Page 5 of 5 FirstFirst ... 345
Results 41 to 49 of 49

Thread: Sivajiyin Sadhanai Sigarangal by Murali Srinivas

  1. #41
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி

    வருடம் - 1982

    1.நடிகர் திலகம் திரையுலகிற்கு வந்து முப்பது ஆண்டுகள் நிறைவு பெற்ற வருடம். அவருக்கு பிறகு இரண்டு தலைமுறை நடிகர்கள் வந்து விட்ட போதிலும் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையிலே ஒரு காலண்டர் வருடத்தில் மிக அதிகமான படங்களில், அனைத்திலும் நாயகனாகவே நடித்த வருடம் இது- 1982.

    2. இந்த வருடம் வெளியான படங்கள் - 13

    தமிழ் - 12

    தெலுங்கு - 1

    இதில் வெள்ளி விழா படங்கள் - 2

    தீர்ப்பு

    நிவரு கப்பின நிப்பு (தெலுங்கு)

    100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 4

    வா கண்ணா வா

    சங்கிலி

    தியாகி
    [html:496c792768]


    [/html:496c792768]

    பரிட்சைக்கு நேரமாச்சு


    [html:496c792768]


    [/html:496c792768]

    50 நாட்களை கடந்து ஓடிய படங்கள்

    கருடா சௌக்கியமா
    [html:496c792768]


    [/html:496c792768]

    துணை
    [html:496c792768]


    [/html:496c792768]

    ஊரும் உறவும்
    [html:496c792768]


    [/html:496c792768]

    நெஞ்சங்கள்

    3. இந்த வருடத்தின் தொடக்கத்தில் முப்பத்தி ஒன்று (31) நாட்கள் இடைவெளியில் நடிகர் திலகத்தின் நான்கு படங்கள் வெளியாகி ஒரு புதிய சாதனை படைத்தது.

    ஹிட்லர் உமாநாத் - 26.01.1982

    ஊருக்கு ஒரு பிள்ளை- 05.02.1982
    [html:496c792768]


    [/html:496c792768]

    வா கண்ணா வா - 06.02.1982

    கருடா சௌக்கியமா - 25.02.1982

    4. இது இப்படியென்றால் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி தொடங்கி அடுத்த 38 நாட்களில் மீண்டும் மூன்று படங்கள் ரிலீஸ்.

    சங்கிலி - 14.04.1982

    வசந்தத்தில் ஓர் நாள் - 07.05.1982

    தீர்ப்பு - 21.05.1982
    [html:496c792768]


    [/html:496c792768]


    5. 06.02.1982 அன்று வெளியான வா கண்ணா வா 100 நாட்களை கடந்து ஓடியது.

    ஓடிய அரங்குகள் - 3

    சென்னை

    சாந்தி - 104 நாட்கள்

    கிரவுன் - 104 நாட்கள்

    புவனேஸ்வரி - 104 நாட்கள்


    6. வா கண்ணா வா சென்னையின் மூன்று திரையரங்குகளின் 104 நாட்கள் வசூல் - Rs 20,07,089.30 p.

    7. நடிகர் திலகத்தின் இளைய மகன் இளைய திலகம் பிரபு அறிமுகமான படம் - சங்கிலி.

    8. முதன் முதலாக மதுரை - அலங்கார் திரையரங்கில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்த படம் - சங்கிலி.

    9. 14.04.1982 அன்று வெளியாகி 80 நாட்களை கடந்து ஓடிய சங்கிலி இலங்கையில் 100 நாட்கள் ஓடி வெற்றி விழா கண்டது.

    10. 30 வருடங்களில் 225 படங்கள் அனைத்திலும் நாயகனாகவே நடித்து என்றுமே யாராலும் முறியடிக்க முடியாத சாதனை படைத்தார் நடிகர் திலகம்.

    நடிகர் திலகத்தின் 225 -வது படமாக வெளி வந்தது தீர்ப்பு.

    பராசக்தி - 17.10.1952

    தீர்ப்பு - 21.05.1982


    11. நடிகர் திலகத்தின் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது
    தீர்ப்பு.

    12. திரையிட்ட இடங்களிலெல்லாம் வசூல் சாதனை புரிந்து 6 சென்டர் 8 அரங்குகளில் 100 நாட்களை கடந்தது தீர்ப்பு.


    [html:496c792768]


    [/html:496c792768]

    தீர்ப்பு 100 நாட்களை கடந்த அரங்குகள்

    சென்னை

    சாந்தி

    கிரவுன்

    புவனேஸ்வரி

    மதுரை - சினிப்ரியா

    சேலம் - சாந்தி

    திருச்சி - பிரபாத்

    கோவை

    [மற்றுமொரு நகரம்]

    13. தீர்ப்பு வெள்ளி விழா கொண்டாடிய அரங்கு

    மதுரை - சினிப்ரியா - 177 நாட்கள்
    .

    14. சினிப்ரியா வளாகத்தில் நடிகர் திலகத்தின் முதல் வெள்ளி விழா படம் - தீர்ப்பு.

    15. மீண்டும் செப்டம்பர் 3- ம் தேதி முதல் டிசம்பர் 10 வரை நடிகர் திலகத்தின் 6 படங்கள் ரிலீஸ்.

    தியாகி - 03.09.1982

    துணை - 01.10.1982

    பரிட்சைக்கு நேரமாச்சு - 14.11.1982

    ஊரும் உறவும் - 14.11.1982

    நெஞ்சங்கள் - 10.12.1982

    16. இது தவிர தெலுங்கு படமான நிவரு கப்பின நிப்பு 10.09.1982 அன்று வெளியானது.

    17. 03.09.1982 அன்று வெளியான தியாகி அனைத்து ஊர்களிலும் 70 நாட்களை கடந்தது. தீபாவளி படங்களின் வெளியீடு காரணமாக 72 நாட்களோடு பல அரங்குகளிருந்தும் மாற்றப்பட்ட தியாகி இலங்கையில் 100 நாட்களை கடந்து ஓடியது.
    [html:496c792768]


    [/html:496c792768]

    18. 01.10.1982 - நடிகர் திலகத்தின் 54 -வது பிறந்த நாளன்று வெளியான படம் - துணை.

    19. இயக்குனர் துரை முதன் முதலாக நடிகர் திலகத்தை இயக்கிய படம் - துணை.

    20. அண்டர் ப்ளே என்பதும் தனக்கு கை வந்த கலை என்பதை நடிகர் திலகம் நிரூபித்த படம் - துணை.

    21. நடிகர் திலகத்தின் படத்திற்கு முதன் முதலாக இசையமைப்பாளர்கள் சங்கர் - கணேஷ் இசையமைத்த படம் - துணை.

    22. தீபாவளி வெளியீடுகள் (அவற்றில் நடிகர் திலகத்தின் இரண்டு படங்களும் அடக்கம்) மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால் மிக பெரிய வெற்றி பெற்றிருக்கும்- துணை. 50 நாட்களை கடந்து ஓடியது.
    [html:496c792768]


    [/html:496c792768]

    23. மீண்டும் தீபாவளியன்று [14.11.1982] இரண்டு படங்கள் ரிலீஸ்.

    24. முக்தா பிலிம்ஸ் தயாரித்த பரிட்சைக்கு நேரமாச்சு படம் 100 நாட்களை கடந்து ஓடியது.
    [html:496c792768]


    [/html:496c792768]

    அரங்கு - சென்னை -சாந்தி
    .

    25. ஏவிஎம். ராஜன் நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த இரண்டாவது படம் - ஊரும் உறவும்.

    26. மேஜர் இயக்கிய இரண்டாவது படமான ஊரும் உறவும் 50 நாட்களை கடந்தது.

    27.நடிகர் விஜயகுமார் தயாரித்த முதல் படம் - நெஞ்சங்கள்

    28. நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்த படம் - நெஞ்சங்கள்

    29. மேஜர் இயக்கிய நெஞ்சங்கள் 10.12.1982 அன்று வெளியாகி 50 நாட்களை கடந்தது.

    [html:496c792768]


    [/html:496c792768]
    30. 10.09.1982 அன்று வெளியான நடிகர் திலகம் நடித்த தெலுங்கு படமான நிவரு கப்பின நிப்பு அந்த வருடத்தின் இரண்டாவது வெள்ளி விழா படமாக அமைந்தது.

    31. ஹைதராபத் உட்பட எட்டு ஊர்களில் வெள்ளி விழா கொண்டாடிய படம் - நிவரு கப்பின நிப்பு.

    (சாதனைகள் தொடரும்)

    அன்புடன்

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #42
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி

    வருடம் - 1983

    இந்த வருடமும் (திரையுலகில் நடிகர் திலகத்தின் 31-வது ஆண்டு) நடிகர் திலகம் மிகப் பெரிய வெற்றிகளை குவித்த ஆண்டாக அமைந்தது.

    1. இந்த வருடம் வெளியான படங்கள் - 7

    தமிழ் - 6

    தெலுங்கு - 1

    இதில் வெள்ளி விழா படங்கள் -2

    நீதிபதி
    [html:e4b609cb89]


    [/html:e4b609cb89]

    சந்திப்பு

    100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 3

    மிருதங்க சக்ரவர்த்தி

    வெள்ளை ரோஜா

    பெஜவாடா பொப்பிலி (தெலுங்கு)

    50 நாட்களை கடந்து ஓடிய படம்

    சுமங்கலி


    2. இந்த ஆண்டின் முதல் படமான நீதிபதி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

    3. மதுரை (சினிப்ரியா), திண்டுக்கல் (சக்தி), தேனி (அருணா), விருதுநகர் (அமிர்தராஜ்) மற்றும் பழனி (ரமேஷ்) அரங்குகளில் நான்கே வாரத்தில் ஆறு லட்ச ரூபாய் வசூலை கடந்து, பட வெளியிட்டாளருக்கு கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாய் வருவாய் ஈட்டி தந்தது.

    4. 26.01.1983 அன்று வெளியான நீதிபதி அனைத்து முக்கிய நகரங்களிலும் 100 நாட்களை கடந்தது. அவற்றில் சில

    சென்னை

    சாந்தி (141 நாட்கள்)

    அகஸ்தியா

    அன்னை அபிராமி

    மதுரை - சினிப்ரியா

    திருச்சி

    கோவை

    சேலம்

    தஞ்சை

    நெல்லை

    5. வெள்ளி விழா கொண்டாடிய அரங்கு

    மதுரை - சினிப்ரியா [ 177 நாட்கள்]

    [html:e4b609cb89]
    <img
    src="
    http://www.nadigarthilagam.com/papercuttings2/needhipadhi5wk.jpg">

    [/html:e4b609cb89]

    6.மதுரையில் தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் இரண்டாவது வெள்ளி விழா படமாக அமைந்தது நீதிபதி

    தீர்ப்பு - 1982

    நீதிபதி - 1983

    7. நடிகர் திலகம் - பாலாஜி கூட்டணியில் மூன்றாவது வெள்ளி விழா படம்- நீதிபதி

    தியாகம் - 1978

    தீர்ப்பு - 1982

    நீதிபதி - 1983


    8. நடிகர் திலகத்தின் படத்திற்கு முதன் முதலாக கங்கை அமரன் இசையமைத்த படம் - நீதிபதி.

    9. இந்த வருடத்தின் இரண்டாவது படம் - இமைகள்.[வெளியான நாள் - 12.04.1983]

    10. முதன் முதலாக பின்னணி பாடகர் மலேஷியா வாசுதேவன் நடிகர் திலகத்திற்கு பின்னணி பாடிய படம் - இமைகள்.

    11. இந்த வருடத்தின் மூன்றாவது படம் - சந்திப்பு. வெளியான நாள் - 16.06.1983

    மீண்டும் பல வசூல் சாதனைகளை செய்த படம் - சந்திப்பு.

    12. மதுரை - சுகப்ரியா திரையரங்கில் சந்திப்பு தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் - 202

    இது அந்த திரையரங்கில் ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியது.

    13. திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக ஓடிய சந்திப்பு 100 நாட்களை தாண்டிய இடங்கள்

    சென்னை

    சாந்தி

    கிரவுன்

    புவனேஸ்வரி

    மதுரை - சுகப்ரியா

    திருச்சி

    சேலம்

    கோவை

    நெல்லை

    தஞ்சை

    14. சந்திப்பு வெள்ளி விழா கொண்டாடிய அரங்கு

    மதுரை - சுகப்ரியா

    ஓடிய நாட்கள் - 177

    15. மதுரை - சுகப்ரியா அரங்கில் முதல் வெள்ளி விழா படம் - சந்திப்பு.

    இயக்குனர் சி. வி. ராஜேந்திரன் அவர்களுக்கு முதல் வெள்ளி விழா படம் - சந்திப்பு.

    16. மதுரை - சினிப்ரியா திரையரங்க வளாகத்தில் மூன்றாவது வெள்ளி விழா படம் - சந்திப்பு.

    17. 1982-ம் ஆண்டு மே முதல் 1983 -ம் ஆண்டு ஜூன் வரை சினிப்ரியா வளாகத்தில் வெளியான நடிகர் திலகத்தின் மூன்று படங்களுமே வெள்ளி விழா கொண்டாடியது மதுரை மாநகரம் இன்று வரை காணாத சாதனை.

    18. இந்த வருடமும் நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது.

    19. மதுரை மாநகரிலே மூன்றாவது முறையாக ஒரே வருடத்தில் வெளியான ஒரே நடிகரின் இரண்டு படங்கள் வெள்ளி விழா கொண்டாடிய சாதனையை நிகழ்த்திய ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே.


    1959

    கட்டபொம்மன்

    பாகப்பிரிவினை

    1972

    பட்டிக்காடா பட்டணமா

    வசந்த மாளிகை

    1983

    நீதிபதி

    சந்திப்பு.


    20. திரையுலகிற்கு வந்து வெற்றிகரமான 31 வருடங்களுக்கு பிறகும், வெற்றிகரமான 230 படங்களுக்கு நாயகனான பிறகும், அன்றைய தேதியில் இருந்த பிற நாயகர்களின் வயதையே தன் திரையுலக அனுபவமாக கொண்ட நடிகர் திலகம் இந்த சாதனையை புரிந்தார் என்றால் அவரது வெற்றி வரலாற்றில் எவராலும் முறியடிக்க முடியாத சாதனை இது.

    21. நான்காவதாக 12.08.1983 அன்று வெளியான படம் சுமங்கலி.

    50 நாட்களை கடந்து ஓடிய படம் சுமங்கலி

    22. அடுத்த படம் - மிருதங்க சக்ரவர்த்தி. வெளியான நாள் 23.09.1983.

    24. மிருதங்க சக்ரவர்த்தி நாட்களை 100 கடந்து ஓடிய இடங்கள்

    சென்னை - சாந்தி


    25. தீபாவளியன்று (4.11.1983) வெளியான படம் - வெள்ளை ரோஜா.

    26. இரட்டை வேடங்களில் நடித்தும் இரண்டுக்குமே ஜோடியோ டூயட் பாடல்களோ இல்லாமல் நடிகர் திலகம் நடித்த இரண்டாவது படம் - வெள்ளை ரோஜா.

    [முதல் படம் - சரஸ்வதி சபதம்].

    27. முதன் முதலாக சென்னையில் ஆறு திரையரங்குகளில் 100 நாட்களை கடந்த படம் - வெள்ளை ரோஜா.

    தேவி பாரடைஸ்

    கிரவுன்

    புவனேஸ்வரி

    அபிராமி

    உதயம்

    [மற்றுமொரு அரங்கு]


    28. 100 நாட்களை கடந்த அரங்குகள்

    சென்னை

    தேவி பாரடைஸ்

    கிரவுன்

    புவனேஸ்வரி

    அபிராமி

    உதயம்

    மதுரை - சென்ட்ரல்

    திருச்சி

    கோவை

    சேலம்

    29. இதை தவிர தெலுங்கில் நடிகர் திலகம் நடித்து இந்த வருடம் வெளியான பெஜவாடா பொப்பிலி ஆந்திரத்தில் 100 நாட்களை கடந்து ஓடியது.

    (சாதனைகள் தொடரும்)

    அன்புடன்

  5. Likes Russellmai liked this post
  6. #43
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி

    வருடம் - 1984

    1. இந்த வருடமும் அதாவது அவரது திரையுலக வாழ்கையின் 32-வது வருடத்திலும் படங்களின் எண்ணிக்கையில் சாதனை புரிந்தார் நடிகர் திலகம்.

    2. இந்த வருடம் வெளியான படங்கள் - 10

    அவற்றில் 100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 3

    திருப்பம்

    வாழ்க்கை

    தாவணி கனவுகள்

    50 நாட்களை கடந்த படங்கள் - 4

    சிரஞ்சீவி

    சிம்ம சொப்பனம்

    எழுதாத சட்டங்கள்

    வம்ச விளக்கு


    3. பொங்கலன்று (14.01.1984) வெளியான திருப்பம் மக்கள் பேராதரவைப் பெற்று 100 நாட்களை கடந்தது.

    [html:b283c090fd]
    <img
    src="
    http://www.nadigarthilagam.com/papercuttings/thiruppam.jpg">

    [/html:b283c090fd]
    திருப்பம் 100 நாட்களை கடந்த அரங்கு

    சென்னை - சாந்தி

    4. மீண்டும் இடைவெளியின்றி அதே வருடத்தில் தொடர்ந்து வெளியான மூன்று படங்கள் 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை, யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு, அத்தனை தடவை செய்தார் நடிகர் திலகம். அந்த மூன்று படங்கள்

    மிருதங்க சக்கரவர்த்தி

    வெள்ளை ரோஜா

    திருப்பம்


    5. முதன் முதலாக முழுக்க முழுக்க கப்பலிலே படமாக்கப்பட்ட தமிழ் படம் நடிகர் திலகத்தின் சிரஞ்சீவி.

    6. வெறும் பதினெட்டு நாட்களில் (1983 செப் 13 முதல் 30 வரை) எடுக்கப்பட்ட படம் - சிரஞ்சீவி.

    [html:b283c090fd]
    <img
    src="
    http://www.nadigarthilagam.com/papercutting4/siranjivirunning.jpg">

    [/html:b283c090fd]

    17.02.1984 அன்று வெளியான சிரஞ்சீவி 50 நாட்களை கடந்து ஓடியது.

    7. முதன் முதலாக சென்னை சபையர் திரையரங்கில் வெளியான நடிகர் திலகத்தின் படம் - தராசு [16.03.1984].

    8. 14.04.1984 அன்று வெளியான வாழ்க்கை தமிழகமெங்கும் மீண்டும் ஒரு வெற்றி சரித்திரத்தை எழுதியது.

    9. சென்னையின் மிக பெரிய திரையரங்கான அலங்கார்
    திரையரங்கில் 100 நாட்களை கடந்து ஓடிய படம் - வாழ்க்கை
    .

    10. மதுரை - மது திரையரங்கில் வெளியான முதல் நடிகர் திலகத்தின் படம் வாழ்க்கை. அந்த அரங்கில் வாழ்க்கை 77 நாட்கள் ஓடியது.

    11. என்.டி.ஆர் அவர்களின் சொந்த நிறுவனமான ராமகிருஷ்ணா ஸ்டூடியோ சார்பாக தமிழில் நடிகர் திலகத்தை வைத்து எடுத்த முதல் படம் - சரித்திர நாயகன்[26.05.1984].

    12. முதன் முதலாக ஒரு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வேடத்தில் நடிகர் திலகம் நடித்த படம் -சிம்ம சொப்பனம்.

    13. 30.06.1984 அன்று வெளியான சிம்ம சொப்பனம் 60 நாட்களை கடந்து ஓடியது.

    14. மீண்டும் ஜோடி இல்லாமல் நடிகர் திலகம் நடித்த படம் - எழுதாத சட்டங்கள்.

    15. 15.08.1984 அன்று வெளியான எழுதாத சட்டங்கள் 60 நாட்களை கடந்து ஓடியது.

    16. நடிகர் திலகத்துடன் பாக்யராஜ் இணைந்த படம் - தாவணி கனவுகள்

    17. 14.09.1984 அன்று வெளியான தாவணி கனவுகள் சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் 100 நாட்களை கடந்து ஓடியது.

    18. மீண்டும் ஒரே நாளில் நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் ரிலீஸ்.

    ஆம், தாவணி கனவுகள் வெளியான அதே நாளில் (14.09.1984 -இது ஒன்றும் பண்டிகை நாள் இல்லை) வெளியான நடிகர் திலகத்தின் மற்றொரு படம் முக்தா பிலிம்சின் இரு மேதைகள்.

    19. இந்த வருடத்தின் 10-வது படமாக தீபாவளியன்று (23.10.1984)வெளியான படம் - வம்ச விளக்கு.
    [html:b283c090fd]
    <img
    src="
    http://www.nadigarthilagam.com/papercuttings/vamsa.jpg">

    [/html:b283c090fd]

    நடிகர் திலகத்தின் பேரனாக பிரபு நடித்த இந்த படம் 60 நாட்களை கடந்தது.

    (சாதனைகள் தொடரும்)

    அன்புடன்

  7. Likes Russellmai liked this post
  8. #44
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி

    வருடம் - 1985

    1. இந்த வருடம் வெளியான படங்கள் - 8

    இதில் வெள்ளி விழா கொண்டாடிய படங்கள் - 2

    முதல் மரியாதை

    படிக்காதவன் [ கௌரவ தோற்றம்]

    100 நாட்களை கடந்த படம் - 1

    பந்தம்

    50 நாட்களை கடந்து ஓடிய படங்கள் -2

    நீதியின் நிழல் [கௌரவ தோற்றம்]

    ராஜ ரிஷி


    2. தன் அந்தஸ்திற்கு ஒத்து வராத மகளின் காதலை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல் மகளின் கணவன் விபத்தில் இறந்து போனதை கொண்டாடும் ஒரு குரூர வில்லத்தன்மையையும், பேத்தி மீது அளவற்ற பாசம் வைக்கும் மனிதனையும் ஒரே சேர நம் கண் முன் நிறுத்தினார் நடிகர் திலகம் பந்தம் படத்தின் மூலமாக.

    3. 26.01.1985 அன்று வெளியான பந்தம் 100 நாட்களை கடந்து ஓடியது.

    4. பேபி ஷாலினி தமிழில் அறிமுகமான படம் - பந்தம்

    5. 33 ஆண்டுகளில் 250 படங்கள். அனைத்திலும் நாயகனாகவே நடித்து புதிய சாதனை புரிந்தார் நடிகர் திலகம்.

    250-வது படமாக வெளியானது - நாம் இருவர். [08.03.1985]

    6. பதினான்கு வருட இடைவெளிக்கு பிறகு நடிகர் திலகமும் இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனும் இணைந்த படம் - படிக்காத பண்ணையார். வெளியான நாள் - 23.03.1985

    7. இந்த காலக்கட்டத்தில் தொடர்ந்து ஜோடி இல்லாமல் நடித்து கொண்டிருந்தார் நடிகர் திலகம்.

    எழுதாத சட்டங்கள்

    தாவணி கனவுகள்

    வம்ச விளக்கு

    பந்தம்

    நாம் இருவர்

    படிக்காத பண்ணையார்
    .

    [இதை இங்கே குறிப்பிட காரணம் சிலர் நடிகர் திலகம் தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்காமல் டூயட் பாடிக் கொண்டிருந்தார் என்று விஷயம் தெரியாமலேயே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்].

    8. பாரதி வாசு இயக்கத்தில் நடிகர் திலகம் கௌரவ தோற்றத்தில் நடித்த படம் நீதியின் நிழல்.

    9. 13.04.1985 அன்று வெளியான நீதியின் நிழல் 70 நாட்கள் ஓடியது.

    10. வெகு நாட்களுக்கு பிறகு நடிகர் திலகம் கல்லூரி பேராசிரியாராக நடித்த படம் - நேர்மை. 03.05.1985 அன்று வெளியானது.

    11. வந்தது ஆகஸ்ட் 15. தமிழ் திரையுலகில் என்றுமே முதல் மரியாதை நடிகர் திலகத்திற்கு தான் என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்தது.

    12. கிளாஸ் - மாஸ் இரண்டு கூட்டத்தினரையும் சரி சமமாக கவர்ந்த படம் முதல் மரியாதை.

    13. தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளில் புதிய சாதனை படைத்த படம் - முதல் மரியாதை.

    கோவை - அர்ச்சனா/தர்சனா அரங்கு - 450 காட்சிகள் [புதிய ரிகார்ட்]

    தஞ்சை - கமலா - 400 காட்சிகள் [புதிய ரிகார்ட்]

    சேலம் - சங்கம் பாரடைஸ் - 350 காட்சிகள் [புதிய ரிகார்ட்]

    திருச்சி - மாரீஸ் - 112 காட்சிகள்

    நெல்லை -சிவசக்தி - 100 காட்சிகள்

    பாண்டி - அண்ணா - 100 காட்சிகள்

    14. மதுரை குருவில் தொடர்ந்து 100 அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிய முதல் படம் - முதல் மரியாதை.

    15. ஈரோடு நகரிலே ஒரு படம் 50 நாட்களை கடந்தாலே பெரிய சாதனை என நினைக்கப்பட்ட அந்நாளிலே 127 நாட்கள் ஓடிய படம் - முதல் மரியாதை

    16. திருச்சி மாநகரில் 100 நாட்களில் பதினான்கு லட்ச ரூபாய் வசூல் செய்த முதல் தமிழ் படம் - முதல் மரியாதை.

    17. குடந்தை நகரில் தினசரி 4 காட்சிகள் வீதம் திரையிடப்பட்டு அதிக நாட்கள் ஓடிய படம் - முதல் மரியாதை

    அரங்கு - காசி

    நாட்கள் - 88 நாட்கள்

    18. மதுரையில் புதிய சாதனை படைத்த படம் - முதல் மரியாதை.

    19. இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டு இரண்டிலும் சேர்த்து ஓடிய நாட்கள் - 215

    மதுரை - குரு - 127 நாட்கள் - Rs 7,18,340.10 p

    மதுரை - மது - 88 நாட்கள் - Rs 6,23,490.45 p

    மதுரையின் மொத்த வசூல் - Rs Rs 13,41,830.55 p

    20. முன் கூட்டியே செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக மதுரை மது திரையரங்கில் தீபாவளியன்று (11.11.1985) முதல் மரியாதை 88 நாட்களுக்கு பிறகு மாற்றப்பட்டது. இல்லாவிடின் இரண்டு திரையரங்குகளிலுமே 100 நாட்களை தாண்டியிருக்கும்.

    21. முதல் மரியாதையின் மாபெரும் சாதனைகள் சில

    50 நாட்களை கடந்த அரங்குகள் - 35

    75 நாட்களை கடந்த அரங்குகள் -16

    100 நாட்களை கடந்த அரங்குகள் -10

    125 நாட்களை கடந்த அரங்குகள் -8

    150 நாட்களை கடந்த அரங்குகள் -5

    175 நாட்களை கடந்த அரங்குகள் - 3


    வெள்ளி விழாவை கடந்த அரங்குகள்

    சென்னை -சாந்தி

    கோவை - அர்ச்சனா/தர்சனா

    சேலம் - சங்கம் பாரடைஸ்.


    22. வெகு நாட்களுக்கு பிறகு சரித்திர/புராண படத்தில் நடித்தார் நடிகர் திலகம்.

    23. கௌசிக மன்னனாகவும், ராஜ ரிஷி விஸ்வாமித்ரனாகவும் நடிகர் திலகம் நடித்த படம் - ராஜ ரிஷி.

    24. நாடக காவலர் மனோகர் அவர்களின் விஸ்வாமித்திரன் நாடகமே ராஜ ரிஷி என்ற பெயரில் திரைப்படமாக உருவானது.

    25. 20.09.1985 அன்று வெளியான ராஜ ரிஷி 50 நாட்களை கடந்தது.

    26. 1985 வருடத்தின் கடைசி படமாக தீபாவளியன்று [11.11.1985] வெளியான படம் படிக்காதவன்.

    27. ஆறு வருட இடைவெளிக்கு பின் நடிகர் திலகமும் ரஜினியும் இணைந்த படிக்காதவன் வருடத்தின் இரண்டாவது வெள்ளி விழா படமாக அமைந்தது.

    28. நடிகர் திலகம் கௌரவ தோற்றத்தில் தோன்றிய படிக்காதவன் வெள்ளி விழாவை கடந்த அரங்குகள்

    சென்னை - ஆல்பட்

    மதுரை - சென்ட்ரல்


    29. மதுரை சென்ட்ரலில் படிக்காதவன் ஓடிய நாட்கள் - 175

    175 நாட்களின் மொத்த வசூல் - Rs 15,50,435/-


    (சாதனைகள் தொடரும்)

    அன்புடன்

  9. Likes Russellmai liked this post
  10. #45
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி

    வருடம் - 1986

    1. இந்த வருடம் வெளியான படங்கள் - 7

    100 நாட்களை கடந்த படங்கள் - 3

    சாதனை

    மருமகள்

    விடுதலை


    50 நாட்களை கடந்த படங்கள் -2

    ஆனந்தக் கண்ணீர்

    தாய்க்கு ஒரு தாலாட்டு

    2. திரையுலகிற்கு வந்து முப்பத்தி நான்கு வருடங்களுக்கு பிறகும் 7 படங்கள். அதுவும் ஒரே மாதத்தில் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு படங்கள் ரீலீஸ்.

    3. முதன் முதலாக ஒரு சினிமா இயக்குனராக நடிகர் திலகம் நடித்த படம் - சாதனை.

    4. 10.01.1986 அன்று வெளியான சாதனை சென்னை நாகேஷ் திரையரங்கில் ஒரு சாதனை புரிந்தது.

    5. அந்த அரங்கின் வரலாற்றில் அதிகமாக தொடர் ஹவுஸ் புல் ஆனது சாதனை படத்திற்கு தான்.

    அந்த அரங்கில் தொடர்ந்து 133 காட்சிகள் அரங்கு நிறைந்தது

    6. அந்த அரங்கில் அதிக நாட்கள் ஓடிய படமும் சாதனை தான்.

    சாதனை படம் ஓடிய நாட்கள் - 112

    சாதனை திரைப்படம் 100 நாட்களை கடந்த அரங்குகள்

    சென்னை - தேவி பாரடைஸ்/தேவி பாலா

    சென்னை - நாகேஷ்


    7. சாதனை திரைப்படம் வெளியான 15 நாட்கள் இடைவெளியில் 26.01.1986 அன்று வெளியான படம் - மருமகள்.

    8. படத்தின் மொத்த நேரத்தில் சுமார் 80 சதவீதம் நேரம் நடிகர் திலகம் படுக்கையில் படுத்து கொண்டே நடித்த பாத்திரம் இடம் பெற்ற படம் - மருமகள்.

    ஆயினும் கூட "நடிகர் திலகம் படுத்துக் கொண்டே ஜெயித்த" படம் - மருமகள்

    மருமகள் 100 நாட்களை கடந்த அரங்கு

    சென்னை - தேவிகலா.

    9. இதன் மூலம் மீண்டும் தொடர்ந்து மூன்று படங்கள் 100 நாட்களை கடக்கும் சாதனையை புரிந்தார் நடிகர் திலகம்.

    படிக்காதவன்

    சாதனை

    மருமகள்
    .

    10. இந்த வெற்றியின் பின்னணியை பார்க்க வேண்டும். முதல் மரியாதை வெள்ளி விழாவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. படிக்காதவன் வெள்ளி விழாவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் ஒரே மாதத்தில் 15 நாட்கள் இடைவெளியில் வெளியான நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் 100 நாட்களை கடந்து ஓடுகின்றன அதுவும் நடிக்க வந்த 34-வது வருடத்தில் என்றால், இதை விட நடிகர் திலகத்தின் BO பவருக்கு வேறு சான்று வேண்டுமா என்ன?

    11. மூன்றாவதாக வெளியான படம் -ஆனந்தக் கண்ணீர். மீண்டும் மேடை நாடகம் திரைப்படமானது.

    12. சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 07.03.1986 அன்று வெளியாகி 50 நாட்களை கடந்தது.

    13. மீண்டும் நடிகர் திலகமும் ரஜினியும் இணைந்த படம் -விடுதலை.

    14. ஹிந்தி குர்பானி தமிழில் விடுதலை என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு 11.04.1986 அன்று வெளியானது.

    இந்த படம் 100 நாட்களை கடந்து ஓடியது.

    சென்னை - தேவி பாரடைஸ்

    15. மலையாளத்தின் பாக்யராஜ் என்று அழைக்கப்பட்டிருந்த பாலச்சந்திர மேனன் தமிழில் முதன் முதலாக இயக்கிய படம் - தாய்க்கு ஒரு தாலாட்டு.

    17. 16.07.1986 அன்று வெளியான இந்த படம் 50 நாட்களை கடந்து ஓடியது.

    18. தீபாவளியன்று (01.11.1986) வெளியான படம் -லெட்சுமி வந்தாச்சு.

    19. ஹிந்து ரங்கராஜன் தயாரித்து ராஜசேகர் இயக்கிய படம் - லெட்சுமி வந்தாச்சு.

    20. கோவை தம்பியின் தயாரிப்பில் பாரதி ராஜாவின் மைத்துனர் மனோஜ் குமார் நடிகர் திலகத்தை இயக்கிய படம் - மண்ணுக்குள் வைரம். வெளியான நாள் 12.12.1986.

    21. நடிகர் திலகத்தோடு அன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் முரளி, வாணி விஸ்வநாத் முதன் முதலாக இணைந்து நடித்த படம் - மண்ணுக்குள் வைரம்.

    (சாதனைகள் தொடரும்)

    அன்புடன்

  11. #46
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி

    வருடம் - 1987

    1. திரையுலகில் நடிகர் திலகம் ஆக்டிவாக இருந்த கடைசி வருடம்.

    2. இந்த வருடம் வெளியான படங்கள் - 10

    தமிழ் - 8

    தெலுங்கு - 2

    இந்த ஆண்டில் 100 நாட்களை கடந்த படங்கள் - 3

    ஜல்லிக்கட்டு

    விஸ்வநாத நாயக்குடு [தெலுங்கு]

    அக்னி புத்ருடு [தெலுங்கு]

    50 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - 4

    முத்துக்கள் மூன்று

    வீர பாண்டியன்

    அன்புள்ள அப்பா

    கிருஷ்ணன் வந்தான்


    3. முதன் முதலாக நடிகர் திலகத்துடன் கார்த்திக் இணைந்து நடித்த படம் ராஜ மரியாதை.

    ராஜ மரியாதை 14.01.1987 பொங்கலன்று வெளியானது.

    4. நடிகர் திலகத்தை வைத்து அதிகமான படங்களை தயாரித்த பாலாஜி தயாரிப்பில் நடிகர் திலகம் கடைசியாக நடித்த படம் - குடும்பம் ஒரு கோவில்.

    26.01.1987 குடியரசு தினத்தன்று வெளியானது குடும்பம் ஒரு கோவில்.

    5. முதன் முதலாக நடிகர் திலகம் படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைத்த படம் முத்துக்கள் மூன்று.

    6. மேஜர் தயாரிப்பில் ஏ.ஜகந்நாதன் இயக்கத்தில் நடிகர் திலகத்துடன் சத்யராஜ் மற்றும் பாண்டியராஜன் இணைந்து நடித்த முத்துக்கள் மூன்று 06.3.1987 அன்று வெளியாகி 50 நாட்களை கடந்து ஓடியது.

    7. முதன் முதலாக நடிகர் திலகத்துடன் விஜயகாந்த் இணைந்து நடித்த படம் வீர பாண்டியன்.

    8. இயக்குனர் துரை தயாரிக்க கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் 14.04.1987 அன்று வெளியான வீர பாண்டியன் 50 நாட்களை கடந்து ஓடியது.

    9. நீண்ட இடைவெளிக்கு பின் ஏ,வி.எம் தயாரிப்பில் நடிகர் திலகம் நடித்த படம் அன்புள்ள அப்பா.

    10. நடிகர் திலகத்தை வைத்து அதிகமான படங்களை இயக்கிய திருலோகச்சந்தர் நடிகர் திலகத்தை கடைசியாக இயக்கிய படம் அன்புள்ள அப்பா.

    11. நடிகர் திலகத்துடன் இளைய தலைமுறையை சேர்ந்த நதியா மற்றும் ரஹ்மான் இணைந்து நடித்த அன்புள்ள அப்பா 16.05.1987 அன்று வெளியாகி 50 நாட்களை கடந்தது.

    12. 14.08.1987 அன்று வெளியான படம் விஸ்வநாத நாயக்குடு [தெலுங்கு] ஆந்திராவில் மெயின் சென்டர்களிலெல்லாம் 100 நாட்களை கடந்தது.

    13. திரையுலகில் தன்னுடைய 35வது ஆண்டில் நிற்கும் போதும் சாதனை செய்வதை நிறுத்தவில்லை நடிகர் திலகம்.

    14. பொங்கல்,புத்தாண்டு தீபாவளி இப்படி எந்த விசேஷ நாளும் இல்லாமல் சாதாரண நாளான 28.08.1987 அன்று ஒரே நாளில் நடிகர் திலகத்தின் மூன்று படங்கள் வெளியாகின.

    ஜல்லிக்கட்டு

    கிருஷ்ணன் வந்தான்

    அக்னி புத்ருடு [தெலுங்கு]

    இவற்றில் 100 நாட்களை கடந்த படங்கள்

    ஜல்லிக்கட்டு

    அக்னி புத்ருடு [தெலுங்கு]

    50 நாட்களை கடந்த படம்

    கிருஷ்ணன் வந்தான்.

    15. ஒரு நடிகன் திரைப்பட துறைக்கு வந்து 35 வருடங்களுக்கு பிறகும், அந்த 35 அனுபவ வருடங்களை விட வயது குறைவான ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் நிலை பெற்ற பிறகும், ஒரே நாளில் மூன்று படங்களை வெளியிடுவது அதில் இரண்டு நூறு நாட்களை கடப்பது ஒன்று ஐம்பது நாட்களை கடந்து ஓடுவது என்ற சாதனையை நடிகர் திலகம் செய்தார் என்று சொன்னால், நடிப்பில் மட்டுமல்ல இது போல சாதனை சக்கரவர்த்தியையும் தமிழ் சினிமா கண்டதுமில்லை இனி காணப் போவதுமில்லை
    .

    16. முதன் முதலாக நடிகர் திலகத்தை வைத்து மணிவண்ணன் இயக்கிய படம் ஜல்லிக்கட்டு.

    100 நாட்களை கடந்து ஓடிய அரங்கு

    சென்னை - சாந்தி
    .

    17. நடிகர் திலகம் நடித்த ஒரு படத்தின் 100 -வது நாள் விழாவிற்கு மக்கள் திலகம் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கியது முதலும் கடைசியுமாய் ஜல்லிக்கட்டு படத்திற்கு தான்,

    18. 1987 டிசம்பர் 5 அன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு படத்தின் -100-வது நாள் விழாவே எம்.ஜி.ஆர் இறுதியாக கலந்து கொண்ட திரைப்பட விழா.

    19. அக்னி புத்ருடு ஐதராபாத், வைசாக், விஜயவாடா மற்றும் பல நகரங்களில் 100 நாட்களை கடந்து ஓடியது.

    20. நடிகர் தேங்காய் சீனிவாசன் முதன் முதலாக தயாரித்த படம் கிருஷ்ணன் வந்தான் 50 நாட்களை கடந்து ஓடியது.

    21. 15 வருட இடைவெளிக்கு பிறகு நடிகர் திலகத்தின் படம் வெளியாகாமல் தீபாவளி கடந்து போனது இந்த வருடம் தான்,

    22. முதன் முதலாக இரட்டையர்கள் மனோஜ் கியான் இசையமைத்த நடிகர் திலகத்தின் படம் தாம்பத்யம்.

    23. நடிகர் திலகத்துடன் அம்பிகா மற்றும் ராதா இணைந்து நடித்த தாம்பத்யம் 20.11.1987 அன்று வெளியானது.

    (சாதனைகள் தொடரும்)

    அன்புடன்

  12. #47
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி

    வருடம் - 1988

    1987-ம் டிசம்பர் மாதம் 24-ந் தேதி தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மறைந்தார். அதற்கு பிறகு தமிழக அரசியலில் பற்பல மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த மாற்றங்களின் விளைவாக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை அர்பணித்துக் கொண்டிருந்த நடிகர் திலகம் அதிலிருந்து வெளியேறி தனிக் கட்சி கண்டார். தீவிர அரசியலில் ஈடுபட்டதன் காரணமாக திரைபடங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.

    எனவே இந்த வருடம் வெளியான படங்கள் - 2

    1.புதிய பறவைக்கு பிறகு சிவாஜி பிலிம்ஸ் பானரில் தயாரித்த படம் - என் தமிழ் என் மக்கள்.

    சந்தான பாரதி இயக்கிய இந்த படம் 02.09.1988 அன்று வெளியானது.

    2. முதன் முதலாக சத்யா மூவீஸ் தயாரிப்பில் நடிகர் திலகம் நடித்த படம் - புதிய வானம்.

    3. முதன் முதலாக ஆர். வி. உதயகுமார் நடிகர் திலகத்தை இயக்கிய படம் - புதிய வானம்.

    4. நடிகர் திலகத்தின் 275 -வது படம் - புதிய வானம்.

    5. 36 வருடங்களில் 275 படங்களில் நடித்து சாதனை புரிந்தார் நடிகர் திலகம்.

    6. 10.12.1988 அன்று வெளியான புதிய வானம் 100 நாட்களை கடந்து ஓடியது.

    7. 1989 மற்றும் 1990 -ம் வருடங்களில் நடிகர் திலகம் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

    8. 1991 - ம் ஆண்டு நடிகர் திலகம் நடித்து ஒரே ஒரு படம் வெளியானது.

    9. முதன் முதலாக நடிகர் திலகத்துடன் மனோரமா ஜோடியாக நடித்த படம் - ஞானப்பறவை.

    11.01.1991 அன்று வெளியானது ஞானப்பறவை.

    1992- ம் ஆண்டில் நடிகர் திலகம் நடித்து நான்கு படங்கள் வெளியாகின

    10. நடிகர் திலகம் மற்றும் பிரபுவுடன் ராமாயணம் சீரியல் சீதை புகழ் தீபிகா நடித்த படம் நாங்கள்.

    13.03.19992 அன்று நாங்கள் வெளியானது

    11. முதன் முதலாக நடிகர் திலகத்தை வைத்து கேயார் இயக்கிய படம் - சின்ன மருமகள்.

    23.05.1992 அன்று வெளியானது சின்ன மருமகள்.

    12. நடிகர் திலகம் பத்திரிக்கையாளராக நடித்த படம் - முதல் குரல்.

    வி.சி.குகநாதன் இயக்கிய முதல் குரல் 14.08.1992 அன்று வெளியானது.

    13. பதினைந்து வருட இடைவெளிக்கு பின் நடிகர் திலகமும் கமலும் இணைந்து நடித்த படம் தேவர் மகன்.

    14. மலையாளத்தின் பரதன் தமிழில் இயக்கிய படம் தேவர் மகன்.

    15. 1992 - வருடம் தீபாவளியன்று [25.10.1992] வெளியான தேவர் மகன் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படமாக ஓடி சாதனை புரிந்தது.

    16. தேவர் மகன் 100 நாட்கள் ஓடிய அரங்குகளின் எண்ணிக்கை - 15

    தேவர் மகன் வெள்ளி விழா கொண்டாடிய ஊர்கள் - 2

    சென்னை

    மதுரை - மீனாக்ஷி பாரடைஸ்


    (சாதனைகள் தொடரும்)

    அன்புடன்

    PS: Thamizh, check 1987 year post - Veera Pandiyan

  13. #48
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி

    வருடம் -1993

    1. முதன் முதலாக இயக்குனர் மனோபாலா நடிகர் திலகத்தை வைத்து இயக்கிய படம் -பாரம்பரியம்

    2. நடிகர் திலகத்துடன் சரோஜா தேவி, நிரோஷா போன்றவர்கள் இணைந்து நடித்த பாரம்பரியம் தீபாவளி நாளன்று (13.11.1993) வெளியானது.

    வருடம் -1995

    3. நடிகர் திலகத்தோடு மீண்டும் பாரதி ராஜா இணைந்த படம் - பசும் பொன்.

    4. முதன் முதலாக நடிகர் திலகத்தின் படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்த படம் - பசும் பொன்.

    5. நடிகர் திலகத்துடன் பிரபு, சிவகுமார் மற்றும் ராதிகா இணைந்து நடித்த பசும் பொன் 14.04.1995 அன்று வெளியானது.

    வருடம் -1997

    6. நடிகர் திலகத்துடன் முதன் முதலாக விஜய் இணைந்த நடித்த படம் ஒன்ஸ் மோர்.

    7. இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் தயாரிக்க S.A. சந்திரசேகர் இயக்கிய படம் ஒன்ஸ் மோர்

    8. 1997 ம் வருடம் ஜூலை மாதம் 3 ந் தேதி நடிகர் திலகத்திற்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு மறு தினம் (04.11.1997) வெளியான ஒன்ஸ் மோர் 100 நாட்களை கடந்து ஓடியது.

    9. சென்னை M.M. திரையரங்கில் அதிக நாட்கள் (133) ஓடிய படம் ஒன்ஸ் மோர்.

    10. நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் திலகம் நடித்த மலையாள படம் ஒரு யாத்ரா மொழி

    11. முதன் முதலாக நடிகர் திலகத்துடன் மோகன்லால் இணைந்து நடித்த படம் ஒரு யாத்ரா மொழி.

    12. பிரதாப் போத்தன் இயக்கிய ஒரு யாத்ரா மொழி 07.08.1997 அன்று வெளியாகி மெயின் சென்டர்களான திருவனந்தபுரம், எர்ணாகுளம். கோழிகோடு, திருச்சூர், பாலக்காடு, கொல்லம் போன்ற ஊர்களில் 70 நாட்கள் ஓடியது.

    வருடம் -1998

    13. இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க இதயத்தினுள்ளில் பேஸ் மேக்கர் (pace maker) பொருத்தப்பட்டிருந்த நிலையிலும், தான் அது வரை ஏற்காத வேடம் என்பதால் தலையில் கரகம் வைத்து ஆடும் நாட்டுப்புற கலைஞனாக தன்னுடைய 70-வது வயதில் நடிகர் திலகம் நடித்த படம் என் ஆச ராசாவே.

    14. கஸ்தூரி ராஜா இயக்கத்தில் நடிகர் திலகத்துடன் முரளி, ராதிகா, ரோஜா போன்றவர்கள் நடித்த என் ஆச ராசாவே 28.08.1998 அன்று வெளியானது.

    வருடம் -1999

    15. முதன் முதலாக நடிகர் திலகத்துடன் அர்ஜுன் இணைந்த படம் மன்னவரு சின்னவரு.

    16. கலைப்புலி தாணு தயாரிப்பில் பி.என். ராமச்சந்தர் இயக்கிய மன்னவரு சின்னவரு 15.01.1999 அன்று வெளியானது.

    17. நடிகர் திலகமும் ரஜினியும் கடைசி முறையாக இணைந்த படம் படையப்பா.

    18. முதன் முதலாக கே. எஸ்.. ரவிகுமார் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த படம் - படையப்பா.

    19. முதன் முதலாக நடிகர் திலகம் நடித்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த படம் - படையப்பா [நடிகர் திலகத்திற்கு பாடல் காட்சி இல்லையென்றால் கூட]

    20. நடிகர் திலகம் கௌரவ வேடத்தில் தோன்றிய படையப்பா மிக பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

    21. 10.04.1999 அன்று வெளியான படையப்பா 88 அரங்குகளில் 100 நாட்களும் 6 அரங்குகளில் வெள்ளி விழாவும் கொண்டாடியது

    22. நடிகர் திலகத்தின் நடிப்பாளுமையை மூவீ காமிரா கடைசி முறையாக உள் வாங்கிக்கொண்ட படம் - பூ பறிக்க வருகிறோம்.

    23. இளைய தலைமுறையை சேர்ந்த ஏ. வெங்கடேஷ் இயக்க, இன்றைய நாயகர்களில் ஒருவரான விஷாலின் அண்ணன் அஜய், மாளவிகா மற்றும் நம்பியார் ஆகியோர் இணைந்து நடித்த பூ பறிக்க வருகிறோம் 17.09.1999 அன்று வெளியானது.

    நடிகர் திலகத்தின் புதிய படங்கள் இதற்கு பிறகு வெளி வராமல் இருந்திருக்கலாம். ஆனால் அவரது சாகா வரம் பெற்ற படங்கள் தமிழகத்தின் பல நகரங்களிலும், சிற்றூர்களிலும் இன்றும் திரையிடப்படுகின்றன. அவை சாதனைகளை புரிந்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் படங்களும் அவற்றை திரையிட திரையரங்குகளும் இருக்கும் வரை அவரது சாதனைக்கு முடிவேது?

    அன்புடன்

    PS: இந்த தொடரை பற்றிய ஒரு பின்னுரை விரைவில்

  14. #49
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    பின்னுரை

    இந்த தொடரை ஆரம்பித்து எழுதிக் கொண்டிருந்த போது இந்த விஷயங்களை இப்போது எழுத வேண்டிய தேவை என்ன என்ற எண்ணம் ஒரு சிலருக்கு தோன்றியிருக்கலாம். நண்பர் Plum போன்றவர்கள் அதை வெளிப்படையாக கேட்கவும் செய்தார்கள். நடிகர் திலகத்தின் படங்களை காப்பாற்றி வைத்தாலே, 2080-லும் இருக்கக்கூடிய ரசிகன் சொக்கி போவானே என்று அழகான ஒரு பாய்ண்ட் சொன்னார். உண்மைதான். எத்தனை வருடங்கள் ஆனாலும் அவர் ரசிக்கப்படுவார். அதில் இங்கே யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் அவரை ஒரு சிறந்த நடிகராக மட்டுமே முன்னிறுத்தி அவரது பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை மறைத்து விட பல காலமாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. அந்த கருத்து நாளைடைவில் பரவலாக பரப்பபட்டது.

    நடிகர் திலகம் ஒரு அற்புதமான நடிகர். ஆனால் அவரது படங்கள் எப்போதாவது தான் சிறப்பாக ஓடியிருக்கிறது. மினிமம் காரண்டி கிடையாது என்றெல்லாம் சொல்ல, எழுத ஆரம்பித்தார்கள். முதலில் கர்ணன் தோல்வி, பிறகு சிவந்த மண் தோல்வி, உத்தம புத்திரன் தோல்வி என்றெல்லாம் பல வருடங்களாக சொல்லி சொல்லி வந்தவர்கள் இப்போது அண்மையில் வீர பாண்டிய கட்டபொம்மன் தோல்வி என்று எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படியே போனால் வசந்த மாளிகை கூட தோல்வி படம் என்று சொல்லுவார்கள். அதிலும் இணைய தளமும் வலைப்பூக்களும் வந்த பிறகு விஷயம் தெரியாதவர்கள், ஏதோ கொஞ்சம் தெரிந்தவர்கள் எல்லாம் படம் ஓடிய அரங்குகளில் இருந்த டி.சி. ஆரை பக்கத்திலிருந்து பார்த்தது போல கமன்ட் வேறு. இன்று இணையதளத்திலேயே வாழும் இளைய தலைமுறையும் அடுத்தடுத்த தலைமுறைகளும் இதை உண்மை என்றே நம்பி விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். உடனே அடுத்த கேள்வி எழும். இவர்கள் சொல்வதாலோ, எழுதுவதாலோ கட்டபொம்மனோ வசந்த மாளிகையோ தோல்விப் படமாகி விடுமா? அப்போது இந்த எழுத்துகளை பற்றி ஏன் கவலை கொள்ள வேண்டும் என்ற வினா வரும், வந்திருக்கிறது. இதை கேட்கும் போது நான் படித்த ஒரு கட்டுரை நினைவிற்கு வருகிறது.

    ஒரு தமிழறிஞர் ஒரு வார இதழில் நாம் அன்றாட வாழ்வில் தமிழ் சொற்களை விடுத்து பிற மொழி சொற்களை பயன்படுத்துவதை ஒரு குறையாக சொல்லியிருந்தார். உதாரணமாக அருவி என்ற தமிழ் சொல்லை விடுத்து ஆங்கிலத்தின் water falls -ஐ மொழி பெயர்த்து நீர் வீழ்ச்சி என்று சொல்லுகிறோம். சாளரம் என்ற சொல்லை விடுத்து ஜன்னல் என்று சொல்லுகிறோம். இப்படி போனது அவரது வாதம். ஒரு வாசகர் கடிதம் அனுப்புகிறார். பயன்படுத்த எளிதாக உள்ளதும் அனைவருக்கும் தெரிந்த வார்த்தையான ஜன்னல் என்ற சொல்லை விடுத்து சாளரம் என்று சொல்ல வேண்டுமா? இப்படி கேட்டிருந்தார் அவர். அதற்கு அறிஞர் சொன்ன பதில். தவறில்லை. ஆனால் ஜன்னல் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தினால் நாளடைவில் சாளரம் என்ற சொல் புழக்கத்திலிருந்து மறைந்து போகும். ஜன்னல் மட்டுமே நிலை நிற்கும். இது வருங்கால வரலாற்று ஆர்வலர்களுக்கு நாம் செய்யும் துரோகம். காரணம் ஜன்னல் என்பது போர்ச்கிசிய சொல். வரலாற்று அறிஞர்கள், போர்ச்கிசியர்கள் இந்தியாவிற்கு/ தமிழகத்திற்கு வந்த பிறகு தான் கட்டிடங்களுக்கு ஜன்னல் வைக்கும் முறையே வந்தது என்ற முடிவுக்கு வருவார்கள். யாரும் சொல்லி தராமலே அது குடில் ஆனாலும் கோபுரம் ஆனாலும் வெளிச்சமும் காற்றும் வருவதற்காக ஒரு அமைப்பை உருவாக்கி அந்த இடைவெளி வழியாக விலங்கினங்கள் உள்ளே வராமல் இருக்க கம்பிகள் கட்டைகள் வைத்து அடைத்து அதற்கு சாளரம் என்றும் பேரிட்டவன் தமிழன். அவனுக்கு போர்ச்கிசியர்கள் வந்து சொல்லிக்கொடுத்தார்கள் என்ற வரலாற்று பிழை சரித்திரத்தில் இடம் பெறாமல் இருக்கவே இந்த முயற்சி என்று முடித்தார் அறிஞர்.

    அது போல நாளை தமிழ் திரைப்பட வரலாறு எழுதப்படும் போது நடிகர் திலகத்தை பற்றிய வரலாற்று பிழைகள் இடம் பெற்று விடக்கூடாது என்பதே நமது விருப்பம். என்னால் தமிழ் கூறும் நல்லுலகம் மொத்தத்திற்கும் இதை சொல்ல முடியாவிட்டாலும் கூட, இங்கே எழுதுவதன் மூலம் கணிசமான ஆட்களிடம் இதை கொண்டு சேர்க்க முடிந்ததில் ஒரு மன நிறைவு.

    இந்த தொடரின் ஆரம்ப வித்து விழுந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பு. மதுரைக்கு சென்றிருந்த போது அங்கே கர்ணன் படம் சென்ட்ரல் திரையரங்கில் திரையிடப்பட்டிருந்தது. அங்கே சென்ற எனக்கு அங்கிருந்த ரசிகர்கள் மூலமாக ஒரு கையேடு (Booklet) கிடைத்தது. அதில் நடிகர் திலகத்தின் படங்கள் மதுரையில் மற்றும் சென்னையில் நிகழ்த்திய சாதனைகளை தொகுத்திருந்தனர். நடிகர் திலகத்தின் சாதனைகளை இங்கே சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்த எனக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. அவற்றுடன் எனக்கு தெரிந்த தகவல்களையும் இணைத்து கொண்டேன்.

    வைரமுத்துவின் வார்த்தைகளில் சொல்வதென்றால் என்னுடைய சாயங்காலங்களை சந்தோஷப்படுத்திய, ஏன் என் காலைகளை, மதியங்களை மாலைகளை இரவுகளை சந்தோஷப்படுத்திய, தன் நடிப்பின் மூலமாக ஒரு பரவச உணர்வு நல்கிய அந்த மகா கலைஞனுக்கு என்னால் முடிந்த ஒரு சிறு காணிக்கை இந்த தொடர். இது மதுரையை மட்டுமே (சென்னையையும்) மையமாக வைத்து தொகுக்கப்பட்ட ஒன்று. இது போல திருச்சியிலும் சேலத்திலும், கோவையிலும் நெல்லையிலும் மற்றும் தமிழகத்தின் பல ஊர்களிலும் நடிகர் திலகம் புரிந்த சாதனைகள் எத்தனை எத்தனையோ.

    இந்த தொடருக்கு நான் நன்றி சொல்ல வேண்டியது இந்த கையேட்டை வழங்கிய எங்கள் மதுரையின் காமராஜர் சாலை அரசமரம் செவாலியே சிவாஜி குரூப்ஸ்-ஐ சேர்ந்தவர்களுக்கும், நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் பேப்பர் கட்டிங்களை தொகுத்து வழங்கிய சென்னை ரசிகர்களுக்கும், அதையும் தன்னிடம் இருந்த நாளிதழ் விளம்பரங்களையும் தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட்டு, நான் எந்த நேரத்தில் கூப்பிட்டு தகவல்கள் கேட்டாலும் முகம் சுளிக்காமல் கொடுத்துதவிய ராகவேந்தர் அவர்களுக்கும், அந்த விளம்பரங்களை இங்கே அப் லோட் செய்த ஜோ அவர்களுக்கும். தகவல்கள் அளித்து உதவிய செந்தில்குமார் போன்றவர்களுக்கும், இதை ஒரு தனி திரியாக அனுமதித்த ஹப் moderators, இந்த தொடருக்கு பெரிதும் அதரவளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் உளங்கனிந்த நன்றி.

    அன்புடன்

Page 5 of 5 FirstFirst ... 345

Similar Threads

  1. Actor Murali and Raja
    By Sureshs65 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 57
    Last Post: 22nd March 2011, 06:11 AM
  2. Actor Murali is dead
    By Shakthiprabha in forum Tamil Films
    Replies: 113
    Last Post: 28th September 2010, 05:29 AM
  3. Mandolin U.Srinivas plays Ilayaraaja's classics
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 15
    Last Post: 30th April 2010, 11:51 AM
  4. Kaadhal Valarthen (Music by singer Srinivas)
    By inetk in forum Current Topics
    Replies: 0
    Last Post: 27th February 2007, 07:18 PM
  5. Where to buy U Srinivas style mandolin
    By PanchamFan in forum Classifieds
    Replies: 0
    Last Post: 24th October 2005, 04:02 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •