View Poll Results: Do you believe in "Karma"

Voters
29. You may not vote on this poll
  • yes,

    23 79.31%
  • No,

    5 17.24%
  • do know,

    1 3.45%
Page 52 of 80 FirstFirst ... 242505152535462 ... LastLast
Results 511 to 520 of 800

Thread: Cho-vin "EngE BraahmNan"? Jaya tv

  1. #511
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    5,098
    Post Thanks / Like
    May 13 2009.

    Part 1:

    ஆஷோக்கிற்கு சிகிச்சை அளிப்பதாய் உறுதியளித்த இரண்டு மருத்துவர்களும், தற்போது முடியாது என்று கைவிரித்துவிட, எரிச்சலாகிறார் நாதன். அவனுக்கு வியாதியும் இல்லை, விரக்தியும் இல்லை. யோகாபிமானம் மட்டும் ச்ற்றே இல்லை என்றும், வாழ்க்கை மீதும், மனிதர்களின் மீதும் பற்றுதலை உண்டாக்கிவிட்டால், அஷோக் நிலமை மாறிவிடும் என்று வசு கூற, ஆக, இவன் சந்யாசியாகவும் இல்லாமல், சக மனிதரைப் போலவும் இல்லை, "திரிசங்கு சொர்கம்" என்கிறார் நாதன்.

    --
    "திரிசங்கு சொர்கம்" என்றால் என்ன என்று தயாரிப்பாளர் கேட்க, சோ அதற்கு விளக்கம் அளிக்கிறார். (Folks, I will try to search for this story in net and post it soon. In case i dont get it, akka please help )
    --

    கோவிலுக்கு போவது, பூஜை செய்வது என எதிலும் குறைவில்லை, இருப்பினும் தம் ப்ரார்த்தனைகள் பகவான் செவிகளுக்கு எட்டவில்லை என்றும், பகவானுக்கு ஒரு Hearing Aid தேவைப் படுகிறது என்றும், வசு நகைச்சுவை கலந்து தன் வேதனையை வெளிப்படுதுகிறாள். அதற்கு "சாஸ்திரிகள் தான் அந்த Hearing Aid என்றும், நம் ப்ரார்த்தனைகளை பகவான் செவிகளுக்கு எட்டச் செய்வது இவர்கள் தான் என்று சாஸ்திரிகளை பர்த்து நாதன் கூற, சாஸ்திரிகள் முகத்தில் மட்டும் அல்ல மலர்ச்சி, நம் முகத்திலும் தான்

    ---

    Note: Giri's parents eloped and married!

    கிரி (கிருபவின் நண்பன்), ஸ்லோக புத்தகங்கள் விற்கும் தாத்தாவை காண்கிறான். தான் அவரிடம் புத்தகங்கள் வாங்கி இருப்பதை நினைவுப்படுத்தி, அவரை தன் இல்லத்திற்கு அழைத்து செல்கிறான். அவரைப் பார்த்த மாத்திரதில் அதிர்ச்சி அடைகிறாள் அவன் அம்மா. காரணம், அவர் வேறு யாருமில்லை, அவளின் சொந்த அப்பா தான். இத சற்றும் எதிர்ப்பார்க்கத கிரி, இத்தனை நாளும் வயது காரணமாக அவரை தாத்தா என்று அழைத்ததையும், இன்று அவர் தான் அவனின் சொந்த தாத்தா என்ற உண்மை தெரிந்ததும், நெகிழ்கிறான்.

    கிரியின் அப்பா வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன் நடந்ததை மனதில் வைத்துக்க்கொண்டு, கிரியின் தாத்தாவை அவமதிப்பார், என்று நாம் யூகித்துக்கொண்டிருக்க, அவரோ, தன்னை ஆசிர்வதிக்குமாறு வேன்டுகிறார். திருமணதின் போது கிடைக்காமல் போன ஆசிர்வதம் இப்போது கிடைக்கட்டும் என்று கூறுகிறார். ச்ந்தோஷம் ஒரு புறம் குற்ற உணர்ச்சி மறுபுறம் என தாத்தாவின் முகபாவம் கனகச்சிதம்.

    இளையவளின் பேச்சைக் கேட்டு இவர்கள் கல்யாணத்தை ஒதுக்கியதாகவும், பின் இளயவளே இவரின் சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வாங்கிக்கொண்டு விட்டாள் என்றும், அவளின் மூலமாக வந்த பிள்ளைகள் எஞ்சி இருந்த சொத்தையும் வாங்கிக்கொண்டு தன்னை ஒதுக்கி விட்டாதாகவும், கூறி தன் குமுறலை அழுகையாக வெளிப்படுதுகிறார் தாத்தா. அன்று இவர்களுக்கு செய்த பாவம் மொத்தமும் தன்னையே திருப்பி தாக்கி விட்டதாக கூரி அழுகிறார். அதனை மறுத்து பேசும் கிரியின் அப்பா, பெற்றவரின் மனதை ரணமாக்கி விட்டு, அவரின் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டது மட்டும் எப்படி சரியாகும் என்று கூறி தன் குற்ற உணர்ச்சியையும் வெளிப்படுதுகிறார். நடந்தஹை மறந்து, இனி தங்களுடனே சேர்ந்து இருக்குமாறு தாத்தாவை கேட்டுக்கொள்கிறார் அப்பா. தன் விருப்பமும் அது தான் என்று கூறி சம்மதிக்கிறார் தாத்தா.

    அன்றே உங்கள் திருமணத்திற்கு சம்மதித்து சந்தோஷமாக இருந்திருக்கலாம் என்று எண்ணி வருத்தப்படும் தாத்தாவை, "Past is an outdated cheque, future is a post dated cheque but present is the hot cash" என்று கிரியின் அப்பா கூற, கிரி தன் பங்குக்கு, வாழ்க்கை என்பது ஒரு Cone Ice cream அது உருகிவிடும் முன், நாம் அதனை அனுபவித்துவிடவேன்டும் என்கிறான். அதற்கு, எல்லா ice cream'um உருகிப்போய், வெறும் empty cone-ஆகத்தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன் என்று வருதத்துடன் பதிலளிக்கிறார் தாத்தா. "We will fill the empty cone " தாத்தா என்று கிரி கூற, "with more and more ice creams" என்று கூறி முடிக்கிறார் கிரியின் அப்பா.
    யுவன் இசை ராஜா...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #512
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    5,098
    Post Thanks / Like
    May 13: Part 2:

    வேலைக்கு சென்று திரும்பும் நீலகண்டணை, வாசலில் வழிமறித்து, அவரிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேன்டும் என்று கூறுகிறார் பாகவதர். பாகவதரை வெறுத்து ஒதுக்கும் நீலகண்டன், வழக்கம் போல், அவருக்கு செவி சாய்க்காமல் செல்கிறார். வலுக்கட்டாயமக நீலகண்டனை நிறுத்தி, அஷோக்கிற்கு சிகிச்சை அளிக்க முன் வ்ந்த மருத்துவர்கள் இருவரும் இப்போது முடியாது என்று கூறியதை சொல்லி சந்தோஷப்படுகிறார். எரிச்சலாகும் நீ.க , மருத்துவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போனதை நினைத்து நாங்கள் வருத்ததில் இருக்கிறோம், உமக்கு சந்தோஷமா இருக்கா?" என்று வசை பாடுகிறார்.

    அஷோக் extraordinary person என்பதை இப்பொழுதாவது புரிந்துக்கொள்ளுங்கள் என்கிறார் பாகவதர். நீ.க கோபத்தில், தான் முட்டாள்களோடு பேசுவதில்லை என்று கூறி வீட்டிற்குள் விரைகிறார். பாகவதர் அவரை விடுவதாய் இல்லை. ஆனால் நான் பேசுவேன் என்று பின் தொடர்ந்து வீட்டிற்குள் செல்கிறார். பாகவதரின் இச்செயலால் எரிச்சலாகும் நீ.க பாகவதர் தன் வீட்டிற்குள் வந்தது தனக்கு பிடிக்கவில்லை என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிடுகிறார். "எனக்கும் மரியாதை, சுய கவுரவம் எல்லாம் உண்டு. உம்ம மாதிரி நானும் எல்லாத்தையும் பார்ப்பவன் தான்" என்று கூறும் பாகவதரிடம், எதற்காக தன்னை பின் தொடர்ந்து வீட்டிற்குள் வந்தீர்கள் என்று கேட்கிறார் நீலகண்டன். அதற்கு, தானாக வரவில்லை என்றும், ஏதொ ஒரு சக்தி தான் தன்னை உள்ளே அழைத்து வந்ததாக கூறுகிறார் பாகவதர். இதற்கு விளக்கம் கேட்கும் நீலகண்டனிடம் "ஒரு வேளை நீர் மாற வேன்டிய நேரம் வந்து விட்டதோ என்னவோ. உமக்கு ஒண்ணு தெரியுமா. இந்த வாழ்க்கையே Opposite அச்சாணியைக்கொண்டுதான் சக்கரமாய் சுற்றுகிறது. Good என்றால் evil இருக்கும், பகல் எனில் இரவு இருக்கும், கோபம் எனில் சாந்தம் இருக்கும். இத்தனை நாள் கடவுள் இல்லை'னு சொல்லிண்டு இருந்தேள், சக்கரம் சுற்ற தொடங்கிவிட்டது.. அடுத்த நிலை, கடவுள் இருக்கார்'னு சொல்லப்போறேள். எந்த அஷோக்கப் பாத்து பைத்தியம், சித்த ப்ரம்மை பிடித்தவன்'னு சொன்னேளோ, அந்த அஷோக்கே உமக்கு குருவாகி கண்ணை திறக்க போகிறான், உம்முடைய அறியாமையை அழிப்பான், அவன் யாரென்று உலகத்துக்கு அறிவிக்கும் சமயம் வரும், அப்பொழுது அவன் யாரென்று உமக்கு தெரியும், நீர் யார் என்றும் உமக்கு புரியும்" என்று கூறுகிறார். எல்லாவற்றிற்கும் பதில் பேசும் நீலகண்டனிடமிருந்து இதற்கு பதில் இல்லை. முகதில் கலவரம். "தொடரும்" என்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன. ம்ம்...பொறுத்திருந்து பார்ப்போம்.
    யுவன் இசை ராஜா...

  4. #513
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    5,098
    Post Thanks / Like
    Akka, as usual first 5 mins miss pannittEn help pls
    யுவன் இசை ராஜா...

  5. #514
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    5,098
    Post Thanks / Like
    thAthA'va samaadhanappadutha use pannina "cheque", "ice cream" dialogues konjam cliche'va irundhalum, the way they have expressed it on the screen was thoroughly enjoyable.

    Nilagandan's reaction to bagawathar's speech was stunning.

    As usual, bagawathar did his part so well

    Why does the composer use "nenjinile nenjinile" tune in the BGM when Bagawathar followed Nilagandan. Inappropriate music for the scene.

    And,

    I got reminded of Anbu Kathir when Bhagavathar spoke about the concept of Duality!!
    யுவன் இசை ராஜா...

  6. #515
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by viraajan
    May12: Part 2:

    வேலைக்கு சென்று திரும்பும் நீலகண்டணை,
    .


    improved lot

    keep up
    "அன்பே சிவம்.

  7. #516
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    5,098
    Post Thanks / Like
    Encouraging. Thanks aana
    யுவன் இசை ராஜா...

  8. #517
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    May 13, 2009


    [html:790ecb488e] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13453542&vid=5063834&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8871/85473579.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13453542&vid=5063834&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8871/85473579.jpeg&embed=1" ></embed></object>
    </div>[/html:790ecb488e]
    "அன்பே சிவம்.

  9. #518
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    5,098
    Post Thanks / Like
    Quote Originally Posted by aanaa
    May 13, 2009


    sorry - I will wait
    Hi Aana, that was May 13. I typed it wrongly

    Both the parts are from May 13 episode
    யுவன் இசை ராஜா...

  10. #519
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    5,098
    Post Thanks / Like
    May 14.

    Part I:

    அஷோக்கை குணப்படுத்த தான் ஒரு யோசனை கூற விழைவதாக கோமதி மாமி நாதனிடம் தெரிவிக்கிறார். நாதனும் செவி சாய்க்கிறார். (அந்த யோசனை என்னவென்று பின்னர் தெரிய வரும் ). மாமி யோசனை கூற, நதனுக்கு அந்த யோசனை சரி என்று படுகிறது. வசுவிற்கோ அது பிடிக்கவில்லை. மாமியின் யோசனை சரி இல்லை என்று அதனை நிராகரிக்க, நாதனோ அது தான் சரி என்று தீர்மானமாக கூறிவிடுகிறார். வேறு வழியின்றி வசுவும் சம்மதிக்கிறாள். ஆனால், "அவரை" நேரில் சென்று சந்திக்காமல், ஒரு கடிதத்தில் விபரத்தை எழுதி அனுப்புமாறு கோருகிறாள். நாதனும் சம்மதிக்கிறார். கடிதம் எழுதப்பட்டு மாமி மூலமாக "அவருக்கு" அனுப்பி வைக்கப்படுகிறது.

    அவர் வேறு யாரும் இல்லை. நீலகண்டன் தான். நாதன் நேரில் வராமல், தொலைப்பேசியிலும் தொடர்பு கொள்ளாமல், கடிதம் மூலமாக தொடர்பு கொண்டிருப்பது, நீலகண்டனுக்கு சற்றே அதிர்ச்சியைக் கொடுக்கிறது. கடிதத்தைப் படிக்கிறார். சற்றே கலக்கமாகிறார். மறூக்கவும் முடியாமல், சரி என்று ஒப்புக்கொள்ளவும் முடியாமல் குழம்பிப் போகிறார். இருப்பினும் நாதன் இதுவரை உதவி என்று தன்னை நாடியதில்லை, இது தான் முதல் முறை என்பதால், சரி என்று ஒப்புக்கொள்கிறார்.

    நீலகண்டனின் மகளான உமா மீது அஷோகிற்கு நல்ல மதிப்பு இருப்பதல், அவள் நினைதால் இவனை மாற்ற முடியும். எனவே, உமாவை அஷோக்குடன் பழக விடுவதன் மூலம் அஷோக்கின் போக்கை மாற்ற்லாம் என்பது தான் கோமதி மாமியின் யோசனை. இந்த உதவியைத் தான் கடிதம் மூலமாக கேட்டு அனுப்பினார் நாதன்.

    அஷோக் வீட்டிற்கு வருகிறாள் உமா.

    நாதன் பேசத்துவங்குகிறார். "Psychiatric treatment-ஆல் அஷோக்கிற்கு எந்த பிரயோஜனமும் இல்லை, சொல்லப்போனால், அந்த மருதுவத் துறைக்கே அவன் ஒரு சவாலக இருக்கிறான். மற்ற வியாதி என்றால், ஒரு முறை சரி வரவில்லை என்றால், வேரு ஒரு முறையைக் கையாளலாம். Allopathy இல்லை என்றால், ஆயுர்வேதம், யுனானி என பல முறைகள் இருக்கின்றன. ஆனால், அஷோகிற்கு ஏற்பட்டு இருக்கும் இந்த நிலையை சரி செய்ய இவை எல்லாம் உதவாது. அவன் ஆன்மீகத்தில் மூழ்கிக்கொண்டு இருக்கிறான். அவன் மீட்க உன்னால் மட்டுமே முடியும். அவனுக்கு உன் மீது அளவற்ற பற்று இருப்பது உண்மை. நீ நினைத்தால் அவனை மாற்ற முடியும்." என்று கூற, உடனே சம்மதம் தெரிவிக்கிறாள் உமா.

    அவள் செய்யும் இந்த உதவிக்கு கைமாறாக என்ன கேட்டலும் தருவதாக தெரிவிக்கிறார் நாதன். அஷோக்கை முழுமையாக மாற்றி விட்டால், அவனையே தனக்கு வாழ்க்கை துணையாக தர வேன்டுகிறாள். சற்றும் அதிர்ச்சியாகாத நாதன், அஷோக்கிற்கு புனர்ஜென்மம் கொடுக்க்க போகும் அவளை விட வேறு யாரும் சிறந்த துணையாக இருக்க முடியாது என்று கூறி, முழு சம்மதம் தெரிவிக்கிறார். சந்தோஷத்தில் திளைக்கிறாள்... முழு திருப்தியுடன் விடை பெறுகிறாள் உமா.

    அவள் சென்றபின், பூகம்பமாய் வெடிக்கிறாள் வசு. அஷோக்கை மாற்றி, தன் பிள்ளையாக திருப்பித் தர கேட்டால், அதற்கு பதிலாக அவனையே விலையாக கேட்கிறாள், என்று கொதித்தெழுகிறாள். எப்படியும் ஏதோ ஒரு பெண்ணைத் தான் மணமுடித்து வைக்க போகிறோம், அது இவளாக இருந்தால் என்ன? என்று நாதன் கேட்க, தன் பிள்ளை இப்படியே இருந்தாலும் பரவாயில்லை, இந்த திருமணம் நடக்காது என்று திட்தவட்டமாக மறுத்து விடுகிறாள் வசு.

    வீட்டிற்கு திரும்பும் உமா நடந்ததைஇ கூறி, தன் விருப்பத்தையும் தெரிவிக்கிறாள். அதிர்ச்சியாகும் குயிலி, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறாள். தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, நாதன் இந்த விஷயத்தைக் நீலகண்டனிடம் கூறி, அவரின் சம்மதத்தைக் கேட்கிறார். அதற்கு பதில் ஏதும் தராமல், பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கூறிவிடுகிறார்.

    நீலகண்டனும் செய்வதறியாது தவிக்கிறார். முதலில் அஷோக்கின் நிலமை சரி ஆகட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கிறார்.
    யுவன் இசை ராஜா...

  11. #520
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    எவ்வளவு முன்னேறி விட்டீர்கள்

    italic/ different color

    keep up
    "அன்பே சிவம்.

Page 52 of 80 FirstFirst ... 242505152535462 ... LastLast

Similar Threads

  1. "Padmashri" "Isaimani" Dr. Sirkali Govin
    By pulavar in forum Memories of Yesteryears
    Replies: 1
    Last Post: 5th February 2010, 03:19 PM
  2. "Nayakan" among "Time" mag's 100 best
    By arun in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 264
    Last Post: 20th June 2008, 09:36 PM
  3. Movies of "E" and "Raam" Jeeva
    By girishk14 in forum Tamil Films
    Replies: 184
    Last Post: 13th January 2007, 08:32 PM
  4. Use of word "Mythological" or "Myth" for
    By torchbearer in forum Indian History & Culture
    Replies: 10
    Last Post: 11th April 2006, 11:48 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •