Page 115 of 178 FirstFirst ... 1565105113114115116117125165 ... LastLast
Results 1,141 to 1,150 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #1141
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    tfm,

    I am sure its this song...cause I dont think its selva (and I know selva)
    also, I was not watching the song entirely with full concentration (as I was in and out of kitchen making bf)
    also, the man who is casting in this, resembles oodangaL sanjay and i think THIS IS THE FACE i saw...
    also, I remmeber precisely all those instruments which was put up to conduct a show for the approaching heroine.
    So this has to be it...thankyou...and I loved the song...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1142
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by tfmlover View Post

    காதல் like chasing வானவில் மாயா மாதிரி
    அழகு காட்டி மறைஞ்சு போகும்
    நெஜமா வொண்ணும் இல்லை
    அதே லுக்கு உன் கண்ணில் தெரியுதுன்னு பையன் சொல்றான்
    Enjoying ur version tfm...welcome to pozhipurai club....loving it...and so damn true, truth blowing right on the face.

    அதுக்கு அந்த பொண்ணு
    நீ மட்டும் என்ன ..பெரிய..
    அந்த ஜால ஐடியா வந்ததே ஒன்கிட்டே இருந்துதான்
    கில்லாடி ராஜா ராஜா ராஜா ..

    This sure is getting enjoyable...lol

  4. #1143
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like
    I was about 14 when I saw this song first time. I was so amazed to see the trees covered with only flowers, not a single leaf. My young heart started to long to see a tree in real life like the one that comes in this song. This was/is happening everytime I happen to hear the song. Sometimes or many times, your heart has the things which can never be explained to make others understand but only by YOU. When I saw the tree for real in the spring of 1993, I had no words to express the joy I've had. I know it is such a simple thing, but gives you a big joy.

    சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
    அம்மம்மா அம்மம்மா என்னைப்போல் கன்னிப்பூ
    இளவேனில் காலம் இளமாலை நேரம்
    இன்பத்தை அள்ளி இரைக்கும்
    சொர்க்கத்தின் அந்தப்புரம் இதுவோ
    சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
    அம்மம்மா அம்மம்மா என்னைப்போல் கன்னிப்பூ

    பூவெல்லாம் மௌன பாஷைகள் பேச
    நான் என்ன சொல்லவோ ஹோ
    நாளெல்லாம் அந்தி நேரத்தில் எந்தன்
    நெஞ்சத்தைக் கிள்ள ஹோ
    ஏதோ ஏதேதோ எண்ணம் கூட
    உள்ளம் என் உள்ளம் ஊஞ்சல் ஆட
    கோடை நாட்களில் காமன் பண்டிகை
    காற்றும் பூவும்தான் காதல்பாட்டு பாடும் வசந்த விஷா

    சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
    அம்மம்மா அம்மம்மா என்னைப்போல் கன்னிப்பூ

    மேகங்கள் புத்தன் கோயில்கள் தேடி
    ஊர்கோலம் செல்ல ஹோ
    ராகங்கள் பட்சிக் கூட்டங்கள் பாடி
    வாழ்த்துக்கள் சொல்ல ஹோ
    இன்பம் கொண்டாடும் மக்கள் இங்கே
    மண்ணில் உண்டான சொர்க்கம் இங்கே
    நூறு நாடுகள் வாழும் மாந்தர்கள்
    கூடும் நாளிலே நேசம் பாசம் யாவும் விளைந்திடுமோ

    சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
    அம்மம்மா அம்மம்மா என்னைப்போல் கன்னிப்பூ

    நூலாடை தொட்டுப் போராடும் காற்றே
    நீ கொஞ்சம் இங்கே நில்
    நான் கூட வண்ணப்பூமாலை சூடும்
    நாள் என்ன நாளோ சொல்
    சின்னப்பெண் தேடும் மன்னன் யாரோ
    கன்னிப்பூ சூடும் கண்ணன் யாரோ
    நீலத்தாமரை நீரைத் தேடுது
    பூவைப் போலவே பூவை நானும் வாடும் பருவமிது

    Last edited by priya32; 4th March 2012 at 06:23 PM.

  5. #1144
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    பொழிப்புரை மன்னி ( மன்னனுக்கு பெண்பால் ) சக்தி வால்க வால்க

    சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
    அதாவது கண்ணுல கலர் காண்டாக்ட் லென்ஸ் போட்டுகிட்டு ஃபிகருங்க போவுது

    அம்மம்மா அம்மம்மா என்னைப்போல் கன்னிப்பூ
    எல்லாருமே பார்க்க டபுள் அம்மம்மா ( அதாங்க பாட்டி ) மாதிரி இருந்தாலும் இன்னும் சின்னப் பொண்ணுங்கதான்

    இளவேனில் காலம் இளமாலை நேரம்
    வேர்த்து ஊத்துற நேரம்.

    இன்பத்தை அள்ளி இரைக்கும் சொர்க்கத்தின் அந்தப்புரம் இதுவோ
    இன்பமா தண்ணியை இறைச்சி குளிக்குற பாத்ரூம் சொர்க்கம் அந்தப்பக்கமா இருக்குதா ?

    பூவெல்லாம் மௌன பாஷைகள் பேச நான் என்ன சொல்லவோ ஹோ
    எல்லாரும் சூட்டுல உதடு காய்ஞ்சு வாயடைச்சி போயி கிடக்குறாங்க.. இதுல நா என்னாத்த பேசுறது ?

    நாளெல்லாம் அந்தி நேரத்தில் எந்தன் நெஞ்சத்தைக் கிள்ள ஹோ
    நாள் முழுக்க டைட் டிரஸ் போட்டதுல மடிப்பு சுருக்கத்துல கிள்ளிடிச்சிப்பா ! அதான் ஹோன்னு கத்த தோணுது

    ஏதோ ஏதேதோ எண்ணம் கூட உள்ளம் என் உள்ளம் ஊஞ்சல் ஆட
    என்னமோ தோணுது.. ஊஞ்சலில் ஆடினா காத்தாவது வருமுன்னு மனசு சொல்லுது

    கோடை நாட்களில் காமன் பண்டிகை காற்றும் பூவும்தான் காதல்பாட்டு பாடும் வசந்த விழா
    அந்தக் காலத்துல நடத்துன மாதிரி இந்திர விழா நடத்துனா பீச்சாங்கரைக்கோ பார்க்குக்கோ போய் பாடிகிட்டாச்சும் இருக்கலாம்.

    Hi Power
    இப்படி எல்லாம் எழுதினா உங்களுக்கு கோபம் வருமா ? வராதா ?
    உங்க பொழிப்புரையை அடுத்த ரெண்டு பாராக்களுக்கு எழுதுங்க பார்க்கலாம்.

  6. #1145
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    I love all those colorful flowrs....followed by another bright flower-radha. priya.

    madhu, kovam varla... ivlo kashta pattu ennai kova padutha try pannathukaaga innoru ilakkiya paadal kku kutti para pozhippurai ...oda varen.

  7. #1146
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by priya32 View Post
    I was about 14 when I saw this song first time. I was so amazed to see the trees covered with only flowers, not a single leaf. My young heart started to long to see a tree in real life like the one that comes in this song. This was/is happening everytime I happen to hear the song. Sometimes or many times, your heart has the things which can never be explained to make others understand but only by YOU. When I saw the tree for real in the spring of 1993, I had no words to express the joy I've had. I know it is such a simple thing, but gives you a big joy.
    We get to see trees like this in bangalore priya...just after autumn...trees would be covered with just purple flowers or yellow flowrs with NO LEAVES ... its pleasant..

    Sometimes or many times, your heart has the things which can never be explained to make others understand but only by YOU. When I saw the tree for real in the spring of 1993, I had no words to express the joy I've had. I know it is such a simple thing, but gives you a big joy.

  8. #1147
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
    அதாவது கண்ணுல கலர் காண்டாக்ட் லென்ஸ் போட்டுகிட்டு ஃபிகருங்க போவுது

    அம்மம்மா அம்மம்மா என்னைப்போல் கன்னிப்பூ
    எல்லாருமே பார்க்க டபுள் அம்மம்மா ( அதாங்க பாட்டி ) மாதிரி இருந்தாலும் இன்னும் சின்னப் பொண்ணுங்கதான்

    இளவேனில் காலம் இளமாலை நேரம்
    வேர்த்து ஊத்துற நேரம்.

    இன்பத்தை அள்ளி இரைக்கும் சொர்க்கத்தின் அந்தப்புரம் இதுவோ
    இன்பமா தண்ணியை இறைச்சி குளிக்குற பாத்ரூம் சொர்க்கம் அந்தப்பக்கமா இருக்குதா ?

    பூவெல்லாம் மௌன பாஷைகள் பேச நான் என்ன சொல்லவோ ஹோ
    எல்லாரும் சூட்டுல உதடு காய்ஞ்சு வாயடைச்சி போயி கிடக்குறாங்க.. இதுல நா என்னாத்த பேசுறது ?

    நாளெல்லாம் அந்தி நேரத்தில் எந்தன் நெஞ்சத்தைக் கிள்ள ஹோ
    நாள் முழுக்க டைட் டிரஸ் போட்டதுல மடிப்பு சுருக்கத்துல கிள்ளிடிச்சிப்பா ! அதான் ஹோன்னு கத்த தோணுது

    ஏதோ ஏதேதோ எண்ணம் கூட உள்ளம் என் உள்ளம் ஊஞ்சல் ஆட
    என்னமோ தோணுது.. ஊஞ்சலில் ஆடினா காத்தாவது வருமுன்னு மனசு சொல்லுது

    கோடை நாட்களில் காமன் பண்டிகை காற்றும் பூவும்தான் காதல்பாட்டு பாடும் வசந்த விழா
    அந்தக் காலத்துல நடத்துன மாதிரி இந்திர விழா நடத்துனா பீச்சாங்கரைக்கோ பார்க்குக்கோ போய் பாடிகிட்டாச்சும் இருக்கலாம்.
    enakaaga ipdi ellaam pozhippurai ezhuthara unga nagaichuvai thiran.... loved esp sootula vaay kainju poi...naan ennatha pesa

  9. #1148
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    சின்னப்பூ இங்கு இரண்டு பொருள் படும். ஒன்று அந்த பிஞ்சு குழந்தையும் சின்னப்பூ, கண்ணில் கனவின் வண்ணங்கள் சுமக்கும் வண்ணப்பூ, இன்னொன்று ஜப்பான் நாட்டில் இலைகளுக்கு இருக்க இடம்விடாமல் ரொம்பி நிற்கும் அழகுப் பூ, சின்னப்பூ...அந்த பூவின் வண்ணமும் தன்மையும் கண்ணைவிட்டகலாது நிற்கிறது.

    பூவில் சொறியும் தேன், உண்ணப்படாமல், வண்டு வந்து சுவைக்கப்படாமல், இன்னமும் தேன் வழிந்து கொண்டிருக்கும் கன்னிப்பூ...இவளைப்போலவே.

    இளவேனில் காலத்தில் இதமான மாலை நேரத்தில், இந்த பூக்களின் அலங்காரம் சுமந்த நகரமும் கூட அடடா சொர்க்கம் தான் நம் கண்முன் வந்துவிட்டதோ என்றே எண்ணத் தூண்டும்.

    பூவெல்லாம் மௌன பாஷைகள் பேச
    நான் என்ன சொல்லவோ ஹோ
    நாளெல்லாம் அந்தி நேரத்தில் எந்தன்
    நெஞ்சத்தைக் கிள்ள ஹோ
    ஏதோ ஏதேதோ எண்ணம் கூட
    உள்ளம் என் உள்ளம் ஊஞ்சல் ஆட
    கோடை நாட்களில் காமன் பண்டிகை
    காற்றும் பூவும்தான் காதல்பாட்டு பாடும் வசந்த விஷா

    பூக்களும் கன்னிப்பூக்களல்லவா..மோகத்திலூறிய பூக்கள், மௌனமாக தங்களின் தாபத்துக்கு வண்ணம் தீட்டி, வண்டதனை வசந்த விழா காண அழைப்பு விடுக்கிறது. கோடை நாட்களில், எழில் கொஞ்சும் காமன் பண்டிகையை வரவேற்று
    காற்றும் பூவும் வசந்தம் கொள்கிறது. வசந்த பாஷைகள் இயற்கையே பேசியதால், பூவையின் நிலையும் மட்டும் மாறுபடுமா?! அவள் நெஞ்சத்தில் ஏதோ எண்ணங்கள் தோன்ற, அந்த எண்ணம் தரும் கற்பனையில் உள்ளம் ஆனந்த ஊஞல் ஆடகிறது. ஒட்டுமொத்த நகரமும், சூழலும், இயற்கையும், மனிதனும், மனசும் மோக ராகம் மீட்டு, வசந்தத்தை வரவேற்கிறது.

    மேகங்கள் புத்தன் கோயில்கள் தேடி
    ஊர்கோலம் செல்ல ஹோ
    ராகங்கள் பட்சிக் கூட்டங்கள் பாடி
    வாழ்த்துக்கள் சொல்ல ஹோ
    இன்பம் கொண்டாடும் மக்கள் இங்கே
    மண்ணில் உண்டான சொர்க்கம் இங்கே
    நூறு நாடுகள் வாழும் மாந்தர்கள்
    கூடும் நாளிலே நேசம் பாசம் யாவும் விளைந்திடுமோ

    எப்படிப் பட்ட ஊர் தெரியுமோ, அங்கிருக்கும் மேஹங்களும் புத்தன் கோவில் தேடிப் போகும் ஆன்மீகப் பாரம்பர்யம் வாய்ந்தது. மேகம் நீர் பொழிய, அதை வாழ்த்தி பட்சி பாட்டுப் பாடி வாழ்த்துச் சொல்ல, இயற்கையின் எழிலுடன், மனதில் அமைதியும் குடிகொண்டுவிட்டால், மக்களின் இன்பத்துக்கு பஞ்சமும் வருமா! இன்பம் கொண்டாடி அம்மண்ணின் மைந்தர்கள் மண்ணின் சொர்கமான அவர்கள் ஊரில் ஆனந்தித்திருக்கிறார்கள். அத்துடன் முடிந்துவிடவில்லை. வந்தாரை வாழவைக்கும் நாடு. அத்துனை நாட்டு மனிதர்களும் அரவணைத்து வரவேற்று நேசமும் பாசமும் பரிமாறிக்கொள்ளும் சிறந்த நகரம்.

    ( குறிப்பு: இந்தியாவிலிருந்து வந்த உங்களுக்கும் எங்கள் நாட்டிலும்,நாட்டினரின் மனதிலும் அதாவது என் மனதிலும் இடம் உண்டு என்று குறிப்பால் உணர்த்துகிறாள்)

    சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ
    அம்மம்மா அம்மம்மா என்னைப்போல் கன்னிப்பூ

    நூலாடை தொட்டுப் போராடும் காற்றே
    நீ கொஞ்சம் இங்கே நில்
    நான் கூட வண்ணப்பூமாலை சூடும்
    நாள் என்ன நாளோ சொல்
    சின்னப்பெண் தேடும் மன்னன் யாரோ
    கன்னிப்பூ சூடும் கண்ணன் யாரோ
    நீலத்தாமரை நீரைத் தேடுது
    பூவைப் போலவே பூவை நானும் வாடும் பருவமிது

    குறிப்பாலுணர்த்திய அவளுக்கு காதல் எண்ணம் மீண்டும் துளிர் விட, வழக்கம் போல், காற்றே நில்லு, நானும் பூமாலை சூடும் நாளைச் சொல்லு, மன்னன் பேர், கண்ணன் ஊர், கோத்திரம் குலமென்ன தெரியுமா என்று கேட்டு, நீலத் தாமரையான அவள் தனக்கு ஆதாரமான நீரைத் தேடுகிறாள். பூவைப் போல் பூவையும் ஏங்குகிறாள்.

    ( குறிப்பு: நீலத்தாமரை அபூர்வம், அவளும் அபூர்வமான பெண்.
    நீலத்தாமரை அழகு, லாவண்யம். தாமரை சீனர்கள், ஜபானியர்களால் மிகவும் பொற்றத்தக்கதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு தாமரைக்கும் ஒரு சிறப்பு உண்டு, அவர்கள் தாமரையை உணவில் சேர்ப்பது முதல், இறைவனின் இருப்பிடமாக்கி வணங்குதல் வரை, தாமரையின் பங்கு மிக விசேஷமானது....அதைப் போலவே தானும் ஒரு நீலத் தாமரை போல் பெருமை வாய்ந்தவள் என்று உணர்த்துவதாகவும் கொள்ளலாம் )
    Last edited by Shakthiprabha; 5th March 2012 at 11:56 AM.

  10. #1149
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    superb power !!

    அதாகப்பட்டது நீலக் கலர் கண்ணன் சூடவேண்டிய கன்னிப் பூ என்பதால் கலரும் நீலமாக இருக்கட்டுமேன்னு நீலத்தாமரைன்னு சொல்லி இருக்காங்க .. அம்புட்டுதானுங்க.

  11. #1150
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    //நீலக் கலர் கண்ணன் சூடவேண்டிய கன்னிப் பூ என்பதால் கலரும் நீலமாக இருக்கட்டுமேன்னு நீலத்தாமரைன்னு சொல்லி இருக்காங்க //

    நல்ல கற்பனை மது...ரசித்தேன்

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •