Page 3 of 13 FirstFirst 12345 ... LastLast
Results 21 to 30 of 125

Thread: MAKKAL TV

  1. #21
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கற்போம் கணினி


    திங்கள் முதல் வெள்ளி வரை மக்கள் தொலைக்காட்சியில் தினமும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, `கற்போம் கணினி' நிகழ்ச்சி.

    விரும்புகிறோமோ இல்லையோ நாகரிகம் நுழைந்து நம் வாழ்க்கையை மாற்றிவிட்டது. விஞ்ஞானம் வளர்ந்து அனைத்தும் கணினிமயமாகி விட்டது. வாழ்க்கையோடு கணினி பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது.

    நாம் அனைவரும் கணினியை கையாள தெரிந்து வைத்திருக்கிறோமோ என்றால் இல்லை.

    கணினியை கையாளுவது எளிது. இல்லத்தரசிகள் முதல் ஏர்பூட்டும் உழவர்கள் வரை அனைவரும் கணினியை கையாளத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கணியத் தமிழ் அமைப்பினர் கற்றுத் தருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை `முகவரி' முத்து இயக்குகிறார்.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #22
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    உழவர் அரங்கம்


    நாட்டில் தனி நபர் வருமானம் உயர்ந்திருக்கிறது. உழவர் பெருமக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறதா? இந்தியாவில் வறுமை குறைந்திருக்கிறது. உழவர்களின் வயிறு நிறைந்திருக்கிறதா? இப்படி உழவர் பெருமக்களின் வாழ்க்கையைச் சுற்றி ஆயிரமாயிரம் கேள்விகள் இருக்கின்றன. மரபணு மாற்று விதையை வரவேற்கலாமா, ஆபத்தா? செயற்கை உரம் பயன்படுத்தலாமா, கூடாதா? மின் வெட்டால் உழவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? இப்படி அணிவகுக்கும் கேள்விகளை விவாதித்து விடைகாணும் முயற்சிகள் உழவர் அரங்கத்தின் நோக்கம்.

    உழவர் அரங்கம். சனிக்கிழமை தோறும் மாலை 6.03 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
    "அன்பே சிவம்.

  4. #23
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    நடிகை மனோரமாவின் வாழ்க்கைப் பின்னணியை விவரிக்கும் புதிய தொடர் "ஆச்சி வந்தாச்சு.'' இது தமிழன் டிவியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே லட்சியத்திற்காக தனக்கு ஏற்பட்ட சோதனைகளை சாதனைகளாக மாற்றி வெற்றியின் உச்சிக்கு சென்றவர், நடிகை மனோரமா. இவர் தன் வெற்றிக்கு உதவியவர்களையும், சாதனைகளுக்கு துணை நின்றவர்களையும் இந்த தொடரில் நினைவுகூறுகிறார். எண்ணம், கருத்தாக்கம்: ஏ.பத்மராஜ்; திரைக்கதை வசனம்: தேவன்; இயக்கம்: ஏ.கே.உசேன்.
    "அன்பே சிவம்.

  5. #24
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.03 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் புதிய நிகழ்ச்சி இசைத் தமிழ் பாமாலை.

    அப்பர், சுந்தரர், சம்பந்தர், சேக்கிழார் என்ற சமயக் குரவர்கள் நால்வரும் இயற்றிய நற்றமிழ் பாடல்களை ஓதுவார்கள் இசையோடு பாடுகிறார்கள். கேட்கும் போது காது குளிர்கிறது. தமிழ் மணக்கிறது. நல்ல தமிழ் இசையை விரும்புகிறவர்களுக்கு இனிய வரவு இந்த இசைத் தமிழ் பாமாலை.

    மதுரை இன்னிசை இணையம் வழங்கும் இந்த இசைத் தமிழ் பாமாலை, இசைத் தமிழுக்கு சூட்டப்படுகின்ற மாலை.
    "அன்பே சிவம்.

  6. #25
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    குறிஞ்சி மலர்



    மக்கள் தொலைக்காட்சியில் புதன் தோறும் மாலை 4.30 மணிக்கு மலரும் குறிஞ்சி மலர், மேதைக் குழந்தைகளின் திறமையை அரங்கேற்றும் நிகழ்ச்சி. வயதுக்கு மீறிய சாதனை புரிந்த இளம் சாதனையாளர்களை நேர்காணல் செய்வது, திறமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது என்று திறமைக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சிதான் குறிஞ்சி மலர்.

    இளம் சாதனையாளர்களை பார்க்கும் மற்ற குழந்தைகளுக்கு தாங்களும் ஏதாவது சாதனை புரிய வேண்டும் என்ற ஆவல் எழும். அவர்களும் சாதனைக்கான முயற்சியில் இறங்குவார்கள்.

    எந்த குழந்தையும் திறமையான குழந்தைதான். அவர்களின் திறமையை வெளிக்கொணரும் பங்கு பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் உண்டு. குழந்தைகளின் திறமைக்கு மரியாதை தரும் இந்த நிகழ்ச்சியை இயக்குபவர் ஜெயராமன்.
    "அன்பே சிவம்.

  7. #26
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    திரைகடல் ஓடி...



    மக்கள் தொலைக்காட்சியில் செவ்வாய் தோறும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரலை நிகழ்ச்சி, திரைகடல் ஓடி. இன்று ஏற்றுமதி வணிகம் என்பது அதிகம் லாபம் சம்பாதிக்கும் துறையாக உள்ளது. ஆதிகாலத்திலேயே நம் தமிழர்கள் கடல் கடந்து வணிகம் செய்து

    வந்தார்கள்.ஆர்வமுள்ள தமிழர்கள் அனைவரும் ஏற்றுமதி துறையில் ஈடுபட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட நிகழ்ச்சிதான் `திரை கடல் ஓடி'. ஏற்றுமதி ஆலோசகர் ராமச்சந்திரன் எந்தெந்த நாடுகளுக்கு எந்தெந்த பொருளை ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம். ஏற்றுமதிக்கு எந்த பொருள் அதிக லாபம் சம்பாதித்து தரும் என்பது போன்ற தகவல்களை எல்லாம் புள்ளி விவரங்களுடன் தருகிறார்.

    ஏற்றுமதி வணிகத்தில் ஏற்கனவே ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் அந்த துறையின் நெளிவு சுழிவுகளை அறிய இந்த நிகழ்ச்சி துணைபுரிகிறது.

    "அன்பே சிவம்.

  8. #27
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    மகளிர் உலகம்



    மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரலை நிகழ்ச்சி, `மகளிர் உலகம்'. இது பெண்களுக்கான நிகழ்ச்சி.

    பெண்கள் தான் கற்றதையும், பெற்றதையும் தன் தோழியரோடு தொலைபேசி வழியாக பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பிரச்சினைக்கு தீர்வு, சுற்றுலா சென்று வந்த அனுபவம், பிடித்த பொன்மொழி, எழுதிய கவிதை என பெண்கள் தங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் தொலைபேசி வழியாக பகிர்ந்து கொள்ளலாம்.

    இல்லத்தரசிகளாக கணவன், குழந்தை, குடும்பம் என்று வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் பெண்கள் தங்கள் அனுபவங்களையும், எண்ணங்களையும் பரிமாறிக் கொள்வதற்கான களம் தான் இந்த மகளிர் உலகம்.

  9. #28
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    காதோடு காது



    நாட்டு நடப்புகளை பற்றிய உரையாடல்களின் தொகுப்பாக இடம்பெறும் நிகழ்ச்சிதான் காதோடு காது. இதில் வரும் வசனங்கள் யதார்த்த பின்னணியில் அமைந்திருப்பது சிறப்பு. சனிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

  10. #29
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    கிராமத்துப் பாட்டு



    மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி `கிராமத்துப்பாட்டு'

    நாற்று நடுவோரும், ஏற்றம் இறைப்போரும், சுண்ணம் இடிப்போரும் வேலை செய்யும் களைப்பு தெரியாமல் இருக்க பாடிக் கொண்டே வேலை செய்வார்கள். இந்தப் பாட்டில் ராகம், தாளம் எல்லாம் நேர்த்தியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் கேட்பவர்களின் களைப்பை போக்கும் ஆற்றல் இந்த நாட்டுப்புற பாட்டில் இருக்கும்.

    அந்த நாட்டுப்புறப் பாட்டை அழகான அரங்கில் நேர்த்தியாக தருவதுதான் கிராமத்துப்பாட்டு. இந்த கிராமத்துப் பாட்டை கேட்டால் மண் வாசனை வீசும், மனசுக்குள்ளே மகிழ்ச்சி தாளம் போடும். முறையாக இசை கற்றவர், கேள்வி ஞானத்தால் பாடும் பாடல் ஆற்றல் பெற்றவர்கள் என பலதரப்பட்ட பாடகர்கள் கிராமத்து பாட்டு நிகழ்ச்சியில் பாடுகிறார்கள். இதில் இசை புதிது, குரல் புதிது. கேட்கும் அனுபவமும் புதிது.

  11. #30
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    பட்டாம் பூச்சி



    மக்கள் தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சியான பட்டாம்பூச்சி, நூறாவது எபிசோடை கடந்திருக்கிறது.

    செல்லக் குழந்தைகளுக்கான இந்த விளையாட்டு நிகழ்ச்சியில் "கொக்கு பரபர... கோழி பரபர... பூனை... பறக்காது'' போன்ற வேடிக்கையான பாட்டு விளையாட்டும், வரைகலை மூலம் உருவாக்கப்பட்ட வினோத உருவத்தில் இருப்பது எவை என்பதை கண்டுபிடிக்கும் ஞாபகசக்தியையும், அறிவாற்றலையும் சோதிக்கும் பகுதி, வெற்றியாளர்களை அறிமுகப்படுத்தும் பகுதி என பொழுது போக்குக்கும், அறிவுக்கும் விருந்து வைக்கும் நிகழ்ச்சிதான், பட்டாம்பூச்சி.

    வெற்றி பெற்ற செல்லக் குழந்தைகளுக்கு பரிசும் உண்டு.

    திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளி பரப்பாகிறது.

Page 3 of 13 FirstFirst 12345 ... LastLast

Similar Threads

  1. 'Makkal Kalaignar' JAISHANKAR
    By saradhaa_sn in forum Tamil Films - Classics
    Replies: 395
    Last Post: 4th June 2016, 09:44 AM
  2. MAKKAL THILAGAM MGR (Part 2)
    By joe in forum Makkal Thilakam MGR and His Movies
    Replies: 3983
    Last Post: 23rd October 2012, 08:34 PM
  3. mannan aachiyil makkal thirrpu
    By kavithaipen in forum Poems / kavidhaigaL
    Replies: 6
    Last Post: 18th September 2011, 12:50 PM
  4. Makkal Aatchi
    By svbp007 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 2
    Last Post: 2nd November 2008, 03:37 PM
  5. MAKKAL THILAGAM MGR !!!
    By m_23_bayarea in forum Makkal Thilakam MGR and His Movies
    Replies: 1469
    Last Post: 21st April 2007, 04:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •