Results 1 to 10 of 10

Thread: Oru Kaithyin diary

Threaded View

  1. #1
    Senior Member Seasoned Hubber MumbaiRamki's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    884
    Post Thanks / Like

    Oru Kaithyin diary

    காலை முன்று மணி.கொசு கடி தாங்க வில்லை. எழுத ஆரம்பித்தேன்.பொலம்ப ஆரம்பித்தேன். இது கதை இல்லை. இதில் நிகழ்ச்சிகள் இல்லை. என் அடி மனசில் உள்ள உணர்வுகள், எண்ண ஓட்டம் .அவ்வளவு தான். ஒரு death penalty கொடுக்க பட்ட கைதியிடம் என்ன ஒரு திகில் கதையா expect பண்றீங்க ?

    வாழ்கையில் என்ன சாதித்தேன் ? மனம் மாறுகிறது. காற்றில் சிதறி ஒளிந்து ஓடும் மேகத்தை விட வேகமாக; பிடிப்பை வைத்து ஏறி சிறிது சறுக்கி மற்றொரு பிடிப்பை கண்டுபிடித்து சுற்றி சுற்றி வலயமிட்டு , புதிய தவறுகளை செய்யாமல் பழைய தவறுகளின் சேற்றில் முங்கி சிக்கி , உதவ கைகள் இருந்தும், விருப்பிலமால் அதே சேற்றில் மிதந்து ..ச்சே! கேவலமான வாழ்க்கை!

    தூய்மையான வாழ்க்கை என்ர ஒன்று இருக்கிறதா? தெரியவில்லை. மறந்து போய்விட்டது. துறவியின் வாழ்க்கையின் கதைகளை தூற அறிந்து விட்டேன். கோபம் நிறைய படுகிறேன். ஆயிரம் பிறவிகள் எடுக்கும் அளவு காமம் உள்ளது. மனம் கனத்து விட்டது. நவரச உணர்ச்சிகளும் ஒன்றின் பின் ஒன்றாக எனக்கே தெரியாமல் அனுமதி பெற்று என்னை தெரியாமல் செய்து விட்டது. எது சந்தோஷம்? எது நிறைவான வாழ்க்கை? சத்தியமாக தெரியவில்லை. சத்தியம் எது என்று தெரியவில்லை.

    கடவுளே என்னை காப்பாறு என்று கூற முடியாயவில்லை. கடவுள் இருக்கிறாரா ? ஆம் ஆமென்று பல குரல்கள்.அந்த குரல்களை புத்தகத்தின் வாயிலாக கேட்டு இருக்கிறேன். நம்புவதற்கு அனுபவிக்க வேண்டும். அனுபவிக்க நம்ப வேண்டும். நம்பிக்கை அனுபவத்தை மாற்றுகிறது. உண்மைகளை கண்கள் படிக்கிறன. படித்த உண்மைகள் புரியவில்லையே !- மூளையில் neuron கள் அறுந்து போய் விட்டனவா?

    இசையை ரசிக்க முடியவில்லை. அந்த ஸ்வரங்களை எப்படி ரசித்துள்ளேன். அந்த வயலின் ஓசை மனதில் அசை போடுமே ! புல்லாங்குழல் இதயத்தை நிறுத்தும்! இப்பொழுது எதுவும் தங்குவ தில்லை. எதையும் முரியாய அனுபவிக்க முடிய வில்லை . ஏழு வண்ணங்கள் எவ்வளவு அழகோ அவ்வளவோ அசிங்கம் அவற்றின் முறையற்ற கலவை.

    சரி. புலம்பியது போதும். முதலில் இந்த பயம் போக வேண்டும். என் நம்பிக்கை திடமாக வேண்டும். மனம் யானையின் தும்பிக்கை - நம்பிக்கையுடன் மேலே செல்லட்டும். மற்றவர்களோ ஆசிர்வதிக்கட்டும். மற்றவர்களுடன் நான் என் ஒப்பிட வேண்டும்? எனக்கு என்னை பற்றி தெரியாததால் தானே மற்றவர் போடும் biscuit துண்டுகள் என்னை கவருகின்றன? என்னை சந்தோஷ படுத்தும் துளிகள் எவை ? நான் எப்படி பட்டவன் ? என் ஆசைகள் என்ன ? இந்த கேள்விகளின் பதில்களை நம்பிக்கையில் சாணம் பிடிக்க வேணும்

    பாதை தெரிகிறது. பாதையில் கற்கள் உள்ளன. ஆனால் பாதையை மாற்றலாமா ? அந்த பாதையில் முதலில் கற்களும் பிறகு பூக்களும் இருக்கும். பாதை நிரந்தர தோற்றமுள்ளது இல்லை . அந்த பாதையில் மற்றவர்களும் நடக்கிறனர். அவர்கள் சாப்பிட்டு துப்பும் எச்சில், மற்ற பொருட்கள் எல்லாம் கிழே விழும் -அவை பாதையை உருமாற்றும். ஆனால் பாதை இருக்கும் - உருமாறி.

    சரி - இப்பொழுது நிம்மதியாக இருக்கிறது. பாதையில் முதல் அடி வைக்க தயாரானேன். இப்பொழுது மணி ஐந்து . சூரியன் லேசாக என்னை ஆசிர்வதித்தான். பிரார்த்தனை செய்தேன்.
    " பன்னிரண்டு பிஞ்சு இளம் குழந்தைகள், முப்பது இளம் மங்கையர்கள் - இவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும், அடுத்த பிறவியில் அவர்கள் நன்றாக வாழ வேண்டும். "

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Varshini's diary
    By varshini in forum Stories / kathaigaL
    Replies: 18
    Last Post: 30th January 2007, 08:16 PM
  2. A B C Nee Vaasi (Oru Kaidhiyin Diary) - Homage?
    By inetk in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 26th June 2006, 09:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •