Page 100 of 150 FirstFirst ... 50909899100101102110 ... LastLast
Results 991 to 1,000 of 1491

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5

  1. #991
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe
    Sarath to remake ‘Veerapandiya Kattabomman’
    Shouldn't he be busy remaking Adimai Penn or Madhurayai Meeta Sundara Pandiyan? :P

    A2A,
    thanks for the links and forwards. By the way, that tripod link is mine, I wrote it few years before joining the hub. Much opinion has changed as far as the intro and the first few para is concerned, I stand by the rest.

    Okay, should start reading Murali-sar's NT birthday posts.
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #992
    Senior Member Seasoned Hubber Avadi to America's Avatar
    Join Date
    Apr 2008
    Posts
    827
    Post Thanks / Like
    Quote Originally Posted by groucho070
    Quote Originally Posted by joe
    Sarath to remake ‘Veerapandiya Kattabomman’
    Shouldn't he be busy remaking Adimai Penn or Madhurayai Meeta Sundara Pandiyan? :P

    A2A,
    thanks for the links and forwards. By the way, that tripod link is mine, I wrote it few years before joining the hub. Much opinion has changed as far as the intro and the first few para is concerned, I stand by the rest.

    Okay, should start reading Murali-sar's NT birthday posts.
    Groucho007,

    it is high time to get copy rights for your articles......


    Saradha madam,

    i will definitely post NT related articles if i come across.............
    In theory there is no difference between theory and practice; in practice there is

  4. #993
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,327
    Post Thanks / Like
    Quote Originally Posted by groucho070
    Quote Originally Posted by joe
    Sarath to remake ‘Veerapandiya Kattabomman’
    Shouldn't he be busy remaking Adimai Penn or Madhurayai Meeta Sundara Pandiyan? :P
    ஏற்கனவே "கட்டபொம்மன்"னு ஒரு படம் (ச்சட படம்) பண்ணினாரே, அத மாறி நினைச்சிட்டாரோ என்னமோ?

  5. #994
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Okay, finished reading. Murali-sar, all I can is just this and this and this . Yeah, I don't have words to praise your efforts.
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  6. #995
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear friends,
    Happy to meet you all here. I am really fortunate to have come to Madurai and take part in gala event. The function was a grand success and the exhibition was really a momentous one with so many fans (around 5 to 10 thousands visiting in one day on 4.10.09). I was interviewed by Kalaignar TV along with Vijayan and they have said they would telecast the whole coverage may be next Sunday. I thank Vijayan for giving me the opportunity to contribute in this event). I am just leaving for Madras and before that I was curious to visit the foum and read the postings. I am typing it at 10.00 a.m. 05.10.09 at Madurai. Rest I will post later.
    Regards,
    Raghavendran
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #996
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    சிவாஜியின் மூத்த மகன் நான்தான் - மு.க.அழகிரி

    மதுரை: நடிகர் திலகத்தின் மூத்த மகன்தான் நான்தான். அவரது சிலைக்கு தினமும் மாலை போடும் உரிமையை எனக்குத் தாருங்கள், என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார் மத்திய அமைச்சர் மு.க அழகிரி.

    மதுரையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 8.5 அடிய உயர முழு உருவ வெண்கல சிலையை மத்திய ரசாயண மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரி நேற்று திறந்து வைத்தார்.

    [html:24a4e5cf30]
    [/html:24a4e5cf30]

    விழாவுக்கு நடிகர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி முன்னிலை வகித்தார். சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் வரவேற்று பேசினார்.

    அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத்தார். விழாவில் மு.க.அழகிரி பேசுகையில்,

    சிவாஜி கணேசனின் சிலையை திறப்பதில் எனக்கு சந்தோஷம் இருந்தாலும், என்னுடைய சித்தப்பா (சிவாஜி) சிலையாக மாறிவிட்டாரே என்று வருத்தமாக உள்ளது. நடிகர் பிரபு பேசும் போது, கமல் தான் சிவாஜியின் மூத்த மகன் என்று கூறினார். அது தவறு. உண்மையில் நான்தான் மூத்த மகன்.

    என்னுடைய தந்தையும் (முதல்-அமைச்சர் கருணாநிதி), சித்தப்பாவும் தி.மு.க.வில் ஒன்றாக பாடுபட்டு வந்தார்கள். அந்த சமயத்தில் சிவாஜியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று சிலர் தீர்மானம் போட்டு அண்ணாவிடம் கூட கொடுத்தார்கள். அப்போது சிவாஜி, அண்ணாவிடம் சென்று நான் தி.மு.க.வில் இருந்து விலகுகிறேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி வெளியேறினார்.

    தி.மு.க.வில் இருந்து சிவாஜி விலகினாலும், என் தந்தையும் அவரும் தொடர்ந்து நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர்.

    என் தந்தை முன் மற்றவர்கள் சிகரெட் பிடிப்பதற்கு பயப்படுவார்கள். ஆனால் அவர் முன் சிவாஜி சிகரெட் பிடிப்பார். இதை ஏன் கூறுகிறேன் என்றால், அந்தளவுக்கு அவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். என் தந்தையை சிவாஜி, மு.க. என்று தான் அழைப்பார். அவரை என் தந்தை கணேசா என்று செல்லமாக அழைப்பார்.

    சிவாஜிக்கு தந்த வாய்ப்பு

    பராசக்தி படத்தில் முதலில் நடிக்க கே.ஆர்.ராமசாமி ஒப்பந்தம் ஆனார். ஆனால் அவரை அந்த படத்தில் இருந்து வெளியேற சொல்லி விட்டு, சிவாஜிக்கு எனது தந்தை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். சிவாஜியும் அந்த படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார்.

    படத் தயாரிப்பாளரான ஏவி.எம். மெய்யப்ப செட்டியார் அந்த படத்தில் சிவாஜியின் நடிப்பு சரியில்லை அவரை நீக்கி விடுங்கள் என்று கூறினார். ஆனால் இதை கருணாநிதியும், இயக்குனரும் ஏற்காமல் தொடர்ந்து சிவாஜியை நடிக்க வைத்து அந்த படத்தை மாபெரும் வெற்றி பெற வைத்தனர்.

    குறவஞ்சிக்காக கோணி உடை

    குறவஞ்சி படத்தில் சிவாஜி ராஜாவாக நடித்தார். அதில் மாறுவேடம் போட்டு நகரில் நடக்கும் நிகழ்ச்சியை காண நாடோடி போல் வேஷம் போட வேண்டும். அதற்காக சிவாஜிக்கு ஒரு விலை உயர்ந்த ஆடை வழங்கப்பட்டது. உடனே சிவாஜி, அதை தூக்கிப் போட்டு விட்டு, ஒரு கோணியை உடையாக அணிந்து கொண்டு நடித்தார்.

    அந்தளவுக்கு நடிப்பை நிஜமாக்குவார். அவருடைய வசந்த மாளிகை படத்தை பார்த்த போது, உண்மையில் அவர் குடித்து விட்டுத்தான் நடித்திருப்பார் என்று நினைத்தேன். அவருடைய படிக்காத மேதை பார்த்து விட்டு கண்ணீர் விட்டு அழுதேன்.

    பிரபு மற்றும் அவர் குடும்பத்தாருக்கு ஒரு வேண்டுகோள். மதுரையில் உள்ள அண்ணா சிலைக்கு என் சார்பாக தினமும் மாலை போடப்படுகிறது. அதே போல் சிவாஜி சிலைக்கும் என் சார்பாக தினமும் மாலை போட அனுமதி தர வேண்டும். என் உயிருள்ளவரை மாலை அணிவிப்பேன் ... என்றார் அழகிரி.

    நடிகரும் மத்திய அமைச்சருமான நெப்போலியன், நடிகர் வடிவேலு உள்பட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    http://thatstamil.oneindia.in/movies...n-madurai.html

  8. #997
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Nice. Thanks, Joe.

    I wonder what Ram Kumar would feel personally when luminaries like Kamal, Rajini and now Azhagiri all claim to be NT's "sons" Anyway, it shows how much emotionally connected they all are to NT.
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  9. #998
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் முரளி,

    நடிகர்திலகத்தின் சிலைதிறப்புவிழா பற்றி டெலிபோனிலேயே இவ்வளவு விவரங்கள் திரட்டியுள்ளீர்கள். உங்கள் முயற்சிகளுக்கும் உழைப்புக்கும் நன்றிகள் பல.

    ராகவேந்தர் சார்,

    விரைவில் உங்களின் விளக்கமான நேரடி விழாத்தொகுப்பினை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

    நடிகர்திலகம் பற்றிய பல நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் இருட்டடிப்பு செய்யப்பட்ட போதிலும், இவ்விழா மத்திய அமைச்சர், அஞ்சாநெஞசன் திரு மு,க,அழகிரி பங்கேற்கும் விழா என்பதால், அட்லீஸ்ட் கலைஞர் தொலைக்காட்சியிலாவது காண்பிக்கப்படும் என்பது துவக்கத்திலிருந்தே என்னுடைய எதிர்பார்ப்பு.

    மனோரமா கலந்துகொள்ளாதது நல்லது என்றே நினைக்கிறேன். ஏனென்றால், மனோரமாவைப்பொறுத்தவரையில் அவரது மேடைப்பேச்சு ரசிக்கத்தக்க ஒன்று அல்ல. ரொம்பவே தடுமாறுவார். ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு உளறிக்கொட்டுவார். அவரது மேடைப்பேச்சைக் கேட்கும் யாரும், 'இவரா திரையில் இந்தக் கலக்கு கலக்குகிறார்?' என்று ஆச்சரியப்படுவார்கள். அந்த அளவுக்கு மேடைப்பேச்சில் உணர்ச்சி வசப்படுவார்.

  10. #999
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    சிவாஜி என்ற கேடயத்தை மனதில் தாங்கித்தான் நடிக்கிறேன் கமல்ஹாசன் பேச்சு

    மதுரை,அக்.5-

    "சிவாஜியின் கேடயத்தை மனதில் தாங்கித்தான் நடிக்கிறேன்'' என்று கமல்ஹாசன் பேசினார்.

    கமல்ஹாசன்

    மதுரையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-

    இந்த மேடைக்கு பேச வரும் முன், ஒத்திகை பார்க்காமல் தான் வந்தேன். அதே போல் தான் சினிமா உலகிற்கு வந்த போதும் ஒத்திகை இல்லாமல் வந்தேன். நான் சினிமா நடிகனாக தற்போது இல்லாமல் இருந்திருந்தால், எப்படியும் படிக்காமல் பரமக்குடியில் தான் இருந்திருப்பேன். தற்போது இங்கு நடக்கும் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் மற்றவர்களை போல் நானும் கீழே இருந்து அமர்ந்து பார்த்துக்கொண்டு தான் இருப்பேன்.

    நடிகர் வடிவேலு ஒரு பேட்டியில் சிவாஜியை பார்த்தவுடன் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்ததாக கூறினார். அவரை போல் நானும், சிவாஜியை பார்த்தால், பம்மி போய் அடங்கி விடுவேன். இது அவருடைய குடும்பத்தாருக்கு கூட தெரியும். அவர் முன் பேசக் கூட பயப்படுவேன்.

    அவர் நடிப்பில் மட்டுமல்ல நிஜத்திலும் தனது வாழ்க்கையில் முழுமையாக வாழ்ந்து இருக்கிறார். அவரிடம் இருந்து எளிமையாக எப்படி வாழ்வது? என்று கற்றுக்கொண்டேன்.

    இந்த விழாவில் கலந்து கொண்டதற்காக எனக்கு ஒரு கேடயம் நினைவு பரிசாக கொடுத்திருக்கிறார்கள். உண்மையில், சிவாஜி என்ற கேடயத்தை மனதில் நினைத்துக்கொண்டு தான் நாங்கள் எல்லாம் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறோம். என்னுடைய அலுவலக அறையில் இரண்டு படங்கள் உள்ளது. ஒன்று மகாத்மா காந்தி. மற்றொன்று சிவாஜியின் படம்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    நெப்போலியன்

    மத்திய மந்திரி நெப்போலியன் பேசியதாவது:-

    சிவாஜியுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் என்னால் அது முடியாமல் போய் விட்டது. ஆனால் அவருடைய கலை வாரிசு கமலுடன் சேர்ந்து விருமாண்டி, தசாவதாரம் படத்தில் நடித்து இருக்கிறேன். தசாவதாரம் படத்தில் நான் யானை மீது அமர்ந்து நடித்துக் கொண்டு இருந்தேன். அந்த யானை அங்கு, இங்கும் ஆடியது. இதனால் நான் கீழே விழும் சூழ்நிலை அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டு இருந்தது. இது குறித்து நான் யானை பாகனிடம் கேட்டேன். அதற்கு யானை பாகன், இந்த யானை கேரளாவை சேர்ந்தது, இங்கு வெப்பம் அதிகமாக இருப்பதால், யானையால் தாங்க முடியவில்லை. யானைக்கு மதம் பிடித்தாலும் பிடிக்கலாம் என்று கூறினார். இதனால் எனக்கு பயம் அதிகமாகியது. அதனால் யானைக்கு தினமும், வாழைத்தார்களை கொடுத்து, அதை நண்பனாக்கி கொண்டு படத்தில் நடித்தேன்.

    இதே போல் சிவாஜி கணேசன் சரஸ்வதி சபதம் படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார். அதில் ஒரு காட்சியில் யானை சிவாஜியின் மேல் கால் வைப்பது போல் உள்ளது. இந்த காட்சியில் சிவாஜி நடிப்பதற்கு முன், இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அந்த யானையை கொண்டு ஒத்திகை பார்த்தார். அப்போது, அந்த சிவாஜிகணேசனுக்குப்பதில் போடப்பட்டிருந்த மேஜையை யானை மிதித்து விட்டது. அதனால் நீங்கள் இந்த காட்சியில் நடிக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் சிவாஜி மிகுந்த தைரியத்துடன் அந்த காட்சியில் நடித்தார்.

    இவ்வாறு நெப்போலியன் பேசினார்.

    வடிவேலு

    நடிகர் வடிவேலு பேசும் போது கூறியதாவது:-

    தேவர் மகன் படத்தில் சிவாஜி இறந்தது போலவும், அதைக்கண்டு நான் அழுவது போலவும் காட்சி இருந்தது. இந்த காட்சியின் போது நானும், சங்கிலி முருகனும் கத்தி அழுதோம். உடனே, சிவாஜி வேகமாக எழுந்து கமலை அழைத்தார். என்னப்பா, இவர்களை எங்கிருந்து பிடித்து வந்தாய், இவர்கள், என்னையே செத்தது போல் நடிக்க விடமாட்டார்கள் போல் இருக்கிறதே? என்றார். பின்னர் எங்களிடம் வாயில் துணியை வைத்துக் கொண்டு கத்தாமல் அழ வேண்டும் என்றார். அதே போல் நாங்கள் அந்த காட்சியில் நடித்தோம்.

    சிவாஜி கணேசன் இறந்தவுடன் அவருடைய வீட்டுக்குச் சென்று நான் அழுது கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு, தேவர் மகன் பட சூட்டிங்கில் நடந்தது நினைவுக்கு வந்தது. சிவாஜி கணேசன் இந்த கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு எழுந்து வந்து ஏண்டா இப்படி அழுகிறாய்? என்று கேட்கக்கூடாதா? என்று நினைத்தேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விஜயகுமார்

    நடிகர் விஜயகுமார் பேசும்போது. "இன்றைய நடிகர்கள் சிவாஜியின் சாயல் இல்லாமல் நடிக்க முடியாது. ஏன் நண்பர்கள் ரஜினிகாந்த், கமல் கூட சிவாஜியின் சாயலோடுதான் நடிக்க முடியும் என்றார்கள். சென்னை மெரினா கடற்கரையில் கலைமகன் சிவாஜியின் சிலையை, தமிழ்மகன் கருணாநிதி திறந்து வைத்தார். அதே போல் மதுரையில் சிவாஜியின் சிலையை தமிழ்மகனின் மூத்தமகன் திறந்து வைக்கிறார்'' என்றார்.

    இந்த விழாவில் பின்னணி பாடகி பி.சுசீலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  11. #1000
    Senior Member Seasoned Hubber Avadi to America's Avatar
    Join Date
    Apr 2008
    Posts
    827
    Post Thanks / Like
    நடிகரும் மத்திய அமைச்சருமான நெப்போலியன், நடிகர் வடிவேலு உள்பட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


    Eppa nepolean mathiya amaichar aanarru.....

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •