Page 22 of 37 FirstFirst ... 12202122232432 ... LastLast
Results 211 to 220 of 361

Thread: Bhakthi Padalgal

  1. #211
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன்
    புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை
    சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,
    பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே.

    நான்கு வேதங்கள் புகழ்ந்து சொல்லியபடி அபிராமி தாயை தியான யோகம் முதலியவற்றால் தொழுகின்ற அடியவர்களை தொழுகின்ற அடியார்க்கு அடியவர்கள், பலவகை இசைக்கருவிகள் இனிதாக முழங்கி வர, வெள்ளையானையாகிய ஐராவததின் மேல் செல்லும் இந்திர பதவி முதலான செல்வங்களைப் பெறுவார்கள்.

    melliya nNuN idai min anaiyaaLai virichadaiyOn
    pulliya men mulaip pon anaiyaaLai, pukazhnthu maRai
    cholliyavaNNam thozhum adiyaaraith thozhumavarkku,
    palliyam aarththu ezha, veN pakadu URum padham tharumE.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #212
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உன் தன்
    இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய். இனி, யான் ஒருவர்
    மதத்தே மதி மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்,
    முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும்முகிழ் நகையே.

    அபிராமி தாயே! மும்மூர்த்திகளும் வணங்கிப் போற்றித் தொழுகின்ற புன்னகையையுடையவளே. உன்னுடைய ஞானத்திற்காகவே உருகிநின்ற என்னை உன் பாததிலேயே பற்றும்படி செய்து, ஆட்கொண்டாய். இனி நான் வேறொரு மதத்திலே மன மயக்கம் கொள்ள மாட்டேன். அவர்கள் செல்லும் வழியிலும் செல்ல மாட்டேன்.

    pathaththE uruki, nNin paadhaththilE manam paRRi, uNnthan
    idhaththE ozhuka, adimai koNdaay; ini, yaan oruvar
    madhaththE madhi mayankEn; avar pOna vazhiyum chellEn--
    mudhal thEvar moovarum yaavarum pORRummukizh nNakaiyE!

  4. #213
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    நகையே இது, இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு
    முகையே முகிழ் முலை, மானே, முது கண் முடிவுயில், அந்த
    வகையே பிறவியும், வம்பே, மலைமகள் என்பதும் நாம்,
    மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.

    அபிராமி தேவியின் அடியார்கள் தேவியை நினத்து, உணர்ச்சிப்பெருக்கால், பல விதமாக போற்றி வழிபடுகிறார்கள். அவளுக்கு ஒரு பிறவியும், தோற்றமும் கொடுத்து சொல்வது மிகையே ஆகும். இனி நாம் செய்ய வேண்டியது, அவளின் உண்மை நிலையை அறிதலேயாகும்.

    nNakaiyE iqthu; intha NYaalam ellaam peRRa nNaayakikku,
    mukaiyE mukizh mulai, maanE; mudhu kaN mudivu_il; antha
    vakaiyE piRaviyum; vambE, malaimakaL enpathum nNaam;
    mikaiyE ivaLthan thakaimaiyai nNaadi virumbuvathE.

  5. #214
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
    அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
    கரும்பின் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
    தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.

    அபிராமி தாயை பக்தியோடு விரும்பி தொழும் அடியார்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகி, மெய் சிலிர்த்து, அறிவு மறந்து, தேனுண்ட வண்டு போல் களித்து, மொழி தடுமாறி, முன்பு சொல்லிய பித்தரைப் போல் ஆவார்கள் என்றால், அப்பேரானந்தத்திற்கு மூலமான அம்பிகையின் சமயமே மிகச் சிறந்ததாகும்.

    virumbith thozhum adiyaar vizhinNeer malki, mey puLakam
    arumbith thathumbiya aanantham aaki, aRivu izhanthu
    karumbin kaLiththu, mozhi thadumaaRi, mun chonna ellaam
    tharum piththar aavar enRaal abiraami chamayam nNaNnRE

  6. #215
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
    ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம், எனக்கு உள்ளம் எல்லாம்
    அன்றே உனது என்று அளித்து விட்டேன், அழியாத குணக்
    குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே.

    அபிராமி தாயே! அழியாத குணக் குன்றே! அருட் கடலே! மலையரசன் பெற்றெடுத்த கோமள வல்லியே! எனக்கு உரிமை என்று எப்பொருளும் இல்லை. அனைத்தையும் அன்றே உன்னுடையதாக்கி விட்டேன். இனி எனக்கு நல்லதே வந்தாலும், தீமையே விளைந்தாலும், அவற்றை உணராது விருப்பு, வெறுப்பு அற்றவனாவேன். என்னை உனக்கே பரம் என ஆக்கினேன்.

    nNaNnRE varukinum, theethE viLaikinum, naan aRivathu
    onREyum illai; unakkE param: enakku uLLa ellaam
    anRE unathu enRu aLiththu vittEn:- azhiyaatha kuNak
    kunRE, arutkadalE; imavaan peRRa kOmaLamE!

  7. #216
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    கோமளவல்லியை, அல்லியந் தாமரைக் கோயில் வைகும்
    யாமாள வல்லியை, ஏதும் இலாளை, எழுதரிய
    சாமள மேனிச் சகலகலா மயில்தன்னை, தம்மால்
    ஆமளவும் தொழுவார், எழு பாருக்கும் ஆதிபரே.

    அபிராமி தேவியை, அழகிய மென்மையான தாமரையைக் கோயிலாகக் கொண்ட யாமளவல்லியை, குற்றமற்றவளை, எழுதற்கு இயலாத எழில் கொண்டவளை, சகல கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை, தம்முடைய சக்திக்கு எற்ப வழிபடுபவர்கள், ஏழுலகையும் ஆட்சி புரியும் அதிபர்கள் ஆவார்கள்.

    kOmaLavalliyai, alliyanN thaamaraik kOyil vaikum
    yaamaLa valliyai, Etham ilaaLai, ezhuthariya
    chaamaLa mEnich chakalakalaa mayilthannai, thammaal
    aamaLavum thozhuvaar, ezhu paarukkum aathiparE.

  8. #217
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    ஆதித்தன், அம்புலி, அங்கி குபேரன், அமரர்தம் கோன்,
    போதிற் பிரமன் புராரி, முராரி பொதியமுனி,
    காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
    சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர், தையலையே.

    அபிராமி அன்னையை, புண்ணியம் பல செய்து, அவற்றின் பயனையும் அடைந்த சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், தேவர்களின் தலைவன் இந்திரன், தாமரை மலரில் உதித்த பிரமன், முப்புரங்களை எரித்த சிவ பெருமான், முரனைத் தண்டித்த திருமால், பொதிய மலை முனியாகிய அகத்தியர்,போர் புரியும் கந்தன், கணபதி, மன்மதன் முதலாகிய எண்ணற்ற தேவர்கள் போற்றித் துதிப்பர்.

    aadhiththan, ambuli, anki kubEran, amarardham kOn,
    pOthiR piraman puraari, muraari podhiyamuni,
    kaadhip porupadaik kanthan, kaNapathi, kaaman mudhal
    chaathiththa puNNiyar eNNilar pORRuvar, thaiyalaiyE.

  9. #218
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்க்கு
    கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரலந்தது எங்கே?
    மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
    பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங்குயிலே.

    அபிராமி தாயே! நீ உண்மை பொருந்திய நெஞ்சைத் தவிர வஞ்சகர்களுடைய பொய் மனத்தில் ஒரு போதும் வந்து புகுந்தறியாதவள். பூங்குயில் போன்றவளே, சிவபெருமானாகிய சங்கரரின் கையிலிருந்த தீயும், முடி மேல் இருந்த ஆறும்(கங்கை) எங்கே ஒளிந்து கொண்டனவோ?

    thaivanthu nNin adith thaamarai choodiya chankaraRku
    kaivantha theeyum, thalai vandha aaRum, kalanthathu enkE?--
    mey vandha nenchin allaal orukaalum virakar thankaL
    poyvandha nenchil, pukal aRiyaa madap pooNG kuyilE!

  10. #219
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை, கோல வியன்
    மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை, வந்து உதித்த
    வெயிலாய் இருக்கும் விசும்பில், கமலத்தின்மீது அன்னமாம்
    கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.

    அபிராமி தாயே! கடம்பவனத்தில் உறைந்த குயிலே(மதுரை), இமயமலையில் தோன்றிய அழகிய மயிலே, ஆகாயத்தில் நிறைந்திருக்கும் ஞானசூர்ய ஒளியே(சிதமபரம்), தாமரை மீது அன்னமாக அமர்ந்திருக்கும் திருக்கோலத்தையுடையவளே(திருவாருர்). கைலயங்கிரித் தலைவனான சிவபெருமானுக்கு மணம் முடித்த மலையரசன் மகளே!
    (மூலாதாரம்-திருவாருர், ஹிருதயஸ்தானம்-சிதம்பரம், துவாதசாந்தம்-மதுரை)

    kuyilaay irukkum kadampaadaviyidai; kOla viyan
    mayilaay irukkum imayaachalaththidai; vandhu udhiththa
    veyilaay irukkum vichumbil; kamalaththinmeethu annam am;
    kayilaayarukku anRu imavaan aLiththa kanankuzhaiyE

  11. #220
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
    கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும்
    விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
    உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!

    அபிராமி தாயே! குழையிலே தவழும்படியான கொன்றை மலரால் தொடுத்த, மணம்கமழும் மாலை அணிந்தவளே, மூங்கிலை ஒத்த அழகிய கரும்பு வில்லும், ஐவகை மலர் அம்பும், வெண்மையான சிரிப்பும், மானை ஒத்த மருண்ட கண்களுமே எப்பொழுதும் என் நெஞ்சில் நிறைந்திருக்கின்றது. அத் திருமேனியையே நான் வழிபடுகின்றேன்.

    kuzhaiyaith thazhuviya konRaiyanN thaar kamazh konkaivalli
    kazhaiyaip porutha thirunNedunN thOLum, karuppu villum
    vizhaiyap poru thiRal vEriyam paaNamum veN nNakaiyum
    uzhaiyaip porukaNNum nenchil eppOthum udhikkinRavE

Page 22 of 37 FirstFirst ... 12202122232432 ... LastLast

Similar Threads

  1. Comedy in the name of 'Bhakthi Padangal' !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 2
    Last Post: 5th August 2010, 08:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •