Page 176 of 178 FirstFirst ... 76126166174175176177178 LastLast
Results 1,751 to 1,760 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #1751
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தென்றல் ஒரு தாளம் சொன்னது…
    சிந்தும் சங்கீதம் வந்தது
    சந்தங்கள் தண்ணீர் தந்தது மாலைப்பெண்ணே நல்ல பாட் தான் வீட் போய் கேக்கணும்..சிலோன் ரேடியோல கேட்ட நினைவு..துள்ளலாய்த் தான் இருக்கும்..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1752
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    The Bahamas
    Posts
    0
    Post Thanks / Like
    நல்ல பாடல்களின் நீரோட்டம். தொடரட்டும்.

  4. #1753
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    I probably have posted this song more than once before! This one really has an "emotional impact" on me!
    By the way Dasettan (KJY) also thinks that he has an emotional impact whenever he sings or listens to
    this song. He used to make his son Vijay sing the last two saraNams of the song on stage (starting when
    Vijay was 7 years old!) during his concerts all over the world. Unfortunately I could not find a video that
    has the whole song!

    திரைப்படம்: நீ தானா அந்த குயில் (1986)
    வரிகள்: வைரமுத்து
    இசை: இளையராஜா
    பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ் & சங்கீதா



    கண்ணான கண்ணா உன்னை
    என்ன சொல்லி தாலாட்ட
    பார்வதி யாரும் இல்ல
    பாசம் வந்து பாலூட்ட
    உன்ன விட்டு போக மாட்டேன் நானே
    சொல்லாத சொந்தம் இங்கே நீ தானே...
    கண்ணான கண்ணா உன்னை
    என்ன சொல்லி தாலாட்ட
    பார்வதி யாரும் இல்ல
    பாசம் வந்து பாலூட்ட

    கல்யாணம் ஆகவில்ல
    அப்பனின்னு சொன்னாயா
    அப்பனுக்கு பொண்ணு பாக்க
    அப்பன் கூட வந்தாயா
    கல்யாணம் ஆகவில்ல
    அப்பனின்னு சொன்னாயா
    அப்பனுக்கு பொண்ணு பாக்க
    அப்பன் கூட வந்தாயா
    கோபம் ஒரு கண்ணுக்குள்ள
    பாசம் ஒரு கண்ணுக்குள்ள
    சம்பந்தம் இல்லையின்னா
    சாதி சனம் நம்பவில்ல
    கூடிய கூட்டத்துக்கு
    கோமாளியா ஆனேனா
    பூனைய கூட்டிகிட்டு
    பொண்ணு பாக்க போனேனா

    கண்ணான கண்ணா உன்னை
    என்ன சொல்லி தாலாட்ட
    பார்வதி யாரும் இல்ல
    பாசம் வந்து பாலூட்ட
    உன்ன விட்டு போக மாட்டேன் நானே
    சொல்லாத சொந்தம் இங்கே நீ தானே

    சேரசோழ பாண்டியன
    தோண்டிப் பாத்து சொன்னேனே
    உன்னப் பெத்த அப்பனத் தான்
    காணவில்ல செந்தேனே
    சேரசோழ பாண்டியன
    தோண்டிப்பாத்து சொன்னேனே
    உன்னப் பெத்த அப்பனத் தான்
    காணவில்ல செந்தேனே
    தங்கம் உன்ன தத்தெடுத்து
    தரையில முத்தெடுத்து
    பாவி உன்ன காணோமென்னு
    பாசத்துல தத்தளிச்சேன்
    மூடி வச்ச கண்ணுக்குள்ளே
    முத்து முத்தா கண்ணீரு
    நானிருக்க சோகமென்ன
    நண்டுப் பைய்யா நல்லாறு

    அன்பான அப்பா உன்னை
    என்ன சொல்லி பாரட்ட
    பார்வதி தேவை இல்ல
    பையனுக்கு பாலூட்ட
    அனாத போல வந்தேன் நானே
    அப்பாவும் அம்மாவும் யார் நீ தானே

    அன்பான அப்பா உன்ன
    என்ன சொல்லி பாரட்ட
    பார்வதி தேவை இல்ல
    பையனுக்கு பாலூட்ட
    Last edited by raagadevan; 7th August 2018 at 04:29 AM.

  5. Likes yoyisohuni liked this post
  6. #1754
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    காதலன்..காதலி..பின் என்ன ரொமான்ஸ் தான்..

    டபக்குன்னு பார்த்தா..சின்னத் தொட்டி நிறையத் தண்ணீரில் அங்குமிங்கும் குறுகுறுன்னு ஓடும் கோல்ட் ஃபிஷ்ஷோட கலரைக் கொள்ளாம துறுதுறுப்பை மட்டும் கொண்ட கண்கள்..புதிதாய் ஆசீர்வாத் ஆட்டான்னு போட்டிருக்கான்னு வாங்கி அதில் சப்பாத்தி மாவு பிசைந்து டவ்வால போடறச்சே அந்தச் சப்பாத்தி புஸு புஸூன்னு பொங்கறாமாதிரி புஸு புஸு கன்னம்..காற்று அடிக்கடி காதல்கொண்டு மெல்ல மெல்லக் கலைத்துவிடும் கூந்தல்..ஷார்ப் நோஸ்.. முக்கியமாகத் தேவையான இளமை..கொண்டவர் தான் அந்தப் பெண்..ஸ்ருத்திகா..( நிஜத்தில் தேங்காய் சீனிவாசனின் பேத்தியாம்)

    ஸ்ருத்திகா பத்திப் போட்டாச்னு ஒரு குரல் வந்தாலும் வரும்..பக்கத்து இழைக்கு வந்துடுச்சு..

    அவரும் இன்னொரு ஆடவரும் (பேரு..ஹூ கேர்ஸ் ) நடித்த ஆல்பம் படத்தில் லவர்ஸ் ரொமான்ஸ் இருக்கே மேரிகோ பஹூத் பஸந்த் ஹை..என்கு ரொம்ப் பிட்கும்..

    செல்லமாய் செல்லம் என்றாயடி
    அத்தான் என்றே சொன்னாயடி
    யாதுமாகி என்னுள் நின்றாயடியே

    சந்திர தட்டில் சோறூட்டி
    சுந்தரி உன்னைத் தூங்க வைப்பேன்
    உதட்டால் உதட்டைத் துடைத்திடுவேன்

    நட்சத்திரங்கள் வழியாக
    உன்னிடம் நானும் பேசிடுவேன்
    உயிரால் உயிரை அணைத்திடுவேன்




    ஸ்ருத்திகா பற்றி மேலும் தகவல்கள்..ம்ம் வரத்தானே போகுது..பக்கெட்டுடன் வந்தா நல்லா இருக்கும்

  7. #1755
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சிக்கா...

    எனக்கு இந்தப் பாட்டு பிடிக்கும். பை த பை... அந்த ஆடவர் பெயர் ஆர்யன் ராஜேஷ்


  8. Thanks chinnakkannan thanked for this post
  9. #1756
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தத்தளிக்குதே தாமரைப் பூவு ஒண்ணு தாவணியில் கலக்குதே.. நல்ல பாட் எனக்கும் பிடிக்கும்..

  10. #1757
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ரொமாண்டிக் துள்ளல் அண்ட் மெலடின்னு பார்த்தாக்க.. எனக்குப் பிடிச்சது அற்றைத்திங்கள் வானிடம்...சிவப்பதிகாரம் பாட்..அது மாதிரி வேற?

  11. #1758
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like


    எம்.எஸ் வந்து பாட்டுக்குப் பாட்டில் இந்தப்பாட்டு போட்டதிலிருந்து நான் ஃபேன் ஆகி, அதனால் அடுத்த அறையில் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்த என் வீ.காவும் ஈர்க்கப்பட்டது மட்டுமின்றி கற்றுக்கொண்டிருந்த மாணவியும் மெய்ம்மறந்து கேட்க, சுதாரித்த வீ.காவிடம் குட்டும் வாங்கினாள்.. நல்ல பாட்.. பட் நான் படம் பார்த்த போது ஓட்டிவிட்டேன் என நினைக்கிறேன். படம் வந்து பதின் மூன்று வருடங்கள் அப்புறம் பாடல் கேட்கிறேன்..எனக்குப் பிடிச்சுருக்கு..உங்களுக்கு..

    ஆமா கீத்து மோஹன் தாஸ் அதுக்கப்புறம் எங்க போனார்?

    இந்த மாதவனுக்கும் இறுதிச்சுற்று மாதவனுக்கும் தான் எவ்ளோ வித்யாசம்

  12. Likes yoyisohuni liked this post
  13. #1759
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கொஞ்சம் நன்றாக ஊறிய தயிர்வடையைப்போன்ற கன்னம், க்ராஸ் பண்ணலாமா பண்ணினால் அருகில் பிடிக்க வருவானா என்ன செய்யலாம் என்ற யோசனையுடன்பார்க்கும் பூனைக்குட்டியின் துறுதுறு கண்கள், நன்றாக கொஞ்சம் மீடியம் சைஸ் வெள்ளரிப்பிஞ்செடுத்து அதன் தோல் நீக்கி நெட்டுவாக்கில் ஒல்லி ஒல்லியாய் வெட்ட பளீரிடும் விதைகள் போலப் பளீரிடும் பெப்ஸோடெண்ட் பற்கள், வேறு உவமை அகப்படாததால் பழைய அன்றலர்ந்த செண்பகப்பூவைப் போன்ற நாசி, சொய்ங்க் என்று ஒட்டி வாராமல் கொஞ்சம் ஷாம்ப்பூ போட்டுக்காயவைத்தாற்போலச் சிலும்பும் தலைமுடி – இது அன்று இருந்த இன்றைய நஸ்ரியா ஃபகத் ஃபாசில்

    கொஞ்சம் ஆஞ்சனேயர் வடையைப் போன்றத் தட்டைக் கன்னம், கொஞ்சம் ஆழ்கடலில் கிடைக்கும் அமைதியைப் பெற்றிருக்கும் கண்கள், துளியேனும் கவலைப்படாமல் நன்றாக வாரிய கரெண்ட்கட் இருட்டின் நிறத்தில் கூந்தல், தீர்க்கமான மூக்கு, மூன்று வருடமாக ஏறவே ஏறாத வயதும் இளமையும் – இது ஸ்ரீதிவ்யா

    எதற்காக இந்தக் கம்பேரிசன் – பெங்களூர் டேஸ் மலையாளத்திற்கும் பெங்களூர் நாட்கள் தமிழுக்கும் நாயகிகள் இவர்கள்..

    என்னமோ ஸ்ரீதிவ்யாவிற்கு நடிக்க வராது இன்னும்செய்திருக்கலாம் ஒன்றும் சரியில்லை..ஒரிஜினல் நஸ்ரியா அளவுக்குச் செய்யவில்லைஎன முக்கால் வாசி விமர்சனங்கள் வந்திருக்கின்றன..பட் பார்த்தால் ஸ்ரீ திவ்யா ஒன்றும் அவ்வளவு மோசமில்லை.. நன்றாகவே செய்திருக்கிறார்..

    என்ன முதலில் மலையாள பெங்களூர் டேஸ் வந்துவிட்டது.அதனால் தான்..

    மலையாளத்தில் பார்த்த போது சில விஷயங்கள் புரியவே இல்லை. என்ன பேஸிக் விஷயமான இவர்கள் கஸின்ஸ்..மூவரும் ஒன்று விட்ட சகோதர சகோதரி என்பதே எனக்குப் புரியாமல் இருந்தது..பட் இருந்தும் விஷூவலில் மிக மிக ஈர்த்திருந்தது படம்..தட்டூ நித்யா மேனன் இறுதியில் வரும் இரு நிமிடங்கள்..

    தமிழ் பெங்களூர் நாட்களும் நேற்று கொஞ்சம் தயங்கிய வண்ணம் தான்பார்த்து முடித்தேன்..அப்படியொன்றும் மோசமில்லை.. தவிர மலையாளம்பார்க்காமல் த்மிழில் பார்த்தால் வியக்கத் தான் வைக்கும்..

    எவ்ளோ ஆக்டர்ஸ் ஆக்ட்ரஸஸ் ஸ்ரீதிவ்யா,(ம…நஸ்ரியா) (இருவரிடமும் பொங்கி வழியும் இளமை) ஆர்யா (மலையாளத்தில் துலகர் சல்மான்) பாபி சிம்ஹா, ராணா(ஃபஹத் பாசில் ) லஷ்மி ராய், சமந்தா( நித்யா மேனன்) ப்ரகாஷ் ராஜ் ராதிகா, ஸ்ரீதிவ்யாவின் அம்மா அப்பா எல்லாமே சரியான தேர்வுகளே..

    அதிலும்.. ஃபஹத் பாசில் ரோல் (முன்னால் ஃபீமேல் கோட்டய வில்லனாய்ப் பார்த்தது) இதில் இறுகிய கணவனாக நன்றாகவே மலையாளத்தில் செய்திருந்ததை – ராணா (பாகுபலி பல்லாள தேவன்) ஃப்பூ என ஊதித் தள்ளியிருக்கிறார்.. பேண்ட் ஷர்ட் க்ளாஸஸில் தெரிகின்ற கம்பீரம், மெல்ல மாட்டுவண்டி போலக் கார் ஓட்டுவதிலாகட்டும், பின் இறுதியில் சீறிப்பாய்ந்து வேகமெடுக்கும் காட்சியிலாகட்டும் சமந்தாவுடன் வ்ரும் இரு நிமிடமாகட்டும் நன்றாகவே செய்திருக்கிறார் மனிதர்..(த்ரிஷா ரினிவல் பண்ணுவதைப்பற்றி யோசிப்பது நல்லது!)

    என்ன தான் அம்மா செய்த வெங்காய சாம்பார் வாசனை சுவையில் அதிகமாகத் தான் இருக்கும்.. அதே ரெஸிப்பி வைத்து வீட்டில் மனைவி வைத்தால் அந்த் அளவு வராது தான்.. ஏனெனில் அது ரீமேக்.. பட் அதற்காக மோசம் என்றெல்லாம் சொல்லக் கூடாது..(சொல்லவும் முடியாது வெ.சா பொறுத்தவரை என்பது வேறு விஷயம்)

    அது போலவே பெங்களூர் நாட்கள்.. நன்றாகவே இருக்கிறது..தைரியமாகப் பார்க்கலாம்.

    பார்வதி மேனனை விட்டு விட்டேன்.. வெகு அழகிய நடிப்பு..அவர் வரும் பாட்டு எனக்குப் பிடித்திருந்தது..உங்களுக்கு..


  14. #1760
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    பாடல்: ஞாபகம் இல்லையோ... (Solo)
    படம்: மலர்களே மலருங்கள் (1980)
    வரிகள்/இசை: கங்கை அமரன்
    பாடகர்: கே.ஜே.யேசுதாஸ்





    ஞாபகம் இல்லையோ
    ஞாபகம் இல்லையோ கண்ணே
    ஞாபகம் இல்லையோ
    பல பொன் மாலைகள் போனது
    அதில் உன் ஆசையில்
    என் மனம் பாடும் பாடல்
    ஞாபகம் இல்லையோ கண்ணே
    ஞாபகம் இல்லையோ

    பாடுவது உனை பார்த்தாடும் நெஞ்சம்
    பார்வைகளில் பல பாவங்கள் கொஞ்சும்
    ஓடும் நீரானதே எண்ணமே
    ஆ ஆ ஆஆ...
    ஓடும் நீரானதே எண்ணமே
    இசை தேவன் சன்னிதி
    அதில் காணும் நிம்மதி
    தினம் தேடித் தேடி பாடும் ஏழை மனம்

    ஞாபகம் இல்லையோ கண்ணே
    ஞாபகம் இல்லையோ

    வைகரையில் பனி தான் மூடும் நேரம்
    வைகை நதிக் கரை பூஞ்சோலை ஓரம்
    வந்து போராடுதே என் மனம்
    ஆ ஆ ஆஆ...
    வந்து போராடுதே என் மனம்
    உனைக் காண நாளெலாம் பல வந்து போனது
    உறங்காத கண்கள் உன்னைத் தேடியது

    ஞாபகம் இல்லையோ கண்ணே
    ஞாபகம் இல்லையோ
    பல பொன் மாலைகள் போனது
    அதில் உன் ஆசையில்
    என் மனம் பாடும் பாடல்
    ஞாபகம் இல்லையோ கண்ணே
    ஞாபகம் இல்லையோ கண்ணே
    _______________________


    Disclaimer: I probably have posted this song on earlier occasion(s)!

  15. Likes chinnakkannan liked this post

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •