Page 9 of 9 FirstFirst ... 789
Results 81 to 88 of 88

Thread: Pallavan Magal

  1. #81
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    வாதாபி

    தமிழக சரித்திரத்தில் முக்கியமான இடம் பெற்ற வாதாபி நகரம் நம் கண் முன்னே விரிந்து பரந்து இருக்கிறது. பழம் பெருமை வாய்ந்த வாதாபி நகரத்தை சளுக்க சாம்ராஜ்யத்தின் தலைநகராக மாற்றிய பெருமை முதலாம் புலிகேசியையே சாரும். கடம்பர்களை முறியடித்த அம்மாவீரன் தனது சளுக்க சாம்ராஜ்யத்திற்க்காக இழைத்து இழைத்து கட்டிய நகரம் வாதாபி. அவனது காலத்திலும், அவனது தம்பி மங்களேசன் காலத்திலும், அவனது மகன் இரண்டாம் புலிகேசியின் காலத்திலும் ஒப்புயர்வற்ற நகரமாக விளங்கிய வாதாபி இன்று தனது பழம் பெருமையை இழந்து சற்று மங்கிய நிலையில் காட்சியளித்தது. மாமல்ல சக்ரவர்த்தியால் முழுதும் எரிக்கப்பட்ட வாதாபி இந்த 15 வருடத்தில், 12 வருடங்கள் பல்லவ அரசரின் பிரதநிதியாக இருந்த புத்தவர்மன் பெரிதாக ஒன்றும் வாதாபியை புனரமைக்க முயற்சி எடுத்து கொள்ளவில்லை. வேங்கியில் இருந்த புலிகேசியின் புதல்வர்கள் ஐவரும் தம்முள் அரியணை ஏற போட்டியிட்டதில் மிகுந்த காலம் சென்று விட்டது. ஒரு வழியாக தனது அமைச்சரின் உதவியோடும், தாய் மாமன் கங்க மன்னனான துர்விநீதனின் உதவியோடும் சளுக்க மன்னனாக முடி சூட்டிய விக்ரமாதித்தன் செய்த முதல் காரியம் வாதாபியை மீண்டும் அடைவது தான். 3 வருடங்களுக்கு முன் அவனுக்கு ஏதுவாக மூப்படைந்த புத்தவர்மன் உடல் நல குறைவினால் காஞ்சி செல்ல நேரிட்ட போது ஒரு பெரும் படையுடன் வாதாபியை மீண்டும் தனதாக்கிக் கொண்டான் விக்ரமாதித்தன். வாதாபிக்கு திரும்பிய விக்ரமாதித்தன் செய்த முதல் காரியம் மாமல்ல சக்ரவர்த்தியால் நிறுவப்பட்ட ஜயஸ்தம்பத்தை உடைத்தெறிந்தது தான். 3 வருடங்களாக நகரை புனருத்தாரணம் செய்தும் வாதாபி இன்னும் களையிழந்தே தான் காணப்பட்டது.

    நகரை சுற்றிய பெரும் மதில் சுவரும், கோட்டை வாசலில் மீண்டும் நிறுவப்பட்ட கணபதியும் பழைய வாதாபியை நமக்கு மீண்டும் நினைவு படுத்துகிறது. மிக கடுமையான காவலிடையே கோட்டைக்குள் நுழைந்து வெளியேறும் மக்களுடன் நாமும் சற்று நகர் வலம் வருவோம். நகரை ஒட்டி பாயும் மலப்பிரபா நதி கரையோரத்தில் மன்னனின் ஆணைப்படி விரூபாக்ஷருக்கு கோவில் கட்ட முனைப்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அகஸ்திய ஏரியின் கரையில் அமைந்த பூதநாதர் ஆலயத்தில் அர்த்தஜாம பூஜைக்கான மணி அடித்து கொண்டிருந்தது.
    niraive kaanum manam vendum
    iraivaa nee adhai thara vendum

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #82
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    எங்கும் நிசப்தமான அவ்வேளையில் ஒரு பெரிய போர்வையை போர்த்தியவாறு நகரின் மத்தியில் இருக்கும் மாளிகையை நோக்கி செல்லும் கிழவனை நிறுத்திய காவலன், அவன் காட்டிய முத்திரையை கண்டு அவனை மாளிகைக்குள் போக அநுமதித்தான். அந்த அகால நேரத்திலும் ஒரு பீடத்தில் அமர்ந்து எதையோ எழுதி கொண்டிருந்த சளுக்க சாம்ராஜ்யத்தின் போர் மந்திரி தன் முன் வந்த அந்த கிழவனைப் பார்த்து, "மன்னவா, இது என்ன கோலம். தாங்கள் மீண்டும் நகர் சோதனைக்கு மெய்காவலர் கூட இல்லாமல் தனியாகவே கிளம்பி விட்டீர்களா? தாங்களிடம் இந்த விஷ பரிசோதனை வேண்டாம் என பல முறை வேண்டி கொண்டு இருக்கிறேனே. இன்றைய அரசியல் சூழ்நிலையில் எந்த ஒற்றன் எங்கு இருக்கிறான் என்று சொல்லவே முடியாத நிலையில் தாங்கள் இப்படி தனியாக போவது எனக்கு உசிதமானதாக இல்லை."

    இதை கேட்டு பெரிதாக சிரித்த சளுக்கிய மன்னன் சத்யாச்சிரிய விக்ரமாதித்தன் தன் வேஷத்தை கலைத்தவாறே, "ஆச்சார்யரே, தங்கள் எண்ணம் எனக்கு தெரியாததல்ல, இருந்தும் மன்னன் என்ற கடமை எனக்குள்ளது. உளவுப்படையின் ஒற்றர்கள் கொண்டு வரும் செய்திகளை விட நான் இப்படி மாறுவேஷத்தில் நான் மக்களிடையே கலந்து இருக்கும் போது எனக்கு கிடைக்கும் செய்திகள் மிக அதிகம். தஙளுக்கு தெரியாததல்ல ஆச்சார்யரே, மக்கள் மீண்டும் ஒரு போரை தற்போது விரும்பவில்லை. த்ற்போது தான் வாதாபி நகரம் மெதுவாக தன் பொலிவை மீண்டும் பெற்று வருகிறது. ஆகையால் நமது படையின் பெரும் பகுதியை இங்கு எனது மகன் விநயாதித்தன் தலைமையில் விட்டு விட்டு, வேங்கி படைகளுடனும், கங்க மன்னன் பூவிக்ரமன் அளிக்கும் படைகளுடனும் காஞ்சியை நோக்கி நகர போகிறேன். பரமேஸ்வர பல்லவன் ஒரு மகா வீரன், அதே சமயம் ச்ற்று அவசரக்காரன். வாதாபியை அழித்த அந்த பல்லவ நரசிம்மனை பழி வாங்க ஆசைப்படுகிறேன். வடக்கிலும் நமக்கு த்ற்போது ஆபத்து இல்லை. உஜ்ஜைனி இப்போது வேறு எதையும் செய்யும் நிலையில் இல்லை. ஹர்ஷ சக்ரவர்த்தியின் மறைவு அவர்களுக்குள் தாயாதி சண்டையை மூட்டி விட்டது. இதுதான் தெற்கு நோக்கி செல்ல சரியான சமயம். பல்லவ ராஜ்யத்தில் இரன்டாவது முறையாக பஞ்சம் வந்து மக்கள் அதிருப்தியில் இருப்பதாக ஒற்றர்கள் மூலமாக அறிகிறேன். தாங்கள் எனது போர் மந்திரி மட்டுமல்ல, எனது குருவும் கூட. தாங்கல் தான் எனக்கு தகுந்த அறிவுரை கூற வேண்டும் " என்று வணங்கி நின்ற சளுக்க மன்னன் விக்ரமாதித்தனை ஆழ்ந்து நோக்கினார் போர் மந்திரி
    niraive kaanum manam vendum
    iraivaa nee adhai thara vendum

  4. #83
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    பழிக்கு பழி

    மன்னனுக்கும் தனக்கும் சூடான பால் கொண்டு வர சொல்லிவிட்டு, மன்னனை அழைத்து கொண்டு தனது அந்தரங்க அறைக்கு சென்ற ஆச்சார்யர், " இப்படி அமர்ந்து கொள் விக்ரமா" என்றார்

    ஆச்சார்யர் தன்னை விக்ரமா என்று விளித்ததிலிருந்தே, அவர் மன்னன் அமைச்சர் என்ற முறையில் உரையாட போவதில்லை என்று உணர்ந்த விக்ரமாதித்தன், தனது ஆசனத்தில் நன்கு சாய்ந்து அமர்ந்தான்.

    " விக்ரமா, உனக்கு நினைவு இருக்கிறதா, நீயும் உனது சகோதரர்களும் என்னிடம் பாடம் கற்ற நாட்களை. ஐவரில் நடுவனான உன்னை எனக்கு மிகவும் பிடித்த காரணம் உனது உயர்ந்த நோக்கம். சத்தியம் தவறாதவனாக வளர்ந்த உன்னிடம் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் மன்னனாக கூடிய அனைத்து அம்சங்களும் இருந்தன. உன் தந்தையின் காலத்திற்கு பின் உன்னை நான் ஆதரித்த காரணமே உனது சிறந்த குணங்கள் தான். இதனால் உனது சகோதரர்கள் நால்வரின் கோபத்திற்கு ஆளானது உனக்கும் தெரியும். மன்னனான பிறகு என்னை உனது அமைச்சராக சொன்ன போது மறுத்த நான் இப்போது உந்த போர் அமைச்சராக இசைந்தது, இப்போரை நல்ல படியாக நடத்தவே. உனக்கு தெரியாததல்ல, இருந்தும் சில விஷயங்களை உனக்கு நினைவூட்ட ஆசைபடுகிறேன். இன்றைக்கு சற்றே ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன் உனது முப்பாட்டனார் முதலாம் புலிகேசி கடம்பர்களை முறியடித்து இந்த சாளுக்கிய சாம்ராஜ்யத்தை நிறுவினார். வாதாபியை தலைநகராக்கிய அம்மன்னனை தொடர்ந்த உனது பாட்டன் கிர்த்திவர்மன், தனது தந்தை ஸ்தாபித்த ராஜ்யத்தை நிலை நிறுத்த முற்பட்டான். கடம்பர்களை அடியோடு முறியடித்த பிறகு நளவாடியின் நளர்களை ஒடுக்கினான். பிறகு ரேவதித்வீபம் நோக்கி திரும்பிய அவனது கவனம், அத்துறைமுக பட்டிணத்தை
    சளுக்க ராஜ்யத்தில் இணைத்த வேளையில் அவனது முடிவை கொடுத்தது. அப்போது உனது தந்தையும் அவரது சகோதரர்களும் இளம் சிறுவர்கள். இதை பயன்படுத்தி கொண்ட உனது சிறிய பாட்டன் மங்களேசன் ராஜ்யத்தை பறித்து கொண்டான். பதினான்கு ஆண்டுகள் அஜந்தா மலை சாரல்களில் மறைந்திருந்த உனது தந்தை மங்களேசனையும் அவனது மகன் சுந்தரவர்மனையும் போரில் கொன்று மன்னனாக முடி சூட்டி கொண்டான். எரேயன் என்ற தனது பெயரை விட்டு இரண்டாம் புலிகேசியாக முடிசூடிய உனது தந்தையை போல் யாருமே உனது வம்சத்தில் இதுவரை இல்லை. கடம்பர்கள், கங்கர்கள், அலுப்பர்களை வென்றவன். பிறகு கிழக்கு நோக்கி சென்றவன் கோசலர்களை வென்று கலிங்கத்தை அடக்கி வேங்கியை கைபற்றி உனது சிற்றப்பன் விஷ்ணு வர்த்தனனை அதன் மன்னனாக்கினான். உனது தந்தையின் வளர்ச்சியை கண்டு உத்தரபாரத சக்ரவர்த்தியான ஹர்ஷரே படைதலைமை எடுத்து உனது தந்தையுடன் நர்மதை கரையில் பொருதி தோற்று, உடன்படிக்கையில் நர்மதை கரையை தனது ராஜ்யத்தின் எல்லையாக ஒப்பு கொண்டார். இதை கண்ட ஹர்ஷரின் சீன விருந்தினர் வாதாபிக்கு வருகை தந்து அஜந்தா ஓவியங்களை கண்டு மகிழ்ந்தார். உனது தந்தையின் பெருமைகளை கேட்டறிந்த பாரசீக மன்னன் வாதாபிக்கு தூதுவர்களை அனுப்பி மரியாதை செய்தான். இவ்வளவு சீரும் சிறப்பும் வாய்ந்த உனது தந்தை செய்த ஒரே தவறு பல்லவர்களை பகைவர்களாக்கி கொண்டது தான். உனது தந்தையின் வீரத்தை தனது தந்திரத்தால் முறியடித்தான் மகேந்திர பல்லவன்.

    காஞ்சி கோட்டையை வீழ்த்த முடியாத கோபத்தில் வெறும் கையுடன் நாடு திரும்பிய உன் தந்தை தொண்டை மண்டலத்தை சூறையாடினார். ஆடு மாடுகளையும் பெண்களையும் இழுத்து கொண்டு வந்த கும்பலில் வந்தவள் வாதாபிக்கே எமனாக மாறிய சிவகாமி. பல்லவ ராஜ்யத்தின் கண்ணாக இருந்தவளை நாற்சந்தியில் நடனமாட வைத்தார் உன் தந்தை. இதுவும் போதாதென்று வாதாபியின் நடுவில் பல்லவர்களை வென்றதற்கான ஒரு ஜய ஸ்தம்பத்தையும் நிறுவினார்.

    ஆண்டுகள் சில கழிந்தன. பெரும் படையுடன் வந்தான் பல்லவ நரசிமன். இவன் தகப்பனை விட பெரிய வீரன். இவனுக்கு துணையாக இலங்கையின் மானவன்மனும் சேர்ந்து கொண்டான். அஜந்தா சென்று இருந்த மன்னர் திரும்புவதற்குள் வாதாபியை சூழ்ந்து கொண்டது பல்லவர் படை. போரில் மன்னர் வீர மரணம் அடைந்ததும், வாதாபியை தீக்கிரையாக்கி, பழைய ஜய ஸ்தம்பத்தை உடைத்து புதிய ஜய ஸ்தம்பத்தை நிறுத்தி புத்தவர்மனை தனது பிரதிநிதியாக்கி வெற்றியுடன் காஞ்சி திரும்பினான் நரசிம்மன்".

    இவ்வளவு நேரம் ஆச்சார்யர் பேசுவதை கேட்டு கொண்டிருந்த விக்ரமாதித்தன், " பல்லவ படைகள் செய்த அட்டூழியங்களை கேட்டு என் ரத்தம் கொதித்தது ஆச்சார்யரே. வேங்கி நாட்டு படைகளுடன் வந்தவர்களை தடுத்து நிறுத்தியது பின்னால் மறைந்து இருந்த பல்லவர்களின் இரண்டாம் படை. பகைவர்களின் படைகளுக்கு நடுவில் வசமாக மாட்டி கொண்டோம். மன்னர் இறந்த செய்தி கேட்டு படைகளுடன் சரணாகதி அடைந்தான் எனது சகோதரன் சந்திராதித்யன். பல்லவர் தயவில் வாழ பிடிக்காமல் கங்க நாட்டிற்கு சென்றேன். தங்கள் உதவியுடன் மீண்டும் வாதாபியை மீட்டேன். பல்லவனை பழிக்கு பழி வாங்க துடிக்கும் எனது ஆசையை நிறைவேற்ற தாங்கள் தான் உறுதுணை செய்ய வேண்டும் " என்றான்.
    niraive kaanum manam vendum
    iraivaa nee adhai thara vendum

  5. #84
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    யவன தந்திரம்

    தொலை தூரம் ஓடியதால் களைத்திருந்த தனது குதிரையை மேலும் விரட்ட மனமில்லாத பரமேஸ்வர பல்லவன் அதை மெதுவாக செலுத்தி வந்தான். தந்தை தன்னை இங்கு வர சொன்ன காரணம் புரியாமல் ஏதேதோ எண்ணங்களில் மனத்தை ஓட்டிய பல்லவ மன்னனின் கண்களில் தூரத்தில் கம்பிரமான வட வேங்கடமுடையானின் மலை தெரிந்தது. பக்கத்தில் சல சலவென ஓடும் ஸ்வர்ணமுகி நதி அந்த திருமலைநாதனின் பாதங்களையும் காளத்திநாதனின் பாதங்களையும் வருடி தனது பாவங்களை துறந்து கடலில் போய் கலந்தது. இவ்வாறே மனிதர்களும் ஆண்டவனை சரணடைந்து தன பாவங்களை கழுவி மோட்சம் என்னும் கடலில் கலப்பார்கள் போல இருக்கிறது என எண்ணியவாறே வந்தவனின் கண்களில் தென்பட்டது அந்த மண்டபம்.

    மகேந்திரவர்மரால் நாடு முழுவதும் கட்டபட்ட பாரத மண்டபத்தில் ஒன்றான அந்த மண்டபம் கொஞ்சம் சிதிலமான நிலையிலேயே இருந்தது. அந்த மண்டபத்தை ஒட்டி ஸ்வர்ணமுகி நதி பாய்வதால் யாத்ரிகர்கள் அதை உண்பதற்கும் உறங்குவதற்கும் பயன்படுத்துவார்கள். மாட்டு வண்டிகளும் கட்டை வண்டிகளும் அடிக்கடி வந்து போகும் அந்த மண்டபம் இன்று இரு குதிரைகளை தவிர காலியாக இருந்தன. தனது குதிரையையும் அவற்றோடு சேர்த்து நிறுத்திய பரமேஸ்வரனின் கண்களில் ஆற்றில் நீந்தி விளையாடும் வீரசேனரும் கரியாட்டியும் தென்பட்டனர்.

    அவன் வருவதை கண்டு கரையேறும் தந்தையை கண்ட பல்லவ மன்னன் திடுக்கிட்டான். கம்பீரமாக வலம் வந்த மாமல்ல சக்ரவர்த்தி இப்போது தளர்ந்த நடையுடன் வருவது அவனை வேதனை செய்தது. கண்ணில் நீருடன் அவரது கால்களில் விழுந்தவனை வாரி நெஞ்சுடன் அணைத்துக்கொண்ட மாமல்லர்( ஆம், இனி அவரை அவரது நிஜ பெயரிலேயே அழைப்போம்) அவனது முதுகினை அன்புடன் வருடினார்.

    "தந்தையே, தாங்கள் செய்வது தங்களுக்கே சரியாக படுகிறதா? பெரிய சாம்ராஜ்ய சக்ரவர்த்தி இப்படி காட்டிலும் மேட்டிலும் அலைந்து அல்லல் படலாமா? அரண்மனையில் இருந்து எனக்கு வழி காட்ட வேண்டிய தாங்கள் ஒரு சாதாரண ஒற்றனை போல் அலையை வேண்டிய அவசியம் தான் என்ன. நம்மிடம் இல்லாத ஒற்றர் படையா, அல்லது நம்மிடம் வீரர்களுக்கு பஞ்சமா"? என பொரிந்து கொட்டினான் பல்லவ மன்னன் பரமேஸ்வரன்.

    மகனின் கோபத்தை கண்டு நகைத்த மாமல்லர், " எல்லாம் உனது நன்மைக்குத்தான் பரமேஸ்வரா, நீ அரசேறிய நிலையை சற்று யோசித்து பார். உனது சகோதரனின் அகால மரணத்திற்கு பின் அரச பதவி ஏற்றாய். மீண்டும் ஆட்சி பொறுப்பை நான் ஏற்க வேண்டும் என்று பல திசைகளில் இருந்து குரல்கள் எழும்பின. உன்னை மறைக்கும் ஆலமரமாக இருக்க வேண்டாம் என்று எண்ணி தான் நான் காஞ்சியை விட்டு விலகி இருந்தேன். உனக்கே தெரியும் நான் கடந்த சில ஆண்டுகளாகவே மாறுவேடம் அணிந்து நான்கு திசைகளிலும் அலைந்து திரிந்து வருவதை. இந்த கரியாட்டியின் துணையோடு நான் அறிந்த விஷயங்கள் எண்ணிலடங்கா. மேலும் பல்லவ நாட்டை சுற்றியுள்ள அபாயத்தை நீ நன்கு அறிந்திருப்பாய். கரியாட்டி வாதாபியில் இருந்து கொண்டு வந்த செய்திகளை உன்னிடம் முதலில் தனியாக பேசவே உன்னை இங்கு அழைத்தேன் ".
    niraive kaanum manam vendum
    iraivaa nee adhai thara vendum

  6. #85
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சிவன் ஜி..

    PM பாருங்க !

  7. #86
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu
    சிவன் ஜி..

    PM பாருங்க !
    paathuttu badhil pottutten
    niraive kaanum manam vendum
    iraivaa nee adhai thara vendum

  8. #87
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    மறுபடியும் தொடங்கலாமா :thinking:
    niraive kaanum manam vendum
    iraivaa nee adhai thara vendum

  9. #88
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    மூன்றாண்டுகளாக பல்லவன் மகளை காத்திருக்கவைக்காதீர்கள் மதிப்பிற்குரிய சிவன் அவர்களே!
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

Page 9 of 9 FirstFirst ... 789

Similar Threads

  1. MAGAL SUN TV Serial
    By aanaa in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 12th November 2007, 11:50 AM
  2. Kai vittup pona magaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 10
    Last Post: 7th November 2004, 09:35 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •