Page 51 of 63 FirstFirst ... 41495051525361 ... LastLast
Results 501 to 510 of 626

Thread: TV tid bits

  1. #501
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    விஜய் விருதுக்கு நீதிபதிகள் நியமனம்


    விஜய் தொலைக்காட்சி ஆண்டு தோறும் சிறந்த சினிமா கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. 2014ம் ஆண்டுக்கான 9வது விஜய் விருது விழா வருகிற ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது. இதற்காக சிறந்த படங்களை, கலைஞர்களை தேர்வு செய்ய நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இயக்குனர் பால்கி, கே.பாக்யராஜ், கே.வி.ஆனந்த், நடிகை நதியா, யூகி சேது ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.


    யூகி சேது கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து நீதிபதியாக இருக்கிறார். கே.பாக்யராஜ் கடந்த 3 ஆண்டுகளான நீதிபதியாக இருக்கிறார். நதியாவும், கே.வி.ஆனந்தும் புதிய நீதிபதியாகி இருக்கிறார்கள். இயக்குனர் பால்கி முதன் முறையாக சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த ஆண்டு விழாவில் சவுண்ட் என்ஜினீயரிங், விசுவல் எபெக்ட்ஸ், டப்பிங், போன்ற பிரிவின் கிழும் விருது வழங்க முடிவு செய்திருக்கிறார்கள்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #502
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்னத்திரையில் சித்தார்த்


    இதுவரை சித்தார்த் சின்னத்திரை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகவும், பங்கேற்பாளராகவுமே கலந்து கொண்டிருக்கிறார். முதன் முறையாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.


    டிஸ்கவரி தமிழ் சேனலில் வேர் டைகர்ஸ் ரூல்ஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதை முன்னணி நடிகர் நடிகைகள் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இதற்கு முன்பு அமீர்கான், ப்ரியங்கா சோப்ரா, ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். புலி இனத்தை காக்கும் நோக்கத்தில் அதன் பரிணாம வளர்ச்சி, குணநலன்கள், அவற்றின் வாழ்வியலை பாதிக்கும் காரணங்கள் அதனை தடுக்கும் முறைகள் பற்றி இந்த நிகழ்ச்சி சொல்கிறது. புலிகள் வாழும் பகுதியில் ரகசிய கேமராக்கள் வைத்து படம்பிடித்து இந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்குகிறார்கள்.


    இதில் உள்ள வனவிலங்கு சமூகத்தின் அக்கறையை புரிந்து கொண்டு நட்சத்திரங்கள் தொகுத்து வழங்குகிறார்கள். அந்த வரிசையில் இப்போது சித்தார்த் தொகுத்து வழங்குகிறார். தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் மார்ச் மாத எபிசோட்களை சித்தார்த் தொகுத்து வழங்குகிறார்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  4. #503
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தமிழுக்கு வருகிறார் தெலுங்கு தொகுப்பாளர் சுமா


    ஜீ தமிழ் சேனல் முன்பு நீல நிறத்தில் இருந்த தனது லோகோவை மாற்றி தற்போது மஞ்சள் மற்றும் குங்குமத்தை குறிக்கும் மங்களகரமான புதிய லோகோவை அறிமுகப்படுத்தி உள்ளது. அதோடு பல புதிய நிகழ்ச்சிகளை புதுப் பொலிவுடன் துவக்க இருக்கிறது. தற்போது ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளிலும் மாற்றங்கள் செய்ய இருக்கிறார்கள். பொழுதுபோக்கு, விளையாட்டு நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள், திரைப்படங்களுக்கு நிகரான தொடர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகள் என புதிய நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறார்கள்.


    அவற்றில் முக்கியமானது ஜீன்ஸ் என்ற நிகழ்ச்சி. இது ஒரு கேம் ஷோ. இதில் திரைப்பட நட்சத்திரங்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுடன் கலந்து கொண்டு விளையாட இருக்கிறார்கள். இதனை தெலுங்கு தொலைக்காட்சி தொகுப்பாளர் உமா தொகுத்து வழங்குகிறார். தெலுங்கு சின்னத்திரை உலகின் முன்னணி தொகுப்பாளர் இவர். தமிழ்நாட்டில் திவ்யதர்ஷினி மாதிரி தெலுங்கில் சுமா.


    கேரளாவைச் சேர்ந்த சுமா மலையாளத்தில் சில படங்களிலும் நடித்துள்ளார். மலையாள சேனல்களிலும் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி உள்ளார். மலையாளம், தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் நான்கு மொழியிலும் தெளிவாக பேசக்கூடியவர். சிறந்த தொகுப்பாளருக்கான பல விருகளையும் வென்றவர்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  5. #504
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    2014ம் ஆண்டில் சின்னத்திரையின் விளம்பர வருமானம் 47 ஆயிரம் கோடி


    கடந்த 2014ம் ஆண்டு இந்திய சின்னத்திரை சேனல்களின் விளம்பர வருமானம் 47 ஆயிரத்து 500 கோடி ரூபாய். இது அதற்கு முந்தைய 2013ம் ஆண்டை ஒப்பிடும்போது 15 சதவிகிதம் கூடுதலாகும். இந்த தகவல் கே.பி.எம்.ஜி ஆண்டறிக்கையில் வெளியாகி உள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது


    தொலைக்காட்சி வருமானத்தில் இந்தியா உலகில் 2வது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் இருப்பது சீனா. விளம்பர துறையின் வளர்ச்சிக்கு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் பங்கு முக்கியமானது. இனிவரும் காலங்களில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குதுறையின் வளர்ச்சிக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகப்பெரிய காரணமாக அமையும். சென்ற ஆண்டு தொலைக்காட்சி துறையின் ஊடுருவல் 61 சதவிகிதமாக இருந்தது. இனிவரும் ஆண்டுகளில் விளம்பர வருமானத்தின் வளர்ச்சி விகிதம் 15.6 சதவிகிதமாக இருக்கும். இந்த நிலை தொடர்ந்தால் 2019ம் ஆண்டில் தொலைக்காட்சிகளின் விளம்பர வருமானம் 97 ஆயிரத்து 500 கோடியாக அதிகரிக்கும். தொலைக்காட்சிகளில் சேனல் இணைப்பு வருவாயும் ஆண்டுக்கு 16 சதவிகிதம் உயரும்.


    மத்திய அரசு பண்பலை வானொலி நிலையங்களை ஊக்குவித்து வருகிறது. புதிய வானொலி நிலையங்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் வானொலி விளம்பர வருவாயும் கணிசமாக உயரும். நடப்பு நிதி ஆண்டில் ஊடக துறையின் மொத்த வருமானம் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 600 கோடியாக இருக்கும். இவ்வாறு கே.பி.எம்.ஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  6. #505
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    திரைப்பட கல்லூரி தொடங்குகிறார் ஜெயவேல்


    சின்னத்திரையின் கிங் மேக்கர் என்று அழைக்கப்படுகிறவர் நாளை இயக்குனர் நிகழ்ச்சியின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கே.ஜி.ஜெயவேல். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் 6 வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது.


    நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் கார்த்திக் சுப்புராஜ் (பீட்சா), பாலாஜி மோகன் (காதலில் சொதப்புவது எப்படி), நலன் குமாரசாமி (சூதுகவ்வும்), ராம் (முண்டாசுப்பட்டி), ரமேஷ் (தெகிடி) ஆகிய திறமையான இயக்குனர்களை ஜெயவேல் சினிமாவுக்கு அனுப்பி வைத்தார்.


    விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கருணாகரன், ரெஜினா தாமஸ், செண்ட்ராயன், ஆகிய கலைஞர்களையும், அல்போன்ஸ் புத்ரன் (எடிட்டர்), கே.ஆர்.பிரதாப் (ஒளிப்பதிவாளர்), ஜஸ்டின் பிரபாகரன் (இசை அமைப்பாளர்), விஷால் சந்திரசேகர் (இசை அமைப்பாளர்) ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களையும் கண்டுபிடித்து சினிமாவுக்கு தந்தார்.


    நாளை இயக்குனர் நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்த விழா என்ற குறும்படத்தை சினிமாவாக தயாரித்தார். ஆனால் அந்தப் படம் வெற்றி பெறவில்லை. என்றாலும் தற்போது நாளை இயக்குனரில் வெற்றி பெற்ற புது இயக்குனரை வைத்த அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறார். விரைவில் திரைப்படக் கல்லூரி ஒன்றையும் தொடங்க இருக்கிறார்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  7. #506
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஏப்ரல் 25ந் தேதி விஜய் அவார்ட்ஸ் விழா: ஏற்பாடுகள் தீவிரம்


    தமிழ் சினிமாவுக்கு அரசு விருது வழங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பல தனி அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் தங்கள் விரும்பம் போல் விருது வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமா கலைஞர்கள் பெரிதும் மதிக்கிற விருது விஜய் அவார்ட்ஸ்தான். ஃபிலிம் பேர் அவார்ட்ஸ் தென்னிந்திய சினிமாவுக்கு உரியது. விஜய் அவார்ட்ஸ் தமிழுக்கு மட்டும் உரியது.


    2014ம் ஆண்டுக்கான விஜய் அவார்ட்ஸ் விழாவை வழக்கம்போல நேரு உள்விளையாட்டரங்கத்தில் பிரமாண்டமாக நடத்த உள்ளது விஜய் டி.வி. ஏப்ரல் 25ந் தேதி நடக்க இருப்பதாக தற்போது தேதியை அறிவித்துள்ளது. என்றாலும் கடந்த மாதமே அதன் பணிகளை துவக்கி விட்டது.


    2014ம் ஆண்டுக்கான விஜய் அவார்ட்ஸ்சுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய இயக்குனர் கே.பாக்யராஜ், பால்கி, கே.வி.ஆனந்த், நடிகை நதியா, விமர்சகர் யூகி சேது ஆகியோர் ஜூரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு படங்கள் வீதம் தேர்வுக்கு வந்துள்ள படங்களை பார்த்து வருகிறார்கள்.


    இந்த ஆண்டு முதல் டப்பிங் கலைஞர்க, ஒலிப்பதிவாளர் உள்ளிட்ட சில பிரிவுகளை விருதுக்கு சேர்த்திருக்கிறார்கள். பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். நடிகர், நடிகைகள் பங்கேற்கும் பிரமாண்ட நடன கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். ஏப்ரலில் பதிவு செய்யப்படும் நிகழ்ச்சி, மே மாத்ததில் ஒளிபரப்பாகும்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  8. #507
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மும்பைக்கே திரும்புகிறார் மனீஷா


    முன்னணி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சக்தி தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் மனீஷா. மும்பை நடிகையான இவர் சக்தி சீரியல் இந்தி சீரியலின் ரீமேக் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டு நடிக்க வந்தார். எதற்கும் கோபப்படாத ஒரு அமைதியான பெண் கேரக்டரில் நடித்தார். நிஜத்தில் மனீஷா மார்டன் பொண்ணு. சக்தி சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது வந்த ஒரு மலையாள திரைப்பட வாய்ப்பையும் மறுத்தார்.


    தற்போது சக்தி சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்து விடும். அதற்கு பிறகு தமிழ் சீரியல்களில் நடிக்கும் எண்ணம் இல்லாமல் இருக்கிறார் மனீஷா. அதற்கு காரணம் இந்தியில் தயாராகி வரும் மலையாள டிராபிக் படத்தின் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழில் சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் ரீமேக் ஆனபோது இனியா நடித்த கேரக்டரில் மனீஷா நடிக்கிறார். தொடர்ந்து இந்தி படங்களிலும், இந்தி சீரியல்களிலும் நடிக்க முடிவு செய்திருக்கிறார் மனீஷா.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  9. #508
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்னத்திரை நடிகர் சங்கத்தில் குழப்பம்: தலைவர் நளினி திடீர் ராஜினாமா, திடீர் வாபஸ்


    திரைப்பட நடிகர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இருப்பதைப்போன்று சின்னத்திரை நடிகர்களுக்கும் தனியாக சங்கம் உள்ளது. இதன் தற்போதைய தலைவராக நளினி உள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று நளினி தலைவர் ஆனார். ஆனால் நளினி தலைமையிலான நிர்வாகிகள் மீது சின்னத்திரை நடிகர்களுக்கு அதிருப்தி உள்ளது. நளினி நடிப்புக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார். சங்க பிரச்னைகளுக்கு முக்கியத்தும் தருவதில்லை என்றும், தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். இதனை தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள... சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தற்போது இரண்டு கோஷ்டிகள் உருவாகி உள்ளது


    இந்த நிலையில் தலைவர் நளினி, துணை தலைவர் மனோபாலா, செயலாளர் பூவிலங்கு மோகன், இணை செயலாளர் பாவனா ஆகியோர் நேற்று (மே 10) திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். ராஜினிமா கடிதத்தை துணை தலைவர் ராஜ்காந்திடம் கொடுத்தனர். தற்போதுள்ள சூழ்நிலையில் எந்த பிரச்னையும் வேண்டாம் பதவியை தொடருங்கள் என்று பலரும் வற்புறுத்தியதை தொடர்ந்து ராஜினாமாவை வாபஸ் பெற்றனர்.


    இதுகுறித்து நளினி கூறும்போது "எனக்கு தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பால் என்னால் சங்க பணிகளை செய்ய நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால் பதவியை ராஜினிமா செய்தேன். நான் நீடிக்க வேண்டும் என்று மூத்த உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதால் ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றேன்" என்றார்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  10. #509
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மறு ஒளிபரப்பாகும் டப்பிங் தொடர்


    டப்பிங் தொடர்களால் எங்களது வேலை வாய்ப்பு பறிபோகிறது என்று சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. என்றாலும் எல்லா சேனல்களுமே டப்பிங் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. பொதுவாக புகழ்பெற்ற நேரடி தமிழ் தொடர்கள்தான் மறு ஒளிபரப்பாகும். அதுவும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பான தொடர் நான் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும்.
    ஆனால் முதன் முறையாக ஒரு டப்பிங் தொடர் மறுஒளிபரப்பாகிறது. அதுவும் ப்ரைம் டைமான இரவு 7 மணிக்கு. திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது உள்ளம் கொள்ளை போகுதடா என்ற டப்பிங் தொடர். பாலிமர் தொலைக்காட்சியில் மிகுந்த வரவேற்புடன் ஒளிபரப்பான இந்த தொடர் 650 எபிசோட்களை கொண்டது. அத்தனை எபிசோடும் மறு ஒளிபரப்பாகிறது. ராம்கபூர், சாக்ஷி தன்வார், ஈவா க்ரோவர், ரேணுகா இஸ்ராணி நடித்துள்ளனர்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  11. #510
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like



    சின்னத்திரையிலும் காமெடிக்கே முதலிடம் கொடுக்கும் மதுமிதா!




    ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்தவர் ஜாங்கிரி மதுமிதா. அதையடுத்து அட்டகத்தி, ராஜாராணி, ஜில்லா, தெனாலிராமன், காக்கி சட்டை, காஞ்சனா-2, டிமான்டி காலனி என பல படங்களில் நடித்து விட்டார்.


    ஆனால், இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே சின்னத்திரையில், மாமா மாப்ளே, பொண்டாட்டி தேவை, அதிதி பூக்கள் என சில சீரியல்களில் நடித்து நேயர்கள் மத்தியில் பேசப்படும் நடிகையாகவும் இருந்தார்.


    ஆக, ஏற்கனவே டிவியில் வளர்ந்து கொண்டிருந்த மதுமிதா, இப்போது சினிமா மூலம் இன்னும் பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறார். தற்போது சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தாலும், சின்னத்திரையையும் அவர் விடவில்லை.


    அழகி, மடிப்பாக்கம் மாதவன், சின்னப்பாப்பா பெரிய பாப்பா சீசன் 3யிலும் நடித்து வருகிறார். ஆனால் சினிமாவோ, சின்னத்திரையோ எதுவாக இருந்தாலும் காமெடி கேரக்டர்களுக்கு முதலிடம் கொடுத்து வருகிறார் மதுமிதா.


    இதுபற்றி அவர் கூறுகையில், என்னைப்பொறுத்தவரை இரண்டு மீடியாக்களையும் ஒரே மாதிரியாகத்தான் நினைக்கிறேன். குறிப்பாக எனது கதாபாத்திரங்கள் ரசிகர்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால்தான் காமெடி வேடங்களுக்கே முதலிடம் கொடுக்கிறேன்.


    மேலும், அழுது வடியும் கேரக்டர்களை நான் விரும்புவதில்லை. டிவி சீரியல்களைப்பொறுத்தவரை பெரும்பாலும் சென்டிமென்ட் கதைகளாக இருப்பதால் ஒவ்வொரு கேரக்டர்களும் அழுது நடிக்க வேண்டியதிருக்கும்.


    ஆனால் நான் காமெடி நடிகை என்பதால் என்னை இயக்குனர்கள் அழ விடுவதில்லை. அதுதான் எனக்கு பெரிய சந்தோசமே. என்னை புரிந்து கொண்டு கேரக்டர்கள் தருகிறார்கள். அதனால் என்னால் முடிந்தவரை ரசிகர்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சிப்படுத்த முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறேன் என்கிறார் மதுமிதா.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

Page 51 of 63 FirstFirst ... 41495051525361 ... LastLast

Similar Threads

  1. Musicians,events,anecdotes and tid-bits
    By rajraj in forum Indian Classical Music
    Replies: 223
    Last Post: 16th November 2020, 09:33 AM
  2. IR music bits as ringtone (mp3)
    By dochu in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 8
    Last Post: 17th June 2009, 03:05 PM
  3. Tid Bits Memories of Yesteryears
    By R.Latha in forum Memories of Yesteryears
    Replies: 0
    Last Post: 24th April 2009, 01:18 PM
  4. Tit Bits
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 5
    Last Post: 1st March 2009, 12:13 AM
  5. THAMIZH - THULHIHALH (Tamil Tit-Bits & Episodes)
    By Oldposts in forum Tamil Literature
    Replies: 62
    Last Post: 29th January 2009, 10:02 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •