Results 1 to 10 of 12

Thread: Oru kathai

Threaded View

  1. #1
    Senior Member Seasoned Hubber MumbaiRamki's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    884
    Post Thanks / Like

    Oru kathai

    'இன்னும் பத்து நிமிஷத்தில கால் பண்ணு ..இல்லாட்டி u r done. I had enough ' , மெலோடியாக ஆரம்பித்த செல்போன் உரையாடலை முடித்தேன். காரை வெளியே நிறுத்தினேன். காரை புட்டினேன். சாவி கிழே விழுந்தது. 'shit- என்று சாபமிட்டு , சாவியை எடுத்தேன்.

    'யார சார் பார்க்கணும் ?- மீசையும் அவன் தோல் நிறத்தில் கலந்து , பூமியிலிருந்து ஐந்தடி தாண்டாத அவன் உருவத்தின் மேல் பாகத்திலிருந்து இப்படி ஒரு கேள்வி.

    'சந்தானம் இல்லையா ? அவனுக்கு என்ன நல்லா தெரியும் . இங்க B4 ல இருந்தேன். இப்போ வேளச்சேரியில் சொந்த வீடு கட்டி அங்க போய்ட்டேன்.'

    ' நீங்க பாம்பே ல கூட வீடு கட்டிகொங்க ..இங்க யார பார்க்கணும் ?'

    அவன் தலையில் ஒரு குட்டு குட்டி அவன் உயரத்தில் இன்னும் ஒரு அடி குறைக்கலாம் போல இருந்தது .' வெங்கட் சார் B3 ல இருக்கார். அவர ..'

    'இதுல உங்க பெயரும் , போனும் எழுதிட்டு போங்க ' - RTO ஆபீஸில் அந்த கவர்ன்மென்ட் நாய்கள் பண்ணின பிகு நியாபகம் வந்தது . இல்லாத பெயரையும் , இல்லாத நம்பரையும் எழுதி விட்டு போன்னேன், தலையை ஆட்டி கொண்டு , இப்படி எழுதி என்ன யூஸ்ன்னு தெரியவில்லை !

    ஒரு இருட்டான பகுதியை தாண்டி மாடி படிகளை நோக்கி நடந்தேன் . நல்ல வேலை இந்த டஞ்சனைலிருந்து தப்பித்தேன். இருபது பழைய படிகளை தாண்டி ஒரு காலிங் பெல்லை அழுத்தினேன். இறக்க இன்னும் பத்து நாள் இருப்பது போல அது ஒலித்தது. ஒலித்த பின்பு அதை ICU விற்கு தான் எடுத்து கொண்டு போக வேண்டும்.

    லதா மாமி , வெங்கட் மாமா அதிகம் சண்டை போடாமல் ஐம்பது வருட திருமண உறவை போன வருஷம் முடித்தனர். எமனை மட்டுமே எதிர்பார்த்து இருக்கும் அவர்கள் , என்னை பார்த்ததும் கொஞ்சம் ஆச்சரியத்துடன் சந்தோஷம் கலந்து, பாதி போக்கை வாயில் தெரிந்தது. 'ஏன்னா , இங்க யார் வந்திருக்கா பாருங்கோ ?'- கேட்டு கேட்டு போரடித்த அதே வரவேற்ப்பு .

    'அந்த பையன் ன்னா , நம்ம எதுத்த ஆத்தில இருந்தாலே ! ' . மாமிக்கு என் பெயர் மறந்து விட்டது . ஒரு சில நிமிஷம் மாமாவுடன் பேசி விட்டு ' வாபா ராம்கி - ரொம்ப நாளா இந்த பக்கமே வரல ?' - (மறுபடியும் ஒரு cliche ) .. வெங்கட் மாமா கிரிக்கெட் பார்த்து கொண்டு இருந்தார்- நான் நுழையும் பொழுது . பூமி முன்று நிமிஷம் சுழல்வதற்குள் பத்து சானல்களை மாற்றி விட்டார் . மறுபடியும் அதே கிரிக்கெட் சானல். ' ஒரு உருப்படியான பிரோக்ராம் கூட இல்லை . DD நல்ல இருந்தது . it was peaceful, இப்போ நிறைய சானல் வந்து தரம் கொஞ்சம் கம்மியா இருக்கு '.

    'காபி சாபிடரயா ? ஜனனி எப்படி இருக்கா ? ஏதாவது குட் நியூஸ் உண்டா ? அம்மா அப்பா எங்க இருக்கா இப்ப ?

    எல்லாத்துக்கும் சேர்ந்து ஒரே பதில் தந்தேன் 'எல்லோரும் நல்ல இருக்காங்க மாமா'.அப்புறம் தெரியாமல் கேட்டு விட்டேன் ' நீங்க எப்படி இருக்கீங்க மாமா?' . என் நாக்கில் சனி வீடு கட்டி உட்கார்து விட்டான் போல .

    'ஐயம் பைன் பா. போன வாரம் ஒரு பை பாஸ் நடந்தது. left ஆர்டரியில் எதோ பிரச்சனையாம் . நேத்திக்கு கூட திருப்பி செக் அப் போயிருந்தேன் . அந்த டாக்டர் ரொம்ப கை ராசிகாரர் - பக்தவசலம்ன்னு மலர்ல இருக்கார். இவளுக்கு தான் கொஞ்சம் கஷ்டம் . உப்பில்லாமல் சமைக்கணும் , சாபிடனும் .'

    நான் என் செல்போனை பார்க்க ஆரம்பித்தேன்.

    'ஸ்ரீகாந்த் நேத்திக்கு கால் பண்ணினான் . ஐம்பதாயிரம் அனுப்பி இருக்கான் . சில்லு நேத்திக்கு என்கிட்டே பேசினான் . அவன் ரொம்ப புத்திசாலி . இப்பவே லேப்டாப் ஆபிரட் பண்ண தெரியுமாம். நீ அவன பார்த்திருக்கியா?.

    'பார்த்திருக்கேன் மாமா . இப்ப நல்ல வளர்ந்திருக்கான் போல '

    'அமாம் . பாவம் ஸ்ரீகாந்த்க்கு தான் ரொம்ப வேலை . இப்ப நிலைமை வேற செரியில்லை . நிறைய வேலை பார்த்தா தான் வேலைல இருக்க முடியும், forget promotions . ஆனா மாசா மாசம் இருபதினாயிரம் அனுப்பறான் .அங்க பனி ரொம்ப ஜாஸ்தி . ' - பத்து வருடமாய் இருக்கும் அவர் மகன் கூபிடாத அமெரிக்காவை பற்றி கொஞ்ச நேரம் ..

    எனக்கு செல்போனை தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை .பார்த்து கொண்டு இருந்தேன் . காலுக்கு காத்து கொண்டு இருந்தேன். 'ராம்கி . ஒரு சின்ன ஹெல்ப் பா . இந்த சி.டி மட்டும் சரியா ஓட மாடேங்கிர்து . கொஞ்சம் பாரேன் பா' - அதாவ்து, பார்த்து சரி பண்ணி , அந்த வீடியோவில் அவர் மகனும் , மருமகளும் , சில்லு பேரனும் அண்டார்டிகாவில் எடுத்த வீடியோவாய் பார்க்க சொல்லுவார் . அதில் குத்து பட்டும் இருக்காது , கவர்ச்சி ஆட்டமும் இருக்காது . அதை போட்டு தினமும் பார்ப்பார்.

    கடுப்பை , அவர்கள் கொடுத்த சுமாரான காபியில் கரைத்து விட்டு ' எங்க மாமா இருக்கு பிளேயர் ? ' .' இதோ வரேன் பா ' . திரும்பி ஒரு பெட்டியுடன் வந்தார் . ' வெளியே வெச்சா டஸ்ட் ஆகிடும் .பிரித்து பார்த்தேன். ஸ்பைடர்மேன் படத்தில் உபயோக படுத்திய வயர்களை விட இரண்டு மடங்கு இருக்கும் போல. ' சி.டி. எங்க மாமா ?

    பார்த்தவுடன் தெரிந்தவுடன் தெரிந்து விட்டது . அந்த பனாத பையன் அனுப்பியது ஒரு டி.வி.டி. . இவரிடம் இருந்ததோ வெறும் சி.டி. பிளேயர். அவரிடம் விஷயத்தை சொன்னேன். ' அப்படியா . போன தடவை அனுப்பியது நல்லா பிளே ஆச்சே ? எதுக்கும் ஒரு தடவை ..' . 'இல்ல மாமா' - நானும் சொல்லி முடிக்கும் முன்பே அவர் அந்த f** பையை திறந்து விட்டார் . அரை மணி நேரம் முயற்சி செய்து அந்த டிவி க்கான அடாப்டரை கண்டுபிடித்து எப்படியோ ஒரு வழியாக செட் செய்து ஓடாத டி.வி.டி ஐ போட்டேன் . அது நேர்மையாக 'நோ டிஸ்க்' என்று காண்பித்து படுத்து கொண்டது. ' இதே தான் பா . என்ன பிரச்சனைன்னு தெரியல ' .

    எனக்கு பொறுமை போயி அரை மணி நேரம் ஆகி , இப்போ பட படப்பு வந்து விட்டது . மறுபடியும் அவருக்கு விளக்கி விட்டு , நேராக விஷயத்திற்கு வந்தேன் 'மாமா ..எனக்கு HDFC ல இருந்து எதாவது கொரியர் வந்ததா ? ' . ' லதா ..ஏதாவது வந்ததா ?'

    ' வந்ததுனா .. நேத்திக்கு வந்தது . நான் உங்க வேளச்சேரி வீட்டுக்கு ரீ-டிராக்ட் பண்ணிட்டேனே ! எனக்கு தலை சுற்றியது . அவசரமாக ஒரு எஸ்.எம்.எஸ் அடித்தேன் . உடனே ஒரு கால் வந்தது . 'மாமா . என் பாஸ் கூப்பிடறார். நான் உங்கள அப்புறம் வந்து பார்கிறேன்' . ' தாங்க்ஸ் ' வார்த்தையை முழுங்கி கொண்டு வெளியே வந்தேன் .

    ' பரவயில்லன்னா ...நம்மள நியாபகம் வெச்சுண்டு வந்திருக்கானே !"

    'உன்ன பத்து நிமிஷத்தில கால் பண்ண சொன்னேன்ல . என்ன மயித்துக்கு கால் பண்ணல . செரியான போரு. அடுத்த தடவை நீ தான் வந்த நமக்கு ஏதாவது லெட்டர் வந்திருக்கா பார்க்கணும் .'

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Chinna yeda Kudamaana kathai
    By MumbaiRamki in forum Stories / kathaigaL
    Replies: 9
    Last Post: 11th February 2008, 01:39 PM
  2. IDHU ORU KADHAL KATHAI
    By pooj_85 in forum TV,TV Serials and Radio
    Replies: 72
    Last Post: 4th June 2007, 08:04 PM
  3. "thodar" kathai
    By Oldposts in forum Stories / kathaigaL
    Replies: 77
    Last Post: 5th April 2006, 02:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •