Page 40 of 63 FirstFirst ... 30383940414250 ... LastLast
Results 391 to 400 of 626

Thread: TV tid bits

  1. #391
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்னத்திரைக்கு வரும் சூப்பர் ஸ்டார் டைரக்டர்

    அண்ணாமலை, பாட்ஷா என்று ரஜினிக்கு மெகா ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இப்போது சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். இயக்குநர் சிகரம் பாலசந்தரிடம் உதவியாளராக பணியாற்றியவர் சுரேஷ் கிருஷ்ணா. நடிகர் கமல்ஹாசன் நடித்த சத்யா படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் கிருஷ்ணா தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்திய ஆகிய மொழிகளில் படம் இயக்கியுள்ளார். ரஜினியின் மெகாஹிட் படங்களான அண்ணாமலை, வீரா, பாட்ஷா போன்ற படங்களையும், கமல்ஹாசனின் ஆளவந்தான் போன்ற படங்களையும் இயக்கினார். தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ் ஆகியோரையும் வைத்து நிறைய படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக தமிழில் இளைஞன் படத்தை இயக்கினார். இந்நிலையில் வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைத்ததும், சின்னத்திரையில் களம் இறங்க முடிவெடுத்து இருக்கிறார். விஜய் டி.வியில் ஆஹா என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்ததொடரின் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா தான்.

    நன்றி: தினகரன்
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #392
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    விஜய் டி.வி விருதுகள் 2012


    விஜய் டி.வி சார்பில் ஆண்டு தோறும் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
    இதன்படி 2011-ம் ஆண்டுக்கான விருதுக்குரிய நட்சத்திரங்கள் மற்றும் படங்களை ரசிகர்கள் தெரிவு செய்தனர்.


    இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யூகிசேது, நடிகைகள் நதியா, லிசி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் ஆகியோர் நடுவர்களாக இருந்தார்கள்.

    143 படங்களில் இருந்து 34 விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்டார்கள்.
    விருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.

    சிறந்த நடிகர்: விக்ரம்.
    சிறந்த நடிகை: அஞ்சலி.
    சிறந்த திரைப்படம்: எங்கேயும் எப்போதும்.
    சிறந்த நகைச்சுவை நடிகர்: சந்தானம்.
    சிறந்த நகைச்சுவை நடிகை: கோவை சரளா.
    சிறந்த இயக்குனர்: வெற்றி மாறன்.
    சிறந்த இசை அமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ்
    சிறந்த பாடல் ஆசிரியர்: வைரமுத்து.

    சிறந்த வில்லன் : அஜீத்
    சிறந்த பொழுதுபோக்கு நடிகர் : தனுஷ்


    பிடித்த நடிகை: அனுஷ்கா.

    பிடித்த படம்: கோ.
    செவாலியே சிவாஜி கணேசன் விருது: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
    விழாவில் கமலின் விஸ்வரூபம் படம் டிரெய்லர் வெளியிடப்பட்டது. மேடையில் தனுஷ், அஞ்சலி, ஸ்ரேயா, வேதிகா ஆகியோர் நடனம் ஆடினார்கள்.
    Last edited by aanaa; 23rd June 2012 at 05:51 AM.
    "அன்பே சிவம்.

  4. #393
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கன்னட 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில்' ரூ. 1 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி! வியாழக்கிழமை,



    கன்னட டிவி சேனலில் ஒன்றின் கோடியாதிபதி நிகழ்ச்சியில் ('நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி') பங்கேற்ற நபர் ஒருவர் அனைத்து கேள்விகளுக்கு சரியான பதிலைக் கூறி ஒரு கோடி ரூபாய் பரிசினை தட்டிச் சென்றுள்ளார்.
    தமிழ்நாட்டில் விஜய் டிவியில் சூர்யா நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியைப் போல கர்நாடகாவில் ஸ்வர்ணா டிவி சேனல் ஒன்றில் நடிகர் புனித் ராஜ்குமார் கோடியாதிபதி நிகழ்ச்சி நடத்துகிறார். இது 60 எபிசோடுகளைத் தாண்டி வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது.
    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராய்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாம்பண்ணா என்ற நபர் அனைத்து கேள்விகளுக்கு சரியான பதிலைக்கூறி ஒரு கோடி பரிசினை பெற்றுள்ளார். இந்த தகவலை சுவர்னா தொலைக்காட்சி நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர்.
    இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில் ரூ. 25 லட்சத்திற்கும் மேல் யாரும் பரிசுத் தொகையினை வென்றதில்லை. இவர்தான் முதன் முறையாக ஒரு கோடி ரூபாய் பரிசினை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    "அன்பே சிவம்.

  5. #394
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சீரியலுக்குத்தான் முக்கியத்துவம்! புவனேஸ்வரி


    நான் சினிமாவை விட சீரியலுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன், என்று நடிகை புவனேஸ்வரி கூறியுள்ளார். சின்னத்திரை சீரியல், சினிமா, என்று சுற்றி வரும் நடிகை புவனேஸ்வரி, நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சின்னத்திரையில் வாழ்வே மாயம் என்ற சீரியலில் களம் இறங்கியுள்ளார்.


    இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், சவுபர்ணிகா சீரியல் தொடங்கி வாழ்வே மாயம் வரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்து விட்டேன். பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்திருக்கிறேன். என் வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை சந்தித்து, இப்போது மீண்டும் சீரியல் பயணத்தை தொடங்கியிருக்கிறேன். சினிமாவை விட சீரியலுக்குத்தான் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பேன். எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரக்கூடிய கதாபாத்திரங்கள் அங்குதான் அமைகின்றன. வில்லி காதாபாத்திரம் தானாக அமைகிறது. இருந்தாலும் அது எனக்கு பிடித்திருக்கிறது. எனக்கு அரசியல் வாழ்க்கை தானாக அமைந்து விட்டது. நடிகையானதை நினைத்து ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. ஆனால் திருமணமாகி செட்டில் ஆகி இருக்கலாமோ என்று எப்போதவாது நினைத்துக்கொள்வேன், என்று கூறியுள்ளார்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  6. #395
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஹீரோயினாக பெரிய அளவில் சாதிக்க முடியாது! நீபா


    பெருசு படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நீபா. தொடர்ந்து நாயகியாக வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் திரும்பினார். ஆனாலும் பெரியதிரையில் கிடைக்கும் வாய்ப்புகளை தட்டிக்கழிக்காமல் நடித்து வந்தார். அந்த வகையில் தங்கர்பச்சன் இயக்கிய பள்ளிக்கூடம் படத்தில் சீமானுக்கும், காவலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்து பாராட்டுக்களை பெற்றார். தற்போது உறவுகள் தொடரில் சுவேதாவாக நடித்தவருக்கு பதிலாக இப்போது நீபா நடிக்கிறார். 750 வது எடிசோடுகளை தாண்டி உறவுகள் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் விக்ரம் நடிக்கும் கரிகாலம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாலீர் நீபா.


    இது குறித்து அவர் கூறுகையில், ஹீரோயினாக பெரிய அளவில் சாதிக்க முடியும் என எனக்குத் தோன்றவில்லை. அதனால்தான் சீரியல் பக்கம் கவனத்தை திருப்பினேன். சீரியலில் நடிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. உறவுகள் தொடரில் இன்னும் சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைய இருக்கு. ஆயிரம் எபிசோடுகளை நிச்சயம் தாண்டும். காவலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியா காமெடியில் கலக்கியதைத் தொடர்ந்து, விக்ரமோட கரிகாலன் படத்துலேயும் ஒரு சூப்பர் ரோல் கிடைச்சிருக்கு என்று கூறினார்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  7. #396
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கே.பாலசந்தரின் அமுதா ஒரு ஆச்சர்யக்குறி!


    கே.பாலசந்தரின் சாந்தி நிலையம் நெடும் தொடர், ஜெயா டிவியில் வார நாட்களில் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் நிறைவடையும் கட்டத்திற்கு வந்துவிட்ட நிலையில், தற்போது கே.பாலசந்தர் எழுதி இயக்கும் நெடுந்தொடர் ஒன்று கலைஞர் டிவிக்காக தயாரிக்கப்பட்டு வருகிறது. கே.பாலசந்தரின் ஆஸ்தான நட்சத்திரங்களான கவிதாலயா கிருஷ்ணனும் ரேணுகாவும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இந்தத் தொடர் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை சமீபத்தில் பாலசந்தர் சந்தித்தார். தொடரின் கதையைக் கேட்டறிந்த கருணாநிதி மகிழ்ச்சியடைந்து பாலசந்தரை பாராட்டியதோடு, தொடரின் தலைப்பைப் பற்றிக் கேட்க பாலசந்தர் கமலா ஒரு கேள்விக்குறி என்று கூறியிருக்கிறார். சில வினாடிகள் யோசித்த கருணாநிதி, அமுதா ஒரு ஆச்சர்யக்குறி என்று தலைப்பை மாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். பாலசந்தருக்கும் அந்தத் தலைப்பு மிகவும் பிடித்துவிட மகிழ்ச்சியோடு சம்மதித்து விட்டார்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  8. #397
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சினிமாவில் ஆர்வம் இல்லை! சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா பளீச்!!



    சினிமாவில் நடிக்க நிறைய அழைப்பு வருகிறது; ஆனால் எனக்கு அதில் ஆர்வம் இல்லை என்று சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா கூறியுள்ளார். விஜய் டி.வி.யில் பிரபல தொகுப்பாளியாக இருப்பவர் ரம்யா. இவர் தொகுத்து வழங்கும் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீசன் 2, நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள், ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது. ஏராளமான ரசிகர்கள் ரம்யாவின் தொகுப்பை புகழ்ந்து தள்ளி கடிதம் எழுதி வருகிறார்கள்.


    இது குறித்து ரம்யா அளித்துள்ள பேட்டியில், வைஷ்ணவா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசன் முடித்த பிறகு மாடலிங் செய்து வந்தேன். அப்போதுதான் காம்பயரிங்கில் ஆர்வம் வந்தது. காம்பயரிங் ஒன்றும் சுலபமான வேலை அல்ல. எவ்வளவு பெரிய ஆட்கள் வந்தாலும் எங்களைத்தான் எல்லோரும் கவனிப்பார்கள். காம்பயரிங் செய்யும்போது தமிழில் பேசுவதையே விரும்புகிறேன். சினிமாவில் நடிப்பதற்கு தினமும் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதில் எனக்கு ஆர்வம் சுத்தமாக இல்லை. சினிமாதான் வாழ்க்கையென்று கிளம்பியிருந்தால், இதுவரை நிறைய படங்களில் என்னையும் சராசரி நடிகையாக இந்த உலகம் பார்த்திருக்கும், என்று கூறியுள்ளார்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  9. #398
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    எனக்கு கிளாமர் செட் ஆகாது : மீனாட்சி ஸ்ரீஜா!






    வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாய் வலம் வந்து, பின்னர் வாய்ப்புகள் இல்லாததால் பலர் சின்னத்திரையில் கால்பதித்து முத்திரை பதித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள சினிமாவில் அறிமுகமாகி, கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணா, சகோதரன் சகோதரி, உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீஜா. தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரை பக்கம் சென்றார். மதுரை சீரியல் மூலம் அறிமுகமான அவர் தற்போது சின்னத்திரையில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறி உள்ளார்.


    இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், மதுரை தான் என்னோட முதல் சீரியல். அதிலேயே எனக்கு தமிழக மக்களிடம் நல்ல அறிமுகம் கிடைச்சது. இப்போது முந்தானை முடிச்சு, சரவணன் மீனாட்சின்னு எனக்குஏற்ற கதை அமைஞ்சிருக்கு. என்னதான் கதாநாயகியாக நடித்தாலும் வில்லியாக நடிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் என் முகமும், தோற்றமும் பார்ப்பதற்கு ரொம்ப சாந்தமாக இருப்பதால் வில்லி கேரக்டர்கள் எனக்கு கிடைக்கவில்லை. அதேபோல் எனக்கும் கிளாமருக்கும் செட் ஆகாது. வருவாய் கிடைக்கிறது. புகழ் கிடைக்கிறதேன்னு மற்றவங்க முகம் சுளிக்கும் அளவுக்கு நடிக்க மாட்டேன். பிடிக்காத கேரக்டரில் எவ்வளவு கொடுத்தாலும் நடிக்க மாட்டேன், என்று கூறியுள்ளார்.
    "அன்பே சிவம்.

  10. #399
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    உறவுகள்... கொண்டாடிய உறவுகள்..!

    சன் டிவியில் 800 எபிசோடுகளை கடந்த `உறவுகள்' தொடரை தயாரித்த சேன்மீடியா நிறுவனம், அதற்காக சென்னையில் விழா எடுத்தார்கள். தொடரில் நடித்த நட்சத்திரங்கள் மட்டுமின்றி நட்பு முறையிலான நட்சத்திரங்களும், தொழில் நுட்பக்கலைஞர்களும் கலந்து கொண்டனர். இதில் சேன் மீடியா ஏற்கனவே தயாரித்த அகல்யா, பந்தம் தொடர்களில் நடித்த கலைஞர்களும் கலந்து கொண்டார்கள். மஞ்சரி, ரூபஸ்ரீ, ராஜசேகர், சஞ்சீவ், நளினி, பிரீத்தி, தீபக், கன்யா, பூவிலங்கு மோகன், மனோகரன், அகிலா, வெங்கட், பாவனா, ஸ்ரீகுமார், ராஜ்காந்த், தீபக், அமரசிகாமணி, பிலிசிவம், சாந்தி வில்லியம்ஸ் என எங்கெங்கு திரும்பினாலும் நட்சத்திர முகங்கள்.


    வழக்கமான விழா என்றால் தொடங்கியதும் ஒவ்வொருவராக பேசுவார்கள். அப்பறமாய் விருது கொடுப்பார்கள். அத்தோடு விழா முடிந்து விடை பெற்றுக் கொள்வார்கள்..


    இந்த விழாவில் எல்லாமே மாறுபட்டிருந்தது. நட்சத்திரங்களுக்கு மிïசிகல் சேர் போட்டி நடத்தினார்கள். நாற்காலியை பிடிக்க பெரிய நடிகைகளும் ரவுண்ட் வந்தது கலகலப்பு ஏற்படுத்தியது.


    விழாவுக்கு வந்த நட்சத்திரங்களில் யாருடைய காஸ்ட்ïம் சிறப்பு, என்று ஒரு கேள்வியை கேட்டு, அதற்கு உடனடி நடுவராக நளினியை நியமித்தார்கள். நளினி தேர்ந்தெடுத்தது கவிதா பாரதியை.


    விழா நடந்த தினம் தான் நடிகர் ராஜ்காந்துக்கும் பிறந்த நாள். அதற்காக திடீர் சஸ்பென்சாய் ஒரு பெரிய கேக்கை மேடைக்கு வரச்செய்து, ராஜ்காந்தையும் அழைத்து கேக் வெட்டச் செய்தார்கள். இந்த திடீர் உபசரணையில் மனிதர் சட்டென கண் கலங்கி, அப்புறமாய் இயல்பானார். அவருக்கு கேக் ஊட்டிய பல நட்சத்திரங்கள் அப்படியே முகத்திலும் கொஞ்சம் பூசி கலாட்டா செய்து விட்டுப்போனார்கள்.


    சேன் மீடியா நிறுவனத்தின் முதல் தொடரான `அகல்யா' தொடரில் நடித்த மஞ்சரி சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். இப்போது முத்தாரம் தொடரில் நடித்து வரும் தகவலை சொன்ன மஞ்சரி, `இது குடும்ப உறவுகள். அதனால் தான் முதல் சீரியலில் நடித்த என்னையும் மறக்காமல் அழைத்திருக்கிறார்கள்' என்று நெகிழ்ந்தார்.


    மேடையில் சில குத்தாட்டப் பாடல்களை ஒலிபரப்பி அதற்கு நட்சத்திரங்களை ஆடச் சொன்னார்கள். பாவனா, ஸ்ரீகுமார், ராஜ்காந்த் உள்ளிட்ட சிலர் ஆடினார்கள். ஏற்கனவே `மானாட மயிலாட' என இவர்கள் ஆடியிருந்ததால் ஸ்டெப்களிலும் அசத்தினார்கள்.


    சேன் மீடியாவின் முன்று தொடர்களிலும் நடித்த ஸ்ரீகுமார் இது `என் தாய் வீடு' என்றார். `பந்தம் சீரியல் தான் எனக்கு நட்சத்திர அந்தஸ்தை முதன்முதலில் கொடுத்தது' என்று உருகினார் தீபக். தொடரில் அப்பாவாக நடித்ததில் இன்று அத்தனை இளைய கலைஞர்களும் என்னை அப்பா என்றே அழைப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்' என்று உருகினார் அமரசிகாமணி. `பாதியில் வந்ததால் எங்கே என் கேரக்டர் எப்படி பேசப்படுமோ என பயந்தேன். ஆனால் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டது என் பாக்கியம்' நெகிழ்ந்தார் பாவனா.


    மேடையில் உறவுகள் டைட்டில் பாடல் காட்சியை திரையிட்டு, பாடலை மட்டும் மைக் பிடித்து அட்சர சுத்தமாய் பாடிய பாடகி சுதா, இன்னொரு ஆச்சரியம்.


    சேன் மீடியாவின் தொடர்களை தொடர்ந்து இயக்கி வரும் இயக்குனர்கள் சிவா, ஹரி, பாலாஜியாதவ் மூவரையும் ஒரேநேரத்தில் மேடையேற்றி விருது கொடுத்தது விழாக்கொண்டாட்டத்தின் உச்சம். ஆஸ்தான கதாசிரியர் குமரேசன் விருதுக்காக மேடையேறியபோது அரங்கு அதிர கரகோஷம். படைப்பாளிக்கு மரியாதை!

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #400
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    50 தொடர்களை தயாரித்துவிட்ட ஏ.வி.எம்


    சினிமா தயாரிப்பு நிறுவனம் சின்னத்திரையில் சாதனை படைப்பது சாதாரண விசயமில்லை.
    ஆனால் 175 திரைப்படங்களை இயக்கிய ஏ.வி.எம் நிறுவனம் தென்னிந்திய தொலைக்காட்சிகளில் 50க்கும் மேற்பட்ட தொடர்களை இயக்கி சாதனை படைத்துள்ளது.
    1986 ம் ஆண்டு தூர்தர்சனில் ஒளிபரப்பான ‘ஒரு மனிதனின் கதை' தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
    ரகுவரன், தேவிலலிதா நடித்த அந்த தொடரின் கதை சிவசங்கரியுடையது. ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.
    இதனை தொடர்ந்து நேற்றைய மனிதர்கள், நாணயம், முத்துக்கள், எனக்காகவா ஆகிய குறுந்தொடர்கள் தூர்தர்சனில் ஒளிபரப்பானது.

    சேட்டிலைட் சேனல்களின் வருகைக்குப் பின்னர் சன் தொலைக்காட்சியில் நிம்மதி உங்கள் சாய்ஸ் என தொடங்கிய ஏ.வி.எம், ஆச்சி இண்டர்நேசனல், சொந்தம், கலாட்டா குடும்பம், வாழ்க்கை, என தொடர்ந்தது. பின்னர் சூர்யா, ஜெமினி, பத்துக்கும் மேற்பட்ட தொடர்களை தயாரித்து வெளியிட்டது. கலைஞர் டிவி தொடங்கப்பட்ட பின்னர் வைரநெஞ்சம், வைராக்கியம் என தொடர்கிறது. மா டிவி, ராஜ் டிவியிலும் எ.வி.எம் தொடர்களை தயாரித்து வெளியிட்டுள்ளது.


    கடந்த 20 ஆண்டுகளில் ஏவிஎம் நிறுவனம் 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் 7500 எபிசோடுகள்வரை ஒளிபரப்பாகியுள்ளன என்று அந்த நிறுவனம் பெருமை பொங்க புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
    .

    நன்றி: தினகரன்
    "அன்பே சிவம்.

Page 40 of 63 FirstFirst ... 30383940414250 ... LastLast

Similar Threads

  1. Musicians,events,anecdotes and tid-bits
    By rajraj in forum Indian Classical Music
    Replies: 223
    Last Post: 16th November 2020, 09:33 AM
  2. IR music bits as ringtone (mp3)
    By dochu in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 8
    Last Post: 17th June 2009, 03:05 PM
  3. Tid Bits Memories of Yesteryears
    By R.Latha in forum Memories of Yesteryears
    Replies: 0
    Last Post: 24th April 2009, 01:18 PM
  4. Tit Bits
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 5
    Last Post: 1st March 2009, 12:13 AM
  5. THAMIZH - THULHIHALH (Tamil Tit-Bits & Episodes)
    By Oldposts in forum Tamil Literature
    Replies: 62
    Last Post: 29th January 2009, 10:02 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •