Page 3 of 5 FirstFirst 12345 LastLast
Results 21 to 30 of 43

Thread: What was the last article you read?

  1. #21
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Sep 2006
    Location
    Coimbatore,bangalore
    Posts
    1,614
    Post Thanks / Like
    தாணு தயாரித்த "வண்ண வண்ணப் பூக்கள்''
    தேசிய விருது கிடைத்தது!

    பாலு மகேந்திரா டைரக்ஷனில் கலைப்புலி தாணு தயாரித்த "வண்ண வண்ணப்பூக்கள்'' படத்துக்கு பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருது கிடைத்தது.

    இந்தப் படத்தைத் தயாரித்தபோது, சில சிக்கல்களை தாணு சந்திக்க வேண்டி இருந்தது.

    அதுபற்றி அவர் கூறியதாவது:-

    அர்ச்சனா கோபம்

    "வண்ண வண்ணப்பூக்கள்'' பத்தாவது நாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, நடிகை அர்ச்சனா வேகமாக காரில் இருந்து இறங்கி செட்டுக்குள் வந்திருக்கிறார். "நான் சிபாரிசு செய்த ஆதித்யாவை, விக்னேஷ் நடிக்கிற கேரக்டரில் நடிக்க வைக்கவில்லையே, ஏன்?'' என்று பாலு மகேந்திராவிடம் கோபம் கோபமாக பேசிவிட்டுப் போயிருக்கிறார்.

    இந்த சம்பவம், என் காதுக்கு வந்திருந்தது.

    மறுநாள் காலையில் டைரக்டர் பாலு மகேந்திரா என்னைப் பார்க்க வந்தார். "சார்! நான் எதிர்பார்த்த அளவுக்கு விக்னேஷ் நடிப்பு அமையவில்லை. அதனால் அவரை மாற்றிவிட்டு, வேற ஹீரோவைப் போடலாம்'' என்றார்.

    முந்தின நாள் அடித்த புயலுக்கு இன்று ரியாக்ஷனா? நடந்தது எதுவும் எனக்குத் தெரியாதது போல காட்டிக்கொண்டு, "நடிகர்களுக்கெல்லாம் ஏற்கனவே பயிற்சி கொடுத்து வைத்திருந்ததாகத்தானே சொன்னீர்கள்! இப்போது படப்பிடிப்பு தொடங்கி 10 நாள் கழித்து, நடிப்பு வரவில்லை என்று சொன்னால் எப்படி?'' என்று கேட்டேன்.

    எனக்கு விஷயம் தெரிந்து விட்டது என்பதை புரிந்து கொண்டவர், "அந்தப் பையனுக்கு காய்ச்சல். குளிர் வந்து கஷ்டப்படற மாதிரி தெரியுது'' என்றார்.

    புது ஹீரோ

    இதற்கு மேல் அவரிடம் பேசிப் பயனில்லை என்று புரிந்து கொண்டு, "இப்போது, புதிதாக ஒரு ஹீரோ வேண்டும், அதானே சார்?'' என்றேன். "அதேதான் சார்'' என்றார், அவரும்.

    அப்போது "வைகாசி பொறந்தாச்சு'' என்ற படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அதுதான் முதல் படம் என்பதால், எங்கள் படத்தில் நடிக்க வைக்க விரும்பி பிரசாந்தின் அப்பா நடிகர் தியாகராஜனை சந்தித்தேன்.

    விஷயத்தைச் சொன்னதும் அவருக்கு சந்தோஷம். "உங்கள் படங்களின் பிரமாண்ட விளம்பரங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். "வண்ண வண்ணப் பூக்கள்'' படத்துக்கான உங்கள் விளம்பரம் பார்த்தபோது "இந்த படத்தில் என் பையன் இருந்தால் எப்படிப்பட்ட `பப்ளிசிடி' கிடைத்திருக்கும்'' என்று கூட யோசித்திருக்கிறேன். இப்போது உங்களின் அதே படத்துக்கு என் பையனை அழைக்கிறீர்கள். அவன் இனி உங்க வீட்டுப்பிள்ளை'' என்று அப்போதே சம்மதம் தந்தார்.

    பிரசாந்த் நடிப்பில் படப்பிடிப்பு தொடர்ந்தது. பாதிப்படம் வளர்வதற்குள் பாலுமகேந்திரா முதலில் சொன்ன முழுப்படத்துக்குமான பட்ஜெட்டை தாண்டியது. முழுப்படத்துக்கு அவர் போட்டுக்கொடுத்த பட்ஜெட் 26 லட்சம் ரூபாய். இப்போதோ பாதி படத்துக்குள் 27 லட்சம் செலவாகியிருக்கிறது.

    10 நாள் படப்பிடிப்பை நடத்திவிட்டு, மறுபடியும் அதே காட்சிகளை படம் பிடித்ததில் செலவு அதிகமாகியிருக்கிறது.

    பாடல் காட்சி

    படத்தில் வரும் "இளம் நெஞ்சே வா'' பாட்டு, சைக்கிள் ஓட்டிக்கொண்டே பிரசாந்த் பாடும் பாட்டு. இந்தப் பாடல் பதிவு நடந்த நேரத்தில், நான் கோவையில் இருந்தேன். இப்போது ஒகனேக்கல்லில் இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடந்தபோது பாட்டைக் கேட்கிறேன். எனக்கு அதிர்ச்சி. உடனே நான் டைரக்டரிடம், "சார்! இந்தப்பாட்டு சைக்கிளில் போகிற மாதிரியாக வரும் பாட்டுத்தானே! அன்றைக்கு ராஜா சார் இந்தப்பாட்டுக்கு போட்ட டிïன் இது இல்லையே! இது நடந்து போகும்போது பாடுகிற மாதிரியல்லவா இருக்கிறது'' என்று கேட்டேன்.

    நான் இப்படிக் கேட்டதும் பாலு மகேந்திரா கண் கலங்கி விட்டார். "சார்! ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு! 3 நாளைக்கு முன்னாடி திடீர்னு என் அப்பா இறந்து போனதால், பாட்டெழுத வந்த வாலி சாரிடம் `டிïன் கேசட்டை' மாற்றிக்கொடுத்து விட்டேன்'' என்றார்.

    என்றாலும் ஜேசுதாஸ் பாடிய அந்தப்பாடல் `ஸ்லோ மெலடியிலும்' கேட்க இனிமையாகவே அமைந்திருந்தது.

    ரூ.60 லட்சம்

    ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. 26 லட்சத்தில் போடப்பட்ட பட்ஜெட், 60 லட்சத்தில் வந்து நின்றிருந்தது! அதோடு படத்தில் ஏற்கனவே சொன்ன காமெடி சீன் எதுவும் எடுக்காமல் விட்டுவிட்டார்.

    படம் இளையராஜாவின் பின்னணி இசைக்காக (ரீ ரிக்கார்டிங்) வந்தது. நான் இசைக் கூடத்தில் இளையராஜாவை சந்தித்தேன். என்னைப் பார்த்ததுமே, "என்ன தாணு! நான் சொன்னது நடந்ததா?'' என்று கேட்டார்.

    இசை அமைக்க ஒப்புக்கொண்டபோது, "இந்தப் படத்தால் ரொம்ப கஷ்டப்படுவீங்க'' என்று அவர் சொன்னது என் நினைவில் இருந்தது. பட்ஜெட்டைவிட இரண்டு மடங்கு செலவானதைத் தெரிந்து கொண்டுதான் இளையராஜா இப்படிக் கேட்டார்.

    நான் அவரிடம், "நீங்க சொன்னீங்க. நானும் படத்தை எடுத்து முடிச்சிட்டு வந்துட்டேன்'' என்றேன்.

    படம் தயாரானதும் கலைஞருக்கு போட்டுக்காட்டினேன். படம் முடிந்ததும் "இளமை எழுதிய ஓவியம்; காமிரா எழுதிய காவியம்'' என்று பாராட்டி, எழுதித் தந்தார்.

    தேசிய விருது

    படம் ரிலீசானபோது வசூல் ரீதியாக தோல்விப்படமானது. எனக்கும் கணிசமான நஷ்டம். ஆனாலும் சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான மத்திய அரசின் "தேசிய விருது'' கிடைத்து என் நஷ்டத்தை மறக்க வைத்தது.

    விருது பற்றிய தகவல் கிடைத்ததும் கலைஞரை சந்தித்தேன். "வருக, வருக! வாழ்த்துக்கள்'' என்றார். அப்போது முரசொலி பதிப்பகத்தில் இருந்து வந்து கொண்டிருந்த "தமிழன்'' நாளேட்டில் இந்த விருது செய்தியை தலைப்புச் செய்தியாக்கினார்கள்.

    படம் விருது பெற்ற பிறகு என்னை சந்தித்த பத்திரிகையாளர்களிடம், "பங்கு பெற்ற கலைஞர்களுக்கு களிப்பை தந்த படம். வினியோகஸ்தர்களுக்கு கவலையை தந்த படம்'' என்று சொன்னேன்.

    நான் இப்படி சொன்னதற்காக பாலு மகேந்திரா என்னிடம், "இப்படி சொல்லியிருக்க வேண்டுமா?'' என்று வருத்தப்பட்டார். நான், "உண்மையைத்தானே சொன்னேன்'' என்று அவருக்கு வருத்தத்துடன் மறுமொழி சொன்னேன்.

    காயத்துக்கு மருந்து

    என்றாலும் டெல்லியில் ஜனாதிபதி ஆர்.வெங்கடராமனிடம் சிறந்த பிராந்திய படத்துக்கான தேசிய விருது பெற்றபோது, இந்தப் படத்தயாரிப்பில் ஏற்பட்டிருந்த என் மனக் காயத்துக்கு மருந்து தடவியது போலிருந்தது.''

    இவ்வாறு தாணு கூறினார்.

    http://www.dailythanthi.com/article....date=3/20/2008

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #22
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Sep 2006
    Location
    Coimbatore,bangalore
    Posts
    1,614
    Post Thanks / Like
    நடிகர் எம்.ஆர்.ராதா நடித்த வேடங்களில் உங்களைக் கவர்ந்தது?

    வெள்ளித்திரையில் அவர் அடித்தது எல்லாமே பவுண்டரிகள். திரைக்கு வெளியே நிஜவாழ்வில் அடித்ததோ ஸிக்ஸர்கள். நான் ராதா என்கிற மனிதனின் ரசிகன்.

    ------------------------------------------

    நமீதா தமிழ் என்று ஒன்று உருவாகி யிருப்பதாக சத்யராஜ் சொல்கிறாரே, அது என்ன?

    அதன் பெயர் ‘மச்சா தமில்’


    :Arasu badhilgal: kumudam:

  4. #23
    Senior Member Veteran Hubber Roshan's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Kabul, Afghanistan
    Posts
    4,984
    Post Thanks / Like
    Arasu Vaazhga !!

    r_r, please do keep posting Arasu Badhilgal. My most favourite column in Kumudam

    The last article(s) I read was on Globalisation/Neolibaralism. Quite interesting.
    And those who were seen dancing, were thought to be insane, by those who could not hear the music - Friedrich Nietzsche

  5. #24
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Sep 2006
    Location
    Coimbatore,bangalore
    Posts
    1,614
    Post Thanks / Like
    Quote Originally Posted by Roshan
    Arasu Vaazhga !!

    r_r, please do keep posting Arasu Badhilgal. My most favourite column in Kumudam
    idho ungalukkaga, latest

    விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக்_ மூவரின் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும்?

    ஒருவருக்கு எதிர்காலம் பிரகாசம். மற்றொருவர் சந்தேக கேஸ். கடைசிகாரர் அய்யோ பாவம், பூட்ட கேஸ்.

    ------------------------------------------------------------------------------

    அரசியலுக்கு வந்தாலும் வருவேன்” என்கிறாரே ரா. பார்த்திபன்?

    அய்! 2011க்கு இன்னோரு வருங்கால முதல்வர் கிடைத்து விட்டார்!

  6. #25
    Senior Member Diamond Hubber selvakumar's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Bay Area
    Posts
    5,450
    Post Thanks / Like
    <dig> Karthik has a good base in south tn (Thanks to his caste advantage). He has straight advantage over sarath and vk in many places.
    But I would say he isn't a leader at all. His first political meet was a great flop all coz of himself. His party members in my town worked day and night for that. Karthik couldn't even address such a massive gathering in Rajapalayam. A sliver in a blind man's hands </dig>
    Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
    RE: Aennn.. Puli tholu..


    Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy

  7. #26
    Senior Member Diamond Hubber selvakumar's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Bay Area
    Posts
    5,450
    Post Thanks / Like
    Quote Originally Posted by raaja_rasigan
    அரசியலுக்கு வந்தாலும் வருவேன்” என்கிறாரே ரா. பார்த்திபன்?

    அய்! 2011க்கு இன்னோரு வருங்கால முதல்வர் கிடைத்து விட்டார்!
    My version :

    Hey !! 2011 kku innoru KARUPPU MGR kidaithu vitaar [/tscii]
    Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
    RE: Aennn.. Puli tholu..


    Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy

  8. #27
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    1,422
    Post Thanks / Like

  9. #28
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    Quote Originally Posted by kb
    http://www.youtube.com/watch?v=vkt5CIAQxIM


    ivar iyakkiya padangal enna?

    saadham sanskrit? wow...i say soru :P

    sorry for the dig
    Anbe Sivam

  10. #29
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    1,422
    Post Thanks / Like
    Quote Originally Posted by crazy
    Quote Originally Posted by kb
    http://www.youtube.com/watch?v=vkt5CIAQxIM


    ivar iyakkiya padangal enna?

    saadham sanskrit? wow...i say soru :P

    sorry for the dig
    vaazhthukkal, thambri.. ellam mokkai padangal

  11. #30
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    rendume naan paarthathillai.
    Nandri :P
    Anbe Sivam

Page 3 of 5 FirstFirst 12345 LastLast

Similar Threads

  1. Comments on Outlook article & other TiS criticisms
    By Neels in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 340
    Last Post: 17th November 2005, 07:19 PM
  2. Is this development?Your views on this news article.
    By ssanjinika in forum Miscellaneous Topics
    Replies: 1
    Last Post: 4th October 2005, 12:19 PM
  3. Article
    By Kavitha in forum Miscellaneous Topics
    Replies: 1
    Last Post: 18th November 2004, 10:26 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •