Page 1 of 3 123 LastLast
Results 1 to 10 of 21

Thread: TFM Tidbits

  1. #1
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

    TFM Tidbits

    இசைத் தட்டு என்
    றால் என்ன?
    என்று இன்றைய
    இளந்தலைமுறை
    யைக் கேட்டுப்
    பாருங்களேன்.
    தெரியாது என்பார்
    கள். காலத்தால் மறைந்துவ
    ரும் பொருட்களில் இசைத்
    தட்டும் ஒன்றாகிவிட்டது.
    ஆனால் இன்றும் கூட
    பழைய இசைத்தட்டுகளைச்
    சேகரித்துப் பாதுகாத்து
    வைத்திருக்கிறார் சென்னை
    சி.ஐ.டி. நகரைச் சேர்ந்த
    எஸ்.எம். சேகர்.
    சேர்த்து வைத்திருப்ப
    தோடு மட்டுமல்லாமல்,
    அந்த இசைத் தட்டுகளில்
    உள்ள பாடல்களை,
    இசையை கம்ப்யூட்டரின் உதவியோடு நவீனமுறை
    யில் சிடிகளில் பதிவும் செய்து வருகிறார்.
    ‘‘பழைய பாடல்கள் அழிந்து போகாமல் பாதுகாக்
    கவே இப்படி சிடியில் அவற்றைப் பதிவு செய்து
    கொண்டிருக்கிறேன்'' என்று கூறும் அவரிடம் மேலும்
    பேசினோம்.
    இசைத் தட்டுகளைச் சேகரிக்கும் ஆர்வம் எப்படி
    ஏற்பட்டது?
    எனக்குச் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில்
    உள்ள கூட்டுறவுபட்டி உசிலம்பட்டி. இதைச் சின்ன உசி
    லம்பட்டி என்றும் சொல்வார்கள். எனது தாத்தா அந்
    தக் காலத்திலேயே கையினால் சுற்றக் கூடிய கிராம
    போன் வைத்திருந்தார். அதைச் சுற்றுப்பெட்டி என்பார்
    கள். அதைச் சிறுவயதில் பார்த்த எனக்கு இசைத் தட்டுக
    ளின் மேல் இயல்பாகவே ஆர்வம் வந்துவிட்டது.
    எவ்வளவு இசைத்தட்டுகள் உங்களிடம் உள்ளன?
    1968 இல் வேலை காரணமாகச் சென்னைக்கு வந்தவு
    டன் இசைத் தட்டுகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். இப்
    போது என்னிடம் 25 ஆயிரம் இசைத் தட்டுகளுக்கும்
    மேல் உள்ளன.
    இந்த இசைத்தட்டுகளில் கிட்டத்தட்ட 1 லட்சம்
    பாடல்கள் உள்ளன. தமிழ், இந்தி, ஆங்கில மொழிப்
    பாடல்கள் அவற்றில் உள்ளன. தமிழில் மட்டும் 40 ஆயி
    ரம் பாடல்கள் இருக்கின்றன.
    இசைத்தட்டுகளில் என்ன பாடல்கள் எல்லாம் உள்
    ளன?
    என்னிடம் 1937 - 45 காலகட்டத்தில் வெளிவந்த
    இசைத் தட்டுகள் உள்ளன. கொத்தமங்கலம் சீனு,
    வி.வி.சடகோபன், துறையூர் ராஜகோபால் சர்மா
    பாடிய அரிய பாடல்கள் உள்ளன. காருகுறிச்சி அரு
    ணாச்சலத்தின் 15 மணிநேர நாகஸ்வர
    இசை என்னிடம் உள்ளது.
    தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்
    னப்பா ஆகியோரின் பெரும்பாலான
    பாடல்கள் என் சேகரிப்பில் உள்ளன.
    மகாராஜபுரம் சந்தானம், மகாராஜபு
    ரம் விஸ்வநாத அய்யர், அரியக்குடி
    ராமானுஜ அய்யங்கார் பாடல்களும்
    என்னிடம் உள்ளன.
    வி.வி.ராமன், வி.வி.லக்ஷ்மணனின்
    ‘மன்னுபுகழ் கோசலை' என்ற அரிய
    பாடல் என்னிடம் உள்ளது.
    பி.எஸ்.ராஜா அய்யங்கார், கேசவபா
    கவதர், மாஸ்டர் ராஜரத்னம், வி.ஏ.செல்
    லப்பா, ராஜலக்ஷ்மி என அக்காலத்து
    பாரம்பரிய இசை வல்லுநர்களின்
    பாடல்கள் எல்லாம் என் தொகுப்பில்
    உள்ளன.
    இசைத் தட்டுகளை மூன்று வகைகளாகக் குறிப்பிட்டுச்
    சொல்லலாம். 1968 வரை - அதாவது ‘ரிக்ஷாக்காரன்' படம்
    வரும் வரை 78 ஆர்பிஎம் இசைத் தட்டுகளே இருந்தன.
    அதாவது ஒரு நிமிடத்தில் 78 முறை சுற்றும் இசைத் தட்டு
    கள் அவை. 45 ஆர்பிஎம், 33 ஆர்பிஎம் இசைத்தட்டுகளும்
    என்னிடம் உள்ளன.
    இசைத் தட்டுகள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன?
    இசைத் தட்டுகளைச் சேகரிக்க நான் பலவிதமான முயற்சி
    கள் செய்திருக்கிறேன். உதாரணமாக, தேனிக்குப் பக்கத்தில்
    கொரட்டூர் என்ற ஒரு சிறிய ஊர் இருக்கிறது. அந்த ஊரில்
    ராஜு என்கிற விவசாயி பழைய இசைத் தட்டுகளைச் சேக
    ரிப்பதாகத் தெரிய வந்தது. அதைக் கேள்விப்பட்டு நான்
    சென்னையில் இருந்து கிளம்பி தேனிக்குச் சென்று சில
    கிலோ மீட்டர் தூரம் நடந்து அந்த ஊரைச் சென்றடைந்
    தேன். அவரிடம் அப்போது இலங்கேஸ்வரன் என்ற திரைப்
    படத்தின் இசைத்தட்டுகள் இருந்தன.
    அந்தப் படம் வெளிவரவில்லை.
    ஆனால் இசைத்தட்டுகள் வெளியாகி
    இருந்தன.
    ஆனால் அந்த விவசாயி அந்தப்
    பழைய இசைத் தட்டுகளைக் கொடுக்க
    மறுத்தார். இரண்டு நாள் அலையவிட்
    டார். அப்போது தங்குவதற்கு சரியான
    இடமோ, சாப்பிட நல்ல ஹோட்
    டலோ அங்கு கிடையாது. எனவே
    அந்த இரண்டு நாட்களும் தேனியில்
    தங்கியிருந்து அவரைப் பார்த்துப் பேசி
    னேன். கடைசியில் அவர் தருகிற
    இசைத்தட்டுகளுக்குப் பதிலாக நான்
    வேறு சில இசைத் தட்டுகளைத் தந்தால்
    தருவதாகச் சொன்னார். அவர் கேட்ட
    இசைத்தட்டுகள் எளிதில் கிடைக்க
    வில்லை. அப்புறம் சில நண்பர்களின்
    உதவியுடன் அவர் கேட்ட இசைத்தட்டு
    களை வாங்கிக் கொடுத்துவிட்டு எனக்
    குத் தேவையான இசைத்தட்டுகளை வாங்கிவந்தேன். நான்
    அவருக்குக் கொடுத்தது 20 இசைத்தட்டுகள். அவர் எனக்குக்
    கொடுத்ததோ வெறும் 6.
    அதுபோல ஏர்வாடியில் கே.ஆர்.ராமசாமி, கே.பி.சுந்த
    ராம்பாள் இசைத் தட்டுகள் இருப்பதாகக் கேள்விப்பட்டு
    அங்கே இதற்காகத் தேடிச் சென்று வாங்கிவந்தேன்.
    தமிழ்நாட்டில் இந்த இடங்கள் தவிர நிறைய இடங்க
    ளுக்கு இசைத்தட்டுகளைச் சேகரிப்பதற்காகச் சென்றிருக்கி
    றேன். அதுமட்டுமல்ல, மலேசியாவிற்குச் சென்றும் இசைத்
    தட்டுகளைச் சேகரித்திருக்கிறேன். மலேசியாவில் இருந்த ரகு
    நாதன் என்ற நண்பர் எனக்கு உதவினார். மலேசியாவில்
    உள்ள தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் நிறைய இசைத்
    தட்டுகளைச் சேகரித்து வைத்திருக்கின்றனர். ஆனால் அவர்
    களிடம் பழைய பாடல்களே அதிகம் இருந்தன. திருச்சி
    லோகநாதன், பி.பி.ஸ்ரீனிவாஸ், கண்டசாலா, டி.ஏ.மூர்த்தி
    போன்றவர்களின் பாடல்கள் அடங்கிய இசைத் தட்டுகள்
    அவர்களிடம் இருந்தன. இசைத்தட்டுகளைச் சேகரிப்பதில்
    எனது தம்பி மகாலிங்கம் பேருதவியாக இருக்கிறார்.
    எனக்குத் தெரிந்து சென்னைக்கு அருகில் உள்ள திருநின்ற
    வூரில் ஒருவர் என்னைப் போலவே இசைத் தட்டுகளைச்
    சேகரித்து வைத்திருக்கிறார். ஆனால் இசைத் தட்டுகளை
    முதன்முதலில் சிடி வடிவில் மாற்றிப் பாதுகாக்கும் தனிநபர்
    நானாகத்தான் இருப்பேன்.
    இசைத்தட்டுகள் இப்போது புழக்கத்தில் இல்லை. உங்க
    ளிடம் உள்ள இசைத் தட்டுகளும் பயனில்லாமற் போய்வி
    டுமே?
    இப்போது இசைத்தட்டுகள் வருவதில்லை. ரிக்கார்டு
    பிளேயர்கள் இப்போது இல்லை. அதில் ஏதாவது பழுது ஏற்
    பட்டால் அவற்றைச் சரிசெய்ய புதிய உதிரிபாகங்கள்
    கிடைப்பதில்லை. இந்தநிலையில் இந்த இசைத் தட்டுகளில்
    உள்ள பழைய பாடல்கள் அழிந்துவிடும் நிலை உள்ளது.
    எனவே அவற்றை நவீனத் தொழில்நுட்பத்தின் அடிப்ப
    டையில் சிடி வடிவில் மாற்றி வருகிறேன். இதனால் பழைய
    அரிய இசை, பாடல்கள் அழிந்துவிடாமல் காப்பாற்ற முயற்
    சித்துக் கொண்டிருக்கிறேன்.
    பழைய பாடல்களை எதற்காகக் காப்பாற்ற வேண்டும்?
    பழைய பாடல்கள், இசை நமது முன்னோர்கள் நமக்கு
    விட்டுச் சென்ற செல்வம். அவற்றைப் பாதுகாப்பது நமது
    கடமை. மேலும் பழைய பாடல்களைக்
    கேட்கும் போது ஏற்படும் மன மகிழ்ச்சி,
    மன அமைதிக்கு எல்லையே கிடை
    யாது. பழைய பாடல்களில் நமது பாரம்
    பரிய இசை, நாட்டுப்புற இசை எல்லாம்
    கலந்த கலவை இருந்தது. இப்போது
    மேற்கத்திய இசையை மட்டுமே தனியா
    கப் பயன்படுத்துகிறார்கள். பழைய
    பாடல்களுக்கு ஒரு மதிப்பு இருப்பதால்
    தான் பழைய பாடல்களை இப்போது
    ரீமிக்ஸ் பண்ணுகிறார்கள்.
    இந்த இசைத் தட்டுகளால் வேறு
    என்ன பயன் இருக்கிறது என்று
    நினைக்கிறீர்கள்?
    என்னிடம் அதிக அளவு பழைய
    பாடல்கள் உள்ளதால், கல்லூரிகளில்
    இசையைப் பாடமாகப் படிக்கும்
    ஆராய்ச்சி மாணவர்கள் என்னிடம் வரு
    கின்றனர். பழைய பாடல்களை கேட்
    டுக் குறிப்பெடுத்துக் கொண்டு செல்
    கின்றனர். எந்தப் பாடலை யார் பாடியது, எந்தப் படத்தில்
    அந்தப் பாடல் இடம் பெற்றது போன்ற சந்தேகங்களை எல்
    லாம் என்னிடம் கேட்கின்றனர். என்னுடைய சேகரிப்புகள்
    இந்த விதத்தில் பயன்படுவது எனக்கு மிகுந்த சந்தோஷத்
    தைத் தருகிறது.
    ‘சுந்தரமூர்த்தி நாயனார்' என்ற திரைப்படத்துக்காக புகழ்
    பெற்ற பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் பாடியி
    ருக்கிறார். அந்தப் பாடல்கள் அவரிடம் இல்லை. அதற்காக
    அவர் என்னை ஒருமுறை அணுகியது எனக்கு இன்றும்
    பெருமையாக இருக்கிறது.
    இருந்தாலும் இவற்றைத் தொடர்ந்து பராமரிக்க முடி
    யுமா? எல்லாப் பாடல்களையும் சிடி வடிவில் மாற்ற முடி
    யுமா? என்று நினைக்கும்போது மலைப்பாக உள்ளது.
    யாராவது என்னைவிட நன்கு பராமரிப்பதில் ஆர்வம்
    உடைய தனிநபர்களோ, அறக்கட்டளையோ அல்லது
    அரசோ இதை எடுத்து நன்கு பராமரிக்க முன்வந்தால் என்
    அரிய சேகரிப்பைத் தந்துவிடலாம் என்று கூட நினைக்கி
    றேன்.
    ஏனென்றால் இந்த இசைத் தட்டுகளைச் சேகரிப்பதற்கு
    நான் எடுத்துக் கொண்ட அரிய சிரமமான முயற்சிகளை
    விட பழைய பாடல்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கிய
    மானது.

    http://www.dinamani.com/Kadhir/832009/3.pdf

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    [tscii]
    கவிஞர் முத்துலிங்கம்

    சாயம் பூசாமலே உதடுகள் சிவந்திருக்கும் இளம் பெண்களைப் போலே வண்ணம் பூசாமலே மண்ணெல்லாம் சிவப்பு மயமாகக் காட்சியளிக்கும் சீமை எங்கள் சிவகங்கை சீமை.

    ‘‘விழுந்ததுளி அந்தரத்தே வேமென்று வீழின்

    எழுந்து சுடர் சுடுமென் றேங்கி -செழுங்கொண்டல்

    பெய்யாத கானகத்தில் பெய்வளையும் சென்றனளே

    பொய்யா மொழிப் பகைஞர் போல்''

    என்று தனிப்பாடல் திரட்டிலே ஒரு வெண்பா உண்டு.

    வானிலிருந்து விழும் மழைத்துளி, வெப்பம் மிகுந்த பாலைவனத்தில் விழுந்தால் அதன் தரை தன்னைச் சுட்டுவிடும் என்றஞ்சி அந்த மழைத்துளி விழும் போதே ஆவியாகிவிடுமாம். அப்படிப்பட்ட பாலை நிலம் அந்த நிலம் என்பது பொருள்.

    அந்த அளவுக்குப் பாலைவனம் போன்றது என்று சொல்ல முடியாவிட்டாலும் சோலைவனம் என்று சொல்லத்தக்க அளவிலும் சிவகங்கை பகுதி இல்லை.

    அத்தைகைய சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கையிலிருந்து தென்கிழக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவிலும், மானாமதுரையிலிருந்து வடகிழக்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்த சிற்றூர்தான் ‘கடம்பங்குடி'. அதுதான் நான் பிறந்து தவழ்ந்து வளர்ந்து விளையாடிய ஊர்.

    சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலும் எல்லா ஊர்களும் வானம் பார்த்த பூமிதான். மழை பெய்தால்தான் விளையும். எனது ஊரும் அப்படிதான்.

    மொத்தம் இருபது வீடுகள்தான் அனைவரும் பங்காளிகள், மாமன், மச்சான்கள். மருதுபாண்டியர்களின் பரம்பரையில் வந்தவர்கள் என்பதால் அந்த வயதில் என் போன்ற இளசுகள் எல்லாம் மருதுபாண்டியர் பரம்பரை என மார்த்தட்டி கொண்டு அலைவார்கள்.

    ஊரின் கிழக்கு கரையில் ஐயன் கோயில் ஒன்றுன்டு. வெறும் சிலை மட்டும்தான். கட்டடம் இல்லை. அதற்கு தலவிருட்சம் போல் கூமுத்தி மரம் ஒன்றுன்று. அதை தலவிருட்சம் என்று சொல்ல மாட்டர்கள். சாமி மரம் என்பார்கள்.

    ஒவ்வொரு திருக்கார்த்திகை நாளன்றும் அந்த ஐயன் கோயிலில்தான் சொக்கப்பனை கட்டிக் கொளுத்துவோம். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இரவு ஏழு மணி அளவில் கொளுத்திச் சென்று அந்தச் சொக்கப்பனையைக் கொளுத்துவோம்.

    எரிந்த சொக்கப்பனையிலிருந்து கருகிய குச்சியோ, அல்லது கருக்கு மட்டையோ எது கிடைத்தாலும் அதை எடுத்துச் சென்று அவரவர் வயல்களில் ஊன்றி விட்டுச் செல்வோம்; அந்த வயல் நன்றாக விளையும் நம்பிக்கையில். இப்போதும் அந்த நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கைதானே கிராம வாழ்க்கை?

    எங்கள் ஊரின் அப்போது பெருங்கொண்ட விவசாயம் எங்கள் விவசாயம்தான். ஐந்து ஏர் பூட்டி உழக்கூடிய பெரிய விவசாயக் குடும்பம் என்னுடையது. நானும் ஒரு விவசாயிதான்.

    வரப்பு வெட்டுவேன், உழுவேன், விவசாய வேலைகள் அனைத்தையும் செய்வேன். விவசாய நிலங்கள் இன்னும் எனக்கு அங்கிருக்கிறது.

    ஆனால் இன்று யாரும் கலப்பை பூட்டி உழுவதில்லை. மாடுகளுக்குப் பதிலாக டிராக்டர்கள் வந்து விட்டன. கதிர் அறுக்க ஆட்களும் இப்போது தேவையில்லை. அதற்கும் எந்திரங்கள் வந்து விட்டன. எங்கள் வீட்டில் வண்டி மாடுகளும், உழவு மாடுகளும் நிறைய இருந்தன. இன்று பெயருக்குக் கூட யாரிடத்திலும் மாடுகள் இல்லை. இளைஞர்கள் எல்லாம் நகர்ப்புறங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் இப்போது பிறவிப் பயனை அடைவதற்காக விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

    இந்திய விவசாயம் விவசாயியை மகிழ்ச்சிபடுத்துகிற விஷயமாக அன்றைக்கும் இல்லை; இன்றைக்கும் இல்லை.

    விவசாயம்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என்பதை இன்றைய கிராமத்து இளைஞர்கள் மறந்து விட்டார்கள். மெல்ல மெல்ல விவசாயம் நசிந்து கொண்டிருக்கிறது. இது தொடர்ந்தால் உணவுப் பஞ்சம் வந்துவிடும் என்பது சத்தியம். அரசாங்கம், கார் தொழிற்சாலை அமைப்பதிலும், கணினி பூங்கா அமைப்பதிலும் கவனம் செலுத்துவதைப் போல் விவசாயத்தில் கவனம் செலுத்துவதில்லை.

    எங்கள் ஊருக்கு மேற்கே பொழியும் மழை குளக்கால் வழியாக கண்மாய்க்கு வரும். அந்தப் புது மழைத் தண்ணீரின் வழியே கண்மாயிலுள்ள மீன்கள் ஏறிச்செல்லும். இதை ஏத்து மீன் என்பார்கள். கண்மாய்த் தண்ணீர் வற்றிச் சேறும் சகதியுமாக இருக்கும் போது ‘கச்சா' என்னும் வலை போட்டு பிடிப்போம். அந்த மீன்களைப் பிடிப்பதுதான் மழை காலங்களில் என் வேலை. இப்போது அந்த மீன்களைக் குத்தகைக்கு விட்டு விடுகிறார்கள்.

    எங்கள் ஓட்டு வீடு கட்டும் போது சுவர் வைப்பதற்காக வெட்டிய இடத்தில் கிணறு தோண்டினார்கள். அந்தக் கிணறுதான் எங்கள் சுற்று வட்டாரப் பகுதிகளின் தண்ணீர் பஞ்சத்தைத் தீர்த்து வைத்தது. இன்றும் அந்தக் கிணறு பயன்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதில் எனக்குக் கொஞ்சம் பெருமைதான். பஞ்சாயத்தின் புதிய தண்ணீர் குழாய்களால் அந்தக் கிணற்றின் இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

    வயல் வரப்புகளிலும், கண்மாய்க்குள்ளும் ஏராளமான பனை மரங்கள் உண்டு. நான் ஊரில் இருக்கும் போது நட்ட பனங்கொட்டைகள் எல்லாம் இன்று பெரிய மரங்களாக வளர்ந்து நுங்குகள் தருகின்றன. ஊரின் மேற்கு பகுதியில் இருக்கும் காட்டு பகுதிக்குதான் மாடு மேய்க்க செல்வேன். என்னுடன் பல சிறுவர்களும் வருவதுண்டு. அங்குக் கடுக்காய்ப் பழம், காரம் பழம், ஈச்சம் பழம், காட்டெலந்தைப் பழம் போன்ற பழங்களைப் பறித்துச் சாப்பிட்ட பொழுதுகள் மிகவும் ரம்மியமானவை. செடி கொடிகளில் பல்வேறு வகையான பூக்கள் பூத்துக் குலுங்கும். அதில் சிவப்பு நிறமாக இருக்கும் பூவொன்றைக் கண்ணுவலிப்பூ என்பார்கள். கண்வலித்துச் சிவந்தால் எந்த நிறத்தில் இருக்குமோ அந்த நிறத்தில் இருப்பதால் அதற்கு அந்தப் பெயர் என நினைக்கிறேன். நமது தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படுகின்ற செங்காந்தன் பூதான் அந்தப் பூ என்பதைப் பின்னாளில்தான் புரிந்து கொண்டேன்.

    ‘உதாரப்புலி' என்ற ஊரில் உள்ள பூஞ்சையில் சுண்ணாம்புக் கற்கள் ஏராளமாக விளைகின்றன. அந்தக் கல்லை வெட்டி எடுத்து வண்டியில் ஏற்றி மானாமதுரைக்கு அருகில் உள்ள கல்லகுறிச்சி, ராஜகம்பீரம் ஆகிய ஊர்களுக்குக் கொண்டு செல்வார்கள். ஒரு வண்டி கல் ஏற்றிச் சென்றால் இரண்டு ரூபாய் கொடுப்பார்கள். எத்தைனையோ முறை நானும் வண்டியோட்டி சென்றிருக்கிறேன். இப்போது அந்தக் கற்களை யாரும் வெட்டுவதில்லை.

    உழுதுக் கொண்டும், மாடு மேய்த்துக் கொண்டும் இருந்த போது சிந்தித்து எழுதிய கவிதைகள் ‘வெண்ணிலா' என்ற நூல் வடிவில் பின்னர் வெளியானது. அதற்கு முன்னுரை தந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அந்தக் கவிதைகளில் என் இளமைக் கால அனுபவங்கள் அனைத்தும் இருக்கின்றன.

    இப்போதல்லாம் இந்த நகர வாழ்க்கையின் மீது எப்போதாவது சலிப்பு ஏற்பட்டால் அந்தக் கடம்பங்குடிக்குச் சென்றுவிடுகிறேன். என்னவோ தெரியவில்லை அங்கு மட்டும் வாழ்க்கையின் மீது சலிப்பு என்பதே இல்லை.

  4. #3
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

    Re: TFM Tit bits Lyrisists

    தேசத் தந்தையின் இரண்டாம் வருகை

    ‘முதல்வர் மகாத்மா படத்தில் ஒரு காட்சி'

    பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்' திரைப்படம் வாயிலாகக் காட்சிப்படுத்திய ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், மகாத்மா காந்தியின் கருத்துகளை மையமாக வைத்து ‘முதல்வர் மகாத்மா' என்ற திரைப்படத்தை தயாரிக்கிறது.

    இதில் காந்தியடிகளைப் போல் தோற்றம் கொண்ட எஸ்.கனகராஜ், காந்தியாக நடிக்கிறார்.

    சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்தியாவுக்கு வரும் காந்தி, இன்றைய காலகட்டத்தில் மக்களையும் அரசியல்வாதிகளையும் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.

    அவரது சத்தியாகிரகத்தாலும் அகிம்சை முறையாலும் நிகழ்கால அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்த முடிகிறதா என்பதை சுவாரஸ்யமாகச் சித்திரிப்பதே கதை.

    தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாகும் இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் திரைக்கு வருகிறது.

    கதை, திரைக்கதை, இயக்கம் -அ.பாலகிருஷ்ணன். ஒளிப்பதிவு -ஜெ.மோகன்.

  5. #4
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    Shruthi Haasan’s foray with Kamal Haasan
    IndiaGlitz [Monday, March 16, 2009]

    With his esteemed ‘Dasavatharam’ fetching him laurels across far-flung corners of the globe, Universal Hero Kamal Haasan has commenced his remake version of ‘A Wednesday’. Titled ‘Thalaivan Irukiran’ in Tamil, the Telugu version has been named as ‘Ee Nadu’. The shooting had hit the floors before couple of days in Hyderabad and would be simultaneously filmed in Telugu and Tamil.

    When fathers are treading elatedly launching their heirs into tinsel town on respective panoramas,Kamal Haasan is introducing his daughter Shruthi Haasan with this magnum opus. Don’t expect the young lass making her onscreen appearance in lead role. Uh-huh! Shruthi who has been churning out many musical albums makes her debut as music director with ‘Thalaivan Irukiran’. Though her part goes inclusive of scoring signature song, she’s involved in deep discussions with her crew in spelling the best.

    Once Shruthi had represented her dad for collecting Filmfare Awards where she uttered, ‘Hope, One day I would erase my father’s records and bag them on my own records’.

    Of course, the girl is on for the hotfooted task.

  6. #5
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். ‘கெட்-அப்'பில் பரத்

    சனாகான், பரத்

    வி.கே. மீடியா பிரைவேட் நிறுவனம் தயாரித்து வரும் புதிய படம் ‘தம்பிக்கு இந்த ஊரு'.

    இந்தப் படத்திற்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் பரத் நடனமாடினார். பட்டினப்பாக்கம் கடலோரப் பகுதியில் திருவிழா பின்னணியில் ‘தம்பிக்கு இந்த ஊரு... என்ற பாடல் காட்சி அண்மையில் படமாக்கப்பட்டது. இதற்காக 80 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். கட் அவுட் முன்பு ‘மீனவ நண்பன்', ‘நம்நாடு' படங்களில் எம்.ஜி.ஆர். அணிந்திருந்தது போன்ற உடை அணிந்து எம்.ஜி.ஆர். ‘கெட்-அப்'பில் நடனமாடினார் பரத்.

    நடன இயக்குநர் தினேஷ் நடன அமைப்பில் பரத், சனாகான் இணைந்து நடனமாடிய இந்தப் பாடல் காட்சியில் 60 நடனக் கலைஞர்களும் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களும் பங்கேற்றனர்.

    இந்தப் படத்தில் பிரபு, ரஞ்சித், விவேக், நிழல்கள் ரவி, சரண்யா, ஆர்த்தி, யுவராணி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ‘வீராப்பு' படத்தை இயக்கிய பத்ரி கதை, திரைக்கதை அமைத்து படத்தை இயக்குகிறார்.

    வசனம் -டி.செந்தில்குமரன். இசை -தரண். பாடல்கள் -கபிலன். ஒளிப்பதிவு -சாலை மகாதேவன். தயாரிப்பு -ஜே.சரவணன், சி.பாஸ்கர்.

  7. #6
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    any body see this page

  8. #7
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

  9. #8
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    தேவா மீண்டும் பிஸி!

    சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ச்சியாக அதிக படங்களுக்கு இசையமைத்து வந்தார் தேவா. ஆனால் கடந்த ஆண்டு, தேவா இசையமைப்பில் ‘கொடைக்கானல்' என்ற ஒரு படம் மட்டுமே வெளியானது. இந்த ஆண்டு ‘ஆறுமுகம்', ‘சூரியன் சட்டக் கல்லூரி', ‘மாட்டுத்தாவணி', ‘மூன்றாம் பௌர்ணமி', ‘எங்க ராசி நல்ல ராசி', மலையாளத்தில் ‘கலியுகராமன்', கன்னடத்தில் ‘உலவே மந்தாரா' உள்பட 12 படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டு ஒரு படத்துக்கு மட்டுமே இசையமைத்த தேவா, 2009-ம் ஆண்டில் அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெயரைப் பெறுவார் என திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  10. #9
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    சண்டே சினிமா

    இசையால் நடிப்பதற்கு இசையவில்லை!- விஜய் ஆண்டனி

    இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் ரிகார்டிங் ஸ்டுடியோவுக்கு இரண்டு பூட்டுகள். கேட்டில் பகலிலும் தொங்கும் பித்தளை பூட்டு வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு மட்டும் எளிதில் திறந்து கொள்ளும். இரண்டாவது பூட்டு- அந்த ஸ்டுடியோ சாளரம் உட்பட அனைத்தையும் அடைத்து சுவர்களுக்கும் போட்டிருக்கும் வாய்பூட்டு. இங்குதான் விஜய்யின் இசை ராஜ்ஜியத்தில், ‘நாக்குமூக்கு' போன்ற அதிரடி பாடல்களும், ‘உன் தலைமுடி உதிர்வதைக்கூட' போன்ற மெலடிப் பாடல்களும் தங்களை கௌரவப்படுத்திக் கொள்கின்றன! நாம் போனபோதும் ஏதோ படத்தின் பாடலைப் பதிவு செய்துக் கொண்டிருந்தார் விஜய் ஆண்டனி. சிறிது நேரக் காத்திருத்தலுக்குப் பிறகு அவரோடு பேசினோம். எந்த விஷயத்தையும் மறைத்துப் பூட்டிக்கொள்ளாமல் இயல்பாகப் பேசினார்:

    பரபரப்பான இசையமைப்பாளராக மாறியிருக்கிறீர்கள். இந்நிலையிலிருந்து உங்கள் ஆரம்பக்கட்ட போராட்ட நிலையைத் திரும்பிப் பார்க்கிறபோது எப்படி இருக்கிறது?

    உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் வளர்ந்துவிட்டேன். சாதித்துவிட்டேன், திரும்பிப் பார்க்கிறேன் என்றெல்லாம் என்னால் நினைக்க முடியவில்லை. கண்ணுக்குத் தெரிந்து எவ்வளவோ விஷயங்கள் எனக்குத் தெரியாமல் இருக்கிறது. பாட்டுகள் வெற்றி பெறலாம். ரீ-ரிகார்டிங் பிரமாதமாகப் பேசப்படலாம். ஆனால் அதற்குள் இருக்கிற விஷயங்களை ஊடுருவிப் பார்த்தோமானால் குறைகள் தெரிகின்றன. இதையே அதிகம் நினைத்து மேம்பட வேண்டியவற்றைச் செய்து வருகிறேன். அதற்காகப் பழைய விஷயங்களை மறக்கக்கூடியவன் என்று அர்த்தம் இல்லை. நட்பில் தொடங்கி சின்னச்சின்ன விஷயங்களைக்கூட நினைவில் வைத்துக் கொள்ள கூடியவன்தான்.

    வாய்ப்புக்காகப் போராடிய காலத்தில் நீங்கள் திட்டமிட்டவற்றையெல்லாம் இப்போது நிறைவேற்ற முடிகிறதா?

    ஆரம்ப காலங்களில் இசையமைப்பதில் சுதந்திரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இப்போது என்னுடைய இசை வெற்றிபெற்று இருப்பதால் நான் எதிர்பார்த்தது கிடைக்கிறது. என்னுடைய விருப்பப்படி இசையமைக்கட்டுமா? என்றால் உடனே அங்கீகரிக்கிறார்கள். இதற்குத்தான் நான் ஏங்கினேன். ஏனென்றால் அங்கீகாரம் இல்லாதபோது யாருடைய இசையையாவது கொண்டுவந்து இதைப்போல் மியூசிக் போடுங்கள்... அதைப்போல் மியூசிக் போடுங்கள்... என்பார்கள். அதிலிருந்து தப்பித்துக் கொண்டேன். இவரிடம் கொடுத்தால் சரியாகச் செய்வார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அந்தச் சுதந்திரத்தைத்தான் நான் தேடினேன். மற்றபடி இசையமைக்கிறபோது திட்டமிடலோடு உட்காருவதில்லை. திட்டமிடும் போது, இறுக்கமான சூழலில் மனம் சொல்வது மட்டுமே இசையாக வரும். அப்படி இல்லாமல் மனதை நெகிழ்வாக, இயல்பாக வைத்திருந்தாலே எனக்குத் தேவையானது கிடைக்கிறது. இசை தானாகக் கிடைப்பது. அதைப்போல இசை விருப்பமும் நாளுக்கு நாள் மாறுபடலாம். நாளைக்கு என்ன பிடிக்கிறதோ அதற்குத் தகுந்தாற்போல்தான் இசையமைப்பேன்.

    மெல்லிசை பாடல்தான் உங்கள் விருப்பமென்று பல முறை சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் இசையமைப்பில் பெரும்பாலானவை அதிரடிப் பாடல்களாகவே இருக்கின்றனவே?

    ‘சப்போஸ் உன்ன காதலிச்சு', ‘நெஞ்சாங்கூட்டில்', ‘பூமிக்கு வெளிச்சமெல்லாம்', ‘ஏன் எனக்கு மயக்கம்' ‘உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்கமுடியவில்லை' என நிறைய மெலடிப் பாடல்கள் இருக்கின்றன. ஆனால், ‘நாக்குமூக்கு' பாடல் எல்லா மெலடிகளையும் தாண்டி புதிய சாதனை படைத்திருக்கிறது. அதனால் விஜய் ஆண்டனி என்றாலே ‘நாக்குமூக்கு' என்று ஒரு விசிட்டிங் கார்டுபோல ஆகிவிட்டது.

    என்னைப் பொறுத்தவரை மெலடியை நல்ல பாட்டு என்றும் குத்துபாட்டை மோசமான பாட்டு என்றும் பிரித்துப் பார்ப்பதில்லை. எல்லாவகையான பாடலுக்கும் அடிநாதமாக ஓர் உயிர் இருக்கும். அந்த உயிரை எனது உயிரைக் கொடுத்தாவது இசைக்க நினைக்கிறேன். அப்படி இசையமைத்ததுதான் நாக்கமூக்கு பாடலும். அடுத்து ஒரு மெலடிப் பாடல் வெற்றி பெறும். அடுத்து அதிரடி என சுழற்சியாக மக்கள் ரசனையைப் பூர்த்தி செய்வேன்.

    நல்ல தொழில்நுட்பங்கள் இருந்தாலும் வார்த்தைகளை முழுங்குகிற பாடல்களாகவே வருவது ஏன்?

    இப்போது வார்த்தைகள் முழுங்கப்படுவதே இல்லை. முன்பிருந்த தொழில்நுட்பத்திற்கும் இப்போதைய தொழில்நுட்பத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தொழில்நுட்பத்திற்காகவே இப்போது கோடிக்கோடியாகச் செலவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சத்தம் குறைவாக வைத்து எந்தப் பாட்டையும் கேட்டுப் பாருங்கள். எல்லா வரிகளும் தெளிவாகக் கேட்கும். யாரும் அதை யோசிப்பதே இல்லை. ஒன்றைத் திரும்பத்திரும்பச் சொல்வதால் மக்களுடைய மனநிலையும் அப்படியே மாறிப் போயிருக்கிறது.

    இசையமைப்பாளர் துறையும் போட்டிகள் நிறைந்த துறையாக மாறிவிட்டதே?

    இதைப் போட்டியாக நினைக்கவில்லை. வெற்றிக்கொடுக்க முடிகிறவரை மட்டும் சினிமாத்துறையில் இருப்பேன். எப்போது என்னால் ஒழுங்காக இசையமைக்க முடியவில்லை என்று தோன்றுகிறதோ அன்று நேர்மையாக இந்தத் துறையை விட்டு போய்விடுவேன். போட்டிப் போடவேண்டும் என நினைக்க மாட்டேன். சுதந்திரத்துடன் பிடித்த காரியத்தைச் செய்கிறேன்.

    ஏ.ஆர்.ரஹ்மான ஆஸ்கர் விருது வாங்கியிருந்தாலும்கூட நம்முடைய இசையமைப்பாளர்கள் உலகத்தரமான இசையைக் கொடுப்பதில்லை என்கிற கருத்து நிலவுகிறதே?

    வெளிநாட்டவர் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பதே தவறு என்பது என் முதல் நிலை. ஆங்கிலத்தில் படம் எடுத்தால் விருது கிடைக்கப் போகிறது. அடுத்து நம்முடைய இசை ஏன் உலகத் தரத்துக்குப் போகவில்லை என்றால் தொழில்நுட்பங்கள் அதிகம் இணைத்துக் கொள்வதில்லை. மேற்கத்திய இசையைக் கேட்டீர்கள் என்றால், உச்சஸ்தாயில் ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருக்கும். அதற்குக் கீழ் ஸ்தாயில் ஒரு குரல் ஒலிக்கும். அதற்கும் கீழாக பேஸில் ஒருவர் பாடுவார். நம்முடைய இசை நிர்ணயிக்கப்பட்ட காலப்பிரமாணத்தில் சஞ்சரிக்கக் கூடியது. மேற்கத்திய இசை வடிவங்களை மீறி கர்நாடக இசைக்கென்று தனி வீர்யம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. ‘மேட்ரிக்ஸ்' என்கிற ஆங்கிலப் படத்தில் தம்பூராவில் ‘ஓம்' என்கிற பிரணவ மந்திரத்தை ஒலிக்க வைத்திருப்பார்கள். அதைப்போல பல படங்களில் தபேலாவையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதையும் மீறி நம்முடைய கர்நாடக இசையும், ஹிந்துஸ்தானியும் வளரவேண்டும் என்றால் ப்யூஷன் மாதிரியும் இல்லாமல் வேறு மாதிரியாகச் செய்ய வேண்டும். அதையும் சிலர் செய்கிறார்கள்.

    இரவுகளில் இசையமைப்பது? வெளிநாடுகளுக்கு சென்று மெட்டமைக்கிற வகையில் நீங்களும் வருகிறீர்களா?

    இல்லை. சில இரவுகளில் தூக்கம் வராது. அந்த நேரத்தில் வேலை செய்வேன். எப்போதெல்லாம் சுறுசுறுப்பாக உணர்கிறேனோ அப்போதெல்லாம் இசையமைக்கத் தொடங்கிவிடுவேன். வெளிநாடுகளுக்குச் சென்றால் எந்தவித தொந்தரவும் இல்லாமல் இசையமைக்கலாம் என்பதற்காக செல்வார்களே தவிர, மெட்டுகளுக்காக இல்லை. இதுவரை எனக்கு அதுபோன்ற வாய்ப்பு வரவில்லை. வந்தால் நானும் போவேன்.

    உங்கள் இசையில் ‘மேனுவல் ஆர்க்கெஸ்ட்ரா'வை எந்தளவுக்குப் பயன்படுத்துகிறீர்கள்?

    கிளப்பில் பாடக்கூடிய டிஸ்கோ பாட்டில் தபேலாவையும் மிருதங்கத்தையும் பயன்படுத்த முடியாது. அப்படிப் பயன்படுத்தினால் யாரும் ஆடமாட்டார்கள். ‘நாக்குமூக்கு' ‘நெஞ்சாங்கூட்டில் நீயே' எனத் தேவைப்படுகிற பாடல்களுக்கெல்லாம் கட்டாயம் பயன்படுத்துகிறேன்.

    ரீமிக்ஸ் பாடல்களுக்கு எதிரான கருத்து நிலவுகிறதே?

    ரீமிக்ஸ் செய்வதை குற்றமாகப் பார்க்கக் கூடாது. தயாரிப்பாளர்கள் மக்கள் ரசனையைப் பூர்த்தி செய்வதற்காகச் செய்ய சொல்கிறார்கள். இது தொழில் தர்மம். மறுக்கமுடியாது. நல்ல பாடலை எடுத்துச் செய்கிறோம். அதைக் கெடுத்துவிடாமல் செய்வது என்பது அடுத்தகட்ட தொழில் தர்மம். ரீமிக்ஸ் செய்தாலும் அந்தப் பாட்டிற்கு ஒரிஜினல் மெட்டமைத்த இசையமைப்பாளரின் பெயரையே போடவேண்டும் என்பது என் கருத்து.

    ரிங்டோனாகப் பயன்படுத்துகிற பாடல்களுக்கு ராயல்டி தரவேண்டுமா?

    தரவேண்டும் என்பது முறைதான். ஆனால் முறையாகத் தயாரிப்பாளர்களுக்குத்தான் தரவேண்டும். இசையமைப்பாளர்களுக்குத் தயாரிப்பாளர்கள் பணம் கொடுத்துவிடுகிறார்கள். படம் ஓடாவிட்டால் அதிகம் பாதிக்கப்படப் போவது தயாரிப்பாளர்களே. அதனால் அவர்களுக்கு அதிகம் கொடுத்துவிட்டு, குறிப்பிட்ட சதவிதம் இசையமைப்பாளர்களுக்குத் தரலாம்.

    திரையில் தோன்றுகிற எண்ணம் உண்டா?

    வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. அதிகப் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பதால் இப்போதைக்கு நடிப்பதற்கு நான் இசையவில்லை!

  11. #10
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    இதுவரை
    இசைக் கருவிக
    ளின் இசையுடன்
    மட்டுமே பாடியுள்ள
    எஸ்.பி.பாலசுப்ரமணி
    யம், முதன் முறையாக
    இயற்கை சப்தங்களின்
    பின்னணியில் பாடலை
    பாடியுள்ளார்.
    ""சொட்டும் மழைத்துளி
    யின் சப்தம், ஊஞ்சலின் சப்
    தம் தாளமாய் இருக்க, பறவை
    களின் குரல்களுடன்
    இணைந்து அவர் பாடியுள்ள
    பாடல் வித்தியாசமாக இருக்கும்.
    ""சொட்டும் மழைத்துளி
    யின் சப்தம், ஊஞ்சலின் சப்
    தம் தாளமாய் இருக்க, பறவை
    களின் குரல்களுடன்
    இணைந்து அவர் பாடியுள்ள
    பாடல் வித்தியாசமாக இருக்கும்.
    ஊரின் அருகில் உள்ள மலை
    கோயிலில் வீரமாக வீற்றிருக்கும்
    கருப்புசாமிக்கு மக்கள் திரண்டு
    வந்து பொங்கல் வைத்து, பிடிசோ
    றுப் போட்டு, ஆடு வெட்டி ரத்
    தத்தை காணிக்கையாகக் கொடுத்து
    படையல் வைத்து மலையை விட்டு
    இறங்க, கோயில் பூசாரி பிடிசோற்
    றுடன் ஆட்டு ரத்தத்தை கலந்து
    கருப்பசாமிக்கு முன் எறிகிறார்.
    அப்படி மேலே எறிந்த சோறு கீழே
    விழுந்ததா? அல்லது மறைந்ததா?
    பூசாரி மக்களிடம் என்ன சொன்
    னார்? இது போன்ற பல கேள்விக
    ளுடன் கருப்புசாமி வீற்றிருக்கி
    றார்.
    ஆறு மணிக்கு மேல் மலை கோயி
    லுக்கு யார் சென்றாலும் அவர்
    களை கருப்புசாமி அடித்து விடுகி
    றார். இதை நம்பாத விக்னேஷ்,
    ஆறு மணிக்குமேல் கோயிலுக்கு
    செல்கிறார். மேலே சென்ற அவர்
    திரும்பி வந்
    தாரா? இல்
    லையா? இந்த
    கேள்விக்கு பதி
    லாய் வரவிருக்
    கிற படம் "மலை
    கோயில்'.
    ஊர் பஞ்சாயத்
    தில் மெüனிகா
    தான் கர்பமாக
    இருப்பதாகவும்,
    அதற்கு காரணம்
    ù ப ô ன் வ ண்
    ணன் என்றும்
    கூறுகிறார். பெரி
    யவர்கள் அவரி
    டம், ""நீங்கள் இரு
    வரும் எங்கே சந்தித்தீர்கள்?'' என்று
    கேட்க, ஆறு மணிக்கு மலைமேல்
    என்று சொல்லுகிறார். ""ஆறு
    மணிக்கு மேல் யார் மலைக்குச்
    சென்றாலும் கருப்புசாமி அடித்து
    விடுவார். அப்படி இருக்கும்போது
    எப்படி நாங்கள் சந்திக்க முடியும்?''
    என்று பொன்வண்ணன் திருப்பி
    கேட்க, அனைவரும் குழப்பமடை
    கின்றனர். பிறகு தீர்ப்பு எப்படி
    அமைகிறது என்பதை படத்
    தைப் பார்த்து தெரிந்து
    கொள்ளுங்கள்'' என்கிறார்
    இப்படத்தின் கதை,
    திரைக்கதை எழுதி இயக்
    கியிருக்கும் பெஞ்சமின்.
    இப்படத்தில் விக்
    னேஷ், இந்து, பொன்வண்
    ணன், மெüனிகா, ஷர்மிளி,
    வினுசக்கரவர்த்தி, பாலு
    ஆனந்த், காஞ்சி இனிதா,
    எஸ்.எஸ்.சந்திரன், சூர்யா (அறிமு
    கம்), அனுமோகன், ஜெகன் மற்
    றும் பலர் நடித்திருக்கின்றனர்.
    இப்படத்தின் பாடல்களை
    காதல் மதி இயற்றியிருக்க, ஜீவன்
    தாமஸ் இசை அமைத்திருக்கிறார்.
    எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலே
    சியா வாசுதேவன், சொர்ணலதா,
    சித்ரா, மனோ, அருள்மொழி,
    சிந்து, புஷ்பவனம் குப்புசாமி ஆகி
    யோர் பாடியிருக்கிறார்கள்.
    சண்டை பயிற்சி: ஜாக்குவார் தங்
    கம், நடனம்: பாரதி, ஒளிப்பதிவு:
    ஆர்.தேவிபிரசாத், தயாரிப்பு: லால்
    பகதூர்.

Page 1 of 3 123 LastLast

Similar Threads

  1. Sports News And Tidbits
    By Sanguine Sridhar in forum Sports
    Replies: 175
    Last Post: 10th July 2017, 04:48 AM
  2. Latest News & Other Tidbits on AR Rahman (II)
    By NOV in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 1486
    Last Post: 2nd September 2009, 08:30 AM
  3. ARR News and other Tidbits
    By NOV in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 1461
    Last Post: 22nd July 2008, 06:14 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •