Page 111 of 150 FirstFirst ... 1161101109110111112113121 ... LastLast
Results 1,101 to 1,110 of 1491

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5

  1. #1101
    Senior Member Seasoned Hubber Avadi to America's Avatar
    Join Date
    Apr 2008
    Posts
    827
    Post Thanks / Like
    வசந்த மாளிகை, சரஸ்வதி சபதம், புதிய பறவை ஆகிய படங்களையும் ரஷ்யாவில் திரையிட ஏற்பாடு நடந்துவருகிறது

    http://onlysuperstar.com/?p=5086

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1102
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA
    DEar RAngan Sir,
    I don't want to disappoint your enthusiasm for the movie Anbe Aruyire. So to keep your spirit alive, I would recommend you to view Part 2 of Anbe Aruyire, starring NT, Sripriya, .... music by Maestro Ilaiyaraja, directed by ACT's Sishyar SPM. Guru=Sishya have created a great sequel which even hollywood people can't match .... If you want some name to identify it, then you have it ...
    VETRIKKU ORUVAN
    thalaiyil adithu kolla ....sorry koLLa..?

    RAghavendran


    Raghavendra Sir, I've also seen VO - in fact Part-II modhalla parthen and then Part I

    Adhuleyum Major dhan appa & NT's name is also Saravana (you were right calling it Part-II).

    Saravana oru vai sapidra...endru Major konjuvar. Meenai mulloda saapidamatten endru NT adam pidippar....
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  4. #1103
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் ராகவேந்தர் & மோகன்,

    'அன்பே ஆருயிரே' பாகம் 1 மற்றும் 2 பற்றி பேசும்போது இன்னொன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    முத்துராமன், இளையராஜா, பஞ்சு கூட்டணியில் உருவான பாகம் 2ன் பெயர் 'வெற்றிக்கு ஒருவன்' என்று படம் வெளியாக சில நாட்களுக்கு முன்புதான் பெயர் மாற்றப்பட்டது.

    அதற்கு முன் அப்படத்துக்கு வைக்கப்பட்டிருந்த பெயர் என்னவென்று உங்களுக்கு தெரியும், இருந்தாலும் நினைவூட்டுகிறேன்.

    அதற்கு முதலில் வைக்கப்பட்டிருந்த பெயர் "கண்ணே கண்மனியே" ("அன்பே ஆருயிரே" படத்தின் பாகம் 2 என்று ராகவேந்தர் சொன்னது எவ்வளவு பொருத்தம்...!!!!)

  5. #1104
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    டியர் ராகவேந்தர் & மோகன்,

    'அன்பே ஆருயிரே' பாகம் 1 மற்றும் 2 பற்றி பேசும்போது இன்னொன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    அதற்கு முதலில் வைக்கப்பட்டிருந்த பெயர் "கண்ணே கண்மனியே" ("அன்பே ஆருயிரே" படத்தின் பாகம் 2 என்று ராகவேந்தர் சொன்னது எவ்வளவு பொருத்தம்...!!!!)
    Oh! that's real news.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  6. #1105
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    ( sorry for my thanglish )

    Recently when i was passing by near purasawalkam, i spotter this magazine on a news stand. It had a beautiful still from " Pudhiya Paravai " on the cover page. Immediately i grabbed a copy. It's a fantastic treat for all NT fans. Idhayakkani Cinema Special has come out with a " Sivaji Special " in their October 2009 issue. Price Rs.10/- only.

    The magazine is packed with excellent & rare photographs of NT, articles by celebrities & famous personalities and many other interesting informations, particularly about the Madurai silai thirappu vizha.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  7. #1106
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Exerpts from the magazine...

    1. A warm welcome to the Madurai function on behalf of V.N Chidambaram & family (Kamala theatre) with a beautiful snap of NT in the background.

    2. " Thalapathiyana Sivaji " - Bharathidasan kavidai
    " Edhaicholven " - Kannadasan kavidhai

    3. Sivajiyai eppozhudhum vazhthuven - article by Arignar Anna ( தம்பி கருணாநிதியின்vasanathal Sivaji Ganesanin nadippu perumai petradhu engirargal. Vasaname illadha padangalil kooda, (எ-டு " Andha Naal " padam ), Sivaji Ganesan arpudhamaga nadithu paaratu petrirukirar - ther's a photograph of NT with Anna.

    4. Naanum Sivajiyum naditha nadagam - by கலைஞர் - photos of NT with kalaignar & NT with Kalaignar & Rama.Arangannal.

    5. தமிழர்களின் சாயங்கால சந்தோஷம் by Vairamuthu

    6. List of films in which NT had done multiple roles

    7. Gunachithira nadigar Sivaji - by Kamarajar

    8. En Undan pirava sagodharar annan Sivaji - by V.N. Chidambaram. Again we get to see some rare photographs - one in which NT is having a " விருந்து " at Mr. Chidambaram's residence along with VNC & Umapathy.

    9. Sivajiyudan S. Varalakshmi - article about SV (still from Thanga Surangam ) who passed away recently. List of films she acted with NT is given - Edhirparadhadhu, Veerapandia Kattabomman, Chanakya Chandragupta (telugu), Bangaru Babu (telugu), Thanga Surangam, Kandhan karunai, Thaai, Savale samali, Cinema paithiyam, Raja raja Cholan, Tharasu ( 11 films altogether )

    10. Stunning photographs in the center page - as Veera Sivaji in a Mumbai TV programme, Vanangamudi, Engal Thanga Raja, Appar, Edhiroli, Vietnam Veedu, Padikkadha Medhai & finally a superb & rare still from an unreleased film where NT, in a " Humphrey Bogart " style is leaning in a wall with a big rain coat, a round hat and with a grin on his face. He also stylishly holds a cigarette. I think we all really missed that film
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  8. #1107
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    11. தம்பியைப் போற்றும் அண்ணா - article by MGR - stills from Koondukili, MGR greets NT when he returns from America, MGR giving a " மலர்ச்செண்டு " to NT and wishing him on getting the Padmashree. Another still of NT with Gemini, MGR, G.N.Velumani & Bhimsingh.

    12. Vaari vazhangum paari vallal Sivaji - article by Kirubananda Variyaar - வட நாட்டில் மரியாதைக்காக பெயரோடு "ஜி " சேர்த்துக்கொள்வார்கள். Sivanodu " ji" serthal Sivaji !! Sivaji Ganesan endral Sivanum Ganesanum !!

    Sivaji evvalavo udhavi seidhirukkirar. Avatrayellam pattiyal potu kaanbikkum vazhakkam avarukku kidayadhu. எனக்குக் கூட எவ்வளவோ உதவி செய்திருக்கிறார். Veliyil vilambarapaduthum budhi avarukku kidayadhu.

    13. Sivaji oru nadippu payirchi nilayam - article by Seliv Jayalalitha - still from Deiva Magan

    14. Sivaji patri prabalangal - brief comments on NT by famous personalities including Jawaharlal Nehru, Dr. Radhakrishnan, Periyar, SS Vasan, B.R. Bhanthulu & K.B. Sundarambal. Stills of NT & Nehru, NT with Periyar (during VKB drama - NT in full costumes)

    15. Nadigar Thilagam Sivajiyai iyakkiya iyakkunargalin pattiyal - stills of NT with ACT, with BRB (SSR is also seen in this snap) & NT affectionately hugging Bhimbhai.

    16. Photo taken during the VKB statue unveiling function in Kayathar. Kamarajar & Sanjeeva Reddy are present.

    The Magazine was a real bonanza.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  9. #1108
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    FROM
    http://reallogic.org/thenthuli/?p=99

    21/07: எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை- நடிப்பு July 21st, 2005 by பத்மா அர்விந்த் Add Comment
    Trackback
    Comments Feed
    மரணம் இல்லாத சிலரை பற்றி எழுதலாம் என்று தோன்றிய எண்ணம் இன்று காலை விகடனை பார்த்ததும் செயலாகிவிட்டது. அரங்கின்றி வட்டாடுதல் தவறு என்றாலும் ஒரு விருப்பம்தான். பல செய்திகள் அறியாமை காரணமாக விட்டு போயிருக்கலாம். படிப்பவர்களில் இத்துறையில் பலபேர் ஜாம்பவான்கள் என்று தெரிந்தாலும், தைரியமாக இதோ:
    இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை நாம் எல்லோரும் நடிக்கின்றோம் என்பது உண்மையானாலும் நடிப்பு என்றால் இப்போது பலருக்கு திரைப்படங்கள் மட்டுமே நினைவுக்கு வருகிறது. நாடக கலையும் தெருக்கூத்தும் நசிந்து போகின்ற இந்நாளில் நடிப்பை பற்றி நான் எழுத ஒரு காரணம் இருக்கிறது.
    கிட்டதட்ட ஒரு தலைமுறையை தன் வசன உச்சரிப்பாலும் நடிப்பாலும் கவர்ந்திருந்த நடிகன் இறந்த தினம் இன்று.

    பள்ளியில் வருடநாள் போது நாடகம, நடனப்போட்டிகள் நடைபெறும். எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்வது எனக்கு பிரியமான செயல். அதிலும் பலராலும் அறியப்பட்ட வகையில் நான் எழுதி இயக்கிய நாடகங்கள் பலமுறை முதல் பரிசை பெற்றிருக்கின்றன.(ஆலையில்லாத ஊர்)

    சில சமய ம் கருணாநிதியின் சில பழைய நாடகங்களையும், சிவாஜியின் திரைப்படங்களின் சில காட்சிகளையும் நடிப்பதுண்டு. அப்படி எனக்கு பரிச்சியமானவர் சிவாஜி. நல்ல தமிழ் உச்சரிப்பும் குரலும் என்னை மிகவும் கவர்ந்திருந்த காலம் உண்டு. பூசாரியை தாக்கினேன் கோவில் கூடாதென்பதற்காக இல்லை பக்தி பகல் வேஷம் ஆகிவிடக்கூடாதென்பதற்காக என்று முழக்கமிட்ட பராசக்தி, மன்னிப்பு கேட்கவேண்டுமா மனோகரன் என்ற மனோகரா, கப்பலோட்டிய தமிழனாக என்று பல கதாபத்திரங்களாகவே மாறி இருந்த அந்த கலைஞனின் தொழில் பக்தி என்னை வியக்க வைத்திருகிறது. கோடியாய் நடிகர்கள் பொருளீட்டாத காலத்தில், விருப்பத்தால் நடிப்பு துறைக்கு வந்தவர்களேஅதிகம்.இந்தியாவின் சிறந்த நடிகருக்கான பாரத் போன்ற பரிசுகள் கிடைக்காவில்லை.

    ஆனால் சஞ்சீவ் குமார் உள்ளிட்ட பல வட இந்திய நடிகர்கள் செய்ய விரும்பிய பல கதாபாத்திரங்களை செய்திருகிறார்சிவாஜி என்றாலே பின்னாளில் ஒரு பறவையுடன் அழுது கொண்டே ஒரு சோக பாடலை பாடவேண்டிய நிர்ப்பந்தம் பாலும் பழமும் படத்தில் இருந்து தொடங்கியது. அதையே ஒரு வாய்ப்பாய் எண்ணி டிஎம்ஸ் பாடியதை சில சமயம் ரேடியோவை அணைத்து விட்டால் கூடகேட்கலாம் என்று கேலி பேசுவதுண்டு(பாலூட்டி வளர்த்தகிளி, யாருக்காக, பணம் என்னடா பணம்)
    மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு என்ற சில காட்சிகள் ஒவ்வொரு படத்திலும் இருந்தாலும், உழைப்பை நம்பி உயர்ந்த ஒரு மனிதன் என்ற வகையில் எனது மரியாதைக்குரியவர்களில் ஒருவர்.

    வியட்நாம் வீடு நாடகமாகவும், பிறகு திரைப்படமாகவும் பார்த்தேன்.தில்லானா மோகனாம்பாள் விகடனில் படித்த கதைக்கு உயிர் கொடுத்த நடிப்பும், பத்மினியின் நடனமும் இன்னமும் ரசிக்க கூடியவை.ஆனால் கும்பகோணத்தில் தியேட்டருக்கு எதிரே வசித்த போது அன்பைத்தேடி படம் வெளியான அன்று ரோஜாப்பூக்களால் சிவாஜியின் படத்திற்கு ஆராதனை நடந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. டயமண்ட் தியேட்டரில் காஞ்சிதலைவன் படம் வெளி வந்து கல்லூரிகள் மூடும் வரை கலாட்டா நடந்ததும் போட்டியாக அன்பைத்தேடி பரபரப்பாக்க பட்டதும் இப்போது சில திரைப்பட வரவேற்பு பற்றி படிக்கும் போது நினைவுக்கு வருகிறது. இன்னமும் தனிமனித வழிபாடு போகவில்லை போலும்.

    முதல் மரியாதை, தேவர் மகன் போன்ற சமீப (?) கால படங்களில் இன்னமும் சிவாஜியின் நினைவை விட அந்த கதாபத்திரங்களின் நினைவு வருவதே அவரின் வெற்றி என்பேன்.

    திரைப்பட செல்வாக்கை வைத்து அரசியலுக்கு வந்து அனுபவப்பட்டவர்கலில் இன்னமும் சிவாஜியின் பெயரே முதன்மையாக இருக்கிறது.பந்தடிமேடையில் கூட்டத்திற்கு அண்ணன் வருகிறார், வந்து கொண்டே இருக்கிறார் என்று அறிவிப்புக்கள் வருமே தவிர அண்ணன் வர 12 மணி நேரம் தாமதமாகிவிடும். அதற்குமுன் சிலர் எங்கள் அண்ணன் இமயமலை நீ பறங்கிமலை என்று பேசும் வீரதீர பேச்சுக்கள் காதில் விழ, எப்போது இந்த ஒலிபெருக்கி நிறுத்தப்படும் என்று காத்திருப்போம்.

    இறந்த பிறகு பலரும் எழுதிய அவரின் தொழில் பக்தி, பணம் கேட்டு தயரிப்பாளார்களிடம் இல்லாதபோது அவர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்த கூடாது போன்ற செய்திகள் உண்மையாயின், அது அவரின் குணத்திற்கு கிடைத்த வெற்றி மாலை.

    இந்தப் பதிவின் திறத்தை தமிழ்மணம்.காம் தளத்தின் வழியே பிறருக்குச் சொல்லுங்கள் இதுவரை இதன் தரக்கணிப்பு: கணிப்பைச் சுட்ட நட்சத்திரங்களில் சொடுக்கவும்
    Comments madekarupy wrote:
    நடிப்பின் சிகரம் சிவாஜி கணேசன் என்கின்றார்கள். என்னைப் பொறுத்தவரையில் சிவாஜியின் நடிப்பு என்னை ஒருபோதும் கவர்ந்ததில்லை. ஓவர் ஆக்டிங் என்ற வகைக்குள்தான் அவரது நடிப்பு அடங்குகின்றது. தமது இயல்பான நடிப்பால் என்னைக் கவர்ந்த கடந்த கால நடிகர்கள் என்று நான் ஜெமினி கணேசனையும் எஸ்.எஸ் ஆரையும் தான் கூறுவேன். சிவாஜியின் மிதமான செயற்கை நடிப்பு எனக்குள் உணர்சியை வரவழைக்காமல் சிரிப்பைத்தான் வரவழைத்திருக்கின்றது. இருந்தும் பல தமிழ் மக்களின் நெஞ்சைக் கவர்ந்த நடிகர் அவர் என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.

    reply to this comment
    21/07 11:29:31
    Padma Arvind wrote:
    கருப்பி:
    இத்துறையில் இருப்பவர் என்பதாலும் நடிப்பதுடன் நடிகர்களை இயக்குவதாலும் உங்கள் கருத்தை மதிக்கிறேன். சில பாத்திரங்களில் மிக நன்றாக ஒன்றிப்போனதாக தோன்றுகிறது. சில படங்கள் என்னை பொறுத்தவரை மிகவும் செயற்கை. உதாரணம்: பட்டாக்கத்தி பரவன், லாரிடிரைவர் ராஜாகண்ணு போன்றவை…சிவாஜியின் தமிழ் உச்சரிப்பு நான் குறிப்பிட்ட படங்களில் என்னை கவர்ந்த ஒன்று.
    ஜெமினிகணேசனின் சில கதாபாத்திரங்கள் பிடிக்கும், பிடிக்காதவையும் உண்டு.

    reply to this comment
    21/07 11:35:42
    ராம்கி wrote:
    எங்கெல்லாம் நீங்கள் இருந்தீர்கள்?வைத்தீஸ்வரன் கோவில்,பாண்டி,கும்பகோணம் என்று ஒவ்வொரு பதிவில் இருந்தும் ஒரு செய்தி கிடைக்கிறது.அப்பா பணி நிமித்தம் கிடைத்த மாறுதல்களா? இதனால் படிப்பில் ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றி எழுதுங்களேன்.

    reply to this comment
    21/07 11:59:45
    aruL wrote:
    உங்களுடைய பல நல்ல பதிவுகளுக்கு பின்னூட்டமிடாமல் இதற்கு மட்டும் எழுதுவது தவறுதான். இருந்தாலும் சிவாஜி என்பதால்…..
    சிவாஜியின் நடிப்பு என்பது கொஞ்சம் விரிவான விஷயம். அவருக்கு underplay செய்ய வராமல் அவர் நடியோ நடியென்று நடித்துத் தீர்க்கவில்லை. அவரிடம் மற்றவர்கள் எதிர்பார்த்ததை அவர் கொடுத்தார். அதற்கு மேலும் போற போக்கில் அவர் கொடுத்ததைப் பார்க்க உன்னிப்பாய் கவனிக்க வேண்டும். ஏதாவதொரு பழைய பாடலை (’நான் பேச நினைப்பதெல்லாம்’ போன்ற ‘நடித்த’ பாடல்களை அல்ல ‘சொர்க்கம் பக்கத்தில்’ போன்ற ஜனரஞ்சக கிளாசிக்குகளை ) வீடியோவில் பாருங்கள். watch his body language and fleeting mannerisms that last a microsecond. That will show what he is capable of. As some one said you must know how to act in the first place to overact. எப்பொழுதாவது விரிவாக எழுதுகிறேன்.
    அருள்

    reply to this comment
    21/07 12:05:55
    Padma Arvind wrote:
    நன்றி அருள். நான் சொன்னபடியே சிவாஜியின் படங்களை உன்னிப்பாக நான் நிறைய பார்க்கவில்லை. என்னை கவர்ந்த சிவாஜி பட பாடல்களில் பிடித்தபாடல்உன்கண்ணில் நீர் வழிந்தால். அதில் நடிப்பும், பாடிய விதமும் நெகிழ்வானவை. அதே போல உத்தமபுத்திரன் படத்தில் போதையின் பிடியில் கண்மணி நிலையாய் நடன காட்சி முழுதும் ஒரு போதை அடிமையை போல இருக்கும்.என்னிடம் சிவஜி பாடல் DVD இருக்கிறது. பார்க்கிறேன். தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அருள்.

    reply to this comment
    21/07 12:14:41
    Padma Arvind wrote:
    ராம்கி: நான் தேரழுந்தூரில் 2 ஆம் படிவம் வரையும், வைத்தீஸ்வரன்கோவிலில் 5 ஆம் படிவம் வரையும் படித்தேன். பிறகு ஆடுதுறை, திருநாகேஸ்வரம் போன்ற இடங்களில் இருந்தாலும், கும்பகோணம் வந்து படித்தேன்.பிறகு கும்பகோணத்தில் தங்ki இருந்தோம். கல்லூரி ஜிப்மரிலும், அதன் பின் AIIMSஇலும் படித்து முடித்து இறுதியாய் NJ.உங்களை குழப்பத்தில் ஆழ்த்தியதற்கு வருந்துகிறேன்.

    reply to this comment
    21/07 12:17:52
    aruL wrote:
    சிவாஜி வீட்டிலிருந்து ரெண்டு நிமிஷ நடக்கும் தூரத்தில்தான் இப்போது வசிக்கிறேன். உடனே எழுத ஏரியாக்காரர் என்ற இந்த லோக்கல் அன்பும் காரணம்.
    அருள்

    reply to this comment
    21/07 12:21:47
    aruL wrote:
    >>
    தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அருள்.
    ————–
    ஐயையோ. ‘தங்கள்’ என்றெல்லாம் எழுதாதீர்கள். பயமாக இருக்கிறது. எல்லோருக்கும் வெறும் ‘அருள்’ தான்.
    அருள்

    reply to this comment
    21/07 12:27:54
    Padma Arvind wrote:
    அருள்:
    பெயரிலேயே அருள் உள்ளவரல்லாவா? நன்றி .

    reply to this comment
    21/07 13:18:43
    chandravathanaa wrote:
    பத்மா
    இன்றைய நாளுக்குப் பொருத்தமான பதிவு.

    சிவாஜியின் நடிப்பு அதீதம் என்றுதான் பலர் அலுத்துக் கொள்கிறார்கள்.
    ஆனால் எனது சின்னவயதில் எனக்கு சிவாஜியை நிறையவே பிடித்தது.
    நீங்கள் சொன்னது போல அந்த உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடலை
    அலுக்காமல் சலிக்காமல் திரும்பத் திரும்பப் பார்க்கலாம். அதில் பத்மினியின்
    நடிப்பும் அருமை.இதே போல நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும்…
    தில்லானா மோகனாம்பாள் பாடலும் குறிப்பிடத் தக்கது.

    reply to this comment
    21/07 13:53:20
    மயிலாடுதுறை சி wrote:
    பத்மா,
    நடிப்பு உலக மேதையை நினைவு கூர்ந்ததிற்கு மனதார பாராட்டுகள்.
    கறுப்பி சொன்னதில் சில உடன் பாடு உண்டு என்றாலும், மக்கள் மனதில் இன்றும் வீர பாண்டிய கட்ட பொம்மனாக, கப்பல் ஓட்டிய தமிழனாக, சத்ரபதி சிவாஜியாக, அப்பராக, மாணிக்க வாசகராக, திருப்பூர் குமரனாக, இப்படி பல பாத்திரங்களில் குடிகொண்டவர் நடிப்பு திலகம் சிவாஜி அவர்கள். இறந்து போனது சிவாஜி மட்டும் அல்ல, மேற்சொன்ன காதபாத்திரங்களும் தான்.

    பத்மா, நம்மவூர் பக்கம்தான், நான் பிறந்து வளர்ந்து படித்து எல்லாமே மயிலாடுதுறையில்தான், தற்பொழுது வாசிங்டன்னில். இந்த பக்கம் வந்தால் சொல்லுங்கள். வைத்திஸ்வரன் கோவில் பற்றி, ஆடுதுறை பற்றி, தேரந்தழுர் கம்பன் பற்றி நிறைய பேசலாம்…

    நன்றி
    மயிலாடுதுறை சிவா…

    reply to this comment
    21/07 13:58:28
    kk wrote:
    Thiruvilayadal sivaji

    marakka mudiyuma…..
    I will call it his masterpiece.

    reply to this comment
    21/07 16:07:32
    வாசன் wrote:
    மணமகன் தேவை, மரகதம்,தூக்குத்தூக்கி போன்ற படங்களில் அதீத நடிப்பு இல்லாமல் அட்டகாசமாக செய்திருக்கிறாரே சிவாஜி. இயக்குநர்களில் திறன் அல்லது திறன் இன்மையைப் பொறுத்து அவருடைய நடிப்பு அமைந்திருக்கலாம்.

    reply to this comment
    21/07 20:38:51
    ராம்கி wrote:
    நன்றி பத்மா..

    reply to this comment
    21/07 21:33:16
    அல்வாசிட்டி.வி wrote:
    //கறுப்பி: நடிப்பின் சிகரம் சிவாஜி கணேசன் என்கின்றார்கள். என்னைப் பொறுத்தவரையில் சிவாஜியின் நடிப்பு என்னை ஒருபோதும் கவர்ந்ததில்லை. //

    மிகை நடிப்பு என்பது எல்லாருக்கும் கை கூடுவதில்லையே. சிவாஜி கணேசன் மேடை நாடகங்களிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். சிவாஜியின் சுயசரிதை நூலகத்தில் பார்த்தேன் படிக்க நேரமில்லை. மேலாக புரட்டியதில் இந்த மிகைநடிப்பை பற்றி அவரே பேசியிருந்ததாக ஞாபகம். மிகைநடிப்பு பற்றி சிவாஜியின் சமகாலத்து நடிகர் ‘ஜெமினி’கணேசன் ஒரு டிவி பேட்டியில் ஒரு கருத்தை சொல்லும் போது ‘மிகைநடிப்பு’ என்பதை ரசிக்கவும் தொடங்கினேன். நான் எழுதிய பதிவின் ஒரு பாகம் இங்கே.

    மிகையான நடிப்பு தேவையா என்ற கேள்விக்கு….

    டிராமா ஆர்டிஸ்ட் எல்லாம் கொஞ்சம் மிக நடிப்பை செய்ய வேண்டிய அவசியத்தை பகிர்ந்துக் கொண்டார். நாடகம் போடும் போது கடைசியில் உட்கார்ந்திருப்பவனுக்கும் கேட்கும் படி கத்தி தான் பேச வேண்டும். அப்போது நடிப்பு என்பது அவற்றில் கொஞ்சம் மிகைப்பட்டு தான் போகிறது. அதுவே சினிமாவென்று வரும் போது டிராமா ஆர்டிஸ்ட்களால் பழக்கத்தை விட முடியாமல் மிகை நடிப்பு வந்துவிடுகிறது. சில இடங்களில் ஒவர் ஆக்டிங்(மிகைநடிப்பு) தேவை என்பதை ஜெமினி பகிர்ந்துக் கொண்டார்.”

    இந்த பதிவை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

    reply to this comment
    21/07 21:43:48
    அல்வாசிட்டி.வி wrote:
    நேரம் கிடைக்கும் போது சிவாஜி சொல்ல இன்னொருவர் எழுதிய சிவாஜிகணேசனின் ‘சுயசரிதை’ புத்தகத்தை படித்து ஒரு பதிவு போடுகிறேன்.

    ஞாபகப்படுத்தியதற்கு நன்றி பத்மா.

    reply to this comment
    21/07 21:46:05
    ஜோ wrote:
    நடிப்புலக மாமேதை பற்றிய பதிவுக்கு நன்றி..

    விரிவாக எழுத விருப்பம் ..நேரமின்மையால் பின்பு எழுதுகிறேன்.

    ஆயிரம் காரணம் சொல்லி சிலர் அவரை குறை சொன்னாலும் ,மிகை நடிப்பு ,குறை நடிப்பு ,இயல்பு நடிப்பு மற்றும் எல்லா நடிப்பு வகைகளிலும் அவர் தான் KING .

    சிவாஜி தமிழர்களின் பெருமை!

    reply to this comment
    21/07 22:35:15
    அல்வாசிட்டி.வி wrote:
    ஆஹா…ஜோ!! சிவாஜி பற்றிய பதிவை தமிழ்மணத்தில் பார்த்த உடன் உங்களை தான் நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். நீங்க பதிவு எழுத சிவாஜி சுயசரிதை புத்தகம் வேண்டுமென்றால் எஸ்பிளனாட் நூலகத்தில் கிடைக்கிறது. படிங்க ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு.

    reply to this comment
    21/07 22:39:03
    ஜோ wrote:
    //ஓவர் ஆக்டிங் என்ற வகைக்குள்தான் அவரது நடிப்பு அடங்குகின்றது.//

    தேவர் மகன் ,முதல் மரியாதை கூட ஓவர் ஆக்டிங்கா?
    உங்கள் பார்வையில் உணர்ச்சியே இல்லாமல் முகத்தை மட்டையாக வைத்துக்கொண்டு ,கையை அசைக்காமல் அல்லது ஒரே நிலையில் வைத்துக்கொண்டு வசனம் பேசுவது (ஜெமினி போல) தான் இயல்யு ஆக்டிங்கோ?

    reply to this comment
    21/07 22:44:05
    ஜோ wrote:
    விஜய்,
    நான் ஏற்கனவே அந்த புத்தகத்தை சொந்தமாகவே வாங்கி விட்டேன்.நன்றி!

    reply to this comment
    21/07 22:46:09
    அல்வாசிட்டி.வி wrote:
    //விஜய்,
    நான் ஏற்கனவே அந்த புத்தகத்தை சொந்தமாகவே வாங்கி விட்டேன்.நன்றி!
    //

    அதானே

    reply to this comment
    21/07 22:49:17
    கருப்பு wrote:
    சிவாஜியின் கண்களும் காவியம் சொல்லுமே… இந்த நூற்றாண்டின் அற்புத நடிகன்.

    reply to this comment
    22/07 05:14:48
    avatharam wrote:
    //நேரம் கிடைக்கும் போது சிவாஜி சொல்ல இன்னொருவர் எழுதிய சிவாஜிகணேசனின் ‘சுயசரிதை’ புத்தகத்தை படித்து ஒரு பதிவு போடுகிறேன்//

    அல்வா சிட்டி இன்னும் நேரம் கிடைக்கலியா?




    பொது

    One Response
    yuvaraj writes: November 24th, 2008 at 10:59 am
    sivaji sir is evergreen acting sun & moon too. all other stars are rounds him. i don’t have any wods to prise sivaji sir. no one can ……………………….. him




    SEE THE RESPONSES...... IT'S AMAZING
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  10. #1109
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    SIVAJI MAULANA-AN ACTOR AND A SIVAJI FAN IN SRILANKA
    READ THIS INTERESTING ARTICLE

    http://www.thinakaran.lk/vaaramanjar...=f09100411&p=1
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  11. #1110
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    >> Fullstory







    இமயம்

    AvYj

    ஐந்தடி உயரமே உள்ளவர். இந்த உயரக் குறைவை அவரைத் திரையில் கண்ட எவரும் உணரவில்லை. மாறாக ஒவ்வொரு படத்திலும் அவர் விஸ்வரூபம் எடுத்ததைத்தான் பார்த்திருக்கிறார்கள். கப்பலோட்டிய தமிழனில் யாருமே சிவாஜியைக் காணவில்லை; சிதம்பரம் பிள்ளையைத்தான் கண்டார்கள். கட்டபொம்மன் என்கிற குறுநில மன்னன் - வெள்ளையரை எதிர்த்தவன் - விடுதலைச் சரித்திரத்தின் சின்னமாக உருவானது, சிவாஜியால்தான். பாச மலரின் ராஜ சேகரன், அன்றைய முதலாளிகளுக்கு ஆதர்சம். வியட்நாம் வீடு நாடகத்தைப் பார்த்த ஜெமினி வாசன், கதறிக் கதறி அழுதாராம். அவர், இளமையும், அன்னையும், அவர் வாழ்க்கையில் முன்னுக்கு வரபட்ட சிரமங்களும் நாடகத்தின் ஊடே அவர் எண்ணத்திரையில் நிழலாடிக்கொண்டே இருந்திருக்கின்றன.

    நாடக உலகின் பிதாமகர் டி.கே.ஷண்முகம், ஒளவையாராக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர்; கிழவியின் தோற்றம் வேண்டுமென்பதற்காக முன்னிரு பற்களைப் பிடுங்கிக் கொண்டவர் - ஒளவையாராய்க் கூன் போட்டுக் கூன் போட்டு கூன் அவரிடம் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அவர் ஒரு நாடகம் பார்த்த பொழுது ராம பிரானின் அன்னையாக நடித்த நடிகையின் உணர்ச்சிகரமான நடிப்பில் மனத்தைப் பறி கொடுத்திருக்கிறார். நாடகம் முடிந்த பின் "யார் அந்த நடிகர்?' என்று கேட்டாராம். ""அவரைத் தெரியாதா? அவர் தான் வி.சி.கணேசன்'' என்று சொன்னார்களாம். அவர் தாம் நம்முடைய நடிகர் திலகம், சிவாஜி கணேசன்.

    ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலிருந்து வந்தவர்; சிறுவயதிலிருந்தே நாடகத்தில் பல்வேறு முகங்களையும் துறைகளையும் அநுபவ வாயிலாகக் கண்டவர்; மு.கருணாநிதி என்கிற காட்டாற்று வெள்ளம் வசனம் எழுதிய பராசக்தியின் கதாநாயகனாக அவர் ஆனது, விதி வசத்தால் என்று சொல்வதை விட, தமிழ்நாட்டின் அதிருஷ்டத்தால் என்றுதான் சொல்ல வேண்டும். "தென்றலைத் தீண்டியதில்லை தீயைத் தாண்டியிருக்கிறேன்'; "ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்'; "அம்பாள் எப்போதடா பேசினாள் அறிவு கெட்டவனே' போன்ற நெருப்புப் பொறிகளைப் பொத்தி வைத்திருந்து கக்கியவர், சிவாஜி கணேசன். தமிழ்த் திரைப்பட உலகில் அன்றிலிருந்து ஒரு புது சகாப்தம் தொடங்கியது. குரலின் ஏற்ற இறக்கங்கள், உணர்ச்சியின் பாவத்தைப் பாதிக்காது இருக்க முடியும் என்று தமிழ் உலகிற்கு முதலில் மெய்ப்பித்தவர், சிவாஜி.

    ஆரம்பத்தில் மிகை தவிர்த்த உணர்ச்சி வெளிப்பாடு அழுத்தமான வசனங்களின் உணர்வுத் ததும்பல்களை அடக்காமல் பார்த்துக்கொண்டது, அவரின் சாமர்த்தியம் என்றுதான் சொல்லவேண்டும்.

    அவருடைய நடிப்பின் பிரிணாம வளர்ச்சியை மூன்று பிரிவாக நாம் பார்க்கலாம். முதலில் மிகை தவிர்த்த உணர்ச்சியுடன் கூடிய மிகை வசனங்கள், நடுவில் சற்றேமிகை கூடிய வசனங்கள் குறைந்த உணர்ச்சிகர நடிப்பு, பின்னால் மிகையும் உச்சரிப்பில் ஏற்றத்தாழ்வும் கூடிய உரத்த நடிப்பு. இந்தப் பரிணாம வளர்ச்சியைத் தமிழ்மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்த போதிலும் ஒவ்வொரு கட்டத்திலும் அவரின் ஆளுமைத் திறனை உண்மையாக ரசித்துப் பாராட்டினார்கள்.

    இந்த நடிப்பு வளர்ச்சியில் நாம் சிவாஜியின் நடிப்பின் உச்சமாகப் பார்ப்பது நடுவில் வந்த காலக்கட்டத்தைத்தான். அப்போதுதான் சிவாஜி என்கிற குணச்சித்திர நடிகர், படிப்படியாக வளர்ச்சி பெற்று, தனக்கென்று ஓர் ஆளுமையையும் தனித்தன்மையையும் கொண்டு வலம் வரத் தொடங்கினார். கிட்டத்தட்ட ஒரு முரட்டுக் குதிரை போல் இருந்த இவரை ஒரு வட்டம் போட்டு அந்த வட்டத்தை மிகாமல், வெளிவராமல் திறமையை வெளிப்படுத்திய இயக்குநர் ஒருவர் இருந்தார். அவர்தான், பீம்சிங். இவர் கதை சொல்லும் பாணியே தனி. கதாபாத்திரங்களைப் பழங்காலக் கலைப் பொருட்களாக உலா விடுவது இவரின் பிரத்யேக பாணி. இந்தியக் கலாசாரத்தின் மரபு சார்ந்த படிமானங்கள் அழுத்தமாய்ப் படிந்திருந்த பீம்சிங், அதையொட்டியே திரைப்படங்கள் எடுத்தார். பாசமலர், பாகப் பிரிவினை, படித்தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும் போன்ற அழுத்தமான திரைக் கதைகளில் இயல்பாக ஒன்றிப் பொருந்தினார், சிவாஜி கணேசன்.

    ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரம் - எல்லாமே சிவாஜிக்கு வடிவமைக்கப்பட்டது மாதிரி. படிக்காத மேதையில் விசுவாசமான வேலைக்காரன்; எஸ்.வி.ரங்காராவின் குணச்சித்திர மிகை தவிர்த்த நடிப்புக்கு ஈடு கொடுத்து நடித்திருந்தார் சிவாஜிகணேசன். அவரின் உணர்ச்சி பூர்மான நடிப்பில் மிகை இழையைச் சற்றும் வெளிக்காட்டாத சாதுர்யமான திரைக்கதை அமைப்பின் சாமர்த்தியம், பீம்சிங்கிற்கு உரியது. இசை சேகரத்தின் அந்நாள் மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, தத்துவ தரிசனம் கண்ட பாடலாசிரியர் கண்ணதாசன் போன்றவர்கள் இந்தப் படங்களுக்கு மெருகு கூட்டி, திரைப்படங்களைக் காவிய அந்தஸ்துக்கு உயர்த்தினார்கள்.

    பாசமலரில் முரட்டுப் பாசம் காட்டும் அண்ணன் வேடம் சிவாஜிக்கு. அடர்த்தியான புருவங்கள், மெல்லிய மீசை, தங்கச் சங்கிலி கடிகாரம், சூட்டுடன் ராஜநடை நடந்த சிவாஜியின் நடிப்பில் மனத்தைப் பறிகொடுத்தது தமிழ்ச் சமூகம். ராஜா போல் வாழ்ந்த மனிதன், தங்கைக்காகச் சகலத்தையும் தியாகம் செய்துவிட்டுக் கடைசியில் பிச்சைக்காரன் போல் கண்களையும் இழந்து "கை வீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கை வீசு' என்று அழும்போது பார்த்த மக்கள் அவ்வளவு பேரும் சேர்ந்து அழுதார்கள்.

    தூக்குத் தூக்கியிலிருந்தும், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியிலிருந்தும் சிவாஜி என்கிற குணச்சித்திர நடிகர் தனித்த ஆளுமையுடன் பரிணமித்தது - பரிமளித்தது இப்படித்தான். கம்பீரமானவன், முரட்டுத் தனமாக அன்பு செலுத்துபவன், பாசத்துக்காக உயிரைத் தியாகம் செய்யும் உன்னத ஆதர்ச மனிதன், தமிழ் மண்ணில் வலம் வந்தது இப்படித்தான். இவனுக்குத் தெரிந்ததெல்லாம் அன்பு செலுத்துவதும் அன்புக்காக ஏங்குவதும். இப்படி ஒரு காலத்தின் பரிசோதனையைக் கடந்த திரைப்பட ஃபார்முலாவை முதன் முதலில் வெற்றிகரமாகப் பரிசோதித்தவர், சிவாஜிகணேசன்.

    படித்தால் மட்டும் போதுமா, எதையும் வெளிப்படையாகச் செய்யும் ஓர் ஆளுமை நிறைந்த மனிதனுக்கும் (உஷ்ற்ழ்ர்ஸ்ங்ய்ற்) எல்லாவற்றையும் ரகசியமாகப் பூட்டி வைக்கும் (ஐய்ற்ழ்ர்ஸ்ங்ழ்ற்) மனிதனுக்கும் இடையில் நிகழும் போராட்டத்தைச் சித்திரிக்கும் படம், இது.

    பீம்சிங்கின் பா வரிசையை அடுத்து வந்த படங்கள் எல்லாமே சிவாஜியின் ஆளுமை சார்ந்த மிகை நடிப்பை வெளிக்கொணருவதிலேயே குறியாய் இருந்தன.

    உடல் பருமன் சற்றிளைத்த சிவாஜி, முரட்டு நல்லவன் இமேஜிலிருந்து நல்லவன் இமேஜிற்கு வளர்ந்திருந்த சமயம். பந்துலுவின் கர்ணனையும் பி.எஸ்.வீரப்பாவின் ஆலய மணியையும் கூட இதில் சேர்க்க முடியாது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் கை கொடுத்த தெய்வத்தை ஓரளவு சேர்க்கலாம். பின்னர் வந்த ஸ்ரீதரின் படங்கள், எங்க மாமா, தங்கைக்காக போன்ற படங்கள் எல்லாமே சிவாஜியின் நடிப்பை நம்பியல்லாது இமேஜை நம்பி உருவாக்கப்பட்ட படங்கள். இவற்றில் அன்றிருந்த சந்தை எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நடித்திருந்தார் சிவாஜி என்று சொல்லலாமே ஒழிய அந்தந்தக் கதாபாத்திரங்களில் அவர் முழுமனதோடு ஈடுபாட்டோடு நடித்திருந்தாரா என்பது கேள்விக் குறியே. தெய்வ மகன், ஆஸ்காருக்குச் சென்றது. ஒரே நடிகர் மூன்று வெவ்வேறு பாத்திரங்களில் நடித்திருந்தது குறித்துத்தான் அப்போது பரபரப்பாகப் பேசப் பட்டதேயொழிய நடிப்பு, குறிப்பாக மூத்த மகன் கதாபாத்திரத்தின் நடிப்பு, வெகுவாகச் சிலாகிக்கப்படவில்லை.

    இதுதான் சிவாஜியின் தோல்வியின் ஆரம்பம் என்று சொல்லலாம். குணச்சித்திரம் மாறி ஆளுமையும் நடிப்பும் என்று ஆகிக் கடைசியில் ஆளுமை மட்டுமே கோலோச்சியது தான், சிவாஜியின் நடிப்பை விரும்பிப் பார்த்தவர்களை அபிமானத்தால் சகித்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியது. இதற்கு ஏற்கெனவே கூறியிருந்தபடி சிவாஜியைச் சுற்றிப் பின்னப்பட்ட மாய இமேஜ் வலைதான் காரணம் என்று நாம் பெருமூச்சு விட வேண்டியிருக்கிறது.

    இந்த மிகை ஆளுமையின் நடுவிலும் அவ்வப்போது சில நட்சத்திரச் சிதறல்களை அள்ளி வீசாமல் இல்லை. ராமன் எத்தனை ராமனடியில் வீரசிவாஜியாக வசனம்பேசி விட்டுக் கடைசியில் வாளைக் கையில் ஏந்தி ஒரு நடை நடப்பார். சாம்ராஜ்யக் கனவைக் கண்களில் ஏந்திக் கனவில் மிதப்பது போன்ற நடை. உண்மையில் வீரசிவாஜி அதுபோல்தான் நடந்திருப்பார். வியட்நாம் வீட்டின் பிரஸ்டிஜ் பத்மநாபன் வேடத்திற்காக சிம்ஸன் நாராயண சாமி ஐயரைப்போய் சிவாஜி உன்னிப்பாகக் கவனித்தார் என்று சொல்கிறார்கள். அவர் காட்டிய முகபாவங்களும் நடையுடை பாவனைகளும் பேசிய வசனங்களும் ஓர் உண்மையான பிராமண கனவானைக் கண்களில் கொண்டு நிறுத்தியது. கௌரவத்தின் அநாசார வக்கீல்-சத்தத்தையும் மீறி அவரின் கம்பீர நடிப்பு, நம் உள்ளத்தில் நிற்கிறது. திருநாவுக்கரசராகத் திருவருட்செல்வரில் நாம் கண்டது ஒரு முதிய தவயோகியின் அருள் கனிந்த முகத்தை. தங்கப் பதக்கத்தில் நேர்மையும் கம்பீரமும் கண்டிப்பும் மிக்க போலீஸ் அதிகாரியைக் கண்டோம். அதில் பதக்கம் வாங்கக் கடைசியில் அவர் நடக்கும் நடை, உண்மையான போலீஸ் அதிகாரியைக் கூடப் பொருமைகொள்ளச் செய்யும்.

    சிவாஜி மறைந்துவிட்டார். குழந்தை போன்றவர். உண்மையான தேசியவாதி.

    படிப்பு அதிகமில்லாத, உருவ லட்சணங் களும் சுமாராக உள்ள ஒரு மனிதர், தம் நடிப்புத் திறமையை மட்டும் வைத்து நம்மையெல்லாம் நாற்பது ஆண்டுகளுக்குக் கட்டிப் போட்டிருந்தார்.

    நாடகக் கலை மிகுதியும் வளராத தமிழ்ச் சூழலில் சினிமா, நாடகத்தைக் கபளீகரம் செய்திருந்த நிலையில், ஓர் உண்மையான நாடகக் கலைஞன், ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் கோலோச்சியது ஆச்சர்யம் தான்

    அவரை அபிமானிகள், "இமயம்' என்கிறார்கள். என்ன தவறு?




    FROM
    http://sify.com/news_info/tamil/amud...hp?id=13533626
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •