அஜய், நன்றி. உங்களுக்கும் வாழ்த்துகள். உங்கள் தகவலுக்கும் நன்றி.

டொச்சு, தனிப்பட்ட முறையில உங்களை நான் விமர்சனம் செய்ய*லை. உங்க புனைப்பெயருக்கு எங்க கல்லூரியில ஒரு அர்த்தம் உண்டு. அதை சொல்லி உங்களை அழைக்கறதுக்கு என்னவோ போல் இருந்தது. அதனால தான் அந்த கமெண்ட். மற்றபடி உங்களை புண்படுத்தும் நோக்கம் இல்லை.

திருவிளையாடல் வசனம் - *இதுல என்ன தப்பு இருக்குன்னு எனக்கு புரியலை. நாம எல்லோருமே ஒவ்வொரு சந்தர்ப்பத்தில வசனம் பேசறதுதானே. நான் உங்க எதிரி இல்லை. நம்ம இரசனை வேறுபடுது. அவ்வளவுதான். இதை நீங்க சாதாரணமா எடுத்துக்கலாமே பாஸ்.

மத்தபடி, நம்ம எல்லோருக்குமே பயாஸ் இருக்கும். அதற்காக மற்றவர்களுக்கு பிடித்தவர்களை நான் எந்த இடத்திலும் இழிவு படுத்தியதில்லை. நான் இரஹ்மான் இரசிகன் தான். ஆனால் எந்த இடத்திலும் நான் இளையராஜாவை மட்டுமல்ல வேறு எந்த இசையமைப்பாளரையும் தவறாக பேசியது கிடையாது. நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ இராஜாவும் இரஹ்மானும் சாதனையாளர்கள். உங்களுக்கு இரஹ்மான் இசை பிடிக்கவில்லை என்பது யாருக்கும் ஒரு பிரச்சனையே அல்ல. ஆனால் அவர் மீது அபாண்டமான குற்றம் சாட்டும் முன் அதில் உண்மை இருக்கிறதா என்று தெரிந்து கொண்டு பிறகு குற்றம் சுமத்த வேண்டும். இரஹ்மானின் பாடல்களில் சிலவற்றிலும் சில பகுதிகள் தழுவப்பட்டவைதான். அதை நான் எந்த இடத்திலும் மறுக்கவில்லை. எனது பின்னூட்டத்தில் இதை கூறியிருக்கிறேனே. ஆனால் நீங்கள் கூறியது போல் "ஆரோமலே" பாடல் காப்பி அல்ல. அது காப்பி என்று நீங்கள் குற்றம் சாட்டினால் அதை நிரூபிக்க வேண்டியது உங்கள் கடமை. தயவு செய்து யூட்யூப்பில் படித்தேன் என்று கூறாதீர்கள்.

இளையராஜாவின் விருதுகளை பறிக்க வேண்டும் என்று யாரும் கூறவில்லை. நீங்கள் தான் இரஹ்மானின் ஆஸ்கரை பறிக்க வேண்டும் என்றீர்கள்.

ஒரு இடத்தில் நான் பொதுவானவன் என்கிறீர்கள். இன்னொரு இடத்தில் எனக்கு பயாஸ் உண்டு என்கிறீர்கள். குழப்புகிறீர்களே அய்யா.