Page 5 of 63 FirstFirst ... 345671555 ... LastLast
Results 41 to 50 of 626

Thread: TV tid bits

  1. #41
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    இளமை சரவெடி



    "சோஷியல் மீடியா''நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சியுடன் இணைந்து வழங்கிய இசை மற்றும் கலை நிகழ்ச்சி கடந்த வாரம் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது.

    பாடகர்கள் கார்த்திக், பென்னி ஜெஸ்ஸி கிப்ட், பெல்லிராஜ், பாடகிகள் சுசித்ரா, சின்மயி, "கண்கள் இரண்டால்'' பாடல் புகழ் தீபா மரியம் ஆகியோர் பாடினார்கள். சின்னத்திரை புகழ் "சேது''வின் மிமிக்ரியும் "எல்லாமே சிரிப்புதான்'' குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சியும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அதோடு கலைஞர் தொலைக்காட்சியின் "மானாட மயிலாட'' குழுவினரின் நடன நிகழ்ச்சியும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமானது.

    சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் ஆதிராஜ் தொகுத்து வழங்கினார். தீபாவளி தினத்தன்று கலைஞர் தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இது ஒளிபரப்பாகும்.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #42
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஊர் கோலம்



    தீப ஒளித்திருநாளை முன்னிட்டு மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் அன்று பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சி, ஊர்கோலம்.

    `இன்று ஒரு தகவல்' மூலம் தமிழர் இதயங்களில் இடம் பிடித்த தென்கச்சி கோ.சுவாமிநாதன் தனது பிறந்த ஊருக்குச் சென்று தன் மண்ணையும், மக்களையும் நலம் விசாரிக்கும் நிகழ்ச்சிதான், `ஊர்கோலம்.'

    பணி நிமித்தம் பலர் தங்கள் ஊரை விட்டு வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள். அவர்கள் சிறு வயதில் ஓடி விளையாடிய தெருக்கள், நீச்சலடித்த குளம், நண்டு பிடித்து திரிந்த உயர்காடு இவைகளை மீண்டும் பார்ப்பது தனி ஆனந்தம்.

    தன் சிறுவயது நண்பர்களை காண்பதும், அவர்களோடு அந்த நாள் ஞாபகங்களை அசை போடுவதும் பேரானந்தம்.

    தான் பிறந்த வீடு, படித்த பள்ளிக்கூடம், நண்பர்களோடு கதை பேசிய படித்துறை என்று தன் இளமை அனுபவங்களை திரும்பிப் பார்க்கிறார், தென்கச்சி கோ.சுவாமிநாதன்.

    "அன்பே சிவம்.

  4. #43
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சரிகமப சங்கீத மகாயுத்தம்''



    தமிழ்ச்சின்னத்திரையில் முதல் முதலாக `மாதம் ஒரு குறுந்தொடர்' என்ற புதுமையை உருவாக்கி, நடிகை சிம்ரனின் நடிப்பில் ``சிம்ரன்திரை'' என்னும் தொடரை ஜெயா டி.வி.யில் தயாரித்து வழங்கி வருகிறது, பிரமிட் சாய்மீரா நிறுவனம். தொடர்ந்து அனுஹாசன் நடிப்பில் ``ரேகா ஐ.பி.எஸ்.'' தொடரையும், சிறுவர் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்காகவும் சேர்த்து ``சூப்பர் சுந்தரி'' என்னும் தொடரையும் கலைஞர் டி.வி.யில் வழங்கி வருகிறது.

    ஜீ தெலுங்கு சேனலில் ``சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்'' என்னும் புதிய வடிவத்துடனான இசை நிகழ்ச்சியையும், `ஸ்வர நிராஜனம்' என்னும் இசை நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது

    தெலுங்கி ஈ டி.வியில் `ஓகேரே' என்னும் இசைநிகழ்ச்சியை சாதனை செய்த இளையவர்களுக்காக வழங்கி வருகிறது.

    தற்போது `சரிகமப சங்கீத மகாயுத்தம்' என்ற இசை நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சிக்காக வழங்குகிறது.

    பல்வேறு இசைப் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்றிருக்கும் இசை சாதனையாளர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கிடையில் நடக்கவிருக்கும் ஒரு ஆரோக்கியமான போட்டிதான் இந்த `சரிகமப சங்கீத மகா யுத்தம்.' முழுக்க முழுக்க பிரம்மாண்ட அரங்கத்தில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருப்பவர் பிரபல பின்னணிப் பாடகி உஜ்ஜயினி. இவர் வங்காளத்தைச் சேர்ந்த இசைக்குயில். இவரது தாய்மொழி பெங்காலி என்றாலும் இசைக்கு மொழி இல்லை என்பதைப் போல் தமிழ் பாடல்களை மிகவும் அருமையாகப் பாடுகிறார். `அழகிய தமிழ்மகன்' படத்தில் இடம் பெற்ற `நீ மர்லின் மன்றோ' என்ற பாடலையும் `நீ நாதஸ்வரம் போல வந்தாய்' என்ற பாடலையும் பாடி தமிழ் ரசிகர்களின் மனதை தனது குரல் வளத்தால் மயங்க வைத்திருப்பவர்.

    9 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளும் இந்த `சரிகமப சங்கீத மகாயுத்தம், இதுவரை வேறு எந்த பாட்டு நிகழ்ச்சியிலும் இடம் பெறாத புதுமையான சுவாரஸ்யமான வடிவமைப்பாகும். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மற்ற மாநிலப் பாடகர்கள் ஒரே மேடையில் ஐக்கியமாகும் இசை நிகழ்ச்சியாகவும் இது இருக்கும்.

    இயக்கம்: அருணா தேவாநந்தன், ஒளிப்பதிவு: ஆர்யன். டைட்டில் இசை: பால் ஜேக்கப். கிரியேட்டிவ் ஹெட்: சுபாவெங்கட்.
    "அன்பே சிவம்.

  5. #44
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தீப ஒளி விருந்தாளி



    மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நேயர்கள் வீடுகளுக்குச் சென்று தீப ஒளித் திருநாளை உற்சாகமாக கொண்டாடிய நிகழ்ச்சி, `தீப ஒளி' விருந்தாளி. தீபாவளி நாளான திங்களன்று மாலை 6.03 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    மக்கள் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் கார்த்திகா, ரேவதி, ஆர்த்தி, யாழினி மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர் தங்களை விருந்துக்கு விரும்பி அழைத்த நேயர்கள் வீட்டில் விருந்துண்டு கதையாடி மகிழ்ந்த நிகழ்ச்சி இது. `கனவா இல்லை நனவா' என்று நேயர்கள் தங்களை கிள்ளிப்பார்த்த அனுபவத்தோடு விறுவிறுப்பாக அமைந்தது.

    நிகழ்ச்சிகள், நலம் விசாரிப்புகள், சின்ன விளையாட்டுகள், மக்கள் தொலைக்காட்சி வழங்கும் பரிசுகள் என்று புது அனுபவத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி, தீப ஒளி விருந்தாளி.
    "அன்பே சிவம்.

  6. #45
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நீயா? நானா?



    விஜய் டி.வி.யில் கோபிநாத் தொகுத்து வழங்கும் `நீயா நானா' நிகழ்ச்சி எல்லா தரப்பு நேயரிடமும் வரவேற்பு பெற்றுள்ளது.

    நடுநிலையான தீர்ப்பு, காரசாரமான விவாதங்கள், சுவாரஸ்ய தலைப்புகள் என தொடரும் `நீயா நானா' நிகழ்ச்சியில், தீபாவளி தினத்தன்று விவாத தலைப்பு: `இன்றைய ஆரம்ப கல்விமுறை சரியான திசையில் செல்கிறதா இல்லையா?

    இதில் ஆசிரியர்கள் ஒரு புறமும், அரசு சாரா நிறுவனம் மற்றொரு புறமும் இருந்து சூடான வாதங்களில் ஈடுபடுகின்றனர்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா பங்கேற்கிறார். கல்வியின் முக்கியத்துவம், கல்விமுறை பற்றிய தனது கருத்துக்களை அவர் இந்நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கிறார்.

    திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
    "அன்பே சிவம்.

  7. #46
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    என் கேள்விக்கு என்ன பதில்



    வசந்த் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு "என் கேள்விக்கு என்ன பதில்'' வினாடி வினா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. சினிமா மற்றும் பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையளிக்கும் நேயர்களுக்கு பரிசுகள் உண்டு.
    "அன்பே சிவம்.

  8. #47
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    check here for deepavali news on vijay TV


    http://www.hindu.com/fr/2008/10/24/s...2450490400.htm
    "அன்பே சிவம்.

  9. #48
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    check here for deepavali news on makkal TV


    http://www.hindu.com/fr/2008/10/24/s...2450580200.htm
    "அன்பே சிவம்.

  10. #49
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    check here for deepavali news on kalaignar TV TV

    http://www.hindu.com/fr/2008/10/24/s...2450510400.htm
    "அன்பே சிவம்.

  11. #50
    Senior Member Devoted Hubber gta129's Avatar
    Join Date
    Aug 2005
    Location
    Canada
    Posts
    370
    Post Thanks / Like
    Thanks You aanaa.
    Take Care .

Page 5 of 63 FirstFirst ... 345671555 ... LastLast

Similar Threads

  1. Musicians,events,anecdotes and tid-bits
    By rajraj in forum Indian Classical Music
    Replies: 223
    Last Post: 16th November 2020, 09:33 AM
  2. IR music bits as ringtone (mp3)
    By dochu in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 8
    Last Post: 17th June 2009, 03:05 PM
  3. Tid Bits Memories of Yesteryears
    By R.Latha in forum Memories of Yesteryears
    Replies: 0
    Last Post: 24th April 2009, 01:18 PM
  4. Tit Bits
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 5
    Last Post: 1st March 2009, 12:13 AM
  5. THAMIZH - THULHIHALH (Tamil Tit-Bits & Episodes)
    By Oldposts in forum Tamil Literature
    Replies: 62
    Last Post: 29th January 2009, 10:02 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •