Page 2 of 148 FirstFirst 12341252102 ... LastLast
Results 11 to 20 of 1479

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4

  1. #11
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Dear friends, as i said earlier, I'm sharing my view abt.Gowravam.

    GOWRAVAM, which gave us the stylish & immortal Barrister Rajnikanth is one of the milestones in NT's career as well as in Tamil cinema. Generally, anda kalathu padangalil youngsters jollyagavum elders seriousagavum iruppargal. Aanal vithyasamag idhil, Jr.NT sadhuvana, poruppulla, kadavul nambikkayudaya ilaignanaga varuvar. On the contrary, avarudaya periappa, the great Barrister Rajnikanth jollyana, urakka pesum, madhu arundum, kadavul nambikkayilladha (except in one scene) adey samayam thozhil mel abaara bhakti ullavaraga varuvar. Though NT played both the characters, Barristeraga pichu udariyiruppar - anda style, the way he holds his pipe, the typical brahmin slang - NO WAY !!!

    Avar kudhthaalum, casuala, jollya irundalum, oru senior lawyerukku uriya ganniyathaym dignityum nam kan mun niruthuvar. This char.was well conceived by Mr Vietnamveedu Sundaram and ofcourse this wouldnt hv been possible without our NT making full justice to the character. Even in "Adisaya ulagam" song he will be sitting in a chair and make small dancing movements with a wine glass in his hand - Splendid !!!

    In later years, Rajini did a typical dual role in "Netrikkann", where the old man character was more raw.

    Now, enakku piditha scenes in Gowravam :

    Scene 1 : Sr.Nt talks abt his aim in life - " enakkunu vazhkayile oru latchiyam irunda, adu justice post. It is my aim, ambition and my goal ". Anda goal engira varthaiyai solliyabadiye ezhundirippar - wow ! wat a stylish dialogue delivery

    Scene 2 : Jr NT asks, "Yaarala periappa anda Mohanadasai kappatha mudiyum?" to which Barrister replies, " Ennala mudiyumda..ennala mudiyum " . Again, the dialogue rendered in a stylis manner.

    Scene 3 : When Inspector (played by another good artiste, Senthamarai) comes to fetch Jr NT to appear as Public Prosecutor, Sr. will be sitting in a sofa. Shoulersai oru madhiri shake seidu thenavatta inspectarai parthu ketpar " Insp. he is not only my son, ennudaya thozhilukkum avandhan varisu. Naama courtleye meet pannalam" . Appo, he will be wearing only socks - kaalai press seidu konde Jr idam solvar "Dei Kanna, indha kaala konjam pudichi viduda". Great.

    Sollikonde pogalam.......other's, pls continue
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    Film Society

    Quote Originally Posted by joe
    சென்ற பாகத்தில் ஆரம்பித்த இளையோருக்கு பரிந்துரைக்கும் 10 நடிகர் திலகம் படங்கள் பற்றிய விவாதங்களை இங்கே தொடரலாம்.

    அதோடு இந்த பாகத்தில் என்ன வாக்கெடுப்பு (poll) நடத்தலாம் எனவும் கருத்து தெரிவிக்கவும்
    Congratulations on entering 4th Part. This shows the enthusiasm and fervour of NT fans and the impact of NT on them. I wish this goes to innumberable values and on and on...
    Just a few days ago, Murali and I were discussing about this and you have touched the point. In my personal opinion, why shall not we ourselves take the initiative? Why wait for any particular situation? If every thing is ok, if there is full cooperation, what we thought was of contemplating a society in Chennai, a film society. We can hire a mini auditorium, choose a picture available, screen it in a LCD projected sreen, invite any technician, crew, director, actor, cnematographer who is available for that film to share his/ her experiences during the shooting of that particular film, nuances, highlights of the film etc. The expenses can be shared by those who are willing to join the group. The modalities can be discussed in personal by arranging a small get together and chart out how it could happen. This has been going on in my mind for quite a long time and as expressed by many fans to me in response to the website. I am eager to know the feedback of all of us on this idea. If it is successful in Chennai, it would be successful throughout the world.
    This is just to remind you of the proposal. Please post your valuable suggestions/ comments/ opinions/ on this idea.
    Raghavendran.

  4. #13
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    My Theatre Experiences with NT movies.

    It was nearly four years, when I was a student in Chennai both in High School and College from ‘Annan oru kOyil’ (Deepavali 77) to ‘Kalthoon’ (May 81). As my residence was in Triplicane and my graduation was in New College at Royapettah, it was very easy for us to have relation with Mount Road theatres, especially our gathering point Shanthi theatre at mount road. Every evening we will gather there and talk about NT movies and other competitive movies, with them.

    ( I hope Mr. Raghavendran might be there during that period)

    Every evening we will gather at Shanti car parking area and will discuss about the running movies, collections, Number of shows House-Full, fans responses, public responses, re-release of NT’s previous movies, public responses about NT’s new releases in other main centers like Madurai, Trichy, Salem, Kovai, Nellai, Thanjai etc.

    We will also go in to deep discussions about the reception of other ‘non NT movies’ too (which were running at that time) by Kamal, Rajini, Barathiraja, Mahendran and KB. (Not much discussions about MGR’s new movies, because only two movies Meenava Nanban and MMS Pandiyan were released at that time, and he became CM).

    ‘THIYAGAM’ release

    When ‘Annan oru Koyil’ crossed 100 days, steps were taken to lift it and Thiyagam is going to be released in Shanti, Crown, Bhuvaneswari on March 4th, 1978. In the meantime ‘Andhaman Kadhali’ was running in Midland which was released on January 26. Till the date of March 03, Annan oru Koyil has completed 114 days, still running with reasonable crowd. So fans were opposed to lift AOK from Shanthi and they requested them to run it till Silver Jubilee, because no Silver Jubilee after Thangapadhakkam. For that we, fans gathered and went to meet thiru Balaji in his Pantheon Road office and asked him to change the release of Thiyagam to some other theatre in Mount Road along with Crown & Buvaneswari, leaving Shanthi to run AOK. But he refused, by telling about the problems in changing the theatre and also told, now he has only 25% right on the movie release, because it was already sold to distributors.

    We again came back to Shanthi and asked Mr. Venugopal (Maapillai), Manager of Shanti theatre, about the shifting of AOK to a nearby theatre, to run till 25th week, same like what was done for Pattikkada Pattanama. He called Mr. Mohanadoss, Manager of Shivaji Productions and Mr.Mohandoss came there and informed that, they already approached Anna theatre or Plaza theatre to shift Annan oru Koyil and asked fans to be patience. Fans were believing his promise, but nothing was happened.

    In the meantime, advertisements came in newspapers for advance booking for Thiyagam. (Normally for Balaji sir’s movies, advance booking will start whole Tamil Nadu at 9 morning, but in a particular theatre in Chennai it will start at 8 morning (one hour before), because the first ticket should be issued by the hands of his daughter Miss. Sujatha). We all gathered at Shanthi at morning 7 itself and discussing about the running of Andhaman Kadhali in several centres in TN. At 7.30 Mr. Ramkumar came in his car, put a big ‘vanakkam’ to all fans and went inside the theatre. Car parking area and ticket counters were fully packed with crowd. At 7.50 Miss. Sujatha, (Balaji’s daughter) came and when she getdown from the car, put a ‘Vanakkam’ for all the fans (appaa solli anuppiyiruppaar pOlum). Ramkumar and Maappillai received her and took for the reservation counter. She issued first five tickets, after taking a tea, she left. Then ticket issue started as usual by theatre staff. Within half an hour it was full for ten shows……………

    Another interesting matter is, we, the NT fans gathering at Shanthi, already watched ‘Thiyagam’ on January 26 itself. How it was happened?. Normally when NT movies release at Chennai, there will be special show arranged by All India Shivaji Ganesan Fan’s Association at the morning time of the release day, mostly in Shanthi theatre at special rate of Rs.10/- (those days first class tickets will be hardly Rs.4/- only). When such show was arranged for Andhaman Kadhali, the producer Muktha Films accepted to send the print for special show, but the distributor (Alamma Movies) refused.

    So, the leader of AISGFA, Thalapathi Shanmugam approached Balaji and got the print of Thiyagam and showed for fans. Surprisingly we got the opportunity to watch Thiyagam, several days before its release date. Openly saying, on that date we never expected Thiyagam will get such a big hit and become a Silver Jubilee movie. But after we saw it, several changes have been made and edited again with more interesting scenes, and when we saw it in the release there was entire change in scenes from which we saw in Jan.26.

    (memories will continue…..)

  5. #14
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    எங்கள் நடிகர்திலகத்தின் வெற்றிப்பேரணி நான்காம் சகாப்தத்தில் கால் பதிக்க காரணமாக இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் நன்றி.

    தொடருவோம் வாருங்கள்... அவர் திறமையைப்பற்றிய அலசல்களை, அவரது சாதனைகளை, அவரைப்பற்றிய இனிய எண்ணங்களை, அவர் விட்டுச்சென்ற இனிய நினைவுகளை...

  6. #15
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    Quote Originally Posted by rangan_08
    Dear friends, as i said earlier, I'm sharing my view abt.Gowravam.

    Now, enakku piditha scenes in Gowravam :

    Scene 1 : Sr.Nt talks abt his aim in life - " enakkunu vazhkayile oru latchiyam irunda, adu justice post. It is my aim, ambition and my goal ". Anda goal engira varthaiyai solliyabadiye ezhundirippar - wow ! wat a stylish dialogue delivery

    Scene 2 : Jr NT asks, "Yaarala periappa anda Mohanadasai kappatha mudiyum?" to which Barrister replies, " Ennala mudiyumda..ennala mudiyum " . Again, the dialogue rendered in a stylis manner.

    Scene 3 : When Inspector (played by another good artiste, Senthamarai) comes to fetch Jr NT to appear as Public Prosecutor, Sr. will be sitting in a sofa. Shoulersai oru madhiri shake seidu thenavatta inspectarai parthu ketpar " Insp. he is not only my son, ennudaya thozhilukkum avandhan varisu. Naama courtleye meet pannalam" . Appo, he will be wearing only socks - kaalai press seidu konde Jr idam solvar "Dei Kanna, indha kaala konjam pudichi viduda". Great.

    Sollikonde pogalam.......other's, pls continue
    மோகன் தாஸ் வழக்கில் தீர்ப்பு சொல்லப்படும் நாள். பாரிஸ்டர் ரஜினிகாந்த் தன் வீட்டு மாடிப்படிக்கட்டில் சாய்ந்து உட்கார்ந்து இருப்பார். அப்போது அங்கே வரும் மனைவி பண்டரிபாய்:

    "என்னன்னா இங்கே உட்கார்ந்துட்டேள்?. கோர்ட்டுக்குப் போகலையா?"

    "இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? ஜட்ஜ்மெண்ட் டே. கண்ணனா மிஸ்டர் ரஜினிகாந்தா என்று தீர்மானிக்கும் நாள். CAT ON THE WALL".

    எழுந்து மாடிக்குப்போவார். கூடவே எம்.எஸ்.வி.யின் டெர்ரிஃபிக் BACKGROUND மியூஸிக். மாடி ரூம் கதவை திறக்கும்போதும் டிரம்ஸ், ட்ரம்பெட்டுடன் அதிர வைக்கும் சவுண்ட்.

    கையில் பைப்புடன் சட்டென்று பண்டரிபாய் பக்கம் திரும்பி, குனிந்து

    "டீ செல்லா... ஒரு சின்னப்பய இன்னைக்கு கோர்ட்டில் எனக்கு டைம் குடுக்கிறாண்டி. ஒவ்வொரு தடவை நான் ஜெயிக்கும்போதும் ஓடி வந்து கைகுலுக்குவான். முத்தம் கொடுப்பான். நான் வளர்த்த பையனாச்சே. இன்னைக்கு அவன் ஜெயிக்கிறான்னு தெரிஞ்சதும் எனக்கு ஏன் பொறாமை. ஜெயிச்சா ஜெயிச்சுட்டு போகட்டுமே".

    "நோ" (மீண்டும் எம்.எஸ்.வி.யின் அதிரடி இசை) இத்தனை நாள் நான் கஷ்டப்பட்டு சேர்த்து வச்ச கௌரவம். அதனால் இந்த சொஸைட்டியில் எனக்கு கிடைச்ச ஸ்டேட்டஸ், எல்லாத்தையும் விட்டு விட்டு 'அம்போன்னு' நிக்க முடியுமா? NEVER".

    ('NEVER' என்ற வார்த்தைக்கு ஒரு STYLE கிடைச்சதே இந்தப்படத்தில் இருந்துதான்)

    நேரே சென்று தன்னுடைய கேஸ்கட்டுகள் அடங்கிய ரேக்கிலிருந்து ஒவ்வொரு கேஸ் கட்டாக எடுத்துப்போடுவார்.

    "டீ செல்லா...., இதுதான் நான் அட்டெண்ட் பணிய முதல் கேஸ். இந்த கேஸை நான் HANDLE பண்ணிய அழகைப் பார்த்துதான், பிற்காலத்தில் இவன் பெரிய வக்கீலா வருவான்னு நினைச்சு உங்கப்பன் உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சான்"

    அடுத்த் கட்டை தூக்கிப்போட்டு

    "இந்த கேஸில ஜெயிச்சுத்தான் பங்களா வாங்கினேன்"

    அடுத்த கேஸ் கட்டைப்போட்டு

    "இந்த கேஸுலதான் ஊரிலேயே பெரிய மனுஷன்னு பேர் எடுத்தேன்"

    "இதோ இந்த கேஸுலதான், தினம் பத்தாயிரம் ஃபீஸ் வாங்கி எங்கு பார்த்தாலும் 'ரஜினிகாந்த்..ரஜினிகாந்த்'னு பேசும்படி செஞ்சேன்... இதெல்லாம் சாதாரண கேஸ் கட்டுகள் இல்லடீ.. என் முன்னேற்றப்பாதையின் படிக்கட்டுக்கள்"

    சட்டென்று விரலை சொடுக்கிபடி அடுத்த கேஸ்கட்டை எடுத்துப்போட்டு....

    "ஆனா இன்னைக்கு இந்த மோகன் தாஸ் கேஸ்...."

    பண்டரிபாய் : "என்னங்க.."

    "ஷட் அப்" (கேஸ் கட்டுகளின் கடைசியில் கண்ணனின் உருவம் தெரிய) கண்ணா.. உன்னுடைய முதல் கேஸே என்னுடைய கடைசி கேஸா போயிடுமா?.. ஏண்டா படவா என்னை ஜெயிச்சுருவியா?"

    பண்டரிபாய்: "அய்யோ ஜெயிச்சா ஜெயிச்சுட்டுப் போகட்டுமே.. யானைக்கும் அடி சருக்கும்னு சொல்லுவாளே..."

    "ஆமாண்டி.. யானைக்கும் அடி சறுக்கும். ஆனா யானை சறுக்கி கீழே விழுந்தா எப்படி அடி படும்னு தெரியுமா?. அதால எழுந்திருக்க முடியாது. அதைத்தானே எல்லோரும் எதிர்பார்க்கிறா... இவன் எப்படா விழுவான்னுதானே எதிர்பார்க்கிறா?.... நடக்காதுடி..."

    My God... What a terrific expression.

  7. #16
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Welcome mam. Naan sollala...Gowravam patri pesikkonde pogalam. Ennudaya write-up avvalavu interestinga illa, but I just wanted to start it up. Adu ungalaippol solravanga sonnathan sirappa irukkum, kekkara engalukkum sugama irukkum. pls continue. Never endru solvadu, manaiviyai Chella dear endru azhaippadu ellam stylin uchakattam.

    Aduthu Thirudan padam patri therindu kolla virumbukiren. Adil oru still / scene kooda innum naan parthadillai (romba naala adu re- release seiyappadavilai) - sorry! Idu color padam thaney ? Veru nadigargal yaar yaar ? Any good songs in this film ??
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  8. #17
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    "நீதி"

    நடிகர்திலகத்தின் 1972 வெற்றிப்பேரணியில் வீறு நடைபோட்ட இன்னொரு படம். மாபெரும் வெள்ளி விழாப்படமான 'வசந்த மாளிகை'யைத் தொடர்ந்து திரைக்கு வந்து அனைவரையும் கவர்ந்த படம். இரண்டு படங்களின் கேரக்டருக்கும்தான் எத்தனை வித்தியாசம்..!. மேடுக்குடியில் பிறந்த ஜமீன்தாருக்கும், ஒரு சாதாரண லாரி டிரைவருக்கும் நடிப்பில், பரிணாமத்தில், அதை வெளிப்படுத்துவதில் கிலோ மீட்டர் கணக்கில் வித்தியாசம். ஆம் அந்த ரோலுக்கு அந்த நடிப்பு, இந்த ரோலுக்கு இந்த நடிப்பு. எல்லா ரோலுக்கும் ஒரே மாதிரி நடிப்பதென்றால் இவர் தேவையில்லையே.

    வழக்கமாக, தனது பிறந்த நாளான ஜனவரி 26 அன்று தனது சொந்தப்படங்களைத் திரையிடுவதை தன் வழக்கமாக வைத்திருந்த பாலாஜி, தீபாவளிக்கு வரவேண்டிய வசந்தமாளிகை, முன்னதாக செப்டம்பர் இறுதியிலேயே ரிலீஸ் ஆகிவிட்டதால் (இதுபற்றி முரளி ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்). அந்த ஆண்டின் துவக்கத்தில் (ஜனவரி 26, 1972) 'ராஜா' படத்தை வெளியிட்டிருந்த பாலாஜி தனது நீதி படத்தை விரைவாக முடித்து 72 டிசம்பரிலேயே வெளியிட்டார். இதன் மூலம் ஒரே ஆண்டில் நடிகர்திலகத்தை வைத்து இரண்டு படங்களைத் தயாரித்து வெளியிட்டவர் என்ற பெருமையைப் பெற்றார். முதலில் அவர் வெளியிடத் திட்டமிட்டிருந்தது 1973 ஜனவரி 26. (இதே போல சின்னப்பா தேவர், எம்.ஜி.ஆரை வைத்து ஒரே ஆண்டில் இரண்டு படங்களை வெளியிட்டுள்ளார்).

    இந்தியில் ராஜேஷ் கன்னா, மும்தாஜ் ஜோடியாக நடித்து வெளிவந்த 'துஷ்மன்' படத்தின் கதைதான் 'நீதி'யாக தமிழில் எடுக்கப்பட்டது. ராஜா படத்தில் நடிகர்திலகத்துக்கு நிறைய டிசைன் டிசைனாக ட்ரெஸ் எடுத்துக்கொடுத்து விட்டோம் என்று நினைத்தாரோ என்னவோ, நீதி படத்தில் முதல் காட்சி முதல் வணக்கம் போடும் வரை ஒரே ட்ரெஸ்தான். ஆம், கைதியாக கிராமத்தில் தங்கியிருக்கும் ஒரு லாரி டிரைவர் வித விதமான உடையணிந்தால் லாஜிக் இடிக்காதா.. அதனால்தான். இடையில் 'எங்களது பூமி' பாடலின்போது மட்டும் ஒரு பைஜாமா ஜிப்பா அணிந்திருப்பார், அதுவும் கூட அவர் தங்கை எடுத்துக் கொடுத்திருப்பார்.

    குடிபோதையில் லாரி ஓட்டி வரும்போது கவனக்குறைவினால் விடிகாலைப்பொழுதில் ஒரு விவசாயியையும் அவனது ஒரு மாட்டையும் கொன்று விட, நீதித்துறை அந்த டிரைவருக்கு அளிக்கப்போகும் சிறைத்தண்டனையால், பாதிக்கப்பட்ட விவசாயியின் குடும்பத்துக்கு கிடைக்கப்போவது என்ன?. ஒன்றுமில்லை. அதற்கு மாறாக, கொலையாளியே அந்த கிராமத்தில் கைதியாக இருந்து, தண்டனைக்காலத்தில் அவர்களது நிலத்தை உழுது பயிரிட்டு, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்தால், கொலையாளிக்கும் தண்டனை கிடைத்தது போலிருக்கும், பாதிக்கப்பட்ட விவசாயக்குடும்பமும் பயனடைந்தது போலிருக்கும் என்ற வித்தியாசமான கருவில் உருவானதுதான் கதை. ஆம் வழக்கமான அரைத்த மாவு அல்ல. இதுவரை பார்த்திராத புதிய மாவு.

    நீதிபதியாக வரும் மேஜர் சுந்தர்ராஜன், தன்னிச்சையாக இப்படி ஒரு வித்தியாசமான தண்டனையைக் கொடுக்காமல், தன்னுடைய இந்த பரீட்சாத்த முயற்சிக்கு அனுமதி வழங்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் தன்னுடைய வாதத்தை ஆணித்தரமாக எடுத்துரைப்பதும், அதற்கு நாகையா தலமையிலான ஐந்து நீதிபதிகளடங்கிய 'ஃபுல் பெஞ்ச்' அனுமதியளிப்பதும், படத்துக்கு முதுகெலும்பான, ஒத்துக்கொள்ளத்தக்க காட்சியமைப்பு.

    தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு, இன்ஸ்பெக்டர் பாலாஜியால் கிராமத்தில் கொண்டுவந்து விடப்பட்ட டிரைவர் ராஜாவுக்கு (நடிகர் திலகம்) காவலாக கான்ஸ்டபிள் கன்னையா (சந்திரபாபு). தங்கள் குடுமபத்தலைவனும், குடும்பத்துக்கு அச்சாணியாகவும் இருந்த விவசாயியைக் கொன்று விட்டு, தங்கள் வீட்டுக்கே கைதியாக வந்திருக்கும் ராஜாவை, இறந்தவனின் மனைவி சீதா (சௌகார்), கண்ணில்லாத தாய் காந்திமதி, ஒரு காலில்லாத தந்தை எஸ்.வி.சுப்பையா, கல்யாணத்துக்கு நிற்கும் தங்கை ஜெயகௌசல்யா எல்லோரும் வெறுத்து ஒதுக்க, சௌகாரின் இரண்டு குழந்தைகளில் கடைசி பெண்குழந்தைதான் (பேபி இந்திரா) முதலில் அவனிடம் வந்து, தன் கள்ளம் கபடமில்லாமல் அவனிடம் பேசுகிறது.

    "வாங்க, எங்கப்பாவை பாக்க வந்தீங்களா?. எங்க வீட்டுல ஒரு மாடு செத்துப்போச்சு. வேற மாடு வாங்க அப்பா வெளியூர் போயிருக்கு" என்று அந்த பிஞ்சு குழந்தை பேசும்போது, அந்த கைதிக்கு மட்டுமல்ல, நமக்கும் இதயம் சற்று இடம் பெயர்வது உண்மை. போதையில் கவனக்குறைவால் எவ்வளவு பெரிய மாபாதகம் செய்துவிட்டோம் என்று அந்தக் கைதியின் நெஞ்சில் ஈட்டியாய் தாக்குவதையும், குற்ற உணர்வால் குன்றிப்போவதையும் ரொம்ப அற்புதமான முகபாவத்தால் காட்டியிருப்பார் நடிகர் திலகம்.

  9. #18
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    நீதி - 2

    நலிந்த குடும்பத்தின் பணத்தேவையை அறிந்து கொண்டு பண்ணையார் நாகலிங்கமும் (மனோகர்) அவரது எடுபிடியான எம்.ஆர்.ஆர்.வாசுவும் சேர்ந்து, இவர்களது நிலத்தை சொற்ப காசுக்கு அபகரிக்க முயல, விவரம் அறிந்த ராஜா சரியான நேரத்தில் வந்து அதை தடுத்துவிட, பண்ணையாருக்கும் ராஜாவுக்கும் பகை முற்றுகிறது.

    விவசாயத்தைப்பற்றி எதுவுமே தெரியாத டிரைவர் ராஜா, ஒற்றை மாட்டை வைத்துக்கொண்டு சிறுவர்களின் துணையோடு நிலத்தை உழ முயற்சிப்பதும், குழந்தைகளைக்காணாமல் தேடி வரும் சுப்பையா, கைதி ராஜாவை திட்டுவதும் கலகலப்பு. எப்படி படிப்படியாக அந்த வீட்டிலுள்ளவர்களின் மனதை மாற்றி தன்னைப்புரிந்துகொண்டு, அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கிறார் என்பதுதான் கதையின் சுவாரஸ்யமான நகர்வு. அம்மா திட்டினாள் என்பதற்காக ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்போகும் குழந்தையைக் காப்பாற்றி அழைத்து வரும்போது குழந்தைகள் மனதில் இடம் பிடிக்கும் ராஜா, இறந்தவனின் தங்கை ஜெயகௌசல்யா விரும்பும் பையனையே திருமணம் செய்துவைக்க முயற்சிகள் மேற்கொள்ளும்போது அவள் மனதிலும், அவளது திருமணம் நடைபெறும் கோயிலில் தாக்கவ்ரும் கும்பலின் அடிகளைத்தாங்கிக்கொண்டு தன் ரத்தத்தை சிந்தி அந்தத் திருமணத்தை நடத்தி வைப்பதன் மூலம் சுப்பையா மற்றும் காந்திமதியின் மனதை மாற்றும் ராஜா, சௌகாரின் மனதை மாற்றி தன் பக்கம் திரும்ப வைத்து அவள் மன்னிப்பைப் பெற படாத பாடு படுகிறான்.

    இதனிடையில் கிராமத்தில் 'பயாஸ்கோப்' படம் காட்டும் ராதாவுக்கும் (ஜெயலலிதா) ராஜாவுக்கும் ஏற்படும் மோதல் பின்னர் காதலாக மாறுகிறது. இந்தப்படத்தில் ஜெயலலிதாவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாத பாத்திரம். தொட்டுக்கொள்ள ஊறுகாய். அவ்வளவுதான். ராஜாவை அடைவதில் இவருக்கும் மனோரமாவுக்கும் நடக்கும் உரையாடல்கள் சுவையானவை. சந்திரபாபு, மனோரமா வெல்லாம் இருந்தும் சிரிப்புக்கு கடும் பஞ்சம். மனோரமாவின் டிராக்டரை ராஜா ரிப்பேர் சரி செய்யுமிடத்தில் மனோரமா பேசும் வசனங்களும், தன்னை 'அக்கா' என்று அழைத்த ஜெயலலிதாவுடன் சண்டை போடுமிடத்திலும் மனோரமாவின் முத்திரை.

    வில்லன் மனோகரின் அடியாட்களால் கடத்தப்பட்டு குடோனில் அடைக்கப் பட்டிருக்கும் ஜெயலலிதாவை, தன் உடையைதந்து தப்பிக்க வைத்து அனுப்பி விடும் சௌகார் ஜானகியை, வில்லன் மனோகர் கற்பழிக்க முயல, கதறல் சத்தம் கேட்டு அங்கு வரும் கைதி ராஜா, பூட்டியிருக்கும் குடோன் கதவை லாரியால் மோதித்திறந்து, மனோகருடன் சண்டையிட்டு சௌகாரைக் காப்பாற்ற, ராஜாவின் நல்ல மனம் அறிந்துகொண்ட சீதா (சௌகார்), ராஜாவை மன்னித்து, தங்கள் குடுமபத்தில் ஒருவராக அவரை ஏற்றுக்கொள்கிறார்.

    இதனிடையே ராஜாவின் தண்டனைக்காலம் முடிந்து அவரை அழைத்துப்போக வரும் இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம், அந்தக்குடும்பத்தினருடன் அந்தக்கிராமத்திலேயே ஆயுள் கைதியாக இருந்துவிடப்போவதாகச் சொல்லி ராஜா அவரை திருப்பி அனுப்பி விட, சோகமாக துவங்கிய படம் சுகமான முடிவு.

    தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் பாலாஜி தயாரித்த இந்தப்படம், அதிக பொருட்செலவோ, பிரம்மாண்டமான செட்டுக்களோ இல்லாமல், முழுக்க கிராமத்திலேயே எடுக்கப்பட்ட படம். கிராமத்தின் வண்ண ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை. ஒளிப்பதிவு மஸ்தான். மோகினிப்பிசாசு குடியிருப்பதாகச் சொல்லப்பட்ட மரத்தை வெட்டப்போன ராஜா, காலையில் செத்துப்போய் கிடப்பதாக நடிப்பதும், ஆரம்பத்திலிருந்து பெரிய மீசையுடன் வரும் ராஜாவிடம், மோகினிப்பேய் கதையைக்கேட்டுகொண்டே மீசையை நாவிதன் மழித்து விடுவதும் சுவையான இடங்கள். ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதியிருந்தார்.

    கவியரசர் கண்னதாசனின் பாடல்களுக்கு 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் எல்லாமே நன்றாக அமைந்திருந்தன. ஷோக்குப் பேர்வழியான டிரைவர் ராஜா, ஆரம்பத்தில் சாராயத்தைப் போட்டுக்கொண்டு ஆட்டக்காரி சி.ஐ.டி.சகுந்தலாவுடன் ஆட்டம் போடும், "மாப்பிள்ளையே பாத்துக்கடி மைனாக்குட்டி" என்ற பாடல். வட இந்திய 'கவாலி' ஸ்டைலில் டி.எம்.எஸ். சோலோ. பாடலின்போது நடிகர்திலகத்தின் டான்ஸ் மூவ்மெண்ட்டுகள் (குறிப்பாக வித்தியாசமான கைதட்டல்கள்) சூப்பர். ரசிகர்களின் கைதட்டல் பறக்கும். பாடல் முடிந்ததும் கே.கண்ணனுடன் ஒரு சின்ன சண்டைக்காட்சி. (இப்பாடல் முடிந்து, லாரி ஓட்டிபபோகும்போதுதான் விபத்து நடக்கும்).

  10. #19
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    நீதி – 3

    கிராமத்தில் கைதியாக இருக்கும்போது, சாராயக்கடை வாசலில், குடிக்கப்போகும் கணவனைத்தடுக்கும் மனைவிடம் குடிகாரன் ஒருவன், 'நாளையிலேர்ந்து குடிக்க மாட்டேன் தங்கம், இன்னைக்கு மட்டும் கொஞ்சம் குடிச்சுக்கிறேன்' என்று சத்தியம் செய்துவிட்டுப்போகும் கனவனைப்பார்த்து, அவன் சொன்ன வார்த்தையிலிருந்தே
    "நாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்.
    இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்"
    என்ற ரொம்ப ஃபேமஸ் பாடலின் பல்லவியைத் துவங்குவார். இந்தப்பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக கைதட்டல்கள். (பெண் ரசிகைகளுக்கு பிடிக்காவிட்டலும் கூட). இதுவும் டி.எம்.எஸ்.சோலோதான்.

    இப்பாடல் முடியும் தறுவாயில், தங்கை ஜெயகௌசல்யாவுக்கும் அவருடைய காதலனாக வரும் பாலச்சந்திரனுக்கும் நடக்கும் உரையாடலைக் கேட்டதும், அவர்களை ஒன்று சேர்த்து வைப்பதற்காக, தன்னுடைய குடிப்பழக்கத்தை விடுவதாக முடிவெடுப்பார். 'கடவுளே, எல்லாத்தையும் என்கிட்டேயிருந்து பறிச்சிக்கிட்ட மாதிரி, இதையும் பறிச்சிட்டியே' என்று சொல்லிக்கொண்டே சாராய பாட்டிலை, ஆற்றங்கரை கோயில் படிக்கட்டில் வீசியடிப்பார். ரசிகர்களுக்கு சந்தோஷம்.

    பயாஸ்கோப் படம் காட்டும் ஜெயலலிதா பாடும் பாடல்
    "ஓடுது பார நல்ல படம்.. ஓட்டுவது சின்னப்போண்ணு"
    பி.சுசீலா தனித்துப்பாடியிருப்பார். இப்பாடலின் இடையே வரும் வரிகள்... (அப்போது வங்கதேசப்போர் முடிந்து, இந்தியா வெற்றியடைந்து, தனி வங்கதேசம் உருவாகியிருந்த நேரம்)
    "வங்காளத்தில் சேனை போகும் வேகம் பாருங்க
    இந்திராகாந்தி அங்கே பேசும் மேடை பாருங்க
    காமராஜர் பின்னால் நிற்கும் கூட்டம் பாருங்க
    கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க"
    இந்தக்கட்டத்தில், கோவையில் நடந்த நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழாவின் கூட்டமும், அதில் நடிகர்திலகம், பெருந்தலைவரைப் பார்த்துக்கொண்டே பேசும் காட்சியும் காட்டப்படும். ரசிகர்களின் உற்சாகத்துக்கு கேட்கணுமா?. ரசிகர்களின் கைதட்டலில் தேவிபாரடைஸ் திரையரங்கே அதிர்ந்தது. (திரையிடப்பட்ட எல்லா அரங்கமும் அதிர்ந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை).

    கிளைமாக்ஸுக்கு சற்று முன்னால் வரும் பாடல்...
    "எங்களது பூமி காக்க வந்த சாமி
    எந்நாளும் பக்கம் நின்னு நல்ல வழி காமி"
    கிராம மக்கள் மொத்தமும் திரண்டு நடிகர்திலகத்தை வாழ்த்திப்பாடுவதாக அமைந்திருக்கும். பி.சுசீலா, கோவை சௌந்தர்ராஜன் இவர்களுடம், மனோரமா, சந்திரபாபு ஆகியோரும் பாடியிருப்பார்கள். படம் முழுக்க ஒரே உடையுடன் வரும் நடிகர்திலகம், இந்த ஒரு பாடலுக்கு மட்டும் தங்கை ஜெயகௌசல்யா எடுத்துக்கொடுத்த வெள்ளை ஜிப்பா, பைஜாமாவுடன் ஆடுவார். பின்னர் மீண்டும் கிளைமாக்ஸ் வரையில் பழைய கருநீல ஜீன்ஸ், ஷர்ட்தான்.

    செண்டிமென்ட், சீரியஸ், பொழுதுபோக்கு ஆகிய அனைத்தையும் கலந்து இப்படத்தை இயக்கியிருந்தார் சி.வி.ராஜேந்திரன்.

    சென்னையில் தேவிபாரடைஸ், பிரபாத், சரவணா அரங்குகளில் திரையிடப்பட்ட நீதி 99 நாட்களில் மாற்றப்பட்டது. அதற்கு கீழ்வரும் காரணத்தை சொல்வார்கள்....

    இந்தியில் இருந்து இப்படத்தின் கதையை வாங்கும்போது, இப்படம் நூறுநாட்கள் ஓடினால், கதைக்காக மேற்கொண்டு ஐந்து லட்சம் ரூபாய் (72-ல் அது பெரிய தொகை) தருவதாக பாலாஜி ஒப்பந்தம் போட்டிருந்தார் என்றும், அந்த ஒப்பந்தத்திலிருந்து தப்பிக்க, வேண்டுமென்றே '99' நாட்களில் படத்தை திரையரங்கிருந்து தூக்கி விட்டார் என்றும் பரவலாக ஒரு பேச்சு உண்டு. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது. ஆனால் இதை மெய்ப்பிப்பது போல தேவிபாரடைஸ் 'ஷீல்ட் காலரி'யில், மற்ற வெற்றிப்படங்களின் ஷீல்டுகளோடு, 'நீதி' படத்தின் '99வது நாள்' PECULIAR SHIELD ஒன்றை இன்றைக்கும் காணலாம்.

    நடிகர்திலகத்தின் வெற்றிப்படங்களில் ஒன்றான 'நீதி' திரைப்படத்தைப்பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.

  11. #20
    Senior Member Regular Hubber
    Join Date
    May 2007
    Location
    Chennai,India
    Posts
    335
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    Quote Originally Posted by rangan_08
    Dear friends, as i said earlier, I'm sharing my view abt.Gowravam.

    Now, enakku piditha scenes in Gowravam :

    Scene 1 : Sr.Nt talks abt his aim in life - " enakkunu vazhkayile oru latchiyam irunda, adu justice post. It is my aim, ambition and my goal ". Anda goal engira varthaiyai solliyabadiye ezhundirippar - wow ! wat a stylish dialogue delivery

    Scene 2 : Jr NT asks, "Yaarala periappa anda Mohanadasai kappatha mudiyum?" to which Barrister replies, " Ennala mudiyumda..ennala mudiyum " . Again, the dialogue rendered in a stylis manner.

    Scene 3 : When Inspector (played by another good artiste, Senthamarai) comes to fetch Jr NT to appear as Public Prosecutor, Sr. will be sitting in a sofa. Shoulersai oru madhiri shake seidu thenavatta inspectarai parthu ketpar " Insp. he is not only my son, ennudaya thozhilukkum avandhan varisu. Naama courtleye meet pannalam" . Appo, he will be wearing only socks - kaalai press seidu konde Jr idam solvar "Dei Kanna, indha kaala konjam pudichi viduda". Great.

    Sollikonde pogalam.......other's, pls continue
    மோகன் தாஸ் வழக்கில் தீர்ப்பு சொல்லப்படும் நாள். பாரிஸ்டர் ரஜினிகாந்த் தன் வீட்டு மாடிப்படிக்கட்டில் சாய்ந்து உட்கார்ந்து இருப்பார். அப்போது அங்கே வரும் மனைவி பண்டரிபாய்:

    "என்னன்னா இங்கே உட்கார்ந்துட்டேள்?. கோர்ட்டுக்குப் போகலையா?"

    "இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? ஜட்ஜ்மெண்ட் டே. கண்ணனா மிஸ்டர் ரஜினிகாந்தா என்று தீர்மானிக்கும் நாள். CAT ON THE WALL".

    எழுந்து மாடிக்குப்போவார். கூடவே எம்.எஸ்.வி.யின் டெர்ரிஃபிக் BACKGROUND மியூஸிக். மாடி ரூம் கதவை திறக்கும்போதும் டிரம்ஸ், ட்ரம்பெட்டுடன் அதிர வைக்கும் சவுண்ட்.

    கையில் பைப்புடன் சட்டென்று பண்டரிபாய் பக்கம் திரும்பி, குனிந்து

    "டீ செல்லா... ஒரு சின்னப்பய இன்னைக்கு கோர்ட்டில் எனக்கு டைம் குடுக்கிறாண்டி. ஒவ்வொரு தடவை நான் ஜெயிக்கும்போதும் ஓடி வந்து கைகுலுக்குவான். முத்தம் கொடுப்பான். நான் வளர்த்த பையனாச்சே. இன்னைக்கு அவன் ஜெயிக்கிறான்னு தெரிஞ்சதும் எனக்கு ஏன் பொறாமை. ஜெயிச்சா ஜெயிச்சுட்டு போகட்டுமே".

    "நோ" (மீண்டும் எம்.எஸ்.வி.யின் அதிரடி இசை) இத்தனை நாள் நான் கஷ்டப்பட்டு சேர்த்து வச்ச கௌரவம். அதனால் இந்த சொஸைட்டியில் எனக்கு கிடைச்ச ஸ்டேட்டஸ், எல்லாத்தையும் விட்டு விட்டு 'அம்போன்னு' நிக்க முடியுமா? NEVER".

    ('NEVER' என்ற வார்த்தைக்கு ஒரு STYLE கிடைச்சதே இந்தப்படத்தில் இருந்துதான்)

    நேரே சென்று தன்னுடைய கேஸ்கட்டுகள் அடங்கிய ரேக்கிலிருந்து ஒவ்வொரு கேஸ் கட்டாக எடுத்துப்போடுவார்.

    "டீ செல்லா...., இதுதான் நான் அட்டெண்ட் பணிய முதல் கேஸ். இந்த கேஸை நான் HANDLE பண்ணிய அழகைப் பார்த்துதான், பிற்காலத்தில் இவன் பெரிய வக்கீலா வருவான்னு நினைச்சு உங்கப்பன் உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சான்"

    அடுத்த் கட்டை தூக்கிப்போட்டு

    "இந்த கேஸில ஜெயிச்சுத்தான் பங்களா வாங்கினேன்"

    அடுத்த கேஸ் கட்டைப்போட்டு

    "இந்த கேஸுலதான் ஊரிலேயே பெரிய மனுஷன்னு பேர் எடுத்தேன்"

    "இதோ இந்த கேஸுலதான், தினம் பத்தாயிரம் ஃபீஸ் வாங்கி எங்கு பார்த்தாலும் 'ரஜினிகாந்த்..ரஜினிகாந்த்'னு பேசும்படி செஞ்சேன்... இதெல்லாம் சாதாரண கேஸ் கட்டுகள் இல்லடீ.. என் முன்னேற்றப்பாதையின் படிக்கட்டுக்கள்"

    சட்டென்று விரலை சொடுக்கிபடி அடுத்த கேஸ்கட்டை எடுத்துப்போட்டு....

    "ஆனா இன்னைக்கு இந்த மோகன் தாஸ் கேஸ்...."

    பண்டரிபாய் : "என்னங்க.."

    "ஷட் அப்" (கேஸ் கட்டுகளின் கடைசியில் கண்ணனின் உருவம் தெரிய) கண்ணா.. உன்னுடைய முதல் கேஸே என்னுடைய கடைசி கேஸா போயிடுமா?.. ஏண்டா படவா என்னை ஜெயிச்சுருவியா?"

    பண்டரிபாய்: "அய்யோ ஜெயிச்சா ஜெயிச்சுட்டுப் போகட்டுமே.. யானைக்கும் அடி சருக்கும்னு சொல்லுவாளே..."

    "ஆமாண்டி.. யானைக்கும் அடி சறுக்கும். ஆனா யானை சறுக்கி கீழே விழுந்தா எப்படி அடி படும்னு தெரியுமா?. அதால எழுந்திருக்க முடியாது. அதைத்தானே எல்லோரும் எதிர்பார்க்கிறா... இவன் எப்படா விழுவான்னுதானே எதிர்பார்க்கிறா?.... நடக்காதுடி..."

    My God... What a terrific expression.

    What a Scene ! . This is my most favorite NT Movie.

    As CRajkumar_be mentioned earlier, Style is defined in this movie.

Page 2 of 148 FirstFirst 12341252102 ... LastLast

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •