Page 35 of 63 FirstFirst ... 25333435363745 ... LastLast
Results 341 to 350 of 626

Thread: TV tid bits

  1. #341
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சிகரங்களின் சங்கமம்

    பிரபல பின்னணி பாடகி பி.சுசிலா தனது அறக்கட்டளை மூலம் பழம்பெரும் இசைக் கலைஞர்களுக்கு சிறப்பு செய்தார். 3-வது ஆண்டாக இசை விருது வழங்கி வரும் இந்த அறக்கட்டளை மூலம், முதல் ஆண்டில் பாடகி எஸ்.ஜானகியும், இரண்டாவது ஆண்டில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் விருதுகள் பெற்றனர். இந்த ஆண்டுக்கான விருது பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு வழங்கப்பட்டது. ரூ.1 லட்சம் மதிப்பு கொண்டது, இந்த விருது.

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் இதற்கான விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பிரபல பாடகர் பாலமுரளி கிருஷ்ணா வந்திருந்தார். நிகழ்ச்சியில் அவர் பி.சுசிலாவுடன் இணைந்து `தங்கரதம் வந்தது வீதியிலே' என்ற பாடலை பாடி ரசிகர்களின் உற்சாக கரகோஷத்தை பெற்றுக்கொண்டார்.

    இந்த விழாவில் `வாழ்நாள் சாதனையாளர் விருது' பிரபல பாடகர்கள் டி.எம்.சவுந்தர்ராஜனுக்கும், பி.பி.சீனிவாசுக்கும் வழங்கப்பட்டது. தலா ரூ.20 ஆயிரம் மதிப்பு கொண்டது இந்த விருது.

    விழாவின் சிறப்பு அம்சமாக டி.எம்.சவுந்தர்ராஜன் - பி.சுசிலா இருவரும் `நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்' என்ற பாடலை பாடி ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு போனார்கள். தனது பாடல்களில் புகழ் பெற்ற `உன்னைக்காணாத கண்ணல்ல' பாடலை பி.சுசிலா பாடினார். `உன்னை ஒன்று கேட்பேன்' என்ற பி.சுசிலா பாடலை சித்ரா அதேபாவத்துடன் பாடினார். `காதோடுதான் நான் பாடுவேன்' பாடலை படத்தில் பாடிய எல்.ஆர்.ஈஸ்வரியே நிகழ்ச்சியிலும் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் ஹரிகரன், வாணி ஜெயராம், உன்னிமேனன், ஏ.எல்.ராகவன், ஹரீஸ் ராகவேந்தர், மனோ, பி.சுசிலாவின் மருமகள் சந்தியா ஆகியோரும் பாடினார்கள். `சாதகப்பறவைகள்' சங்கர் பாடல்களுக்கு இசை வடிவம் வழங்கினார்.

    இந்த விழாவுக்காக அமெரிக்காவில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ் வந்திருந்தார். மும்பையில் இருந்து ஹரிகரன் வந்தார்.

    விஜய் டி.வி.யில் விரைவில் ஒளிபரப்பாகிறது, இந்த இசை நிகழ்ச்சி.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #342
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெருந்தன்மை



    மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் இசை நிகழ்ச்சி, `பாடி அழைத்தேன்'. திரைப்பட பின்னணி பாடகர்கள் தங்கள் இசைப்பயண அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் நெஞ்சை வருடும் இதமான நிகழ்ச்சி இது.

    இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிர மணியம் கலந்துகொண்டு தன் இசைஅனுபவங்களை பட்டியலிடுகிறார். இதற்காக அவர் கடந்தவாரம் மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்துக்கு வந்திருந்தார். நிகழ்ச்சியின்போது இசை அனுபவங்கள் பலவற்றை உள்ளம் உருக எடுத்துரைத்தார்.

    அதில் ஒன்று:

    பாரதிராஜா இயக்கத்தில் உருவான `காதல் ஓவியம்' படத்துக்காக `பூஜைக்காக...' என்ற பாடலை பாலசுப்பிரமணியம் பாடுவதாக இருந்தார். இந்தப் பாடலை தீபன்சக் கரவர்த்தி `டிராக்' பாடியிருந்தார். பாடல் பதிவு நாளில் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்த பாலசுப்பிரமணியம் இந்த `டிராக்' பாடலைக் கேட்டார். கண்மூடி மெய்யுருக பாடலை ரசித்தவர், இசையமைப்பாளர் இளையராஜாவிடம், "இதுவே அற்புதமாகத்தானே இருக்கிறது. இதையே பயன்படுத்திக் கொள்ளுங்களேன்'' என்று கேட்டுக் கொள்ள, இசைத்தட்டிலும், படத்திலும் தீபன்சக்கரவர்த்தி பாடியதே இடம் பெற்றது.

    `யார் எப்படி பாடியிருந்தால் நமக்கென்ன...நமக்கு ஒரு பாட்டு பாட வாய்ப்பு வருகிறது. பணம் வருகிறது. பாடிவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு போவோமே' என்று பாலசுப்பிரமணியம் நினைக்கவில்லை. இது அவர் பெருந்தன்மை.

    "இந்த நிகழ்ச்சியின் சிறப்புஅம்சமே பாடலின் வரிகள் தெள்ளத்தெளிவாக ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பது தான். அதற்காக இசை நிகழ்ச்சியில் பியானோ மட்டுமே இசைக்கிறோம். இதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ரொம்பவே ரசித்தார். அதோடு காதல், வீரம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்கள் மட்டுமே பாடப்படுகிறது'' என்கிறார், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், இசையமைப்பாளருமான மைக்கேல். இவர் சமீப காலமாக சினிமாவின் பின்னணிப் பாடகராகவும், வளர்ந்து வரும் `வசந்தமுல்லை, இந்தியா' படங்களின் இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார்.

    நிகழ்ச்சியின் ஹைலைட், இதுவரை யாரும் தன்னிடம் கேட்டிராத கேள்விகளை எஸ்.பி.பி.யே கேட்டு அதற்கு பதிலும் சொன்னது தான். பாடல்கள், பதில்கள் என்று நிகழ்ச்சி முழுக்க சுவாரசியம் கூட்டியவரிடம் இருந்து விடைபெற்று அரங்கை விட்டு வெளியே வந்தபோது, அந்த காந்தர்வக் குரல் இசையரங்கைத் தாண்டி நம் காதுகளை ஊடுருவியது. இதோ அந்தப் பாடல்: `வா பொன்மயிலே...நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது...'


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #343
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மீண்டும் புவனேஸ்வரி


    சின்னத்திரையில் நடிகை புவனேஸ்வரி நடிக்காத சீரியல்களே இல்லை என்றிருந்தது ஒரு காலம். போகப்போக சீரியல்களை குறைத்துக்கொண்ட புவனேஸ்வரி, தெலுங்கில் தொடர்களை தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்தார். இடையில் அரசியல் அழைக்க, அதிலும் பிசியானதில் சின்னத்திரைக்கும் அவருக்கும் சிறு இடைவெளி தவிர்க்க முடியாததாகி விட்டது.

    இப்போது இந்த இடைவெளியைக் குறைக்கும்விதத்தில் `பாவத்தின் சம்பளம்' என்ற தொடர் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார், புவனேஸ்வரி. வசந்த் டிவியில் கிறிஸ்துமஸ் தினத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த தொடரில் அவருடன் சேசு, யுவான்சுவாங், ஜெயதேவி, சத்யா உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடிக் கிறார்கள்.

    எப்போதோ நடந்த ஒரு சம்பவத்துக்காக ஒரு அப்பாவி இளம்பெண் மீது சாக்கடையை அள்ளி வீசுகிறது சமுதாயம். தன் மீதான சமூகத்தின் தவறான பார்வையை மாற்ற போராடும் அவளின் போராட்டமே பாவத்தின் சம்பளம்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  5. #344
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ராதிகா, தேவயானிக்கு தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள்


    சென்னை, ஜன. 25: தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. நடிகைகள் ராதிகா, தேவயானி, பழம்பெரும் நடிகர் வி.எஸ். ராகவன் உள்ளிட்டோருக்கு சிறந்த நடிகை-நடிகர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.

    தமிழ்நாடு அரசு வழங்கும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளுக்குரிய தொடர்கள், நடிகர் நடிகையர், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை தேர்வு செய்ய நீதிபதி மு. மருதமுத்து தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.

    தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு 2007ஆம் ஆண்டுக்கான 7 விண்ணப்பங்களும், 2008 ஆம் ஆண்டுக்கான 12 விண்ணப்பங்களும் வரப்பெற்றன. மொத்தம் 19 சின்னத்திரைத் தொடர்களைக் குழு பார்வையிட்டு விருதுக்கு உரியவர்களைத் தேர்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

    அந்தப் பரிந்துரைகளை முதல்வர் கருணாநிதி ஏற்றுக் கொண்டு விருதுக்குரிய தொடர்கள், மற்றும் கலைஞர்களின் பெயர்களை அறிவித்துள்ளார். விவரங்கள் வருமாறு:-

    2007 ஆம் ஆண்டுக்கான விருதுகள்:

    சிறந்த நெடுந்தொடர்

    முதல் பரிசு: கோலங்கள் (விகடன் டெலிவிஸ்டாஸ்) ரூ. 2 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.

    இரண்டாம் பரிசு: லட்சுமி (ஹோம் மூவி மேக்கர்ஸ்) ரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ்.

    சிறந்த சாதனையாளர் விருது: ராதிகா. ரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ்.

    வாழ்நாள் சாதனையாளர்: வி.எஸ். ராகவன். ரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ்.

    சிறந்த நடிகர்கள், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள்:

    சிறந்த கதாநாயகன்: விஜய் ஆதிராஜ் (லட்சுமி). 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த கதாநாயகி: தேவயானி. (கோலங்கள்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த குணச்சித்திர நடிகர்: பிருத்விராஜ். (அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த குணச்சித்திர நடிகை: சத்யபிரியா (கோலங்கள்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த வில்லன் நடிகர்: ராஜ்காந்த் (மேகலா) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த வில்லி நடிகை: நளினி (பந்தம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த குழந்தை நட்சத்திரம்: நிவேதா (அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த இயக்குநர்: சுந்தர் கே. விஜயன் (லட்சுமி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த கதையாசிரியர்: அறிவானந்தம் (அகமும் புறமும்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த திரைக்கதை ஆசிரியர்: முத்துசெல்வம் (மேகலா) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த உரையாடல் ஆசிரியர்: பாஸ்கர் சக்தி (மேகலா) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த ஒளிப்பதிவாளர்: வசீகரன் (அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த படத் தொகுப்பாளர்: ரமேஷ் (அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: ரேகான் (பந்தம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்: (ஆண்) மதி (லட்சுமி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்: (பெண்) நித்யா (பாசம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

    சிறந்த நெடுந்தொடர்

    முதல் பரிசு-ஆனந்தம் (சத்யஜோதி பிலிம்ஸ்) ரூ. 2 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ்.

    இரண்டாம் பரிசு-நம்ம குடும்பம் (எவர் ஸ்மைல் எண்டர்பிரைசஸ்) ரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ்.

    சிறந்த சாதனையாளர் விருது-ஆண்டின் சிறந்த சாதனையாளர் வ.கெüதமன் ரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ்.

    ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர்-ஒய்.ஜி.மகேந்திரா, ரூ. 1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு, சான்றிதழ்.

    சிறந்த நடிகர்கள், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள்.

    சிறந்த கதாநாயகன்-சஞ்சீவ் (திருமதி செல்வம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த கதாநாயகி-சுகன்யா (ஆனந்தம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த குணச்சித்திர நடிகர் மோகன் வி.ராமன் (வைர நெஞ்சம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த குணச்சித்திர நடிகை அனுராதா கிருஷ்ணமூர்த்தி (அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த வில்லன் நடிகர்-சாக்ஷி சிவா (நம்ம குடும்பம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த வில்லி நடிகை- மாளவிகா (அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த குழந்தை நட்சத்திரம்-மோனிகா (ஆனந்தம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த இயக்குநர்-செய்யாறு ரவி (ஆனந்தம்) 3 பவுன் தங்கப் பதக்கம்,
    நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த கதாசிரியர்-குமரன் (திருமதி செல்வம்) 3 பவுன் தங்கப் பதக்கம்,
    நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த திரைக்கதை ஆசிரியர்- அமிர்தராஜ் மற்றும் அமல்ராஜ் (திருமதி செல்வம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த உரையாடல் ஆசிரியர் - லியாகத் அலிகான் (அரசி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த ஒளிப்பதிவாளர் - அசோக்ராஜன் (சிவசக்தி) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த படத் தொகுப்பாளர்-ராஜீ (மேகலா) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த பின்னணி இசையமைப்பாளர்-ஆதித்யன் (சந்தனக்காடு) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) சங்கர் (பந்தம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) அனுராதா (தவம்) 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு, சான்றிதழ்.

    தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் முதல்வர் கருணாநிதி பரிசுகளையும், விருதுகளையும் வழங்குவார். நிகழ்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
    Thanks : Dinamani
    "அன்பே சிவம்.

  6. #345
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    விருதுகள் தந்த அடையாளம்


    தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டபோது விருதுக்குரியவர்கள் மகிழ்ந்தனர். பெறாதவர்கள் அடுத்தமுறை வென்றே ஆக வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டனர்.

    இந்த விருதுப்பட்டியல் சின்னத்திரை தொடர் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரை ரொம்பவே மகிழ்ச்சியில் வைத்திருக்கிறது. அவர் தயாரிப்பில் வந்த `லட்சுமி' தொடர் மட்டும் 4 விருதுகளை அள்ளியதில் தான் அத்தனை சந்தோஷம். சிறந்த நடிகர் விஜய்ஆதிராஜ், சிறந்த இயக்குனர் சுந்தர்கே.விஜயன், சிறந்த பின்னணி குரல் மதி, சிறந்த சீரியலுக்கான இரண்டாம் பரிசு என 4 விருதுகள். இதுபோக இன்னொரு தொடரான `சிவசக்தி' தொடருக்கு ஒளிப்பதிவு செய்த அசோக்ராஜாவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும் ஐந்தாவதாக சேர்ந்து கொண்டதில் இவரது தயாரிப்பு நிறுவனமான `ஹோம் மீடியா' தரமான தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரையும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் இப்போது திருச்செல்வம் இயக்கத்தில் மாதவி என்றொரு சீரியலையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    விருதுகள் அதுவும் மொத்தம் 5 விருதுகள் அள்ளியது பற்றி தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் என்ன சொல்கிறார்?

    "நல்ல படைப்புக்கு அரசின் `விருது மரியாதை' கிடைத்திருக்கிறது என்பது மிகப்பெரிய சந்தோஷம். தரமான படைப்பை ரசிகர்களுக்குத் தரும்போது அது விருதுக்குரியதும் ஆகும் என்ற நம்பிக்கையையும் இந்த விருதுகள் உணர்த்தியிருக்கின்றன. அதோடு இனிவரும் படைப்புக்களை இதைவிடவும் தரமாகத் தரவேண்டும் என்ற உத்வேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.''


    நன்றி: தினதந்தி
    Last edited by aanaa; 6th February 2011 at 11:53 PM.
    "அன்பே சிவம்.

  7. #346
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அடுத்த விருது



    கோலங்கள் தொடரில் அபி கேரக்டரில் வாழ்ந்து காட்டிய தேவயானிக்கு தமிழக அரசு சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருது கொடுத்து சிறப்பித்தது. `விருது' மகிழ்ச்சியில் இருந்தவரிடம் பேசியபோது...

    "பெண் என்பவள் போராட்ட குணம் கொண்டவளாகவும் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் தடைகளை தகர்க்கவும், எதிர்ப்பாளர்களை வெல்லவும் இந்த போராட்ட குணத்தை பயன்படுத்த வேண்டும் என்ற `கோலங்கள்' கதைக்களம் எனக்கு ரொம்பவே பிடித்தது. இந்த கேரக்டர் மூலம் நிறைய பெண்கள் அபி கேரக்டரை தங்கள் ரோல் மாடலாக்கிக் கொண்டார்கள். என்னை பல இடங்களில் சந்திக்கும் பெண்கள் `நீங்கள் நடிக்கும் அபி கேரக்டர் மூலம் தன்னம்பிக்கையை பெற்றுக் கொண்டேன்' என்று சொல்லும்போது இந்த கேரக்டரை உருவாக்கித்தந்த டைரக்டர் திருச்செல்வத்துக்கு மனதார நன்றி சொல்வேன்.''

    "இப்போது நடிக்கும் `கொடி முல்லை' தொடரில் வயதான அன்னக்கொடி கேரக்டரிலும் முத்திரை பதிக்கிறீர்களே? அடுத்த விருதுக்கு குறியா?''

    "கோலங்கள் தொடரில் ஒருகட்டத்துக்கு மேல் அபி தான் என்னை செலுத்தினாள். அன்னக்கொடி கேரக்டரோ ஆரம்பம் முதலே என்னை பாதித்ததில் அதற்குள்ளாக ஐக்கியமாகி விட்டேன். இந்த ஐக்கியமும் விருதானால் மகிழ்ச்சியே.''


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #347
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ்க்கு பாராட்டு விழா
    P.B.srinivas has to be felicitate
    காலத்தால் அழியாத பல பாடல்களை பாடிய பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ்க்கு பாராட்டு விழா நடத்தப்பட இருக்கிறது.

    காலங்களில் அவள் வசந்தம்..., அவள் பறந்து போனாளே..., மயக்கமா கலக்கமா... உள்ளிட்ட காலத்தால் அழியாத பல பாடல்களை பாடியுள்ளார் பி.பி.ஸ்ரீனிவாஸ். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பி.பி.ஸ்ரீனிவாஸ் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இவரை கவுரவிக்கும் வகையில் "எவர் பி.பி.எஸ்" எனும் பெயரில் சென்னை அண்ணா அரங்கத்தில் வருகிற பிப்ரவரி 27ம் தேதி பாராட்டு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரபல பின்னணி பாடகர்கள் பி.சுசிலா, எஸ்.ஜானகி, மனோ, ஹரிஸ் ராகவேந்தர், திப்பு உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வாடா இன்ப்ரா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.


    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  9. #348
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    I wont abuse anyone, claims Radhika

    Posted in 2011 Elections, Cinenews on April 8, 2011 / 0 Comments
    Radhika

    Radhika

    Actress Radhika has said that it’s not her style of campaigning to verbally abuse her political opponents and others. Radhika’s husband and actor Sarath Kumar’s AISMK is part of the AIADMK alliance and is contesting in two seats for the ensuing Assembly elections in the State.








    Though not seen in films quite often, Radhika is hugely popular among the womenfolk in the State, thanks to the continuous soap operas she has been dishing out on a popular regional channel’s prime-time slot for the past few years. She campaigned extensively in support of Sarathkumar for two days.

    During one of her meetings, she said “It has become a common trend for actors and actresses campaigning for political parties to talk in a bad manner about their peers who are on the other side of the fence. It’s not a welcome trend at all and I, for one, would never indulge in such a style of campaigning.

    “I appeal to the people to carefully go through the election manifesto of Amma and to cast their votes in favour of the AIADMK and its allies,” said Radhika.

  10. #349
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    வெள்ளித்திரையில் தனித்தனியே சிலபல *வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் பார்த்திபனும், டைரக்டர் கவுதம் மேனனும் சின்னத்திரைக்காக கைகோர்க்கிறார்கள்.
    இவர்கள் இருவரும் இணையப் போகும் தொடர் ஒரு விறுவிறுப்பான துப்பறியும் தொடராம். இதுபற்றி கவுதம் மேனன் அளித்துள்ள பேட்டியில், வெள்ளித்திரை அனுபவத்தை சின்னத்திரையில் பெற முடியாது என்ற தவறான கருத்*தை தகர்த்தெரியும் வகையில் என்னுடைய திகில் தொடர் இருக்கும். பெரிய திரை அனுபவத்தை தரும் அளவுக்கு பரபரப்பும், புதுமையும் நிறைந்த கச்சிதமான தொடராக அதனை இயக்கவுள்ளேன். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும், என்றார்.

    நடிகர் பார்த்திபன் கூறுகையில், தொலைக்காட்சித் தொடரில் நடிப்பது உண்மைதான். இதுதொடர்பாக ரொம்ப நாளாகவே நானும், கவுதமும் விவாதிச்சிட்டு இருந்தோம். இந்த முயற்சி மிக வித்தியானமாதாகவும், இதுவரை யாரும் செய்யாத முயற்சியாகவும் இருக்கும். ஹாலிவுட் தரத்தில் சின்னத்திரை தொடரை எடுக்கலாம் என்பதை எங்களது சீரியல் நிரூபிக்கும். சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த இயக்குனர்கள் சங்க விழாவின்போதுதான் இதுகுறித்த திட்டம் உருவானது. இந்தத் தொடரை தயாரிப்பவரும் டைரக்டர் கவுதம்*மேனன்தான், என்றார்.

    ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த புதிய த்ரில் தொடருக்கு இசையமைக்கவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.


    நன்றி: தினமலர்
    Last edited by aanaa; 9th April 2011 at 07:11 PM.
    "அன்பே சிவம்.

  11. #350
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சீரியலில் நடிக்கப்போகிறார் விக்ராந்த் மனைவி

    நடிகர் விஜய்யின் சித்தி ஷீலாவின் மகன் நடிகர் விக்ராந்துக்கும், ஒளிப்பதிவாளர் ஹேமசந்தரின் மகள் மானஸாவிற்கும் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு மலையாளத்தில் டி.வி., சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற மானஸா, இப்போது தமிழிலும் சின்னத்திரை தொடர்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். மலையாள சின்னத்திரையை கலக்கி, மலையாள ரசிகர்களின் பாராட்டை பெற்ற நான், விரைவில் தமிழ் ரசிகர்களையும் கவருவேன், என்கிறார்


    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

Page 35 of 63 FirstFirst ... 25333435363745 ... LastLast

Similar Threads

  1. Musicians,events,anecdotes and tid-bits
    By rajraj in forum Indian Classical Music
    Replies: 223
    Last Post: 16th November 2020, 09:33 AM
  2. IR music bits as ringtone (mp3)
    By dochu in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 8
    Last Post: 17th June 2009, 03:05 PM
  3. Tid Bits Memories of Yesteryears
    By R.Latha in forum Memories of Yesteryears
    Replies: 0
    Last Post: 24th April 2009, 01:18 PM
  4. Tit Bits
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 5
    Last Post: 1st March 2009, 12:13 AM
  5. THAMIZH - THULHIHALH (Tamil Tit-Bits & Episodes)
    By Oldposts in forum Tamil Literature
    Replies: 62
    Last Post: 29th January 2009, 10:02 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •