Page 1 of 2 12 LastLast
Results 1 to 10 of 17

Thread: Asthamanam Thedi

  1. #1
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like

    Asthamanam Thedi

    அஸ்தமனம் தேடி

    சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்த கமலத்துக்கு தலை விண் விண் என வலித்தது. சூடாக ஒரு லோட்டா காபி குடிப்போம் என்றால், நாக்கில் ஜலம் பட குறைந்த பட்சம் நாலு மணி நேரமாவது ஆகும். கிழவியை இன்னும் ஆஸ்பத்திரியில் இருந்தே கொண்டுவரவில்லை, செய்தி சொல்ல பேர பிள்ளைகள் சைக்கிளிலும், ஸ்கூட்டரிலும் போய் இருக்கிறார்கள். வீடு எங்கும் வித விதமான அழுகை ஒலி. ஒரு வித பயத்தோடு அழுது கொண்டிருக்கும் புது நாட்டுபெண்ணை பார்த்தால் பாவமாக இருக்கிறது, கல்யாணம் முடிந்த நாலாவது நாள் இப்படி ஒரு துக்க சம்பவம். பத்து வருஷமாக இழுத்து கொண்டிருந்த கிழவி இப்போது தானா மண்டையை போட வேண்டும், ஏதோ இவளாவது என்னை மாதிரி அதிர்ஷ்டகட்டையாக இல்லாமல் இருந்தால் சரி.

    " பெண்டுகளா, யாரும் அழப்படாது. பாட்டி நம்மள விட்டு போக மாட்டா, இங்கேயே தான் இருப்பா. கல்யாண சாவுக்காரா அவ்ளோ சீக்கிரம் போய்ட மாட்டா. எலே, வாத்யாருக்கு சொல்லியாச்சா, அந்த மாயாண்டி பயல வரச்சொல்லு. எங்க போனான் இந்த தடிப்பய வரது?" பெரியவரின் வெண்கல குரல் திடீரென தாக்கவே திடுக்கிட்டு நிமிர்ந்த கமலம் கண்களால் அந்த "தடிப்பய வரது" வை தேடினாள்.

    கை நிறைய பச்சை மூங்கில்களோடு வந்த வரது பெரியவரின் குரல் கேட்டு உள்ளே போனான். பின் கட்டில் இருந்த கமலத்திற்க்கு பெரியவர் இரைவதும் அவள் கணவன் வரது கம்மிய குரலில் ஏதோ சொல்வதும் கேட்டது. வரது கிழவிக்கு ஏதோ வகையில் சொந்தம். சிறு வயதில் தாய் தந்தையரை விபத்தில் இழந்ததில் இருந்தே அங்கு தான் வளர்ந்து வந்தான். என்ன பார்தானோ வந்ததில் இருந்தே மந்தமாகவே வளர்ந்து விட்டான். படிப்பிலும் நாட்டம் இல்லை, மற்ற பிள்ளைகளை போல விளயாட்டிலும் நாட்டம் இல்லாமல் எப்போதும் மோட்டுவளையை பார்த்துக்கொண்டே இருந்தான். திருவிடைமருதூர் மகாலிங்கத்தின் மீது அப்படி என்ன ஆசையோ, திடீரென சொல்லாமல் கொள்ளாமல் அங்கு ஓடி போய் விடுவான். நாள் கணக்கில் கோவிலிலேயே யாருடனும் பேசாமல் உட்கார்ந்திருந்த காரணம் அந்த மஹாலிங்கதுக்கும் சோழன் வருகைக்காக காத்திருக்கும் அந்த பிரம்மஹத்திக்கும் தான் தெரியும். கிழவி யார் யாரயோ கெஞ்சி வாங்கி கொடுத்த வேலையெல்லாம் ஒரு சில வாரங்களே நிலைத்தன. கல்யாணம் செய்தால் பொறுப்பு வரும் என்று யாரோ ஒரு புண்யவான் சொன்னதை கேட்டு கமலத்தை அவனுக்கு தாரை வார்த்து அவள் வாழ்க்கையையும் மண்ணாக்கினாள். கமலம் ஆனால் வெகு கெட்டிக்காரி, இப்படிப்பட்ட கணவனே குழந்தையாக இருக்கும் போது வேறு குழந்தைகள் வேண்டாம் என முடிவெடுத்து வைராக்கியதுடன் இருந்தாள். கிழவி நடமாடி கொண்டிருந்தபோதே மற்றவர்களால் அழையா விருந்தாளியாக கருதப்பட்ட கமலம் அத்தனை வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்தாள். குழந்தைகளுக்கு கமலம் பெரியம்மா கையால் கதை கேட்டு கொண்டு சாப்பிட்டால் ஒரு அலாதி சுகம். நாளாக நாளாக சொந்தகாரர்களும் தெரிந்தவர்களும் ஒரு விசேஷம் என்றால் கமலம் வரது தம்பதிகளை வரவேற்க்க ஆரம்பித்தனர். அழைப்பின் உண்மை காரணத்தை உணர்ந்த கமலமும் மாங்கு மாங்கென உழைத்தாள். இப்படி இருந்த வேளையில் தான் ஆதரவாக இருந்த கிழவியும் மண்டையை போட்டாள்.

    காரியமெல்லாம் முடிந்து கிழவியும் கைப்பிடி சாம்பலாய் போன பின் வீடு முழுவதையும் அலம்பி சாப்பாட்டு கடையையும் முடித்தபிறகு பின்கட்டில் அம்பாரமாய் இருந்த பாத்திரங்களை தேய்க்க வந்த கமலம் அங்கு கண்ணில் நீர் பளபளக்க உட்கார்ந்திருந்த வரதுவை பார்த்து திடுக்கிட்டு போனாள். என்ன நடந்தாலும் சலனமே காட்டாமல் இருக்கும் வரது இப்படி இருப்பது மனதை என்னவோ செய்தது.

    "என்னன்னா, ஆச்சு? என்னமோ போல இருக்கேளே, சாப்டேளா?"

    "இல்லடி, யாரும் சாப்பிட கூப்பிடல, கேக்கவும் என்னமோ மாதிரி இருந்தது. பெரியவரும் எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழறார். ஒன்னுமே புரியலடி, பாட்டி போனதுலேந்து எல்லாமே மாறி போச்சுடி"

    "அசடாட்டம் பேசாதேங்கோ, நான் போய் கொஞ்சமா ரசம்சாதம் கரச்சுண்டு வரேன், சாப்டுட்டு போய் தூங்குங்கோ, நான் கை வேலை முடிச்சிண்டு வரேன். நாளைக்கு எல்லாம் சரியா போயிடும்."

    "நான் படுக்க போறேண்டி, என்னமோ சாப்டவே பிடிக்கல, நீ மெதுவா வா," என்று கூறி தடுமாறி உள்ளே போன வரதுவை பார்த்தவாறே நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தாள் கமலம்.

    தூங்கி கொண்டிருந்த வரது யாரோ தன்னை எழுப்புவதை உணர்ந்து கண் விழித்து பார்த்தால் மலர்ந்த முகத்தோடு எதிரே கமலம் இருந்தாள். "பாட்டியோட காரியம் முடியட்டும், நாம ரெண்டு பேரும் திருவிடைமருதூருக்கே போயிடுவோம். எல்லாருக்கும் படியளக்கற மகாலிங்கம் நமக்கும் ஒரு வழி காட்டாமயா போயிடுவார். மிச்சம் மீதி இருக்கற வாழ்நாள அங்கேயே கழிச்சுடுவோம். என்ன சொல்றேள்?"

    வரதுவின் கண்களில் தெரிந்த ஒளியும் அவன் கமலத்தின் கையை அழுத்திய வேகமும் அவளுக்கு மிகவும் புதியதாக இருந்தது
    niraive kaanum manam vendum
    iraivaa nee adhai thara vendum

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,160
    Post Thanks / Like
    சோக ரசம் இழையோடும் யதார்த்தம்! ஏதேனும் உண்மை சம்பவமோ?
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. #3
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    சிலருக்கு வாழ்வே அஸ்தமனத்தில் ஆரம்பிக்குமாம்.

    வரது ரொம்ப கொடுத்துவைத்தவன்(ர்)

  5. #4
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    Quote Originally Posted by pavalamani pragasam
    சோக ரசம் இழையோடும் யதார்த்தம்! ஏதேனும் உண்மை சம்பவமோ?
    ஆமாம், பி பி என்னை மிகவும் பாதித்த ஒரு பெண்ணின் உண்மை கதை தான் இது
    niraive kaanum manam vendum
    iraivaa nee adhai thara vendum

  6. #5
    Senior Member Veteran Hubber Madhu Sree's Avatar
    Join Date
    Mar 2008
    Location
    Singaaaaaara chennai...
    Posts
    3,926
    Post Thanks / Like
    very very practical... My grandma use to say, 'oruthanoda vaazhkaila mudhal paadhi kashtappataa maru paadhi avanukku santhoshamaa amaiyumnu' as per ur story, varadhu's second part of his life wud be colourful...

    thangaludaiya ezhuthu nadaikku -

    Quote Originally Posted by sivank
    " பெண்டுகளா, யாரும் அழப்படாது. பாட்டி நம்மள விட்டு போக மாட்டா, இங்கேயே தான் இருப்பா. கல்யாண சாவுக்காரா அவ்ளோ சீக்கிரம் போய்ட மாட்டா. எலே, வாத்யாருக்கு சொல்லியாச்சா, அந்த மாயாண்டி பயல வரச்சொல்லு. எங்க போனான் இந்த தடிப்பய வரது?" பெரியவரின் வெண்கல குரல் திடீரென தாக்கவே திடுக்கிட்டு நிமிர்ந்த கமலம் கண்களால் அந்த "தடிப்பய வரது" வை தேடினாள்.
    ingayum maayaandiyaa...
    எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...!!!

  7. #6
    Senior Member Veteran Hubber Madhu Sree's Avatar
    Join Date
    Mar 2008
    Location
    Singaaaaaara chennai...
    Posts
    3,926
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivank
    Quote Originally Posted by pavalamani pragasam
    சோக ரசம் இழையோடும் யதார்த்தம்! ஏதேனும் உண்மை சம்பவமோ?
    ஆமாம், பி பி என்னை மிகவும் பாதித்த ஒரு பெண்ணின் உண்மை கதை தான் இது
    oops
    எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...!!!

  8. #7
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    சீரான எழுத்து.

    பாட்டி போனபின் எல்லாம் மாறிவிட்டதா, வரது'வுக்கு பிற விஷயங்கள் கொஞ்சம் தீர்க்கமாக அஸ்தமனத்துக்குப் பிறகு தெரிகிறதா என்ற இடம் அழகாக வந்திருக்கிறது.

    கமலம் முழுமை பெற்ற அளவு வரதுவும் பிறரும் வளர கொஞ்சம் சம்பவங்கள் சேர்த்து விரிவாக்கியிருக்கலாம். உதாரணமாக, கிழவியை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம். அந்த உறவின் முக்கியத்துவத்தை, ஒரு பிடிமானமாக அவள் இருந்ததை சொல்லியிருந்தால், அவள் மரணம் தந்த விலகல்/விடுதலை இன்னும் ஆழமாக பதிந்திருக்கும்.

    தொடர்ந்து எழுதுங்கள்.


    சோழன் வருகைக்காக காத்திருக்கும் அந்த பிரம்மஹத்திக்கும் தான் தெரியும்
    ??
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  9. #8
    Senior Member Senior Hubber complicateur's Avatar
    Join Date
    Sep 2007
    Posts
    956
    Post Thanks / Like
    சிவன்,
    இந்த தலைப்புக்கு மிக சாம்மியமான ஒரு தலைப்போடு நான் வருடங்கள் முன்பு ஒரு கதை எழுதி இருந்தேன். (அதற்கு சற்றே சங்கீத வாடை - பெயர் ஷட்ஜமம் தேடி)

    உங்கள் கதையில் இழையோடும் சோகம் தடையில்லாமல் உணர முடிகிறது. ஆங்கிலத்தில் resignation என்று சொல்வார்களே, அது தான் சில சமயம் ஏற்பதற்கு மிக அரிது.

    திருவிடைமருதூரின் ஸ்தல புராணத்திற்கும் வரதுவின் கதாபாத்திரத்திற்கும் ஏதோ "சம்பந்தம்" இருப்பது போல் தோன்றியது. சோழனின் (இல்லை இந்திரனா ?)ப்ரக்மகாத்தி தோஷம் அங்கே களையப் பட்டது என்பதை மட்டுமே இணையதளத்தில் தேடி அறிந்தேன். குறிப்பாக கதையோடு வேறு தொடர்பு உள்ளதா?
    "Fiction is not the enemy of reality. On the contrary fiction reaches another level of the same reality" - Jean Claude Carriere.
    Music

  10. #9
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    Thanks sp, ms, prabhu, complicateur
    niraive kaanum manam vendum
    iraivaa nee adhai thara vendum

  11. #10
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    Prabhu, there is a story about the thiruvidaimarudhoor temple. Once there was a chola king who did some thing for which the `Brahmahathi`dhosham was behind him. According to the story where ever he went the dhosham was behind him. Atlast he came to this temple, and the brahmahathi which followed him couldnīt enter this temple. Knowing this the chola king escaped through another exit. Without knowing about the other exit the brahmahathi till today waits for the chola king.


    complicateur, you are right about the connection which varadhu had. It could be so that varadhu felt all his problems and deficiencies would stop at the gate of the temple. So presumably he felt at ease there
    niraive kaanum manam vendum
    iraivaa nee adhai thara vendum

Page 1 of 2 12 LastLast

Similar Threads

  1. Enakkul Irukkum Ennai Thedi... Oru iniya payanam
    By maniomani in forum Poems / kavidhaigaL
    Replies: 4
    Last Post: 9th April 2007, 11:59 AM
  2. Thedi Unnai and Kavadi Chinthuarvai Onder-Lyrics
    By rcamatchee in forum Indian Classical Music
    Replies: 4
    Last Post: 9th June 2005, 04:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •