Page 1 of 150 1231151101 ... LastLast
Results 1 to 10 of 1491

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5

  1. #1
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like

    Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5

    வெற்றிவேல் வீரவேல்

    சுற்றி நின்ற பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த

    எங்கள் சக்திவேல்

    Come-on! Let us continue to talk about the one and only

    Nadigar Thilagam !



    Regards

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    முந்தைய விவாதங்கள்

    நடிகர் திலகம் சிவாஜி -பாகம் -1

    நடிகர் திலகம் சிவாஜி -பாகம் -2

    நடிகர் திலகம் சிவாஜி -பாகம் -3

    நடிகர் திலகம் சிவாஜி -பாகம் -4


    முக்கிய பக்கங்களின் இணைப்புகள்**********************************

    1.நடிகர் திலகம் - சிறப்பு இணையத்தளம்

    2. சிவாஜியின் சாதனை சிகரங்கள்-தொடர் - -முரளி ஸ்ரீனிவாஸ்


    திரைப்பட விமரிசனங்கள் / பார்வைகள்
    -----------------------------------

    1.அம்பிகாபதி -திரைப்படப் பார்வை -பாலாஜி

    2.என்னைப் போல் ஒருவன் -திரைப்படப் பார்வை -சாரதா

    3.ராஜா -திரைப்படப் பார்வை -சாரதா

    4.பொன்னூஞ்சல் -திரைப்படப் பார்வை -groucho070

    5.சவாலே சமாளி -திரைப்படப் பார்வை -சாரதா

    6.அன்பைத் தேடி -திரைப்படப் பார்வை -சாரதா

    7.எங்க மாமா,மூன்று தெய்வங்கள் -திரைப்படப் பார்வை --சாரதா

    8.புதிய பறவை-திரைப்படப் பார்வை -பாலாஜி

    9.அந்த நாள்-திரைப்படப் பார்வை -பாலாஜி

    10.அந்த நாள்-திரைப்படப் பார்வை -சாரதா

    11.கப்பலோட்டிய தமிழன் - groucho070

    <a href="http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&star t=105">
    12.பிராப்தம்,மூன்று தெய்வங்கள்,தர்மம் எங்கே,ராஜராஜசோழன்,சிவகாமியின் செல்வன்,வாணிராணி -ஒரு பார்வை - முரளி ஸ்ரீனிவாஸ் </a>

    13.தங்கச்சுரங்கம் - - சாரதா

    14. ஊட்டி வரை உறவு - - rajeshkrv

    15. ஆட்டுவித்தால் யாரொருவர் - அவன் தான் மனிதன் - - சாரதா

    16. பாசமலர் - - பாலாஜி

    17. நிறைகுடம் - - முரளி ஸ்ரீனிவாஸ்

    18. நிறைகுடம் ,கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - - groucho070,முரளி ஸ்ரீனிவாஸ்

    19. இரு மலர்கள் - - முரளி ஸ்ரீனிவாஸ்

    20. விடிவெள்ளி - - NOV

    21. நெஞ்சிருக்கும் வரை - - முரளி ஸ்ரீனிவாஸ்

    22. மரகதம் - - முரளி ஸ்ரீனிவாஸ்

    23. பாக்கியவதி - - NOV

    24. அமர தீபம் - - முரளி ஸ்ரீனிவாஸ்

    25. அன்னை இல்லம் - - NOV

    26. உத்தம புத்திரன் - - முரளி ஸ்ரீனிவாஸ்

    27. கூண்டுக்கிளி - - முரளி ஸ்ரீனிவாஸ்

    28. இளைய தலைமுறை - - சாரதா

    29. பலே பாண்டியா - - முரளி ஸ்ரீனிவாஸ்

    30. படிக்காத மேதை - - முரளி ஸ்ரீனிவாஸ்

    31. எங்கிருந்தோ வந்தாள் - - சாரதா

    32. சுமதி என் சுந்தரி - - சாரதா


    33. நீதி - - சாரதா

    34. தெய்வமகன் -1
    தெய்வமகன் -2 தெய்வமகன் -3 - - முரளி ஸ்ரீனிவாஸ்

    35. வியட்நாம் வீடு - - சாரதா

    36. அம்மம்மா - ராஜபார்ட் ரங்கத்துரை - - mr_karthik

    37. பாசமலர் - - rangan_08

    38. எதிரொலி - - groucho070

    39. குங்குமம் - -NOV

    40. சரஸ்வதி சபதம் - -groucho070

    41. திருவருட்செல்வர் - -சாரதா

    42. ஆண்டவன் கட்டளை - -முரளி ஸ்ரீனிவாஸ்

    43. குலமகள் ராதை - -முரளி ஸ்ரீனிவாஸ்

    44. ரத்தத்திலகம் - -முரளி ஸ்ரீனிவாஸ்

    45. சித்தூர் ராணி பத்மினி - -முரளி ஸ்ரீனிவாஸ்

    46. நீலவானம் - -முரளி ஸ்ரீனிவாஸ்




    மற்றவை
    ---------

    1.உலக அளவில் விருதுகள்! -விகடன் கட்டுரை

    2.நடிகர் திலகத்தின் வெற்றி பரணி (1971-1975) -முரளி ஸ்ரீனிவாஸ்

    3.நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் முழுப் பட்டியல் - நக்கீரன்

    4.நாட்டிய மேதையும் நடிகர் திலகமும்!-விகடன் கட்டுரை

    5.நடிகர் திலகம் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி தொகுப்பு ,நடிகர் திலகம் சினிமாவும் அரசியல் பயணமும் (1980) -முரளி ஸ்ரீனிவாஸ்


    6.சிவாஜியும் அப்துல் ஹமீதும்

    7.நமது கலை மரபின் சிறந்த பிரதிநிதி -எழுத்தாளர் ஞானி


    8.இமயம் -சிபி இணையத்தளம்

    9.நடிகர் திலகம் நினைவுநாள் விழா நிகழ்ச்சி தொகுப்பு -முரளி ஸ்ரீனிவாஸ்

    <a href="http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1187325#1187325">10. நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிகர் திலகம் -karthik_sa2
    </a>

    <a href="http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1194997#1194997">11. நடிகர் திலகம் பிறந்தநாள் விழா -2007 -முரளி ஸ்ரீனிவாஸ்
    </a>

    12. நடிகர் திலகத்தின் விருந்தோம்பல் - மோகன்லால் -முரளி ஸ்ரீனிவாஸ்

    13. ** பெரிய தேவர் - நடிப்புக்கலையின் உச்சம் ...ஒரு அலசல் ** - பிரபுராம்
    பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9

    14. என்னை வென்ற நடிகர்திலகம் - - complicateur

    15. நடிகர் திலகம் 80-வது பிறந்தநாள் விழா தொகுப்பு - - முரளி ஸ்ரீனிவாஸ்

    16. அந்தநாள் ஞாபகம் - -முரளி ஸ்ரீனிவாஸ்
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  4. #3
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    CONGRATULATIONS & ALL THE BEST for NT-Part 5.

    Murali Sir, thanks for your valuable contributions.

    Thanks to all NT fans & fellow hubbers.

    Joe, thanks for the links.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  5. #4
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    A little insertion in the midst of Mr.MuraLi's comprehensively researched series. This is about a book I just read.

    சிவாஜியின் நடிப்பிலக்கணம் - நந்திவர்மன் ஜீவன்
    [html:c9a08b01ba]


    [/html:c9a08b01ba]

    இந்த புத்தகத்தை லேண்ட்மார்க் புத்தகக்கடையில் பார்த்தபோது இது மற்றொரு மிகைப்புகழ்ச்சி புத்தகம் என்று முதலில் நினைத்தேன். மதுரையை அடுத்த அனுப்பானடியைச் சேர்ந்த, தமிழ்நாட்டின் பல்லாயிரக்கணக்கான 'கவிஞர்'களில் ஒருவரின் vanity publication என்று நினைத்தேன். அட்டையில் கிங் ஜார்ஜ் வேடத்தில் சிவாஜி படம் போட்டிருந்தது இந்த முன்தீர்மானத்தை வலுவாக்கியது. எனக்கு அவ்வளவாக பிடிக்காத சிவாஜியின் நடிப்பு வெளிப்படுகளில் ஒன்று கௌரவம். அதிலும் கிங் ஜார்ஜ் வேடமெல்லாம் காரணமில்லாமல் காண்பிக்கப்படதாகவே என் கருத்து. அதனாலோ என்னவோ பார்த்த மாத்திரத்தில் அந்த நூல் என்னை ஈர்க்கவில்லை. Yet another fanboy book என்று தள்ளிவிடுவதற்குமுன் கொஞ்சம் பக்கங்களை புரட்டிப் பார்த்தேன்.

    என் முன்தர்மானங்கள் பெருமளவு தகர்க்கப்பட்டன. பண்டை இலக்கிய பரிச்சயம், நடிப்புக்கலையை பற்றிய ஆழமான அலசல், சிவாஜியின் படைப்புகளிலிருந்து சரியான உதாரணங்கள், படங்கள் என்று பார்த்த மாத்திரத்தில் வாங்கத் தூண்டியது . படித்து முடித்த திருப்தியோடு எழுதிகிறேன்.

    சிறப்பான புத்தகம். நடிப்புக்கலையைப் பற்றி இதுபோல நுட்பமாக தமிழ் வாசகர்களுக்கு எழுதியிருப்பதே மக்கிழ்ச்சி. தொல்காப்பியத்தில், நடிப்பிலக்கணம், சிலப்பதிகாரத்தில் நடிப்பிலக்கணக் கூறுகள், மேலை நாட்டு மேடை நடிப்பு, ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் நடிப்பிலக்கண வரையறைகள், பம்மல் சம்மந்த முதலியாரின் வழிகாட்டுதல்கள், மேடை நாடகங்களில் நடிகன் இயங்கவேண்டிய முறை என்று முதல் பல அத்தியாயங்களில் விரிவான அலசல். முதல் 90 பக்கங்களுக்கு சிவாஜியே இல்லை !

    அதன் பிறகு இவ்வாறு உள்ள பற்பல நடிப்பியல்களின் உதாரணமாக சிவாஜியின் படைப்புகள் உள்ளன என்று விரிவாகக் எடுத்துரைக்கிறார் நந்திவர்மன் ஜீவன். ஜீவன் ஒரு வக்கீல்/ மேடை நாடக நடிகர். இரு திறமைகளும் எழுத்தில் தெரிகின்றன. RS மனோகர் குழுவில் அவர் நடிகராக இயங்கியர் (இயங்குபவர் ?). கவிஞர்/ திரைப்பட ஆர்வலர் 'புவியர'சின் 'மாணவர்' என்று தன்னை சொல்கிறார். நடிப்புக்கலையைப் பற்றிய பரந்த வாசிப்பும், ரசனையும், கலையைத் தாண்டி வித்தை விஷயங்களைப் (craft aspects) பற்றி அவரால் பேச முடிகிறது.

    உதாரணமாக இகழ்ச்சி எனும சுவை தொல்காப்பியத்தில் இருவகையாகக் சொல்லப்படுகிறது. பிறரது இழிவான நிலையை கண்டு சிரிப்பது, மற்றொன்று தனது இழிவான நிலையை கண்டுி தானே சிரிப்பது. முன்னதற்கு உதாரணம் காட்டிக்கொடுக்க்கப்பட்ட கட்டபொம்மனின் சிரிப்பு: "ராஜ ராஜ ராஜாதி ராஜ, விஜய ரகுநாத சேதுபதி". பின்னதற்கு உதாரணம் தன்னைச் சுற்றி பின்னப்பட்ட வலையை உணர்ந்து புதிய பறவை இறுதிக்காட்சியின் நாயகன் சிரிக்கும் சிரிப்பு.

    இதைபோல பல உதாரணங்களில் சிவாஜிக்கு கிடைத்த பல தரப்பட்ட சூழ்நிலைகள் சொல்லப்பட்ட அளவிற்கு அவர் நடிப்பின் அதிசயத்தை விளக்கவில்லை என்று தோன்றுகிறது. ஆனால் நடிப்பு ஏன் சோபிக்கிறது என்று வார்த்தைகளில் விவரிப்பது மிகக்கடினம் தான். அது உணரப்படவேண்டிய கலையே. மிகைநடிப்பு என்ற பொத்தாம்பொதுவான குற்றச்சாட்டை திறம்பட நிராகரிக்கிறார் ஜீவன். ஆனால் கந்தன் கருணை வீரபாகு நடிப்பை 'திருஷ்டிப் பொட்டு' என்று சொல்லி நடுநிலைக்கு முயல்வதுபோலத் தெரிகிறது. ஒரு சில இடங்களில் வகைப்படுத்துதல்கள் வலிய செய்ததுபோல தெரிகிறது. பல வகைகள் உள்ளதால் மொத்தத்தையும் எழுத முனையும் போது விரிவு கைகூடிய அளவு ஆழம் கைகூடவில்லை. என் பேராசை கூட காரணம். ஸ்தானிஸ்லாவ்ஸ்கியின் முறை தமிழக்கலாச்சாரத்துக்கு முழுமையாக பொருந்தாது என்பது போன்ற வாதங்கள் அவ்வளவு வலுவானவை அல்ல என்பது என் கருத்து. இவ்வாறு மொத்தமாக ஒத்துப்போக முடியாவிட்டாலும் நான் சமீபத்தில் படித்த மிக சுவாரஸ்யமான புத்தகங்களில் ஒன்று இது. அனுப்பானடியில் அறிவாளிகள் இருப்பதற்கு ஆச்சர்யப்படும் என் நகரவாசித்திமிரை எனக்குக் காண்பித்துக்கொடுத்தது !

    நடிப்புக்கலையைப் பற்றிய ஆர்வம் உள்ளவர்கள், சிவாஜியின் ஆற்றலை, நுணுக்கங்களை மேலும் சுவைக்க விரும்புபவர்கள் - இத்திரியை வாசிக்கும் பலர் - விரும்பிப் படிப்பீர்கள் என்றே நம்புகிறேன்.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  6. #5
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    நானூறு பக்கங்களை வெற்றிகரமாகக் கடந்து (குறிப்பாக, வெட்டி விவாதங்களால் நிரப்பப்படாமல்) நடிகர்திலகம் பற்றிய பல்வேறு அரிய விஷயங்களையும் சாதனைச்சிறப்புகளையும் தாங்கி, தற்போது ஐந்தாவது பாகத்தினுள் நுழையக் காரணமாக இருந்த "ஒவ்வொருவருக்கும்" நடிகர்திலகத்தின் ரசிக/ பக்த கோடிகளின் நன்றிகள்.

    தலைமையேற்று நடத்திச்செல்லும் எங்கள் அண்ணா, டாக்டர் முரளி அவர்களுக்கு பல்லாயிரம் நன்றிகள்....

    வாருங்கள் வெற்றிப்பயணத்தைத் தொடருவோம்....

  7. #6
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Welcoming Part 5

    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  8. #7
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like






    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  9. #8
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    நானூறு பக்கங்களை வெற்றிகரமாகக் கடந்து (குறிப்பாக, வெட்டி விவாதங்களால் நிரப்பப்படாமல்) நடிகர்திலகம் பற்றிய பல்வேறு அரிய விஷயங்களையும் சாதனைச்சிறப்புகளையும் தாங்கி, தற்போது ஐந்தாவது பாகத்தினுள் நுழையக் காரணமாக இருந்த "ஒவ்வொருவருக்கும்" நடிகர்திலகத்தின் ரசிக/ பக்த கோடிகளின் நன்றிகள்.

    தலைமையேற்று நடத்திச்செல்லும் எங்கள் அண்ணா, டாக்டர் முரளி அவர்களுக்கு பல்லாயிரம் நன்றிகள்....

    வாருங்கள் வெற்றிப்பயணத்தைத் தொடருவோம்....
    வார்த்தைக்கு வார்த்தை உண்மை. நம் அனைவரின் உள்ளங்களையும் அப்படியே ப்ரதிபலித்துள்ளீர்கள்.
    ராகவேந்திரன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #9
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    இந்த திரி நான்கு பாகங்களை வெற்றிகரமாக கடந்து ஐந்தாம் பாகத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய நேரத்தில், ஆக்கபூர்வமான பங்களிப்பு நல்கிய அனைவருக்கும் உளங்கனிந்த நன்றி.

    வாருங்கள் அடுத்த நூறை நோக்கி முன்னேறுவோம்.

    பிரபு, புத்தக அறிமுகத்திற்கு நன்றி.

    அன்புடன்

    PS: சாரதா, உங்கள் அன்புக்கு நன்றி ஆனால் டாக்டர் பட்டம் எல்லாம் கொடுத்து என்னை ஒரு அரசியல்வாதி ரேஞ்சுக்கு ஆக்கிவிட்டீர்களே!

  11. #10
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas
    பிரபு, புத்தக அறிமுகத்திற்கு நன்றி.
    Actually when I saw the book a couple of weeks back I immediately sms'ed you. Not sure if you got it. The book is indeed a good buy. Many readers of this thread will enjoy the book. Some surely more than I did as they will recall the examples quoted in the book much better.
    I went this weekend again and to Nungambakkam Landmark and they were already down to one copy. Glad to know books like this are selling.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

Page 1 of 150 1231151101 ... LastLast

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •