Page 28 of 33 FirstFirst ... 182627282930 ... LastLast
Results 271 to 280 of 329

Thread: Shankar-Ganesh

  1. #271
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    பிரியமிகு இசை விரும்பிகளே,

    அடுத்து இங்கே உங்களை மகிழ்விக்க "இன்னிசை வேந்தர்களின்" இனிமையான இசையில் காலத்தால் அழியாத அசத்தல் பாடல் ஒன்று.

    படம்: அன்புரோஜா
    பாடல்: ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
    பின்னணி: A.M.ராஜா & P.சுசீலா
    இசை: சங்கர்-கணேஷ்

    http://www.mediafire.com/listen/lmc2...anna_Intha.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்

  2. Likes madhu liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #272
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே,

    தொடர்ந்து இந்த இழையில் இசை இரட்டையர்களின் மற்றுமொரு இனிய மெல்லிசை பாடல்...

    படம்: டாக்டரம்மா
    பாடல்: கண்ணருகே வெள்ளிநிலா
    பின்னணி: P.சுசீலா
    இசை: சங்கர்-கணேஷ்

    http://www.mediafire.com/listen/w01a...Velli_Nila.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்

  5. Thanks madhu thanked for this post
  6. #273
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    "கண்ணருகே வெள்ளி நிலா" ... சின்ன வயதில் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்ட பாடல். ஒரே டிக்கட்டுக்கு இரண்டு படம் பார்க்கப் போய் இரண்டாவதாக இந்தப் படம் போட "லேட் ஆயிடிச்சு" என்று என் சொந்தக்காரப் பையன் இழுத்துக் கொண்டு வர ஸ்டெதஸ்கோப் மீது டைட்டில் விழுந்ததைப் பார்த்ததோடு சரி... இந்தப் பாட்டு மட்டும் முந்தைய படத்தின் இண்டெர்வெல்லில் போட்டு மனதுக்குள் பதிய வைத்தார்கள். ( அந்த அண்ணன் முறுக்கு, வெண்ணை பிஸ்கட் வாங்கி கொடுத்ததும் மறக்கவில்லை )

    சந்தேகத்தால் காதலித்து மணந்த கழைக்கூத்தாடிப் பெண்ணை கணவன் பிரிய அவள் ராணுவ மேஜர் உதவியுடன் டாக்டராக மாறி குழந்தையையும் வளர்த்து... நமப முடியாத கதை... ஆனாலும் மஞ்சுளா கொஞ்சம் நன்றாகவே நடித்திருப்பதாக அந்தக் காலத்தில் சொல்லக் கேட்டதுண்டு.

    "செல்வங்கள் ஓடி வந்தது" என்று இன்னொரு சுசீலா பாட்டு.. கொஞ்சம் போதையோடு..

    நன்றி ஜாக்.. பாடலுக்கு மட்டுமல்ல...மீண்டும் பழைய நினைவுகளை அசை போட வைத்ததற்கும்..

    வீடியோ லிங்க இதோ


  7. Likes gingerbeehk liked this post
  8. #274
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    அன்பு நண்பர் மது,

    உங்கள் பழைய நினைவுகளை இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். பசுமை மாறாத அந்த கால நினைவுகள் என்றுமே இனிமைதான். எனக்கும்கூட இந்த படம் பார்க்க போனபோது நடந்த மறக்க முடியாத ஒரு சம்பவம்..

    நானும் என் பால்ய நண்பன் ஒருவனும் ஸ்கூலுக்கு கட் அடித்துவிட்டு பக்கத்துக்கு ஊர் திரையரங்குக்கு சைக்கிளில் டபுல்ஸில் மேட்னி ஷோ கிளம்பிவிட்டோம். படம் முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது பாழாய் போன சைக்கிள் நடுவழியில் பஞ்சர். எங்கள் ஊருக்கும், படம் பார்க்கப்போன ஊருக்கும் 5 கி.மீ. தூரம். பஞ்சர் ஒட்ட பக்கத்தில் கடை ஒன்றும் இல்லை. 3 கி.மீ இந்த பக்கமோ அல்லது அந்த பக்கமோதான் போகவேண்டும். கையில் காசும் இல்லை. என்ன செய்வது? பொடி நடைதான்..சைக்கிளை உருட்டிக்கொண்டே.... வீட்டுக்கு வந்து சேரும்போது மாலை 6 மணி. வீட்டில் செம டோஸ்...ஸ்கூல் முடிந்து டிரில் கிளாஸ் என்று பொய் வேறு. ஆனால், மற்றொரு நண்பன் நாங்கள் மதியம் ஸ்கூலுக்கே வரலேன்னு போட்டு கொடுத்து இருக்கான். அப்புறம் என்ன? அப்பா சுத்தி..சுத்தி அடி பின்னிவிட்டார். "டாக்டரம்மா"ட்ட போற அளவுக்கு அப்பாவின் அடியில் காயம் இல்லை என்பது ஆறுதல்.

    என்றும் நட்புடன்,
    ஜாக்
    Last edited by gingerbeehk; 2nd April 2015 at 11:01 AM.

  9. Likes madhu liked this post
  10. #275
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே,

    அடுத்து அருமையான இந்த இழையில் அரிதான, அசத்தலான பாடல் ஒன்று.

    படம்: மருமகளே வாழ்க
    பாடல்: மங்கலமேடை..அதில் மல்லிகை
    பின்னணி: P.ஜெயச்சந்திரன் & P.சுசீலா குழுவினர்
    இசை: சங்கர்-கணேஷ்

    http://www.mediafire.com/listen/8dsh...gala_Medai.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்

  11. #276
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    அன்பின் இசை நெஞ்சங்களே,

    "இன்னிசை வேந்தர்களின்" அருமையான இசையில் காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்று, மீண்டும் உங்கள் மனங்களை தாலாட்ட....

    படம்: ஜம்பு
    பாடல்: ஏனிந்த மயக்கம் ஏனடி ராதா
    பின்னணி: P.சுசீலா
    இசை: சங்கர்-கணேஷ்

    http://www.mediafire.com/listen/bwzn...a_Mayakkam.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்

  12. #277
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ஆஹா... விழுப்புரம் சீதாராம் தியேட்டரில் ரிலீசான அன்றே பார்த்த படம். ( கூட்டம் அலைமோதவே நமக்காக ஸ்பெஷலாக கயிறு கட்டி வச்சு சீட் ரிசர்வ் செய்த மேனேஜர் வாழ்க )... முதல் நாள் பார்த்ததால் முழுப்படமும் பார்க்க முடிந்தது. மூன்றாம் நாளே பாதிக்கு மேல் சென்சாரில் வெட்டி எடுத்துக் கொண்டு போய்விட்டதாக தகவல்... ஹாஹா..

    பாடலை ஆடியோவில் கேட்டு ரசித்தால் ஒரு அற்புதமான பரதமும், இசையும் இணைந்து மனக்கண்ணில் தெரியும். அதை அப்படியே மெயிண்டெயின் செஞ்சா நல்லது. சிக்கன் பிரியாணி விருந்தில் கொழுக்கட்டை போல கொஞ்சம் ஒட்டாமல் இருக்கும் காட்சி... ஆனாலும் இன்று வரை மனதுக்குள் இந்தப் பாட்டு வாசம் வீசிக்கொண்டுதான் இருக்கிறது...

    ஜாக்... ஜம்பு கதை எல்லாம் இங்கே விவரிப்பது கஷ்டமில்லையோ !

  13. Thanks gingerbeehk thanked for this post
    Likes gingerbeehk liked this post
  14. #278
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    அன்பின் நண்பர் மது,

    உங்கள் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மிகவும் ரசனையுடன் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்..

    அடுத்து..பட்டையை கிளப்பிய ஒரு அசத்தல் பாடல். இலங்கை வானொலியில் தவறாமல் ஒலியேற்றப்பட்ட பாடல்.

    "ஜம்பு" படத்தின் உங்கள் அனுபவம்போல், இந்த படத்தில் எனக்கும். ரிலீசான முதல்நாள், முதல் ஷோ. அலைமோதும் கூட்டத்தில் எப்படியோ நசுங்கி டிக்கெட் வாங்கி, தியேட்டர் உள்ளே இடம் இல்லாமல் திரைக்கு முன்னால் இருக்கும் திண்டில் படுத்துக்கொண்டே பார்த்த படம்.

    படம்: மரியா மை டார்லிங்
    பாடல்: மரியா மை டார்லிங்
    பின்னணி: S.P.பாலசுப்ரமணியம்
    இசை: சங்கர்-கணேஷ்

    http://www.mediafire.com/listen/0zzg...My_Darling.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்
    Last edited by gingerbeehk; 6th April 2015 at 07:28 PM.

  15. #279
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    அன்பின் நண்பர்களே,

    மற்றுமொரு அரிதான, அதிகம் கேட்டிராத பாடல் ஒன்று "இரட்டையர்கள்" இசையில்...

    படம்: பூ பூத்த நந்தவனம்
    பாடல்: நான் ஜெயிச்சு காட்டுறேன்
    பின்னணி: மலேசியா வாசுதேவன் & S.ஜானகி
    இசை: சங்கர்-கணேஷ்

    http://www.mediafire.com/listen/ue2r..._Kaatturen.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்

  16. #280
    Senior Member Senior Hubber gingerbeehk's Avatar
    Join Date
    Aug 2006
    Location
    HKSAR
    Posts
    161
    Post Thanks / Like
    பிரியமிகு நண்பர்களே,

    அடுத்து உங்கள் ரசனைக்கு விருந்தாக இனிமையான பாடல் ஒன்று.

    படம்: பாவத்தின் சம்பளம்
    பாடல்: சிரித்தது போதும் நிறுத்திவிடு
    பின்னணி: T.M.சவுந்தரராஜன் (இடைக்குரல்: முத்துராமன் & பிரமிளா)
    இசை: சங்கர்-கணேஷ்

    http://www.mediafire.com/listen/qgiz...thu_Pothum.mp3

    இனிய இசையுடன் இணைவோம்,
    ஜாக்

Page 28 of 33 FirstFirst ... 182627282930 ... LastLast

Similar Threads

  1. Shankar Ganesh - discussion page ?
    By RAGHAVENDRA in forum Memories of Yesteryears
    Replies: 1
    Last Post: 18th November 2009, 08:26 PM
  2. Musical duo SHANKAR-GANESH
    By gingerbeehk in forum Current Topics
    Replies: 0
    Last Post: 22nd October 2006, 12:09 PM
  3. Where is the famous Shankar Ganesh
    By S.Balaji in forum Current Topics
    Replies: 4
    Last Post: 22nd July 2005, 12:44 PM
  4. Shankar Vs A.R.Rahman
    By vjrag_ind in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 107
    Last Post: 1st July 2005, 10:43 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •