Page 21 of 37 FirstFirst ... 11192021222331 ... LastLast
Results 201 to 210 of 361

Thread: Bhakthi Padalgal

  1. #201
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே, அகிலாண்டமும் நின்
    ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்,
    களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு
    வெளியாய்விடின், எங்கனே மறப்பேன்,நின் விரகினையே?

    அபிராமி தாயே! வண்டுகள் ஆர்க்கும் தாமரையில் வாழ்பவளே! பேரழகானவளே, உலகமெல்லாம் ஒளியாக நின்ற ஒளி வீசும் நின் திருமேனியை நான் நினைக்கும் போது களிப்படைகின்றேன். அக்களிப்பின் மிகுதியால் அந்தக் காரணங்கள் விம்மிக் கரைபுரண்டு, பரவெளியாகவுள்ள ஆகாயத்தில் ஒன்றி விடுகின்றன. இவ்வளவு பேரருள் காட்டியருளிய உன் தவநெறியை நான் எவ்வாறு மறப்பேன். மறவேன்.

    aLi aar kamalaththil aaraNankE! akilaaNdamum nNin
    oLiyaaka nNinRa oLir thirumEniyai uLLuthoRum,
    kaLi Aki, anthakkaraNankaL vimmi, karaipuraNdu
    veLiyaayvidin, eNGNGanE maRappEn, nNin virakinaiyE?

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #202
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    விரவும் புது மலர் இட்டு, நின் பாத விரைக்கமலம்
    இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்
    பரவும் பதமும், அயிராவதமும், பகீரதியும்
    உரவும் குலிகமும், கற்பகக் காவும் உடையவரே.

    அபிராமி தாயே! உன்னுடைய மணம்மிக்க திருவடித் தாமரைகளில் தேன் சிந்தும் புது மலர்களை வைத்து, இரவு பகலாக தியானம் செய்யும் பெரியோர்கள், தேவர்கள் முதலிய யாவரும் இந்திர பதவி, ஐராவதம் என்ற யானை, ஆகாய கங்கை, வலிமையான வஜ்ஜிர ஆயுதம், கற்பகச் சோலை போன்றவற்றை முறையாகப் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர். அருள்வாயாக.

    viravum pudhu malar ittu, nNin paadha viraikkamalam
    iravum pakalum iRaincha vallaar, imaiyOr evarum
    paravum padhamum, ayiraavadhamum, pakeerathiyum,
    uravum kulikamum, kaRpakak kaavum udaiyavarE.

  4. #203
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச் செஞ்
    சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல்
    இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்
    படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.

    அடியார்களே! அபிராமி இடையில் செம்பட்டு அணிந்தவள். ஒளி வீசும் பிறைச் சந்திரனை அணிந்த சடையை உடையவள். வஞ்சகர்களின் நெஞ்சிலே குடி கொள்ளாதவள். சிவ பெருமானின் இடப் பாகத்தில் குடி கொண்டவள். என்னை இனி இவ்வுலகில் பிறக்க வைக்க மாட்டாள். அந்த தேவியை நீங்களும் போற்றுங்கள், நீங்களும் பிறவி எடுக்காப் பேறேய்த அவளையே தியானம் செய்யுங்கள்.

    udaiyaaLai, olku chempattudaiyaaLai, oLirmathich cheNY
    chadaiyaaLai, vanchakar nenchu adaiyaaLai, thayanku nNuN nNool
    idaiyaaLai, enkaL pemmaan idaiyaaLai, iNGku ennai inip
    padaiyaaLai, unkaLaiyum padaiyaavaNNam paarththirumE.

  5. #204
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச் சிறை வண்டு
    ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும், என் அல்லல் எல்லாம்
    தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும்
    வார்க் குங்கும முலையும், முலைமேல் முத்து மாலையுமே.

    அபிராமி தாயே! நான் எத்திசையை நோக்கினும் உன்னுடைய படைகளாகிய பாசமும், அங்குசமும், வண்டுகள் மறைந்திருக்கும் மலர் அம்பு ஐந்தும், கரும்பு வில்லும், என் துன்பங்களையெல்லாம் தீர்க்கக் கூடிய நின் திருமேனி அழகும், அசையும் முத்து மாலையும் என் கண்முன் காட்சியாய் நிற்கின்றன.

    paarkkum thichaithoRum paachaankuchamum, panich chiRai vaNdu
    aarkkum pudhumalar ainthum, karumbum, en allal ellaam
    theerkkum thiripuraiyaaL thiru mEniyum, chiRRidaiyum,
    vaark kunkuma mulaiyum, mulaimEl muththu maalaiyumE.

  6. #205
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
    காலையும், சூடகக் கையையும் கொண்டு, கதித்த கப்பு
    வேலை வெங் காலன் என்மேல் விடும் போது, வெளி நில் கண்டாய்
    பாலையும், தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.

    அபிராமி தாயே! பாலையும், தேனையும், பாகையும் ஒத்த இனிய மொழியுடையவளே. இயமன் பல கிளைகளைக் கொண்ட சூலத்தை என் மேல் செலுத்தும் போது, திருமாலும், பிரம்மனும், வேதங்களும், வானவர்களும் தேடியும் காணாத திருப்பாதங்களையும் சங்கையணிந்த திருக்கரங்களையும் கொண்டு, நீ என் முன் காட்சி தந்தருள வேண்டும்.

    maal ayan thEda, maRai thEda, vaanavar thEda nNinRa
    kaalaiyum, choodakak kaiyaiyum, koNdu--kathiththa kappu
    vElai veNG kaalan eNnmEl vidumpOthu, veLi nNil kaNdaay
    paalaiyum thEnaiyum paakaiyum pOlum paNimozhiyE!

  7. #206
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத, நின் திருமூர்த்தம், என் தன்
    விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால், விழியால் மதனை
    அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
    பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே.

    அபிராமி தாயே! நெற்றிக்கண் கொண்டு மன்மதனை எரித்த எம்பிரானாகிய சிவ பெருமானின் அழியாத யோக விரதத்தை உலகத்தார் பழிக்குமாறு, அவரது இடப்பாகத்தில் இடம் கொண்டு ஆள்பவளே. எளியோனாகிய என் கண்களிலும், என் செயல்களிலும் வாக்குக்கும், மனதிற்கும் எட்டாத நின் திருவுருவமே தோன்றிக் காட்சியளிக்கின்றதே.

    mozhikkum ninaivukkum ettaatha nNin thirumoorththam, eNnthan
    vizhikkum vinaikkum veLinNinRathaal,--vizhiyaal madhanai
    azhikkum thalaivaa, azhiyaa virathaththai aNdam ellaam
    pazhikkumpadi, oru paakam koNdu aaLum paraaparaiyE!

  8. #207
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    பரம் என்று உனை அடைந்தேன், தமியேனும், உன் பத்தருக்குள்
    தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம்
    புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில் அயன்
    சிரம் ஒன்று செற்ற, கையான் இடப் பாகம் சிறந்தவளே.

    அபிராமி தாயே! பகைவர்களது முப்புரத்தை எரிக்க மேரு மலையை வில்லாகக் கொண்டவரும், திருமாலின் உச்சித் தாமரையில் தோன்றிய பிரம்மனின் சிரம் ஒன்றைக் கிள்ளியழித்தவருமான சிவ பெருமானின் இடப்பாகத்தில் சிறந்து வீற்றிருப்பவளே. யாருமே துணையில்லாத நான், நீயே கதியென்று சரணடந்தேன். எளியோனாகிய என்னிடத்தில்,உன் பக்தருக்குள்ள தரம் இல்லையென்று நீ தள்ளக் கூடாது. தள்ளினால் அது உன் திருவருள் பெருமைக்கு அழகல்ல.

    param enRu unai adainthEn, thamiyEnum; un paththarukkuL
    'tharam anRu ivan' enRu thaLLath thakaathu--thariyalardham
    puram anRu eriyap poruppuvil vaankiya, pOthil ayan
    chiram onRu cheRRa, kaiyaan idap paakam chiRanthavaLE!

  9. #208
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like
    சிறக்கும் கமலத் திருவே, நின்சேவடி சென்னி வைக்கத்
    துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும், துரியம் அற்ற
    உறக்கம் தர வந்து, உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
    மறக்கும் பொழுது, என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே.

    அபிராமி தாயே! சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் செல்வமே! என்னுடைய உயிருக்கும், உடலுக்கும் தொடர்பற்று, அறிவு மறதி மிகுந்து இருக்கும் வேளையில் உன்னுடைய சேவடி என்னுடைய சென்னியில் பட வேண்டும். ஜீவ போதம் அற்ற சிவானுபவத் தூக்கத்தை அடியேனுக்குத் தரும் பொருட்டு, நின் திருவடிகள் துன்பப்பட்டாலும் எழுந்தருளி என்முன்னே வரவேண்டும்.

    chiRakkum kamalath thiruvE! nNiNnchEvadi chenni vaikkath
    thuRakkam tharuma nNin thuNaivarum nNeeyum, thuriyam aRRa
    uRakkam thara vandhu, udampOdu uyir uRavu aRRu aRivu
    maRakkum pozhuthu, en munnE varal vENdum varunthiyumE.

  10. #209
    Senior Member Senior Hubber anbu_kathir's Avatar
    Join Date
    Mar 2006
    Posts
    451
    Post Thanks / Like
    wrap,

    Thanks for continuing it all along.

    Love and Light.

  11. #210
    Veteran Hubber wrap07's Avatar
    Join Date
    Dec 2007
    Posts
    2,092
    Post Thanks / Like


    வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து,
    இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப்
    பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு
    விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.

    அபிராமி தாயே! நீ என் மனத் தாமரையிலேயே, உறைவிடமாக கருதி வீற்றிருப்பதால், எனக்குக் கிடைக்காத பொருள் ஒன்றும் இல்லை. மேலும் நான் பிறந்தும், இறந்தும் வருந்தாமல் இருக்க அருள் புரிந்தாய். பாற் கடலில் தோன்றிய அமுதத்தை திருமால் தேவர்களுக்குக் கொடுக்க முதலாக இருந்த தாயே, இனி எனக்கு என்ன குறை?

    varunthaavakai, en manaththaamaraiyinil vandhu pukunthu,
    irunthaaL, pazhaiya iruppidamaaka; ini enakkup
    porunthaathu oru poruL illai--viN mEvum pulavarukku
    virunthaaka vElai marunthaanathai nNalkum melliyalE!

Page 21 of 37 FirstFirst ... 11192021222331 ... LastLast

Similar Threads

  1. Comedy in the name of 'Bhakthi Padangal' !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 2
    Last Post: 5th August 2010, 08:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •