Page 111 of 148 FirstFirst ... 1161101109110111112113121 ... LastLast
Results 1,101 to 1,110 of 1479

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4

  1. #1101
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி.

    வருடம் - 1954

    1. முதன் முதலாக ஒரே படம் மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டு அவை மூன்றும் ஒரே வருடம் வெளியானதும் நடிகர் திலகத்தின் படம் தான். படம் - மனோகரா.

    2. மதுரை - ஸ்ரீதேவி திரையரங்கில் முதன் முதலாக அதிக நாட்கள் ஓடிய படம் மனோகரா. ஓடிய நாட்கள் - 156

    3. முதன் முதலாக பாடல்கள் இல்லாமல் வெளி வந்த தமிழ் படம் - அந்த நாள்.

    4. முதன் முதலாக கதாநாயகன் முதற் காட்சியிலே இறந்து விடுவது போல அமைந்ததும் அந்த நாள் படத்தில் தான்.

    5. முதன் முதலாக வேறு தயாரிப்பாளருடன் கூட்டு சேராமல் ஏ.வி. எம்.நிறுவனம் தனியாக தயாரித்த படம் அந்த நாள்.

    6. முதன் முதலாக டி.எம்.எஸ். நடிகர் திலகத்திற்கு பின்னணி பாடியது இந்த வருடத்தில் தான். படம் - தூக்கு தூக்கி.

    7. முதன் முதலாக ஆன்டி சென்டிமென்ட் கதை தமிழில் திரைப்படமாக வந்ததும் நடிகர் திலகத்தின் படம் தான். படம் - எதிர்பாராதது.

    8. சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம் துவங்கப்பட்ட முதல் வருடத்திலேயே முதன் முதலாக பரிசு பெற்ற படங்கள் - அந்த நாள் மற்றும் தூக்கு தூக்கி.

    9. முதன் முதலாக இந்திய அரசாங்கத்தின் திரைப்பட விருது குழுவின் நற்சான்றிதழ் பெற்ற தமிழ் படங்கள் - அந்த நாள் & எதிர்பாராதது.

    (சாதனைகள் தொடரும்)

    அன்புடன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1102
    Senior Member Veteran Hubber sarna_blr's Avatar
    Join Date
    Dec 2007
    Location
    yaadhum oorEy ; yaavarum kElir
    Posts
    4,076
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas
    சரவணா,

    ஓரங்க நாடகங்கள் என்றால் படத்தின் கதைக்கும் அதற்கும் தொடர்பு இருக்காது. ஆனால் திரைப்படத்தின் நடுவே வரும். நீங்கள் ராஜபார்ட் ரங்கதுரை பார்த்திருந்தால் உங்களுக்கு புரியும்.

    ஸ்ரீ,

    Good that you are sharing the info with your father.

    அன்புடன்
    for the information thiru Murali sir

    I have seen that film

    and thanks a ton for ur informartions :P
    Seven social sins:
    1.Politics without principles
    2.Wealth without work
    3.Pleasure without conscience
    4.Knowledge without character
    5.Commerce without morality
    6.Science without humanity
    7.Worship without sacrifice

  4. #1103
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Murali sir
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  5. #1104
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் முரளி,

    அவர் நடிக்க ஆரம்பித்த ஆரம்ப காலத்திலேயே எத்தனை "முதன்முதலாக"....!!!!!!.

    முதன்முதலாக 'ஃப்ளாஷ்பேக்'கிலேயே படத்தின் கதை முழுவதும் சொல்லும் பாணி துவங்கப்பட்டதும் "அந்த நாள்" படத்தில்தானாம்.

    (தனிப்பட்ட முறையில் ஒரு வேண்டுகோள். எந்த டிவி சேனலிலாவது 'சித்ரா பௌர்ணமி' படம் திரையிடப்பட்டால் சொல்லுங்கள். விசிடி., டிவிடி தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அது ஒன்று மட்டும் தப்பித்துக்கொண்டே இருக்கிறது).

  6. #1105
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவாஜியின் சாதனை சிகரங்கள்

    தொடர்ச்சி

    வருடம் - 1954 & 1955

    1. முதன் முதலாக தமிழில் ஒரே நடிகரின் இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது நடிகர் திலகத்திற்கு தான்.

    படங்கள் - அந்த நாள் & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.

    வெளியான நாள் - 13.04.1954.

    2. முதன் முதலாக மதுரையில் ஒரே படம் இரண்டு தியேட்டரில் திரையிடப்பட்டது நடிகர் திலகத்தின் படம் தான்.

    படம் - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.

    திரையிடப்பட்ட அரங்குகள் - தங்கம் & நியூசினிமா.

    3. அதே நாளில் அந்த நாள் படமும் மதுரை - ஸ்ரீமீனாக்ஷி திரையரங்கில் வெளியானது. ஆக முதன் முதலாக மதுரையில் ஒரே நடிகரின் படங்கள் மூன்று திரை அரங்குகளில் வெளியானதும் நடிகர் திலகத்திற்கு தான்

    4. முதன் முதலாக ஒரு நடிகர் நடித்த இரண்டு படங்கள் ஒரு வருடத்தில் ஒரே நாளில் வெளியிட்ட சாதனை மட்டுமல்லாது அதே வருடத்தில் மீண்டும் ஒரு முறை ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானதும் நடிகர் திலகம் மட்டுமே செய்த சாதனைகளாகும். அவை பின்வருமாறு

    படங்கள் - அந்த நாள் & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.

    வெளியான நாள் - 13.04.1954.

    படங்கள் - கூண்டுக்கிளி & தூக்கு தூக்கி.

    வெளியான நாள் - 26.08.1954

    5. முதன் முதலாக சென்னையில் 6 திரையரங்குகளில் வெளியான தமிழ் படம் - எதிர்பாராதது.

    6. முதன் முதலாக சென்னையில் 5 திரையரங்குகளில் 80 நாட்களை கடந்து ஓடிய தமிழ் படம் - எதிர்பாராதது.

    அரங்குகள் - சித்ரா,காமதேனு, பிராட்வே, மகாலக்ஷ்மி, பாரத்.

    7. முதன் முதலாக ஒரே வருடத்தில் ஒரு தமிழ் பட கதாநாயகன் நடித்த அதிகமான படங்கள் வெளியானது இந்த வருடத்தில் தான். நடிகர் திலகம் நடித்த 10 படங்கள், 1954-ல் வெளியானது.

    8. இதில் மூன்று படங்கள் 100 நாட்களை கடந்தன.

    மனோகரா

    கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி -

    [சென்னை - காசினோ, சேலம் - நியூ சினிமா, திருச்சி -பிரபாத்.]

    எதிர்பாராதது

    9. முதன் முதலாக பந்துலுவும் நடிகர் திலகமும் ஒரு முழு நீள படத்திற்கு இணைந்தது இந்த படத்தில் தான். படம் - முதல் தேதி.

    10. முதன் முதலாக படம் முழுவதும் கனவு காட்சியாகவே திரைக்கதை அமைக்கப்பட்ட படம் - முதல் தேதி.

    11. முதன் முதலாக தமிழ் திரை உலகில் நடிக்க வந்த மூன்றே வருடங்களில் 25 படங்கள் அதுவும் நாயகனாகவே நடித்தவர் நமது நடிகர் திலகம் மட்டும் தான். [1952 -1955]

    (சாதனைகள் தொடரும்)

    அன்புடன்

  7. #1106
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Nov 2006
    Posts
    1,591
    Post Thanks / Like
    மனோகராவும், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி யும் பார்த்து இருக்கேன்.

    எதிர்பாரது பற்றி இப்போத்தான் கேள்விப்படுகிறேன்!

  8. #1107
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas
    5. முதன் முதலாக சென்னையில் 6 திரையரங்குகளில் வெளியான தமிழ் படம் - எதிர்பாராதது.

    6. முதன் முதலாக சென்னையில் 5 திரையரங்குகளில் 80 நாட்களை கடந்து ஓடிய தமிழ் படம் - எதிர்பாராதது.
    'எதிர்பாராதது' -வின் இந்த பெரும் வெற்றி உண்மையிலேயே எதிர்பாராதது
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  9. #1108
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    தமிழ்,

    எதிர்பாராதது பற்றி கேள்விப்பட்டதில்லையா? நடிகர் திலகமும் பத்மினியும் காதலர்கள். தாயை இழந்த நாயகன் வெளிநாட்டிற்கு படிக்க சென்று விட்டு திரும்பி வரும் போது காதலி தன் தாய் ஸ்தானத்தில் அதாவது தன் தந்தைக்கு மனைவியாக இருப்பதை பார்க்கிறான். அதன் பிறகு நடக்கும் உணர்ச்சி போராட்டமே கதை, 1954- லேயே இப்படி புரட்சிகரமான சிந்தனையோட்டம். கதை வசனம் - ஸ்ரீதர்.

    ஜோ,

    மக்கள் அந்த கால கட்டத்திலேயே புதுமையை விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தான் இந்த படத்தின் வெற்றி சுட்டிக் காட்டுகிறது.

    அன்புடன்

  10. #1109
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Murali sir,

    அருமையான தகவல்களை வழக்கம் போல சுவையாக எழுதி வருகிறீர்கள். ரொம்ப சந்தோஷமா இருக்கு.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  11. #1110
    Senior Member Veteran Hubber sarna_blr's Avatar
    Join Date
    Dec 2007
    Location
    yaadhum oorEy ; yaavarum kElir
    Posts
    4,076
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas
    தமிழ்,

    எதிர்பாராதது பற்றி கேள்விப்பட்டதில்லையா? நடிகர் திலகமும் பத்மினியும் காதலர்கள். தாயை இழந்த நாயகன் வெளிநாட்டிற்கு படிக்க சென்று விட்டு திரும்பி வரும் போது காதலி தன் தாய் ஸ்தானத்தில் அதாவது தன் தந்தைக்கு மனைவியாக இருப்பதை பார்க்கிறான். அதன் பிறகு நடக்கும் உணர்ச்சி போராட்டமே கதை, 1954- லேயே இப்படி புரட்சிகரமான சிந்தனையோட்டம். கதை வசனம் - ஸ்ரீதர்.
    Thiru murali ayyaa :P
    yEdhO oru Rajini padaththula kooda ippadi oru twist irukkudhu illayaaa is it moondru mudichchu or netrikann
    Seven social sins:
    1.Politics without principles
    2.Wealth without work
    3.Pleasure without conscience
    4.Knowledge without character
    5.Commerce without morality
    6.Science without humanity
    7.Worship without sacrifice

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •