    Popular lyricist Pa Vijay, who has carved a niche for himself with his pen, is busy shooting for his maiden venture as hero in 'Thaikaviyam'. The movie is adapted from the Tamil version of the Russian novel 'The Mother' authored by Maxim Garky and written by Chief Minster M Karunanidhi.

    About his debut film, he says it is the story of an ordinary boy and also deals with social issues. The transition from a poet to an actor has been smooth. 'I said no to heroism based themes. When this revolutionary story came up, I said yes because I was confident of doing justice to the role,' says Vijay, who has added another 92 songs this year to his list of film songs that has already crossed thousand.

    Vijay, whose songs 'Kangal Irandaal' from Subramaniapuram and 'Anbe Anbe' from Dhaam Dhoom made it big last year, 'though the trend now is rap and fast beats, it is melodies that rule. Success of the songs from Varanam Aayiram stands evident for this', says Vijay.

    The poet who won the national award for his inspiring number 'Ovoru Pookalume' in the film Autograph says, ' after Kavignar Kannadasan's 'Unnai Arinthaal' song, 'Ovoru…' is the second song to be included as part of the Tamil syllabus in Madurai Kamaraj University', he says.

    http://www.indiaglitz.com/channels/t...cle/44146.html

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ஞாபகங்கள்

    பாடலாசிரியர் பா.விஜய் கதாநாயகனாக நடித்த ‘தாய் காவியம்' படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தானே கதாநாயகனாக நடித்து ‘ஞாபகங்கள்' என்ற பெயரில் புதிய படத்தைத் தயாரித்து வருகிறார் பா.விஜய்.

    ஒளிப்பதிவாளர் ஜீவன் இயக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீதேவிகா கதாநாயகியாக நடிக்கிறார். நிழல்கள் ரவி, தினேஷ், ‘சிலந்தி' சந்துரு, தென்னவன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படத்தைப் பற்றி பா.விஜய் கூறியதாவது:

    ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வின் இறுதியில் மறக்க முடியாத சில ஞாபகங்கள், மனதை விட்டு விலகாமல் சுற்றிச்சுற்றி வந்துகொண்டே இருக்கும். இதயத்தை விட்டு இறக்கி வைக்க முடியாத அப்படிப்பட்ட ஞாபகங்களின் தொகுப்பே இந்தப் படம். இதில் காதல், லட்சியம் இவற்றுக்கிடையே சிக்கித் தவிக்கும் ஓர் இளைஞனின் போராட்டத்தை கவித்துவமாகக் கூறியிருக்கிறோம். ஊட்டி, மதுரை, ஆக்ரா, தில்லி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றார்.

    கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் -பா.விஜய். இசை -ஜேம்ஸ் விக். ஒளிப்பதிவு -ஜீவன். தயாரிப்பு -வில்மேக்கர்ஸ் நிறுவனம்.

    http://www.dinamani.com/Cinema/CineI...n%A7Ls&Topic=0

  4. #3
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: பா.விஜய்


    கமர்ஷியல் ஹீரோவாக இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றார் கவிஞர் பா.விஜய். இது குறித்து அவர் கூறியதாவது: ஹீரோவாக நடிப்பது என் வேலை அல்ல. அந்த எண்ணத்தில் நான் சினிமாத் துறைக்கு வரவில்லை. கால சூழ்நிலைகள் சிலவற்றைத் தீர்மானிக்கின்றன. அப்படி காலம் தீர்மானித்ததுதான் இந்த ஹீரோ வேடம். ‘ஞாபகங்கள்' படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டன. மதுரை, கோபிசெட்டிபாளையம், தில்லி என்று கிராமம், நகரம் என ரவுண்ட் அடித்து படத்தை முடித்து விட்டோம். வழக்கமான கமர்ஷியல் படம் இது இல்லை. என்னுடைய பாடல்களைப் போல் படத்தின் கதையும் கவிதைப் பூர்வமாக இருக்கும். என்னுடைய கதாபாத்திரமும் அப்படிதான். படம் முழுக்க மெல்லிய காதல் கவிதை தனத்துடன் இழையோடி கொண்டே இருக்கும். கதையோடு ஒட்டிய பாடல்கள் அமைந்துள்ளன. அது படத்தின் கதை வேகத்திற்கு துணையாய் இருக்கும் என நினைக்கிறேன். ‘தாய் காவியம்' பெரிய பட்ஜெட் படம். ஆனால் ‘ஞாபகங்கள்' சின்ன பட்ஜெட் படம். ஞாபகங்கள் பட ஷூட்டிங் ஆரம்பித்ததும் முடித்ததும் தெரியவில்லை. அவ்வளவு வேகமாக ஷூட்டிங் முடிந்துள்ளது. ‘ஞாபகங்கள்' வெளியானதும் ‘தாய் காவியம்' பட வேலைகள் ஆரம்பமாகி விடும். நல்ல கதைகள் உள்ள படங்களில் மட்டுமே ஹீரோவாக நடிப்பேன். எல்லா கதைகளிலும் நடிக்க எனக்குத் தெரியாது. என்னிடம் பல இயக்குநர்கள் கதை சொல்லி விட்டார்கள். அவற்றில் சிறந்த கதை உள்ள படங்களைத் தேர்வு செய்து நடிப்பேன் என்றார்.


    http://www.dinamani.com/edition/stor...e=Np30OLxH4ag=

  5. #4
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ‘Gnabagangal’ a lyricist turns hero

    IndiaGlitz [Friday, April 17, 2009]

    gnabagangal

    View - 'Gnabagangal' Audio Launched

    It is not often that a lyricist turns to a full fledged hero, and so it is also not often that you see so many celebrities wishing him whole-heartedly for it. National Award winning lyricist Pa Vijay has taken the plunge as a hero with ‘Gnabagangal’, for which he has penned the story, screenplay, dialogue and lyrics, besides producing and acting in it.

    The guests of honour for the evening included lyricists Vaali, Vairamuthu, directors Ameer, Cheran, Prabhu Solomon, Suresh Krishna, RV Udhayakumar, Bhagiyaraj, SP Muthuraman, producers AVM Saravanan, Rama Narayanan, Muralidharan, actors Sathyaraj, Jayam Ravi, Srikanth and Nicole.

    While many Celebes, including Cheran, pointed out that the lyricist had struggled the hardest way to achieve success, Rama Narayanan brought it to the fore that it was not often that a lyricist brought himself in front of the camera. Vairamuthu called him a sincere hardworking artiste also while asking him to concentrate on writing as well, and not foray completely into acting.

    Music for the film is by new comer James Vic, and the movie is produced by Vil Makers. Sridevika plays his love interest and the movie was shot in a record four months.

    http://www.indiaglitz.com/channels/t...cle/46315.html

  6. #5
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like


    Lyricists turning actors- Special
    IndiaGlitz [Friday, April 24, 2009]


    When Pa Vijay recently surprised the film frat and movie buffs alike, by doing a jig on a hill top with heroine Sridevika by his side, it raised the eyebrows of many. At a time when everybody is trying hard to be a hero, what compels a National Award-winning lyricist to also make the turn, many wondered.



    Nyabagangal, directed by Jeeva, launched Pa Vijay as a hero, and its audio launch saw many celebrities pondering over his decision to don the greasepaint. But like how lyricist Vaali pointed out, this trend is neither new to lyricists nor the Tamil cinema.



    Kambadasan was one of the earliest ports of our times who took to acting on screen as well, and he created a mark for himself by doing it. And then, there was Kannadasan, who did small roles in films, either in songs or in the talky portion of the movies, like he appeared in a song each in Server Sundaram, Rathathilagam and Suriyagandhi.



    And then, there was Vaali, who was introduced to acting by Kamal Haasan, and has done memorable roles in films like Sathyaa, Hey Ram and Parthaale Paravasam. In fact, the lyricist also took to the small screen, by being part of one of K Balachandar’s serials, Kaiyalavu Manasu.



    Kavipperarasu Vairamuthu also donned the greasepaint for a brief time, including acting as himself for a scene in Jodi. Lyricist Kapilan was one of the most recent to act in a film, that too as himself, in Dasavathaaram, along with Kamal Haasan.

    And now, Pa Vijay, despite his first project ‘Thai Kaaviyam’ being junked, has also become an actor, writing, producing and acting in his own movie. Are the other lyricists listening?

    http://www.indiaglitz.com/channels/t...cle/46507.html

  7. #6
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

    "வில் மேக்கர்ஸ்' என்ற நிறுவனம் சார்பில் கவிஞர் பா. விஜய்
    கதாநாயகனாக நடித்து, தயாரிக்கும் படம் "ஞாபகங்கள்'. இதன் படப்பி
    டிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
    இப்படத்தை ஜீவன் ஒளிப்பதிவு செய்து, இயக்கி வருகிறார்.
    ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வின் இறுதியில் மறக்க முடியாத சில
    ஞாபகங்கள், மனதை விட்டு விலக்க முடி
    யாமல் சுற்றிச் சுற்றி வந்துகொண்டே
    இருக்கும். அப்படி மறக்க முடியாத, இத
    யத்தை விட்டு இறக்கி வைக்க முடியாத
    ஞாபகங்களின் கதைக் களம் இப்ப
    டம்.
    சென்னைக்கு போராடி ஜெயிக்க
    வரும் ஒரு கிராமத்து இளைஞன்
    காதல் என்னும் புதிய பூமிப்பந்திற்
    குள் நுழைந்து தன்னிலை மறந்து
    போகிறான். அவனுள் ஏற்பட்ட
    மொத்த மாற்றத்திற்கும் காரண
    மான காதலியின் நினைவ
    லைகளில் சிக்கி காணாமல்
    போகிறான்.
    காதலுடன் வாழ்வின்
    லட்சிய போராட்டத்திலும்
    போராடி அவன் ஜெயித்
    தானா? என்பது இப்பட
    கதையின் கவித்துவமான
    ஓட்டம்.
    இதன் கதை, வசனம்,
    பாடல்களை பா.விஜய் எழுத,
    ஜேம்ஸ் விக் எனும் புதியவர்
    இசை அமைக்கிறார். "ராமகி
    ருஷ்ணா' மற்றும் "சரித்திரம்'
    ஆகிய படங்களில் கதாநாயகி
    யாக நடித்த ஸ்ரீதேவிகா, இப்ப
    டத்தின் கதாநாயகியாக
    நடித்து வருகிறார்.
    ù ச ன் û ன û ய த்
    தொடர்ந்து உதகை,
    கோவை, கோபி, மதுரை,
    ஆக்ரா, டெல்லி ஆகிய
    இடங்களில் இதன் பாடல்
    காட்சிகள் மற்றும் வசனக் காட்
    சிகளின் படப்பிடிப்பு நடைபெ
    றவுள்ளது.
    முக்கிய கதாபாத்திரங்களில்
    "சிலந்தி' சந்துரு, "நிழல்கள்' ரவி,
    தென்னவன், தினேஷ் ஆகியோ
    ரும் நடிக்கின்றனர். கவித்துவ
    மான காதல் கதையாக உரு
    வாகி வருகிறது "ஞாபகங்கள்'.

    http://www.cinemaexpress.com/Pdf/1642009/20.pdf

  8. #7
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    I always wanted to be an actor: Pa Vijay
    IndiaGlitz [Tuesday, April 29, 2009]

    Writer Pa Vijay is not too comfortable being labeled yet another writer turned actor. Nor is he too happy about being asked if he too, like director recently, has been bitten by the acting bug. Clarifying his stance, the writer says "I always wanted to be an actor only. But it’s not easy to just become a hero in Kollywood today, just because you want to. That was why I took to writing in cinema, following which I earned a lot of fame. This has enabled me to make a movie today" His first film as a hero, Thaikaaviyam, may have been postponed but the writer has written, produced and acted in a project, Nyabagangal.

    But I’ve not tried to depict myself as a superhero in my movie. I just play the boy next door who writes for a passion. That is close to the person that I am in reality,Vijay says, adding that he already has his next story written in which he, again, will play the protagonist.

    Thaikaviyam, meanwhile, has not been shelved, he informs. It has only been postponed indefinitely but will definitely been resumed,” he adds.

    http://www.indiaglitz.com/channels/t...cle/46617.html

  9. #8
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    பணம் வாங்காமல் பாட்டு!
    பாடலாசிரியர் பா.விஜய் ‘ஞாபகங்கள்' படத்தின் மூலம் கதாநாயகன் ஆகியுள்ளார். ஒளிப்பதிவாளர் ஜீவன் இயக்கும் இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் பா.விஜய் எழுதியுள்ளார். கதாநாயகனாக நடிக்கும் படத்தில் மற்றவர்களுக்குப் பாடல் எழுத வாய்ப்பளிக்கலாமே என்று கேட்டபோது... ‘‘முதலில் அப்படித்தான் நினைத்தோம். ஆனால் மற்றவர்கள் எழுதிய பாடல் வரிகளில் ஏதாவது ஒரு சிறிய மாற்றத்தையோ திருத்தத்தையோ சொன்னால் கூட அதை அவர்கள் தவறாக நினைத்துவிட்டால் என்ன செய்வது என்று கருதியே எல்லா பாடல்களையும் நானே எழுதினேன்'' என்று கூறும் பா.விஜய், ‘ஞாபகங்கள்' படம் வெற்றியடைந்து ஹீரோ அந்தஸ்து உயர்ந்தால் இனி மற்றவர்களின் படங்களில் பாடல்கள் எழுதுவதற்குக் கூட பணம் வாங்கக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறார்.

  10. #9
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ""முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கிற கட்டாயம்
    நேர்ந்துச்சு. அதுக்கப்புறம் என்ன செய்யலாம்னு யோசித்த
    போது ஒரு நல்ல கதை தேவைப்பட்டது. வெளியில
    இருந்து வந்த கதையெல்லாம் ஹீரோயிஸம் தாங்கின கதை
    தான். அதுல எனக்கு உடன்பாடில்லை. ஒரு பயம் இருந்
    தது. இதை நான் பண்ணினா சரியாக வராது. பெரிய பெரிய
    ஹீரோக்கள்தான் பண்ணனும். அப்போதுதான் அதுக்குன்னு
    ஒரு மதிப்பு இருக்கும். அதனால் நானே ஒரு கதையைப்
    பண்ணினேன். ஒண்ணு இல்ல, ஐந்து கதைகளை ரெடி பண்
    ணினேன். ஓராண்டு கால இடைவெளியில எழுதி முடிச்
    சிட்டு, என் நண்பர், இயக்குனர் ஜீவனைக் கூப்பிட்டு ஒவ்
    வொரு கதையாகச் சொன்னேன்.
    அப்போ அவருக்கு இந்த சப்ஜெக்ட்ல ஒரு ஈர்ப்பு இருந்
    தது. இது ரொம்ப மென்மையான ஹீரோ கதை. என்னு
    டைய கலைப் பயணமும் அதிகமா கலந்து வர்ற கதை.
    "கவிஞர் பா. விஜய் படத்துல நடிச்சிருக்கார் என்பதைவிட,
    நடிகர் பா.விஜய், கவிஞர் வேறேன்னு பிரிக்க முடியாத
    அளவுக்கு ஒற்றுமை இருக்கும். அதனால் இன்னும் அதி
    கமா மக்களிடம் பதிவாகும்'ன்னு அவர்
    உணர்ந்தார்.
    என்னுடைய நண்பர்கள் எல்லோருமே அதேதான் சொன்
    னாங்க. அதனால் இந்தக் கதையைப் பண்ணலாம்ன்னு
    முடிவு பண்ணினோம். நம்மளே தயாரித்தால்தான் சரியாக
    இருக்கும். ஏன்னா இந்தக் கதையினுடைய அழுத்தம்
    அதை எழுதினவங்களாலதான் உணர முடியும். அதனால
    நம்மளே தயாரிப்போம்னு ஆரம்பிச்சதுதான் இந்த "ஞாப
    கங்கள்'' என்று தனது கதாநாயகன் அவதாரம் பற்றி பேசுகி
    றார் பா. விஜய். அவரிடம்,
    ▼ ""முதன் முதலாக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?''
    என்று கேட்டபோது,
    ""ரொம்பப் புதுமையான அனுபவம். எழுதுறது வேற,
    அதை அப்படியே திரை வடிவத்தில் கொண்டு வந்து
    வெளிபடுத்துறது வேற. ஒரு வருஷ இடைவெளியில் மதன்
    கேப்ரியல் மாஸ்டரிடம் ஜிம், நடிப்பு, நடனம் எனப் பயிற்சி
    எடுத்தேன். அது நடிக்கத் துணையா இருந்துச்சு. இயக்கு
    ஸ்ரீதேவிகாவுடன்...னர் ஜீவனுடைய ஒத்துழைப்பும் முழுசா இருந்துச்சு. அவர்
    எப்படி நடிச்சுக் காண்பிச்சாரோ... அதை அப்படியே பிரதிப
    லிக்கிற கண்ணாடியாகதான் என்னோட கதாபாத்திரம் இருக்
    கும்.
    படப்பிடிப்பு நடந்த இடங்கள்ல, ஊர்கள்ல பார்க்குற மக்
    கள் தொண்ணூற்று ஐந்து சதவிகிதம் பேர் ரொம்ப ஆர்
    வமா பாராட்டினாங்க. இந்தப் படம் உங்களுக்கு பெரிய
    வெற்றிப் படமா அமையும்னு வாழ்த்தினாங்க. ஐந்து சதவி
    கிதம் பேர், "என்ன ஸôர்... பாட்டு எழுதுவதை விடுவீங்
    களா?'ன்னு கேட்டாங்க. "இல்லீங்க, பாட்டு எழுதுவதுதான்
    முக்கியம். இது ஒரு சின்ன இடைவெளி பயணம்தான்'னு
    அவங்களிடம் சொன்னேன். உண்மையும் அதுதான். வரு
    ஷத்துக்கு ஒரு படம் நடிச்சாக்கூட நாற்பது நாளே அதிக
    பட்சம்தான். மீதி நாட்கள்ல பாடல், கவிதை, இலக்கியம்னு
    பயணத்தை மேற்கொள்ள முடியும் அல்லவா?
    ▼ எழுத்து, பாடல், நடிப்பு இதில் எது உங்களுக்குப்
    பிடித்திருக்கிறது?
    எழுதறதுதான்! நடிக்கிறதுனால "ஸ்டார்' மதிப்பு கூடலாம்.
    புகழ்ன்னு சொல்றதைவிட பொருளாதார ரீதியான வசதிகள்
    கூடலாம். ஆனால், ஒரு எழுத்தாளனுக்கு இருக்கிற அங்கீ
    காரம், தனி மரியாதை இவை யாரும் அசைக்க முடியாதது.
    ▼ நடிக்கணும்ங்கிற விதை உங்களுக்குள்ள எப்போ வந்
    தது?
    அந்த விதை 2002-03ல் வந்தாச்சு. என்னுடைய நெருங்
    கிய நட்பு இயக்குனர்கள் எல்லோருமே அவங்க படங்
    கள்ல நடிக்கக் கூப்பிட்டாங்க. பல பேர் கதாநாயகனாக
    நடிக்கக் கூப்பிட்டாங்க. சில பேர் கேரக்டர் ரோல் பண்ணக்
    கூப்பிட்டாங்க. அப்போ எனக்கு ஒரு அச்சம் இருந்துச்சு.
    "மக்கள் ஏத்துக்குவாங்களா? இது நமக்குத் தேவையா?
    பாடல் பயணம் நல்ல நிலையில் போய்கிட்டிருக்கும்போது
    இது தேவையா?' என்று அதையெல்லாம் தவிர்த்து வந்
    தேன்.
    சமீபகாலமாகப் பார்த்தீங்கன்னா சேரன், சுந்தர்.சி. எல்
    லாம் டெக்னீμயன்களாக இருந்து நடிப்புத் துறைக்கு
    வந்து வெற்றி பெற்றிருக்காங்க. இது பாக்யராஜ் ஸôர்
    ஃபார்முலாதான். இருந்தாலும் நீண்ட ஒரு இடைவெளிக்
    குப் பிறகு மீண்டும் இந்த டிரெண்ட் வந்திருக்கு.
    இப்போ உள்ள மக்கள், படத்துல யார் நடிக்கிறாங்கங்கி
    றதைவிட, என்ன கதை என்பதைதான் கவனிக்கி
    றாங்க. இது நல்ல விஷயம்.
    அப்புறம், "சுப்பிரமணியபுரம்' படத்தோட வெற்றி
    எனக்கு பல பாடங்களைக் கத்து கொடுத்தது. நல்ல
    படம் பண்ணினால் அது யாராக இருந்தாலும் மக்
    கள் ஏத்துக்குவாங்க என்ற பாடத்தை கத்து கொடுத்
    தது. எனக்கு சசிகுமார் ஸôர் அவ்வளவா பழக்க
    மில்ல. இருந்தாலும் படத்தைப் பார்த்தவுடன் அவ
    ருக்குக் கடிதம் எழுதினேன். "என்னை மாதிரி
    போராடிகிட்டு இருக்கிற, அதாவது சினிமாவில
    ஜெயிச்சும் போராடிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு இந்
    தப் படம் நம்பிக்கையாக இருக்கும்'னு எழுதினேன்.
    அதுக்கப்புறம்தான் நடிக்கலாம்ன்ற தீர்மானம் எனக்குள்
    வந்தது.
    ▼ உங்களுக்கும் ஹீரோயின் ஸ்ரீதேவிகாவுக்கும் எந்தள
    வுக்கு "கெமிஸ்ட்ரி' வொர்க்-அவுட் ஆகியிருக்கு?
    முதல்ல பாட்டுக்கு நடனம்ங்கிறது எனக்கு கொஞ்சம் சிர
    மமாதான் இருந்தது. நான் ஏற்கெனவே சரவணன் மாஸ்டரி
    டம் நடனப் பயிற்சி எடுத்துகிட்டதால ஷூட்டிங்ல அவ்வ
    ளவா சிரமப்படல. ஆனா, சில நுட்பங்கள கத்துக்க வேண்
    டியதாயிருந்தது. அவங்க சொல்லிக் கொடுக்கிறதை மனசுல
    வாங்கிட்டு பண்ணினேன்.
    ஸ்ரீதேவிகாவுடன் ஆடும்போது, அவங்க ஏற்கெனவே
    பதினான்கு படங்கள் பண்ணியிருந்ததால அவங்களுக்கு
    ரொம்ப எளிமையாக இருந்தது. எனக்கு கொஞ்சம் கடினமா
    கவே இருந்தது. அதனால நான், ரெண்டு நாளைக்கு முன்
    னாடியே பயிற்சி எடுத்துப்பேன். அது மாதிரி ஸ்பாட்டுல
    யும் கொஞ்சம் பயிற்சி எடுத்துப்பேன். நம்ம படம்ங்கிறதால
    யாரும் கேக்க மாட்டாங்க.
    கெமிஸ்ட்ரின்னு பார்த்தீங்
    கன்னா தொட்டு,
    தழுவி, உராய்ந்து
    அந்த மாதிரி காட்சி
    களே கிடையாது.
    பாட்டுலயும் கிடை
    யாது. அதனால
    அதுக்கான வேலை
    எதுவும் வரல.
    ▼ என்ன மாதிரி
    கதாபாத்திரங்கள்
    ஏற்று நடித்தால்
    உங்களுக்குச் சரி
    யாக இருக்கும்னு
    நினைக்கிறீங்க?
    இந்தப் படத்தை
    ù ப ô று த் த
    16, மே
    16, மேவரை கவிதை எழுதத் தெரிந்த
    ஒரு ஸ்மார்ட் ஹீரோ. அவ்வளவு
    தான். அதுக்காக இதே மாதிரி
    போகணும்னு கிடையாது. அடுத்து
    பண்ணிக்கிட்டு இருக்கிறது க்ரைம்
    சப்ஜெக்ட். ராஜேஷ்குமார் கதை
    கள்ல வர்ற மாதிரியான க்ரைம்.
    என்னுடைய முகம் தமிழ் முகம்ங்
    குறதால ஏறக்குறைய அந்தக் கதா
    பாத்திரத்துக்குப் பொருத்தமா
    இருக்கும். ரொம்ப ஹீரோயிஸம்
    இல்லாத படங்கள் பண்ணலாம்
    என்றிருக்கேன்.
    ▼ வீரமான பாத்திரங்களில்
    நடிக்க மாட்டீங்களா?
    அதுவும் இருக்கு. என்னோட
    மூணாவது படமா பண்ணலாம்னு
    இருக்கேன். படிப்படியாகப் போகலாம். எடுத்தவுடனேயே
    அறிவுரை கூறுகிற மாதிரி எல்லாம் இருக்கக் கூடாது. என்
    னோட முகத்தை மக்கள் ஏத்துக்கிட்டாங்கன்னா, அப்புறம்
    அதையெல்லாம் பண்ணலாம்.
    ▼ வாலி, வைரமுத்து என இருவரையும் இணைத்து
    பாடல் வெளியீட்டு விழா பண்ணனும்னு எப்படி தோன்
    றியது?
    அது என்னோட ரொம்ப நாள் கனவு. கலைஞர் நிகழ்ச்
    சியிலேயே பண்ணனும்னு ஆசைப்பட்டேன். ஆனா அது
    முடியாமப் போச்சு. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு இடத்துல
    இருந்தாங்க. அப்போது கலைஞரோட தேதி கிடைக்கிறதே
    பெரிய விஷயமாக இருந்தது.
    இந்த கேஸட்டே என் சொந்த நிறுவனமான "வில் மேக்
    கர்ஸ்' என்ற நிறுவனத்தோட வெளியீடுதான்.
    யாரை விருந்தினராகக் கூப்பிடறதுன்னு யோசித்த
    போது, ஏற்கெனவே யோசித்து வைத்ததுபோல வாலி
    ஸôர் கிட்டே ஃபோன்லயே கேட்டேன்.
    அவர் "சரி'ன்னு சொல்லிட்டாரு. அப்பு
    றம் வைரமுத்து ஸôர்கிட்ட ஃபோன்ல
    பேசுற அளவுக்கு எனக்கு பழக்கம்
    இல்ல. நான் அப்ப ஊட்டியில்
    இருந்ததால் வேற வழியில்லாமல்
    அவரிடமும் ஃபோன்லதான்
    பேசினேன். அவரும் உடனே
    "சரி'ன்னு சொல்லிட்டார். அப்படி
    நடந்த சம்பவம்தான் அது.
    ▼ உங்கள் புதுவீடு எப்படியி
    ருக்கு?
    நல்லா இருக்கு. இன்னும் முழு
    மையா முடியல. மரவேலைகள் கொஞ்
    சம் இருக்கு. ஆனாலும் நாங்க குடி வந்
    துட்டோம்.
    ▼ நடிப்பது பற்றி உங்கள்
    வீட்டுல என்ன சொன்
    னாங்க?
    அவங்களுக்கு எதிர்ப்பும் கிடை
    யாது; விருப்பமும் கிடையாது.
    அந்த மாதிரிதான் அவங்களோட
    மனநிலை இருந்தது.
    ▼ இந்தப் படத்தின் பாடல்கள்
    பற்றிச் சொல்லுங்க?
    பாட்டுக்காகவே ஓடக்கூடிய
    படம் இது. அது படம் வெளி வந்த
    பிறகு உங்களுக்கே தெரியும்.
    முதல் பாடலில் "அ'ங்கற முதல்
    எழுத்துலயே எல்லா வார்த்தைக
    ளும் இடம் பெறும். கிட்டத்தட்ட
    250 வார்த்தைகள் அப்படி இடம்
    பெறும். அடுத்தது கதாநாயக
    னோட அறிமுகப் பாட்டு. இதுல
    தமிழர்களோட உணர்வுகள், வீரம்,
    மறைக்கப்பட்ட கலாசாரம் ஆகி
    யவை இருக்கும். ராஜஸ்தானி இசையில் தமிழ் நாட்டுப்பு
    றமும் கலந்தா எப்படியிருக்குமோ அது மாதிரி இருக்கும்.
    அதுக்கப்புறம் "காதலில் எத்தனை வாசமோ?'ன்னு ஒரு
    பாட்டு. இது காதலன்-காதலி சம்பந்தப்பட்டது. "ஒவ்வொரு
    பூக்களுமே...' பாட்டு எனக்கு பெரிய இடத்தைக் கொடுத்
    தது. அதனுடைய இன்னொரு வடிவமாக இந்தப் பாட்டு
    இருக்கும். "உன்னால் முடியும் போராடு... உலகம் இருக்கு
    பூச்சூடு...' இந்தப் பாட்டுதான் க்ளைமாக்ஸ். அப்புறம்
    எஸ்.பி.பி. ஸôர் பாடிய ஒரு பாட்டும் இருக்கு. இதுவும்
    வித்தியாசமாக இருக்கும்.
    ▼ சிறந்த பாடலாசிரியர்ன்னு விருது வாங்கிட்டீங்க?
    சிறந்த நடிகர் விருது வாங்குவீங்களா?
    சிறந்த நடிகர் விருது வாங்க முடியுமான்னு எனக்குத்
    தெரியல; அந்த லட்சியமும் இல்ல. ஆனா சிறந்த ஸ்கி
    ரிப்ட் ரைட்டர்ன்னு விருது வாங்கணும்னு ஆசையிருக்கு.
    அதே மாதிரி சிறந்த தயாரிப்பாளர்ன்னு விருது வாங்க
    ணும்னும் ஆசையிருக்கு.
    ▼ படம் தயாரித்த அனுபவம் எப்படி?
    இது வரை கலைஞரை வைத்து மூணு
    விழா பண்ணியிருக்கேன். கலைஞர் புரு
    வத்தை உயர்த்திப் பார்க்கும்படி அது
    அமைந்தது. அது மாதிரி திட்டமிட்டுப்
    பண்ணினால் வெற்றி நிச்சயம்.
    அதுபோல் இந்தப் படத்தோட 65
    நாள் ஷூட்டிங்கையும் ஒரு லிஸ்ட்
    போட்டு ரெடி பண்ணி, முதல் நாள்
    என்ன தேவையோ, அதேபோல 65
    நாளுக்கும் என்னென்ன தேவை என்
    பதையறிந்து அத்தனையையும் ரெடி
    பண்ணி வெச்சிக்கிட்டோம். அந்தத்
    திட்டமிடுதல் சரியாக இருந்ததால்
    படத்தைக் கஷ்டமில்லாமல்
    முடிக்க முடிந்தது'' என்றார்.

    http://www.cinemaexpress.com/pdf/

Similar Threads

  1. TFM Lyricist
    By R.Latha in forum Current Topics
    Replies: 6
    Last Post: 27th October 2009, 12:18 PM
  2. Who's the Lyricist?
    By Thingazh in forum Current Topics
    Replies: 2
    Last Post: 15th March 2007, 09:09 AM
  3. Vijay Milton or Vijay Antony???
    By july in forum Current Topics
    Replies: 5
    Last Post: 6th June 2006, 06:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •