View Poll Results: What do you think of the trend in Present-day Tamil Literature?

Voters
7. You may not vote on this poll
  • Has grown

    3 42.86%
  • Don't know

    0 0%
  • Has deteriorated

    4 57.14%
Page 3 of 5 FirstFirst 12345 LastLast
Results 21 to 30 of 45

Thread: thaRkkaala thamizh ilakkiyam

  1. #21
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    சா. கந்தசாமி'யின் தொலைந்து போனவர்கள்

    இது தற்காலத்தது இல்லை என்றாலும் இத்திரியில் இடுகிறேன்.

    சா.க'வின் ஒரு சில சிறுகதைகளை படித்திருக்கிறேன். மிக சாதாரணமானவையாகவே அவை எனக்குப் பட்டன. அவர் மீது வைத்திருந்த அபிப்ராயத்தை மாற்றியது நான் சமீபத்தில் படித்த "தொலைந்து போனவர்கள்" புதினம்.

    சிறிய புதினம் தான். 200 பக்கம் கூட இல்லை - நத்தையான நானே 3 நாட்களில் படித்துவிட்டேன். மிக எளிதான கதை, சொல்லும் முறை. இன்றைய எழுத்தில் புத்திசாலித்தனம் வழியும் கதைகளிலிருந்து விலகி இப்புதினத்தை படிப்பதே இதமாக இருந்தது. இலக்கியத்தில் கூட இன்று சிடுக்கு விழுந்துவிட்டதே என்ற அங்கலாய்ப்பை தவிற்கமுடியவில்லை. இந்த புதினத்தின் கதையும் அது தான். எளிமையான நண்பர்கள் வாழ்வில் மேலும் மேலும் காலம் படிந்து முடிச்சுகள் விழுந்து, வாழ்க்கையை மாற்றி, ஆட்களை மாற்றி விடும் சுழல். வளர்ச்சி/வீழ்ச்சி போன்ற எளிமையான வகைபடுத்துதலுக்கு அப்பால் காலம் நகர்ந்துவிட்டது என்ற ஒரே உண்மையை, மிகையான சோகம் இல்லாமல், எளிமையாக, அழகாக படம்பிடித்திருக்கிறார் சா.கந்தசாமி.

    தாமு என்கிற தாமோதரன் தான் பிரதான பாத்திரம். நடுவயது தாமு தனது பள்ளி நண்பர்களை தேடி பிடிப்பது தான் கதை.
    அவன் வாழ்க்கையின் துண்டும், அவர்கள் வாழ்க்கையின் துகள்களும், நிலைகளும் நமக்குக் காணக்கிடைக்கின்றன.
    தாமுவின் வசதி பற்றி, அவனுக்கு அதை எட்ட கிடைக்கும் தகுதி பற்றி, அவன் சமரசங்கள் பற்றி, 'சமரசம்' என்ற அளவிலெல்லாம் சிந்திக்கும் அளவு பிரக்ஞை இல்லாத அவன் எளிய மனது பற்றி, அது பிறருக்கு வாய்க்காதது பற்றி...என்று கதையை ஒட்டி நாமும் ஜ்ட்ஜ் செய்ய உந்தப்படுகிறோம். அதற்கெல்லாம் அப்பால் நின்று வாழ்க்கை நடந்துகொண்டே போகிறது.

    புரிதல்/முயற்சி மூலம் வாழ்க்கையை வெல்லலாம் என்ற நிலைப்பாட்டை புதினம் நகையாடுகிறதா. இல்லை அவ்வாஅறு நினைப்பதே "வாழ்க்கையில் வெற்றி" பற்றி நாம் கொண்ட முன்தீர்மானங்கள் தான் காரணமா என்று சிந்திக்க வைத்து அலைக்கழிக்கிறது இப்புதினம். நிகழ்வுத்தோரணமும், அதன் ட்ராமாவும் இல்லாத நளினமான "ஸ்னாப்ஷாட்" வழங்கப்படுகிறது. அது நெகிழ்வாக வந்ததற்கு காரணம் எழுத்தாளரின் நுட்பமான பேனா.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #22
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    PR, " தொலைந்து போனவர்கள்" came as a weekly serial produced by Chola creations (ppl who made Thalai vaasal), directed by Selva. It was telecasted during the early 90's (or late 80's, not sure) in DD. It was a well made serial. Actor Rajesh played Damu character and "Thalaivasal" Vijai played as one of the friends. It was so engrossing that I used to be there punctually in front of my TV set every week.

    I have not read the book though.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  4. #23
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Ever since its release, I've been hoping to buy Jeyamohan's " Vishnupuram ", but somehow I have refrained from doing so. Even during the Annual Book Fest, I used to pick it up but at the last moment will drop it and finally end up buying other books. So strange !

    So much has been said and discussed about this book in various magazines but, would be glad if anybody here could throw some light on this. And, how strong would you recommend it to me ??
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  5. #24
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by rangan_08

    Yeah I remember it came as a serial. I think early 90s only. Don't remember the serial itself though.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  6. #25
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Quote Originally Posted by rangan_08
    Ever since its release, I've been hoping to buy Jeyamohan's " Vishnupuram ", but somehow I have refrained from doing so. Even during the Annual Book Fest, I used to pick it up but at the last moment will drop it and finally end up buying other books. So strange !

    So much has been said and discussed about this book in various magazines but, would be glad if anybody here could throw some light on this. And, how strong would you recommend it to me ??
    No recommendations ???
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  7. #26
    Senior Member Veteran Hubber sarna_blr's Avatar
    Join Date
    Dec 2007
    Location
    yaadhum oorEy ; yaavarum kElir
    Posts
    4,076

    " Changing the Face" can change nothing.
    But, " Facing the Change" can change everything.
    Seven social sins:
    1.Politics without principles
    2.Wealth without work
    3.Pleasure without conscience
    4.Knowledge without character
    5.Commerce without morality
    6.Science without humanity
    7.Worship without sacrifice

  8. #27
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Quote Originally Posted by sarna_blr
    " Changing the Face" can change nothing.
    But, " Facing the Change" can change everything.
    ippo edhukku idha solreenga ???
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  9. #28
    Senior Member Veteran Hubber sarna_blr's Avatar
    Join Date
    Dec 2007
    Location
    yaadhum oorEy ; yaavarum kElir
    Posts
    4,076
    Post Thanks / Like
    Quote Originally Posted by rangan_08
    Quote Originally Posted by sarna_blr
    " Changing the Face" can change nothing.
    But, " Facing the Change" can change everything.
    ippo edhukku idha solreenga ???
    idhukooda puriyalaayaa
    Seven social sins:
    1.Politics without principles
    2.Wealth without work
    3.Pleasure without conscience
    4.Knowledge without character
    5.Commerce without morality
    6.Science without humanity
    7.Worship without sacrifice

  10. #29
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    ஒரு ஊரின் கதை - வலம்புரி ஜான்

    சில மாதங்களுக்கு ஒரு முறை எனக்கு கொஞ்சம் ஒழுங்கு பிடித்து என் தந்தையின் புத்தக அலமாரியை அடுக்க முயல்வேன். அனேகமாக ஏதோ ஒரு புத்தகம் கிடைத்து, ஒழுங்குபடுத்தும் முனைப்பு மழுங்குவதோடு அது நின்றுபோய், மறுபடியும் புத்தகங்கள் கலைந்து கிடக்கும். இதை ஒரு சாரார் (அம்மா) 'திருப்பதி வேலை' என்றும் ஒரு சாரார் (அப்பா) 'அறிவுச்செறுக்கு' என்றும் சொல்வதுண்டு. அறிவுச்செறுக்கில் ஓரிரு மாதங்களில் தூசி படிந்து ஒழுக்கச்சக்கரம் மீண்டும் தொடங்கும்.

    இந்தமுறை ஒரு இண்டு--இடுக்கிலிருந்து ஒரு ஒல்லி புத்தகம் கிடைத்தது. வலம்புரி ஜானின் 'ஒரு ஊரின் கதை' கிடைத்தது. இது புதினம் அல்ல. தனது சொந்த ஊர் (உவரி) பற்றியும், அதன் அருகில் உள்ள (தான் வளர்ந்த) தனக்குப் பழக்கப்பட்ட ராதாபுரம் போன்ற ஊர்களைப் பற்றி என்று. பதிவு போல ஊர்க்கதை, நையாண்டி, மனிதச் சித்திரங்கள், அரசியல், மதம் (தத்துவமாக அல்ல, வாழ்க்கை முறையாக) என்று எளிய நடையில் எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டியது புத்தகம் நெடுக இருக்கும் ஒரு எள்ளல் தொனி. இதை ரசித்துப்படிக்கும் படி செய்வது அது தான்.

    மற்றொரு விஷயம் பாதிரிமார்களையும், அம்மக்களின் மீது மத அமைப்புகள் செலுத்தும் அதிகாரத்தையும் கடுமையாக தாக்கி எழுதியிருக்கிறார். (நூலின் முன்குறிப்பு : இந்நூலில் வரும் இடங்களும் சம்பவங்கள் யாவும் கற்பனையல்ல, ஒரு சிலரையாவது புண்படுத்துவதற்காகவே எழுதப்படுகிறது ) .அதேபோல அவ்வூர் மக்களிடையே உள்சண்டையும், கலவரங்கள் வருவதையும் எழுதியிருக்கிறார். சில சமயம் கடிந்துகொள்ளும் தொனியில் , பல சமயம் அதையும நகைக்குரிய விஷயமாக்கும் ஒரு கீழ்நோக்குப் பார்வையில். அது அவ்வளவு உவப்பாக இல்லை.

    ஊரை விட்டு ஓடிவிடும் இளசுகள் ஒருசில நாட்களில் திரும்பி வந்துவிடுவதை சொல்ல: "சில நாளில் குறுகுதும்" என்ற கம்பராமாயண வாக்கியத்தை சொல்கிறார்.இதை குகனிடம் சொன்ன ராமன் 'சில நாட்களில்' வரமுடியாமல் பல பிரச்சனைகளை எதிர்கொண்டான். இனி இங்கு வருவதில்லை என்று உதரிச்சென்ற சிறுசுகளும் அது போல எதிர்பாராத மாற்றங்களை தங்கள் வாழ்க்கையில் சந்தித்திருப்பார்கள் என்பதை அழகாக, கச்சிதமாக ஒரு எதிர்-உதாரணத்துடன் சொல்கிறார். இதைப்போல போகிறபோக்கில் அவர் புலமை வெளிபடுகிறது - பல சமயங்கள் இயல்பாகவே. தான் எம்.பி ஆன பின் நிகழும் ஒரு சில அரசியல் அனுபவங்களையும் சுவையாக எழுதியிருக்கிறார்.

    கழுதைவாலை உள்ளூர் பையன்கள் தீவைப்பது அனுமன் வாலால் இலங்கைக்கு தீவைப்பதை நினைவுபடுத்துவது, "இலங்கைக்கு போன அனுமன் இடையே எங்கள் ஊரின் நின்று டீ குடித்ததாக நம்பப்படுகிறது" என்றெல்லாம் மிக் சகஜமாக எழுதியிருக்கிறார். 70-80 களில் கூட இவ்வளவு சகஜமாக எழுத முடிந்திருக்கிறது. இன்று அப்படி பார்க்கப்படமாட்டாது. அந்தக்கதையாடல்கள் மிக இயல்பாக நாம் எல்லாரும் உள்வாங்கிக்கொண்டுள்ளோம். மதத்தைத் தாண்டிய பொது கலாசார விஷயங்கள் இவை.ஆனால் இன்று இப்படி ஒரு கிறுஸ்தவ பிரமுகர் எழுதினால் "காழ்ப்புணர்ச்சி" தெருப்புழுதி என்று குதிப்பார்கள். இவற்றையெல்லாம் அந்நியமாகப் பார்த்து, 'மரியாதை'யுடன் மிகுந்த பிரக்ஞையுடன், கவனமாக அணுக/எழுத நிர்பந்திக்கும் ஒரு 'நாகரிகத்துக்கு' இன்று வந்துவிட்டோம் என்பதே மிக மிக வருந்தத்தக்கது.

    நூல் ஒரே சீராக இல்லை ஒரு சில இடங்களில் பாய்கிறது, தேங்குகிறது. கடைசியில,் படிப்பதற்கு பாளையங்கோட்டை வந்தது, திருச்சியில் வேலைசெய்தது பிறகு சென்னைக்கு வந்தது என்று ஓரிரு பத்திகளில் அவசரமாக முடித்தாற்போல இருந்தது. ஒட்டுமொத்தமாக ஜானின் மென்மையான எள்ளல் நடைக்காகவே ஒரு முறை படிக்கலாம்.வெறும் நாற்பத்திசொச்ச பக்கங்கள் தான் !
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  11. #30
    Senior Member Senior Hubber podalangai's Avatar
    Join Date
    Apr 2005
    Location
    Angilakam
    Posts
    800
    Post Thanks / Like
    Quote Originally Posted by rangan_08
    Quote Originally Posted by rangan_08
    Ever since its release, I've been hoping to buy Jeyamohan's " Vishnupuram ", but somehow I have refrained from doing so. Even during the Annual Book Fest, I used to pick it up but at the last moment will drop it and finally end up buying other books. So strange !

    So much has been said and discussed about this book in various magazines but, would be glad if anybody here could throw some light on this. And, how strong would you recommend it to me ??
    No recommendations ???
    I've been hoping to buy the book for some time, but I am rarely in Tamil Nadu, and it's always been out of stock in the shops I visit. I did pick up a copy of Jeyamohan's "Kurunavalkal" - and I'm very pleased I did. On reflection, it's actually quite amazing how the Kurunaval has emerged as a literary form in Tamil - it is popular in some European languages as well, but it's quite marginal in English.
    ni enna periya podalangai-nu ennama?

Page 3 of 5 FirstFirst 12345 LastLast

Similar Threads

  1. kELvigaL, santhEgangaL in thamizh ilakkiyam. Please clarify!
    By stranger in forum Tamil Literature
    Replies: 9
    Last Post: 29th November 2006, 09:00 PM
  2. thiraiyil ilakkiyam - sogathukku iru varigaL (Raj)
    By RR in forum TFM Page Magazine Archive - 2006 & 2007
    Replies: 3
    Last Post: 20th September 2006, 02:22 AM
  3. thiraiyil ilakkiyam - vetti ottu (Raj)
    By RR in forum TFM Page Magazine Archive - 2006 & 2007
    Replies: 2
    Last Post: 2nd September 2006, 02:50 AM
  4. ILAKKIYAM
    By Senthil_007 in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 11th March 2005, 01:31 AM
  5. Contribution of non-thamizh writers to thamizh Lit.
    By Oldposts in forum Tamil Literature
    Replies: 64
    Last Post: 12th December 2004, 08:33 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •