Page 1 of 3 123 LastLast
Results 1 to 10 of 26

Thread: Z - Tamil

  1. #1
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like

    Z - Tamil

    As if the existing channels are not enough, Zee group is venturing into Tamil. Named as Zee Tamil, this is supposed to hit the small screen on May 1st. On Day 1 itself a new movie (Thiraikku vandhu oru maadhame aana puthham puthiya thiraipadam) "Sila Nerangalil" would be telecast. Vijaya Sarathy (Neengal Ketta Padal) is the chief Programming officer.

    Regards

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like

    Re: Z - Tamil

    Quote Originally Posted by Murali Srinivas
    As if the existing channels are not enough, Zee group is venturing into Tamil. Named as Zee Tamil,
    இன்னொன்றா...??

    இப்பவே 24 மணி நேரம் போதவில்லையே...!!!!.

  4. #3
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    * வடக்கே பிரபலமான ஜீ டிவி தனது வேகத்தை தென்னகத்திலும் காட்டத் தொடங்கி விட்டது. வரும் ஜூன்மாதம் முதல்தேதி முதல் தனது ஒளிபரப்பை தமிழ்நாட்டில் தொடங்கும் இந்த சேனல், இப்போதே புதியபடங்களை வாங்குவதிலும் போட்டியை ஆரம்பித்து விட்டது. சமீபத்தில் ரிலீசாகி ஒடிக்கொண்டிருக்கும் `சில நேரங்களில்' படத்தை மிகப்பெரிய விலை கொடுத்து ஒளிபரப்பு உரிமை வாங்கியிருக்கிறது. புதிய படங்களை வாங்குவதில் போட்டி போடும் இரண்டு முன்னணி சேனல்களையும் தாண்டி அதிக விலைக்கு இந்த டிவி வாங்கியிருப்பது சேனல் வட்டாரத்தில் ஆச்சரிய அலைகளை உற்பத்தி செய்திருக்கிறது.

    * சன் டிவியில் `நீங்கள் கேட்ட பாடல்' நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டிருந்த விஜயசாரதி, இப்போது புதிதாக தொடங்கவிருக்கும் ஜீ டிவிக்கு வந்து விட்டார்.

  5. #4
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    இந்தியாவில் முதன் முறையாக தனியார் செயற்கை கோள் தொலைக்காட்சியைத் தொடங்கிய ஜீ நெட் வொர்க், சமீப காலமாக தென்னகத்திலும் முத்திரை பதித்து வருகிறது. `ஜீ தெலுங்கு', `ஜீ கன்னடம்' ஆகிய சேனல்களைத் தொடர்ந்து தமிழிலும் `ஜீ தமிழ்' என்ற பெயரில் சேவையைத் தொடங்க இருக்கிறது.

    இதன் ஒளிபரப்பு வருகிற ஜுன் 15-ந் தேதி முதல் ஆரம்பமாகிறது. இந்தத் தொலைக்காட்சியில் இயக்குநர் கே.பாலசந்தர், நடிகை குஷ்பு, இயக்குநர் நாகா மற்றும் பிரபு நேபால் ஆகியோர் நெடுந்தொடர்களைத் தயாரிக்க இருக்கிறார்கள்.

    இன்னும் பல பிரபலங்களும் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

  6. #5
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் தமிழில் ஒளிபரப்பைத் தொடங்கவிருக்கும் ஜீ டிவியில், அன்றைய தினமே குஷ்பு நடிக்கும் ருத்ரா சீரியலும் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரை டைரக்டர் செந்தில்நாதன் இயக்குகிறார். இவர் விஜயகாந்த் நடித்த பூந்தோட்டக்காவல்காரன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர்.

    இந்த தொடரின் படப்பிடிப்புக்கு தனது 2 மகள்களையும் குஷ்பு அழைத்து வந்திருந்தார்.

  7. #6
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    AMBIKA COMINGKKA

    வரும் 15-ம்தேதி முதல் தமிழில் தனது ஒளிபரப்பைத் தொடங்கும் ஜீ டிவியில் பெரும்பாலான தொடர்களும் இடம் பிடிக்கின்றன.

    டைக்டர் பிரபு நேபால் தனது நிறுவனத்தின் சார்பில் இயக்கி தயாரிக்கும் `அழகான ராட்சஸி' தொடரும் ஜீ டிவிக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது. இதுவரை சின்னத்திரையில் தலைகாட்டாமல் இருந்த நடிகை அம்பிகாவை இந்த தொடர் மூலம் சின்னத்திரைக்கு அழைத்துவருகிறார், பிரபு நேபால்.

    பிரபு நேபால் இயக்கும் தொடர்களில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கும். இந்தத்தொடரிலும் நடிகை அம்பிகாவுக்கு அப்படியொரு கேரக்டர் என்கிறார்கள்.

  8. #7
    Member Junior Hubber MEDIA ASIA's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Denmark
    Posts
    30
    Post Thanks / Like
    Has this channel started in India??
    Kindly regards
    Pirapaharan Navaratnam
    Webmaster of Media Asia
    http://www.mediaworldasia.dk

  9. #8
    Moderator Diamond Hubber Thirumaran's Avatar
    Join Date
    Nov 2005
    Location
    Chennai
    Posts
    10,222
    Post Thanks / Like
    Yesterday it started :P Aana enga area la innum varala

  10. #9
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    அழகான ராட்சசி



    ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் தொடர். அழகான ராட்சசி. பிரபுநேபால் இயக்கி வரும் இந்த தொடரின் கதைச்சுருக்கம்

    இதோ...கிராமப் பின்னணியில் வளர்ந்த இளம் பெண் சென்னைக்கு வரும் போது எதிர்கொள்ளும் புதிய சூழ்நிலைகளை மையப்படுத்தி இந்த தொடர் செல்கிறது. நன்றாகப் படித்திருந்தாலும் அந்தப்பெண்ணுக்கு புதிய சூழல் எப்படி திருப்பங்களை உண்டாக்குகிறது என்பது தொடரை பார்த்தால் புரியும்.

    பொள்ளாச்சி பகுதிகளில் இந்த தொடரின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

  11. #10
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ருத்ரா



    மனித வாழ்க்கையே ஒரு விடுகதைதான். பல கேள்விகளுக்கு பதில் இருக்கும், சில கேள்விகளுக்கு பதில் இல்லாமல் இருக்கும். இதுதான் ருத்ரா.

    குடும்பப் பெண்கள் வரிசையிலும் அவள் இருப்பாள். கொடுமை கண்டு குமுறும் பெண்கள் மத்தியிலும் அவள் இருப்பாள். மற்றவர்கள் கஷ்டத்திற்காக சட்டம் கற்றவள். தனது கஷ்டத்திற்காக கோர்ட் படி ஏறமுடியவில்லை. அது ஏன்?

    குடும்பத் தெளிவுக்காக போராடுபவள், குடும்பக் குழப்பத்தில் அமிழ்ந்து போகத் தயாராக இருக்கிறாள். அது ஏன்?

    விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை என்ற விபரம் தெரிந்திருந்தும் - கணவனை விட்டுப் பிரியும்படி ருத்ராவுக்கு நடந்ததுதான் என்ன?

    ஜி டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை ருத்ராவை சந்திக்கலாம். `ருத்ரா'வாக நடிகை குஷ்பு நடிக்கிறார்.

    சீனு, ஸ்ரீ, ஏ.ஆர்.எஸ், மனோ, சாய்ராம், சி.ஆர்.சரஸ்வதி ஸ்ரீலட்சுமி, ராஜசேகர், கண்ணன் ஆகியோர் தொடரின் பிற நட்சத்திரங்கள்.

    கதை: குஷ்பு சுந்தர். ஒளிப்பதிவு: எல்.மோகன். திரைக்கதை: கவிபாரதி. வசனம்: கே.நட்ராஜ். டைட்டில் பாடல் இசை: டி.இமான். பாடல்: தபுசங்கர். பாடியவர்: ஷங்கர் மகாதேவன். இயக்கம்: செந்தில்நாதன். பின்னணி இசை: ஏ.அன்புச்செல்வன்.

Page 1 of 3 123 LastLast

Similar Threads

  1. Ongkaara Manthiram as portrayed in Tamil Saivaism of Tamil Nadu - Part 3
    By virarajendra in forum Indian History & Culture
    Replies: 11
    Last Post: 31st May 2016, 10:42 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •