Page 51 of 150 FirstFirst ... 41495051525361101 ... LastLast
Results 501 to 510 of 1491

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5

  1. #501
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Thanks Rakesh. Regarding the song preference, after reading your question, I am also confused. How can one forget Ranga Rao? Such a natural performer.

    நன்றி பிரபு. நீங்கள் குறிப்பிட்ட காட்சி [சகஸ்ரநாமம் சிவாஜியிடம் தன் பெண்ணை பற்றி பேசுவது] மிகவும் இயல்பாக இருக்கும்[நான் தோளிலே தூக்கி வச்சிருந்த பொண்ணு. அதை போய் --]. நீங்கள் எதிர்பாராதது படத்தைப் பற்றி சொல்லும் போது சகஸ்ரநாமம் most underrated actor என்று எழுதியிருந்தீர்கள். அது உண்மை.

    Rajesh, not sure. This time the DVD which I saw didn't have that song. And I don't remember seeing Janaki's name in the title. I may be wrong also.

    Regards

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #502
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    The Golden Jubilee celebrations of Veera Pandiya Kattabomman went off well, I was told. In spite of being election results announcement day, there was fairly a good crowd it seems.[Sorry, I was out of station and so couldn't attend]. There was this exhibition on VPK arranged by our fellow hubber Raghavender Sir and it continues upto Wednesday, the 20th of May. "Jackson Durai" (ie) the artist Parthiban who donned the role was honoured. Panthulu was represented by his daughter and camera woman B.R.Vijayalakshmi. Uma Shekar wife of SVe Shekar who happens to be the grand daughter of Music Director G.Ramanathan was honoured. Raghavender Sir would write in detail.

    Regards

  4. #503
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    In the above mentioned function organised on 16.05.2009, one Mr.Tenkasi Ganesan had rendered a poem on NT. Here it is

    இங்கிவனை யாம் பெறவே !

    இந்தியாவின்
    இரண்டு அதிசயங்கள்!
    வடக்கே தாஜ்மகால்
    தெற்கே நடிகர் திலகம்

    அதிசயம் மட்டும் அல்ல
    அதற்கும் அப்பாற்பட்ட அற்புதமும் நீயே
    அன்னை ராசாமணி
    அன்று சுமந்தது கருப்பையா - இல்லை
    கலைமகளே வடிவான கலைப்பை

    பராசக்தி அருளால்தான் நீ
    திரைக்கு வந்தவன் என்றாலும்
    திருமால் பெருமை நிரம்பவே
    இருந்ததால்தான்
    பெருமாளால் - பெரும் ஆள் ஆனாய்

    நடிப்பில் எத்தனை வகை
    நடையில் எத்தனை வகை
    குரலில் எத்தனை வகை
    குறும்பில் எத்தனை வகை

    அழுகையில் எத்தனை வகை
    ஆத்திரத்தில் எத்தனை வகை
    புன்னகையில் எத்தனை வகை
    புழுங்குதலில் எத்தனை வகை

    மோகத்தில் எத்தனை வகை
    காதல் தாகத்தில் எத்தனை வகை
    கண்டிப்பில் எத்தனை வகை
    கனவினில் எத்தனை வகை

    அத்தனையும் அடக்கி வைத்த
    அளப்பரிய கலைப்புதயல் நீ
    நீ நடந்தது வந்த ராஜபாட்டைதான்
    திரையுலகின் நடைப்பாதையானது

    நடிப்பு கர்ணனே
    அந்த நாள் திரை உலகின்
    இரும்பு திரையை அகற்றி
    திருப்பம் தந்த விடிவெள்ளி நீ

    தாயோடு அறுசுவைபோம்
    தந்தையோடு கல்விபோம்
    என்பது பழைய பாட்டு

    நான் கூறுவேன்

    பந்துலுவோடு வரலாற்று படம்போம்
    சக்தி கிருஷ்ணசாமியோடு நற்றமிழ் வசனம்போம்
    ராமநாதஐயரோடு ரம்மிய சங்கீதம் போம்
    எங்கள் நெஞ்சம் நிறை தலைவா

    உன்னோடு -

    விழியால் பேசும் கலை போம்
    மொழி சிறக்கும் வசனம் போம்
    வழி வியக்கும் நடைபோம்
    மொத்தத்தில் நடிப்புக் கலையே போம்

    காரணம் -

    வெற்று படங்கள் வந்த காலத்தில்
    நீ ஒருவனே வெற்றிப் படங்களை தந்தவன்

    ஒரே நாளில் இரண்டு படங்கள் !
    இரண்டும் வெற்றி !

    ஒரே மாதத்தில் நான்கு படங்கள்
    அத்தனையும் 100 நாட்கள்

    ஒரே வருடத்தில் 11 படங்கள்
    அனைத்தும் வெற்றி
    அது மட்டுமா

    அடுத்த மாநிலத்தில் 100 நாட்கள்
    அந்நிய தேசத்தில் 200 நாட்கள்
    என்று

    உன் படங்கள் தவிர
    எவர் படம் ஓடியது
    என்றும் நிலைத்த புகழை தேடியது

    அற்புத ஒப்பனையா
    அபார கற்பனையா
    அழகு விழியா - அடுக்கு மொழியா
    அனாயாச நடையா - அசத்தல் பார்வையா
    எது பேசப்படவில்லை

    உன் அடர்ந்த சிகை நடிக்கும் -
    அம்பிகாபதியும் கட்டபொம்மனும்
    உதாரணங்கள்

    நீ அணிந்த நகை நடிக்கும்
    வணங்கமுடியும் சரஸ்வதி சபதமும்
    உதாரணங்கள்

    ஏன், நீ உள்வாங்கி வெளியிடும் புகையும்
    நடிக்கும்
    புதிய பறவையும் சாந்தியும் உதாரணங்கள்

    இன்றைய விழா நாயகன்
    கட்டபொம்மனை பற்றிய ஓரிரு வரிகள்

    அத்தனை பள்ளிகளின்
    ஆண்டு விழாக்களில்
    அவசிய வேடம் கட்டபொம்மன்

    அறம் செய்ய விரும்பு எனும்
    ஆத்திச் சூடிக்கு முன்
    அத்தனை மாணவனின் அரிச்சுவடி
    கட்டபொம்மன்

    தனி நபர் போட்டியின்
    தவறாத பாடம் கட்டபொம்மன்.

    தரணி புகழ் தமிழ் துள்ளிவர
    தக்கதொரு வசனம் கட்டபொம்மன்.

    எகிப்து அதிபர் நாசரை
    நம்மூர் பக்கம்
    எட்டிப் பார்க்க வைத்தவன் கட்டபொம்மன்

    கெய்ரோ விருதால் உலகையே வியக்க
    வைத்தவன் கட்டபொம்மன்

    அத்தனை பெருமைகளுக்கும் அடிப்படை
    நடிப்பு சித்தனே நீதான்

    உன் தலைமயிர் தொட்டு
    கால்நகம் வரை நடித்ததால்
    கலைத்தாயின் தவப்புதல்வன் ஆனாய்

    காமிரா முன் மட்டுமே நடிக்கத்
    தெரிந்ததால்தான்
    காலம் போற்றும் உயர்ந்த மனிதன் ஆனாய்

    விளம்பரம் விரும்பாமல்
    அள்ளி தந்து பலர் வாழ்வை
    வளம்பட செய்ததால்
    கொடை நின்ற கர்ணன் ஆனாய்

    குணம் நிறை மனம் நிறைந்ததால்
    நல்லதோர் குடும்பம் கண்டாய்
    இல்லற ஜோதியாய் கமலா இருக்க
    இரண்டு நல புதல்வர்கள் சீரோடு சிறக்க
    தேன் மொழியாம் தமிழ் போல்
    தெவிட்டாத சாந்தி பெற்றாய்

    கௌரவமாய் வாழ்கையை
    கண்டதால்தான்
    அன்னை இல்லம் அது
    வசந்த மாளிகை ஆனது

    உன் படங்களே
    பாடங்கள் ஆனதால்
    பலர் நடிப்பில் பட்டம் பெற
    நீயே
    பல்கலைக்கழகம் ஆனாய்.

    தங்கமே! தமிழ்ச்சரமே
    எங்கள் அங்கம் புல்லரிக்க
    அற்புத நடிப்பு தந்தாய்

    நீ வாழ்ந்த காலத்தில்
    வாழ்ந்ததால்
    வள்ளுவன் காலத்தில்
    வாழ்ந்தவன் போன்ற
    பெருமை எங்களுக்கு உண்டு

    ஒரு வள்ளுவன்
    ஒரு ஷேக்ஸ்பியர்
    ஒரு மைக்கேல் அஞ்சலோ
    ஒரு பிதோவன்
    ஒரு காளிதாசன்
    ஒரு பாரதி
    ஒரு சிவாஜி

    உலக வரலாறு இப்படித்தான்
    எழுதப்பட முடியும்

    நிறைவாக

    நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்
    இது உலக நீதி

    ஆருயிர் அண்ணனே
    உன் நினைவிருந்தால்தான்
    எங்களுக்கு நெஞ்சமே இருக்கும்
    இதுதான் உண்மை நீதி

    அன்புடன்

  5. #504
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear Murali,
    Thank you for the lead to the describtion of the function.
    As you said, in spite of the odd nature of the Day, there was substantially good crowd at the function. Mr. Marudu Mohan, who is doing research on Nadigar Thilagam, spoke in detail of the chronology of the legacy of Veerapandiya Kattabomman. Mr. Veeramani of Gem Granites, Mr. Lakshmi Narayanan of Russian Cultural Centre, Mr. Thangappan of Indo-Russian Chamber of Commerce were among the dignitaries who spoke. Mr. Thangappan presented the clipping of Nadigar Thilagam's speech during the Golden Jubilee of Indian Independence celebrated there in 1997. Mr. Parthiban was very staunch in lauding NT and clearly underlined it was Nadigar Thilagam, who was the only actor who did not act in PUBLIC LIFE and POLITICS. Avar cinemavil mattum than nadippar, nija vazhkkaiyil nadikka theriyadu. The Post Master General released the Special Day cover received by the Director of Russian Cultural Centre. The event was preceded by an exhibition on Memorabilia of the film Veerapandiya Kattabomman. The exhibition contained display of paper cuttings, award certificates, etc. Ms. B.R. Vijayalakshmi has also presented for display, the shields, the certificates, the sword and the soccer, and the photo album taken during the shooting of the film. Besides, the display contained among other cuttings, the achievements of the film at the Box Office as wrote here by our Murali Sir, and Telugu paper cuttings sent by another fellow hubber, A. Balakrishnan, 50-th Day, 100th Day, 25th week ads, NT's writing on his experiences at Cairo. Those who are in Chennai can visit the exhibition which is on till 20th May, 2009 up to 5.00 p.m. at the venue. Most of the materials were used from the magazine Vasantha Maligai.

    Another good news. VASANTHA MALIGAI, a magazine on Nadigar Thilagam, is very shortly to be resumed by its editor, Pammal Swaminathan. He may be contacted in the following mobile no.9790765804

    Raghavendran.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #505
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    A quick short one on Muradhan Muthu.

    As I have learned from this forum and through Murali-sar's excellent recording of NT's films' office performances, NT is indeed his own competitor. And that this film is less remembered can be solely blamed for the mega effort called Navarathiri.

    This is Banthulu's smaller project (as opposed to VPK & KOT) and is full of heart.

    NT plays a naive Hanuman devotee Muthu, whose brother (Banthulu, who is certainly a good character actor) is a sculptor...and not a rich one at that. They also have a sister, and Banthulu and his wife has a daughter. Devika is his lover, though our hero is a devoted Hanuman Bakthar and marriage would seem out of question.

    As the story starts, we learn that NT is terribly attached to family, His brother and wife are like his parents, and he especially dotes on his niece. No thanks to his Hanuman devotion, tragedy befalls the family as the niece passes away. Muthu is now heartbroken, not to mention guilt stricken for causing the death.

    His naiveness causes a lot more trouble to Banthulu, and soon it leads to spat between them, causing Muthu to leave the brother and drag his sister along. Reluctant as Banthulu was, he wanted it to to happen as it will teach Muthu some sense of responsibility.

    Moving to his uncle (Karunanithi) place, Muthu seeks to rearrange his life, and most importantly find a suitable groom for his sister.

    So, will he get the sister married? Get back to his family? Watch and you will find out.

    Now, what makes this film remarkable? Good story? Check, it was adapted from a Benngali film, I think. Good direction? Check, Banthulu is a competent director. Good music? Of course, the highly underrated T.P. Lingappa delivered some gems, notably Tamara Poo Kolathula, Ponnaasai Kondoorkku & Kootaiyilee Oru Aalamaram.

    The performance? As I said, the film has heart and it's the performance all around that makes this film to touch you. NT is in excellent form. He plays a man totally out of synch with responsibilities attached to a family. He loves the family unconditionally but is not world-wise enough to be a man on his own. Watch the scenes where he is in argument with his brother, there is lots of love, and love is only thing he knows and can fight for. And for that he has to leave his brother's family. Those scenes (first when leaving, the second when he comes back to inform of the sister's wedding) are gut wrenching when you know that they wouldn't dare to hurt each other, not even with words. Really moves you to tears. Such, as usual, is NT's power as an onscreen performer.

    Also, note that humour comes easily just because NT mastered the character. There are funny lines, but his delivery, his action and reaction does not need comedic dialogues. Early scene of him in Tiger's costume, having fun, then dragged by his sister-in-law, by his ears will have you in stitches.

    The rest of the cast justifies their role, including Asohan (the part he repents, though, felt a bit overcooked) who plays the Jameendar.

    One of NT's film that I revisit time and time just to delight myself with NT's performance alone.

    By the way, considering this was made the same time as Navarathiri, should we be surprised to note that NT played ten characters in short span of time?

    Murali-sar's info on Muradhan Muthu here:
    http://www.mayyam.com/hub/viewtopic.php?p=534675
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  7. #506
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் முரளி,

    உங்களின் சித்தூர் ராணி பத்மினி, நீலவானம் மற்றும் பேசும் தெய்வம் பற்றிய விமர்சனங்கள் மிகவும் அருமை. சித்தூர் ராணி பத்மினி படம் எவ்வளவோ முயன்றும் (அதாவது என் லெவலுக்கு) இதுவரை காணக்கிடைக்கவில்லை. அந்தப்படத்தின் ஸ்டில்களைப்பார்த்து, அப்படத்தைப் பார்க்க மிகவும் ஆவலாக இருந்தேன். என் ஆவலை உங்களது விமர்சனம் ஓரளவு பூர்த்தி செய்துள்ளது.

    முன்னொருமுறை ஒரு பழைய (1961) பேசும் படம் மாத இதழைப் பார்க்க நேர்ந்தபோது அதில் கப்ப்லோட்டிய த்மிழன், மருதநாட்டு வீரன், சித்தூர் ராணி பத்மினி ஆகிய படங்களின் ஸ்டில்கள் அடங்கிய தொகுப்பு இடம் பெற்றிருந்தன. (கூடவே சபாஷ் மாப்பிளே, நல்லவன் வாழ்வான், பனித்திரை படங்களின் ஸ்டில்களும்). பாத்தபோதே ராஜபுத்திர உடையில் இருந்த நடிகர் திலகம், மற்றும் வைஜயந்தியின் படங்கள் மனதைக்கொள்ளை கொண்டன. கூடவே, அப்படம் சரியாக ஓடவில்லை என்ற தகவலும் கிடைத்தது. (வைஜயந்தி மிகவும் எதிர்பார்த்திருந்த இப்படமும், பார்த்திபன் கனவும் அவரைக் காலை வாரிவிட்டன. ஆனால் தேன் நிலவு கைகொடுத்தது. அப்போது காஷ்மீரில் தன் இந்திப்படத்தின் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்த ராஜ்கபூர், அங்கு வைத்தே வைஜயந்தியை தனது 'சங்கம்' படத்துக்கு புக் பண்ணிக்கொண்டு போய்விட்டாராம்). அந்நேரத்தில் இதுபோன்ற சுமாரான படங்கள் கூட ஓடாமுடியாமல் போனதற்கு, சுமாரான திரைக்கதை மட்டும் காரணமல்ல. அச்சமயத்தில் திரையுலகை டாமினேட் செய்திருந்த நடிகர்திலகம் - பீம்பாய் கூட்டணியின் 'பா' வரிசை படங்களின் ஆதிக்கமும் ஒரு காரணம். மக்கள் அப்படங்களின் தரத்தை அளவுகோலாக வைத்தே நடிகர்திலகத்தின் மற்ற படங்களையும் எதிர்பார்த்து, தரம் கொஞ்சம் குறைந்தாலும் ஒதுக்கினார்கள். அப்படி அடிபட்டவைதான் இவை. (கொஞ்சநாள் முன்பு கூட எல்லாம் உனக்காக, புனர் ஜென்மம், படங்கள் வெற்றிக்கோட்டைத்தொட முடியாமல் போன விவரத்தைப் பேசியிருக்கிறோம்).

    அடுத்து தேவிகா ஸ்பெஷலான 'நீலவானம்'. ஃப்ரேம் பை ஃப்ரேம் இந்த ஜோடியின் போட்டி நடிப்பு நம் கண்ணுக்கு விருந்து. (பிறந்த நாள் விழாவில் நெக்லெஸ் காணாமல் கோட்டைக்கழட்டி அவமானப்படுத்தும் காட்சியைப்பற்றியும் முன்பு சிலாகித்துப் பேசியிருக்கிறோம்). போட்டோ எடுத்துக்கொள்ளப்போகும்போது, சகஸ்ரநாமத்தைப்பார்த்து 'வாங்க' என்று முறைக்கும் இடத்தில் கைதட்டல் பறக்கும். ராஜஷ்ரீ ஒருமுறை தேன்கிண்ணம் நிகழ்ச்சியில், நடிகர்திலகத்தைப்பற்றி உயர்வாகக்குறிப்பிட்டபின், "ஓ லிட்டில் ஃப்ளவர்" பாடலை ஒளிபரப்பினார். ('துள்ளுவதோ இளமை', 'அனுபவம் புதுமை' பாடல்கள் தவறாமல் இடம் பெற்றிருக்கும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை). மக்கள் திலகத்துடன் நடிக்க வாய்ப்புக்கிடைத்த அளவுக்கு நடிகர்திலகத்துடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருத்தமும் பட்டார்.

    'பேசும் தெய்வம்' நடிகர்திலகத்துக்கும், வாலிக்கும் நெருக்கத்தை ஏற்படுத்திய படம். குறிப்பாக 'அழகு தெய்வம் மெல்ல மெல்ல' பாடலும், நான் அனுப்புவது கடிதம் அல்ல பாடலும் அப்போது ரொம்ப பாப்புலர். 1967ல் தங்கை, நெஞ்சிருக்கும் வரை, ஊட்டிவரை உறவு என்று மெல்லிசை மன்னர் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்த நேரத்தில் மாமாவுக்கு புகழ் வாங்கித்தந்த பாடல்கள் இவை. 'பத்துமாதம் சுமக்கவில்லை செல்லையா' பாடலின் இடையே 'கண்டவர் கண்ணு படும் செல்லாத்தா' என்று ட்யூன் வேகமாக மாறும்போது தியேட்டரே ஆட்டம் போடுமாம். சமீபத்தில் த்மிழ்சினிமா 75வது ஆண்டு கொண்டாட்டம் என்ற தலைப்பில் சன் டிவியில் இப்படம் ஒளிபரப்பப் பட்டபோது, பலருடைய கேள்வி 'இம்மாதிரி அருமையான படமெல்லாம் எப்போ வந்தது?. நாங்க பார்த்ததே இல்லையே' (பாவம், அவ்ங்களெல்லாம் 80களில் வந்த ப்டங்களைப்பார்த்து சிவாஜியை எடைபோட்டவர்கள்).

    அடுத்து எந்தப்படத்தோடு வந்து எங்களை இன்ப அதிர்ச்சியால் தாக்கப்போகிறீர்கள் என்பதை அறியலாமா...?.

    டியர் ஜோ,

    பட்டியலை 'அப்டேட்' செய்ததற்கு நன்றி. (நான் கடைசியாக எழுதிய மூன்று படங்களும் கூட அதில் புகுந்துவிட்டன)

  8. #507
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Thanks Ragahvender Sir for the function coverage.

    Rakesh, thanks fro the review on Muradan Muthu. Would come back on that.

    சாரதா,

    எங்கே போனீர்கள்? இரண்டு மாதங்கள் ஆளையே காணவில்லை. எப்படி இருப்பினும் மீண்டும் உங்கள் பதிவை படிக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி. தொடருங்கள் உங்கள் சேவையை.

    அன்புடன்

  9. #508
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA
    Dear Murali,
    Thank you for the lead to the describtion of the function.
    As you said, in spite of the odd nature of the Day, there was substantially good crowd at the function. Mr. Marudu Mohan, who is doing research on Nadigar Thilagam, spoke in detail of the chronology of the legacy of Veerapandiya Kattabomman. Mr. Veeramani of Gem Granites, Mr. Lakshmi Narayanan of Russian Cultural Centre, Mr. Thangappan of Indo-Russian Chamber of Commerce were among the dignitaries who spoke. Mr. Thangappan presented the clipping of Nadigar Thilagam's speech during the Golden Jubilee of Indian Independence celebrated there in 1997. Mr. Parthiban was very staunch in lauding NT and clearly underlined it was Nadigar Thilagam, who was the only actor who did not act in PUBLIC LIFE and POLITICS. Avar cinemavil mattum than nadippar, nija vazhkkaiyil nadikka theriyadu. The Post Master General released the Special Day cover received by the Director of Russian Cultural Centre. The event was preceded by an exhibition on Memorabilia of the film Veerapandiya Kattabomman. The exhibition contained display of paper cuttings, award certificates, etc. Ms. B.R. Vijayalakshmi has also presented for display, the shields, the certificates, the sword and the soccer, and the photo album taken during the shooting of the film. Besides, the display contained among other cuttings, the achievements of the film at the Box Office as wrote here by our Murali Sir, and Telugu paper cuttings sent by another fellow hubber, A. Balakrishnan, 50-th Day, 100th Day, 25th week ads, NT's writing on his experiences at Cairo. Those who are in Chennai can visit the exhibition which is on till 20th May, 2009 up to 5.00 p.m. at the venue. Most of the materials were used from the magazine Vasantha Maligai.

    Another good news. VASANTHA MALIGAI, a magazine on Nadigar Thilagam, is very shortly to be resumed by its editor, Pammal Swaminathan. He may be contacted in the following mobile no.9790765804

    Raghavendran.
    Dear Mr. Raghavendran,

    Is the function video available online, youtube? i find none when i google it.

    Behindwoods. com has got anniversary pictures here: http://www.behindwoods.com/hindi-tam...man/index.html

    Regards

  10. #509
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Nice to see Sharada back after long time.

    Dear Murali and Ragahvendran,
    why don't you try to bring out all yours and others articles and reviews in book form . I don't mind to sponsor within my limits if you do ?

    Dear joe thanks for your updation

  11. #510
    Seasoned Hubber
    Join Date
    Apr 2007
    Location
    Toottukudi
    Posts
    1,684
    Post Thanks / Like
    Quote Originally Posted by abkhlabhi
    Nice to see Sharada back after long time.

    Dear Murali and Ragahvendran,
    why don't you try to bring out all yours and others articles and reviews in book form . I don't mind to sponsor within my limits if you do ?

    Dear joe thanks for your updation
    It's a wonderful idea...

Page 51 of 150 FirstFirst ... 41495051525361101 ... LastLast

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •