Page 2 of 5 FirstFirst 1234 ... LastLast
Results 11 to 20 of 48

Thread: sumai - +++

  1. #11
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    "என்னவோ புதையலை காக்குற பூதம் போல வழிய வுடாம பைய வச்சுகிட்டு
    அடைக்கிறாளுங்க.. என்ன சன்மங்களோ?" டேஞ்சர் லைட் பொட்டு வைத்த
    பெரியம்மா நகர.. மேகலைக்கு அருகில் ஒரு இளம்பெண் உட்கார்ந்து கொண்டாள்.

    மேகலையின் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு அவள் மீது பட்டால் அழுக்கு ஒட்டிக்
    கொள்ளுமோ என்று நினைப்பவள் போல நாசூக்காக நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.

    மேகலை எதையும் கவனிக்கவில்லை. பையை இறுக அணைத்துப் பிடித்தபடி சாலையின்
    ஓரத்தில் தெரிந்த பலகைகளில் எழுதியிருந்ததை மனதுக்குள் எழுத்துக் கூட்டிப் படித்துப்
    பார்த்துக் கொண்டிருந்தாள்.

    "கீரையன் பாளையம் 6 கி.மீ"

    அவள் மனது ஒரு மாதத்துக்கு முன்னால் போனது.

    வைத்தியர் அப்போதைக்கு மருந்து கொடுத்து விட்டு குழந்தையை பொள்ளாச்சி
    பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் காட்டி விட்டு வரச் சொன்னார்.

    குழந்தைக்கு மருந்து வாங்கிக் கொண்டு அவள் திரும்பியபோது அவசரமாக எழுந்து
    அவள் பின்னாலேயே வந்த மதிவாணன் கம்பை ஊன்ற முடியாமல் விழுந்து உருண்டு
    அடி பட்டிருந்தான்.

    தபால் ஆபீஸ் தாத்தா என்று அழைக்கப்பட்ட போஸ்ட் மாஸ்டர் உதவி செய்ய
    மதியை வீட்டில் விட்டு விட்டு, குழந்தையுடன் பொள்ளாச்சி ஆஸ்பத்திரிக்குப்
    போனாள்.

    அவள் நல்ல நேரம், அப்போது அங்கே ஒரு பெரிய மருத்துவர்களின் மாநாடு
    நடப்பதாக இருந்ததால், இலவச சிகிச்சை மையம் என்று ஒன்றை ஆரம்பித்து
    இருந்தார்கள். குழந்தையை அட்மிட் செய்யச் சொன்னார்கள்.

    குழந்தைக்கு ஏதோ கொடுமையான நோய் என்று சொன்னார்கள். இலவசமாக
    மருத்துவம் செய்வதாகச் சொல்லி பத்திரிக்கைக்காரர்களை எல்லாம் கூட கூட்டி
    வந்து பேசினார்கள். அவளுக்கு எதுவும் புரியவில்லை.

    அன்றிலிருந்து அவள் வாழ்வு ஆஸ்பத்திரியில் தொடங்கி அங்கேயே முடிந்தது.
    நடுவில் ஊருக்கு வந்தபோது அவள் அப்பாவும், சின்னம்மாவும் கடன் தொல்லை
    தாங்க முடியாமல் ஊரை விட்டு ஓடிவிட்டதாக செய்தி வந்திருந்தது.

    வீட்டை விட்டு வெளியே வராமல் தினமும் ஒரு வேளைக் கஞ்சியில் தன்
    வாழ்வை ஓட்டிக் கொண்டிருந்தான் மதிவாணன்.

    "மேகலை.. என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம் ? குழந்தையை ஒரு தடவை
    பாக்கணும் மேகலை.. நான் அது முகத்தை பார்த்து ரெண்டு வாரமாச்சு. இப்போ
    எப்படி இருக்குது?"

    "நானே சரியாப் பாக்கலீங்க. ஒடம்பெல்லாம் ஊசி குத்தி கண்ணாடி கூண்டுக்குள்ள
    வச்சிருக்காங்க.இன்னும் ரெண்டு வாரத்துல சரியாயிடும். அழைச்சுகிட்டு வந்துடறேன்.
    செடிய மட்டும் கொஞ்சம் பாத்துக்குங்க"

    ஆனால் இன்று காலையில் கதை மாறிப் போனது.

    கண்ணாடிக் கூண்டில் இருந்த குழந்தையைப் பார்க்க அவளை அழைத்தபோது
    அவள் அடிவயிறு கலங்கியது. குழந்தையில் மேலிருந்த குழாய்கள் எல்லாம்
    எடுக்கப்பட்டிருக்க, கதவிடுக்கில் நசுங்கிய பல்லியின் எலும்புக்கூடு போல
    குழந்தையின் உடல் இருந்தது.

    "ராசா.. என் மவனே"

    "அழக்கூடாதம்மா. நாங்க எல்லா வைத்தியமும் செஞ்சுட்டோம். என்ன செய்யுறது ?
    நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான்"

    "இங்கேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செஞ்சு தரோம். அந்த கண்ணாடி போட்ட
    நர்ஸம்மா விவரம் சொல்லுவாங்க கேட்டுக்க"

    மேகலையின் கண்ணில் கண்ணீர் வற்றிப் போயிருந்தது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    Anbe Sivam

  4. #13
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    "யம்மா.. கீரையன்பாளையம் வரப்போகுது. பைய எடுத்துக்கிட்டு இறங்கம்மா"
    கண்டக்டர் குரல் கொடுக்க மேகலை பையை இறுக அணைத்தபடி எழுந்தாள்.

    அவள் மட்டும் இறங்கியபோது மேகக்கூட்டங்கள் புகையாக மூடிக்கொண்டன.
    ஊரென்ன ஊர் ! இரண்டு தெரு.. நாலு கடை. ஒரு போஸ்ட் ஆபீஸ்.. முப்பது
    நாற்பது வீடு. அவ்வளவுதான்.

    எல்லோருக்குமே இந்த மேகக்கூட்டத்தின் நடுவில் நடமாட பழக்கம் உண்டு.
    .......................................

    கண்ணாடி போட்ட நர்ஸம்மாவிடம் போனபோது அவள் இரண்டு பேப்பரில்
    கையெழுத்து போட சொன்னாள்.

    "குழந்தை உடம்பை இங்கேயே அடக்கம் செய்ய ஒரு அமைப்பு உதவி செய்யுதும்மா"
    என்றாள்.

    "இல்லீங்க.. எங்க வூட்டுக்காரருக்கு கால் நடக்க ஏலாது. அவரு குழந்தையப்
    பாக்க ஆசைப்படுவாருங்க."

    "அவர வந்து பாக்க சொல்லும்மா"

    "இல்லீங்கம்மா. நாங்க இருக்கறது மலை மேல. அங்கிருந்து வர்ரது சிரமம்"

    நர்ஸம்மாவுக்கு பொறுமை இல்லை. "அப்படியின்னா பாடியை வாங்கிக்கிட்டு
    போ" என்றபடி நகர்ந்தாள்.

    அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும் அடக்கம் செய்ய உதவத் தயாராக
    இருந்தார்களே தவிர குழந்தையின் முகத்தைக் கடைசியாக அதன் தகப்பன்
    பார்ப்பதற்கு உதவத் தயாராக இல்லை.

    பிணத்தை எடுத்துச் செல்ல வண்டிக்காரர்கள் கேட்ட தொகை அவள்
    வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்க முடியாதது.

    மேகலை தீர்மானித்தாள்.

    ...............................

    மேகத்திரை விலகியபோது சரிந்த பாதையில் கம்பை ஊன்றிக் கொண்டு பஸ் சத்தம்
    கேட்டதால் மேகலை வருவாளோ என்ற சந்தேகத்தில் மதிவாணன் வந்து கொண்டு
    இருந்தான்.

    "மேகலை.. மேகலை.. கொழந்த எப்படி இருக்குது ? நல்லா இருக்குதா ?
    அது முகத்தைப் பாத்து ஒரு மாசம் ஆச்சு"

    மேகலை வெறித்தபடி கையில் அணைத்து வைத்திருந்த பையை இறக்கினாள்.
    அதன் முடிச்சை அவிழ்த்து மேலாக இருந்த துணியை எடுத்தாள்.

    "பாருங்க.. ஒங்க மகன் மொகத்த நல்லா பாருங்க"

    நழுவிய பைக்குள் இருந்து ஒரு பிஞ்சு முகமும், அதன் மூடிய விழிகளும் தெரிய
    சுமையை இறக்கி வைத்த மேகலை, மதிவாணனின் மீது சாய்ந்து அழ ஆரம்பித்தாள்

  5. #14
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    power :

    neenga indha kadhaiyai padikka vEndAm !

  6. #15
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    ENNA KODUMAI KATHAI MADHU ITHU

  7. #16
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    i knew it...paiyil irundhadhu kuzhndainu
    Anbe Sivam

  8. #17
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha


    ENNA KODUMAI KATHAI MADHU ITHU
    oru uNmai kadhai

  9. #18
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    unmai kathaiya?
    Anbe Sivam

  10. #19
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    unmai kathaiya
    enna kodumai!!

  11. #20
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    nAn rural service-la irundhappO nadanthathu.
    kEttabodhu manasu romba kashtamA irundhuchu.

    uNmaiyil indha mAdhiri vans niRaiya vidaNum.
    adhuvum EzhaigaLukku free-ya seyyaNum.

    pOnadhu oru uyir mattumthAn. aanA adhai
    sutri piNainju irukkara pala pErOda life eppadi eppadiyO
    mARi pOgum.

Page 2 of 5 FirstFirst 1234 ... LastLast

Similar Threads

  1. yenn sugemaneh sumai
    By kavis in forum Poems / kavidhaigaL
    Replies: 20
    Last Post: 30th July 2007, 08:37 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •