Page 2 of 5 FirstFirst 1234 ... LastLast
Results 11 to 20 of 49

Thread: Sivajiyin Sadhanai Sigarangal by Murali Srinivas

  1. #11
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி

    வருடம் - 1959

    கட்டபொம்மனின் வெற்றி சரித்திரம் தொடர்கிறது

    1. முதன் முதலாக கேரளத்தில் 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - கட்டபொம்மன்.

    ஊர் - திருவனந்தபுரம்

    2. மீண்டும் மீண்டும் திரையிடப்பட்ட இந்த படம் ஒரு இடைவெளிக்கு பின் 07.09.1984 அன்று தமிழகமெங்கும் வெளியானது. அப்போது நிகழ்த்திய சில சாதனைகள்

    சென்னை மாநகரில் ஒன்றன் பின் ஒன்றாக பல திரையரங்குகளில் இந்த படம் ஓடிய நாட்கள் - 175. அதாவது வெள்ளி விழா.

    3. புதிய படங்களே ஓட முடியாமல் தவித்த போது நடிகர் திலகத்தின் 25 வருட பழைய படம் (1959 -1984) வெள்ளி விழா கொண்டாடியது இன்று வரை முறியடிக்க முடியாத சாதனை.

    4. மதுரையிலும் 07.09.1984 அன்று அலங்கார் திரையரங்கில் வெளியான இந்த படம் ஓடிய நாட்கள் - 45. இதுவும் ஒரு சாதனை.

    [ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தீபாவளிக்கு (22.10.1984) புதிய படம் திரையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டது].

    5. நடிகர் திலகத்தின் மறைவிற்கு பிறகு 01.03.2002 அன்று வெளியான கட்டபொம்மன் மதுரை - சிந்தாமணியில் 2 வாரங்கள் ஓடியது.

    6. ஷிப்டிங்கில் மதுரை மட்டும் சுற்று வட்டாரங்களில் ஓடிய நாட்கள் - 143

    1959 - ம் வருடத்தின் இரண்டாவது சாதனை படம்

    பாகப்பிரிவினை

    7. மதுரையில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய படம்

    1959 - வருடத்திலேயே இரண்டாவது வெள்ளி விழா படம் - பாகப்பிரிவினை

    8. மதுரையின் திரைப்பட சரித்திரத்திலேயே முதன் முதலாக ஒரே வருடத்தில் ஒரே நடிகரின் இரண்டு படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது நடிகர் திலகத்தின் படங்கள் தான்.

    கட்டபொம்மன் - நியூ சினிமா - 181 நாட்கள்.

    பாகப்பிரிவினை - சிந்தாமணி - 216 நாட்கள்.

    9.Tier II cities என்று சொல்லப்படுகிற தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் ஒன்றான மதுரையில் ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளி விழா படங்கள் கொடுத்த சாதனையை ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல மூன்று முறை செய்த ஒரே நடிகன் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் மட்டுமே.

    (இதை பற்றிய கூடுதல் விவரங்கள் அந்தந்த வருடங்கள் வரும் போது தருகிறேன்).

    10. முதன் முதலாக மதுரையில் 3 லட்சத்திற்கு மேல் வசூல் செய்த முதல் தமிழ் படம் - பாகப்பிரிவினை.

    மதுரை - சிந்தாமணியில்

    216 நாட்கள் மொத்த வசூல் - Rs 3,36,180.54

    வரி நீக்கிய நிகர வசூல் - Rs 2,52,301.00

    விநியோகஸ்தர் பங்கு - Rs 1,31,233.58

    11. மதுரையில் கருப்பு வெள்ளை படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் - பாகப்பிரிவினை.

    12. மதுரை- சிந்தாமணியில் 200 நாட்கள் ஓடிய இரண்டு படங்களின் கதாநாயகனுமே நடிகர் திலகம் தான். படங்கள்

    பாகப்பிரிவினை

    திரிசூலம்

    மாநகரங்களையும், நகரங்களையும் தாண்டி இடை நிலை ஊர்களிலும் சாதனை செய்தவர் நடிகர் திலகம்.

    13. முதன் முதலாக திண்டுக்கல் நகரில் 100 நாட்கள் ஓடிய படம் - பாகப்பிரிவினை

    திரையரங்கம் - NVGB

    நாட்கள் - 100

    14. 1959 -ம் வருடத்தில் இரண்டு படங்களின் வெற்றி விழாவும் மதுரையில் நடக்க அதில் கலந்து கொண்டதன் மூலம் மீண்டும் ஒரு "முதன் முதல்" சாதனை புரிந்தார் நடிகர் திலகம்.

    (சாதனைகள் தொடரும்)

    அன்புடன்

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #12
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி

    வருடம் - 1959

    1. இதே ஆண்டில் கட்டபொம்மன் மற்றும் பாகப்பிரிவினை படங்களின் நடுவில் வெளி வந்தும் 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படம் மரகதம்.

    2. மீண்டும் ஒரே நாள் வித்யாசத்தில் இரண்டு நடிகர் திலகம் படங்கள் வெளியாயின. அவற்றில் ஒன்று வெற்றிப்படமாக அமைந்தது.

    அவள் யார் - 30.10.1959

    பாகப்பிரிவினை - 31.01.1959


    வருடம் - 1960

    1. பாகப்பிரிவினையை தொடர்ந்து 1960 பொங்கலன்று வெளியான இரும்பு திரையும் வெள்ளி விழா கொண்டாடியது.

    கோவை - கர்னாடிக்.

    2. தொடர்ந்து மூன்று வெள்ளி விழா படங்களை கொடுத்ததன் மூலம் மீண்டும் ஒரு முதன் முதல் சாதனை புரிந்தார் நடிகர் திலகம்.

    3. இந்த வருடம் இரும்பு திரை தவிர மூன்று 100 நாட்கள் படங்களை கொடுத்தார் நடிகர் திலகம்.

    தெய்வப்பிறவி

    படிக்காத மேதை

    விடி வெள்ளி.

    4. ஒரே வருடத்தில் ஒரு வெள்ளி விழா மற்றும் மூன்று 100 நாட்கள் படங்களை முதன் முதலாக கொடுத்தவர் நடிகர் திலகம் தான்.

    5. படிக்காத மேதை ஆசியாவின் மிக பெரிய திரையரங்கமான மதுரை - தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய நடிகர் திலகத்தின் இரண்டாவது படமாக அமைந்தது.

    6. படிக்காத மேதை ஓடிய 116 நாட்களில் பெற்ற வசூல் எல்லோரையும் திகைக்க வைத்தது.

    116 நாட்களில் மொத்த வசூல் - Rs 2,21,314- 1 அ - 3 ந பை

    வரி நீக்கிய நிகர வசூல் - Rs 1,65,293 - 4 அ - 11 ந பை

    விநியோகஸ்தர் பங்கு - Rs 89,103 - 15 அ - 5 ந பை

    7. நடிகர் திலகம் திரையில் நடிகர் திலகமாகவே தோன்றிய படம் - பாவை விளக்கு.

    8. படத்தில் நடித்தவர்கள் எல்லோரும் நடிகர்களாகவே முதல் காட்சியில் தோன்றி பின் நடிகர் திலகம் அகிலனின் பாவை விளக்கு நாவலை படிக்க அனைவரும் கதாபாத்திரங்களாக மாறியது முதன் முதலாக வந்தது பாவை விளக்கு படத்தில் தான்.

    9. முதன் முதலாக தாஜ் மகாலில் படமாக்கப்பட்ட தமிழ் படம் - பாவை விளக்கு.

    10. முதன் முதலாக ஸ்ரீதர் இயக்கிய நடிகர் திலகத்தின் படம் - விடி வெள்ளி.

    11. மீண்டும் ஒரே நாளில் (தீபாவளி) இரண்டு நடிகர் திலகத்தின் படங்கள் வெளியானது

    பாவை விளக்கு - 19.10.1960

    பெற்ற மனம் - 19.10.1960

    (சாதனைகள் தொடரும்)

    அன்புடன்

  5. Likes Russellmai liked this post
  6. #13
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி

    வருடம் - 1961

    1. நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ் ரசிக பெருமக்கள் அனைவருக்கும் மறக்க முடியாத ஆண்டு இது. காரணம் காலங்களை கடந்து அமர காவியங்களாக அனைவர் மனதிலும் இடம் பெற்றிருக்கும் படங்கள் வெளியான வருடம்

    பாவ மன்னிப்பு

    பாச மலர்

    பாலும் பழமும்

    கப்பலோட்டிய தமிழன்


    2. 1959 -ஐ போலவே இந்த வருடத்திலும் இரண்டு வெள்ளி விழா படங்கள்.

    பாவ மன்னிப்பு

    சென்னை - சாந்தி

    பாச மலர்

    சென்னை - சித்ரா

    3. முதன் முதலாக சென்னை சாந்தி திரையரங்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் - பாவ மன்னிப்பு

    4. முதன் முதலாக சென்னையில் பிரம்மாண்டமான பலூன் மூலமாக விளம்பரம் செய்யப்பட்ட படம் - பாவ மன்னிப்பு.

    இடம்- சென்னை சாந்தி திரையரங்கம்

    5. முதன் முதலாக பாடல்கள் அடங்கிய இசை தட்டுகள் அதிகளவில் விற்ற சரித்திரம் படைத்தது நடிகர் திலகத்தின் பாவ மன்னிப்பு தான்.

    6. முதன் முதலாக ஒரு திரைப்படத்தின் பாடல்களில் சிறந்தவற்றை தேர்ந்தெடுக்கும் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மக்களுக்கு பரிசு வழங்கப்பட்டதும் பாவ மன்னிப்பு படத்திற்கு தான்.

    7. தமிழ் திரைப்பட வரலாற்றிலே முதன் முதலாக டூரிங் டாக்கிஸ் அரங்கில் 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - பாவ மன்னிப்பு

    ராமநாதபுரம் - சிவாஜி டூரிங் டாக்கிஸ்


    இது முதன் முதல் மட்டுமல்ல இன்று வரை முறியடிக்க முடியாத சாதனையை செய்த ஒரே நடிகன் நடிகர் திலகம் தான்

    8. 1961- ம் வருடத்திய தேசிய திரைப்பட விருது குழுவால் அகில இந்திய அளவில் இரண்டாவது சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு வெள்ளி பதக்கம் பரிசு பெற்ற முதல் தமிழ் படம் நடிகர் திலகத்தின் பாவ மன்னிப்பு

    1961 -ம் வருடத்திய வெற்றி சரித்திரம் தொடரும்

    (சாதனைகள் தொடரும்)

    அன்புடன்

  7. Likes Russellmai liked this post
  8. #14
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி

    நடிகர் திலகத்தின் 80 -வது பிறந்த நாளான இன்று அவரது சாதனைகளை பற்றி மேலும் பேசுவோம்.

    வருடம் - 1961

    1. பாவமன்னிப்பை தொடர்ந்து வெளியான பா வரிசை படம் - பாச மலர்

    வெளியான நாள் - 27.05.1961

    2. 1961- ம் வருடத்திய இரண்டாவது வெள்ளி விழா படம் - பாச மலர்

    ஊர் - சென்னை

    அரங்கம் - சித்ரா

    3. முதன் முதலாக ஒரே மொழியில் இரண்டு வருட இடைவெளியில் வெளியான ஒரு நடிகரின் 5 திரைப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடிய சாதனையை செய்த ஒரே நடிகன் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் தான்.

    காலம்

    1959 மே - 1961 மே

    வெள்ளி விழா படங்கள் - 5

    கட்டபொம்மன்

    பாகப்பிரிவினை

    இரும்பு திரை

    பாவ மன்னிப்பு

    பாச மலர்

    4. மதுரை சிந்தாமணியில் வெளியான இந்த படம் ஓடின நாட்கள் - 166.

    முன்கூடியே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 09.11.1961 அன்று (தீபாவளி) மாற்றப்பட்டது.

    5. பிறகு ஷிப்டிங்கில் ஓடின நாட்கள் - 59

    ஆக மொத்தம் மதுரையில் ஓடின நாட்கள் - 225 [32 வாரம்]

    6. 1961-ம் வருடத்திய தேசிய விருதுகளில் தமிழில் சிறந்த படமாக தேர்வான படம் - பாச மலர்.

    1961 - ம் வருடத்திய வெற்றி சரித்திரம் தொடரும்

    (சாதனைகள் தொடரும்)

    அன்புடன்

  9. Likes Russellmai liked this post
  10. #15
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி

    1961 -ம் வருடத்திய வெற்றி சரித்திரம் தொடர்கிறது.

    1. இந்த வருடம் வெளியான மூன்றாவது பா வரிசை படம் - பாலும் பழமும்

    வெளியான நாள் - 09.09.1961

    இதுவும் 100 நாள் படம்.

    மதுரை - சென்ட்ரலில் ஓடிய நாட்கள் - 127

    2. திண்டுக்கல் நகரில் முதன் முதலாக ஒரு நடிகரின் மூன்று திரைப் படங்கள் 100 நாட்கள் ஓடிய சாதனையை செய்தது நடிகர் திலகம் தான்.

    படம் -பாலும் பழமும்

    அரங்கு - சோலைஹால்

    3. மீண்டும் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியிட்டு ஒரு புதிய சரித்திரம் படைத்தார். நடிகர் திலகம்

    நாள் - 01.07.1961

    படங்கள் - எல்லாம் உனக்காக, ஸ்ரீ வள்ளி.

    4. இந்த வருடத்தில் இரண்டு வெள்ளி விழா, இரண்டு 100 நாட்கள் படங்கள். இவை எதுவுமே பண்டிகை நாளில் திரையிடப்படவில்லை என்பது தனி சிறப்பு.

    5. முதன் முதலாக ஒரே படத்தில் ஒரு நடிகர் 14 கெட் அப்-ல் தோன்றிய சாதனையையும் செய்தவர் நடிகர் திலகம்.

    படம் -மருத நாட்டு வீரன்

    6. தொடர்ந்து மூன்று வருடங்களில் கேரளத்தில் அதிக நாட்கள் ஓடிய தமிழ் திரைப்படங்கள் நடிகர் திலகத்தின் படங்கள் தான்.

    1959 - கட்டபொம்மன்

    1960 - இரும்பு திரை

    1961 - மருத நாட்டு வீரன்

    7. தமிழகத்தில் மட்டுமல்ல கடல் கடந்தும் நடிகர் திலகம் சாதனை புரிந்த ஆண்டு 1961. ஆம்,1961 - ல் இலங்கையில் 100 நாட்களை கடந்த நடிகர் திலகத்தின் படங்கள் 4. அவை

    பாவ மன்னிப்பு

    பாச மலர்

    ஸ்ரீ வள்ளி

    கப்பலோட்டிய தமிழன்.

    8. அந்நிய மண்ணில் ஒரே வருடத்தில் நான்கு 100 நாட்கள் படங்களை கொடுத்த ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே.

    9. தமிழில் முதன் முதலாக வரி விலக்கு பெற்ற படம் கப்பலோட்டிய தமிழன்.

    10. 1961- ம் வருடத்திய தேசிய விருதுகளில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் சிறந்த படம் என்ற முறையில் வெள்ளி பதக்கம் பரிசு பெற்ற படம் - கப்பலோட்டிய தமிழன்.

    11. 1961- ம் வருடத்திய தேசிய விருதுகளில் மூன்று பரிசுகள் தமிழ் படங்களுக்கு. அவை

    இந்தியாவின் சிறந்த இரண்டாவது படம் - பாவ மன்னிப்பு

    தமிழின் சிறந்த படம் - பாச மலர்

    தேசிய ஒற்றுமைக்கான படம் - கப்பலோட்டிய தமிழன்.

    12. தேசிய விருதுகள் வழங்கப்பட ஆரம்பித்த காலத்திலிருந்து ஒரே வருடத்தில் ஒரே மொழியில் ஒரே நடிகரின் மூன்று திரைப்படங்கள் விருது வென்றது இதுவரை வெல்லப்படாத வரலாற்று சாதனையாகும்.

    (சாதனைகள் தொடரும்)

    அன்புடன்

  11. Likes Russellmai liked this post
  12. #16
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி

    வருடம் - 1962

    1. இந்த வருடத்தில் 100 நாட்களை கடந்து ஓடிய நடிகர் திலகத்தின் படங்கள் - 3

    பார்த்தால் பசி தீரும்

    படித்தால் மட்டும் போதுமா

    ஆலய மணி

    2. நடிகர் திலகம் - பீம்சிங் கூட்டணியில் வெளிவந்த ப வரிசை படங்கள் இரண்டுமே 100 நாட்களை கடந்தன.

    பார்த்தால் பசி தீரும்

    படித்தால் மட்டும் போதுமா

    3. இதன் மூலம் முதன் முதலாக ஒரே நடிகரும் ஒரே இயக்குனரும் தொடர்ந்து பங்கு பெற்ற 5 படங்கள் 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை செய்தது.

    4. நான்கு வருட இடைவெளியில் ஒரே நடிகரும் ஒரே இயக்குனரும் பங்கு பெற்ற 5 படங்கள் 100 நாட்களையும் 3 படங்கள் வெள்ளி விழாவையும் கடந்து ஓடிய சாதனை இன்று வரை தமிழ் திரையுலகில் முறியடிக்கப்படாத ஒன்றாகும். அந்த படங்கள்

    காலம் - 1958 மார்ச் முதல் 1962 ஏப்ரல் வரை

    பதி பக்தி - 100 நாட்கள்

    பாகப்பிரிவினை - வெள்ளி விழா

    படிக்காத மேதை - 100 நாட்கள்

    பாவ மன்னிப்பு - வெள்ளி விழா

    பாச மலர் - வெள்ளி விழா

    பாலும் பழமும் - 100 நாட்கள்

    பார்த்தால் பசி தீரும் - 100 நாட்கள்

    படித்தால் மட்டும் போதுமா - 100 நாட்கள்


    5. முதன் முதலாக சென்னையில் திரையிடப்பட்ட 4 திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடிய சாதனையையும் செய்தது நடிகர் திலகம் தான்

    படம் - ஆலய மணி

    அரங்குகள் - பாரகன், கிருஷ்ணா, உமா, நூர்ஜகான்.

    6. முதன் முதலாக சென்னையில் ஆங்கிலத்தில் போஸ்டர்கள் அடிக்கப்பட்ட திரைப்படம் -ஆலயமணி

    (சாதனைகள் தொடரும்)

    அன்புடன்

  13. Likes Russellmai liked this post
  14. #17
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி

    வருடம் - 1962

    1. இந்த வருடத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் திலகம் அமெரிக்க நாட்டிற்கு விஜயம் செய்தார். அந்த நாட்டின் நயாகரா நகரம் அவரை ஒரு நாள் மேயராக பதவியளித்து கௌரவித்தது. இந்த கெளரவம் அளிக்கப்பட்ட முதல் இந்திய கலைஞன் நடிகர் திலகம் மட்டுமே.

    வருடம் - 1963

    1. கதையாக வெளி வந்து அதன் பின் திரைப்படமாக்கப்பட்ட படம் இருவர் உள்ளம். வெகு நாட்களுக்கு பிறகு நடிகர் திலகம் - கலைஞர் பங்களிப்பில் வந்த படம் இருவர் உள்ளம்.

    100 நாட்கள் ஓடிய படம் - இருவர் உள்ளம்.

    2. ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் இருவர் உள்ளம் திரையிடப்பட்ட போது செய்த சாதனைகள்.

    சென்னையில் ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 100

    திருச்சியில் ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 75

    மதுரை பரமேஸ்வரியில் - 4 வாரம்

    3. இந்தியா- சீன போரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் - இரத்த திலகம்.

    [html:243770e7b1]

    [/html:243770e7b1]

    முதன் முதலாக தமிழில் போர் பின்னணியில் படமாக்கப்பட்ட படம் - இரத்த திலகம்.

    4. முதன் முதலாக கதாநாயக நடிகரின் வீட்டின் பெயரே தலைப்பாக கொண்டு வெளியான படம் - அன்னை இல்லம்

    ஓடிய நாட்கள் - 100

    அரங்கு

    சென்னை - காசினோ

    5. மதுரையில் ஆசியாவின் மிக பெரிய திரையரங்கமான தங்கம் திரையரங்கில் (2900 இருக்கைகள்) முதல் மூன்று நாட்களில் நடைபெற்ற 15 காட்சிகளும் அரங்கு நிறைந்து ஓடியது அதுவரை மதுரை மாநகரம் கண்டிராத சாதனையாகும்.

    6. முதன் முதலாக மதுரையில் முதல் வார வசூல் அரை லட்சத்தை தாண்டிய சாதனையை செய்ததும் நடிகர் திலகத்தின் அன்னை இல்லம் படம் தான்.

    முதல் வார வசூல் - Rs 51,096/-

    முந்தைய வசூல் சாதனையை முறியடித்த சாதனையாகும் இது.

    7. நடிகர் திலகத்தின் ஒரு படமே மற்றொரு படத்திற்கு போட்டியாக வரும் என்ற உண்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டது. முன்கூட்டியே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கர்ணன் 14.01.1964 அன்று தங்கத்தில் திரையிடப்பட்டதால் அன்னை இல்லம் 60 நாட்களில் ஷிப்ட் செய்யப்பட்டது.

    (சாதனைகள் தொடரும்)

    அன்புடன்

  15. Likes Russellmai liked this post
  16. #18
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி

    வருடம் - 1964

    1. இந்த ஆண்டு மீண்டும் ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் மறக்க முடியாத ஆண்டு.

    நடிகர் திலகத்தின் வெளி வந்த படங்கள் - 7

    அவற்றில் 70 நாட்களை கடந்த படங்கள் - 6

    100 நாட்களை கடந்த படங்கள் - 5


    2. முதன் முதலாக சென்னையில் ஒரே வருடத்தில் ஒரே நடிகரின் 5 படங்கள் 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை செய்தது நடிகர் திலகத்தின் படங்கள் தான்.

    3. அது மட்டுமல்ல 5 படங்களும் சென்னையில் 15 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய முதன் முதல் சாதனை இன்று வரை முறியடிக்கப்படாத ஒன்றாகும்

    கர்ணன் - 14.01.1964 - சென்னை - சாந்தி, பிரபாத், சயானி - 3

    பச்சை விளக்கு - 03.04.1964 - சென்னை - வெலிங்டன், ராக்ஸி,மஹாராணி - 4

    கை கொடுத்த தெய்வம் - 18.07.1964 - சென்னை - மிட்லாண்ட், பிரபாத், சரஸ்வதி, ராம் - 4

    புதிய பறவை- 12.09.1964 - சென்னை - பாரகன் - 1

    நவராத்திரி - 03.11.1964- சென்னை - மிட்லாண்ட், மஹாராணி, உமா, ராம் - 4


    4. 1963-ல் வெளியாகி 1964- ம் ஆண்டு சென்னை காசினோவில் 100 நாட்களை கடந்த அன்னை இல்லத்தையும் சேர்த்தால் 6 படங்கள் 16 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது.

    5. முதன் முதலாக சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த தமிழ் படம் - புதிய பறவை.

    6. முதன் முதலாக ஒரு பாடலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இசை கருவிகள் பயன்படுத்தப்பட்டது நடிகர் திலகத்தின் படத்திற்கு தான்.

    பாடல் -எங்கே நிம்மதி

    படம் - புதிய பறவை.

    7. மதுரையில் ஆசியாவின் மிக பெரிய திரையரங்கமான தங்கத்தில் 100 நாட்களை கடந்த படம் - கர்ணன்.

    8. முதன் முதலாக தங்கத்தில் ஒரு நாயக நடிகரின் 3 படங்கள் 100 நாட்களை கடக்கும் சாதனையை நிகழ்த்தியதும் நடிகர்திலகம் தான். அவை

    பராசக்தி - 112 நாட்கள்

    படிக்காத மேதை - 116 நாட்கள்

    கர்ணன் - 108 நாட்கள்

    இன்று வரை இது யாராலும் முறியடிக்கப்படாத சாதனையாகும்.

    9. மதுரை - தங்கத்தில் கர்ணன் 108 நாட்களில் பெற்ற வசூல் - Rs 1,98,102.99 p.

    10. ஒரு இடைவெளிக்கு பின் மதுரையில் மீண்டும் வெளியிடப்பட்ட போது கர்ணன் செய்த சாதனைகள்.

    வெளியான நாள் - 23.11.1978

    அரங்கம் - ஸ்ரீ மீனாக்ஷி

    தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 50(இது ஒரு சாதனையாகும்)

    ஓடிய நாட்கள் - 22

    மொத்த வசூல் - Rs 93,280.55 p

    ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 50

    சென்னையில் ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 100

    11. முதன் முதலாக மதுரையில் ஒரு புதிய படம் போல ரசிகர் மன்ற டோக்கன் மூலமாக டிக்கெட் விற்கப்பட்டது இந்த படத்திற்கு தான்

    12. மீண்டும் மதுரையில் 03.03.2005 அன்று சென்ட்ரல் திரையரங்கில் வெளியிட்ட போது ஓடின நாட்கள் - 14.

    பழைய படங்கள் மறு வெளியீடு என்பதே அரிதாகி போன இந்த காலக்கட்டத்திலே இது ஒரு சாதனை.

    13. முதன் முதலாக பன்னிரண்டு வருட இடைவெளியில் 100 படங்களில் அதுவும் நாயகனாகவே நடித்த ஒரே நடிகர் நடிகர் திலகம் தான்.

    1952 தீபாவளி - பராசக்தி

    1964 தீபாவளி - நவராத்திரி

    14. முதன் முதலாக இந்திய திரையுலகில் ஒரு நாயகன் ஒரு திரைப்படத்தில் 9 வேடங்கள் ஏற்று நடித்த சாதனையை செய்தது நடிகர் திலகம் தான்.

    படம் - நவராத்திரி.

    15. ஒன்பது வேடங்களில் சிறந்த மூன்றை தேர்ந்தெடுக்குமாறு மக்களுக்கு ஒரு போட்டி அறிவிக்கப்பட்டு, ஆர்வத்துடன் மக்கள் பங்கு பெற, அவர்களில் வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் முதன் முதலாக நடிகர் திலகத்தின் நவராத்திரி படத்தின் மூலமாகத்தான்.

    (சாதனைகள் தொடரும்)

    அன்புடன்

  17. Likes Russellmai liked this post
  18. #19
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி

    வருடம் - 1965

    இந்த வருடம் வெளியான படங்கள் - 5

    வெள்ளி விழா படம் - 1 - திருவிளையாடல்

    100 நாட்கள் ஓடிய படம் - 1 - சாந்தி

    இந்த வருடத்தை திருவிளையாடல் வருடம் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு சாதனைகள் புரிந்த படம் திருவிளையாடல்.

    1. முதன் முதலாக 1 கோடிக்கு மேல் வசூல் செய்த புராண படம் - திருவிளையாடல்.

    2. முதன் முதலாக தமிழகத்தில் 13 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்த புராண படம் - திருவிளையாடல்.

    3. முதன் முதலாக சென்னையில் 3 திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய தமிழ் புராண படம் - திருவிளையாடல்

    சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி.

    4. மதுரை ஸ்ரீதேவி திரையரங்கில் 100 நாட்களில் தினம் ஒரு முறை வீதம் 100 முறை பார்த்த ஒரு வயதான பாட்டியம்மாளுக்கு 100-வது நாளன்று பரிசு வழங்கப்பட்டது, தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த செய்தியாகும்.

    5. மதுரை - ஸ்ரீதேவியில் தொடர்ந்து 81 காட்சிகள் அரங்கு நிறைந்தது - திருவிளையாடல்

    மதுரை ஸ்ரீதேவியில் ஓடிய நாட்கள் - 167

    மொத்த வசூல் - Rs 3,54,457.53 p

    அத்திரையரங்கத்தின் முந்தைய சாதனைகள் எல்லாம் முறியடிக்கப்பட்டது.

    6. 1965 வருடம் ஜூலை 31 அன்று வெளியான இந்த படம் 1966 ஜனவரி 13 வரை 167 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. முன்கூட்டியே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பொங்கலுக்கு புதிய படம் வெளியிடப்பட்டதால் நிறுத்தப்பட்டது.

    ஷிப்டிங்கில் ஓடிய நாட்கள் - 200

    7. பல ஆண்டுகளுக்கு பிறகு அதே மதுரை - ஸ்ரீதேவியில் வெளியானபோது செய்த சாதனைகள்

    வெளியான நாள் - 20.02.1985

    ஓடிய நாட்கள் - 28

    மொத்த வசூல் - Rs 2,57,600.80 p

    மதுரையில் ஒரு மறு வெளியீட்டின் போது நான்கே வாரத்தில் மிக அதிகமான வசூல் புரிந்த சாதனையும் செய்தது நடிகர் திலகத்தின் திருவிளையாடல் மட்டுமே.

    8. முதன் முதலாக தமிழ் படங்களுக்கு விருது கொடுக்க ஆரம்பித்த பிலிம் பேர் பருவ இதழ் திருவிளையாடல் படத்திற்காக சிறந்த நடிகர் விருதை நடிகர் திலகத்திற்கு வழங்கியது.

    9. இலங்கை வானொலியில் மிக அதிகமாக ஒலிபரப்பட்ட ஒலிச்சித்திரம் - திருவிளையாடல். 224 தடவை ஒலிப்பரப்பட்டது.

    10. அனைத்துக்கும் சிகரம் வைத்தார் போன்று சென்னையில் திருவிளையாடல் நிகழ்த்திய சாதனை.

    சென்னை அரங்குகள் - சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி

    மொத்தம் ஓடிய நாட்கள் - 537

    மொத்த வசூல் - Rs 13,82,002.91 p

    பார்த்த மக்கள் - 11,02,567

    சென்னையின் முந்தைய ரிக்கார்ட்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன
    .

    [ஒரு உண்மையை இங்கே சொல்ல வேண்டும். அதே 1965 வருடத்தில் வெளியான மிக பெரிய வெற்றிப்படம் என்று சொல்லப்படுகிற ஒரு பொழுது போக்கு சித்திரத்தின் மொத்த வசூலை, அதை விட 26 நாட்கள் குறைவாக ஓடி முறியடித்த படம் -திருவிளையாடல். அதாவது அந்த படம் சென்னையில் 563 நாட்கள் ஓடி பெற்ற மொத்த வசூலை விட 537 நாட்களில் திருவிளையாடல் பெற்ற மொத்த வசூல் சுமார் அறுபது ஆயிரத்திற்கும் அதிகம்].

    11. எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் திருவிளையாடல் இந்த வெற்றியை பெற்றது என்பதை உற்று நோக்கினால் அதன் வெற்றியின் பிரம்மாண்டம் புரியும்.

    1965-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக ஆளும் காங்கிரஸ் கட்சியையும் அதை சேர்ந்தவர்களையும் வெறுக்கும்படி மக்கள் தூண்டி விடப்பட்டிருந்தனர்.

    கடவுள் மறுப்பு கொள்கை என்பது தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்ட நேரம்.

    மேற்சொன்னவை பெரும்பாலோருக்கு தெரிந்த விஷயம்.
    ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று.

    1965 - செப்டெம்பரில் இந்திய - பாகிஸ்தான் போர் மூண்டது. குஜராத்தின் கட்ச் பகுதி வழியாகவும், பஞ்சாபின் வாகா எல்லை வழியாகவும் பாகிஸ்தான் படைகள் அத்து மீறி உள்ளே நுழைந்து நம்மை தாக்கியது. இந்திய நகரங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசியது. பாதுகாப்பு நடவடிக்கையாக இரவு நேரங்களில் Black out என்று சொல்லப்படும் விளக்குகளை முற்றிலுமாக அணைத்தல் முறை எல்லா நகரங்களிலும் அமுல்படுத்தப்பட்டது. போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகும் எச்சரிக்கை நடவடிக்கையாக சில நாட்கள் இந்த முறை இருந்தது. இந்த நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதும் (முன் இரவுகளிலும், இரவுகளிலும் மக்கள் வெளியே வர தயக்கம் கொண்டிருந்த காலத்தில்) திருவிளையாடல் பெற்ற வெற்றி ஒரு வரலாற்று சாதனையாகும்

    (சாதனைகள் தொடரும்)

    அன்புடன்

  19. Likes Russellmai liked this post
  20. #20
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி

    வருடம் - 1966

    1. இந்த வருடம் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நடிகர் திலகத்திற்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது.

    2. தமிழ் திரையுலகில் முதன் முதலாக இந்த பட்டதை பெற்ற கதாநாயக நடிகர் நமது நடிகர் திலகம் தான்.

    3. இந்த ஆண்டு வெளியான படங்கள் - 4

    100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 2

    மோட்டார் சுந்தரம் பிள்ளை

    சரஸ்வதி சபதம்


    4. இமேஜ் என்பதை பற்றி கவலைப்படாதவர் நடிகர் திலகம் என்பது மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தின் மூலமாக மீண்டும் நிரூபணமானது.

    5. இந்தப் படத்தில் 13 குழந்தைகளுக்கு தகப்பனாய் அதுவும் தன்னுடைய 38-வது வயதிலே நடித்தார் நடிகர் திலகம்.

    6. ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியான இந்த படம் 100 நாட்களை கடந்தது.

    சென்னை - சாந்தி

    மதுரை - கல்பனா

    (பிற ஊர்களின் தகவல்கள் தற்சமயம் கைவசம் இல்லை).

    7. மதுரையில் 05.05.1966 அன்று 100 நாட்களை கொண்டாடிய மோட்டார் சுந்தரம் பிள்ளை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே 2 மற்றும் 4 ந் தேதிகளில் 4 காட்சிகளும் 3 ந் தேதி 5 காட்சிகளும் (நள்ளிரவு 2 மணி காட்சி) திரையிடப்பட்டது. இவை அனைத்தும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது ஒரு புதிய சாதனையாகும்.

    8. முதன் முதலாக நடிகர் திலகம் இரட்டை வேடம் ஏற்று நடித்த கலர் படம் - சரஸ்வதி சபதம்

    9. ரத்த சம்பந்தமில்லாத இரண்டு கதாபாத்திரங்களை ஒரே நடிகர் ஏற்று நடித்த புதுமையும் இந்த படத்தில் தான் வந்தது.

    10. இரட்டை வேடமாயினும் இரண்டிலுமே ஜோடியோ டூயட் பாடலோ இல்லாமல் நடிக்கும் துணிச்சல் நடிகர் திலகத்திற்கு மட்டுமே இருந்தது. [இதை 17 வருடத்திற்கு பிறகு வெள்ளை ரோஜா (1983) மூலமாக மீண்டும் செய்தது காட்டியவர் நடிகர் திலகம்].

    11. சரஸ்வதி சபதம் 100 நாட்கள் ஓடிய அரங்குகள்

    சென்னை - சாந்தி

    மதுரை - ஸ்ரீ தேவி.

    (இந்த படத்திற்கும் பிற ஊர்களின் தகவல்கள் தற்சமயம் கைவசம் இல்லை).

    12. சாதாரண நாளில் (03.09.1966) வெளியான சரஸ்வதி சபதம் மதுரையில் தீபாவளியையும் தாண்டி பொங்கல் வரை ஓடியது.

    மதுரை - ஸ்ரீதேவியில் ஓடிய நாட்கள் - 132

    (சாதனைகள் தொடரும்)

    அன்புடன்

  21. Likes Russellmai liked this post
Page 2 of 5 FirstFirst 1234 ... LastLast

Similar Threads

  1. Actor Murali and Raja
    By Sureshs65 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 57
    Last Post: 22nd March 2011, 06:11 AM
  2. Actor Murali is dead
    By Shakthiprabha in forum Tamil Films
    Replies: 113
    Last Post: 28th September 2010, 05:29 AM
  3. Mandolin U.Srinivas plays Ilayaraaja's classics
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 15
    Last Post: 30th April 2010, 11:51 AM
  4. Kaadhal Valarthen (Music by singer Srinivas)
    By inetk in forum Current Topics
    Replies: 0
    Last Post: 27th February 2007, 07:18 PM
  5. Where to buy U Srinivas style mandolin
    By PanchamFan in forum Classifieds
    Replies: 0
    Last Post: 24th October 2005, 04:02 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •