Page 59 of 63 FirstFirst ... 9495758596061 ... LastLast
Results 581 to 590 of 626

Thread: TV tid bits

  1. #581
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சீரியல் தயாரிப்பாளரானார் சரத்குமார்


    கண் சிமிட்டும் நேரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சரத்குமார், பத்து படங்களுக்குமேல் வில்லனாக நடித்துவிட்டு அதன் பிறகு நம்ம ஊரு மாரியம்மா படத்தின் மூலம் ஹீரோவானர். சேரன் பாண்டியன் அடையாளம் கொடுத்தது, இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். அரசியலுக்கு சென்ற சரத்குமார், தி.மு.கவில் இணைந்து பாரளுமன்ற உறுப்பினர் ஆனார். பின்பு தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 9 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். கடைசியாக தலைவராக இருந்தார்.


    இப்படி ஏறுமுகமாக இருந்த சரத்குமாரின் வாழ்க்கையில் சமீபகாலமா சற்று சரிவு. பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. நடிகர் சங்க தேர்தலில் தோற்றார். சட்டமன்ற தேர்தலிலும் தோற்றார். இப்போது நடிகர் சங்க ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளார். தற்போது ஹீரோ ஆசையை விட்டுவிட்டு குணசித்ர வேடங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். நடிகர் சங்கத்திலிருந்து ஒதுங்கி இருக்கிறார். அரசியலிலும் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்.


    இந்த நிலையில் சரத்குமார் அடுத்த அவதாரமாக சீரியல் தயாரிப்பாளராகியிருக்கிறார். இதற்காக தனி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அவர் முதலில் தயாரிக்கப்போகும் தொடருக்கு விண்ணைத்தாண்டி வருவாயா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பல சின்னத்திரை சீரியல்களை தயாரித்த அனுபவம் மிக்க சுந்தர்.கே.விஜயன் இயக்குகிறார்.


    இளசுகளின் காதலை மையப்படுத்தி உருவாக இருக்கும் இந்த தொடரில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. சீரியல் தயாரிப்புக்காக விஜய் டி.வியுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் சரத்குமார். ஒரே நேரத்தில் பல தொடர்களை தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறார்.


    மனைவி ராதிகா சரத்குமாரின் தயாரிப்பு நிறுனமான ரேடான் நிறுவனத்திடமிருந்து தனித்த இந்த நிறுவனம் இயங்கும் என்று கூறப்படுகிறது. சரத்குமார் சின்னத்திரைக்கு புதியவர் அல்ல. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நடத்தியவர் "நான் ரெடி நீங்க ரெடியா" என்ற அவரது வசனம் புகழ்பெற்றது. இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #582
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சத்தமில்லாமல் சாதனை படைக்கும் கார்டூன் சீரியல்கள்


    பெரும்பாலும் மீடியாக்களிலும் சரி, பொது விழாக்களிலும் சரி சின்னத்திரை சீரியல்கள் பற்றித்தான் அதிகம் பேசப்படுகிறது. அதுவும் தற்போது டப்பிங் சீரியல்கள் அதிகமாக ஒளிபரப்பாகி பிரமாண்டங்களை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் டப்பிங் சீரியல்களுக்கு வழிகாட்டியதே கார்டூன் தொடர்கள்தான். அவைகள்தான் முதல் இறக்குமதி சீரியல்கள்.


    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கதை சீரியல்களுக்கு அடுத்து விரும்பி பார்க்கப்படுவது கார்டூன் சீரியல்கள்தான். குழந்தைகளை சுற்றிய தயாரிப்புகளான பிஸ்கட், சாக்லெட், குளிர்பாணம், விளையாட்டு பொருட்களின் விளம்பரகள் இந்த தொடர்களிலேயே அதிகம் ஒளிபரப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கான கார்ட்டூன் சேனல்கள் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.


    வருத்தப்படாத கரடி சங்கம், டோரா புஜ்ஜி, சோட்டா பீம், நிஞ்சா கட்டோரி, டாம் அண்ட் ஜெர்ரி, மோட்டு பட்லு ஆகிய சீரியல்கள் டாப்பில் இருக்கிறது. கார்டூன் தொடர்கள் குழந்தைகளுக்கு நல்ல அறிவுரைகளைத் தருகிறது. ஆரோக்கியமான உணவுகளைப் பற்றிச் சொல்கிறது. நட்பு, அன்பு போதிக்கப்படுகிறது. இதனால் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை கார்டூன் தொடர்களை பார்க்க அனுமதிக்கிறார்கள் குழந்தைகளும் தங்களுக்கு பிடித்தமான கற்பனை உலகத்தில் மிதந்து கொண்டே நல்ல விஷயங்களையும் கற்றுக் கொள்கிறார்கள்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  4. #583
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    உலகம் சுற்ற கிளம்புகிறார்கள் சூப்பர் சிங்கர்கள்


    விஜய் டி.வியின் நட்சத்திர ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்கள், பங்கேற்று சிறப்பாக பாடியவர்கள், திரைப்பட பின்னணி பாடகர், பாடகிகள் கொண்ட இசைக் குழு ஆண்டுதோறும் உலக சுற்றுலா கிளம்பி விடும். அதே போல இந்த ஆண்டும் உலக சுற்றுலா கிளம்புகிறார்கள்.


    முதல் கட்டமாக வருகிற நவம்பர் 4ந் தேதி சிங்கப்பூருக்கு செல்கிறார்கள். அங்குள்ள சன்டெக் சிட்டியில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வேகமாக விற்பனையாகி வருகிறது. ஒரு திரைப்பட முன்னணி ஹீரோவும் கலந்து கொள்கிறார். அவர் யார் என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள். நிகழ்ச்சியை பிரியங்கா தேஷ் பாண்டேவும், மா.பா.கா.ஆனந்தும் தொகுத்து வழங்குகிறார்கள். சிங்கப்பூரை தொடர்ந்து லண்டன், பாரீஸ், அமெரிக்கா என பறக்க இருக்கிறார்கள் சூப்பர் சிங்கர்கள்.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  5. #584
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஸ்ரித்திகாவுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள்


    மலேசியாவில் நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரித்திகா, இசை கற்க தமிழ்நாடு வந்தார். வந்த இடத்தில் சின்னத்திரை தொகுப்பாளினி, விளம்பர படங்கள் என்று பிசியானார். அதன்பிறகு வெண்ணிலா கபடி குழு படத்தில் சிறிய ரோலில் நடித்தார். மதுரை டூ தேனி படத்தில் ஹீரோயினாக நடித்தார். சினிமா அவருக்கு செட்டாகவில்லை. இந்த நேரத்தில் நாதஸ்வரம் தொடருக்கு திருமுருகன் நடிகை தேடுவதை கேள்விப்பட்டு ஆடிசனுக்கு சென்று தேர்வானார். அதன்பிறகு 5 வருடங்கள் நாதஸ்வரம் சீரியலில் மலராகவே வாழ்ந்தார். மீண்டும் திருமுருகன் இயக்கத்தில் இப்போது குலதெய்வம் சீரியலில் அலமேலுவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.


    இதற்கிடையில் ஜீ தமிழில் மாமியார் தேவை, உயிர்மெய், ராஜ் டி.வியில் உறவுகள் சங்கமம், ஜெயா டி.வியில் வைதேகி என ஒரு ரவுண்ட் அடித்தார். ஸ்ரித்திகாவுக்கு இசை என்றால் உயிர். நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார். சினிமாவில் பாட வேண்டும் என்கிற ஆசையும் நிறைவேற இருக்கிறது. ஸ்ரிதிகா பற்றி இவ்வளவு பீடிகை போடுவதற்கு காரணம். விரைவில் அவருக்கு திருமணம் நடக்க இருக்கிறது. வீட்டில் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். 2017ல் திருமணம் இருக்கும் என்கிறார்கள்.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  6. #585
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சினிமாவில் நடிக்கிறார் சந்தியா


    வம்சம் தொடரில் நடித்து வருகிறவர் சந்தியா. தெலுங்கு சேனல் தொகுப்பாளினியாக இருந்து, அதன் பிறகு தெலுங்கு சீரியல் நடிகையாகி தமிழ் சேனலுக்கு வந்தவர். தெலுங்கு, தமிழ் சீரியல்களில் நடித்து வரும் சந்தியா இப்போது சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.


    நாய்கள் ஜாக்கிரதை படத்தில் சிறிய கேரக்டரில் தலைகாட்டியவர் இப்போது வனபத்ரகாளி என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவர் வனபத்ரகாளியின் பக்தையாக முழுநீள கேரக்டரில் நடித்திருக்கிறார். இனி தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். "பாக்கெட் மணிக்காகத்தான் மீடியாவுக்குள் வந்தேன். அதில் அடுத்தடுத்த உயரங்கள் எளிதாக கிடைக்கவில்லை. போராடித்தான் இந்த இடத்தை பிடித்தேன். மீடியாவுக்கு அறிமுகமான புதிதில் சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்தது. பின்னர் சீரியல்களிலேயே நல்ல பெயரும், புகழும் கிடைப்பதால் சினிமா பற்றி யோசிக்கவில்லை. இப்போது எனது சீரியல்களை பார்க்கும் இயக்குனர்கள், என் தோற்றம் அவர்கள் கதைக்கு பொருத்தமா இருந்தால் அழைக்கிறார்கள். நானும் சீரியல் படப்பிடிப்பு பாதிக்காத அளவிற்கு நடிக்கிறேன்" என்கிறார் சந்தியா.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  7. #586
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    வெட்கம் இல்லையா... டிவி நிகழ்ச்சியில் நடிகை கீதா ஆவேசம்


    தெலுங்கு, டிவி சேனல் நிகழ்ச்சியில், நெறியாளராக செயல்பட்ட பிரபல நடிகை கீதா, விருந்தினர்களாக பங்கேற்ற, ஓரினச்சேர்க்கையாளர்களை திட்டி தீர்த்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் நடித்தவர் நடிகை கீதா. இவர் நடித்த புதுப்புது அர்த்தங்கள் என்ற தமிழ்ப் படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது.


    தெலுங்கு, டிவி சேனல் ஒன்றில், குடும்ப பிரச்னையை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். சமீபத்தில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில், 20 வயதான பெண் ஒருவரும், அவருடன் சேர்ந்து வாழ்ந்து வரும், 23 வயது திருநங்கை ஒருவரும் பங்கேற்றனர்; அவர்களது பெற்றோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, திருநங்கையிடம் கேள்வி எழுப்பிய கீதா, இது போன்று செயல்படக் கூடாது என, அறிவுரை கூறினார். ஆனால், அந்த திருநங்கை, நான் பிறப்பால் ஆண் தான் என்றார்.


    இதை கேட்டு ஆவேசப்பட்ட கீதா, பிறந்தது முதல் இப்படித் தான் இருந்தாயா; செருப்பால் அடிப்பேன் என ஆவேசப்பட்டார். வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தார். மேலும் திருநங்கையுடன் சேர்ந்து வாழும் இளம்பெண்ணின் பெற்றோரிடம், உங்கள் மகளை வேறு யாருக்காவது திருமணம் செய்து வைத்து, வெளியூருக்கு அனுப்பி விடுங்கள்; இது ஒன்று தான் பிரச்னைக்கு தீர்வு என்றார். இதனால், நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  8. #587
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஜோடி நிகழ்ச்சியின் நடுவர் டி.ராஜேந்தர்: ஆட்டத்திலும் கலக்குகிறார்


    விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் 9வது சீசன் வருகிற 12ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. ரீல் வெஸ்சஸ் ரியல் என்பது இதன் கான்செப்ட்


    சனிக்கிழமை மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதன் முதன்மை நடுவராக டி.ராஜேந்தர் பணியாற்றுகிறார். துவக்க நிகழ்ச்சியில் ஆனந்த் பாபு ஆடிய "ஐ ஏம் எ டிஸ்கோ டான்சர்..." பாட்டுக்கு ஆடி கலக்க இருக்கிறார். அதோடு மட்டுமல்ல ஒவ்வொருவருக்கும் ஆடிக் காட்டியும். தவறு செய்பவர்கள் எப்படி தவறு செய்தார்கள். எப்படி ஆடியிருக்க வேண்டும் என்ற செய்து காட்டியும் மிரட்ட இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்ற அவருக்கு பெரும் தொகையை சம்பளமாக கொடுக்கிறது சேனல்.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  9. #588
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் நிஷா


    தேனி பக்கம் உள்ள சின்னமனூர் பொண்ணுதான் நிஷா. டாக்டருக்கு படிக்கணும்னு இருந்தவர் எப்படியோ தப்பித் தவறி மீடியாவுக்குள் வந்து விட்டார். எம்.ஓ.பி வைஷ்ணவா காலேஜில் விஷ்காம் முடித்து விட்டு ஆஹா தொடரில் அறிமுகமானார். அதன் பிறகு நிறைய தொடர்கள், நிறைய நிகழ்ச்சிகள் என நடிகையாகவும், தொகுப்பாளினியாகவும் பயணத்தை தொடர்ந்தவர். திரைப்பட நடிகர் கணேஷ் வெங்கட்ராமுடன் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது காதலில் விழுந்து திருமணமும் செய்து கொண்டார்.


    தற்போது தலையணை பூக்கள் தொடரில் நடித்து வரும் நிஷா ஆரம்பத்திலிருந்தே தேடி வந்த சினிமா வாய்ப்புகளை தவிர்த்து வந்தார். திருமணத்துக்கு பிறகு கணேஷ் வெங்கட்ராம் ஜோடியாக வேண்டுமானால் நடிக்கிறேன் என்று சொல்லி வந்தார். இந்த நிலையில் தற்போது கிருஷ்ணடுக்கி பாரசுடு என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தெலுங்கு வழியாக அப்படியே தமிழுக்கும் வந்து விடுவார். எப்படியோ சினிமா விரதத்தை முடித்து விட்டார் நிஷா.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  10. #589
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தமிழ் சினிமாவில் நடிக்கிறார் நாகினி மவுனிராய்


    இந்தி டப்பிங் தொடரான நாகினியில் நாகினியாக நடித்திருப்பவர் மவுனிராய். இந்தி சீரியல் நடிகையான மவுனிராய் நாகினி தொடர் மூலம் தமிழ் நாட்டில் பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றிருக்கிறார். அதுவும் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் கவர்ந்திருக்கிறார். தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் ஆண்களையும் டி.விமுன் உட்கார வைத்திருக்கிறார்.<p>அப்புறம் சும்மா விடுமா கோடம்பாக்க சினிமா. அவரை சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வைக்க பல சிறிய தயாரிப்பு நிறுவனங்கள் அவரை தொடர்பு கொண்டிருக்கின்றன. சில பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட அழைப்பு விடுத்திருக்கின்றன.


    மவுனிராய்க்கு சினிமா புதிதில்லை. அபிஷேக் பச்சன் நடித்த ரன் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். ஒரு பஞ்சாபி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காததால் இனி சின்னத்திரைதான் என்று முடிவு செய்து சீரியலுக்கு வந்துவிட்டார். இப்போது தமிழ் சினிமா அழைக்கிறது. விரைவில் அவர் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வர இருக்கிறது.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  11. #590
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கலைவாணர் சிந்தனை
    எம்.ஆர்.ராதா ஒரு ஊரில் கேம்ப் போட்டு நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தார். நாளாவட்டத்தில் கலெக்ஷன் சரியாக ஆகவில்லை. கம்பெனி கலைஞர்கள் நஷ்டத்திற்கு உள்ளார்கள்.
    அந்த சமயத்தில் அந்த ஊருக்கு என்.எஸ்.கே வந்திருப்பதாக தகவல் கிடைக்கிறது. அவரிடம் சென்று நிலைமையைச் சொல்லி நாடகத்திற்கு தலைமை தாங்க சொல்லலாம் என்று நினைத்து மகன் எம்.ஆர்.ஆர் வாசுவையும் அழைத்துக் கொண்டு . என்.எஸ்.கே தங்கியிருக்கும் இடத்திற்கு புறப்பட்டார் எம்.ஆர்.ராதா. என்.எஸ்.கே என்பதால்தான் இந்த உதவியைக் கேட்டு சென்றார் ராதா. மற்றவர்களிடம் அவர் செல்லக் கூடியவரல்ல. ராதா சென்றிருந்த சமயத்தில் என்.எஸ்.கே சாத்துக்குடி பழம் தின்று கொண்டிருந்திருக்கிறார். சுளையை உள்ளே தள்ளுவதும், தோலை ஒரு கூடையில் போடுவதுமாக ராதா சொன்ன கதையை எல்லாம் கேட்டுக் கொண்டார். பக்கத்தில் டி .ஏ .மதுரமும் இருந்திருக்கிறார். எல்லாம் கேட்டு முடிந்தவுடன் தன்னால் நாடகத்திற்கு தலைமை தாங்க வர முடியாது என்றும், உடனே தாங்கள் சென்னை செல்லவிருப்பதாகவும் என்.எஸ்.கே கூறி விட்டார். எம்.ஆர்.ராதாவுக்குஒரே ஏமாற்றம். வந்திருக்கவே கூடாது என்ற நினைப்பில் கிளம்பினார்.அந்த சமயத்தில் அவரிடமும் வாசுவிடமும் என்.எஸ்.கே, கூடையில் உரித்து போட்டிருந்த சாத்துக்குடித் தோல்களை வெளியே இருக்கும் குப்பைத் தொட்டியில் கொட்டச் சொல்லி விட்டு, மதுரத்துடன் உள்ளே போய் விட்டார். ராதாவுக்கு மகா கோபம். தலைமை தாங்கவும் செய்யாமல், உதவியும் செய்யாமல் குப்பை கொட்டுகிற வேலையை கொடுக்கிறாரே என்று திட்டிக் கொண்டே சென்றிருக்கிறார். கூடையுடன் பின்னால் சென்ற வாசு, குப்பைத் தொட்டியில் கொட்டியிருக்கிறார். உடனே 'நயினா' என்று அலறியிருக்கிறார். கூடையில் இருந்து தோல்களுடன் கரன்சிக் கட்டுகளும் விழுந்ததுதான் காரணம். ராதா அவற்றை பார்த்து அயந்துவிட்டார். அவருக்கு வெளிப்படையாக உதவி செய்ய முடியாத நிலை கலைவாணருக்கு.அது புரிந்துவிட்டது ராதாவுக்கு.தகவல்: எம்.ஆர்.ஆர்.வாசு
    "அன்பே சிவம்.

Page 59 of 63 FirstFirst ... 9495758596061 ... LastLast

Similar Threads

  1. Musicians,events,anecdotes and tid-bits
    By rajraj in forum Indian Classical Music
    Replies: 223
    Last Post: 16th November 2020, 09:33 AM
  2. IR music bits as ringtone (mp3)
    By dochu in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 8
    Last Post: 17th June 2009, 03:05 PM
  3. Tid Bits Memories of Yesteryears
    By R.Latha in forum Memories of Yesteryears
    Replies: 0
    Last Post: 24th April 2009, 01:18 PM
  4. Tit Bits
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 5
    Last Post: 1st March 2009, 12:13 AM
  5. THAMIZH - THULHIHALH (Tamil Tit-Bits & Episodes)
    By Oldposts in forum Tamil Literature
    Replies: 62
    Last Post: 29th January 2009, 10:02 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •