Page 151 of 178 FirstFirst ... 51101141149150151152153161 ... LastLast
Results 1,501 to 1,510 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #1501
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    uma, loved ur share of musical bliss. banco sabadell. Human emotions are priceless.

  2. Likes Russellhaj liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1502
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    *
    அவன் அழகன்..அப்போ அவள் அழகியா இருக்கணுமே..யெஸ்;..அப்புறம் லவ்.? யெஸ் அப்ப டூயட்டா சொல்லப் போறீங்க..ஆமா..ஆனா இது வேற டைப்ப்..

    அவனுக்கு நிறையப் படிக்கணும் அஃதாவது ஐஏஎஸ் படித்து பாஸ் பண்ண வேண்டும்கறது தான் லட்சியமே..எக்ஸாமிற்காக நகரத்துக்குப் போறதுக்கு முன்னால லவ்வரப் பாத்துட்டுப் போலாமா ந்னு மனசு சின்னதா ப்ராண்டறது..

    சரின்னு போய்ப் பாக்கறான்..அவ இருக்கா வீட்டுல..ஸர்ப்ரைஸ்..கூட யாருமே இல்லை..வேறென்ன..காதலரிருவர் கருத்தொருமித்து ஆதரவு பெற்ற இன்பம் வாழ்வில் இனிக்கத் தான் செய்யும்

    ..பட்.. டச்சிங்கே போதும்னு அவனும் அவளும்..ப்ளஸ் ரெண்டு பேர் மனசுலயும் ஓ காட்.. இந்த கடிகாரத்த நிறுத்திடேன்.. நான் இவன்கூடவே இருப்பேன்ல இன்னும் கொஞ்ச நேரம்.. நு அவ க்ளாக்கப் பாக்கறா..அவனுக்கும் தான்..பட் என்ன சிரிச்சுப் பேசி சாப்பிட்டுட்டு அப்ப்ப்புறம் கொஞ்சம் கொஞ்சலாமா..ம்ம்ம்ம்ஹீம்..உதறி எழுந்துட்டு ஓடியேபோறான் புள்ளையாண்டான்..படிக்கணுமே..

    படிக்கையிலும் அந்த பாழாப் போன பெளர்ணமி நிலா முகம் டபக்குனு கண்ணு முன்னால வர,பக்கெட் வாட்டர எடுத்து தலையில ஊத்திக்கறான்..ஒரு வழியா எக்ஸாம் முடிச்சு ரிஸல்ட் வந்த வுடனே அவளுக்கு ஃபோன் போட்டா அவ மறுமுனைல.. இந்தாம்மா நான் ஐஏஎஸ்பாஸ்பண்ணிட்டேன்னு அவன் அழ.. நீங்க ஜெயிப்பீங்கன்னு எனக்குத் தெரியும்னு அவ அழ (எல்லா வார்த்தையும்பாட்டுல மூழ்கிவிட)..ம்ம் அச்சோ பாட்டு முடிஞ்சுடுத்தே..

    கொஞ்சம் எசகுபிசகா ஆகியிருக்க வேண்டிய பாட்டு தான்..ஆனா சமாளிச்சு நல்லாவே எடுத்துட்டாங்க..( நரேன் சினேகா) பாக்காம கேட்டா இன்னும் நல்லா இருக்கும்…

    யாராக்கும் லிரிக்ஸ்னு தெரியலை.. மியூசிக் இளைய ராஜா? பள்ளிக் கூடம்..

    இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா
    இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
    இந்த மெளனம் இந்த மெளனம் இப்படியே உறையாதா
    இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா...

    ஞாபகப் பறவை ஓடுகள் உடைந்து வெளியில் தாவிப் பறக்கிறதே
    நீயும் நானும் ஒன்றாய் இருந்த நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே
    ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும் தனிமை என்னை துரத்துகிறதே
    உன்னைக் காணும் நிமிடம் வரைக்கும் உடலே பொம்மையாய்க் கிடக்கிறதே

    இதயம் நொறுங்குகிறதே இதையே விரும்புகிறேன்
    இதுவே போதும் கண்ணே இறப்பேனே பெண்ணே

    ஓஹோ ஆயிரம்காலம் வாழ்ந்திடும் வாழ்க்கை நிமிடத்தில் வாழ்ந்தேனே

    கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும்
    மனிதன் வகுத்த திசையாகும்
    உன்முகம் இருக்கும் திசையே எந்தன்
    கண்கள் பார்க்கும் திசையாகும்

    கோடையும் வாடையும் இலையுதிர்காலமும்
    இயற்கை வகுத்த நெறியாகும்
    உன்னுடன் இருக்கும் காலத்தில் தான்
    எந்தன் நாட்கள் உருவாகும்

    உந்தன் நிழலருகே ஓய்வுகள் எடுத்திடுவேன்
    இதுகாதலில்லை காமமில்லை..

    ஓஹோ தேகத்தைத் தாண்டிய மோகத்தைத் தாண்டிய
    உறவும் உறவும் இது தானோ..

    **

  5. Thanks Russellhaj thanked for this post
    Likes Russellhaj liked this post
  6. #1503
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பாட்டு வீடியோவா இருக்கு..போதாக்குறைக்கு பாடல் வரிகளும் இருக்கு..இருந்தாலும் அதப்பத்தி என்ன சொல்லலாம்..

    மதுரையில் இருந்தாலும் மஸ்கட்டில் இருந்தாலும் அம்பத்தூரில இருந்தாலும் அமெரிக்காவில் இருந்தாலும் பெங்களூர் இருந்தாலும் பெஹல்காமில் இருந்தாலும் மாம்பலத்தில் இருந்தாலும் மலேசியாவில் இருந்தாலும் மழை என்பது ஒன்று உண்டு.. அது சோவென்று பெய்யும் போது டபக்கென மண்ணில் கலந்த வாசம் வந்து ஒரு மகிழ்வைத் தருமே..அந்த மாதிரியான மகிழ்வுணர்வைத் தருகின்ற பாட்டு இது..ரொமான்ஸ் தான்..கொஞ்சம் வித்யாசமான அழகு. பாடலாசிரியர் விவேகா..பாடியோர் ஹரிணி மதுபாலகிருஷ்ணன் மியூசிக் வித்யாசாகர்...




    இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
    இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

    கண்ணை மூடி உன்னை கண்ட அப்பவே அப்பவே
    கை வளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
    ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
    ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

    இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
    இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
    ===
    வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்
    உள்ளச் சேதம் வந்து விட்டால் என்ன செய்வது

    முள்ளை காலில் ஏற்றி கொண்டால் ரத்தம் மட்டும் தான்
    உன்னை நெஞ்சில் ஏற்றி கொண்டேன் நித்தம் யுத்தம் தான்

    சொல்லித் தீரா இன்பம் கண்டு
    எந்தன் நெஞ்சு கூத்தாட
    மின்னல் கண்ட தாழை போல
    உன்னால் நானும் பூத்தாட
    உன்னை கண்டேன் என்னை காணோம்
    என்னை காண உன்னை நானும்
    ===
    இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
    இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
    ===
    எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம்
    இனி உந்தன் கையை பற்றி கொண்டே செல்ல விருப்பம்
    நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்
    நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்

    உன்னை காண நானும் வந்தால்
    சாலை எல்லாம் பூஞ்சோலை
    உன்னை நீங்கி போகும் நேரம்
    சோலை கூட தார் பாலை
    மண்ணுக்குள்ளே வேரை போல
    நெஞ்சுகுள்ளே நீ தான் நீ தான்
    ===
    இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
    இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

    கண்ணுக்குள்ள உன்னை கண்ட அப்பவே அப்பவே
    கை வளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
    ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
    ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே
    =====

  7. Likes Russellhaj liked this post
  8. #1504
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நெகிழியினில் நெஞ்சம் கொண்டே
    உனை விலகிப் போனவள்,
    நெருங்கி வர ஆசை கொண்டு
    உயிர் இளகி நிற்கிறேன்

    புரியலை.. நெகிழின்னா தமிழ்ல ப்ளாஸ்டிக்னு சொல்லுவாங்க..பாட்டை எழுதினது யார்..மதன் கார்க்கி..

    காதலனைப் பிரிஞ்சு போயிட்டா அவ.. சரி..அவளுக்கு கல் நெஞ்சுன்னுன்னு தானே சொல்வோம்..கொஞ்சம் வித்யாசமா ப்ளாஸ்டிக்னு சிந்திச்சிருக்கார்..என்னவோ இந்தப் படத்தில ரெண்டு ரொமாண்டிக் ஸாங்க்ஸ்.. நெஞ்சம் கொள்ளை போகும்..

    முதலில் நெகிழி..


  9. Likes Russellhaj liked this post
  10. #1505
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    காதல்னா என்னய்யா பண்ணும் நம நமங்குமா என்பார் சுஜாதா ஒரு கதையில்.. காதல்னா பாயைப் ப்ராண்டறதுன்னு கே பாலச்சந்தர் காதல் பகடையில் அழகான முதல் எபிஸோட்ல ஒரு குழந்தை மூலமா சொல்வார்..சரி ஈ..காதலுக்கு பல்விதமா டெஃபனிஷன்ஸ்லாம் இருக்கு..ஆனா இந்தக் காதல் எப்படிப்பா வரும்..

    அ..யாரையாவது பார்த்தாலே மனசுக்குள்ள பல்ப் எரியணும், மணியடிக்கணும் என்பார் இயக்குனர் ராதாமோகன் ப்ருத்விராஜின் வாயிலாக.. அப்படிக் காதல் வர்றப்ப என்ன ஆகும்..இதோ இந்தக் கவிதையான பாட்டு எனச் சொல்வதற்கு முன்..

    ஜெயம் ரவி ஸீதா ஜாதா ஆசாமி..அதாவது நேர்படப் பேசு..நேர்பட வாழ்..என நினைத்து வாழ்ந்து பார்த்து அவஸ்தைப் படுபவர்..அவருக்கு நேரெதில் அம்லாபால்.. பரவால்லை லஞ்சம்லாம் கொடுக்கற்து சகஜம்ப்பா வேலை சுளுவா முடியுதுல்ல என இருக்கும் பெண்..இருந்தாலும் குணத்தில் எக்ஸாக்ட்லி ஆப்போஸிட் ஆன ஜெயம் ரவியைப் பிடித்திருக்கிறது. காதல் வருகிறது.எதனால் எனில் “உன்னை மாதிரி என்னால் இருக்க முடியாது..ஆனால் உன்னை மாதிரி இருக்கும் ஒருவரோட வாழ ஆசையாய் இருக்கு” என நேரிடையாய்ச் சொல்ல...

    வேறென்ன.. பாடல் பிறக்கிறது..(இதுவும் எனக்குப் பிடிச்சுருக்கு)


  11. Likes Russellhaj liked this post
  12. #1506
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Vaazhkkai (1949)

    Vaazhkkai was a popular (hit) movie and the songs were also popular. Here is one:

    eNNi eNNi paarkka manam inbam koNdaadudhe.......



    I used to sing this song in my high school years. Now, I sing thinking of my childhood years in Tamilnadu !

    Other songs I liked were 'un kaN unnai yEmaatrinaal' used to tease friends and 'aasai koLLum meesai uLLa aambaLaiya paarthiyaa' !

    The tune for 'eNNi eNNi paarkka manam' is from the Hindi song- 'chup chup khade ho...'.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  13. Likes Shakthiprabha liked this post
  14. #1507
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சைவ சமயக் குரவர் நால்வரில் அப்பர் எனும் திரு நாவுக்கரசர் வேளாண் மரபிலும், சுந்தரமூர்த்தி நாயனார் எனப்படும் நம்பி ஆரூரர் ஆதிசைவ மரபிலும், திருவாதவூரர் எனும் மாணிக்கவாசகர் அமாத்தியர் எனும் மரபிலும், ஞானசம்பந்தர் அந்தணர் மரபிலும் தோன்றியவர்கள். "பாலை"க் கொடுத்து சம்பந்தரையும், "ஓலை" கொடுத்து சுந்தரரையும், "காலை"க் கொடுத்து மணிவாசகரையும் "சூலை" எனும் நோய் கொடுத்து அப்பரையும் இறைவன் ஆண்டு கொண்டான் என்று வரலாறு. அப்பர் ஒருவரே சமண சமயத்தைச் சார்ந்து பின்னர் மீண்டும் சிவனாரின் திருவடி நிழல் தேடி வந்தவர். அதனால்தானோ என்னவோ அவரை இறைவன் சோதனை செய்யப்படும் பக்தர்களின் திலகமாக பரமன் படைத்து விட்டார் என்று தோன்றும்.

    மாணிக்கவாசகர் இறைவனை குருவாகவும், சம்பந்தர் தந்தையாகவும், சுந்தரர் நண்பனாகவும், அப்பர் ஆண்டவனாகவும் ( அதாவது முதலாளியாக ) எண்ணி வந்த காரணத்தாலேயே அப்பரின் வாழவில் பல் இன்னல்கள் ஏற்பட்டு விலகின. அவர் தன்னை வெளிக்காட்டிக் கொண்டு பிரபலம் அடைய விரும்பாத பெருந்தகை. அதனாலேயே பாடலில் கூட "யாதும் சுவடு படாமல் ஐயாறடைகின்றபோது" என்று பாடினார்.

    கையில் உழவாரப் படையுடன் எளிமைக்கும், பக்திக்கும் விளக்கமாய்த் திகழும் அப்பர் பெருமானை வணங்குவோம்


  15. Thanks tfmlover, Shakthiprabha, Russellhaj thanked for this post
    Likes tfmlover, Shakthiprabha, Russellhaj liked this post
  16. #1508
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like

  17. Likes Russellhaj liked this post
  18. #1509
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Parthiban Kanavu (1960)

    Appar ThEvaaram: Munnam Avnudaiya Naamam KEttaaL.....




    A moving rendition by MLV and a matching performance by Kumari Kamala !
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  19. Thanks Russellhaj thanked for this post
    Likes Shakthiprabha, Russellhaj liked this post
  20. #1510
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    பாசமலரே... is quite a sentimental song. Sivaji does such roles with so much ease. Reminds me of மரகத வல்லிக்கு மணக்கோலம்... from அன்புள்ள அப்பா.

  21. Likes Russellhaj, Shakthiprabha liked this post

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •