Page 3 of 9 FirstFirst 12345 ... LastLast
Results 21 to 30 of 81

Thread: Raj TV

  1. #21
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    "ஆதிபராசக்தி''


    ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் ஆன்மிகத் தொடர் "ஓம் ஆதிபராசக்தி.'' நடிகை சுகன்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இத்தொடரை எழுதி தயாரித்துள்ளார் ஸ்ரீபிரியா. அன்னை ஆதிபராசக்தியின் பெருமைகளை போற்றும் புராண அடிப்படையிலான தொடராகும் இது.

    வெள்ளிதோறும் இரவு 8.01 மணிக்கு ஒளிபரப்பாகிறது, ஆதிபராசக்தி தொடர்.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #22
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பெண்களுக்கான `பரிசு விளையாட்டு'


    ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி `பரிசு பத்தாயிரம்.'

    இல்லத்தரசிகளை மகிழ்விக்கும் இந்த விளையாட்டு நிகழ்ச்சியின் மூலம் இல்லத்தரசிகள் நாள்தோறும் பத்தாயிரம் ரூபாய் வரை வெல்லலாம். சொந்த பணத்தேவைகளுக்காக கணவனின் கையை எதிர்பார்க்கும் புத்திசாலிப் பெண்கள், தங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி தங்கள் செலவுக்குத் தேவையான பணத்தை பரிசாக வெல்லும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சி அளிக்கிறது.
    "அன்பே சிவம்.

  4. #23
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மிக பழமையான இதிகாசமான மகாபாரதம் தமிழ் நேயர்களுக்காக வரும் திங்கட்கிழமை முதல் ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

    ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் எம்.ராஜேந்திரன் இது குறித்து கூறுகையில், மகாபாரதம் தலைமுறைகள் மற்றும் காலத்தைக் கடந்தது. அரசியல், வஞ்சகம், துரோகம் மற்றும் உறவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது எழுதப்பட்ட காலத்திற்கேற்றார் போலவே இன்றைக்கும் பொருந்தக் கூடியதாக அமைந்துள்ளது. இதற்கு முன் தொடர்களில் காணப்படாத பிரம்மாண்டத்தை நேயர்கள் அனுபவித்து மகிழ வேண்டும்' என்றார்.

    திரைப்படத்துறையில் கையாளப்படும் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் சிறப்பான பின்னணி இசையுடன் இத் தொடர் உருவாக் கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன் வேத வியாசரால் எழு தப்பட்ட மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் எந்த வித திரிபும் இன்றி, இதனைப் பார்க்கும் இளம் தலைமுறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இத் தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது.

    திங்கள் முதல் வியாழன் வரை ராஜ் டி.வி.யில் மகாபாரதம் உங்களுக்குபுது அனுபவமாக இருக்கும்.
    "அன்பே சிவம்.

  5. #24
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கோலிவுட் பஸ்



    ராஜ் டி.வி.யில் ஞாயிறுதோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `கோலிவுட் பஸ்'. தமிழ் திரையுலகின் நிகழ்வுகளை ஒரு கண்ணாடியாக பிரதிபலிக்கிறது கோலிவுட் பஸ் நிகழ்ச்சி. புதுப்பட பூஜை, புது ரிலீஸ், இசை வெளியீடு, வசூல் சாதனைகள், படப்பிடிப்பு தளங்கள், பிரபல நட்சத்திரங்களின் பேட்டிகள், புதுப்பட முன்னோட்ட காட்சிகள் மற்றும் பல தகவல்களை தருகிறது இந்த நிகழ்ச்சி.

    "அன்பே சிவம்.

  6. #25
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    மந்திர வாசல்



    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகும் `மந்திரவாசல்' நிகழ்ச்சி திகிலூட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

  7. #26
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    என்ன என்ன வார்த்தைகளோ



    பள்ளி செல்லும் மாணவர்களின் குறிப்பாக 7, 8 மற்றும் 9-வது வகுப்பில் பயிலுவோரின் அறிவுப்பசியைத் தூண்டும் வகையில் ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி, ``என்ன என்ன வார்த்தைகளோ.''

    திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, இந்த நிகழ்ச்சி.

  8. #27
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    தங்க குரல் வேட்டை



    திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சி, தங்க குரல் வேட்டை. தமிழகம் முழுவதும் உள்ள 15 முதல் 40 வயது வரை உள்ளவர்களில் 96 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

    இதில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ரூ. ஒரு கோடி மதிப்பிலான வீடு பரிசளிக்கப்படுகிறது. மேலும் இருவருக்கு பின்னணி பாடகராகும் வாய்ப்பும் உண்டு.

    பங்கேற்கும் போட்டியாளர்கள் அனைவரும் தமிழக இசை உலக பாடகர்களான பிரசாந்தினி, வினயா, பென்னி கிருஷ்ணகுமார், ஜெயராஜ் கோபால், சத்யன், ராஜலட்சுமி மற்றும் இசை அமைப்பாளர் ரைஹானா போன்றவர்களால் பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    நடுவர்களாக பாடகர் கிரிஷ்; அனுபமா மற்றும் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் பங்கேற்கிறார்கள். திரைத்துறை மற்றும் இசைத்துறை பிரபலங்கள் சிறப்பு நடுவர்களாக பங்கேற்கிறார்கள்.

    இந்த இசை நிகழ்ச்சி 2 விதமான சுற்றுகளை கொண்டது. முதல் சுற்றில் திருச்சி, சேலம், கோவை மற்றும் மதுரையை சேர்ந்த போட்டியாளர்கள் மொத்தம் 48 பேர் பங்கேற்கின்றனர். இரண்டாவது சுற்றில் சென்னை, திருப்பூர், ஈரோடு மற்றும் நெல்லையை சேர்ந்த போட்டியாளர்கள் 48 பேர் பங்கேற்கின்றனர்.

    இந்த 96 போட்டியாளர்களிலிருந்து 40 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இறுதிச் சுற்றில், போட்டியாளர்கள் பல்வேறு திறமை சுற்றுகளுக்கு உட்படுத்தப்பட்டு ஒரே ஒரு தங்க குரலுக்கான போட்டியாளர் தேர்வாகிறார். நிகழ்ச்சி வர்ணனையாளர் நடிகை சுவாதி. தயாரிப்பு: சேடல் வீடியோஸ்.

  9. #28
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகவுள்ள புதிய இசை நிகழ்ச்சி "டாப் சிங்கர்'. இதில் 15 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

    இதில் பங்கேற்கும் அனைத்துப் போட்டியாளர்களும் பாடகர்கள் சத்யன், ஜெயராஜ் கோபால், பென்னி கிருஷ்ணகுமார், பிரசாந்தினி, வினயா, ராஜலட்சுமி மற்றும் இசையமைப்பாளர் ரெஹேனா ஆகியோரால் பல்வேறு சுற்றுத் தேர்வுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

    பாடகர் கிரிஷ், அனுபமா மற்றும் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் ஆகியோர் நடுவர்களாகப் பொறுப்பேற்கிறார்கள். இவர்களுடன் திரைத்துறை மற்றும் இசைத்துறையின் பிரபலங்கள் சிறப்பு நடுவர்களாகப் பங்கேற்கிறார்கள்.

    அனைத்துப் போட்டியாளர்களிலிருந்தும் இறுதியாக 96 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர், அவர்களுள் 40 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். வித்தியாமான, பிரம்மாண்டமான அரங்கில் போட்டி நடைபெறும்.

    இறுதி வரை சிறப்பாகப் பாடி அனைவரையும் கவரும் ஒரு தங்கக் குரலுக்குச் சொந்தக்காரர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவருக்கு இதுவரை தமிழகத்தில் எந்தத் தொலைக்காட்சிச் சேனலும் தராத வகையில் ரூ.1 கோடிக்கான பரிசும் பின்னணிப் பாடகராகும் வாய்ப்பும் வழங்கப்படும்.

    சிட்டாடல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த நிகழ்ச்சியை நடிகை சுவாதி தொகுத்து வழங்குகிறார். போட்டியாளர்களுக்கான தேர்வு நடைபெறும் இடம், ஒளிபரப்பு நேரம் போன்றவை விரைவில் அறிவிக்கப்படும்.
    "அன்பே சிவம்.

  10. #29
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    டாப் சிங்கர்



    சிறந்த குரல் தேடலுக்கான நிகழ்ச்சி டாப் சிங்கர். இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்களும் முன்னணி பாடகர்களும் நடுவர்களாக அமர்ந்து சிறந்த பாடகரைத் தேர்ந்தெடுக்கின்றனர். பாடும் திறமை படைத்தவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட இந்நிகழ்ச்சி ஒரு வாய்ப்பு. வெற்றி பெறுபவர்க்கு பரிசு காத்திருக்கிறது. திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ராஜ் டிவியில் டாப் சிங்கர் ஒளிபரப்பாகிறது.

    டாப் சிங்கர் நிகழ்ச்சிக்கு மாவட்டவாரியாக பாடகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டியில் கலந்துகொள்கிறார்கள். இந்த தகவலை நம்மிடம் தெரிவித்த நிகழ்ச்சியின் இயக்குனர் அம்பிலி கிருஷ்ணன், போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விதம் பற்றியும் விவரித்தார்.

    அவர் கூறியதாவது:-

    முதல் கட்டமாக சேலம், திருச்சி, மதுரை, கோவை மாவட்டங்களில் இருந்து தேர்வு நடத்தி 48 பேரை தேர்ந்தெடுத்தோம்.அவர்களில் 20 பேர் நடுவர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த கட்ட போட்டிக்கு தயாராக இருக்கிறார்கள். இதையடுத்து சென்னை, திருப்பூர், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பாடும் ஆற்றல் கொண்டவர்கள் 48 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் 20 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களின் இந்த இண்டாம் கட்ட பரிசீலனை முடிந்ததும் இறுதிக்கட்டத்தேர்வு விறுவிறுப்பாகத் தொடங்கிவிடும்.

    இந்த போட்டியின்நடுவர்களாக இதுவரை பிரபல பாடகர்களுடன் கலைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் சிம்பு, ஸ்ரீகாந்த், பரத், நடிகைகள் மும்தாஜ், பூர்ணிதா ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இறுதிப்போட்டியில் பிரபல இசைமேதை ஒருவர் கலந்து கொள்கிறார்.
    "அன்பே சிவம்.

  11. #30
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மனம் கவர்ந்த மகாபாரதம்

    ராஜ் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மகாபாரதம் தொடர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒரே நேரத்தில் ஈர்த்த தொடராகியிருக்கிறது.

    அஸ்தினாபுரம் மன்னன் சாந்தனுவின் திருமணத்தில் இருந்து தொடங்கிய கதை, இப்போது பாண்டவர்களின் சிறுபிராயத்தை சுவைபட சொல்லத் தொடங்கியிருக்கிறது.

    பாண்டவர்களைப் பிடிக்காத சகுனி தான் கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே பிரிவு ஏற்படுத்த எண்ணுகிறான். இந்த சூழ்ச்சி எதையும் அறியாத துரியோதனன் பாண்டவர்களிடம் உறவுமுறையில் நட்பு பாராட்டவே செய்கிறான். பாண்டவர்களில் மூத்தவர் யுதிஷ்டிரனிடம் (தர்மர்) "அண்ணா... நான் உங்களுக்கு உங்கள் தம்பிகள் போல உடனிருந்து உதவி செய்வேன்'' என்கிறான். சொன்னபடி சிறுசிறு உதவிகள் செய்து அந்தக் குடும்பத்தில் தன்னையும் ஒருவனாக இணைத்துக்கொள்கிறான்.

    ஆனால் இதை கொஞ்சமும் எதிர் பாராத சகுனி, தன் திட்டம் இதனால் பாழாகிவிடும் என்று பயப்படுகிறான். இதனால் அவர்களுக்கிடையே பிரிவை ஏற்படுத்தும் முதல்விதையை விதைக்கிறான். கவுரவர்களுடன் பாண்டவர்களுக்கும் கிருபாச்சாரியார் உபநயனம் செய்விக்கிறார். அப்போது அங்கு செல்லும் சகுனி அங்கிருந்து பாண்டவர்களை அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறான்.இந்த சம்பவம் பாண்டவர்களை எந்தஅளவில் பாதிக்கிறது என்பதை அடுத்து வரும் காட்சிகள் சித்தரிக்கிறது.

    "அன்பே சிவம்.

Page 3 of 9 FirstFirst 12345 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •