Page 2 of 17 FirstFirst 123412 ... LastLast
Results 11 to 20 of 163

Thread: JAYA TV

  1. #11
    Senior Member Diamond Hubber selvakumar's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Bay Area
    Posts
    5,450
    Post Thanks / Like
    Yesterday I watched the dance program for 2 mins. Raghav and Prithvi are the judges.

    Prithvi indirectly commented about simbu while he was about to criticize a girl's dance. Looks like, the problem b/w simbu and prithvi is not a fake at all.

    Simbu voda adutha padathula prithvi kku ethira punch dialogue ethir paarkalaam
    Ponnu Vellai tholah? illai Karuppu tholah?
    RE: Aennn.. Puli tholu..


    Use short words, short sentences and short paragraphs. Never use jargon words like reconceptualize, demassification, attitudinally, judgmentally. They are hallmarks of a pretentious ass. - David Ogilvy

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மறந்து போன சினிமா பாடல்கள்

    பல ஆண்டுக்கு முன், வெளியான படங்களின் பாடல்களை கேட்க வேண்டுமா? அப்படியானால் ஜெயா சேனலில், திங்கள் முதல், வெள்ளி வரை காலை 9.30க்கு ஒளிபரப்பாகும் தேன் கிண்ணம் நிகழ்ச்சியை மறக்காமல் பாருங்கள். இந்த நிகழ்ச்சி 650 நாட்களை தாண்டி வெற்றிநடை போடுகிறது. மெகா "டிவி'யில், அமுத கானம் என்ற பெயரில் ஆதவன் அழகு தமிழில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியிலும் அருமையான பழைய தமிழ்ப்பாடல் காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.
    "அன்பே சிவம்.

  4. #13
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை, தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `அலைபாயுதே' தொடர் 100-வது எபிசோடை தொடுகிறது.

    மூன்று சகோதரிகளின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட இந்த தொடரில், அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டமே கதையின் ஆணிவேராகும்.

    மூத்தவளான பைரவி தனது குடும்ப வறுமையை போக்கும் பொருட்டு, கணவனை குறுக்கு வழிக்கு செல்லத் தூண்டுகிறாள். கணவனான பால்பாண்டியும் தீயவர்களின் சகவாசத்தில் குறுக்கு வழியில் சென்று கோடி கோடியாய் சம்பாதிக்கிறான். குறுக்கு வழியில் சென்ற பால்பாண்டியை கூடிய சீக்கிரம் கெட்ட பழக்கங்களும் தொற்றிக்கொள்ள, பைரவி கவலை அடைகிறாள். பணம் இல்லையென்றாலும் பரவாயில்லை, தனது கணவன் திருந்த வேண்டும் என்பதற்காக பைரவி போராடிக் கொண்டிருக்கிறாள்.

    இரண்டாவது சகோதரி கண்ணம்மாவின் வாழ்க்கை போராட்டம் வேறுவிதமானது. கலெக்டரான ராஜேந்திரனை மணந்து மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் கண்ணம்மாவின் வாழ்க்கையில், வர்ஷா என்ற பெண் மூலம் சோதனை ஆரம்பிக்கிறது.

    வர்ஷா ராஜேந்திரனின் ஆசைநாயகியாக கண்ணம்மாவின் வீட்டுக்குள் நுழைய, கண்ணம்மாவிடம் டைவர்ஸ் கேட்டு, ராஜேந்திரன் அவளை விதம் விதமாய் கொடுமைப்படுத்துகிறான். அத்தனையையும் தாங்கிக்கொண்டு, தனது மனைவி என்ற ஸ்தானத்தை பறிகொடுக்க மறுத்தவள், தனக்கு துரோகம் செய்த கணவனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டி, டைவர்ஸ் கொடுக்காமல் தனது ஐந்து வயது மகனோடு போராடிக்கொண்டிருக்கிறாள்.

    மூன்றாவது சகோதரி பாரதியின் வாழ்க்கை மிகவும் பரிதாபத்துக்குரியது. பாண்டிச்சேரியில் இருந்து, மலேஷிய மாப்பிள்ளையான ஸ்ரீகாந்தை மணந்து மலேஷியா செல்கிறாள். அவளின் புகுந்த வீடு அவளது கற்பையே அடமானம் வைக்கும் அளவுக்கு தரக்குறைவாக நடந்து கொள்ள, பாரதி அந்த குடும்பத்திடம் இருந்து தப்பி இந்தியா வந்து அக்கா பைரவி வீட்டில் அடைக்கலமாகிறாள், அங்கும் தனது கணவனின் தொல்லைகள் தொடர, தனது பழைய காதலன் கணேஷின் வீட்டில் தஞ்சம் புகுந்து, தனது நிம்மதியான எதிர்காலத்துக்காக போராடிக்கொண்டிருக்கிறாள்.

    அடுத்து ஏற்படும் திருப்பங்கள் ரசிகர்களை விறுவிறுப்பின் உச்சிக்கு கொண்டு போகும் என்கிறார், தொடரின் இயக்குனர்

  5. #14
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஜெயா டிவியில் மே 5 முதல் வார நாட்களில் இரவு 9 மணிக்கு வருகிறது காமெடி காலனி. கே.பாலசந்தர் காமெடியை மறுபடியும் சீரியலாக கொண்டு வந்துள்ளார். மாளவிகா, சச்சு, பாலாஜி என்ற பெரிய பட்டாளமே டைரக்டர் டி.ரங்கநாதனின் வழிகாட்டுதலில் சிரிப்பாய் சிரிக்க வைக்கின்றனர்.

    கே.பி.,யின் லோகாவில் டிஜிட்டல் மாற்றம். ஆனாலும் முதல் குறளும் முன்பிருந்த இசையும் மாறவில்லை. எடுத்தவுடன் ஒரு ஜோக். பின் தொடர்வது டைட்டில். அதைத் தொடர்ந்து தொடர், இடைவெளி, பின் கடைசியில் மறுநாளின் டிரைய்லர். பின்னணி சிரிப்பு என்பது எல்லாரும் ஒரே மாதிரி பயன்படுத்துவர். அந்த சிரிப்பு வித்தியாசப்படுத்தப்பட்டுள்ளது. இனி எல்லாரும் மாற்றுவார்கள். ஒவ்வொருத்தரும் வித்தியாசமான கேரக்டர்கள், அறிமுகப் படலமே பிச்சு வாங்குது. தாலிய காணோம், கடவுளே கடவுளே என அலறியபடி எழும் மாளவிகா அது தன் கழுத்தில் இருப்பதை கண்டு கடவுளுக்கு தேங்க்ஸ் சொல்லி அறிமுகமாகிறார். ஒரு புது யுக்தியை புகுத்தியுள்ளனர்.

    யோசிப்பு, கோபம், ஆச்சர்யம் இப்படி உணர்ச்சிவயப்படும் கேரக்டர்கள் மேல் ஒரு லென்ஸ் வைக்கப்பட்டு நபரின் முகம் பெரிசு, சிறிசு, கோணல், வீங்கல் என பலபல பரிமாணங்கள் எடுத்து சிரிக்க வைக்கிறது. சில நடிகர்கள் லென்ஸ் பார்வைப்படும் போது பல நடிகர்களின் முகங்களை பார்க்க முடிவது கண்டுபிடி கண்டுபிடி பாணி க்விஸ் சிறப்பு. பாரதியார்தாச தாத்தா நல்ல விஷயங்களை நவில்கிறார். டாரட் ரீடிஸ், கரி நாக்கு, க்ரிஸ்டல் பால் ரீடிங் என பலதும் செய்யும் பெண். வாண்டுகள், இளைஞர்கள், பெரியவர்கள் என ஆல் ஏஜ் கூட்டம். ஐயோ, அந்த ரூல்ஸ் செக்யூரிட்டியும், அவரிடம் வந்து பண்ணும் பால் பையனும் பலே, பலே! தகவல் அறியும் சட்டம் உள்ளிட்ட நடப்பு விஷயங்கள் அனைத்து அங்கங்கே வருகிறது. அரைமணி ஆனந்தமாய் சிரிக்கலாம் வாங்க காமெடி காலனிக்கு!
    "அன்பே சிவம்.

  6. #15
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ஜெயா டிவியில் . செவ்வாய் தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது `என்ன பொருத்தம்' நிகழ்ச்சி.

    சிறந்த ஜோடிகளை தேர்ந்தெடுத்து, அவர்களிலும் சிறந்த ஒரு ஜோடியை கவுரவிக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

    இதற்கென சென்னை, கோவை, மதுரை நகரங்களில் சிறந்த ஜோடிகளுக்கான தேர்வு நடந்தது. இந்த நகரங்களில் சிறந்த தம்பதிகளுக்கான போட்டி நடந்தபோது சுற்றுப்புறங்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஜோடிகள் கலந்து கொண்டார்கள்.

    மூன்று மாவட்டங்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களை வடிகட்டியதில் இறுதியாக எஞ்சியிருந்தது 10 ஜோடிகள் மட்டுமே. இந்த 10 ஜோடிகளும் தங்களில் சிறந்த ஜோடி யார் என்பதை நிரூபிக்கும் இறுதிப் போட்டிக்காக சென்னை வந்திருந்தார்கள். சென்னை சோவியத் கலாச்சார மைய அரங்கில் தங்களைப் பற்றிய முன்னோட்டங்கள், விருப்பு, வெறுப்புகள், தம்பதியர்க்குள்ளான புரிதல் தன்மை பற்றி மனம் விட்டுப் பகிர்ந்து கொண்டார்கள்.

    இந்த 10 ஜோடிகளில் 3 ஜோடி காதல் மணம் புரிந்தவர்கள்.

    போட்டியின்போது "கணவரை எப்படி புரிந்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்று மனைவியரிடம் கேட்கப்பட்டது.

    "உங்கள் மனைவி எப்படி?'' என்று கணவர்களிடம் கேட்டார்கள்.

    சிலர் யோசிக்காமல் சட்டென பதில் தந்தார்கள். சிலர் தங்கள் `பார்ட்னரை' கலந்து பதில் சொன்னார்கள்.

    இந்த போட்டி இவர்களில் பல ஜோடிகளை நண்பர்களாக்கியிருக்கிறது. "போட்டிக்கு வந்த இடத்திலும் எங்களுக்குள் நட்பு பலப்பட்டது. போட்டி வரும். போகும். வெற்றி பெறுவது யாரோ ஒரு ஜோடிதான்! ஆனாலும் நாங்கள் நண்பர்களாக நீடிப்போம்'' என்று புவனா என்ற பெண்மணி சொன்னபோது அரங்கு அதிர கைதட்டல். கரகோஷம் செய்தவர்கள் பட்டியலில் இவரது கணவர் விக்னேஷும் இருந்தார்.

    மதுரையில் இருந்து வந்த அழகர்சாமி - சிவமணி ஜோடியில் கணவர் தமிழ் ஆசிரியர். மனைவி குடும்பத்தலைவி.

    "போட்டிக்காக வந்தாலும், சென்னை எங்கள் தேனிலவுப் பிரதேசமாகி விட்டது'' என்று வெளிப்படையாகச் சொல்லி அரங்கை குலுங்க வைத்தார் ஆசிரியர் அழகர்சாமி.

    காலை 9 மணிக்கு வீட்டை விட்டு போகிற கணவர் மறுபடி கதவைத் தட்டுவது இரவு 10 மணிக்கு மேல்தானாம். மனைவி என்பவள் கணவனின் அன்புக்கு எப்படியெல்லாம் ஏங்குவாள்? என்பதை போட்டிக்கு வந்த இந்த நாலு நாட்களில் என் கணவர் உணர்ந்து விட்டார். என் உணர்வுகளை பங்கிட மனம் விட்டுப்பேசக் கிடைத்த வாய்ப்பில், "சீக்கிரம் வீடு வர முயற்சிக்கிறேன்'' என்றார். இந்த போட்டி என் கணவருக்கு என் முக்கியத்துவம் உணர்த்தியிருக்கிறது. இது போதாதா?'' நெகிழ்ந்தார், ஒரு குடும்பத் தலைவி.

    தம்பதியர்க்கான பல்வேறு போட்டிகள் தொடர்ந்தன. நம்பிக்கையுடன் அவற்றை எதிர்கொண்டார்கள்.

    இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் பிரபுநேபால் கூறும்போது, "ஒரு தம்பதியரை பார்க்கும்போது தோற்றத்தில் மட்டும் `என்ன பொருத்தம்' என்று மற்றவர்கள் சொல்லும்படி இருந்துவிடக்கூடாது. பழகும் தன்மை, நட்புறவு, ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் பக்குவம், சின்ன விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் அக்கறை இதெல்லாம் இணைந்த தம்பதிகள்தான் "என்ன பொருத்தம்!'' என்று கொண்டாடத்தக்கவர்கள். அப்படி ஒரு ஜோடியை கண்டறிவதே இந்த போட்டியின் நோக்கம்'' என்றார்.

  7. #16
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    Quote Originally Posted by R.Latha
    காலை 9 மணிக்கு வீட்டை விட்டு போகிற கணவர் மறுபடி கதவைத் தட்டுவது இரவு 10 மணிக்கு மேல்தானாம். மனைவி என்பவள் கணவனின் அன்புக்கு எப்படியெல்லாம் ஏங்குவாள்? என்பதை போட்டிக்கு வந்த இந்த நாலு நாட்களில் என் கணவர் உணர்ந்து விட்டார். என் உணர்வுகளை பங்கிட மனம் விட்டுப்பேசக் கிடைத்த வாய்ப்பில், "சீக்கிரம் வீடு வர முயற்சிக்கிறேன்'' என்றார். இந்த போட்டி என் கணவருக்கு என் முக்கியத்துவம் உணர்த்தியிருக்கிறது. இது போதாதா?'' நெகிழ்ந்தார், ஒரு குடும்பத் தலைவி.
    இந்தப்பகுதியைப் படிக்கும்போது, எனக்கு தெரிந்த ஒரு ஜோக் நினைவுக்கு வந்தது...

    ஒருவர் சொன்னார்: "என்னுடைய இந்த விரைவான வளர்ச்சிக்கு என் மனைவிதான் காரணம்".

    நண்பர் கேட்டார்: "எப்படி சொல்றீங்க?"

    முதலாமவர் சொன்னார்: "அலுவலகத்தில் என்னுடைய மேஜையின் மேல் என் மனைவியின் புகைப்படத்தை வைத்திருக்கிறேன். அதைப்பார்க்கும்போதெல்லாம் 'வீட்டுக்கு சீக்கிரம் போகக்கூடாது' என்று தோன்றும். அதனால் அலுவலகத்தில் அதிக நேரம் தங்கி நிறைய வேலைகளைச் செய்ததால், எனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை குறித்த காலத்துக்கு முன்பே செய்து முடித்து, என் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்று அதனால் என் புரமோஷனும் சம்பளமும் 'மள மள' வென உயர்ந்துவிட்டது".

  8. #17
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    saradha
    "அன்பே சிவம்.

  9. #18
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கர்நாடக இசை பிரியர்களுக்கு குஷி!

    ஆன்மீகம், கர்நாடக இசை இரண்டிலும் ஜெயா சேனலை அடிக்க ஆளில்லை. இதோ கர்நாடக இசை பிரியர்களுக்கு, கோடையில் விருந்தளிக்க வந்துவிட்டது,

    கிளிவ்லேண்டு தியாகராஜ உற்சவம். அமெரிக்காவில் உள்ள இந்த நகரில் நடந்த இந்த வைபவத்தில் பிரபலங்கள் பாடியதை ஐந்தாவது ஆண்டாக ஒளிபரப்ப தயாராகி விட்டது சேனல். ரவி கிரண், ஸ்ரீகாந்தன், நெய்வேலி சந்தான கோபாலன், ஓ.எஸ்.தியாகராஜன், எம்.எஸ்.ஷீலா, லால்குடி ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன், விஜயலட்சுமி உட்பட கலைஞர்கள் நடத்திய இசை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. நாளை ஆரம்பமாகிறது. திங்கள் முதல் வெள்ளிதோறும் காலை 6.30 மணி
    "அன்பே சிவம்.

  10. #19
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    little master
    I happened to watch this program - Sunday evening (?)

    little kids
    what a performance
    great dance


    judges:
    Raguram & Kuyili (the dancer introduced by KB)

  11. #20
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ஜெயா டி.வி.யில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஒளி பரப்பாகி வரும் `தகதிமிதா' நிகழ்ச்சி 250 எபிசோடுகளை தொட்டிருக்கிறது. இந்திய கலாச்சாரத்தின் வேர்களே அதனுடைய சாஸ்திரிய கலைகள்தான். அப்படிப்பட்ட அற்புதமான பாரம்பரியமான பரத கலையை வளர்க்கவும் பாதுகாக்கவுமான கலைத் தொண்டுதான் `தகதிமிதா' நிகழ்ச்சி. உலக தொலைக்காட்சி வரலாற்றிலேயே சாஸ்திரிய நடன கலை மீது அமைக்கப்பட்ட ஒரே கேம்ஷோவும் தகதிமிதா தான்.

    இந்த நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரபல நடனமணிகள் மற்றும் நடிகைகளான பானுப்பிரியா, ஷோபனா, சுகன்யா, விமலா, இந்திரஜா, `அண்ணி' மாளவிகா, மோகினி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

    இதுவரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட நடனமணிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளனர்.

Page 2 of 17 FirstFirst 123412 ... LastLast

Similar Threads

  1. Jaya TV's Raagamaaliga
    By NOV in forum TV,TV Serials and Radio
    Replies: 2
    Last Post: 2nd February 2011, 01:18 PM
  2. Thirumbi Paarkkiren - Jaya TV
    By RAGHAVENDRA in forum Current Topics
    Replies: 4
    Last Post: 15th November 2010, 02:31 AM
  3. IR and Jaya TV
    By raja_fan in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 11th October 2006, 01:31 PM
  4. Thoti Jaya
    By rsubras in forum Stories / kathaigaL
    Replies: 10
    Last Post: 30th October 2005, 03:37 PM
  5. Thotti Jaya
    By slperson1 in forum Current Topics
    Replies: 42
    Last Post: 2nd August 2005, 12:02 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •