Results 1 to 10 of 21

Thread: TFM Tidbits

Threaded View

  1. #1
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

    TFM Tidbits

    இசைத் தட்டு என்
    றால் என்ன?
    என்று இன்றைய
    இளந்தலைமுறை
    யைக் கேட்டுப்
    பாருங்களேன்.
    தெரியாது என்பார்
    கள். காலத்தால் மறைந்துவ
    ரும் பொருட்களில் இசைத்
    தட்டும் ஒன்றாகிவிட்டது.
    ஆனால் இன்றும் கூட
    பழைய இசைத்தட்டுகளைச்
    சேகரித்துப் பாதுகாத்து
    வைத்திருக்கிறார் சென்னை
    சி.ஐ.டி. நகரைச் சேர்ந்த
    எஸ்.எம். சேகர்.
    சேர்த்து வைத்திருப்ப
    தோடு மட்டுமல்லாமல்,
    அந்த இசைத் தட்டுகளில்
    உள்ள பாடல்களை,
    இசையை கம்ப்யூட்டரின் உதவியோடு நவீனமுறை
    யில் சிடிகளில் பதிவும் செய்து வருகிறார்.
    ‘‘பழைய பாடல்கள் அழிந்து போகாமல் பாதுகாக்
    கவே இப்படி சிடியில் அவற்றைப் பதிவு செய்து
    கொண்டிருக்கிறேன்'' என்று கூறும் அவரிடம் மேலும்
    பேசினோம்.
    இசைத் தட்டுகளைச் சேகரிக்கும் ஆர்வம் எப்படி
    ஏற்பட்டது?
    எனக்குச் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில்
    உள்ள கூட்டுறவுபட்டி உசிலம்பட்டி. இதைச் சின்ன உசி
    லம்பட்டி என்றும் சொல்வார்கள். எனது தாத்தா அந்
    தக் காலத்திலேயே கையினால் சுற்றக் கூடிய கிராம
    போன் வைத்திருந்தார். அதைச் சுற்றுப்பெட்டி என்பார்
    கள். அதைச் சிறுவயதில் பார்த்த எனக்கு இசைத் தட்டுக
    ளின் மேல் இயல்பாகவே ஆர்வம் வந்துவிட்டது.
    எவ்வளவு இசைத்தட்டுகள் உங்களிடம் உள்ளன?
    1968 இல் வேலை காரணமாகச் சென்னைக்கு வந்தவு
    டன் இசைத் தட்டுகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். இப்
    போது என்னிடம் 25 ஆயிரம் இசைத் தட்டுகளுக்கும்
    மேல் உள்ளன.
    இந்த இசைத்தட்டுகளில் கிட்டத்தட்ட 1 லட்சம்
    பாடல்கள் உள்ளன. தமிழ், இந்தி, ஆங்கில மொழிப்
    பாடல்கள் அவற்றில் உள்ளன. தமிழில் மட்டும் 40 ஆயி
    ரம் பாடல்கள் இருக்கின்றன.
    இசைத்தட்டுகளில் என்ன பாடல்கள் எல்லாம் உள்
    ளன?
    என்னிடம் 1937 - 45 காலகட்டத்தில் வெளிவந்த
    இசைத் தட்டுகள் உள்ளன. கொத்தமங்கலம் சீனு,
    வி.வி.சடகோபன், துறையூர் ராஜகோபால் சர்மா
    பாடிய அரிய பாடல்கள் உள்ளன. காருகுறிச்சி அரு
    ணாச்சலத்தின் 15 மணிநேர நாகஸ்வர
    இசை என்னிடம் உள்ளது.
    தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்
    னப்பா ஆகியோரின் பெரும்பாலான
    பாடல்கள் என் சேகரிப்பில் உள்ளன.
    மகாராஜபுரம் சந்தானம், மகாராஜபு
    ரம் விஸ்வநாத அய்யர், அரியக்குடி
    ராமானுஜ அய்யங்கார் பாடல்களும்
    என்னிடம் உள்ளன.
    வி.வி.ராமன், வி.வி.லக்ஷ்மணனின்
    ‘மன்னுபுகழ் கோசலை' என்ற அரிய
    பாடல் என்னிடம் உள்ளது.
    பி.எஸ்.ராஜா அய்யங்கார், கேசவபா
    கவதர், மாஸ்டர் ராஜரத்னம், வி.ஏ.செல்
    லப்பா, ராஜலக்ஷ்மி என அக்காலத்து
    பாரம்பரிய இசை வல்லுநர்களின்
    பாடல்கள் எல்லாம் என் தொகுப்பில்
    உள்ளன.
    இசைத் தட்டுகளை மூன்று வகைகளாகக் குறிப்பிட்டுச்
    சொல்லலாம். 1968 வரை - அதாவது ‘ரிக்ஷாக்காரன்' படம்
    வரும் வரை 78 ஆர்பிஎம் இசைத் தட்டுகளே இருந்தன.
    அதாவது ஒரு நிமிடத்தில் 78 முறை சுற்றும் இசைத் தட்டு
    கள் அவை. 45 ஆர்பிஎம், 33 ஆர்பிஎம் இசைத்தட்டுகளும்
    என்னிடம் உள்ளன.
    இசைத் தட்டுகள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன?
    இசைத் தட்டுகளைச் சேகரிக்க நான் பலவிதமான முயற்சி
    கள் செய்திருக்கிறேன். உதாரணமாக, தேனிக்குப் பக்கத்தில்
    கொரட்டூர் என்ற ஒரு சிறிய ஊர் இருக்கிறது. அந்த ஊரில்
    ராஜு என்கிற விவசாயி பழைய இசைத் தட்டுகளைச் சேக
    ரிப்பதாகத் தெரிய வந்தது. அதைக் கேள்விப்பட்டு நான்
    சென்னையில் இருந்து கிளம்பி தேனிக்குச் சென்று சில
    கிலோ மீட்டர் தூரம் நடந்து அந்த ஊரைச் சென்றடைந்
    தேன். அவரிடம் அப்போது இலங்கேஸ்வரன் என்ற திரைப்
    படத்தின் இசைத்தட்டுகள் இருந்தன.
    அந்தப் படம் வெளிவரவில்லை.
    ஆனால் இசைத்தட்டுகள் வெளியாகி
    இருந்தன.
    ஆனால் அந்த விவசாயி அந்தப்
    பழைய இசைத் தட்டுகளைக் கொடுக்க
    மறுத்தார். இரண்டு நாள் அலையவிட்
    டார். அப்போது தங்குவதற்கு சரியான
    இடமோ, சாப்பிட நல்ல ஹோட்
    டலோ அங்கு கிடையாது. எனவே
    அந்த இரண்டு நாட்களும் தேனியில்
    தங்கியிருந்து அவரைப் பார்த்துப் பேசி
    னேன். கடைசியில் அவர் தருகிற
    இசைத்தட்டுகளுக்குப் பதிலாக நான்
    வேறு சில இசைத் தட்டுகளைத் தந்தால்
    தருவதாகச் சொன்னார். அவர் கேட்ட
    இசைத்தட்டுகள் எளிதில் கிடைக்க
    வில்லை. அப்புறம் சில நண்பர்களின்
    உதவியுடன் அவர் கேட்ட இசைத்தட்டு
    களை வாங்கிக் கொடுத்துவிட்டு எனக்
    குத் தேவையான இசைத்தட்டுகளை வாங்கிவந்தேன். நான்
    அவருக்குக் கொடுத்தது 20 இசைத்தட்டுகள். அவர் எனக்குக்
    கொடுத்ததோ வெறும் 6.
    அதுபோல ஏர்வாடியில் கே.ஆர்.ராமசாமி, கே.பி.சுந்த
    ராம்பாள் இசைத் தட்டுகள் இருப்பதாகக் கேள்விப்பட்டு
    அங்கே இதற்காகத் தேடிச் சென்று வாங்கிவந்தேன்.
    தமிழ்நாட்டில் இந்த இடங்கள் தவிர நிறைய இடங்க
    ளுக்கு இசைத்தட்டுகளைச் சேகரிப்பதற்காகச் சென்றிருக்கி
    றேன். அதுமட்டுமல்ல, மலேசியாவிற்குச் சென்றும் இசைத்
    தட்டுகளைச் சேகரித்திருக்கிறேன். மலேசியாவில் இருந்த ரகு
    நாதன் என்ற நண்பர் எனக்கு உதவினார். மலேசியாவில்
    உள்ள தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் நிறைய இசைத்
    தட்டுகளைச் சேகரித்து வைத்திருக்கின்றனர். ஆனால் அவர்
    களிடம் பழைய பாடல்களே அதிகம் இருந்தன. திருச்சி
    லோகநாதன், பி.பி.ஸ்ரீனிவாஸ், கண்டசாலா, டி.ஏ.மூர்த்தி
    போன்றவர்களின் பாடல்கள் அடங்கிய இசைத் தட்டுகள்
    அவர்களிடம் இருந்தன. இசைத்தட்டுகளைச் சேகரிப்பதில்
    எனது தம்பி மகாலிங்கம் பேருதவியாக இருக்கிறார்.
    எனக்குத் தெரிந்து சென்னைக்கு அருகில் உள்ள திருநின்ற
    வூரில் ஒருவர் என்னைப் போலவே இசைத் தட்டுகளைச்
    சேகரித்து வைத்திருக்கிறார். ஆனால் இசைத் தட்டுகளை
    முதன்முதலில் சிடி வடிவில் மாற்றிப் பாதுகாக்கும் தனிநபர்
    நானாகத்தான் இருப்பேன்.
    இசைத்தட்டுகள் இப்போது புழக்கத்தில் இல்லை. உங்க
    ளிடம் உள்ள இசைத் தட்டுகளும் பயனில்லாமற் போய்வி
    டுமே?
    இப்போது இசைத்தட்டுகள் வருவதில்லை. ரிக்கார்டு
    பிளேயர்கள் இப்போது இல்லை. அதில் ஏதாவது பழுது ஏற்
    பட்டால் அவற்றைச் சரிசெய்ய புதிய உதிரிபாகங்கள்
    கிடைப்பதில்லை. இந்தநிலையில் இந்த இசைத் தட்டுகளில்
    உள்ள பழைய பாடல்கள் அழிந்துவிடும் நிலை உள்ளது.
    எனவே அவற்றை நவீனத் தொழில்நுட்பத்தின் அடிப்ப
    டையில் சிடி வடிவில் மாற்றி வருகிறேன். இதனால் பழைய
    அரிய இசை, பாடல்கள் அழிந்துவிடாமல் காப்பாற்ற முயற்
    சித்துக் கொண்டிருக்கிறேன்.
    பழைய பாடல்களை எதற்காகக் காப்பாற்ற வேண்டும்?
    பழைய பாடல்கள், இசை நமது முன்னோர்கள் நமக்கு
    விட்டுச் சென்ற செல்வம். அவற்றைப் பாதுகாப்பது நமது
    கடமை. மேலும் பழைய பாடல்களைக்
    கேட்கும் போது ஏற்படும் மன மகிழ்ச்சி,
    மன அமைதிக்கு எல்லையே கிடை
    யாது. பழைய பாடல்களில் நமது பாரம்
    பரிய இசை, நாட்டுப்புற இசை எல்லாம்
    கலந்த கலவை இருந்தது. இப்போது
    மேற்கத்திய இசையை மட்டுமே தனியா
    கப் பயன்படுத்துகிறார்கள். பழைய
    பாடல்களுக்கு ஒரு மதிப்பு இருப்பதால்
    தான் பழைய பாடல்களை இப்போது
    ரீமிக்ஸ் பண்ணுகிறார்கள்.
    இந்த இசைத் தட்டுகளால் வேறு
    என்ன பயன் இருக்கிறது என்று
    நினைக்கிறீர்கள்?
    என்னிடம் அதிக அளவு பழைய
    பாடல்கள் உள்ளதால், கல்லூரிகளில்
    இசையைப் பாடமாகப் படிக்கும்
    ஆராய்ச்சி மாணவர்கள் என்னிடம் வரு
    கின்றனர். பழைய பாடல்களை கேட்
    டுக் குறிப்பெடுத்துக் கொண்டு செல்
    கின்றனர். எந்தப் பாடலை யார் பாடியது, எந்தப் படத்தில்
    அந்தப் பாடல் இடம் பெற்றது போன்ற சந்தேகங்களை எல்
    லாம் என்னிடம் கேட்கின்றனர். என்னுடைய சேகரிப்புகள்
    இந்த விதத்தில் பயன்படுவது எனக்கு மிகுந்த சந்தோஷத்
    தைத் தருகிறது.
    ‘சுந்தரமூர்த்தி நாயனார்' என்ற திரைப்படத்துக்காக புகழ்
    பெற்ற பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் பாடியி
    ருக்கிறார். அந்தப் பாடல்கள் அவரிடம் இல்லை. அதற்காக
    அவர் என்னை ஒருமுறை அணுகியது எனக்கு இன்றும்
    பெருமையாக இருக்கிறது.
    இருந்தாலும் இவற்றைத் தொடர்ந்து பராமரிக்க முடி
    யுமா? எல்லாப் பாடல்களையும் சிடி வடிவில் மாற்ற முடி
    யுமா? என்று நினைக்கும்போது மலைப்பாக உள்ளது.
    யாராவது என்னைவிட நன்கு பராமரிப்பதில் ஆர்வம்
    உடைய தனிநபர்களோ, அறக்கட்டளையோ அல்லது
    அரசோ இதை எடுத்து நன்கு பராமரிக்க முன்வந்தால் என்
    அரிய சேகரிப்பைத் தந்துவிடலாம் என்று கூட நினைக்கி
    றேன்.
    ஏனென்றால் இந்த இசைத் தட்டுகளைச் சேகரிப்பதற்கு
    நான் எடுத்துக் கொண்ட அரிய சிரமமான முயற்சிகளை
    விட பழைய பாடல்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கிய
    மானது.

    http://www.dinamani.com/Kadhir/832009/3.pdf

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. Sports News And Tidbits
    By Sanguine Sridhar in forum Sports
    Replies: 175
    Last Post: 10th July 2017, 04:48 AM
  2. Latest News & Other Tidbits on AR Rahman (II)
    By NOV in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 1486
    Last Post: 2nd September 2009, 08:30 AM
  3. ARR News and other Tidbits
    By NOV in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 1461
    Last Post: 22nd July 2008, 06:14 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •