Page 2 of 9 FirstFirst 1234 ... LastLast
Results 11 to 20 of 87

Thread: Nadigavel M. R. Radha

  1. #11
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    நடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு நினைவில் - ஒலிச்சித்திரம்

    http://radiospathy.blogspot.com/2007/12/blog-post.html
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கத்தில் எம்.ஆர்.ராதா பேசியது:

    சினிமா என்பது ரிட்டையர்ட் லைஃப். இதையெல்லாம் நான் விரும்புவதில்லை. சினிமாக்காரர்களை உயர்த்தாதீர்கள். இந்த நேரத்தில் ஒரு விஞ்ஞானியையோ, ஒரு அறிஞரையோ அழைத்திருந்தால் உங்களுக்குப் பயன் தரும் செய்திகளைக் கூறியிருப்பார்கள். இன்று உலகின் மிகப்பெரிய பிரச்சினை. உழைப்பு அதிகம், கூலி மிகவும் குறைவு என்பதாகும். ஆனால், சினிமா உலகம் இதற்கு நேர்மாறானது. உழைப்பு குறைவு, ஊதியம் மிகவும் அதிகம். அதுமட்டுமல்ல ஒரு அலுவலகத்தில் அல்லது ஒரு தொழிலில் ஈடுபடும் போது தவறு செய்தால் தண்டனை தருவார்கள். அல்லது எச்சரிக்கையாவது செய்வார்கள். ஆனால், சினிமாவில் ஒரு காட்சியில் சரியாக நடிக்கா விட்டால் நாற்காலியில் அமரச் செய்து ஃபேன் போட்டு ஆப்பிள் ஜூஸ் போன்றவைகளைக் கொடுத்து அடுத்த காட்சியில் நடிக்க வைப்பார்கள். ஆதலால் தான் சினிமாக்காரர்களை உயர்த்த வேண்டாம் என்று சொல்கிறேன்.
    நாடகத்தின் மூலமாகத்தான் நாட்டுக்கு வேண்டிய நல்ல விஷயங்களை நான் சொன்னேன். சொல்கிறேன். நான் நாட்டிற்கு அகம் போன்றது நாடகம் என்று சொல்கிறவன். வாழ்க்கையில் ஓய்வுபெறும் காலம் என்று ஒன்று உண்டல்லவா? அதைப் போல இப்போது ஓய்வு காலத்தில் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
    http://www.unmaionline.com/20070902/pa-17.html
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  4. #13
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like


    okei I know opinions differ.

    I fail to understand how this person is accepted and appreciated all thro the film industry and the fans....

    while

    ...

    I simply find his EXTRA DECIBALS too tiring and irritating for my ears. I feel my ear bleeds and drums pop out!

    Even otherwise, no big expressions, except a mild voice modudlation with the same puncturing tone and voice.

    Fine... thats my not so valid or valid points.

    I congratulate him for having won fans and titles like 'நடிகவேள்!' despite all these flaws

    I suppose the trend of SHOUTING one's thoughts must have cropped up from him, followed by kaundamani and vadivelu, who I wish had a button to reduce the volume at times!

  5. #14
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    எம்.ஆர்.ராதா பேசுகிறார்
    -----------------------------------------------------


    1971-ம் ஆண்டு மே 1-ந் தேதி, ஏறக்குறைய ஐந்தாண்டு காலம் வெறிச்சோடிக் கிடந்த சென்னை தேனாம்பேட்டை போயஸ் ரோடு வீடு கலியாண வீடு போல் 'கலகல'வென்று காட்சியளிக்கிறது. வெளியே பல கார்கள் நிற்கின்றன. சில கார்கள் வருவதும் போவதுமாயிருக்கின்றன. ஆணும் பெண்ணுமாக மக்கள் அங்கங்கே சிறு சிறு கூட்டமாக நின்று, மாடியைப் பார்ப்பதும், தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்வதுமாக இருக்கிறார்கள். மேலேயும் கீழேயுமாகச் சிலர் வந்து கொண்டும் போய்க் கொண்டுமிருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து நானும் போகிறேன். ராதாவின் குரல் ஒலிக்கிறது

    ''என்னைப் பார்க்கவா இத்தனை பேரு? நான் என்ன, ராஜாஜியைப் போல, பெரியாரைப் போல, காமராஜரைப் போல பெரிய மேதையா? சாதாரண நடிகன்தானே? என்னைப் பார்க்க ஏன் இப்படி விழுந்தடிச்சிக்கினு வர்றீங்க?... சரி, பார்த்தாச்சா?... போங்க... மாலை வேறே கொண்டாந்து இருக்கீங்களா?... ஐயோ, ஐயோ... சரி சரி, போடுங்க... போட்டாச்சா?... போயிட்டு வாங்க!''

    ராதாவின் குரலா இது, இத்தனை சன்னமாயிருக்கிறதே!...

    வியப்பு அடங்கு முன் இன்னொரு குரல் கேட்கிறது:

    ''உங்கள் குரல் முன்னைப் போல...''

    ''அஞ்சி வருஷமாப் பேசாமயிருந்த குரலில்லையா? அப்படித்தான் இருக்கும்; கொஞ்சம் கட்டினாச் சரியாயிடும்!'' என்கிறார் ராதா.

    மேலே செல்கிறேன். ராதா தம் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். ''உங்கள் உறவினர்களோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது; நான் டிஸ்டர்ப் செய்ய வந்து விட்டேனோ?'' என்கிறேன்.

    ''டிஸ்டர்ப் என்ன, டிஸ்டர்ப்? நான் என்ன, பெரிய சயன்டிஸ்ட்டா? விண்வெளி ஆராய்ச்சி சேஞ்சிக்கிட்டு இருக்கேனா? சாதாரண ஆக்டர்! நீங்களெல்லாம் பேசற பேச்சுக்குக் கொஞ்சம் பாலிஷ் கொடுத்து மேடையிலே பேசறவன். அவ்வளவுதான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். ஆக்டர்னா நீங்க ஓவரா நினைச்சிடாதீங்க... ஆ!... தொண்டை கட்டிக்கிச்சி... இப்ப நான் 'ரத்தக் கண்ணீர் ராதா' வாயிட்டேன்... ஏய், காந்தா!... யார் அங்கே...?''

    ராதா சிரிக்கிறார். அப்போது அவர் மகன் வாசு வருகிறார். அவரைப் பார்த்ததும், ''வாசு உங்களை விட நன்றாக நடிக்கிறார் என்று சினிமா ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்களே?'' என்கிறார் டாக்டர்.

    ''அதை நான் ஒத்துக்க முடியாது. டி.வி.எஸ்.ஸை எடுத்துக்குங்க; அவருடைய பையனுங்க அந்த ஸ்தாபனத்தை இப்பப் பிரமாதமா முன்னுக்குக் கொண்டாந்திருக்காங்க. அதை வெச்சி ஆதியிலே அதுக்குக் காரணமாயிருந்த டி.வி.எஸ். திறமையிலே குறைஞ்சவருன்னு சொல்லி விட முடியுமா?'' என்கிறார் ராதா.

    ''அது எப்படிச் சொல்ல முடியும்?'' என்கிறேன் நான்.

    சக பத்திரிகையாளர் ஒருவர், ''உங்கள் மனைவியைக் கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா? அவரை ஒரு படம் எடுத்துக் கொள்கிறேன்'' என்கிறார் வினயத்துடன்.

    ''என் மனைவியை எதுக்குக் கூப்பிடறது? நான் மட்டும் பார்க்கத்தான் அவ இருக்கா; நீங்களும் உங்க பேப்பரைப் படிக்கிறவங்களும் பார்க்க அவயில்லே!'' என்று ராதா 'பட்'டென்று பதிலளிக்கிறார்.

    ''ஜெயில்லே...'' என்று நான் மெல்ல ஆரம்பிக்கிறேன். ராதா குறுக்கிட்டுச் சொல்கிறார்:

    ''எனக்குத் தெரிஞ்ச வரையிலே ரோசமுள்ளவனும் மானமுள்ளவனும் ஜெயில்லே இருக்கான்!... அங்கே வேலை கெடைக்குது, கூலி கிடைக்குது, இட்லி சாம்பார், சாப்பாடு எல்லாம் கெடைக்குது... 'இன்னிக்கு உனக்கு விடுதலைடா'ன்னு ஜெயிலர் சொன்னாக்கூட 'அதுக்குள்ளேயா, இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுப் போறேனே!'ங்கிறான்...


    இப்படி எழுத்தாளர் விந்தன் 'எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள்' என்னும் தனது நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். எம்.ஆர்.ராதா சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வந்தபோது நடந்த நிகழ்ச்சி பற்றிதான் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதன் பின் எம்.ஆர். ராதாவுடன் ஒரு நீண்ட உரையாடலையே அவர் நிகழ்த்தியிருக்கிறார்.

    அந்த நூலிலிருந்து சுவாரசியமான சில பகுதிகள் :


    சிறையிலிருந்தபோது, 'பெரியார் மனம் வைத்தால் சீக்கிரமாக விடுதலையாகி விடலாம்' என்று நீங்கள் நினைத்ததுண்டா?''

    ''இல்லை; நான் யாருடைய தயவிலும், சிபாரிசிலும், கருணையிலும் எப்போதுமே வாழ்ந்தவனுமல்ல; வாழ நினைப்பவனுமல்ல?''

    ''முதல்வர் கருணாநிதியைப் பற்றி...''

    ''ஒரு காலத்தில் அவர் என் கம்பெனி ஆக்டர்; இன்று இந்த மாநிலத்தின் முதலமைச்சர். என் கம்பெனி ஆக்டர் முதலமைச்சராயிருக்கிறார் என்றார் அதிலே எனக்குப் பெருமைதானே?''

    ''சரி, கலை உலகத்துக்கு வருவதற்கு முன்னால் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?''

    ''வீட்டுக்கு அடங்காத பிள்ளையாயிருந்தேன். ஸ்கூலுக்குப் போவதில்லை. ராபர்ட் கிளைவ் மாதிரி துடுக்குத்தனமாக ஏதாவது பேசிக்கிட்டிருக்கிறதே என் பொழுதுபோக்காயிருந்தது.''

    ''அதை விட்டுக் கலை உலகத்துக்கு நீங்கள் வந்தது எப்படி?''

    ''கலை உலகத்துக்கு நானாகவும் போகவில்லை; அதுவாகவும் என்னைத் தேடி வரவில்லை. சூழ்நிலையும் சந்தர்ப்பமுமே என்னையும் கலையையும் ஒன்று சேர்த்தது.''

    ''அது என்ன சூழ்நிலை, சந்தர்ப்பம்?''

    ''வீட்டிலே சோறில்லை; டிராமா கம்பெனியைத் தேடிக்கிட்டுப் போவேன். அப்போ அங்கேதான் நல்ல சோறு கிடைக்கும். சுருக்கமாகச் சொன்னா, பாய்ஸ் கம்பெனி சோறுதான் இன்னிக்குப் பலரைக் கலைஞர்களாக்கியிருக்கிறது. 'பேக்ட்'டை யாரும் சொல்ல மாட்டேங்கிறானுங்க. வசதி வந்ததும் 'ஹிஸ்டரி'யையே மாத்திச் சொல்றானுங்க. 'ராயல் பேமிலி'ங்கிறானுங்க. கலைக்காகவே அவதாரம் எடுத்ததா வேறே அளக்கிறானுங்க. என்ன செய்யறது? உண்மை உறங்குது; பொய் பொன்னாடை போர்த்திக்கிட்டு ஊர்வலம் வருது. என்னைப் பொறுத்தவரை டிராமா கம்பெனி சோறுதான் என்னை 'ஆக்ட'ராக்கியிருக்கிறது. இதுதான் 'பேக்ட்'.

    ''ஒரு கலைஞன் முன்னேற வேண்டுமானால் மற்ற கலைஞர்களை முன்னேற விடாமல் தடுத்தால்தான் முன்னேற முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?''

    ''இல்லை; சரக்கு உள்ளவன் அப்படி நினைக்க மாட்டான்; அந்த வேலையைச் செய்யவும் மாட்டான்.''

    ''கலைஞன் என்பவனுக்கு இலக்கணம் ஏதாவது...''

    ''உண்டு; பஞ்சமாபாதகத்தில் அவன் ஒரு பார்ட்னர்.''

    ''கலைஞன் கலைஞனாக மட்டுமிருந்தால் போதுமா? அவன் தருமோபதேசியாகவும் தத்துவ ஞானியாகவும் கூட இருக்க வேண்டுமா?''

    ''கலைஞன் கலைஞனாகத்தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும். தருமோபதேசம், தத்துவ ஞானமெல்லாம் அவனுக்கு ஏது? இருந்தால் அதெல்லாம் இரவல் சரக்காகத்தான் இருக்கும்.''

    ''உண்மையான கலைஞன் எப்படிப்பட்டவனாகயிருக்க வேண்டும்?''

    ''ஆடியன்ஸஞிக்கு லஞ்சம் கொடுப்பவனாயிருக்கக்கூடாது; அறிவைக் கொடுப்பவனாயிருக்க வேண்டும்.''

    ''நடிகர்களில் சிலர் பிறந்த நாள் கேக் வெட்டுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''

    ''நினைப்பதற்கு என்னயிருக்கிறது? 'கேக்' வெட்றதை ஒரு 'ஜோக்'கா ஆக்கிட்டான் இந்த நாட்டிலே. மேல் நாட்டிலே அப்படியில்லை. அதிலே ஒரு சமதர்மச் சித்தாந்தமே அடங்கியிருக்கிறது. மனைவி மக்களோடு வீட்டு வேலைக்காரர்கள், நண்பர்கள், உறவினர்களையெல்லாம் வரவழைத்துப் பிறந்த நாள் கேக்கை வெட்டி, ஒரு துண்டைத் தன் வாயில் போட்டுக்கிட்டு, மற்ற துண்டுகளை ஏற்றத்தாழ்வைப் பார்க்காம அவன் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்கிறான். ஏன்? தன்னை வந்தடைந்துள்ள புகழ், பொருள் எல்லாவற்றையுமே பிறருடன் பகிர்ந்து கொள்ளத் தான் தயாராயிருப்பதை எடுத்துக் காட்டுவதற்காக. இதுவே கேக் வெட்டுவதன் தாத்பரியம். இதை விட்டுவிட்டுப் பிரஸ் ரிப்போர்ட்டரைக் கூப்பிட்டு 'பர்த்டே' கொண்டாடறவன் உண்மையான கலைஞனல்ல; அசல் வியாபாரி. அப்படித்தான் என்னாலே சொல்ல முடியும்.''

    ''கலைஞனை விளம்பரம் தானாகவே தேடி வர வேண்டுமா? அல்லது விளம்பரத்தைத் தேடி அவன் ஓட வேண்டுமா?''

    ''விளம்பரம் கலைஞனைத் தேடி வந்தது அந்தக் காலம்; கலைஞன் விளம்பரத்தைத் தேடி ஓடறது இந்தக் காலம்.

    ''மேடை நாடகங்களில் நீங்கள் யாரை யாரையெல்லாம் சந்தித்தீர்கள்? அவர்களுக்கும் உங்களுக்குமிடையே இருந்த தொடர்புகள் என்னென்ன?''

    ''மேடை நாடகங்களில் குரங்காட்டம் போட்டவர்களையும், கொள்கையில்லாக் கூத்தாடிகளையும் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கும் எனக்குமிடையே இருந்த ஒரே தொடர்பு 'அரிதாரம்' பூசறதுதான்.''

    ''அதைத் தவிர...?''

    ''வெட்டுப்பாறையில் கோவலன் பாடிக்கொண்டே செத்து விடுவான். 'ஆடிட்டோரிய'த்திலிருந்து 'ஒன்ஸ்மோர்' குரல் வரும்; மாண்டவன் மீண்டும் எழுந்து பாடுவான்!''

    ''இந்த 'ஒன்ஸ்மோர் கலைஞர்'களைத் தவிர...''

    ''பெருமைக்குரிய கலைஞர்கள் சிலரையும் நான் சந்தித்திருக்கிறேன்; அவர்களைப் பற்றிப் பின்னால் சொல்கிறேன்.''

    ''நீண்ட நாள்களாக நீங்கள் திரை உலகத்துக்கு வராமலிருந்தது ஏன்? வந்தாலும் இடையிடையே விட்டுவிட்டுப் போய்விட்டது ஏன்?''

    ''டிராமாங்கிறது எனக்கு 'பெர்மெனென்ட் ஹவுஸ்''; சினிமாங்கிறது 'டெம்பரரி கேம்ப்'. இருந்தாலும் ராஜசேகரன், சத்தியவாணி, சந்தனத் தேவன், பம்பாய் மெயில், சோகாமேளர் போன்ற அந்த நாள் படங்களிலேயே நான் நடித்திருக்கிறேன்!''

    ''சிறை சென்று வந்த பிறகு உங்கள் கருத்தில் ஏதாவது மாற்றம் உண்டா?''

    ''இல்லை; எப்போதும் ஒரே கருத்துத்தான். ஒரு காலத்தில் மக்கள் என்னைக் கல்லால் அடித்தார்கள்; அதே மக்கள் இன்னொரு காலத்தில் மலர் மாலைகளால் என்னை வரவேற்று என் நாடகக் கருத்துக்களையெல்லாம் ஏற்றார்கள். இடையில் மாறுபட்டது காலம்தான்; நானோ, என் கருத்தோ அல்ல.''
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  6. #15
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    SP,
    Please watch the youtube like (rathakanneer) which i provided in this page ..Still you have same opinion ..I am very sorry
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  7. #16
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    I loved the interview which he had given! Amazing clarity in thoughts

    I WISH...IWISH... he had a tolerable voice alone and lil more expressive face.

    I would frame my sentence thus....

    "He is a very revoluntionary thinker!
    sensible thinker! Lovely person probaly... a very different from the tiring normal man out there ...

    but not an actor of my choice "

    I have not seen rathakaneer, for sheer fact, I supp he would die at end, and I probably wont be too keen on watching pathos movies

    Still you have same opinion ..I am very sorry
    oh..... comeon joE! u need not feel SORRY for this !

    Do I feel sorry for all ur opinions ?!? I dont!

    So, u dont take the pain of feeling sorry for my opinion too :P

  8. #17
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha
    I have not seen rathakaneer, for sheer fact, I supp he would die at end, and I probably wont be too keen on watching pathos movies
    One last word for you on this topic

    Raththakaneer was not a 'azhumoonji' or tragedy movie as you think ..Until his death Radha was full of Nakkal and Naiyyandi .
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  9. #18
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    paarka try panren

  10. #19
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Thanks for the interview Joe. Some responses were hilarious
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  11. #20
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,286
    Post Thanks / Like
    Groucho has Raththa Kanneer as one of the best films ever made...

    Quote Originally Posted by Groucho
    Ratha Kanneer: A movie so daring for its time and even more daring for this time. I had never seen the Leprosy subject approached as close as it is in this movie. Dialogues have sparks of Thiravidar Kazhagam, an Atheist organisation its star, M. R. Radha, was involved in. I am still amazed that they allowed this film to come out at all, knowing the conservative minds of the audience of those days.

    *When someone says M.R. Radha is a great actor, please pay attention and watch this movie. Originally a successful play, the film is a vehicle for Radha to express his personal views on sociopolitical situation in Tamil Nadu at its time. I repeat this: it still needs strong guts and balanced conscience to watch this film even today.
    http://rakeshkumar7.tripod.com/id199.html
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

Page 2 of 9 FirstFirst 1234 ... LastLast

Similar Threads

  1. M.R.RADHA a great artist
    By Nakeeran in forum Tamil Films - Classics
    Replies: 24
    Last Post: 14th July 2011, 07:12 AM
  2. Duet Movies/ Radha Mohan / Abhiyum Naanum
    By ajithfederer in forum Tamil Films
    Replies: 67
    Last Post: 12th January 2009, 08:20 PM
  3. Prakash Raj - Radha Mohan - Abiyum Naanum
    By Pras in forum Tamil Films
    Replies: 3
    Last Post: 24th August 2007, 07:58 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •